Sunday, June 24, 2012

பெண்களுக்கு யாரை பிடிக்கிறது?Sweet Boys Vs Bad Boys..!


இன்றைய பதிவு கூட எங்கள் இளமையுடன் சம்பந்தப்பட்ட பதிவு தான்.சற்றே நீளமான பதிவு,ஆனால் ரொம்பவே பயனுள்ளது(தேவைப்படுவோருக்கு)!!

பையன்களை பொதுவாக இரண்டாக பிரித்து பார்க்கலாம்.அதுவும் பெண்களின் மொழியில் சொல்வதானால் ஒன்று "ஸ்வீட்டான பையன்"(Good/Sweet boy) மற்றையது "கெட்ட பையன்"(Bad boy). பெண்கள் ஒரு பையனை ஸ்வீட்டாகவோ/கெட்ட பையனாகவோ தீர்மானிப்பதற்கு பல காரணிகள் இருக்கலாம்.அது ஒவ்வொரு பொண்ணுக்கும் வேறுபடும்.

ஸ்வீட்டான பையன்

அமைதியான,தினசரி சண்டையில்லாத வாழ்க்கையை கொண்டுநடத்துகின்ற ,திறந்த மனதுடைய,வெளியில் கூட்டி செய்கின்ற,செலவுக்கு பணம் தருகின்ற,பேஸ்புக் ட்விட்டரில் தனது துணையை பற்றி புகழ்கின்ற,பொதுவில் அன்பானவனாக காட்டிக்கின்ற,ஒவ்வொரு சண்டையிலும் பெண்ணை வெல்ல அனுமதிக்கின்ற,அவள் சொல்லும் அனைத்தையும் ஆமோதிக்கின்ற,உறவுக்கு பாதகமான நபர்களுடன் தொடர்புகளை துண்டிக்க சொல்லும் போது அதனை செய்வனே செய்கின்ற,நண்பர்களுடன் அதிகநேரம் செலவு செய்யாமல் அவளுடனேயே இருக்கின்ற,அவளின் நண்பிகள் "இவன் தான் உனக்கு பொருத்தமானவன்" என்று கூறும்படி நடக்கின்ற பையனை தான் "ஸ்வீட்டான பையன்" என்கிறார்கள் பெண்கள்.
இதனுள் இன்னமும் பல உதாரணங்களை சேர்த்துக்க முடியும்.
கெட்ட பையன்

மிக கடுமையான நடத்தையை கொண்ட,கொடூரமான சிந்தனை கொண்ட,கோபக்கார,பெண்ணை வெளியில் எங்கும் கூட்டி செல்லாத,தானாக மெசேஜ்/கோல் செய்து பேசாத.பொதுவில் ஒன்று சேர நடக்காத,கை கோர்க்காத,அவன் செலவுக்கெல்லாம் தான் பணம் செலவு செய்யணும் என்கின்ற,துணையின் பிறந்த நாளைக்கூட ஞாபகம் வைத்திருக்காத,நண்பர்களுடன் கூத்தாடுகின்ற,அவளை விட நண்பர்கள் தான் முக்கியம் என்று நினைக்கின்ற,புகை,குடி, என்று ஆர்ப்பரிக்கின்ற,அவளின் நண்பிகளின் மனதை வெல்லாத,எந்தக்கருத்துக்கும் எதிராக கதைக்கின்ற,தானே தனியே தீர்மானம் எடுக்கின்ற எந்த ஒரு ஆணும் பெண் பார்வையில் கெட்ட பையன் தான்.இதை விட நீங்கள் நினைப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.




இந்த "கெட்ட பையன்" என்பதன் "பார்வை" ஆளுக்காள் வேறுபடும்.ஒரு பெண் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடனும்,புரிந்துணர்வுடனும் வாழ்க்கையை கொண்டு நடத்துகிறாள் என்பதிலேயே நல்ல பையன்,கெட்ட பையன் தொடர்பிலான அவளது பார்வை வேறுபடுகிறது.ஒருவளுக்கு கெட்ட பையனாக இருக்கும் ஒருவன் அவள் அவனிடம் வெறுக்கும் விடயங்களை அனுசரித்து போகும் ஒரு பெண்ணிடம் நல்ல பையனாகிறான்.

இணையத்தில் சுட்ட சில சம்பவங்கள்:

Girlfriend: I miss you, can I meet  you tonight?
Good Boy: Why don’t you tell me earlier? My mum wants me to stay for family reunion dinner tonight.
Bad Boy: I was just about to ask you the same babe (I have to think on a way to escape the dinner  tonight.)

Girlfriend: Can I have a real kiss for my birthday?
Good  Boy : Err..
Bad Boy: Just a kiss?

Girlfriend: I feel like hittin' a bar tonight. It's Wednesday's Ladies' Night. What d'ya say?
Good Boy: It's so sad you love the bar more than your church. 
Bad Boys: As you wish babe. 9 sharp?

Girlfriend: My boss shouted at me today for breaking her favourite vase.I'm so stress right now :'(
Good Boy:Why you always careless?You should be more careful next time if you don't want to lose your job.
Bad Boy: Here..let me hug you. Don't cry babe. (after a while)... What's her car flat number?

Girlfriend: Wow..these grapes look scrumptious. Do you think the farm manager will sue me if I caught picking a two or three of em now?
Good Boy: Don't do that. I'm not responsible if we get into trouble ok.
Bad Boy: Pick six. half-half.


பெண்கள் என்ன செய்கின்றனர்?
பெரும்பாலான பெண்கள் தாங்களே தங்களுக்கு பொருத்தமான பையனை "பல தெரிவுகளில்" இருந்து தெரிவு செய்கின்றனர்.தங்களைஆண்கள் "துரத்துவதை" பெண்கள் விரும்புகின்றனர்.எந்தப்பெண்ணுமே அதை விரும்புகிறாள்."கெட்ட பையன்" என கூறப்படும் பையன்களின் "துரத்தல்கள்"ளினால் கவரப்பட்டு ஏமாற்றப்பட்டு,அந்த காயத்தை வைத்துக்கொண்டு மிகுதி அனைத்து ஆண்களுக்கும் அதே வர்ணத்தை பூசிவிடுகிறார்கள்.உண்மையிலே "கெட்ட பையன்"எப்பவுமே கெட்ட பையன் தான்.அவர்களுக்கு பெண்கள் மீதான எண்ணம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்துவிடப்போகிறது.பெண்கள் ஆண்களை வெறுக்க முக்கியகாரணமாக அவர்களே இருந்தும்விடுகிறனர்.அதனால் தான் சில பெண்கள்“I Hate Boys” என்கின்ற விளிம்பு நிலைக்கு சென்றுவிடுகிறனர்.
மறுபக்கத்தில்,"ஸ்வீட்டான பையன்"களை அடையும் பெண்கள் நேர் எதிராக நடந்துவிடுகிறனர்.அந்த பையன் ஸ்வீட்'டாக இருப்பதன் அனுகூலங்களை தங்கள்வசப்படுத்தி "advantage " எடுக்க நினைக்கும் பெண்கள் இறுதியில் "கெட்ட பெண்'ணாகவே மாறிவிடுகிறனர்.இதனால் அந்த பையனின் ஸ்வீட்டான தன்மையை மாறவைக்கின்றனர்.அவனை தன் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறனர்.(தங்களை கடுமையானவர்களாக,கோபக்காரர்களாக காட்டுதல்,ஏமாற்றுதல்,கதைப்பதற்கு மெசேஜ்,கோல்(Call) செய்யாமல் விடுதல்).


யார் மனிதன்?
ஒரு முழுமையான மனிதன் எனப்படுபவன் நல்லது,கெட்டது இரண்டும் கலந்தவன்.மனிதன் என நான் குறிப்பட்டதன் காரணம் எவன் ஒரு பெண்ணை முழுமையாக பாவிக்க தெரிந்தவன்,அவளை சரியாக நடத்த தெரிந்தவனோ அவனே மனிதன்.அவன் அன்பான,பண்பானவனாய் இருப்பான்.பெண்ணுடன் முரன்படுவான்.மறுத்துரைப்பான்.ஆனால் பின்னர் அவளுடன் சமாதானமாவான்.வெளியில் கூட்டி செல்வான்.பிடித்ததை வாங்கி தருவான்.எவனுமே தினசரி தன்னை வடிவாக கவனிக்கவேண்டும்,வெளியில் கூட்டி செல்லவேண்டும் என்று அடம்பிடிக்கும் பெண்களை விரும்பமாட்டான்.



தினசரி நீ வாங்க நினைப்பவற்றுக்கு பில் கட்டமாட்டான்.உன்னை வெளியில் கூட்டி செல்வான்,உன் கரம்பிடிப்பான்..ஆனால் பொதுவில் உன்னை அறைந்துவிடமாட்டான்.உன்னைப்பற்றி மற்றையோருக்கு பெருமையாய் சொல்வான்..ஆனால் உனக்கும் தனக்கும் இடையிலான தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தமாட்டான்.உனது பிறந்ததினம்,முக்கிய நாட்களை ஞாபகம் வைத்திருப்பான்.அத்தருணம் உன்னுடன் நேரத்தை கழிப்பதில் உவகை கொள்ளுவான்.ஆனால் அதேசமயம் தனக்கான நேரத்தை ஒதுக்கியும் கொள்வான்.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளுதல் அவசியம்.திருமணமானால் ஒரே ஒரு வாழ்க்கை என்பதெல்லாம் பேசுவதற்கு நன்றாக இருக்கலாம்.ஆனால் தங்களுக்கான பாதையை தீர்மானித்துக்கொள்பவர்களே இறுதி வரை நிலைக்கிறார்கள்.
பையன்கள் எப்போதும் ஸ்வீட் பையனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.பெண்களுக்கு முதுகெலும்பு இருக்கின்ற ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்.இன்னொரு பெண்ணை பற்றி பேசி துணைவியாரை கடுப்பாக்க நினைக்காதீர்கள்.உண்மையான மனிதன் தன்னைச்சார்ந்த விடயங்களை எவ்வாறு கையாளலாம் என்று தெரிந்திருப்பான்.தனக்கு தானே சேற்றை எடுத்து பூசிக்கொள்ள விரும்பமாட்டான்.
ஒரு "கெட்ட" பையனின் நடத்தையை அனைத்து ஆண்கள் மீதும் திணிக்கப்பாக்காதீர்கள் பெண்களே.அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்.பையன் கெட்டவனாயின்,அது அவன் தவறல்ல.முதலிலேயே அதனை கண்டுபிடிக்க தெரிந்திருக்காத நீங்கள் தான் கெட்ட பெண் ஆகிறீர்கள்.அதே சமயம் பையன் அளவுக்கு அதிகமான ஸ்வீட் ஆயின் அதனை கொஞ்சம் குறைக்க சொல்லுங்கள்.அதிகப்படியான ஸ்வீட் உங்கள் பற்களை சேதம் செய்துவிடும்.அவன் மனதை தாக்கலாம் உங்களால் முடியும் என்று முயர்ச்சிக்காதீர்கள்.அது அப்படியான பையன் உங்களுக்கு கிடைத்தமையை நிராகரிக்கும் காரணமாகிவிடலாம்!



சில பல பெண்களுக்கு ஸ்வீட் பையன்களை பிடிக்கும்...சிலருக்கு கெட்ட பையன்களை பிடிக்கும்.அது ஒரு வகையான கவர்ச்சி.ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே அந்த கெமிஸ்ட்ரி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால்,ஸ்வீட் என்ன கெட்ட பையன் என்ன அதெல்லாம் கண்ணுக்கு தெரியப்போவதில்லை. கெட்ட பையன்களை பெண்களுக்கு பிடிப்பதற்குபல காரணங்கள் இருக்கலாம்.அவற்றுள் சில:

*இலகுவாக தம்வசப்படுத்திவிடக்கூடிய,பணியவைத்துவிடக்கூடிய ஆண்களை விட எதிர்த்து நிக்கின்ற,பணியவைக்க கடினமான ஆண்களை அவர்கள் விரும்புகிறார்கள்.தினசரி அவனால் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்க எதிர்பார்க்கிறார்கள்.

*சில பெண்கள் நீண்ட கால உறவுகளை தவிர்த்து குறுங்கால வாழ்க்கை வாழப்பிடித்தவர்கள் கெட்ட பையன்களை தெரிவுசெய்கிறார்கள்.

**பெண்கள் ஒரு ஆண் முன்னின்று தன்னை வழிநடத்துவதை விரும்புகிறாள்(அதிகமானோர்).

***தானே முடிவெடுக்க கூடிய,ஆண்மையான தோற்றம் கொண்ட,பிரச்சனை ஒன்று வந்தால் எதிர்த்து நின்று எதிர்கொள்கின்ற பையன் கெட்டவனாக இருந்தாலும்,அவனே தன்னை பாதுகாப்பான் என்கின்ற நம்பிக்கை கொண்ட பெண்கள் இருக்கிறார்கள்.

****கெட்ட பையனாக இருப்பவன் "உறவுகளில்" கூட கடினமானவனாய் இருப்பான் என்று விரும்புவர்களும் உண்டு.


உண்மையில் "ஸ்வீட் பையன்" என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பையன் "கெட்ட பையனாக" இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.அல்லது வேறு சில பிரச்சனைகள் அவனை சூழ இருக்கவும் கூடும்.நல்ல பையனாக இருந்து பலரால் ஏமாற்றப்பட்டு கெட்ட பையனாக மாறி இருப்பவர்களும் எம் சமுதாயத்தில் ஏராளம்.ஆனால் ஒரு அமைதியான நீண்ட கால உறவை எதிர்பார்க்கும் எந்தப்பொண்ணும் ஸ்வீட்டான பையனை தான் கெட்ட பையனை விட அதிகமாக முன்னுரிமை கொடுத்து தெரிவுசெய்கின்றனர்.




உங்களை ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்!

எந்த ஸ்வீட் பையனாவது தான் ஸ்வீட்டாக இருந்த ஒரே காரணத்தால் தனது உறவு பாதிக்கப்பட்டு முறிவடைந்தது என்று கூறுவானாயின்,அவன் ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான தகுதியை,உறுதியை கொண்டிருக்கவில்லை என்று தான் கூறமுடியும்.ஸ்வீட்டாக இருப்பது பெண்களுக்கு பிடிக்கும்.ஆனால் அதிகப்படியான ஸ்வீட் பையன்கள் தங்கள் துணையின் வாழ்க்கையை சுவாரசியமற்றதாக்கி விடுகின்றனர்.அதே நேரத்தில்,என்ன தான் ஸ்வீட்டாக இருந்தாலும்,சில பையன்களின் தனிப்பட்ட சில குணாதிசயங்கள் வாழ்க்கையை பாழாக்கிவிடுகின்றன.இதை விட கெட்ட பையனே மேல் என்று பெண்களை எண்ண வைத்துவிடுகின்றனர்.

பெண்களை கவர்வதற்கு நல்ல பையனாகவோ/கெட்ட பையனாகவோ தங்களை பாவித்துக்கொள்பவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர்.தன்னுடைய உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு பொருத்தமான துணையை பெற்றுக்கொள்வான் என்பதில் சந்தேகமில்லை.திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையில் கூட அவன் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

உறவொன்றை ஆரம்பிக்கும்போது ஓகே,இவனை/இவளை திருத்த முடியும்/மாற்ற முடியும் என்ற நினைப்பில் பையனோ பெண்ணோ தயவு செய்து வாழ்க்கை எனும் உறவில் குதித்துவிடாதீர்கள்.அவ்வாறு ஒரு உறவுக்குள் இணைவதால் ஏற்படும் பிணக்குகள் பிரச்சனைகள் ஏராளம்.சிறுவயது முதல்கொண்டு உங்கள் சில உங்களாலே சகிக்கமுடியாத குணங்களை மாற்றிய முயர்ச்சித்திருப்பீர்கள்.என்ன நடந்தது?உங்களால் முடிந்ததா?அவ்வாறு குறைக்க முடிந்திருந்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த குணம் வெளிப்பட்டிருக்கும் அல்லவா? அதே போல தான் உங்கள் வருங்கால துணை கூட!உங்களை உங்களால் மாற்ற முடியாத போது எவ்வாறு இன்னொருவரை உங்களால் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்?அதனால் ஏமாந்தும் போகிறீர்கள்?


யார் உங்கள் தெரிவு?

ஸ்வீட் பையனை தெரிவு செய்யும் போதோ,கெட்ட பையனை தெரிவு செய்யும் போதோ, பெண்கள் தங்களது பழக்கவழக்கம்,நடத்தை,குணா நலன்களை கருத்தில் கொண்டு முடிவெடுத்தல் அவசியமாகின்றது.ரொம்பவே அடக்கமான அமைதியான,பயந்த,நாட்டு நடப்புகள்,வெளியுலகம் தெரியாத பெண்கள் ஸ்வீட்டான பையன்களை தெரிவு செய்தால் அவர்களது வாழ்க்கை பெருமளவு பிரச்சனைகள் இல்லாமல் சீராக செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்..மென்மையான சுபாவம் கொண்ட பெண்கள் கெட்ட பையன்களை தெரிவு செய்தலோ,மென்மையான ஸ்வீட் பையன்கள் ஆர்ப்பாட்டமான,கொஞ்சம் கடினமான கையாள்கை தேவைப்படும் பெண்களை தெரிவு செய்தலோ அவ்வளவு நல்லதன்று.

உங்களுக்கு வரப்போகும் துணை(ஆணோ/பெண்ணோ) எந்த குணதிசயங்களை,பழக்கவழக்கங்களை,வாழ்க்கை முறைமைகளை கொண்டிருக்க வேண்டும்என்று எப்போது எதிர்பார்க்க தொடங்குகிறீர்களோ,அதற்க்கு முன்னதாகவே உங்களை ஒன்றுக்கு இரு தடவை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.உங்கள் குண நலன்கள்,பழக்கவழக்கங்கள்,நடத்தைகளை அறிந்து கொள்ளுங்கள்.ஒரே குணாதிசயங்களி கொண்ட இருவர் திருமண பந்தத்தில் இணைவது சுவாரசியமற்றது என்று பேசுவதற்கு நன்றாக இருக்கலாம்..உண்மையாகவும் இருக்கலாம் ஒரு அளவுக்கு.ஆனால் வெவ்வேறு ஒன்றுக்கொன்று முரணான குணாதிசயங்களை கொண்டவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து படும் அல்லல்பாடுகள் வேதனைகளை பார்க்கையில் ஒரே குணாதிசயங்களை கொண்டவர்கள் சேர்வதில் எந்த தப்பும் கிடையாது!

நீண்ட கால பந்தத்துக்கு ஸ்வீட் பாய்ஸ் தான் ஒத்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது.ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு தனிநபரையும் சார்ந்து வேறுபடும்.முடிவு உங்களுடையது.காரண காரியங்களை விளக்குவதே இந்த பதிவின் நோக்கம்.
----------------------------------------

இவ்வளவு நேரம் நான் பேசியதை பற்றிய ஒரு அருமையான காணொளி ஒன்று இன்று கிடைக்கப்பெற்றது.ஆதியிலிருந்து இன்று வரையான பெண்களின் பார்வை ஸ்வீட்டான பையன்களை நோக்கியா அல்லது கெட்ட பையன்களை நோக்கியா என்றும்,இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்றும் தெளிவான காரணங்கள் மற்றும் வாதங்களுடன் சொல்கிறது.இதை கட்டாயம் பாருங்கள் என்று இதை வாசிக்கும் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.பயனுள்ளது.





விகடனில் என்னைப்பற்றி:

இவ்வார "விகடன்"வரவேற்பரையில் எனது வலைப்பூ பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது.தமிழின் முன்னணி இதழில் என்னைப்பற்றி அறிமுகம் தந்த விகடனுக்கு நன்றிகள்..எனது வலைப்பூ பார்வையாளர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்..நன்றிகள் தோழர்களே!!
ஜொள்ளும்,லொள்ளும் என்றைக்கும் தொடரும் என்று மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு,மீண்டும் அடுத்த சுவாரசியமான பதிவில் சந்திக்கும் வரை..

Post Comment

Sunday, June 17, 2012

நண்பிக்கு ஓர் கடிதம்(மனதளவில் + )...!!

அன்புள்ள நண்பிக்கு,
ஆண்கள் எளிமையானவர்கள்,பெரும்பாலும் பெண்களை போன்று சிக்கல் இல்லாத பொதுப்படையான நடத்தையை கொண்டவர்கள்.ஆண்களை நாம் கவர்வதற்கு சில தந்திரோபாயங்களை கையாளுதல் அவசியம் என்றுநீ நினைக்கலாம் .உன் நினைப்பு சரியானதே. எனது அப்பா கூறுவார், "தான் எப்போதும் தன் நிலையிலிருந்து மாறமாட்டான் என்ற நினைப்பிலேயே ஒரு ஆண் திருமணம் செயக்கிறான் ஆனால் ஆண்களை தங்களால் மாற்றமுடியும் என்ற நினைப்பிலேயே பெண்கள் திருமணம் செய்கின்றனர்." ஆனால் இந்த இரண்டுமே தவறாகிறது.



ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை கொண்டிருக்கும் பெண் இலகுவாக ஆண்களை கவர்ந்துவிடுகிறாள்.அவற்றில் சிலவற்றை உனக்கு தருகிறேன்:
1 .விளையாட்டுக்களில்,பொது விடயங்களில் ஆர்வம்.
உனக்கு விளையாட்டு பிடிக்கவில்லையா?பரவாயில்லை.யாருக்கு தேவை!நீ தினசரி உன் வாழ்வில் நடப்பவற்றை உன் கணவன்/காதலனோடு பகிர்ந்துக்க ஆசைப்படுகிறாய் அல்லவா,அதே போலத்தான் விளையாட்டு அவர்களுக்கு.முழுமையான விளையாட்டு அறிவு இல்லாவிட்டாலும் கூட,ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திரு.அதை போல தான் பொது விடயங்களும்.ஆணின் எதிர்பார்ப்புக்கு இல்லாவிட்டாலும் கூட உன்னை அறிவுடையவளாக,பலதும் தெரிந்தவளாக வைத்திரு.
2 .காதலனின் நண்பர்களை வெறுக்காதே.
ஒரு ஆணை பொறுத்த வரையில் அவனது நண்பர்களை அவன் பெரிதாக கொண்டாடுவான்.எடுத்த எடுப்பிலேயே அவன் நண்பர்களை வெறுத்து பேசுவதை தவிர்த்துவிடு.ஆரம்பத்தில் நண்பர்களை பற்றி நன்றாக பேசு உன் கணவன்/காதலனிடம்.சிறிது காலம் செல்கையில் கணவன் உன்னை சுற்றி வர ஆரம்பிப்பான்.கணவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்க சொல்லுவார்கள்?அது உந்தன் திறமை.கணவனுக்கு எது அதிகம் பிடிக்கிறதென்பதை அறிந்து அதற்க்கேற்ப்ப அவனை திருப்திப்படுத்தி உன்னை சுற்றி வர வை.அப்புறமாக மெது மெதுவாக தீய நண்பர்களின் சகவாசம் பற்றி எடுத்துக்கூறு.உன்னை தன் வாழ்க்கையில் பெறுமதிமிக்கவளாக கருதும் எந்த ஒரு ஆணும் உன் பேச்சை கேட்பான்.

3 .அவனது நகைச்சுவையை ரசிக்க பழகு.
உனக்கு நகைச்சுவை பிடிக்காதா?பரவாயில்லை..உன் கணவன்/காதலன் பீட்சா சாப்பிடுகையில் முழுவதையும் உண்ண நினைப்பானா?இல்லை ஆனால் நாம் நினைக்கிறோம் அல்லவா? அதை போல தான்.பொய்கள் பெண்களுக்கு பிடிக்காது.ஆனால் அவன் சொல்லும் சில ஜோக்ஸ்'க்கு சிரிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது தானே!நீ நினைப்பவை உன் ஆணிடம் இருந்து கிடைப்பது அவசியம் என்றால் இந்த வகையான வேலைகள் நீ செய்து தான் ஆகவேண்டும்.
4 .காதல்,ரொமான்ஸ்,செக்ஸ்
முக்கியமாக நீ பெற்றோர்கள் பேசிவைத்த ஆணை திருமணம் செய்கிறாய் என்றால்,மேல்கூறிய மூன்று விடயங்களிலும் கொஞ்சமாவது பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம்.முக்கியமான பரீட்சை ஒன்றுக்கு எதுவித தயார்ப்படுத்தல்களும் இன்றி செல்ல முடியுமா?நேர்முகப்பரீட்சை ஒன்றுக்கு தயார்ப்படுத்தல் இல்லாமல் முகம்கொடுக்க முடியுமா?இல்லை அல்லவா?அதே போல தான் வாழ்க்கையும்.குறித்த வயதுகளில் அறியவேண்டியவற்றை அறிந்து வைத்திருப்பது உன் பொறுப்பு ஆகிறது.இந்த விடயத்தில் ஆண்களின் பார்வைகள் வேறுபாடும்.உனது ஆண் எந்த வகையறா என்று தெரியும் முன்னர் நீ தெரியவேண்டியத்தை தெரிந்து வைத்திருந்தால் உனது பக்கம் இருக்கின்ற ஆபத்து தவிர்க்கப்படுகிறது.

5 .உடனடி முடிவுகள் எடுத்தல்.
அனேக பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சனை இது.ஒன்றையும் ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக ஒரு முடிவு எடுத்து அதன் பால் இயங்குவது.இது பல சமயம் பிரச்சனைகளில் தான் முற்றுப்பெறுகிறது.ஒரு பத்திரிகை/இணைய செய்தியின் தலைப்பை பார்த்து செய்தியை ஊகித்தல் போன்றது இது.தலைப்பு உன்னை திசைதிருப்பலாம்.உள்கிடக்கை வேறாக இருக்கலாம்.உடனே தவறான முடிவெடுப்பதை விடுத்து ஆராய்ந்து முடிவெடுக்கும் பெண்கள் ஆண்களை கவருகிறார்கள்.
6 .மேக் அப்,அலங்காரங்கள்
பெரும்பாலான ஆண்கள் அதிகப்படியான மேக் அப் பண்ணும்,அலங்காரம் பண்ணும் பெண்களை வெறுக்கிறான்.தனக்கு எது அழகாய் இருக்கும் என்று உனக்கு நன்றாக தெரிய வேண்டும்.மேக் அப் ரசனை இல்லாத பல பெண்கள் இலகுவாக ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.அளவான,எளிமையான அழகூட்டல் பெரும்பாலான ஆண்களை கவருகிறது.
7 .உறவுகள்,அயலவர்கள் பற்றி எப்போதும் கதைக்காதே
பெரும்பாலான தொலைகாட்சி நாடகங்கள் பார்த்தோ,அல்லது இயல்பாகவோ,இந்த குணம் பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது.எப்போதும் பிறரை பற்றி குறை பேசும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது.அதுவும் இன்று போன்ற மிகவும் பிசி'யான காலங்களில் இத்தகைய "பெறுமதி சேர்க்காத கதைகள்"ஐ ஆண் வெறுக்கிறான்.அதே போல் அதிகமான அலட்டல் கதைகளும் ஒரு ஆண் உன்னை வெறுப்பதற்கு காரணமாகலாம்.
8 .தனிப்பட்ட உறவுகளை ஆயுதமாக்காதே.
பெரும்பாலான திருமணம் முடித்த பெண்கள் பற்றி அதிக நகைச்சுவை துணுக்குகள் வாசித்திருப்பாய்.தினசரிநடக்கும் சம்பவங்களை வைத்து இரவில் பெண்கள் பழிவாங்குவார்கள். இது போன்ற உத்திகள் சிறிது நாட்கள் உபயோகப்பட கூடும்.பின்னர் அதுவே உன் மீதான ஈர்ப்பை கொலை செய்துவிடவும் கூடும்.
9.ரூல்ஸ் பேசுவது கூடாது

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் கணவரிடம் பாதிவேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி ரூல்ஸ் பேசுவது எந்த ஆணுக்குமே பிடிக்காதது.கறாராக சொல்லுவதை விடுத்து அன்பாக உங்கள் கணவன் கேட்கும் வகையில் உக்திகளை பாவித்து வேலை வாங்கலாம். ஆணவத்தின் நீலாம்பரி கேரக்டரை விட அன்பான கேரக்டர் தான் அடிபணியச் செய்யும் என்பதை உணர்ந்துகொள்.


10.பொய்சொல்லவைக்காதே
ஆண்கள் உண்மைகளை மறைப்பதால் தான் பெண்கள் கேள்விகேட்கிறார்கள்..அல்லது பெண்கள் கேள்வி கேட்பதால் தான் ஆண்கள் உண்மையை மறைக்கிறார்கள் என்று இருபக்கமாகவும் விவாதிக்கலாம்.ஆனால் அனுமதிக்ககூடிய உண்மை இருந்தும் உன் கேள்வியால் ஆண் பொய் சொல்கிரானாயின் அது ஆபத்திலே முடியும்.புதிதாக ஒரு புடவை கட்டினால் இந்த புடவை நல்லாயிருக்கா என்று கேட்பது வேறு. ஆனால் எப்போது பார்த்தாலும் நான் அழகா இருக்கேனா? இல்லையா? என்று கேட்டு கணவரை நச்சரிப்பது. கணவர் தர்ம சங்கடத்தில் நெளிந்து பொய் சொல்ல வேண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான கேள்விகளை தவிர்த்து விடு.



இவையனைத்தும் உன்வாழ்வை பிரகாசமாக்கவே அன்றி வேறெதுக்குமல்ல.கருத்தில்கொள்வதும் கொள்ளாமல் விடுவதும் உன்னுடைய இஷ்டம்..மீண்டும் அடுத்த கடிதத்துடன் சந்திக்கும்வரை...
-Friend .



சரி என்னமோ எனக்கு தோன்றியதையும்,பலரின் கருத்துக்களையும் கொண்டே இப்பதிவை உருவாக்கினேன்.இது ஆணாதிக்கத்தின் ஒரு அங்கம் என்று கூப்பாடு போடும் பெண்களாய் இருந்தால்,கூப்பாடு போடுவதை விடுத்து,உங்கள் பார்வையில் ஆண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறுங்கள்..என்ன தான் இருக்கிறதென்று பார்ப்போமே!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வலைப்பூ அறிமுகம்


நான் இதுவரையில் எந்த பதிவர் அறிமுகமும் தந்ததில்லை எனது வலைப்பூவில்.இன்று ஒரு அறிமுகம் தருகிறேன்.இவர் ஒரு புதிய பதிவர் என்று கூற முடியாவிட்டாலும் கூட,ஒரு பொது அறிமுகம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய ஒரு இளைய பதிவர்.இவரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆழமானவை.சிந்திக்கத்தூண்டுபவை.எடுத்து எழுதும் ஒவ்வொரு தலைப்புக்கும் அவர் பதிவினூடு செய்யும் வாதம் மிக அருமையாக இருக்கும்.நன்றாக எழுதுகிறார்.சீரியசாக எழுதுகிறார்.வரைட்டியான பதிவுகள் தருகிறார்.அவர் தான்"கிஷோகர் IN பக்கங்கள்" என்னும் வலைப்பூவை எழுதிவரும் கிஷோகர்.அவரின் வலைப்பூ இதோ:

"கிஷோகர் IN பக்கங்கள்"
சிறந்த எழுத்துக்கு வரவேற்ப்பு கொடுப்பது இன்றியமையாதது.எதோ என்னால் முடிந்த பணி.

வாரம் ஒரு பதிவு என்றளவில் சுருங்கி இருக்கிறேன்..பார்க்கலாம் வாரம் எதுவரையில் என்று! :)

Post Comment

Sunday, June 10, 2012

காதலில் சொதப்பலாம் வாங்க !!


காதல் திருமணங்கள் எப்போதும் ஏதாவது ஒரு வகையான பிரச்னையை எதிர்நோக்குவது தவிர்க்கமுடியாதது.பிரச்சனைகள் இல்லாத காதல் திருமணம் என்பது சுவாரசியம் அற்றதும் கூட!!எழுந்து வரும் பிரச்சனைகளை குறிப்பிட்ட ஆணும் பெண்ணும் இணைந்து எதிர்கொண்டு சமாளிப்பது கட்டாயமாகின்றது.ஓகே,இப்போ கதைக்கு வருகிறேன்.

அண்மையில் என்னோடு கடந்த வருடம் வேலை பார்த்த சகோதர மொழி பெண்ணொருவருடன் அண்மையில் கதைத்தேன்.கடந்த வருடம், வேலை பார்க்கும் போது இந்த வருட ஆரம்பத்தில் தனது திருமணம் என்று கூறி இருந்தார்.அப்போதே ஆறு வருடமாக காதலித்துக்கொண்டிருந்தார்.இருவருமே அழகு.தந்தையிடம் அனுமதி பெற வேண்டும்.அடுத்த வருடம் திருமண அழைப்பிதழ் அனுப்புகிறேன் என்று கூறி எனது நிறுவனத்தை விட்டு விலகி சென்றிருந்தார்.

என்னடா இன்னமும் திருமண அழைப்பு வரவில்லையே என்று இந்த சில மாதங்களாக நானும் எதிர்பார்த்திருந்த போது தான் அண்மையில் அந்த பெண்ணுடன் கதைக்க முடிந்தது."எங்கே, திருமணம் முடிந்துவிட்டதா" என்று கேட்டேன்.இல்லை என்றாள். ஏன் என்ன நடந்தது என்று கேட்டேன்.இன்னமும் அப்பாவிடம் சொல்லவில்லை.சொல்ல பயமாக இருக்கிறதாம்.அப்போ இந்த வருடம் கல்யாணம் என்று கூறிவிட்டு இன்னமும் அப்பாவிடம் கூறவில்லையா,பேசாமல் கொழும்புக்கு வெளிக்கிட்டு வாங்கோ பதிவு திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன்.அவள் கெட்ட வார்த்தைகளால் திட்டாத குறை.


"எனக்கு என்ட அப்பா தான் முக்கியம்,.அவர் ஓம் என்று சொன்னால் தான் கட்டுவேன்.ஆனால் சொல்ல பயமாக இருக்கிறது, அவர் கடைசி வரைக்கும் சம்மதிக்கமாட்டார்" என்றாள்.

அப்போ கடைசி வரைக்கும் சம்மதிக்க மாட்டார் என்றால் உனக்கு கல்யாணமே நடக்காதேடி என்று கேட்க,
பரவாயில்லை கடைசி வரைக்கும் கட்டாமலே இருந்துவிடுகிறேன் எனக்கு அப்பா தான் முக்கியம் என்று அடம்பிடித்தாள்.

அப்போ உன்னை நம்பி இருக்கிற,உன்னோட தனது வாழ்க்கை அமையணும் என்று உன்னை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்துக்கொண்டிருக்கும் அந்த பையன் என்ன செய்வது ?அவன் வேறு பெண்ணை கட்ட சொல்கிறாயா அல்லது அவனும் கல்யாணம் கட்டாமலே காலம் முழுவதும் இருக்க சொல்கிறாயா என்று கேட்டேன்.

"வேணுமென்றால் அவனது தொலைபேசி இலக்கம் தருகிறேன்;நீயே கதைத்து பார் எனக்கு தெரியாது" என்றாள்.

அதுவரை பொறுமையாக இருந்த மனசு பொங்க ஆரம்பித்து வெடித்துவிட்டது எனக்கு.

பின்ன என்ன ******************* நீங்க எல்லாம் காதலிக்க வெளிக்கிட்டனீங்க.அப்பா தான் முக்கியமென்றால் வீட்டோட இருக்க வேண்டியது தானே அப்பாவ கட்டிக்கொண்டு என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.கடைசி வரைக்கும் நான் சொன்னது புரியாமலேயே கிளம்பி சென்றுவிட்டாள் அந்த நண்பி!

எந்த ஒரு பெண்ணும் தனது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஆண்களாக தனது தந்தையையும் கணவனையும் தான் கூறுவார்கள்.அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் தந்தை-கணவன் வகிக்கும் பங்குக்கு வராவிட்டாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்த உறவுகளும் சில பெண்களின் வாழ்வில் உறுதுணையாக இருந்திருக்கலாம்,.இருக்கலாம்.பொதுவாக ஒரு பெண் தனது தந்தையை ஒத்த மனப்பாங்கு,நடத்தையை கொண்ட ஆண் ஒருவனை கண்டால் இயல்பான ஒரு ஈர்ப்பு வரும் என்று கூறப்படுகிறது.

தனது துணையை தேடும் போதும் கூட தனது தந்தையிடம் காணப்படும் நல்ல பண்புகளை கொண்ட ஒரு ஆணை தான் பெண் கற்பனை செய்து வைத்திருப்பாள்.அதே போன்று பெரும்பாலான வீடுகளில்,அம்மாக்கள் ஆண் பிள்ளைகள் மீதும்,அப்பாக்கள் பெண் பிள்ளைகள் மீதும் ஒரு அதிகப்படியான அன்பை வெளிக்காட்டுவதை காணலாம்.இது இயற்க்கை.


ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான்,அதுவும் உண்மையான காதல் என்றால் அவளை திருமணம் செய்ய வேண்டும்,அவளுடன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்க்கு அடிப்படையாக இருக்கும்.நீண்ட கால பந்தத்தை எதிர்நோக்கி அதனோடு பின்னிப்பிணைந்த பல எதிர்பார்ப்புகள் தான் அந்த காதல் என்ற பந்தம் மூலமாக ஆரம்பிக்கிறது.

பெண்ணுக்கு தந்தை எத்தனையோ உதவிகளை செய்திருக்க கூடும்.அதிகப்படியான பாசத்தை கொட்டியிருக்க கூடும்.ஆனால் அந்த பெண் காதல் என்று வந்துவிட்டால்,ஒரு கட்டத்தில் சுயமாக ஒரு முடிவெடுப்பது அவசியமாகிறது.பாசமான தந்தை என்றால் தந்து மகளின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதில் நிச்சயம் அக்கறை இருக்கத்தான் செய்யும்.அதை புரிந்துகொண்டு அதற்க்கேற்றால் போல் பேசிப்பார்ப்பது அவசியம்.கடைசி தருணத்தில் கூட துணிவு வராதவர்கள் காதலிப்பதில் பயனில்லை.இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரலாம் என்று முதலே தெரிந்து கொண்டு தானே காதலிக்க தொடங்குகிறீர்கள்.
-----------------
தந்தை மீது பாசம் வைப்பது தவறு என்று கூறவில்லை.ஒரு பொண்ணுக்கு தன் வாழ்வில் பல கட்டங்களில் தந்தையின் அரவணைப்பு தேவைப்படுகிறது.ஒரு மகள் பல வழிகளில் தந்தையின் அரவணைப்பை எதிர்பார்க்கிறாள்.




1 .தந்தையின் பாதுகாப்பு மகளுக்கு தேவைப்படுகிறது.


மகளுக்கு தந்தையின் பாதுகாப்பு என்பது பல வழிகளில் உருவாக்கம் பெறலாம்.பெண்கள் சிறு பராயமாக இருக்கும் போது உடல் சார்ந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் வளரும் போது மகளின் தன்னம்பிக்கை,அறிவு வளர்ச்சியில் தந்தை உறுதுணையாக இருப்பது அவசியமாகிறது. ஒரு தந்தையின் வழிகாட்டல் ஏன் அவசியமாகிறது என்பதற்கு அடுத்து நான் தரப்போகும் தரவுகளே பதில் கூறும்.

-14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 % 'க்கும் அதிகமான பெண்கள், தந்து காதலன் கோபப்படுவான் என்கின்ற பயத்தில் அவசியமற்ற/தேவையில்லாத செக்சுவல் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.
-அண்ணளவாக 12 %'மான இளம் பெண்கள் வற்புறுத்தி கட்டாயத்தின் பெயரில் செக்ஸ் உறவுகளில் ஈடுபடுத்தப்படுகிறனர்.
-35 வீதமான கல்லூரி,காலேஜ் பெண்கள் இரண்டு வாரங்களுக்கு அதிகமான காலத்துக்கு ஏதாவது ஒரு கவலை,நம்பிக்கையற்ற தன்மைகளினால் அவதியுறுகிறனர்.
- 11 வீதமான பெண்கள் தற்கொலை பற்றி சிந்தித்தோ,அல்லது முயற்சித்தோ இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Group of beautiful girls drinking wine by yekophotostudio - Stock Photo

இந்த மாதிரியான எண்ணிக்கைக்குள் தனது மகளும் வராமல் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தந்தைக்கும் அவசிய கடமையாகிறது.தந்தையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்ற பெண்கள் தற்கொலை முயற்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது என்கிறது மேல் கூறிய ஆய்வு.

2 . தந்தை தன் மீது பாசம் கொண்டிருக்கிறார் என்று அறிய பெண் விரும்புகிறாள்.

தந்தை ஒருவரின் மகள் மீதான அன்பு மகளை நல்வழிப்படுத்துகிறது. ஒரு திறமையான தந்தை தனது சிறிய மகள் சிறிய பல பிரச்சனைகளில் சிக்குப்படுவதை தவிர்க்க வைப்பதன் மூலம் வளரும் போது மகளின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உறுதுணையாக அமைகிறார்.மேலும்,

-தந்தையின் அன்பும் ஆதரவும் அணைவணைப்பும் ஒரு மகளின் மனநிலையை, சுயதிறனியல்களை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகிறது.
தந்தையின் அன்பை பெறும் மகள் வெகு சீக்கிரம் இன்னொரு ஆணின் அன்பை எதிர்பாக்க ஆரம்பிக்கும் வேகம் குறைகிறது.
இந்த மாதிரியான மகள்கள் பதின்மவயது கர்ப்பங்கள், செக்சுவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக குறைவாகவே காணப்படுகிறது.
இன்னொரு உறவுக்குள்(அது சாதாரண/செக்சுவல்) நுழைவதை தீர்மானிப்பதில் தந்தை/தந்தையுடன் தொடர்புடைய விடயங்கள் ரொம்பவும் செல்வாக்கு செலுத்துகிறது என்று 76 வீதமான பெண்கள் கூறுகிறனர்.



தனது மகளுக்கான எல்லைகள் வரைமுறைகளை வைத்து தந்தை வளர்ப்பதன் மூலம், தனது காதலுக்காக, காதலனை சந்திப்பதற்காக என்று எதிர்கால வாழ்க்கை தொடர்பான தீர்மானங்களை மிகவும் சிந்தித்து கவனமாக, மிகவும் பெறுமதியுள்ளதாக மகள்கள் எடுத்துக்கொள்கிறனர் என்று கூறப்படுகிறது. தன் மீதான நம்பிக்கை பெறுமதிகள் இதன் மூலம் குறித்த மகளுக்கு அதிகரிக்கிறது. இதனால் தன் மீது அதீத கவனமும் பெறுமதியும் எடுத்துக்கொள்ளும் எந்த மகளும் ஆபத்துக்குரிய செக்சுவல் நடவடிக்கைகளிலோ.,போதைவஸ்துக்கள், மதுபான பாவனைகளிலோ ஈடுபடும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து கொள்கிறது. தனக்கு தானே ஒரு எல்லைகளை வகுத்து செயல்ப்பட இந்த தந்தையின் மகள் மீதான செல்வாக்கு அவசியமாகிறது.

3 . தந்தையின் ஈடுபாடு அவசியம்


தந்தை வெறுமனே அன்பு செலுத்துகிறேன் என்று கூறுவதோடு மட்டுமல்லாது ஈடுபாட்டுடன் கூடிய ஒரு அரவணைப்பையே ஒரு மகள் தந்தையிடம் இருந்து எதிர்பார்க்கிறாள். குறிப்பிட்ட சில நேரம் தந்தை தன்னோடு இருப்பது அவசியமென ஒரு மகள் சிந்திக்கிறாள். மகளின் திறமைகளை பற்றி பேசுவதும், மகிழ்ச்சியான தருணங்களில் அதை பகிருவதும் சோகமான சந்தர்ப்பங்களில் பங்கெடுப்பதும் தந்தையின் கடமையாகிறது. மகள் "விரும்பும்" நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்துதல் வேண்டும். மகளுடன் செலவழிக்கும் ஒவ்வொரு கணப்பொழுதும் அவளின் எதிர்காலத்தை திறம்பட தீர்மானிக்கும் நிமிடங்களாகின்றன. இப்போது முதலிடும் ஒவ்வொரு நிமிடங்களும் பிற்காலத்தில் நிச்சயம் ஒரு நன்மையை குறிப்பிட்ட தந்தைக்கு கிடைக்க செய்யும் என்பது நிதர்சனம்.
----------

சரி என்ன தான்செய்தாலும் தந்தை சம்மதிக்கமாட்டார் என்றால் அடுத்த கட்டத்தை சிந்திக்க வேண்டும்.இல்லை எனக்கு அப்பா தான் முக்கியம் சம்மதிக்காவிடில் பரவாயில்லை கடைசி வரைக்கும் அவரோடு இருந்து விடுகிறேன் அல்லது அவர் காட்டும் மாப்பிள்ளையையே கட்டிக்கிறேன் என்று காதலித்த பின்னர் முடிவெடுக்கும் பெண்கள் தயவு செய்து என் முன்னால் வாருங்கள்.ஜெயில் சென்றாலும் பரவாயில்லை என்று சுட்டுத்தள்ளிவிடுகிறேன்.




உன்னையே நம்பி ஒருத்தன் இருக்கிறான் என்று சிந்திக்காமல் எப்போதும் தனது நலனையே சிந்திக்கும் சுயநலவாதிகளுக்கு காதல் என்கின்ற பந்தம் தேவையற்றது.அனைத்து பெண்களும் இவ்வாறு தான் என்று கூறவில்லை.ஆனால் இத்தகைய மடத்தனமான பெண்கள் பலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது நிச்சயமான உண்மை.

காதலில் ஏமாற்றுபவர்கள் பெண்கள் தான் என்று ஆண்கள் அதிகளவு கோஷம் இடுவதற்கு இப்படியான பெண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.உங்களால் காதலுக்கோ, காதலிப்பவனுக்கோ அவமானம் இல்லை.முதலில் உங்களை மாதிரி பெண்கள் இருப்பது பெண்கள் சமுகத்துக்கு தான் அவமானம்.திருந்துங்கள் பெண்களே.

நீங்கள் மேஜர் என்று குறிப்பிட்டு பதினெட்டு வயதை ஓட்டு போடும் வயதாக நிர்ணயித்தமைக்கு காரணம்,அந்த வயதுக்கு பின்னர் ஒரு பெண்ணோ ஆணோ சுயமான முடிவுகளை எடுக்க மனம் பக்குவமடைந்து விடும் என்பதனாலேயே.அரசாங்கத்துக்கே தெரிகின்ற விடயம் உங்களுக்கு தெரியாமல் போகுமா?தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் சில முக்கிய முடிவுகளை எடுத்து தான் ஆகவேண்டும்.அல்லது எந்தவித "வாழ்க்கை சிக்கல்களுக்குள்"ள்ளும் சிக்கிவிடாத மாதிரி உங்கள் வாழ்க்கையை பார்த்துக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

காதல் என்னும் சொல் காதலிப்பவர்களாலேயே வர்ணம் பூசி அழகாக்கப்படுகிறது;அவர்களாலேயே கறுப்பு சாயம் பூசி சாகடிக்க்கவும்படுகிறது!!



Post Comment

Sunday, June 3, 2012

கொள்ளையடிக்கும் செலீனா கோமேஸ்-ஒரு கனவுக்கன்னி!!


                                      


கண்ணை கொள்ளை கொள்ளும் ஒரு இளம் சிட்டு...பதின்ம வயதுகளில் தனது அழகின் உச்சத்தால் பலர் இச்சையை கவர்ந்த ஒரு அழகி..இல்லை பேரழகி..செலீனா கோமெஸ்(Selena Marie Gomez )! ஜூலை மாதம் இருபத்தி இரண்டாம் தேதி 1992 ஆம் ஆண்டு அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள Grand Prairie என்னும் இடத்தில் மேடை நடிகையான Amanda Dawn "Mandy" Teefey 'க்கும் Ricardo Joel Gomez 'க்கும் மகளாக பிறந்தார். செலீனாவின் தந்தை ஒரு மெக்சிக்கன் அமெரிக்கனாகவும் தாயார் இத்தாலியை பூர்வீகமாகவும் கொண்டவர்..செலீனா ஐந்தே வயதாகி இருக்கையில் அவளது பெற்றோர் விவாகரத்து பெற்றனர்.தாயாரின் கவனிப்பில் வளர்ந்த செலீனாக்கு அவளது பதின்னான்காம் வயதில் இன்னொரு அப்பா கிடைத்தார்.ஆம் மேடை நடிகையான அவளது அம்மா இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டார்.


சிறு வயதில் இருந்தே தாயார் நாடகங்களுக்கு தயார் பண்ணுவதையும் ,நடிப்பதையும் பார்த்து வளர்ந்த செலீனாவுக்குள்ளும் ஒரு நடிகை வளர்ந்திருந்தாள்.இதை செலீனாவே பல நேர்காணல்களில் கூறி இருக்கிறாள்.செலீனா தனது நடிப்பு வாழ்க்கையை தனது ஏழாவது வயதிலேயே ஆரம்பித்தாள்.முதலாவது பாத்திரம் Barney & Friends என்கின்ற ஒரு தொலைகாட்சி நாடகத்தில் அமைந்தது.இந்த நாடகம் ஒன்று முதல் எட்டு வயது வரையான சிறுவர்களை மையமாக கொண்டு நடாத்தப்பட்டது.அதற்க்கு பின்னர் Spy Kids 3-D: Game Over ,Walker, Texas Ranger: Trial By Fire போன்ற தொலைகாட்சி நாடகங்களிலும் சிறு சிறு வேடமேற்று நடித்திருந்தால் செலீனா. 2004 ஆம் ஆண்டு புகழ் பெற்ற டிஸ்னி சேனலால் செலீனாவின் திறமை கண்டுபிடிக்கப்பட்டு அந்த சேனலுக்காக பல நாடகங்களில் தோன்றி நடித்தார்.

2007 ஆரம்பத்தில் டிஸ்னி சேனலின் தொடர் நாடகமான Wizards of Waverly Place 'இல் மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றாக நடித்தார்.அந்த காட்சி 5 .9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து பெரிய ஹிட் நிகழ்ச்சியானது.அதிலிருந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத்தொடங்கினார் செலீனா.இந்த டிவி ஷோ'க்காக நான்கு பாடல்களை ரெக்கோர்ட் செய்தார் செலீனா.அவற்றில் ஒன்று பாடல் Wizards of Waverly Place என்கின்ற அந்த டிவி ஷோ'வின் ஆரம்ப பாடலாக மாறியது.

2008'இல் "Cruella de Vil" என்கின்ற திரைப்படத்துக்கு தீம் பாடலை உருவாக்கினார்.மேலும் இதே ஆண்டில் தனது பதினாறாவது பிறந்த தினத்தை கொண்டாடும் முன்பு,"Tinker Bell "("Fly to Your Heart"போல மேலும் பல படங்களுக்கு இசை அமைத்தார் செலீனா.. இதே ஆண்டில் தான் "Hollywood Records"என்கின்ற டிஸ்னி கம்பனியுடன் இசை ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார்.சிறு குழந்தைகள் செலீனாவின் இசைக்கு அடிமையாகின.போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை "Eight Hot Kid Stars To Watch" என்கின்ற பட்டியலில் செலீனாவை ஐந்தாவதாக வரிசைப்படுத்தி பெருமைப்படுத்தியதுமல்லாமல் பல திறமைகளை தன்னகத்தே கொண்ட இளம் நட்சத்திரம் என்று அடையாளப்படுத்தியது.


2009 'இல் செலீனா தனது சொந்த மியூசிக் பான்ட் ஒன்றை உருவாக்கினார்.செலெனா கோமஸ் & தி சீன் என்ற ராக் இசைக்குழு கோமஸ் வாய்பாட்டு, எத்தன ராபர்ட் கிடார் வாசிப்பு, ஜோய் கிளெமென்ட் பின்னணி குரல், கிரேக் கார்மன் டிரம் (அயல் நாட்டு மத்தளம்), மற்றும் டேன் போர்றேஸ்ட் விசைப்பலகை ஆகிய இசைக் கலைஞர்கள் அடங்கிய இசைக்குழுவாகும்அந்த பான்ட்'இன் முதல் ஆல்பமான "Teen pop "ஐ "Hollywood Records"ஐ 2009 இல் வெளியிட்டது. 


செலீனாவின் முதல் படமான "Ramona & Beezus "2010 ஆம் ஆண்டு வெளிவந்து பல நல்ல விமர்சனங்களை பெற்றது.September 17, 2010 இல் தனது ம்யூசிக் பான்ட் மூலம் இரண்டாவது ஆல்பமான " A Year Without Rain "ஐ வெளியிட்டார்.அது 66 ,000 பிரதிகளை விற்று சாதனை படைத்தது என்றால், அவரது மூன்றாவது ஆல்பமான "When the Sun Goes Down " 78 ,000 பிரதிகளை விற்றதோடு மட்டுமல்லாது ஆல்பங்களின் ரேட்டிங் பட்டியலான  Billboard chartஇல் மூன்றாம் இடத்தை பிடித்தது.இப்படி இருக்கையில் இந்த வருட ஆரம்பத்தில் தனது பேஸ்புக்கில் 'சிறிது காலம் நான் இசையை விட்டு பிரிந்திருக்க போகிறேன்,இந்த வருடன் முழுவதும் நடிப்பில் கவனம் செலுத்த போகிறேன்.எதிர்காலத்தில் யாரோடு வேண்டும் என்றாலும் எனது இசை அமையலாம்" என்று கூறி இருந்தார். 

ஆகஸ்ட், 2009 ஆம் ஆண்டில் செலீனா, தனது 17வது வயதில், யுனிசெப்பின் இளமையான விளம்பர தூதர் என்று தற்போது வரை பெயரெடுத்துள்ளார். இவர் தனது முதல் அதிகாரபூர்வ களப்பணி தூதுவராக, செப்டம்பர் 4, 2009 ஆம் ஆண்டில், ஒரு வார பயணமாக கனாவிற்கு, மிக மோசமாக பாதிப்படைந்த குழந்தைகளின் முக்கிய தேவைகளான சுத்தமான குடிநீர், உணவு, கல்வி மற்றும் உடலாரோக்கியத்திற்கு கைகொடுத்திட சாட்சியமாக சென்றார்.சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடத்தைகளை ஊக்கப்படுத்தும் அமைப்பான டிஸ்னி'ஸ் ஃபிரெண்ட்ஸ் ஃபார் சேன்ஞ்சில் இணைந்திருந்தார், அத்துடன் டிஸ்னி சேனலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பொதுச்சேவை அறிவிப்புகள் நிகழ்ச்சியிலும் செலீனா தோன்றினார்.

 

செலீனாவின் சில சுவாரசிய குறிப்புகள்: *செலீனா ஒரு சுத்தமான மோதிரத்தில் "உண்மை காதல் காத்திருக்கும் (True love waits)" என்று செதுக்கி தனது பனிரெண்டாவது வயது முதல் அணிந்திருக்கிறார்.

*வீட்டில் செலீனாவை சுற்றி எப்பவும் செல்லப்பிராணிகளாக ஐந்து நாய்க்குட்டிகள் காணப்படும்.

*செலீனா நடித்த "பார்னீ அண்ட் பிரண்ட்சின்" பகுதி 7,ஐ சில காலம் நிறுத்தி வைத்தார்கள். இதன் காரணமாக, கோமஸ் நடித்த பகுதிகள் அவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை ஒளிபரப்பாக வில்லை. இதன் காரணமாக அவர் பார்னீ அண்ட் பிரண்ட்சை தனது ஐந்தாம் வகுப்பில் மேற்கொண்டாரா அல்லது தனது ஒன்றாம் வகுப்பில் மேற்கொண்டாரா என்பதைப் பற்றி மெல்லிய வாதங்களும் / குழப்பங்களும் எழுந்தன.

*பிரபல பாடகியான செலீனாவின் பெயரையே பெற்றோர் இந்த குட்டி செலீனாக்கும் வைத்தனர்.இவளும் பாடகியாகி விட்டாள்!

*செலீனாவின் அடுத்த வெளிவர இருக்கும் ஆல்பம் ஒன்றுக்கு பிரிட்டனி ஸ்பேர்ஸ் (Britney Spears)மூன்று பாடல்களை எழுதி இருக்கிறார்!

*இப்போது "ஜஸ்டின் பீபர்" இன் காதலியாக இருக்கிறார் செலீனா.இதற்காக பல மரண அச்சுறுத்தல்களை எதிரிகொண்டார் செலீனா ஜஸ்டின் பீபரின் ரசிகர்களால்.ஆனால் ஜஸ்டின் பீபர் செலீனாவை விட இரு வயது இளையவர் என்பதும் "ஓரினசெயர்க்கையாளர்"(Gay ) என பல்வேறு தரப்பினரால் நக்கல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.



 


குறிப்பு:
இந்த பதிவை எழுத வைத்தது செலீனா கோமெஸ் மீதான ஒருவித ஈர்ப்பு என்றால் மறுப்பதற்கில்லை.திறமையும் அழகும் ஓரிடத்தே கொண்ட பெண்கள் மிக குறைவு.அந்த வகையில் செலீனா அழகால் கிறங்க வைக்கிறார்,திறமையால் ரசிக்க வைக்கிறார்.இந்த பதிவின் பின்னர் இன்னும் பலர் செலீனாவின் விசிறிகள் ஆவார்கள் என்பது வெளிப்படை :P


செலீனா கோமெஸ் பற்றி google 'இல் தேடினால் விக்கிப்பீடியாவை தவிர்த்து எந்த லிங்க்'கும் உங்களுக்கு கிடைக்காது.இன்றிலிருந்து என்னோடைய இந்த பதிவு கிடைக்கும் என்பதில் ஒரு சந்தோசம்...ஹிஹி ஜொள்ளிலும் ஒரு ஷொட்டு!!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...