Tuesday, October 26, 2010

என்று தீரும் இந்த சாதி வெறி??நூற்றாண்டுகள் கடந்தாலும்
கழியாத
கலையாத
சாதிவெறி..

"சாதிகள் இல்லையடி பாப்பா"
சாதி வெறி பிடித்தோர்க்கு
கேட்புலன் இல்லையடி
அன்றிலிருந்தே!

மாற்றமென்னும் மருந்து
வேறெங்கும்
இல்லை
மனதில் வேண்டும்!!

மனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!

சிலரைத்தவிர
முக்கால்வாசிப்பேர்
மடையர்களாக..கோர்ட் சூட் அணிந்த
கனவான் போர்வையில்
பலவான்கள்!!

மதிவண்ணன் வரிகளைப் போல்,
"எல்லாமும் சாத்தியம்
தானெனினும்
எதையும் செய்யப்போவதில்லை
நான்..
என்னை கீழாகவும் உன்னை
மேலாகவும் காட்ட..
எனக்கு பூட்டிய இழி முகத்தை
மட்டுமல்லாது
நீயநிந்துகொண்ட உயர்
முகத்தையும்
கிழித்துக்கொண்டிருப்பது தவிர!!"

சாதிகள் ஒழியட்டும்
சாதி வெறி அடங்கட்டும்
மனங்களே மனிதர்களே
நாளை உங்கள் கைகளில்!

பிடித்திருந்தால் பதிவு உங்களுக்கு ,பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் எனக்கு..!!

Post Comment

Friday, October 22, 2010

இடையினம் கற்றுத் தரவா?


என் கண்களுக்கு
உறக்கமில்லை!!
சதா உன்னையே
பார்க்கின்றனவே
அதனாலோ என்னமோ!!


மெல்லினமே..
உனக்கு
இடையினம் கற்றுத் தரவா?
வல்லினம்
எனது விரல்களே!!


உன் ஸ்பரிசத்தால்
என் உடலில் மின்சாரம்..
நீ என்
சம்சாரம் என
குத்திய முதல் முள்!!

Post Comment

Tuesday, October 19, 2010

பின்நவீனத்துவம்-காதலில்!!


மிஸ்ட் கால்
எஸ் எம் எஸ் இன்றி..
ப்லக்க்பெர்ரி போன்
தான் உண்டு..
முறிக்கிட புது
பைக்குமின்றி..
பைக் என்ன
பென்ஸ்'சும் கொண்டு ..
பார்த்திட ஒரு
சினிமா இன்றி..
அடிக்கடி
ஹொலி வூட் பார்த்து..
கூடிட ஒரு
பீச் பார்க் இன்றி..
பீச் இலே சனம் என்று
பார்க்'கிலே கடலை போட்டு..
கூத்தாட ஒரு
pub தான் இன்றி..
pub 'இலே நைட்
டிஸ்கோத்தே போட்டு..
தபு ஷங்கர்
கவிதைகள் இன்றி..
காதலித்து பார்
கவிதையை திருடி..
பேஸ்புக் ஸ்கைப்'பும்
வழியின்றி..
சாட்டிங் இல்
குட் நைட் மோர்னிங்..
தனிமைக்கு ஒரு
இடம் தான் இன்றி..
தினசரி
மீட்டிங் போட்டு..
காதலித் தார்கள்
அன்று!!
காதலிக்கின்றோம் இன்று!!என்ன சொல்றீங்க ??அத்தனையும் உண்மை தானே??

Post Comment

Friday, October 15, 2010

நயன்"னை வைச்சிருக்கேன்-பிரபுதேவா!!(மொக்கை)

சத்தியமா இது பிளாஷ் நியூஸ் இல்லேங்க..என்ன பண்ற சூடா தலைப்பு வைச்சா தானே விழுந்தடிச்சு வாராங்க நம்மள்ட மாதிரி மொக்கை ப்ளாக்'குக்கு எல்லாம்!!மன்னிச்சூ.....
இப்ப சூடா போய்கிட்டிருக்கிற மேட்டர்'எ சும்மா மொக்கையா கலாய்ச்சு பாப்பமே எண்டு ஒரு சின்ன முயற்சி தாங்க..
காதலன் படத்தில பிரபுதேவாட பாடலையே உல்ட்டா பண்ண போறமாக்கும்..
ஊர்வசி ஊர்வசி பாடலை அப்பிடியே மாத்தி இப்ப பிரபுதேவா பாடினா எப்பிடி இருக்கும்??
இப்பிடித்தான் பாருங்க...
பாட்டு தெரியாதவங்க முதல்லில இத பாருங்க..தமிழ் ல இந்த பாட்டு தெரியாதவங்களே இருக்க முடியாது..அதால....இது தெலுங்கு ஊர்வசி...


நயன்தாரா நயன்தாரா
take it easy நயன்தாரா..
பார்ட்டி வீட்டே கும்"னு இருந்தா
தேவை இல்லே நீ தாரா..
வாழ்க்கையை வாழவே
keep'பு தாண்டா ஓர் வழி
வாலிப வாழ்க்கையில்
நயனு தாண்ட என் வழி..!
நயன்தாரா நயன்தாரா
take it easy நயன்தாரா
பார்ட்டி வீட்டே கும்"னு இருந்தா
தேவை இல்லே நீ தாரா..

சொல்லடி ரம்லத் ரம்லத்
உன்கிட்ட என்ன இருக்குதெண்டு..
நீயடி ரம்லத் ரம்லத்
குறைய சொல்லடி நயனுக்கிட்ட

முதலு மனுசி முரண்டு பிடிச்சா
take it easy பாலிசி..
ஒழுங்கா இருந்து கெட்டுப் போனா
take it easy பாலிசி..
கள்ள ஜோடின்னு மீடியா சொன்னா
take it easy பாலிசி..
சிம்புகிட்ட லிப்கிஸ் குடுத்தா..
take it easy பாலிசி..
கேளடி ரம்லத் ரம்லத்
தாடி தானே என்னுகிட்ட
நீயடி ரம்லத் ரம்லத்
பாடி தானே உன்னுகிட்ட...!!

பெஸ்ட்டு ஜோடி அவார்டு குடுத்தா
take it easy பாலிசி..
சிம்பு first 'டு நானு செகண்டு..
take it easy பாலிசி..
கண்ட இடத்தில் அடிப்பேன்னு சொன்னா
take it easy பாலிசி..
களவா ஹோட்டல் ரூமுக்கு போனா
take it easy பாலிசி...

நயன்தாரா:
கண்டதும் காதல் வடியாது
நயன்தாரா போல வடிவேது
பூமியில் காதல் கிடையாது
வப்பாட்டி நானே பல பேர்க்கு
ரம்லத்:
போராட்டம் ஏதும் செய்யாமல்
தாராவை விரட்ட முடியாது
கண்ணகி சிலை தான் இங்குண்டு
ரம்லத்தின் சிலையொன்று இங்கேது !!

மொக்க பதிவுன்னு வேற போட்டிட்டன்...ஒட்டு போடாம போகலாமாங்க??

Post Comment

Tuesday, October 12, 2010

என் பொருட்டு நீ கண்ணடித்தால்..!!உன் கண்கள்
வரைந்த
சுவரோவியத்தினுள்
சுவாசமாய் இருப்பவன்..

உன் கண்கள்
பேசிய
ஆயிரமாம் கவிதைளுக்கு
எதுகையாய் எடுபட்டவன் ..

உன் கண்கள்
திரும்பிய
திசையெங்கும்
திகட்டாமல் நோக்குபவன்..

உன் கண்கள்
அயர்ந்த
வேளைகளில்
இமையாக மாறியவன்..

உன் கண்கள்
நனைந்த
பொழுதுகளில்
கைக்குட்டையானவன்..!
உன் கண்கள்
கண்ட
பொருட்களை
பொக்கிசமாக்கியவன்..
உன் கண் கூடாய்
மௌன மொழி
சம்மதம் தான்
ஏங்குகிறேன்..
மொழி பேசும்
கண்கள் -மறு
மொழி பேச மறுப்பதேன்..?
என் பொருட்டு நீ
கண்ணடித்தால்......

Post Comment

Friday, October 8, 2010

எந்திரன் பார்த்த அப்புசாமி,சீதாப்பாட்டி!!


பாக்கியம் ராமசாமிக்கு தெரியாம சீதா பாட்டியும் அப்புசாமியும் எந்திரன் படம் பார்க்க கள்ளமா கள்ளமா கெளம்பி போய் பாத்திட்டு வந்தாங்க...என்ன தான் நடந்திச்சு எண்டு நா உங்களுக்கு சொல்றேன் வாங்க..
ஆனா ஒரு கண்டிஷன்..
பாக்கியம் ராமசாமிக்கு யாராவது போட்டு குடுத்தீங்க...அப்புறம் உங்களுக்கு கரண்ட்'டு கட் தான்!!

கெலம்புடி சீதே!
டைம் ஆச்சு..கத்திக்கொண்டே
இந்த வயசிலையும்
சுட சுட
படம் பாக்கணும்..
இன்னும் கட்டிளம் காளை
போல வேல வாங்குறாள்...
மனசுக்குள்ள அப்புசாமி!!
reserved seat 'ல
அமர்ந்துகொண்டு..
எழுவது வருஷத்தில
இப்பிடி ஒரு
சயின்ஸ் பிக்சன்
இது தான் பெர்ஸ்ட் டயிம்மாம்
எனக்கு...
என்றால் சீதா பாட்டி..
நீவு ஒரு ஜீனியஸ்
சீதே..
ஜொள்ளு வழிய
அப்பு..!!

எல்லா ரோபோவும்
ஒரே மாதிரி இருக்கே..
எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறியோ சீதே..
குழப்பத்தில்,
"சீதேம்மா,நெசமாவே
நீவு ஒரு ஜீனியஸ் டி"
பிதற்றினார்!!
உனக்கு எல்லாமே புரியுறது..
சென்னை மூளை
சூப்பர்'ஆ வேல செய்யுது
உனக்கு...
கறுவியபடி அப்பு!

ஆட்டோ ஆட்டோக்காரா
ஆட்டோமேடிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் ஆடோக்ராப்புக்கு.."
சீத்தாப்பாட்டி படம் முடிந்து
கெளம்ப..
அடங்கமாட்டாள்
சீதா
நாளை தொட்டு
ஊட்டுக்கு பேப்பர் கட்..
உறுதியோடு அப்புசாமி...
இரும்பிலே ஓர் இருதயம்
என்றவாறே!!
வீட்டே போய் இரவு..
மனுஷன் படிச்சதிலேயே
உருப்படியான ரெண்டு விஷயம்
ஒன்று நீ சீதே..
மற்றது நான்...
பஞ்சு விட்டபடி
தூங்கியே விட்டார் "களைப்பில்"!!
பாத்து ரசிச்சா மட்டும் பத்தாது..உங்க விமர்சனம்,மற்றும் ஓட்டுகளை விட்டு செல்லுங்கள்!!

Post Comment

Wednesday, October 6, 2010

ஒவ்வொரு பதிவரும் கவிஞனாவான்!!

படத்துக்கும் பின் வருவதுக்கும் சம்பந்தமே இல்லைங்க..

விதையே தெரியுமா..
உன் பிறப்பிடம் எதுவோ?
நீ பிறந்த காலம் தான் எதுவோ?
அன்று..
கவிஞர்கள் பிறந்தனர்..
அன்று..அவர்கள்
படைத்தது
காப்பியமாச்சு ..
காவியமாச்சு!!
கம்பரால்
கம்பராமாயணமாயிற்று!!
பாமரர்
விளக்கமற்று
நின்றார்..
படித்தோர் கூட
விளக்கலுரை பார்த்து
விளங்கலுற்றார்!!

இன்று..
கவிஞர்கள் உருவாகின்றனர்
உருவாக்கப்படுகின்றனர்..
ஒவ்வொரு பதிவரும்
கவிஞனாவான் என்று
சிந்த்தித்திருப்பாயா
கவிதையே..??
உன்னைச் சுருக்கி
ஹை-கூ என்றார்..
சற்றே பெரிதானால்
பாடல் என்றார்..
என்டர் தட்டி
என்டர் கவிதை என்றார்கள்!!
கவிதையே இது உந்தன்
கலிகாலமா...?
இல்லை
கவிதையின் விடிகாலமா?
காலத்தின் கரங்களில்
பாரத்தை தருகிறேன்!!

ஒரு சின்ன காமெடி தாங்க..சத்தியமா எந்த உள்குத்தும் இல்லைங்கோ!!
பிடிச்சா உங்க ஒட்டு,பின்னூட்டங்களை மறக்காமல் விட்டு செல்லுங்கள்!!

Post Comment

Sunday, October 3, 2010

ஓடிப்போலாமா?பாப்பா நீ
ஆனா பெண்ணா?
சொந்தமா இல்லை
குளோனிங் தானா?
பிறக்க நீ
முன்னே அறிந்து..
பிறந்ததும்
புட்டிப்பால் தந்து..
வயதொன்று
கேக்'கும் வெட்டி
அடுத்த நாள்
ப்ரி-ஸ்கூல் சேர்த்து..
A for அனிமேஷன்
ஆங்கிலம் படித்து
தூங்கிட நேரம்
இன்றி
பர்சனல் டியூஷன்
கொடுத்து..
என்ன தாம்
கண்டீர் பெற்றோர்??
பத்திலே ஓடித்தான்
போகும்!!

உடன நீங்களும் ஓடிப்போகாம,ஒட்டு+பின்னூட்டத்தை போட்டிட்டு அப்புறமா வேணும்னா ஓடிக்கோங்க..நான் அப்பா அம்மாகிட்ட போட்டு குடுக்க மாட்டன்!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...