Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Tuesday, April 30, 2013

சமந்தா-காஜல்-சிவகார்த்திகேயன்..!இது நம்ம தெரிவு..!!



சமந்தா மற்றும் காஜலின் படங்களை 'சாட்டில்' அனுப்பிவிட்டு,'உங்க சாய்ஸ் இதில எது?'என்று யாராவது கேட்கும்போதெல்லாம் எனது தெரிவு சமந்தாவாகத் தான் இருக்கிறது.இருபத்தெட்டு வயதாகும் காஜலை,மாற்றான்-துப்பாக்கி படங்களுடன் சலித்துவிட்டது.என்ன தான் 'மேக்கப்' செய்துகொண்டாலும்,அந்த வயதுக்குரிய ஒரு முதிர்ச்சி காஜலில் தெரியத்தொடங்கிவிட்டது.பல பெண்களுக்கு பிந்திய இருபதுகளில்,உடல் பருமன் அதிகரித்து இடுப்பின் கீழே சகிக்கமுடியாத அளவுக்கு சதை போட்டு,மன அளவில் இளமையாக இருந்தாலும்,உடல் 'நீ ஒரு அம்மா தான்'என்று கட்டம்போட்டு காட்டிவிடும்.ஆனால் சமந்தாவின் உடல்வாகு,அவர் பிந்திய இருபதுகளிலும் இப்படியே தான் இருப்பார் என்கின்ற ஒரு உள்மனது மதிப்பீட்டின் காரணமாய்,இப்போது சில மாதங்களாய்  கேட்பவர்களுக்கெல்லாம் சமந்தா என்கின்றேன்.இதுவே சித்தார்த்துடன் அடுத்தமாதம் கல்யாணம் என்று செய்திவந்தால்,அடுத்த நிமிடமே சமந்தாவுக்கு துரோகி பட்டம் கட்டிவிட்டு எனது தெரிவு உடனடியாய் இன்னொருவர் பக்கம் மாறத்தான் போகிறது.

                                                 ****
சாதாரணதர பரீட்சை முடித்து உயர்தரம் ஆரம்பிக்கும்.உயர்தரத்தில் முதலாவது தவணை செம விறுவிறுப்பாய் இருக்கும்.எதிர்காலத்தில் டாக்டர் இஞ்சினியர் ஆகவேண்டும் என்ற தீராத தாகம் இருப்பவர்கள் தாமாகவே கணித- விஞ்ஞான துறையை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.இது தான் நமக்கு சரி என்று மறுபக்கம் கலை-வர்த்தக பிரிவை அரைவாசிப்பேர் தேர்ந்தெடுப்பார்கள்.ஆனால் இந்த கணித விஞ்ஞான துறையில் எமது பிள்ளை டாக்டராக, இஞ்சினியராக வரவேண்டும் என்ற ஆசையுடன்,தமது விருப்புக்காக அன்றி,பெத்தவங்க விருப்பத்துக்காக, கட்டாயத்துக்காக சேர்ந்த கூட்டம் தான் அதிகமாக இருக்கும்.தனக்கு பிடிக்காததை இன்னொருத்தன் தெரிவு செய்து புகுத்தினால் அதை மூளையும் மனதும் எந்தளவுக்கு அனுமதிக்கும் என்பது சிறிது நாட்களிலேயே அவர்களுக்கு தெரிய வந்துவிடும்.முதலாம் தவணை பரீட்சையிலேயே மூன்று பாடமும் இருபது,முப்பது என்று மார்க் வந்திருக்கும். இதற்க்கு மேலும் இருந்தால் தப்பிப்பிழைப்பது கடினம் என்று தெரிந்து இரண்டாம் தவணை தொடக்கத்தில் வர்த்தக பிரிவு வகுப்பில் முன்வரிசைகளை அலங்கரித்த வரலாறு பலருக்கு உண்டு.பாடசாலைக்கு எந்தளவு தாமதமாக வந்தாலும், வர்த்தகப்பிரிவில் முதல் வரிசை எப்படியும் 'ப்ரீயா' தான் இருக்கும்.சாதாரண தர பரீட்சையில் 'A' சித்தி வேண்டாம் என்று நானாகவே ஒதுங்கிகொண்ட பாடங்கள் இரண்டு.ஒன்று கணிதம்,மற்றையது விஞ்ஞானம்.எவ்வளவு தான் முயன்றும் இந்த இரு பாடைகளும் சாரி,பாடங்களும் எனக்கு முரண்டுதான் பிடித்தது. அதனால் இவை இரண்டையும் தவிர்த்துவிட்டு மற்றைய எட்டு பாடங்களிலும் கவனத்தை செலுத்தினேன்.நான் எதிர்பார்த்த பரீட்சை முடிவு 8 'A' & 2 'B'.கணிதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் 'B' தான் என்று விடைத்தாள் திருத்தப்படு முன்பதாகவே முடிவுசெய்திருந்தேன் நான். முடிவுகள் வெளிவந்தன. 7 'A' & 3 'B' என்று.எதிர்பார்த்த இரு பாடங்களுக்கும் 'B' கிடைத்ததில் பெரிய சந்தோசம். எதிர்பாராமல் ஒரு பாடத்துக்கு 'B' கிடைத்தது.அது எப்படி என்று இன்னமும் தான் எனக்கு புரியவில்லை.ஆங்கிலமா? ஆங்கில இலக்கியமா?புவியியல்?ம்ம்ஹும் அந்தப்பாடம்,தமிழ்..!எது எப்படியோ உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவை தெரிவு செய்ய இந்த இரண்டு 'B'க்களும் பேருதவி புரிந்ததனால் இன்னமும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  
                                                           *****   
95 இல் யாழிலிருந்து இடம்பெயர்ந்து வரணிக்கு போய் சிறிது காலம் இருந்துவிட்டு அதன் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றோம்.இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கிளிநொச்சியில் நிம்மதியாக ஐந்தாறு மாதங்கள்..மீண்டும் அங்கிருந்து இடப்பெயர்வு.இம்முறை அக்கராயன்.புலிகளின் பகுதியிலிருந்து இலகுவாய் வெளியே அவர்களின் கட்டுப்பாடற்ற பகுதிக்கு சென்றுவிட முடியாது.'பாஸ்' முறை,ஆள் பிணை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும்.அப்பா வியாபாரம் என்பதனால்,அடிக்கடி இடம்பெயர்ந்துகொண்டிருந்தது  ஏராளமான இழப்புகளை கொடுத்திருந்தது.சாம்பலிலிருந்து எழுந்து பறப்பது என்பது தமிழர்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒன்று.ஒவ்வொரு தமிழ் குடும்பமும் குறைந்தது இரண்டு மூன்று இடப்பெயர்வுகளை சந்தித்திருக்கும்.முதல் இடப்பெயர்வில் 50வீதமான பொருட்கள் எஞ்சும்.இரண்டாவது இடப்பெயர்வில் அது 25வீதமாகும்.மேலும் மேலும் இடம்பெயருகையில் முக்கிய ஆவணங்கள்,நகை,பணம் மட்டும் தான் கையில் எஞ்சியிருக்கும்.அதனால் அக்கராயனிலிருந்து மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கு அப்பா விரும்பியிருக்கவில்லை. ஆனால் ஒற்றைக்காலில் நின்று அன்று அம்மா எடுத்த முடிவு தான் இன்று நாம் இந்த நிலையிலிருக்க காரணம்.அப்போது அக்கராயனிலிருந்து கிளம்பி வவுனியா வந்து ஏதோ ஒரு முகாமில் சில வாரங்கள் தங்கியிருந்து  திருகோணமலை சென்று அங்கிருந்து  கப்பல் மூலம் மீண்டும் யாழ் மீண்டோம்.நாங்கள் வெளியேறி சிறிது காலத்திலேயே புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாக பேசிக்கொண்டனர்.அப்போது வெளியேறி இருந்திருக்காவிட்டால் இச்சமயம் எம் வாழ்க்கை முடிந்திருக்குமோ இல்லை முள்ளுக்கம்பிகுள்ளோ இருந்திருக்கும். 

                                                             ****            
உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் சுஜாதா விருதுகள்-இந்த ஆண்டிற்கன தேர்வு ஆறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இறுதித் தெரிவுகள் இப்படி அமைந்திருக்கின்றன:

சுஜாதா சிறுகதை விருது: அஜயன்பாலா
நூல்: அஜயன் பாலா சிறுகதைகள்
வெளியீடு: நாதன் பதிப்பகம்
தேர்வுக்குழு: சுப்ரபாரதிமணியன், அழகிய பெரியவன், சுரேஷ்குமார இந்திரஜித்

சுஜாதா நாவல் விருது : தமிழ் மகன்
நூல்: வனசாட்சி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
தேர்வுக்குழு: எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேச பாண்டியன், இமையம்

சுஜாதா கவிதை விருது: மனோ.மோகன்
நூல் பைத்தியக்காரியின்பட்டாம்பூச்சி
வெளியீடு: புதுஎழுத்து
தேர்வுக்குழு: கலாப்ரியா,சமயவேல், இந்திரன்

சுஜாதா உடைநடைவிருது (இரு நூல்களுக்கு வழங்கப்படுகிறது)
பா.பிரபாகரன்
நூல் குமரிக்கண்டமாசுமேரியமா?,
வெளியீடு கிழக்குபதிப்பகம்

ராஜு முருகன்
நூல் வட்டியும்முதலும்
வெளியீடு ஆனந்தவிகடன்

தேர்வுக்குழு : இரா.நடராசன், ’தீக்கதிர்’குமரேசன், பாரதி மணி

சுஜாதா சிற்றிதழ்விருது (இரு இதழ்களுக்கு வழங்கப்படுகிறது)


இதழ்கள்: ஞானம், 
தி.ஞானசேகரன் , ஆசிரியர்-ஞானம்

கருக்கல் 
 எம்.எஸ்.பாண்டியன், ஆசிரியர்-கருக்கல்
தேர்வுக்குழு:தமிழவன், கழனியூரன், அ.முத்துக்கிருஷ்ணன்

சுஜாதா இணையவிருது: வா.மணிகண்டன்
வலைப்பதிவு: http://www.nisaptham.com/
தேர்வுக்குழு:இரா.முருகன், இயக்குநர் ராம், மனோஜ்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.'சுஜாதா இணைய விருது'க்கான எனது பரிந்துரையாக 'படலை'யில் எழுதிவரும் ஈழத்தமிழ் எழுத்தாளர் அண்ணன் 'ஜேகே'யாக தான் இருந்தது. விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பியுங்கள் என்றபோதே அண்ணனுக்கு கூறினேன் உங்கள் தரப்பிலிருந்து அனுப்புங்கள்.உங்களை விட்டால் வேறு யாருக்கு கிடைக்க இருக்கிறது என்று நம்பிக்கையூட்டி.ஏனோ கிடைக்கவில்லை. நம்மவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கொடுக்க இப்படியான விருதுகள், அடையாளங்கள் இல்லை என்றே கூறலாம்.இலங்கை வலைப்பதிவர்களுள் ஜேகே அவர்கள் சத்தமில்லாமல் பெரிய வாசகர் வட்டத்தை தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த 'தெரிவுகள்' மாறிவிடும் என்பதில் நம்பிக்கை இல்லை.அண்ணன் எழுதுவது பெரும்பாலும் இலங்கை சம்பந்தமாகவே இருப்பதால் (இலங்கையில் பிறந்தால் பின்னர் அமெரிக்கா சம்பந்தமாகவா இருக்கும்!) இந்திய நண்பர்களை ஈர்த்திருக்க வாய்ப்பில்லையோ என்னமோ! எமது வழிகள் எமக்கு தானே புரியும்.அவரின் 'கந்தசாமியும் கலக்சியும்' என்கின்ற விஞ்ஞான தொடர் நாவல் அவரின் இணையப்பக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டது. சுஜாதாவின் பின்னர் யாருமே விஞ்ஞான சம்பந்தமாக தொடுகிறார்கள் இல்லை என்கின்ற ஆதங்கத்தில் எழுதினேன் என்பார்.ஆனால் சுவாரசியத்துக்கு குறைவில்லாத நாவல்.ஒவ்வொரு பகுதியும் எப்போது வெளிவரும் என்று காத்திருக்க வைத்த தொடர் அது.இப்படியான எழுத்தாளர்களை விருதுகள் கௌரவிக்காவிடில்,விருதுகளுக்கு தான் என்ன மதிப்பு? 

                                                               ****
தினம் ஒரு நிலைத்தகவல் பேஸ்புக்கில் பகிர்பவரானால்,அவரால் வருடம் 365 நிலைத்தகவல்கள் பகிரப்பட்டிருக்கும். ஆனால் வருட முடிவில் குறித்த ஒரு நிலைத்தகவலை மறுபடியும் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டால்,அது பகிர்ந்த தினம் ஞாபகம் இல்லையேல் ஒவ்வொரு நிலைத்தகவலாக தேடவேண்டும்.ஏதும் குறிச்சொல்லை பயன்படுத்தி பேஸ்புக்கிலோ அல்லது தேடியந்திரத்தில் சென்றோ அதனை தேடமுடியாது.இப்படியாக பேஸ்புக்கில் எழுதப்படும் அனைத்துமே ஒன்றுக்கும் பயன்படாத குப்பை போன்றதாக தான் முடிகிறது என்றார் அண்மையில் 'தமிழ் விக்கிப்பீடியா அறிமுக கருத்தரங்கை' நடாத்த இந்தியாவிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர். உண்மை தான்.ப்ளாக் அல்லது வேறு இணையதளங்களில் எழுதுவதானால் இந்த பிரச்சனை இல்லை.ஆனால் இப்போதெல்லாம் இலக்கியவாதிகள் தொடக்கம் ப்ளாக் வைத்திருப்பவர் வரை, அனைவரும் பேஸ்புக்கில் தான் உளறுவதை காணமுடிகிறது.காரணம் விவாதம்,லைக்குகள்,ஷேர்கள் என்று அதில் கிடைக்கும் 'ரீச்'.மற்றையது சோம்பேறித்தனம். முன்னர் போல் அதிகமானோர் வருவதில்லை என்று ப்ளாக் எழுதுபவர்களும் அதனை விட்டு விலகிக்கொண்டிருக்கின்றனர் இன்ட்லி போன்ற திரட்டிகள் கொடுத்த பிரச்சனையால்.இலங்கையில், இருவருடங்களுக்கு முன்பதாக ஒரு 25-50 பேர் தொடர்ந்து எழுதும் ப்ளாக்கராக இருந்தனர்.அது இப்போது 0-5 ஆக சுருங்கிவிட்டது.முன்னர் மொக்கை பதிவுக்கு கூட 4000-5000 வரை கிடைக்கும் 'வ்யூ'க்கள் இப்போது ஆயிரத்தை தாண்டுவதே பெரும்பாடாய் இருப்பதாக ப்ளாக்கில் இப்போதும் எழுதும் நண்பர்கள் கூறினார்கள்.இதனைவிட ப்ளாக்கில் எழுதுவதை நிரந்தரமாக கைவிடலாம் என்கின்ற தெரிவை மேற்கொள்வதில் பல பதிவர்கள் முனைப்பாய் இருக்கிறார்கள்.வாசிப்பவர்களுக்கு ப்ளாக் மீதான மோகம் குறைவடைந்து செல்கின்றது என்பது உண்மை போல்தான் தெரிகிறது.ஒவ்வொரு பதிவருக்கும்,அவர்கள் தமது எழுத்தின் வசீகரத்தால் கவர்ந்திழுத்த வாசகர்கள் தான் மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.அவர்களும் வராது போயின் கடையை சாத்திவிட்டு வேறுவேலை பார்ப்பதே உசிதம் போல் தோன்றுகிறது.இல்லாவிட்டால்,யார் வாசித்தாலென்ன வாசிக்காவிட்டால் என்ன எனது திருப்திக்கு, பிறிதொரு காலத்தில் நான் மீட்டிப்பார்க்க இனிமையாய் இருக்கும் என்பதனால் எழுதுகிறேன் என்று கூறிவிட்டு எழுதவேண்டியது தான்.சுயதிருப்தி.


தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அண்மையில் வெள்ளவத்தை ஹம்ப்டன் வீதியிலிருக்கும் தேசிய கலை இலக்கியப்பேரவையில் 'தமிழ் விக்கிப்பீடியா அறிமுக பட்டறை'ஒன்று நடைபெற்றது.
  • தமிழ் விக்கிப்பீடியா பொது அறிமுகம் -
  • விக்கியாக்கம் முறைகளும் கொள்கைகளும்
  • விக்கிப்பீடியா பயனர் பங்களிப்பின் அவசியம்
  • விக்கிப்பீடியா தொகுத்தல்
  • வார்ப்புரு, ஊடகக் கோப்புகள் பயன்பாடு
  • சிறப்புத் தொகுப்புகள் எ.கா: கணிதச் சமன்பாடுகள், வேதியியல் குறியீடுகள் முதலியன
பற்றிய அறிமுகம் தரப்பட்டது.இலங்கையிலிருந்து எழுதும் சில தமிழ் விக்கிப்பீடியர்களும் வந்திருந்தனர்.உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் வெறும் ஐம்பதாயிரம் ஆக்கங்களே விக்கிப்பீடியாவில் இருக்கின்றது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்று.ஒவ்வொருவரும் தத்தமக்கு தெரிந்த,விரும்பிய துறைகளை சார்ந்தோ,விரும்பிய விடயத்தை பற்றியோ விக்கிப்பீடியாவில் எழுதி பங்களிப்பு செய்யலாம்.இதுவொன்றும் பெரிய கடினமான வேலை கிடையாது.ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்துவிட்டால்,அதன் பிற்பாடு அனைத்தும் பழகிவிடும்.தினசரி இரண்டு லட்சம் பார்வையாளர்களை தமிழ் விக்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.வெறுமனே பேஸ்புக்கிலோ ப்ளாக்கிலோ எழுதுவதை விட விக்கிப்பீடியாவில் எழுதினால் காலம்காலமாக அந்த ஆக்கம் எத்தனையோ பேருக்கு பயனுள்ளதாக அமையும்.ஏன் எமது பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் கூட சிலசமயம் எமது ஆக்கங்களை உசாத்துணையாக கொள்ளகூடும்! 

ஆளுக்கொரு கட்டுரை எழுதினாலே தமிழ் விக்கிப்பீடியா அடுத்த சில மாதங்களிலேயே லட்சம் ஆக்கங்களை தொட்டுவிடும்!


                                           ******
'சேட்டை' போய் பார்த்துவிட்டு 'ஜொள்ளு +மொக்கை+கக்கா=சேட்டை'என்று திட்டி  எழுதியிருந்தேன்.ஆனால் கடந்த சனிக்கிழமை  'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வை பார்த்த பின்பு தான் 'சேட்டை'எவ்வளவு மேல் என்று புரிந்தது.விமல்,சிவகார்த்திகேயன் என்று இரண்டு காமெடிக்கு புகழ்போனவர்களை  வைத்து 'கலகலப்பு' ரேஞ்சுக்கு ஒரு காமெடி படம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பிலிருந்தேன்.என்னை பொறுத்தவரை படம் படு மொக்கை.எங்காவது சில இடங்களில் கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.ஒரு சிலர் விமர்சனங்களில்,படத்தை ஆகா ஓகோ அளவுக்கு புகழ்ந்து எழுதியிருந்ததை கவனித்திருந்தாலும்,ஏனோ எனக்கு சிரிப்பே வரவில்லை. சிவகார்த்திகேயன் ஹீரோவாக சரிப்பட்டு வரமாட்டார் என்று தான் தோன்றுகிறது.அனுருத் இசையில் ஏலவே ஹிட் ஆகியிருக்கும் பாடல்களை கொண்ட இவரின் அடுத்த படமான  'எதிர்நீச்சல்' எப்படி அமையப்போகிறது என்று பார்க்கலாம்.'அது இது எது'வில் ரசித்த சிவகார்த்திகேயன் ஹீரோவாய் அவதாரம் எடுத்து சலிக்க வைக்கிறார்.இன்னமும் சினிமாவுடன் ஒட்டிக்கொள்ளாத 'டிவி புகழ்'சிவகார்த்திகேயனாக தான் எனக்கு தெரிகிறார்.விஜய் டிவியில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கையில் ஹீரோவாய் நடிப்போம் என்று கிளம்பிய இவரின் தெரிவு தவறானதோ என்று தான் சிந்திக்க வைக்கிறார்.(சிவா ரசிகர்கள் மன்னிச்சூ..நான் கூட அவரின் தீவிர ரசிகன் தான் தொலைக்காட்சியில்;திரைப்படங்களில் அல்ல.)இதனை விட சன்டிவியில் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சி செம கலகலப்பாக இருக்கும்.மதுரை முத்து மற்றும் தேவதர்ஷினி இணைந்து கலக்கும் இந்த கலாட்டாவுக்காகவே ஒவ்வொரு ஞாயிறு காலையும் அடித்துப்பிடித்து எழும்பிவிடுவேன் ஒன்பது மணிக்கு முன்பதாக.விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு'வில் ஆரம்பித்து சன்டிவியின் 'அசத்தப்போவது யாரு'நிகழ்ச்சியின் மூலமாய் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்த மதுரை முத்துவுக்கு இந்த சண்டே கலாட்டா இன்னமும் அதிக ரசிகர்களை பெற்று தரும் என்று நம்பலாம்.



பேஸ்புக்கில் பல்லாயிரம் 'ஷேர்கள்'ஐ தாண்டி வெற்றிகரமாக சுழன்றுகொண்டிருக்கிறது இந்த எழுமலையான் படம்.இதுவெல்லாம் சித்து விளையாட்டு என்று எண்ணித்தான் நான் முதலில் ஷேர் செய்யாமல் தவிர்த்திருந்தேன்.ஆனால் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் தான் என்னுடைய தெரிவு முட்டாள்தனமானது என்பதை  உணர்த்தின.வழமையாக எழுமணிக்கெல்லாம்(!!) காலையில் எழுந்திருக்கும் நான் அதன் பின்னர் எழு ஐந்துக்கு எழும்பத்தொடங்கினேன்.கண்ணாடியை பார்த்து தான் அனைவரும் பல்லு விளக்குவார்கள்,முகத்துக்கு பவுடர் போடுவதோ,தலை சீவுவதோ கண்ணாடியை பார்த்து தான் நடக்கும்.நானும் அப்படித்தான் இருந்தேன்.ஆனால் அண்மைக்காலமாய் எல்லாவற்றையும் விட்டத்தை அண்ணாந்து பார்த்தவண்ணம் செய்துகொண்டிருந்தேன். காலையில் சோறு சாப்பிட்டேன்..மதியமானால் டீ மட்டும் குடித்தேன்.இரவானால் குளித்து வெளிக்கிட்டு வெளியே சுற்றக்கிளம்பி விடுகிறேன்.காக்கா கூட பேசுறேன்..பல்லி கூட பம்பரம் விடுறேன்..எறும்புக்கு பாயா வைக்கிறேன்.என்னடா இப்பிடியாகிட்டோம்னு ஜோசித்து பார்த்த போது தான் அடடா இதெல்லாம் அந்த எழுமலையான் சித்து விளையாட்டு தான் என்று புரிந்துகொண்டேன்.இனிமேலும் இப்படி அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக இப்போது நானும் அதனை பகிர்ந்துவிட்டேன்.இனி இரவில் 'வாக்கிங்' போகமாட்டேன்..அப்படி போனாலும் எழுமலையான் துணை இருப்பான் என்கின்ற துணிவு எனக்கு நிறையவே இருக்கிறது!

டிஸ்கி : எனது வலைப்பதிவின் அகலத்தை அதிகரித்து சில லொள்ளுத்தனங்களை செய்திருக்கிறேன்.யாரும் டிசைனிங் தெரிந்தவர்கள் இப்பக்கத்துக்கு 'ஹெடர்' ஒன்று அழகுற வடிவமைத்து தந்தால் மிகுந்த உதவியாய் இருக்கும்.நமக்கு தான் அந்த விடயங்கள் சரிப்பட்டு வருவதில்லையே! 

Post Comment

Monday, October 29, 2012

சின்மயிக்கு ஒரு கடிதம்...!

உள்ளே போக முன்பதாக: இது ஒரு மிக மிக சீரியஸ் பதிவு.இக்கட்டில் இருக்கும் என் அருமை பாடகி சின்மயி அக்காக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் பதிவு.வாசித்து எவராவது சிரித்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பு கிடையாது.


     


அன்புள்ள சின்மயிக்கு,
(குறிப்பு:"அன்புள்ள" என்பது ஆபாசம் கிடையாது,என் ஸ்கூல் டீச்சருக்கு கூட அன்புள்ள'ன்னு தான் எழுதுவேன் மேடம்)

நான் எட்டாவது படிக்கிறப்போ,என்கூட படிக்கிற பையன் என் மேல தக்காளி வீசினான்..என்னோட வெள்ளை சேர்ட் அப்பிடியே சிவப்பாயிரிச்சு..வந்த கோபத்தில எழும்பி எட்டி ஒரு உதைவிட்டேன்..அதுவரைக்கும் கரும்பலகையில கிறுக்கிக்கொண்டிருந்த வாத்தியார் என்னோட கால் மேல போகும்போது மட்டும் கரெக்டா திரும்பி பாத்து என்னைய அடி பின்னிட்டார்.தக்காளி அடிச்சவன் தப்பிட்டான் தக்காளி...இதனால தான் இப்ப கூட நீங்க ஜெயிலுக்கு போகக்கூடாதின்னு நாஸ்திகனான நான் வேண்டாத சாமி கிடையாது..கால் முடி கூட மழிக்க ரெடின்னு உச்சி பிள்ளையாருக்கு வேண்டியிருக்கேன்..(தலை முடி மழிச்சா பர்சனாலிட்டி டேமேஜ் ஆகிடும் மேடம்...அப்புறம் "மயிர்" பத்தி எல்லாம் பேசினான்னு கேஸ் பைல் பண்ணிடக்கூடாது பாருங்க..)

இதிகாச காலத்தில கூட(உங்க ஆக்களுக்கு தான் இதுகன்னா ரொம்ப பிடிக்குமாமே..!) ராவணன் சீதைய கடத்தினா கடத்திட்டு போகட்டும்னு சும்மா இருக்காம ராவணன் மீது போர் தொடுத்த ராமன் மீது எனக்கு எப்போதுமே ஒரு கேவலமான பார்வை தான் இருக்கு..அவன் தான் சின்ன பையன் தெரியாத்தனமா சீதைய தூக்கிட்டு போனா இவரு பெரிய புடுங்கி மாதிரி கூட இருந்த வானரங்களை கூட்டிட்டு போயி போர் தொடுக்கிராராம்...சரி சீதைய கடத்தினதுக்கு தான் போர்னு வால்மீகி சொல்லியிருக்கலாம்..அவன் அடுத்தவன்,ராவணன் செய்த பழைய தப்புக்கள் எல்லாம்,அதாங்க அவனோட ஹிஸ்த்ரி பூரா தன்னோட சப்போர்ட்டுக்கு இழுத்து ராவணன் தப்புன்னு ப்ரூவ் பண்ணி இருக்கார்..

நம்ம ஊர்ல வழமையா சொறி நாய் எங்கயாச்சும் அசிங்கம் பண்ணிக்கிட்டே திரியும்.ஊரே திரண்டு அடிச்சு கலைக்கும்..ஆனா அதே சொறி நாய் இன்னொரு சொறி நாயை கண்டா அதுக ஒன்னு சேர்ந்து அடிக்க வர்றவன விரட்டி கடிக்க பாக்கும்..ஷோபா சக்தி,சாரு நிவேதிதா போன்ற இழவுவாதிக எல்லாம் உங்க பிரச்சனையில ராஜனுக்கு எதிரா பேசுறதுத பாத்தா இந்த சொறிநாய் ஸ்டோரி அடிக்கடி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது மேடம்..

இவன் ராஜன் பயலுக்கு சுத்தி போடணும் அம்மணி..நிச்சயமா கிறுக்கு தான் பிடிச்சு போச்சு..எந்த காத்து கருப்பு அடிச்சுதோ...ஆயிரங்களில் ட்விட்டர் போலோவேர்ஸ்,ரசிகர்கள் இருக்க உங்கள போயி பெருசா தூக்கி பிடிச்சு ஆடி இருக்கான் பயபுள்ள..அவனுக்கு இது தேவை தான்...சும்மா இருந்த பய ஜெயிலுக்கு போயி கழி தின்னா என்ன கக்கூஸ் கழுவினா நமக்கென்னங்க...ஆனா ஒன்னு மட்டும் புரியலைங்க..இந்த தருதல பயலுக்கு பின்னாடி எப்பிடிங்க இவ்ளோ பெரிய பட்டாளம் நிக்குது சப்போர்ட்டுக்கு?சொல்லமுடியாது பய நல்ல பணக்காரவீட்டு புள்ளையா இருக்கணும்..ஆளுக்கு அம்போது ரூவாயும் கோழிப்புரியாணியும் டெய்லி குடுக்கிறான் போல..வெளக்கெண்ண பய..நம்மள மாதிரி ஊர ஏமாத்தி கூட்டம் சேர்க்க தெரியுமா என்ன அவனுக்கு!

நாமெல்லாம் சினிமா பிரபல புள்ளிங்க,புள்ளி ராஜாக்கள் தானே...நாம கேனைத்தனமாவும் பேசுவோம்..பைத்தியக்காரத்தனமா கூட நடந்துப்போம்..ஆகா ஓஹோன்னு புகழுவீங்களா..தூக்கிவைச்சு கொண்டாடுவீங்களா அதவிட்டிட்டு குத்தம் கண்டுபிடிக்க இவன் யாரு மேடம் நமக்கு?நம்மள மாதிரி பெரிய பின்"அணி" பாடகியா?இல்ல பின் அணியில ஒரு அல்லக்கையா?நீங்க தான் ஒசாமா பின்லாடன சுட்டு கொன்னீங்கன்னு சொன்னா,அத கூட நம்பிறதுக்கு லட்ச்சக்கணக்கான பகுத்தறிவாதிக நம்ம பின்னாடி இருக்கிறாங்க மேடம்..யூ டோன்ட் வொர்ரி!!

ஆனாலும் இந்த உலக மகா இலக்கியவாதிக கூட மட்டும் கொஞ்சம் கவனமா இருந்திடுங்க மேடம்..இப்போ ராஜன் கேவலம்னு எழுதுவாணுக..அப்புறம் அவனுகளோட இலக்கிய படைப்புகள வெளியிடவோ,புகழ்ந்து பேசவோ மறந்திட்டீங்கன்னு வையுங்களேன்..ராஜனாச்சும் பரவாயில்ல..இவனுக உங்க அம்மா,அம்மம்மா,பூட்டம்மா,பூட்டியம்மா,ஊட்டு வேலைக்காரி தொடக்கம் வீட்டில் இருக்கிற கேரட்,கத்தரிக்காய் பயன்பாடு கூட சொல்லி பேசுவானுக... ஆனா நீங்க நெனைச்சாலும் அவனுக மேல கேஸ் போடமுடியாது பாருங்க..நீங்க எப்பிடி பிரபலமோ அப்பிடி அவனுகளும் பிரபலம் மேடம்...உங்களுக்கு இருக்கிறமாதிரியே அவனுகளுக்கும் என்ன சொன்னாலும் தலையாட்ட ஆயிரக்கணக்கில தலையாட்டி பொம்மைக இருக்குதுக!

நான் உங்க தீவிர விசிறி மேடம்..உங்க பாட்டுக்கு மட்டுமில்ல உங்க உங்க..... வேணாம்..பாருங்க இதகூட சொல்ல இணையவெளியில பயப்பிடுற அளவுக்கு பண்ணிட்டீங்க மேடம்..பின்னீட்டீங்க!இந்த சமந்தா காஜல் கூட உங்கள மாதிரிதானா மேடம்??இனி அவங்களையும் ஜொள்ள முடியாதா?அவிங்களும் உங்கள மாதிரி சின்ன புள்ள விளையாட்டு விளையாடுவாங்களா மேடம்??

இதொண்ணும் மேட்டரே கிடையாது சின்னுமயி,முந்தனாத்து கூட அம்மா பக்கம் ரெண்டு பேரு போயிட்டாங்கன்னு கடுப்பில அவசரமா போன நம்ம கேப்டன விமானநிலயத்தில மறிச்சு தொந்தரவு பண்ணி இம்சை பண்ணி பேட்டி எடுக்கிறன் பேர்வழின்னு பேய்த்தனமா நடந்துகிட்டாங்க ரிப்போர்ட்டர்ஸ்..ஆனா பாருங்க,விஜயகாந்த் அவங்கள நாயின்னு பேசினது தான் பெருசா பேசப்படுது..அவங்க பண்ணினது தப்பில்லையாம்..கேப்டன் பண்ணினது மட்டும் தப்பாம்..அதாவது மேடம்,நாம மத்தவங்கள எவ்வளவு வேணுமோ அவ்வளவுக்கு சூடாக்கலாம்...ஆனா அவிங்க சூடாகும்போது படார்னு பிடிச்சு போலீஸ்கிட்ட குடுத்திடனும்..இதனால நீங்க உள்ள போயிடுவீங்களோன்னு பயப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்ல அம்மணி!

முதலில வைரமுத்து மேல ஐஸ் மேடத்த கேஸ் போட சொல்லுங்க "சினம்"யி"..அவரு தான் "பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்"ன்னு ஆபாசமா எழுதினவரு...ஆமா மேடம் அப்பிடி ஒரு பாட்டு உங்களுக்கு பாட சான்ஸ் வந்தா அந்த கணமே கவிஞர் மேல கேஸ் பைல் பண்ணிட்டுதான் மிச்ச வேலை பாப்பீங்களா??தொழிலு போயிருமே..செலிபிரெட்டி இமேஜ் டேமேஜ் ஆயிராது?அதனால அவிங்க மேல எல்லாம் உங்க ஆபாச கேஸ் பாயாதுன்னு தெரியும் மேடம்..இதுகூட தெரியாத பகுத்தறிவாதியா நானு! அடடே...கண்ணதாசன் வேற மேல போயிட்டாரே...ஆனா இந்த வாலிபக்கவிஞர் வாலி'ய புடிங்க மேடம் புடிச்சு ஜெயிலில போடுங்க..!

என்னைய உங்க "பர்சனல்"அட்வைசரா வைச்சுக்கிட்டீங்கன்னா..இத மாதிரி பல பல பலான அட்வைஸ் தரலாம் மேடம்..நீங்களும் புடிச்சு புடிச்சு ஜெயிலில போடலாம்..இலக்கியவாதிக ஆளுக்காள் அடிச்சுக்குவாங்க...சும்மா இருந்த பதிவுலகம் பரபரப்பாகும்..ட்விட்டர் சோர்ந்து போயி கிடக்கும்..பேஸ்புக் பிச்சிக்கும் மேடம்...உங்க சேவை நாட்டுக்கு தேவை...!!
நானெல்லாம் பெண்ணியத்துக்கு எதிரானவர்கள்னு அடிக்கடி திட்டுற என் நண்பி இன்று மாலை அழைப்பெடுத்து கூறினாள்,"ஆனந்தவிகடன் ஜூவி'ல எல்லாம் சின்மயிக்கு சப்போர்ட்டா தான் எழுதி இருக்கு..உங்களுக்கு தான் லூசுடா"..அவளும் கடந்த சில நாட்களாக சின்மயி பிரச்சனை என்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள்;இன்னமும் விளக்கம் கொடுத்தபாடில்லை.இப்படியான பிரபலங்களுக்கு வரிந்துகட்டும் ஊடகங்களும்,ஒண்ணும்தெரியா பொண்ணுங்களும்,அவர்களின் பெண்ணியமும் இருக்கும்வரையில் ஒன்ன அசைச்சுக்கமுடியாது அம்மணி Dont Worry..!

குறிப்பு:என்னைய புடிச்சு ஜெயிலில போட போறீங்கன்னா முதல்லே ஒரு நோட்டீஸ் அனுப்புங்க மேடம்..இன்னும் கொஞ்சம் உங்க புகழ் பாடித்தான் ஜெயிலுக்கு போகணும்கிறது என்னோட கடைசி ஆசை கண்ணு..(அட என்னோட கண்ணை சொன்னேங்க)

இது சம்பந்தமாக என்னோட முதல் பதிவு:சின்மயி விவகாரம் என்னாச்சு..??

இப்படிக்கு 
உங்க ரசிகன்,அல்லக்கை,அடிப்பொடி,

Post Comment

Saturday, August 11, 2012

இலக்கியவாதி மிஸ்டர் "கோபாலு"!!


இலக்கியவாதி ஆகணும்கிற ஆசை கோபாலுக்கு விவரம் அறிஞ்ச வயசிலேருந்து பெட்ரோல் விலை போல ஏறிக்கிட்டே இருந்திச்சு.பிரெஞ்சு,ருசிய இலக்கியவாதிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட எதோ இந்த ஜெமோ,சாரு,எஸ் ரா அளவுக்காச்சும் கோபால்'ங்ற பெயர் பரபரப்பாய் அடிபடனும் இல்லாவிட்டால் இலக்கிய உலகை விட்டே ஒதுங்கி இருக்கணும்னு முடிவு பண்ணினான் கோபாலு.ஆனாலும் ஓவர் நயிட்டில ஒபாமா'வா கூட ஆகலாம் இந்த நாசமா போன இலக்கியவாதி ஆக முடியாதிங்கிற விஷயம் கொஞ்ச நாள் போக போக தான் புரிய ஆரம்பிச்சுது.

                         

சரி இவனுக என்னதான் அப்பிடி எழுதுறானுகன்னு முக்கி முக்கி வாசிச்சா கூட புரியமாட்டேங்குதே;யார்கிட்டயாச்சும் கேட்கலாம்னா கூட கோபாலின் வைராக்கியம் அதற்க்கு இடம்கொடுக்கவில்லை.இலக்கியம்னு எழுதுரவணுக எழுத்து தான் புரியமாட்டேங்குது..வாஸ்தவம் தான்,ஆனால் இலக்கியவாதிகளோட சேர்ந்து சுத்துற பயலுக எழுதுற எழுத்து கூட ஒரு இழவுக்கும் புரியமாட்டேங்குதே என்னடா செய்யலாம்னு ஜோசிச்சு ஜோசிச்சே கோபால்க்கு பல இரவுகள் தூக்கம் பறிபோயிருந்தது!ஏதும் "ஸ்பெசல் ட்ரெய்னிங்" கிளாஸ் போய் இதெல்லாம் கத்துக்கலாம்னா எந்த வார இறுதி பத்திரிகைகளிலும் அதற்க்கான விளம்பரங்கள் ஏதும் வருவதில்லை.

நானும் எத்தனையோ கதைகள் கட்டுரைகள் முதல்கொண்டு பிட்டு வரைக்கும் வாசிச்சிருக்கேனே ஏன் எனக்கு மட்டும் இப்பிடி..சேர்த்து வைச்சிருந்த காசெல்லாம் ஒன்று திரட்டி ஐநூறு ஆயிரம் பக்கம் வரக்கூடியதா பெரிய பெரிய புஸ்தகங்கள் எல்லாம் வாங்கி படிக்க முயற்ச்சித்தான்.கோபாலின் ராசிக்கு அவன் வாங்கியவை அனைத்தும் ரஷிய புஸ்தகங்கள்.அதில் வரும் பெயர்கள் கூட கோபாலின் பற்களுக்குள் சிக்குப்பட்டு உள்ளே செல்லமுடியாமல் அவஸ்தை தந்தன.எவ்வளவு தான் முயன்றும் மூன்று நான்கு பக்கங்களுக்கு மேலே கிரகித்து படிக்க முடியாமல் போகவே அந்த முயற்சியும் மண்ணைக்கவ்வியது.

இலக்கிய புஸ்தகங்களை படிக்காமலே,நாவல்களில் நுழைந்து நெளிவுசுளிவுகளை கண்டறியாமலே,நவீனத்துவங்கள் பற்றி பூரண தெளிவில்லாமலே வெறுமனே ஒரு இலக்கியவாதியின் அடிவருடியாய் ரெண்டு வருஷம் இருந்திருந்தாலே கோபாலு ஒரு "குட்டி இலக்கியவாதி"ஆகியிருக்கலாம்.அல்லது சில புஸ்தக கண்காட்சிகளுக்கு சென்று சில பல புஸ்தகங்களின் மதிப்புரை மற்றும் முன் இரு பக்கங்களை மாத்திரம் மனப்பாடமாக்கிவிட்டு அதை வைத்து சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய வெட்டுக்குத்துகளில் தனது பங்குக்கு கிளறிவிட்டு குளிர் காய்ந்திருக்கலாம்.இப்படியான சூட்சுமங்கள் தெரியாத அப்பாவிகள் இலக்கிய உலகில் தாக்குபிடிப்பது குறைவு என்று கோபாலுக்கு தெரிந்திருக்கவில்லை.

இலக்கியவாதியாய் எழுதி தான் நிரூபிக்க முடியல;வாழ்ந்தாவது நிரூபிப்போம்னு முடிவு செஞ்சான் கோபாலு.பேஸ்புக்கில் வொர்க்(work) என்பதற்கு "இலக்கியவாதி"ன்னு போட்டுகிட்டான்.பெயரை கூட தஸ்தாயெவ்ஸ்கி என்று மாற்றிவிட்டிருந்தான்.இணையத்தில நாலஞ்சு இலக்கியவாதிக எழுதினத காப்பி பண்ணி தன்னோட ஸ்டேடசாய் போட்டு பார்த்தான்.வெறுமனே மாலை நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க செல்வதாய் இருந்தால் கூட வீட்டில் எங்கு போகிறாய் என்று கேட்டால் "இலக்கிய மாநாடு"இல்லாவிட்டால் ஏதும் உள்ளூர்/உலக இலக்கிய சந்திப்பு அப்பிடின்னு தான் சொல்லிவிட்டு கிளம்புவான்.

மாயாவி காமிக்ஸ் கூட வாசித்து வளந்திராத நண்பர்களிடம் ""எக்சைல்" நாவலில் சாரு என்ன சொல்ல வர்றார் தெரியுமாடா?இப்பெல்லாம் "எக்செல்"இல் படம் கூட வரையலாம்னு பின்னவீனத்துவமாய் சொல்ல வர்றார்டா..பெரிய பெரிய புஸ்தகங்கள் வாசிச்சவங்களுக்கு கூட இது புரியலைன்னா பாத்துக்கோவேன்" என்று கூட பேசிப்பார்த்தான்..


கோபாலு இலக்கியவாதியாய் காட்டிக்க எடுத்த முயற்ச்சிகள் எல்லாம் செவிடன் காதில் இளையராஜா மியூசிக் என்ற மாதிரி தான் முடிந்திருந்தது.சின்ன வயசில இருந்து எதையும் நெனைச்சிட்டா சாதிக்காமல் விடமாட்டான் கோபாலு."நான் ஒரு இலக்கியவாதி"ங்கிற விஷயம் அவனோட நாடி நரம்பெல்லாம் ஊறி கிடந்தது.சிறுவர் கதைகள் சிலவற்றை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி பார்த்தான்.அவை கூட வெளிவரவில்லை.சிலசமயம் பத்திரிகை ஆசிரியர் இவனோட "இலக்கியவாதி கோபால்" என்ற பெயரை பார்த்து தான் சிறுவர் கதைகளை வெளியிடவில்லையோ என்னமோ.

கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி பிறந்த பிறகும் அவனோட ஆசைகள் அப்படியே கிடந்தன.கோபாலுக்கு தன் மீது வெறி இல்லை..அவனோட வெறி முழுதும் இலக்கியம் மீது தான் என்ற விஷயம் கோபால் மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்ததும் வீட்டில் தினசரி களோபரம் தான்.வீட்டுக்கு வெளிகதவில் கூட "இலக்கியவாதி கோபு" அப்பிடின்னு போர்டு மாட்டினா எந்த பொண்ணு தான் சும்மா இருப்பாள்!கோபாலு பிள்ளைகள் பாடசாலைக்கு ஏதும் கவிதை கட்டுரை எழுதனும்னா இரவு பகல் பாராது நித்திரை முழித்து செய்து கொடுப்பான்.எப்பவாச்சும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை "இலக்கியவாதி"கோபால் பிள்ளைகள் தட்டி சென்றிருக்கின்றனர்!

வீட்டில ஏதும் காரியம் ஆகணும்னா "மிசிஸ்" கோபால் தானே ஏதும் கடிதமோ அஞ்சலட்டையோ "இலக்கியவாதி கோபால்" என்று தலைப்பிட்டு தன்னோட அட்ரசுக்கு போஸ்ட் பண்ணி விடுவாள்.அதை பார்த்து கோபு மேலும் கீழும் குதிப்பதை பார்க்க சகிக்காவிட்டாலும் கூட,எதோ தன்னோட காரியம் ஆகணுமேன்னு கோபாலோட ஆத்துக்காரி...பாவம் அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.தன்னோட பிள்ளைகளை இலக்கியவாதிகளுக்கு தான் கட்டி கொடுக்கணும்னு கூட நெனைச்சிருந்தான் கோபாலு.அப்புறம் வரும் மாப்பிளை தன்னை விட சிறந்த இலக்கியவாதியாய் இருந்துவிட்டால் தனது மானம் என்னாவதுன்னு அந்த முயற்ச்சியை ஆரம்பத்திலேயே கைவிட்டுவிட்டான்.
------
இப்போதெல்லாம் பேஸ்புக்கில் கோபாலுக்கு நாலஞ்சு ரசிகர்கள்.கோபாலின் இலக்கியத்தை வாசிப்பவர்கள்.தமிழ் நயத்தை ரசிப்பவர்கள்.அவர்கள் தான் கோபாலின் உலகம்.தன்னால தமிழ் இலக்கியத்துக்கு ஏதும் செய்யமுடியலையே என்ற கவலைய விட, இந்த சமூகம் ஒரு நல்ல இலக்கியவாதியை இழந்துவிட்டது என்கின்ற சோகம் தான் கோபாலின் மனதை  இறுதி காலத்தில் வாட்டிக்கொண்டிருந்தது.

                                

தனது நீண்ட கால கனவின் பிரகாரம் ஏற்கனவே வீட்டுக்கு அண்மையிலிருக்கின்ற மயானத்தில் தனது பெயரில் ஒரு நினைவுச்சின்ன கோபுரம் ஒன்றை கடந்த வாரம் தான் கட்டி முடித்திருந்தார். இன்னமும், அதில் "இலக்கியவாதி கோபு" என்கின்ற பெயரும்,கீழே "இவன் ஒரு எழுத்தாளனாய் வாழ்ந்தான்...இறந்தும் அவன் எழுத்து பேசப்படும்"என்கின்ற வாக்கியமும் தான் பொறிக்கப்பட இருக்கின்றது.இன்று அதை பொறிப்பதற்கு கூட ஒருவனை ஏற்பாடு செய்தாகிவிட்டது.இலக்கிய மாநாடு ஒன்றுக்கு தலைமைதாங்க செல்லவேண்டும் என்று கூறி கிளம்பவேண்டியது தான் பாக்கி.அதுவும் முடிந்துவிட்டால் கோபாலுக்கு  தனது வாழ்க்கையில் தான் நினைத்த அத்தனையையும் சாதித்துவிட்ட பெருமையுடன் கண்ணை மூடுவான்...இலக்கியவாதி ஆவதை தவிர!


Post Comment

Wednesday, August 1, 2012

பின்நவீனத்துவம்-விளங்காதோருக்கான ஒரு விளக்கம்!




 

இப்போதுள்ள இணையச் சூழ்நிலையில் எல்லா வாசகர்களையும் பயமுறுத்தும் வார்த்தை பின்னவீனத்துவம் என்னும் Post modernism தான்.
பின்னவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் சற்றேரக்குறைய ஒரு நடுக்கத்துடனேயே பலர் அந்தச் சொல்லை பார்க்கிறார்கள்.இதைப்பற்றி "லீனா ரோய்" எழுதி இருக்கும் குறிப்பை பகிர்ந்துகொள்கிறேன்.பின்நவீனத்துவம் பற்றி மண்டையை போட்டு குழம்பிக்கொண்டு இருப்போருக்கு இது சிறிதேனும் விளக்கத்தை கொடுக்குமென நம்பலாம்.

பின்னவீனத்துவம் என்ன என்று அதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கூட, எங்கே எனக்கு இது தெரியவில்லையே எனச் சொன்னால் என்னை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் அதை வெளியே சொல்வதில்லை. அப்படீன்னா என்னவென்று கேட்பதுமில்லை.
இதில் உள்ள இன்னுமொரு சோகம் என்னவென்றால் பின்னவீனத்துவ எழுத்தாளர்கள் மற்றும் பின்னவீனத்துவவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தும் பலர் லத்தீன், ஆபிரிக்க, பிரெஞ்சு நூல் ஆசிரியர்களின் பெயர்களை சொல்லி வாசகர்களை பின்னிப் பெடலெடுத்துவிடுவார்கள்.

தமிழ் நூல்கள் வாசிப்பதற்கே அல்லப்படும் வாசகன் ஆங்கிலத்தில் யாரோ சில எழுத்தாளர்களை தெரிந்து வைத்திருப்பான். அவனிடம் போய் பூக்கோ, உம்பர்த்தோ எக்கோ என்றால், உம்பாட்டைப் பார் என்றுவிட்டு ஆளே காணாமப் போய்விடுவான்.
இதில ஆங்கிலமே அரிச்சுவடு என்னான்னு தெரியாத என்னைப் போல உள்ளவர்கள் பாடு அதைவிட மோசமாக போய்விடும். எதையுமே தமிழிலேயே படித்து வஞ்தோமா.....

தமிழில் தன்னை ஒரு பின்னவீனத்துவவாதி அல்லது எழுத்தாளன் என்று சொல்லும் பலர் இப்படி பயமுறுத்துவதை இண்டலக்சுவல் டெர்ரரிசம் Intellectual Terrorism என்றே சொல்லலாம். எனக்கு எவ்ளோ தெரியுது பார் உனக்கு தெரியாதில்ல.... என்ற ஒரு ஏளனப் பாவனையுடன் பயமுறுத்துவது.



அதிகபட்சம் என்போன்ற சாதாரண வாசகன் நாலு தமிழ்நூலைப் படித்திருப்பான். அவன் கிட்டப்போய், ஆங்கில நூலைப் படித்த சிலர் அடிக்கும் ஜல்லியால் அடங்கிப் போய் அவனிருக்க, தென்னமெரிக்காவின் வாயில் நுழையாத நூல்களின், அதை எழுதிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லும் போது பொறியே கலங்கிடாதா....?

இந்த இண்டலக்சுவல் டெர்ரரிசமானது பலருக்கு படியளக்க, தமிழில் இந்த பின்னவீனத்துவம் என்ற சொல்லே இப்போ புரியாமல் போய்விட்டது.
பலர் இது கறிக்குதவாது என்று அந்தப் பக்கம் தலைகாட்டவே தயங்குகிறார்கள்.

இப்போ இதை யாராவது தீர்க்கனும் இல்லையா.....? குறைந்த பட்சம் இக்களத்திலாவது இதுபற்றி தெரியப்படுத்தனும் அல்லவா....??
அப்படீன்னா...! அட...!! ஆமாய்யா.....!!! இப்போ நான் உங்களுக்கு இந்த பின்னவீனத்துவம் என்றா என்ன என்று புரிய வைக்கப் போகிறேன்.

இதை நகைச்சுவையாக எடுக்காம சீரியசா படியுங்கள். அதாவது பின்னவீனத்துவன் என்றா என்னவென்றே தெரியாதவர்கள் மட்டும்.
தெரிஞ்சவங்க தங்களுக்கு தெரிஞ்சத சேர்ந்து இங்கே அதை பகிர்ந்துக்கலாம்.

இத நான் ஏன் இங்க எழுத வந்தேன்னா......! நான் பல பின்னவீனத்துவ நூல்களைப் படிச்சிருக்கேன். ஆனால் சமீபத்தில வெளியான சாரு நிவேதிதாவுடைய மிக அருமையான "ஸீரோ டிகிரி" வாசித்தேன். தமிழில் வந்ததில் தமிழராலேயே எழுதப்பட்ட மிக அருமையான நூல் இது.
ஆனால் பல நண்பர்கள் இந்த நூலைப் பற்றி என்னிடம் சொல்லி மருகியது இதுதான் .... "அடப் போங்க லீனா ஒன்னுமே புரியல" என்பதுதான்.
"தலையும் புரியல வாலும் புரியல. அதிகப்படியாக 5 பக்கமே தாண்ட முடியல" என்று தலையால் அடித்துக் கொண்டு அதை நன்றாக இருக்கிரது என்று சொன்ன என்னை ஒரு மாதிரியாகவே பார்த்தார்கள்.
இவனும் சாரு மாதிரி ஆகிட்டானோ என்பது போல.....
சாருவில் எனக்கு தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் உண்டு. இப்படி எழுதி விட்டேன் என்பதால் அவற்றுடன் சமரசம் செய்து விட்டேன் என்பதல்ல அர்த்தம்.
அந்த விமர்சனங்களுக்கு அப்பால் சாருவின் எழுத்தை ரசிப்பவன் நான். 

 

இதை டாம் அண்ட் ஜெர்ரி பிலாசபி என்று கூட சொல்லலாம். அதாவது வெறுப்பும் விருப்பும் ஒரே இடத்திலேயே இருக்கும்.
காட்டூனில் எல்லாம் பிலாசபியா என்று நீங்க கேப்பீங்க....
ஆமா.....!
"அலைஸ் இன் வொண்டெர்லாண்ட்" என்னும் கார்ட்டூன் மற்றும் சிறுவருக்கான கதையில வரும் சிரிக்கிற பூனையே ஒரு பின்னவீனத்துவ குறியீடுதான் என்று சொல்வார்கள்.
அட...! இவனும் புரியாம பேச ஆர்ம்பிச்சிட்டானா என்று நெனைக்கிறீங்கதானே...! ஒன்னும் பயப்பட வேணாம் உங்களுக்கு புரியிற மாதிரியே எல்லாத்தையும் பார்க்கலாம்.

என்ன ஆரம்பிக்கலாமா.....??? 


பழமைவாதம் பற்றியும் நவீனத்துவம் பற்றியும் நான் சொன்னது ஓரளவுக்காவது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இப்போ நாம நேரடியாகவே இதுவரை எமக்கு மாயமானாக காட்சிதந்த பின்னவீனத்துவத்த பற்றிப் பார்க்கலாம்.....

பழமைவாதத்திலும், நவீனத்துவத்திலும் சொல்லப்பட்ட கோட்பாடுகளை ஆராய்ந்து பாத்துச்சு இந்தப் பின்னவீனத்துவம்.
இவற்றில் எப்பவுமே உண்மையான ஒன்று நிலையாக இல்லை. எல்லாமே சில காலத்துக்கு அப்புறம் மறுக்கப்படுது.
இன்னைக்கு உண்மையென்றது நாளைக்கு மறுக்கப்படுகிற போது, அத நாம் ஏன் ஒரு தத்துவமா ஏத்துக்கனும் என்று சிந்தனை இருந்திச்சா.....
இதுவே சாக்காகிப் போச்சு பின்னவீனத்துவத்துக்கு.

 

இந்த காலகட்டத்தில இரண்டாம் உலக்ப்போர் நடந்து முடிஞ்சு உலகமே ஒரு வழியா அலங்கோலப்பட்டுப் கிடந்திச்சு.
ஒருபக்கம் மார்க்ச்சியம் தந்த நாடுகள் வல்லரசாகவும், மறுபக்கம் முதலாளித்துவம் தந்த நாடுகள் வல்லரசாகவும் இருந்து,
ஐரோப்பாவை குறிப்பா உலகை இரண்டாப் பிச்சு எடுத்துச்சு.
இதோட தொடர்ச்சியா யார் வல்லவன், யார் நல்லவன் என்ற "பனிப்போர்" முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்கும் இடையில் நடக்க ஆரம்பிச்சுது.

பனிப்போர் என்றால் என்னான்னு உங்களுக்கு தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட சொல்லாடல்களை வைத்துத்தான் சிலர் எம்மைப் பயமுறுத்துவதால் இதையும் புரிய வைக்கலாம்.
அதாவது அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தமக்குள் யார் பெரியவன் என்பதை ஒரு நேரடி யுத்தம் ஒன்றால் முடிவு செய்யாமல், கத்தியின்றி இரத்தமின்றி மறைமுகமாக பலவிதங்களில் ஒருவரை ஒருவர் அழிக்க முயற்சித்ததை பனிப்போர் என்பார்கள்.

 

அதாவது சூடான யுத்தம் இல்லாமல் குளிரான யுத்தம் (Cold war).

இந்தக் காலகட்டத்தில்தான் அதாவது 1950 தொடக்கம் 1960 வரைக்குமான காலகட்டத்தில்....
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிஷேல் பூக்கோ (Michel Foucalt), ஜாக் டெரிடா (Jaques Derrida), ஷோன் லியோடார்ட் (Jean Francois Lyotard) என்னும் மூவர் ஒரு சிந்தனையை முன்வச்சாங்க.

அந்தச் சிந்தனையின் பெயர்தான்......
 பின்னவீனத்துவம்.


பூக்கோ, டெரிடா, லியோடார்ட் ஆகியோர் சொன்ன இந்த பின்னவீனத்துவம் அப்படி என்னத்ததான் சொல்லுது என்று பார்ப்போமா.....?

மார்க்சியம் போன்ற நவீனத்துவங்களையும், கிரேக்க கதைகள் போன்ற பழமைவாதங்களையும், தத்துவங்களையும் பெரிய கதைவிடும் செயல் என்று பின்னவீனத்துவம் சொன்னது.
அதைப் "பெருங் கதையாடல்" என்னும் சொல்லைப் பாவித்துபின்னவீனத்துவம் நிராகரித்தது.
அப்போதய கட்டங்களில் மார்க்சீயம் மிகப் பெரிய வலுவுடன் இருந்த தத்துவமாக காணப்பட்டது. அதையே பின்னவீனத்துவம் எதிர்த்தது.

அதுமட்டுமல்ல, நான் மேலே சொன்ன பூக்கோ, டெரிடா, லியோடார்ட் என்பவர்கள் பிரான்சில் இருந்த சோஷலிச இயக்கங்களில் அங்கத்தவர்களாக இருந்து, அதிலிருந்து மாறுபட்டு இந்த பின்னவீனத்துவத்தை முன்வைத்தனர்.

இப்போது உங்களுக்கு சில விசயங்கள் புரிய ஆரம்பிக்கலாம்.
ஆம்....! இந்தப் பின்னவீனத்துவம், சோசலிசத்தை எதிர்ப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் கைக்குழந்தையாக மறைமுகமாக மாறியது.
அதாவது, ரஷ்ய சார்பான கொள்கையை விலக்கிவிடுவதால் தானாகவே அமெரிக்க சார்பான கொள்கையை ஆதரிப்பதாக அது அமைந்தது.

இதை மேலும் விளக்க வேண்டும்....!
ஒரு சமுதாயம், தனது விடுதலைக்காக புரட்சியை மேற்கொண்டால், பின்னவீனத்துவமோ ஒரு சமுதாயம் விடுதலை அடைய வேண்டிய அவசியமே இல்லை, ஆனால் அதற்குள் இருக்கும் சிறு சிறு குழுக்களுக்கு மட்டும் விடுதலை போதுமானது என்றது பின்னவீனத்துவம்.


இதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.........
பெரும்பாண்மையான சிங்களவரிடமிருந்து விடுதலையடைய தமிழினம் புரட்சி செய்ய வேண்டும் என்று புறப்பட்டால்,
அப்படி ஒன்றும் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் விடுதலையே தேவையில்லை. தமிழர்களுக்குள் இருக்கும் தலித்துகளுக்கும், பெண்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், தனித்தனியே விடுதலை அளித்தால் மட்டும் போதும் என்றது..

இதை மேலோட்டமாக பார்க்கும் போது அட....! இவர்கள் சொல்வது சரிதானோ என்ற மயக்கமே நமக்கு ஏற்படும். குறைந்த பட்சம் அந்த தலித்களுக்கும், பெண்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்குமாவது இது சரிதானே என யோசிக்கத் தோன்றும்.

ஆனால் இதை சரியாக உற்று நோக்கினால், இதனால் பயனடையப் போவது சிறுகுழுக்களான தலித்களை விட பெரும்பாண்மை சிங்கள அரசாகத்தான் இருக்கும்.
மொத்த தமிழினத்துக்கும் விடுதலை கிடைக்கும் போது அதன் கூறுகளாக இந்தச் சிறு குழுக்களுக்கும் சேர்த்து விடுதலை கிடைக்க சந்தர்ப்பம் இருகலாம்.
ஆனால் அதை விடுத்து ஒட்டு மொத்தச் தமிழர்களையும் ஒன்றாக சேர விடாமல் தனித்தனியாக குழு குழுவாக பிரிக்கும் முயற்சியை இந்தப் பின்னவீனத்துவம் செய்கிறது.

இந்தக் கொள்கை எப்போதும் முதலாளித்துவ மேம்போக்கான சக்திகளுக்கு மறைமுகமான ஆதரவை கொடுக்கிறது.
ஆனால் இவர்களைக் கேட்டால், இதோ பார்! தலித்தியம் என்பது எவ்வளவு முக்கியமானது. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை நாம்தான் அது பற்றிப் பேசுகிறோம். ஹோமோ செக்சுவல் ஈடுபாட்டினரும் மனிதர்கள்தானே அவர்களை எங்களைத் தவிர யாரும் கண்டுகொள்வததில்லை என்பார்கள்.
 

இதில் இன்னுமொரு விசயத்தையும் நான் சொல்ல வேண்டும்.
மாக்சியம் பகுத்தறிவுவாதத்தை முன்வைத்தது. எனவே இந்த பின்னவீனத்துவம் பகுத்தறிவுவாதம் என்பதே நடைமுறைக்கு உதவாது என்று மறைமுகமாக ஆன்மீகத்தைத் தாங்கிப் பிடித்தது.

இப்போது இதுவரை நான் சொன்னவற்றில் இருந்து சரியாக சிந்தித்தீர்களென்றால் ஏன் இந்தப் பின்னவீனத்துவவாதிகள் என்று சொல்லும் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.
அவர்கள் யார் யார் சிந்தித்தால் இதற்கு விடைகள் பளிச்சென உங்களுக்கு புரிந்து போகும்.

அட..! பின்னவீனத்துவம் என்பது இவ்வளவுதானா என்று நீங்கள் நினைத்தால்.....
இல்லை. இன்னும் உண்டு என்பதுதான் அதற்குப் பதில்.

அப்படின்னா அவை என்ன என்ன....?

அதை அடுத்துப் பார்ப்போம்..........
 

மேலோட்டமாக பின்னவீனத்துவத்தில் ஒரு கொள்கையை மேலே நான் சொல்லியிருந்தேன்.
அதுதவிர்ந்த அடுத்தவற்றை உங்களுக்கு புரியவைப்பதற்கு முன்னர் நான் செய்ய வேண்டிய கடமை ஒன்றுள்ளது.

அது என்னவென்றால்........
"பின்னவீனத்துவவாதிகள் எழுதும் நாவல்கள் எதுவுமே தலைகால் புரியவில்லையே!
ஆனாலும் பலர் அவற்றை நல்லாயிருக்கிறது என்று சொல்வது மட்டுமல்லாமல் பல நாவல்கள் படித்ததாகவும் சொல்கிறார்களே!
ஒரு நாவலே விளங்காவிட்டால் எப்படி அடுத்த நாவல் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.? இவர்களுக்கு விளங்குவதால்தானே தொடர்ந்து படிக்கிறார்கள்.
இவர்களுக்கு விளங்குகிறது, எனக்கு ஏன் விளங்கவில்லை? அப்படி என்றால் நான் முட்டாளா.....?"
அப்படி என்று நிறைய இளைஞர்கள் மறுகிப் போகிறார்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இப்போ உடன் அளிக்க வேண்டும். அதை சொல்லிவிட்டுத்தான் நான் அடுத்த கட்ட்டத்துக்கு நகர வேண்டும்.

இதைச் சொல்வதற்கு நான் உங்களுக்கு, முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்

பிக்காசோ என்னும் ஓவியரை உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவர் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவியத்தின் ஜாம்பவான் ஆவார்.
இவரது வீட்டில் ஒரு நாள் திருடன் ஒருவன் புகுந்து திருடிச் சென்றுவிட்டான்.

அதிர்ஷ்டவசமாக திருடன் தப்பிச் செல்லும் போது, பிக்காசோ அவனைப் பார்த்துவிட்டார்.
காலையில் வந்து திருட்டு சம்மந்தமாக விசாரித்த காவல்துறையினருக்கு, பிக்காசோ திருடனைப் பார்த்தது பெரிய ஆறுதலையளித்தது.
அதுமட்டுமல்லாமல் பிக்காசோ மிகப்பெரிய ஓவியரென்பதும் வாய்ப்பாகப் போனது.
காவல்துறையினர் பிக்காசோவிடம் அந்த திருடனை அப்படியே உங்களால் வரைந்து தரமுடியுமா எனக் கேட்டனர்.
அதற்கு பிக்காசோ, உடனே முடியும் எ னப் பதிலளித்து அடுத்த தினம் திருடனின் ஓவியத்தை தருவதாக சொன்னார்.

ஓவியமும் காவல்துறையினர் கைகளுக்கு கிடைத்தது.
ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால்.......
அந்த ஓவியத்தின்படி, காவல்துறையினர் ஒரு கோழி, ஒரு நாய், ஒரு தபால் பெட்டி மற்றும் விளக்குக் கம்பம் ஒன்று என்பவற்றையே கைது செய்ய வேண்டி இருந்தது.

காரணம் நிச்சயமாக உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஆம்....! பிக்காசோ திருடனின் சித்திரத்தையும் மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன ஓவியமாக வரைந்து கொடுத்ததுதான்.

இனி எனது கடமை மிகச் சுலபமாகிவிடும் என நினைக்கிறேன்.......
அதாவது, வழமையான ஓவியங்கள் ஒரு காட்சியையோ, நபரையோ தத்ரூபமாக அப்படியே வரைவது.
ஆனால் மாடர்ன் ஆர்ட் என்பது ஒரு ஓவியனுக்கு மனதில் ஓடும் விம்பங்கள், நினைவுகள் ஏன் சங்க்கீதங்களைக் கூட வரைய அனுமதிக்கிறவு. அதுவும் அவர் மனதில் அவை பற்றி என்ன தோன்றுகிறதோ அந்த வடிவத்திலேயே வரைவது.
அதற்கென்று எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. எதையும் எப்படியும் அவருக்கு அந்த காட்சியை வெளிக்கொண்டு வர தோன்றுகிறதோ அப்படியே வரையலாம்.
 

ஆனாலும்..........
ஒரு ஓவியர் அதை எப்படி வரைகிறாரோ அதை அப்படியேதான் அந்த ஓவியத்தைப் பார்ப்பவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பார்ப்பவரும் தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் அந்த ஓவியத்தில் உள்ளது என எடுத்துக் கொள்லலாம்.

உதாரணமாக சூரிய உதயம் என்று, ஓவியம் ஒன்றை மாடன்ர்ன் ஆர்ட்டிஸ்ட் வரைந்தால், அதில் நிச்சயமாக சூரிய உதயம்தான் தெரியும் என்று நீங்கள் நினைத்தால் தோற்றுப் போவீர்கள்.
அதைப் பார்க்கும் போது அங்கே சூரியனை தேடுவதும் தப்பு.
பார்ப்பவருக்கு அது குதிரைகள் ஓடுவது போலத் தெரிந்தால், அதுதான் அந்த ஓவியத்தின் அர்த்தம்.

ஓவியத்தைப் படைத்தவர் அதை வரைந்ததோடு மறைந்து விடுகிறார். அதைப் பார்ப்பவர் எப்படி பார்க்கிறாரோ அதுதான் அந்த ஓவியத்தில் இருப்பதன் அர்த்தமாகிவிடும்.

புரிகிறதா.......?

அது போலத்தான் இந்த பின்னவீனத்துவ நாவல்களும்.
ஒருவர் ஒரு நாவலை எழுதுவதும் போது மனதில் என்ன படுகிறதோ, அதையே எழுதுவார். அத்துடன் அவர் கடமை முடிகிறது. பின்னர் அதை வாசிப்பவர் என்னவிதமாக புரிந்து கொள்கிறாரோ அதுதான் அந்த நாவலின் கருவே.

அந்த நாவலை எழுதியவர் அத்துடன் மறைந்து விடுகிறார்.
இதையே பின்னவீனத்துவம் "ஆசிரியன் இறந்துவிட்டான்" என்னும் ஒரு சொல்லை உபயோகப்பட்டுத்தி விளக்குகிறது.

இந்த "ஆசிரியன் இறந்து விட்டான்" என்பது பின்னவீனத்தின் மிக முக்கிய சொல்லாடல் ஆகும்.

ஒரு மாடர்ன் ஆர்ட் எப்படி வரையப்படுகிறதோ அப்படியேதான் பின்னவீனத்துவம் எழுதப்படுகிறது.
எழுதும் போது எந்த ஒரு விதிகளும் வரையறையும் இல்லாமல் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவது.
அதை வாசிப்பவர் தனக்கேற்றால் போல அதை விளங்கிக் கொள்வது. இதுதான் இங்கு விதி.

இதை மேலும் சில உதாரணங்களுடன் தொடர்ந்து விளக்குகிறேன்..

மாடன் ஆர்ட் எனப்படும் நவீன ஓவியம் பின்னவீனத்துவம் என்னும் ரீதியில் எல்லாராலும் வரையப்படுவதில்லை.
பலர் அதை பின்னவீனத்துவ சிந்தனை இல்லாமலேயே முயற்சி செய்திருக்கிறார்கள். புதுக்கவிதை போல....

புதுக்கவிதையை பின்னவீனத்துவம் என்னும் சிந்தனைக்குள் அடக்காமல் பலர் அதைப் புனைந்துள்ளனர். ஆனால் பின்னவீனத்துவ கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதை வட்டிவிலேல்யே அமைந்திருக்கும்.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ளல் வேண்டும்.


பாப்லோ பிக்காசோ கியூபிசம் (Cubism) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் தனது மாடர்ன் ஆர்ட்டை வரைந்தார். இந்த கியூபிசம் பின்னவீனத்தின் ஒரு அம்சம்தான்.
சித்திர வகைகளில் ஆன்டி ஆர்ட், மற்றும் ஆன்டி ஆன்டி ஆர்ட் என்னும் வகைகளும் இவையுள் அடங்கும்.
அத்துடன் கொலாஜ் ஓவியம் என்று உருவாக்கப்படும் ஓவியங்கள் பின்னவீனத்துவத்தின் சரியான அமைப்பாக இருக்கும்.


இது பற்றி ரொம்ப இப்போ பார்த்தால் குழப்பமே மிஞ்சும். ஆனாலும் பிக்காசோவின் கியூபிச சித்திரங்களை கூகிளில் பார்த்தீர்களானால் இது புரிந்து போகும்.

நன்றி-லீனா  ரோய்


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...