Thursday, July 21, 2011

உண்மைத்தமிழனின் தெரியாத பக்கங்கள்!!


குறிப்பு-விக்கிப்பீடியாவிலிருந்து,மற்றும் பல தளங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பதிவு தான் இது.என் முன்னோர் நான் பதிவிடுவதர்க்காக தொகுத்து வைத்த ஓலைச்சுவடிகளிளிருந்து தொகுக்கப்பட்டதல்ல.வரலாற்று சம்பவங்களும் கதைகளும் படிக்கும் பொது ஒரு வித ஆவல் கிளர்ச்சி எழும்.அப்படிப்பட்ட ஆளாயின் தொடருங்கள்..சில விசயங்களை பகிர்வதால் நமக்கும் ஒருவித திருப்தி...அதில் இதுவும் ஒன்று.குறைந்தது ஒரு ஐந்து பேராவது வாசித்தால் சந்தோசம்!சில விளக்கம் தேவையான முக்கிய சொற்கள் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளன..மேலதிக விளக்கம் தேவைப்படின் அதனை கிளிக்கி சென்று பாருங்கள்!


இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகாலஉத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன்காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

ஈழப் போர்


ஈழம்

இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்தசிறந்த கோயிலுக்குஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின்தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னடவீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இராஜராஜ சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது.[3]


ஈழப் படையெடுப்பின் விளைவுகள்

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்கபொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர்ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்றதமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.


ஈழத்தில் சோழக் கோயில்கள்

இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.


இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின.
இவன் வலிமை மிக்க
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது

தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்

இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.1014 C.E.
ஆட்சிக்காலம் கி.பி. 985 - கி.பி. 1012
title இராசகேசரி
தலைநகரம் தஞ்சாவூர்

அரசி உலக மாதேவியார்
வானவன் மாதேவியார்
சோழ மகாதேவியார்
பிள்ளைகள் இராசேந்திர சோழன்
மாதேவடிகள்
குந்தவை
முன்னவன் உத்தம சோழன்
பின்னவன் இராசேந்திர சோழன்
தந்தை சுந்தர சோழன்
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1014




ராஜ ராஜ சோழன் பெருமைகளை உரைக்கும் காணொளி ஒன்று..பலர் பாத்திருக்க கிடைத்திருக்காது.பாருங்கள் ஒருவித உணர்ச்சி உங்கள் மனதில் தோன்றும்!
ஆரம்பத்தில் தாஜ்மகால் வந்தாலும்,ஐந்தாவது நிமிடத்தில் இருந்து....வேண்டாம் பாருங்கள் நீங்களே!


தஞ்சை கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது

.














தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது

கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )

சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.

தஞ்சை பெரிய கோயிலின் நிழல் பற்றி உங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்லுங்கள் நண்பர்களே...!பதிவு பலரை அடைய விரும்பினால் ஓட்டு போட்டு செல்லுங்கள்!

Post Comment

53 comments:

செங்கோவி said...

கும்மி அடிச்சிருப்பீங்கன்னு வந்தா, அருமையான பதிவு..

சிவாக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.

செங்கோவி said...

நிழல் விழும்.

சொல்லிட்டேன் உண்மையை.

தனிமரம் said...

காத்திரமான ஒரு பதிவு நீங்கள் சொல்லும் குந்தவையைத் தான் பொன்னியின் செல்வனில் கல்கி அவர்கள் முக்கிய கதாப்பாத்திரமாக்கியிருக்கிறார் போலும் பல விடயங்களை ஆராய்ந்திருக்குறீர்கள் !

கூடல் பாலா said...

தமிழனின் பெருமையை தொடர்ந்து பறை சாற்றுங்கள் ...நன்றி !

தமிழ் நண்பன் said...

மிகச் சிறப்பான பதிவு நண்பரே;

ஜயந்தன் said...

அடிக்கடி நினைவுபடுதணும் நம்ம ஆக்களுக்கு இல்லை எண்டா வரலாறே நம்ம ஆக்களுக்கு தெரியாம போய்விடும். சிறந்த தொகுப்பு நண்பா..

Unknown said...

தமிழன் புகழ் கூறும் அட்டகாசமான பதிவு மைந்தன்!

'இந்தப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!' :-)

Unknown said...

நான்தான் முதல்னு நினைச்சேன்! ஏற்கனவே வந்துட்டாய்ங்களா? அதுவும் அண்ணன், தானைத்தலைவன் நான் சொல்ல நினைச்சதையே சொல்லிட்டாரு!!

ஆகுலன் said...

தகவலுக்கு நன்றி....
நல்லா இருக்குது...

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

ராஜ நடராஜன் said...

நேரில் கண்ட தஞ்சைப் பெரும் கோயில் சித்திர வடிவிலும் அழகாகவும்,பிரமிக்க வைக்கவும் செய்கிறது.வரலாறு தமிழனுக்கு சரியாகவே சொல்லிக்கொடுக்கப்படவில்லை.வரலாறு படித்தவனும் வாழ்க்கையில் பின் தள்ளப்பட்டுவிட்டான்.

தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் கற்றலுக்கு நிறைய சொல்லிக்கொடுத்திருக்க கூடும்.

சமகால தமிழக வரலாற்றில் கருணாநிதியின் கட்டிடங்கள் கூட அவரது தமிழ் இன துரோகத்தையும்,சகுனி சுயநலத்தையும்,குடும்ப அரசியலையும் பின் தள்ளிவிட்டு வரலாற்றில் நிலையாய் நிற்கும்.

ராஜ நடராஜன் said...

பின்பு கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை கசிவு ஏற்படும் அச்சத்தையும் மாநில அரசியல் சண்டைகளையும் உருவாக்குகிறது.கர்நாடகம் துவங்கி வரும் காவிரி நீரைத் தேக்கி கல்லணை கட்டிய மதிநுட்பமெல்லாம் தமிழன் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள வேண்டியவை.

வரலாற்றுப்பதிவு பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

அடடா அருமை அருமை மக்கா!!!!!!!!

அம்பாளடியாள் said...

தஞ்சை பெரிய கோயிலின் நிழல் பற்றி உங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்லுங்கள் நண்பர்களே...!பதிவு பலரை அடைய விரும்பினால் ஓட்டு போட்டு செல்லுங்கள்!
சத்தியமா அது என்னுடைய நிழல் இல்லை சகோ ஹி....ஹி....ஹி.....

மன்னிக்கணும் அருமையான வரலாற்றுப் பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி .
ஓட்டுபட்டை இரண்டிலும் நச் என்று குட்டி விட்டுட்டன் இந்த ஆக்கத்தை
விரைந்து பறக்கும்படி சரிதானே?.....

Tirupurvalu said...

Good article keep it up.Like this article so many peoples know history.On studying days many guys sleep in history period like me.Now we like to about them because of their art & culture

சக்தி கல்வி மையம் said...

கும்மி அடிச்சிருப்பீங்கன்னு வந்தா, அருமையான பதிவு..

சிவாக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.// ரிப்பீட்டு..

சி.பி.செந்தில்குமார் said...

டைட்ட்லில் வில்லங்கம்.. ஆனால் பதிவில் .. சரக்கு

maruthamooran said...

கும்மி அடிச்சிருப்பீங்கன்னு வந்தா, அருமையான பதிவு..

சிவாக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.

maruthamooran said...

பின்னுாட்ட உபயம் செங்கோவி.

உணவு உலகம் said...

சிவாவிடமிருந்து ஓர் சிறந்த பகிர்வு. நன்றி.

Anonymous said...

///பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.//அதிசயம் தான் ..

KANA VARO said...

சிவாக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.//

'இந்தப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!' :-)//

ஆளாளுக்கு சிவாக்குள்ள பூந்து பாக்கிறதுக்கு அவனென்ன பறங்கி மலை ஜோதியா வைச்சிருக்கான்.

பாலா said...

நிறைய கஷ்டப்பட்டு தகவல்களைத்திரட்டி எழுதி இருக்கிறீர்கள். நிஜமாகவே அரிய தகவல்கள்தான். நன்றி நண்பரே.

”தளிர் சுரேஷ்” said...

சோழர்களைப் பற்றி குறிப்பாக ராஜராஜ சோழனைப்பற்றி அறியாத பலதகவல்கள் அறிந்துகொள்ளமுடிந்தது அருமை. நன்றி

shanmugavel said...

நல்லாருக்கு சிவா! இப்போது குந்தவை பற்றிய புத்தகம்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.

சென்னை பித்தன் said...

திடீரென்று என்ன ஆச்சு.மிகவும் சிரமப்பட்டு அரிய தகவல்களைத் தொகுத்திருக்கிறீர்கள்.வாழ்க.

Yoga.s.FR said...

உதெல்லாம் எனக்கு முந்தியே தெரியும்!என்னட்ட "ப்ளாக்" இல்லாததால எழுதேல்ல எண்டு நான் சொல்லமாட்டன்!ஏனெண்டால்,எனக்கு உதெல்லாம் தெரியாது!பொடியன் விசயகாறன்!சரியான நேரத்தில,சரியான பதிவு(வரலாறு)போட்டிருக்கிறான்!வெல்டன் மை போய்!!!!!!!!!!!!!!!!!!!(இங்கிலீஸு!)

R.Puratchimani said...

சோழனின் வம்சம் இன்னும் சுத்தமாக அழியவில்லை....இன்னும் இருக்கிறார்கள் தோழரே.
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கும் போதே இங்கு சிலரின் ரத்தம் கொதித்தது, பார்த்து விட்டு சோழ புராணம் பேசியவர் பலர். பண்டைய கிராமங்களில் சோழர்கள் இன்னும் உள்ளனர் அவர்கள் சோழர்கள் என்று தெரியாமலே.
சோழனின் ஆட்சிக்காலம் பண்டைய லெமுரியா கண்டத்திலும் இருந்ததாக சொல்கின்றனர். லெமுரியா அழியும் தருவாயில் தான் அவர்கள் மதுரைக்கு வந்தனர்.

சோழனின் காணொளி பார்த்து உங்களுக்குள் ஒரு உணர்வு வந்தது. இது ஏதேச்சையாக வந்திருக்கலாம் அல்லது நீங்களும் சோழன் தான் என்பதை உணர்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்.
நாம் அனைவரும் தமிழர்கள், மனிதர்கள் என்று இனி சிந்திப்போம்.

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

R.Puratchimani said...

//சோழனின் ஆட்சிக்காலம் பண்டைய லெமுரியா கண்டத்திலும் இருந்ததாக சொல்கின்றனர். லெமுரியா அழியும் தருவாயில் தான் அவர்கள் மதுரைக்கு வந்தனர்.//
மன்னிக்கணும் இது பாண்டியனை பற்றியது. லெமுரிய இருந்தது இல்லை என்று இருவேறு கருத்துக்கள் உள்ளது.

Thabo Sivagurunathan said...

கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்து பாருங்கள் . இராசராச சோழனின் வரலாற்றை மிக சுவையாக சொல்லியிருப்பார்.பொலன்னறுவைக்கு சிறுவயதில் சென்ற ஞாபகம் .சோழரின் சிற்பங்களுக்கென்று தனியான ஒரு மரபு இருக்கும் .சிலைகளின் கண்கள் தெளிவாக செதுக்கப்பட்டிருக்கும் .நாசிகள் கூர்மையாக வரையப்படிருக்கும் .இப்படி பல தனித்துவமான மரபு அவற்றில் இருக்கும் .அவற்றை இன்றும் பொலன்னறுவையில் அமைந்துள்ள சிவன் கோவில்களில் காணாலாம் .அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட ஐந்தாம் மிஹுந்துதான் இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த மன்னர்களிலேயே மிகவும் திறமையற்ற ஒரு மன்னன் என்று சிறுவயதில் பாடப்புத்தகங்களில் படித்ததாக ஞாபகம் .சோழனிடம் தோல்வியடைந்ததை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக பாடப்புத்தகங்களில் அப்படி சரி செய்து விட்டார்கள் .இது போல்தான் இன்றுவரையும் வரலாற்று பாடப்புத்தகங்களில் பலவிடயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன .அன்றைய ஐந்தாம் மிஹுந்து அன்றைய கேரளாவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தான் .அவனுடைய ஆயுத தேவைகள் அன்றய கேரளாவினால் பூர்த்திசெய்யப்பட்டது .அன்றைய கேரளா என்பது சேர இராச்சியம் .பின்பு ஒரு காலத்தில் இந்த சேர இராச்சியத்தை சேர்ந்தவர்கள் கூலிப்படைகளாக இங்கு கொண்டுவரப்பட்டனர்.அவர்கள் தான் இன்றைய சிங்கள மக்களின் முன்னோர்கள் .அதுதான் அன்று விட்டதை இன்று மறுபடியும் கேரளாவின் (இந்தியாவின் ராணுவம் மற்றும் முக்கிய துறைகளில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் கேரளர்கள் தான் ) உதவியுடன் சாதித்துவிட்டார்கள் .
நல்ல காத்திரமான படைப்பு .

என்னை அறிமுகப்படுத்தி கொள்கிறேன் .
http://oruulaham.blogspot.com/

Samy said...

Good and long post and a nice video.Thank you for share with us and for the hard work done. samy

Anonymous said...

படிக்க ஆசை இருந்தாலும் காணொளி பார்க்க ஆசை இருந்தாலும் கூடவே ஐயாரே ஆயிர ஆயிரப்ப என்ற பாடும் கூட....அதை நிருந்துங்கள். இப்ப ஐநூறு பாடு அழகாண புள்ளி மானே.

I am quitting your site without reading because of songs palying all the time which is a big nuisance...please take that away..
அன்புடன்
siva

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அருமையான சரித்திரக்குறிப்புகள். பாராட்டுக்கள் பகிர்வுக்கு. நன்றி..

Unknown said...

சிறந்த தொகுப்பு மாப்ள..

காட்டான் said...

சிறந்த தொகுப்புத்தான் தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்க்கும் போது எனக்கும் பிரமிப்பாகதான் இருந்தது..!

அக்காலத்திலேயே சேர சோழ பாண்டியன்னு எங்களுக்குள்ளேயே சண்டை பிடித்தோம்..அத்துடன் இராய ராய சோலனைப்பற்றி ஆராச்சிக்கட்டுரை அன்மையில் படித்தேன் அவர் மீது இருந்த ஒரு வித பிரமிப்பு விளகியதுதான் மிச்சம்... இப்படி கோவில்களை கட்டாமல் கல்விச்சாலைகளை உருவாக்கி இருந்தால் பாராட்டியிருக்கலாம் ... கோவில்கள் சாதியத்தை உருவாக்கும் பட்டறைகள்..!?

காட்டான் குழ போட்டான்...

Yoga.s.FR said...

இப்படி கோவில்களை கட்டாமல் கல்விச்சாலைகளை உருவாக்கி இருந்தால் பாராட்டியிருக்கலாம் ... கோவில்கள் சாதியத்தை உருவாக்கும் பட்டறைகள்..!?///இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை காட்டான் அவர்களே!யார் சொன்னது கல்விச்சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கவில்லையென்று?பெரிதாகப் பேசு பொருளாக அவை இருக்கவில்லை.கோயில்கள் பண்டைய சரித்திர ஆவணங்கள்!எங்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் பேசு பொருட்கள்!ஒவ்வோர் சித்திரமும் பல்லாயிரம் கதை சொல்லும்!

Yoga.s.FR said...

காட்டான் குழ போட்டான்...///நான் சப்பி,இரை மீட்டிருக்கிறேன் போய்ப் பாருங்கள்!

ஸ்ரீராம். said...

பெரிய கோவில் நிழல் தரையில் விழாது என்பதெல்லாம் யாரோ கிளப்பி விட்ட தேவை இல்லாத புரளிகள். கட்டாயம் விழும். பின்னூட்டத்தில் தெரிவித்திருப்பது போல பொன்னியின் செல்வன் நல்ல புத்தகம் இது பற்றிப் படிக்க. சமீபத்தில் பாலகுமாரன் உடையார் என்றொரு நாவல் எட்டு பாகம் எழுதி இருக்கிறார். பெரிய கோவில் கட்டுமானம் பற்றியதுதான் இந்த நாவல். (நான் ஒரு பாகம்தான் படித்திருக்கிறேன்)
சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் பெரியகோவில் பற்றி டாகுமெண்டரி காட்டினார்கள். எல்லோரும் சொல்வது போல மேலே உள்ள கல் ஒரே கல்லால் ஆனதல்ல, நாலு ஒரே அளவுள்ள கல் என்று ஆதாரங்களுடன் காட்டினார்கள். பெரிய பாறைகளை அந்தக் காலத்தில் சிற்பம் தயாரிக்க எப்படி உடைத்தார்கள் என்றும் காட்டினார்கள். சிறிய துளை செய்து மரத்துண்டை அதில் செருகி தண்ணீர் பட்டு மரத்துண்டு உப்பும்போது பாறையில் விரிசல் ஏற்பட்டு... என்று காட்டினார்கள்.

ஹேமா said...

சிவா...பிந்தி வந்தாலும் அருமையான சேகரித்து வைக்கவேண்டிய பொக்கிஷப் பதிவு.இன்னுமொருமுறை வாசிக்கவேணும்.காணொளியும் இனித்தான் பார்க்கப்போகிறேன்.நன்றி சிவா !

admin said...

டைட்ட்லில் வில்லங்கம்.. ஆனால் பதிவில் .. சரக்கு

Arjun said...

முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்

காட்டான் said...

யோகா நீங்க சப்பி துப்பியத  பார்த்தேன்.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது.. வாழ்த்துக்கள்.. 

Shiva sky said...

அருமையான பதிவு நண்பா..

Shiva sky said...

வரலாரு தெரியாதவர்களுக்கு ..இது ஒரு வரப்பிரசாதம்

Anonymous said...

தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் தொடர்ந்து பரவட்டும் நண்பரே
நன்றி

Nagappan said...

அருமையான பதிவு நண்பரே...
நானும் அந்த தஞ்சை மண்ணை சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்...

காட்டான் said...

என்னையா சிவா நான் போடுற குழய குறும்பாடு பாப்பிட்டு போறத நீ வேடிக்கை பார்துக்கொண்டிருக்காய்..?

ஆட்டை பிடித்து கட்டிவைய்யய்யா காட்டான் வந்து கறிக்குழம்பு வைக்கிறான்யா..!?

Riyas said...

மிகச்சிறந்த ஓர் பதிவு சிவா,,, நிறைய தகவல்கள்

உங்களை தொடர்பதிவொன்றுக்கு அழைத்துள்ளேன்,, நண்பரே.

http://riyasdreams.blogspot.com/2011/07/blog-post_23.html

Mathuran said...

பாஸ், என்னாச்சு.... திடீர் என்று இப்பிடியெல்லாம்

Unknown said...

அன்பு சகோதரரே, சோழ வம்சம் இன்னும் உயிரோடுதான் உள்ளதாக தெரிகிறது.அவர்கள் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வரை பிச்சாவரம் ஜமீந்தார் என்ற பெயரில் சுருங்கி வாழ்ந்து வருவதாக பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளரும்,முன்னாள் அண்ணாமலை பல்கலைகழ்க பேராசிரியரும், கல்கியின் பொன்னியின் நாவல் எழுத வரலாற்று குறிப்புகளுக்கு உதவிய நூல்கள் எழுதியவருமான திரு. சதாசிவ பண்டாரத்தார் ஒரு மாநாட்டில் குறிப்பிட்டுள்ளதாக தஞ்சை தமிழ் பல்கலை கழக முன்னாள் பேராசிரியரும்,அறிஞருமான புலவர் செ.ராசு 1995 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் நடந்த :சோழர்கள் யார்:என்ற கருத்தரங்கில் ஆதாரங்களுடன் ஆராய்ச்சியுரை நிகழ்த்தியுள்ளார்.அது பற்றிய கட்டுரை விடுதலை நாளிதள் ஞாயிறு மலரில் 30-1-2011 தேதியிட்டதில் வெளிவந்துள்ளது.

கார்த்தி said...

சார் காத்திரமான பெரிய பதிவுகளையும் போடுது! வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.

தமிழர்களின் பெருமையினை விளக்கும் வரலாற்றுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

சோழர் கால கட்டடக் கலையின் பெருமைகளுக்குச் சான்றாக விளங்கும் தஞ்சைப் பெருங்கோயிலும், வீடியோவொல் வரும் கிளு கிளு ஓவியங்களும் இந்தியாவிற்குப் போய், இவற்றினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றது.

ம.தி.சுதா said...

நல்லதொரு தேடல் மைந்து நன்றிகள்..

Yazhini said...

Super Super Supero Super !!!

Related Posts Plugin for WordPress, Blogger...