Saturday, June 25, 2011

ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படி??

ஹாய் நண்பர்களே,
நம்முள் பலபேர்,(ஹிஹி சத்தியமா நான் இல்லை)
வெறுமனே மொக்கை பதிவுகளை போட்டு காலத்தை கடத்தி
வருகிறனர்..எந்த நாளும் மொக்கை போட்டால் பார்ப்பவர்களுக்கு அலுப்படிச்சிடாது??

அதனால தான் புதிய பதிவர்கள்,மற்றும் பழைய பாழாப்போன மொக்கை பதிவர்களுக்கு
நான் ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்னு
நெனைச்சேன்...புதுசா வந்த பதிவர்களுக்கு சில வேளை தெரியாமல் இருக்கலாம்
எப்படி ஆக்கபூர்வமாய் பதிவு போடுவதென்று..
நான் சொல்லப்போற விசயங்களை கப்பென்று கட்ச் பண்ணி,இந்த பதிவை
புக்மார்க் பண்ணி வைச்சிருந்தீங்கன்னா,வருங்காலத்தில் உங்களுக்கு
பெரிய உதவியா இருக்கும்..
ஓகே???சரி வாங்க ஆக்க பூர்வமாய் பதிவு போடும் நடைமுறைக்குள்ள போவம்.

முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..

அப்புறம் புத்தாடைகள் அணிந்து(கவனிக்க புத்தாடை நாட் பழைய ஆடை)உங்க
இஷ்டமான கோயிலுக்கு சென்று வடிவாக தொழ வேண்டும்,
"கடவுளே ஆக்கபூர்வமாய் பதிவு போடப்போறன் இன்ட்லி தமிழ்மணத்தில்
ஓட்டுகள் வாங்கி பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து வாசிக்க வேண்டும் கடவுளே"
அப்பிடீன்னு நீங்க கடவுளை வேண்டுதல் வேண்டும்...இட் இஸ் வெரி இம்போர்ட்டன்ட்..

அப்புறமா வீட்ட வந்து உங்க உங்க கணணியை ஆப்பின் பண்ணி
லாகின் ஆகி டாஷ்போர்ட் போறீங்க..

அங்க போனாக்கா நியூ போஸ்ட் அப்பிடின்னு ஒரு ஆப்சன் இருக்கும்..
அத கிளிக் பண்ணுங்க..

இப்போ நீங்க ஆக்கபூர்வமா பதிவு போட ரெடி...
இப்போ தலைப்பு வைக்கணும்..தலைப்பு தான் ஒரு பதிவுன் கண்கள்!!!
சோ,நீங்க கில்மா தலைப்பெல்லாம் வைக்ககூடா..அப்புறம் அது
ஆக்கபூர்வமற்ற பதிவு அப்பிடீன்னு போயிடும்..
ஆகவே நீங்க எப்பிடி தலைப்பு வைக்கிறீங்கன்னா,
"ஆக்கபூர்வமான பதிவு"
அப்பிடி வைக்கிறீங்க...பிகாஸ்,நீங்க போடப்போற பதிவு ஆக்கபூர்வமான பதிவு தானே பாஸ்!!!

சரி தலைப்பு வைச்சாச்சு பதிவு என்ன போடுறது???
அது உங்க இஷ்டம்...ஆக்கபூர்வமா என்ன உங்க மனசில உதிக்குதோ,அத அப்பிடியே
கொட்டிடுங்க வெளில சிந்தாம சிதறாம...
முக்கியமா பதிவுக்கு இடையில எல்லாம் ஹன்சிகா,தப்சியின் படங்கள் போடக்கூடாது...
நல்ல சீனரி படங்களை தேடி எடுத்து போடுங்க..அதுவும் இல்லாவிடில்,
சாமி படங்கள் போடுங்க..(அதுக்காக கந்தசாமி படம் இல்லை)..

இப்ப பாத்தீங்கன்னா,பதிவுலகுக்குள் வந்த சின்ன புள்ளைக்கு கூட
ஆக்கபூர்வமா பதிவு போடுறது எப்பிடின்னு தெரியவந்திருக்கும்..

சோ,இனி நாம ஆக்கபூர்வமான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கலாம்!!
அந்த பெருமையெல்லாம் என்னை வந்து சேரட்டும்!!!!ஹிஹிஹி

பதிவுலகத்தை கெடுக்கிரான்னு இனி யாரும் என்ன பாத்து திட்டமுடியாது பாருங்க.

Post Comment

83 comments:

Unknown said...

காத்திரமான பதிவு போடுறதுக்கு பின்னாடி இவ்வளவு விசயம் இருக்கா? தலையே சுத்துதையா?!

Unknown said...

மாப்ள நேரடியா எனக்கு அறிவுரை வழங்கியதுக்கு நன்றி!

பதிவுலகத்தை கெடுக்கும் அளவுக்கு நீர் அம்மாம் பெரிய அப்பாடக்கரா ஹிஹி!

Unknown said...

ச்சே! காலைலயே அரம்பிச்சுட்டான்பா! :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இருடி மவனே வர்ரேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹாய் நண்பர்களே,
நம்முள் பலபேர்,(ஹிஹி சத்தியமா நான் இல்லை)
வெறுமனே மொக்கை பதிவுகளை போட்டு காலத்தை கடத்தி
வருகிறனர்../////

நீ என்னைத்தான் கடிக்கிறாய் என்று தெரிந்தாலும், கார்த்தியை மிஸ் பண்ணிய வலியை தமன்னா, வெளிக்காட்டிக் கொள்ளாததுபோல, நானும் வெளிக்காட்டாமல் இருக்கிறேன்!

( ஹி ஹி ஹி...... ஆக்கபூர்வமான பதிவின் - ஆக்கபூர்வமான கமெண்ட் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எந்த நாளும் மொக்கை போட்டால் பார்ப்பவர்களுக்கு அலுப்படிச்சிடாது??////

என்னது அலுப்பு அடிக்குமா? அது என்ன கண்டிப்பான வகுப்பாசிரியரா? அல்லது குடிகாரக் கணவனா? அடிப்பதற்கு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதனால தான் புதிய பதிவர்கள்,மற்றும் பழைய பாழாப்போன மொக்கை பதிவர்களுக்கு
நான் ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்னு
நெனைச்சேன்.../////

டேய்..... இந்த டிங்குஷா வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்! புதுஷா பதிவெழுத வர்ரவன், ஒருபோதுமே கில்மா பதிவோ, மொக்கைப் பதிவோ எழுதமாட்டான்!

அவன் நடிகைகளின் படமும் போட மாட்டான்! அவங்களுக்கு எதுக்கு சொல்லிக்குடுக்கிறே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அப்புறமா வீட்ட வந்து உங்க உங்க கணணியை ஆப்பின் பண்ணி
லாகின் ஆகி டாஷ்போர்ட் போறீங்க..////

கணினிய ஆப்பின் பண்றதுன்னா ஸ்குரூவால கழட்டுறது இல்லையா?

கூடல் பாலா said...

மாப்ள ஒளிஞ்சுக்குங்க .நிறையபபேர் அரிவாளோட வாராங்க ..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அங்க போனாக்கா நியூ போஸ்ட் அப்பிடின்னு ஒரு ஆப்சன் இருக்கும்..
அத கிளிக் பண்ணுங்க../////

நோ இவன் பொய் சொல்லுறான்! நான் கணினிய ஒபன் பண்ணினேன்! அதுக்குள்ள ஒரு காத்தாடி, இரு படக்கொப்பி மாதிரி ஒரு பெட்டி, வயர், பச்சைக்கலர் மட்டை ..... இந்த மாதிரி ஐட்டங்கள்தான் இருந்திச்சு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முக்கியமா பதிவுக்கு இடையில எல்லாம் ஹன்சிகா,தப்சியின் படங்கள் போடக்கூடாது...//////

யோவ் உனக்கு இன்னா தைரியம்! எலெ சக்கரம் இல்லாம வண்டி ஓடுமா? மை இல்லாம பேனா எழுதுமா? கூட ஒரு நாய்க்குட்டி வச்சிருக்காம நடிகைங்க இருப்பாங்களா?

அவ்வளவு ஏன்? கில்மா பதிவு போடாம நம்ம நிரூபந்தான் இருப்பானா?

இதுமாதிரி ஹன்சிகா, தப்சி இவங்களோட படம் போடாமல் நம்மளால இருக்க முடியாது!

அப்படி ஒரு பதிவு போட்டால், அதுக்குப் பேர் பதிவும் இல்லை!

ஒகே!

Ashwin-WIN said...

மாப்புள முயற்சி பண்ணி பாக்குரன். ஆனாலும் எந்த கோவிலுக்கு போகனும்னு தெளிவா சொல்லலையே...

தனிமரம் said...

நல்ல விசயத்தை சொல்லித்தந்த குருவே உன் காலடியில் கொஞ்சம் மண் இருந்தால் அனுப்பி விடுங்கள் கண்ணுக்குள் போட.

தனிமரம் said...

கொஞ்சம் பொறு மாப்பூ நானும் வாரன் ஒரு நல்ல நடிகையுடன் டூயட் பாட இப்ப இல்லை கொஞ்சம் நேரம்!

தனிமரம் said...

தப்சியை விட ஒரு கியூட்டா ஒருத்தி இருக்கிறா இலங்கையில் நடிப்பில் தூள் கிழப்ப விரைவில் வாரம் போட்டோவுடன்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
"கடவுளே ஆக்கபூர்வமாய் பதிவு போடப்போறன் இன்ட்லி தமிழ்மணத்தில்
ஓட்டுகள் வாங்கி பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து வாசிக்க வேண்டும் கடவுளே"/////////

இப்படி பண்ணா நம்மள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கிற நிலை வந்துடும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடேய் சிவா நீ யாருக்கும் அடங்க மாட்டீயா...

சரி அப்புறம்...
ஹிட்ஸ் பதிவு போடுவது எப்படின்னு சொல்லு...

கவி அழகன் said...

ஹ ஹ ஹ இன்னும் அடங்கலையா வாழ்த்துக்கள்

Unknown said...

//மருதமூரான். said...
காத்திரமான பதிவு போடுறதுக்கு பின்னாடி இவ்வளவு விசயம் இருக்கா? தலையே சுத்துதையா?!//

பின்னே..காத்திரமேன்றால் சும்மாவா??

Unknown said...

//விக்கியுலகம் said...
மாப்ள நேரடியா எனக்கு அறிவுரை வழங்கியதுக்கு நன்றி!

பதிவுலகத்தை கெடுக்கும் அளவுக்கு நீர் அம்மாம் பெரிய அப்பாடக்கரா ஹிஹி!///

ஹிஹி உங்களுக்கா??

நீங்க ஆல்ரெடி ஆக்க பூர்வ பதிவர் அண்ணே!!

Unknown said...

//ஜீ... said...
ச்சே! காலைலயே அரம்பிச்சுட்டான்பா! :-)///

என்னத்த?
எத??
யாரு??

எங்க???

எப்போ??

Unknown said...

This comment has been removed by the author.

Anonymous said...

///சாமி படங்கள் போடுங்க..(அதுக்காக கந்தசாமி படம் இல்லை)/// அப்படி கந்தசாமி படம் தான் போடணும் எண்டு அடம் பிடிக்கிறவங்க எனக்கு ஒரு மெயில் பண்ணுங்க ...)))

Unknown said...

ஆக்கபூர்வமான பதிவு என்றால் என்ன பாஸ்...

Unknown said...

//எந்த நாளும் மொக்கை போட்டால் பார்ப்பவர்களுக்கு அலுப்படிச்சிடாது??//

அதுதான் நானும் மொக்கை மாதிரி எழுத பழகிறேன்.

Unknown said...

//முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..//

அது முடியாது நான் வாரம் ஒருமுறைதான் குளிப்பது

Unknown said...

//இஷ்டமான கோயிலுக்கு சென்று வடிவாக தொழ வேண்டும்//

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க என்ன பண்றது பாஸ்

Yoga.s.FR said...

////முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..///கண்டிப்பா,குளிக்கணும் அல்லது தலைக்கு முழுகணுமா?அப்பிடீன்னா இது நமக்கு சரியா வராது!அப்பிடீன்னு ஓ.வ புறுபுறுக்கிறாரு!

Unknown said...

//முக்கியமா பதிவுக்கு இடையில எல்லாம் ஹன்சிகா,தப்சியின் படங்கள் போடக்கூடாது...//

அவங்க படங்களைப் போட்டாத்தான் பாஸ் அது ஆக்கபூர்வமான பதிவாகும்.

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...
//மருதமூரான். said...
காத்திரமான பதிவு போடுறதுக்கு பின்னாடி இவ்வளவு விசயம் இருக்கா? தலையே சுத்துதையா?!//
பின்னே..காத்திரமேன்றால் சும்மாவா?////"அவையளும்" காத்திரமாத் தான் பேசுறோமெண்டு சொல்லீனம்!இவரும் காத்திரமா பதிவு போடோணுமெண்டால் இவளவு "விசயமும்" தேவையெண்டுறார்!

Yoga.s.FR said...

///ஆக்கபூர்வமா என்ன உங்க மனசில உதிக்குதோ,அத அப்பிடியே
கொட்டிடுங்க!///மனசில "உதிக்கிறது"க்கு,இது என்ன "சூரியனா"?பதிவு ஐயா,பதிவு!(இணையப் பத்திரிகை இல்ல)அதுல வேற "கொட்டணுமா"மில்ல?அது சரி!அவரோட கரக்டர சொல்லுறாரு.மக்களே,ஏமாந்துடாதீங்க!

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு,,,

Yoga.s.FR said...

//அதுக்காக கந்தசாமி படம் இல்லை//யோவ்,"கந்தசாமி" கூட சாமி தானய்யா!என்ன, "இந்து சாமி!"

Yoga.s.FR said...

///இப்ப பாத்தீங்கன்னா,பதிவுலகுக்குள் வந்த சின்ன புள்ளைக்கு கூட
ஆக்கபூர்வமா பதிவு போடுறது எப்பிடின்னு தெரியவந்திருக்கும்..///ரஜீவன (ஓ.வ.நா) தான ஓட்டுறீங்க?""""நண்பேண்டா!""""

Yoga.s.FR said...

Nesan said...
நல்ல விசயத்தை சொல்லித்தந்த குருவே உன் காலடியில் கொஞ்சம் மண் இருந்தால் அனுப்பி விடுங்கள் கண்ணுக்குள் போட.///கண்ணு குருடாயிடும்!அப்புறம் எப்புடி ஆக்கபூர்வமா?!பதிவு போடுவீங்க?

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...
//ஜீ... said...
ச்சே! காலைலயே அரம்பிச்சுட்டான்பா! :-)///

என்னத்த? அறுவைய
எத?? குளிக்கிறத
யாரு?? சிவா
எங்க??? கொழும்பில
எப்போ?? at 8:36 AM

Yoga.s.FR said...

///அந்த பெருமையெல்லாம் என்னை வந்து சேரட்டும்!!!!ஹி!ஹி!ஹி!/// koodal bala said...
மாப்ள ஒளிஞ்சுக்குங்க .நிறையப் பேர் அரிவாளோட வராங்க ..

Yoga.s.FR said...

///முக்கியமா பதிவுக்கு இடையில எல்லாம் ஹன்சிகா,தப்சியின் படங்கள் போடக்கூடாது.///பதிவுலகத்தை கெடுக்கிரான்னு இனி யாரும் என்ன பாத்து திட்டமுடியாது பாருங்க!?(அப்பாடி!இனிமே யாரும் உரிம கொண்டாட முடியாது!குறிப்பா,ஓ. வ.நா!!!)

Yoga.s.FR said...

நான் சொல்லப்போற விசயங்களை "கப்"பென்று "கட்ச்" பண்ணி,இந்த பதிவை
புக்மார்க் பண்ணி வைச்சிருந்தீங்கன்னா.............///என்ன, "கப்" அடிக்குதா?அக்கம்,பக்கம் பாருங்க,யாராச்சும் ஓ...வ...............வந்திருக்காங்களோ தெரியல!///"கட்ச்"பண்ணுறதுக்கு நாங்க என்ன டெண்டுல்கரா?

Yoga.s.FR said...

புதுசா வந்த பதிவர்களுக்கு சில வேளை தெரியாமல் இருக்கலாம்./// பழைய பாழாப்போன மொக்கை பதிவர்களுக்கு நான் ஆக்கபூர்வமாய்?!..........ஆமாமா,நாங்க வந்து பத்து வருஷமாச்சுல்ல!

Yoga.s.FR said...

மாப்ள ஒளிஞ்சுக்குங்க.நிறையப் பேர் அரிவாளோட வராங்க ..

Unknown said...

//Yoga.s.FR said...///
என்னைய நடக்குது இங்க????
ஓட்டவடையோட சேர்த்து என்னையும் மொக்கைய போடுறீங்களா??ஹிஹி
ரசித்தேன்!

Unknown said...

//Yoga.s.FR said...///
என்னைய நடக்குது இங்க????
ஓட்டவடையோட சேர்த்து என்னையும் மொக்கைய போடுறீங்களா??ஹிஹி
ரசித்தேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை போன்ற எதுவுமே கிடையாது என்பதை எப்படியோ தெரிந்துகொண்ட யோகா ஐயா அவர்கள், என்னை மேலே போட்டிருக்கும் கமெண்டுகள் மூலம் ‘ மானபங்கப் படுத்தியிருக்கிறார்’!

இதற்கு எதிராக மானனஷ்ட வழக்குத் தொடலாம்னு வக்கீலைத் தொடர்பு கொண்டேன்! அதுக்கு அவர் கொஞ்சமாவது மானம் இருக்கணும்னு சொல்லிட்டாரு!

எனவே என்னை மானபங்கப்படுத்திய யோகா ஐயாவை, “ மானத்தை வாங்கும் மங்கப்பர் “ என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கவுரவிக்கிறேன்!

ஹி ஹி ஹி ஹி !!!!

Unknown said...

///
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எனக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை போன்ற எதுவுமே கிடையாது என்பதை எப்படியோ தெரிந்துகொண்ட யோகா ஐயா அவர்கள், என்னை மேலே போட்டிருக்கும் கமெண்டுகள் மூலம் ‘ மானபங்கப் படுத்தியிருக்கிறார்’!

இதற்கு எதிராக மானனஷ்ட வழக்குத் தொடலாம்னு வக்கீலைத் தொடர்பு கொண்டேன்! அதுக்கு அவர் கொஞ்சமாவது மானம் இருக்கணும்னு சொல்லிட்டாரு!

எனவே என்னை மானபங்கப்படுத்திய யோகா ஐயாவை, “ மானத்தை வாங்கும் மங்கப்பர் “ என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கவுரவிக்கிறேன்!

ஹி ஹி ஹி ஹி !!!!

//

ஹிஹி மங்கப்பர்???
மன்காத்தாவோட புருசனோ???

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹிஹி மங்கப்பர்???
மன்காத்தாவோட புருசனோ???

June 25, 2011 2:28 PM://///

ஹா ஹா ஹா ஹா அவரே வந்து சொல்லட்டும்/

A.R.ராஜகோபாலன் said...

இனிமே இதை பின்பற்றி பதிவு போடுறேன் சகோ

Mahan.Thamesh said...

இது யாருக்கு ? இந்த பதிவு

Mahan.Thamesh said...

நண்பா கவனமாக இருந்து கொள்ளவும் பலபேர் உங்கள தேடிக்கிட்டு இருக்காங்க வாள் அரிவ; கத்தி : போன்றவற்றுடன்

சுதா SJ said...

ஆஹா
நெசமா இது ஆக்க பூர்வமான பதிவுதான்
அவ்வ

சுதா SJ said...

யார் அங்கே
பிரபல மொக்கை பதிவர் மைந்தன் ஆக வர இப்பதிவு உதவும்
பாலோ மீ

சுதா SJ said...

//நான் ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்னு
நெனைச்சேன்...//

நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்

சுதா SJ said...

//முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..//

இதுக்கு பதில் பதிவு போடாமலே இருந்திருவோம் இல்ல

சுதா SJ said...

,//நீங்க கில்மா தலைப்பெல்லாம் வைக்ககூடா//

அவ்வ
இப்புடி நம்ம பொளப்புல மண்ணை போட்டா எப்புடி

சுதா SJ said...

//சோ,இனி நாம ஆக்கபூர்வமான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கலாம்!!
அந்த பெருமையெல்லாம் என்னை வந்து சேரட்டும்!!!!ஹிஹிஹி//

யாரங்கே
கொண்டுவாங்கடா அந்த அருவாள.....
மனுசனை கொலைகாரன் ஆக்காம விடமாட்டாங்க போல

Unknown said...

முடியல சாமி

shanmugavel said...

சரி சிவா .ஹை நானும் கத்துக்கிட்டேனே!

Unknown said...

சிறந்த மொக்கைப் பதிவருக்கான விருது கிடைக்க வாழ்த்துக்கள்.

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹிஹி மங்கப்பர்???
மன்காத்தாவோட புருசனோ???
June 25, 2011 2:28 PM://///
ஹா ஹா ஹா ஹா அவரே வந்து சொல்லட்டும்!.///அடச்சீ!!! ( அடைச்சி இல்ல) வயது போன நேரத்தில இது எனக்கு தேவ தான்!சும்மா தான இருக்கிறன்,ரெண்டுக்கும் விளையாட்டா சிண்டு முடிஞ்சு விடுவமெண்டு பாத்தா......................"""""""""""நண்பேண்டா"""""""""!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"""புறூப் பண்ணீட்டாங்கள்!

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எனக்கு வெட்கம்,மானம்,சூடு, சொரணை போன்ற எதுவுமே கிடையாது என்பதை எப்படியோ தெரிந்துகொண்ட யோகா ஐயா////சீச்சீ!!!!!!!இலை மறை காயா சொன்னத இப்புடிப் பப்ளிக்கில போட்டுடைச்ச ஒரே ஆள் இவராத் தானிருக்கும்!

Yoga.s.FR said...

துஷ்யந்தன் said...
//நான் ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்னு
நெனைச்சேன்...//
நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்./////அதான் நாங்க எதுக்கு இருக்கோம்னு துஷ்யந்தன் சொல்ல வராரு!

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said..எனவே என்னை மானபங்கப்படுத்திய யோகா ஐயாவை,“மானத்தை வாங்கும் மங்கப்பர்“என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கவுரவிக்கிறேன்!//// "மானத்தை வாங்கும் மங்கப்பர்"ஆ,இல்ல "விக்கும் மங்கப்பரா"?(டவுட்டு!)

Yoga.s.FR said...

துஷ்யந்தன் said...
//முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..//
இதுக்கு பதில்,பதிவு போடாமலே இருந்திருவோம் இல்ல?////////அதான?(ஒரு மொக்க மன்னராச்சும் கொறஞ்சுடுவாரில்ல?)

anuthinan said...

//இன்ட்லி தமிழ்மணத்தில்
ஓட்டுகள் வாங்கி பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து வாசிக்க வேண்டும் கடவுளே"//

ஆக்கபூர்வமான பதிவுக்கு மட்டுமா??? பாஸ் இப்படி ஓட்டுக்கள் கிடைக்கும்!!! இல்லை கிடைக்கணும் எண்டு கும்பிடனும்!! #சந்தேகம்

Yoga.s.FR said...

Mahan.Thamesh said...
இது யாருக்கு?இந்த பதிவு??ஆ.ஆ..ஆங்...,தமிழ்மணத்துக்கு!பீட் பண்ணி வுடுங்க!

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அப்புறமா வீட்ட வந்து உங்க உங்க கணணியை ஆப்பின் பண்ணி
லாகின் ஆகி டாஷ்போர்ட் போறீங்க..////கணினிய ஆப்பின் பண்றதுன்னா ஸ்குரூவால கழட்டுறது இல்லையா?/////////////ஸ்குரூவால கழட்டுறதில்ல!ஸ்குரூ டிரைவரால,ஸ்குரூ ஆணியை கழட்டுறது!//////////////

Yoga.s.FR said...

A.R.ராஜகோபாலன் said...
இனிமே இதை "பின்"பற்றி பதிவு போடுறேன் சகோ!////"பின்" பற்றி??????

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அங்க போனாக்கா நியூ போஸ்ட் அப்பிடின்னு ஒரு ஆப்சன் இருக்கும்..
அத கிளிக் பண்ணுங்க../////
நோ!இவன் பொய் சொல்லுறான்! நான் கணினிய ஒபன் பண்ணினேன்! அதுக்குள்ள ஒரு காத்தாடி, இரு படக்கொப்பி மாதிரி ஒரு பெட்டி, வயர்,பச்சைக்கலர் மட்டை ..... இந்த மாதிரி ஐட்டங்கள்தான் இருந்திச்சு!/////ஒண்டையும் "உருப்படியா" விடுறயில்லைப் போல????

June 25, 2011 9:58 AM

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹாய் நண்பர்களே,நம்முள் பலபேர்,(ஹி!ஹி! சத்தியமா நான் இல்லை)
வெறுமனே மொக்கை பதிவுகளை போட்டு காலத்தை கடத்தி
வருகிறனர்../////இது.....இதத்தான் நான் எதிர் பார்த்தேன்!

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...நீ என்னைத்தான் கடிக்கிறாய் என்று தெரிந்தாலும், கார்த்தியை மிஸ் பண்ணிய வலியை தமன்னா, வெளிக்காட்டிக் கொள்ளாததுபோல, நானும் வெளிக்காட்டாமல் இருக்கிறேன்!/////நானும் ஹன்சிகாவை மிஸ் பண்ணிய வலியை வெளிக்காட்டாமல் இருக்கிறேன்!அப்புடீல்ல வரணும்?

vidivelli said...

அப்படின்னா மொக்கை மொங்கிறாக்கள் கவனிக்கணும்...ஹிஹி

நண்பா கடவுளை வணங்கி பிறகு சுப்பிரவாதமா போடுறது...
அல்லது மாவீரர் பாட்டா?
எதண்டாச்சும் போடுங்க என்று சொல்லிடாதேங்கோ....

வாழ்த்துக்கள்.........

உலக சினிமா ரசிகன் said...

யாரங்கே...யாரடா அங்கே...
யோவ் மங்குணி...நீயாவது வாய்யா...
இந்த சிவாப்பயல...தலைகீழா தொங்க விட்டு மூக்குப்பொடியை மூக்கு ஒட்டை வழியா குத்து..குத்துன்னு குத்தி நிரப்புங்க...
மூக்குப்பொடி ஆசனவாய் வழியா நிரம்பி வரணும்.

அடுத்தப்பதிவை உருப்படியா போடணும்...
அது வரை விடாதீங்க...

நிரூபன் said...

வணக்கம் மச்சி, நேற்று முழுக்க, என்னோட சிங்கள லவ்வர் கூட மாலையில் கசூரினா கடற்கரைக்கும்,
காலையில் தமிழ் லவ்வர் கூட நல்லூர் கோயிலுக்கும் போன காரணத்தால் வர முடியலை...
சாரி, இந்த ஆக்கப்பூர்வமான பதிவைப் படித்து, ஆக்கபுர்வமான கமெண்டை, ஆக்கபூர்வமா டைப் அடிச்சு, ஆக்கபூர்வமா போட முடியலை..

இருங்க ஆக்கபூர்வமா படித்து விட்டு, வாறேன்.

நிரூபன் said...

நம்முள் பலபேர்,(ஹிஹி சத்தியமா நான் இல்லை)
வெறுமனே மொக்கை பதிவுகளை போட்டு காலத்தை கடத்தி
வருகிறனர்..எந்த நாளும் மொக்கை போட்டால் பார்ப்பவர்களுக்கு அலுப்படிச்சிடாது??//

அடிங்....படவா ராஸ்கல், எங்கடை பதிவுகள் தெருவில கச்சான் சுத்தி வருகிற பேப்பரின் தரத்திற்கு கூட இல்லை என்று ஒரு வட்டக் குழுவினர் அறிக்கை விட, நீ வேறை அவங்க கூட சேர்ந்து நம்மளைக் கடிக்கிறியா...

இரடி மச்சி,.... உன்னை அப்புறமா டீல் பண்ணிக்கிறேன்.

நிரூபன் said...

அதனால தான் புதிய பதிவர்கள்,மற்றும் பழைய பாழாப்போன மொக்கை பதிவர்களுக்கு
நான் ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்னு//

மச்சி, நீ அவங்களைக் கடிக்கிறாய் தானே...

இரு நான் அங்கே போய் போட்டுக் கொடுத்திட்டு வாறேன்.

நிரூபன் said...

எப்படி ஆக்கபூர்வமாய் பதிவு போடுவதென்று..
நான் சொல்லப்போற விசயங்களை கப்பென்று கட்ச் பண்ணி,இந்த பதிவை//

ஐயோ...ஐயோ....

இது தானே பல பேர் எமக்கு ஏற்கனவே சொல்லித் தந்திருக்கிறாங்க...ஓட்டை இல்லாமல் வடை சுடுவது எப்படி என்றும், ஒன்றும் இல்லாமல் நிர்வாணமாய் ரோட்டில் திரிவது எப்படி என்றும் பலர் சொல்லித் தந்திருக்கிறாங்க தானே...

ஹி....ஹி....

நிரூபன் said...

முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..//

அப்படீன்னா, நான் குளிக்காமல் பதிவு போடுறேனே, அதான் என் பதிவுகள் ஹிட் ஆகுவதில்லையா..


ஹி....ஹி...

நிரூபன் said...

அப்புறம் புத்தாடைகள் அணிந்து(கவனிக்க புத்தாடை நாட் பழைய ஆடை)உங்க//

அடிங்...நான் போடுறதே, பெட்டாவில வாங்கின பழைய உடுப்புக்கள், அதிலை இது வேறையா..

ஹி...ஹி...

நிரூபன் said...

இஷ்டமான கோயிலுக்கு சென்று வடிவாக தொழ வேண்டும்,
"கடவுளே ஆக்கபூர்வமாய் பதிவு போடப்போறன் இன்ட்லி தமிழ்மணத்தில்
ஓட்டுகள் வாங்கி பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து வாசிக்க வேண்டும் கடவுளே"
அப்பிடீன்னு நீங்க கடவுளை வேண்டுதல் வேண்டும்...இட் இஸ் வெரி இம்போர்ட்டன்ட்..//

அடப் பாவி,

நான் கோயிலுக்குப் போறதே, என் லவ்வரோட தொல்லையைச் சமாளிக்க...
இதில இது வேறையா...
அவள் கூட கோயிலுக்குப் போனால், அவளைச் சைட் அடிக்க விட்டிற்று, நான் போய் பக்கத்திலை நின்று கும்பிடுற பொட்டைய கடைக்கண்ணால பார்த்து லுக்கு விடுவேன்,

அப்புறமா அந்த வேலையை இனிமே கட் பண்ணி, இப்படி ஒரு எக்ஸ்ட்ரா வேண்டுதலைக் கடவுள் கிட்ட கேட்க வேண்டும் என்று சொல்லுறியே மச்சி,

இது எந்த வகையில் நியாயமாகும்?

நிரூபன் said...

அப்புறமா வீட்ட வந்து உங்க உங்க கணணியை ஆப்பின் பண்ணி
லாகின் ஆகி டாஷ்போர்ட் போறீங்க..//

யோ...என்னய்யா ஐடியா கொடுக்கிறாய்?

கணினியை ஆப்பின் பண்ண, எனக்கு டைம் காணாது, அதை ஆப்பின் பண்ணி, என்ன சைக்கிள் கழுவிப் பூட்டுவது மாதிரிக் கழுவிப் பூட்டனுமா?

இவ்வளவு வேலையும் பண்ண ஒரு மணித்தியாலம் ஆகிடும், இதில பதிவெழுத நேரத்திற்கு எங்கே போவது?
நண்பர்களோட பதிவிற்கு பின்னூட்டம் போட நேரத்திற்கு எங்கே போவது?

கொய்யால...ஐடியாவா குடுக்கிறாய், உன்னைய அப்புறமா கவனிக்கிறேன்,

உனக்கெல்லாம் வெள்ளவத்தை............
ஹோட்டலுக்கு கூட்டிப் போயி, நாறல் இட்லி வாங்கித் தந்தான் சரி...

ஏற்கனவே அங்கே புளிச்ச சாப்பாடு தான் விக்கிறாங்க, அதிலை ஒரு எஸ்ட்ரா சேஞ்ச் வாங்கித் தாறேன்...

ஜாக்கிரதை, படவா, பிச்சுப் புடுவேன் பிச்சு.

நிரூபன் said...

இப்ப பாத்தீங்கன்னா,பதிவுலகுக்குள் வந்த சின்ன புள்ளைக்கு கூட
ஆக்கபூர்வமா பதிவு போடுறது எப்பிடின்னு தெரியவந்திருக்கும்..//

அட்ரா...அட்ரா....அட்ரா...

அப்பிடிப் போடு மச்சி.. கடியெண்டால் இது தான் கடி..

ஹி....ஹி...

நிரூபன் said...

சோ,இனி நாம ஆக்கபூர்வமான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கலாம்!!
அந்த பெருமையெல்லாம் என்னை வந்து சேரட்டும்!!!!ஹிஹிஹி//

இரு மச்சி, விகார லேன் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிக் கொஞ்ச செருப்பு எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்கு வாறேன்...

ஹி...
ஹி...

நிரூபன் said...

மச்சி, தமிழ் மணம் தூங்கிடுச்சி என நினைகிறேன்...

ஹி....ஹி...

Related Posts Plugin for WordPress, Blogger...