Saturday, May 21, 2011

இலங்கை பதிவர்களே:::ஏன் இப்படி??

இந்திய பதிவுலக நண்பர்கள்.

நான் பதிவுலகில் ஓரளவுக்கு நானும் ஒரு பதிவர்னு சொல்லுற
அளவுக்கு என்னையை வளர்த்தெடுத்த பெருமையெல்லாம்
இவர்களையே சாரும் என்று பெருமையாக சொல்லுவேன்.
பாரபட்சம் பார்க்காமல்,போட்டி பொறாமை பார்க்காமல்,
ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்காமல்,அனைவரையும் அரவணைத்து
தேவையான சமயத்தில் குட்டுப் போட்டு பெரும் செல்வாக்கு
செலுத்தியவர்கள் இவர்கள்.

தினசரி பதிவுகள் போட்டு கலகலப்பாக வைத்திருக்கின்றனர்
பதிவுலகை.
எனக்கு ஒரு இருபது கமெண்டுகள் வருமென்றால்,
அவற்றில் பதினெட்டு கமெண்டுகள் இவர்களால் தான்
எனக்கு வருகிறது.

எனக்கு தமிழ்மணத்தில் விழும் ஓட்டுகளில்,இன்ட்லியில் விழும்
ஓட்டுகளில் ஒன்று இரண்டை தவிர மிகுதி அனைத்தும்
இவர்களுக்கே சொந்தம்!!
சி பி செந்தில்குமார்,சதீஸ்குமார்,விக்கி உலகம்,மனோ,சண்முகவேல்,
ஹாஜா மைதீன்,ஓட்டவடை,பாலா என்று பல நண்பர்கள்
எனக்கு இருக்கிறார்கள் இந்தியாவில்(விடுபட்டவர்கள் மன்னிக்க).
உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் இன்று வரை!!

இலங்கைப் பதிவர்கள்.

நேரில் பழகும்போது அன்பானவர்கள்..
சிறந்த நல்லுறவு இன்னமும் இருக்கிறது அனைவருடனும் எனக்கு..
நான் கடந்த பதிவொன்றில் குறைபட்டுக்கொண்ட மாதிரி,
இவர்கள் ஒழுங்காக தொடர்ச்சியாக பதிவுகள்
எழுதுவதில்லை..
மாதத்துக்கு ஒரு ஆறு எழு பதிவுகள் குறைந்தது??
இந்த ஆண்டு மொத்தமாக ஒரு 30 -35 பதிவுகள் போட்டவர்கள்
கை உயர்த்துங்கள் பார்ப்போம்??
கிழமைக்கு ஒன்றுப்படி இருபது பதிவாச்சும் ??

எனக்கு வரும் கமெண்டுகளில் ஒன்று இரண்டு
மட்டுமே இவர்களிடமிருந்து வரும்..
அதில் ஒன்று என்பது நண்பர் நிரூபன்(இளைய தளபதி)
இரண்டாவது...அது மாறுபடும் ஜீ,மதிசுதா,ஜனா,நேசன்,கார்த்தி
மருதமூரான்,மதுரன் என்று.
(ஓட்டவடை இலங்கையில் இல்லாதமையால் இதற்குள்
அடக்கவில்லை நான்)

அதே போல வாக்குகளில் ஒன்று இரண்டு தான் எனக்கு
இலங்கையில் இருந்து கிடைப்பது..
நேரில் சிலர் பாராட்டுவார்கள் அது நன்றாக இருந்தது,
இது நன்றாக இருந்தது என்று..
ஆனால் அவர்கள் வந்து சென்றதற்கு அடையாளமே
இருக்காது எனது ப்ளாக்'இல்!!


இலங்கையில் அடிக்கடி இப்போது பதிவெழுதுவது
நிரூபனும்,ஜீயும், நானும் தான்.(உண்மை தானே இதில் என்ன
வெட்கம்).
மிக முக்கிய குறிப்பு:இன்று பத்து மணியுடன் முடியும் இருபத்திநான்கு மணி நேரத்தில் பரவலாக சில பதிவுகள் வந்திருப்பதை அவதானித்தேன்,சந்தோசம்!!

என்னைப்போலவே நிரூபனும்,மதிசுதா,ஜனா,ஜி'யும் சார்ந்திருப்பது
இந்திய நண்பர்களைத்தான் முற்றும் முழுதாக.
அவர்கள் இன்று தமிழ் மண நட்சத்திரமாய் மிளிர்வதற்கு காரணம்
அவர்கள் தான் என்பேன்..ஆனால் என்ன கவலை,
பல இலங்கை பதிவர்களுக்கு நிரூபன் யார் என்று கூட இன்றுவரை
தெரியாது!!தமிழ்மணத்தில் இருபத்தைந்து ஓட்டுகளை சர்வ சாதாரணமாக பெறுகிறார் நிருபன்!!
களுவாஞ்சிக்குடி சிவசங்கர் கூட அவ்வாறே.!!

அப்படி என்ன இவர்களுக்கு நேரமில்லையா பதிவெழுத..
சரி அப்படிஎன்றே வைத்துக்கொள்வோம்..
ஆகக்குறைந்தது எழுதும் ஒருவர் இவருக்காவது
கமெண்டுகள்,வாக்குகளை செலுத்தலாமே??
அதற்க்கு கூடவா தயக்கம்??

என்று அனைவரும் தங்கள் கட்டுக்குள் இருந்து
வெளிவந்து ஆக்கபூர்வமாக நடக்கின்றார்களோ,அன்று தான்
இலங்கை பதிவுலகம் உருப்படும்..(கடினமான வார்த்தையோ??பரவாயில்லை)

இதை நான் இங்கு எழுதுவதனால் பலர் என் மீது கோபப்படக்கூடும்..
ஆனால் என் காதுப்படவே பலர் இதைப்பற்றி கதைத்திருக்கின்றனர்,
பதிவுலகோடு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள்..வாசகர்கள்.
ஏன் இந்த மாதிரி நடக்கிறது என்று..
கோபப்படுவோர் கோபப்படட்டும்..இது சொல்லவேண்டிய கட்டாயப்பாடு..
பலர் மனதில் இருப்பதை நான் வெளிக்கொணர்கிறேன் அவ்வளவே!!

முன்னர் இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் எனது பதிவுகளை
அப்டேட் செய்துகொண்டிருந்தேன்..ஆனால் சிறிது காலமாக இல்லை..
காரணம் அப்டேட் செய்து என்ன பிரயோசனம் என்று தான்..
இலங்கையில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள்??
அப்டேட் செய்துவிட்டால் மட்டும் அனைவரும் வந்து அட்டெண்டன்ஸ்
தரப்போகிறார்களா..இல்லைதானே..
இதை வாசிப்பவர்கள்(இலங்கை பதிவர்கள்) உங்கள் கருத்தை
கூறுங்கள் பின்னூட்டத்தில்..உங்கள் நியாயங்களை.
கூறாவிட்டாலும் நான் எந்த வகையிலும் பாதிக்கப்படப்போவது
இல்லை..
பேசாமல் லூஸ்'ல விட்டாலும் சரி..சொல்ல வேண்டியதை நானாவது
வெளிக்கொணர்கிறேன்!!
(படம் நகைச்சுவைக்காக மட்டுமே!)

குறிப்பு:இதனை எந்தவித அகங்காரத்துடனோ,யார்மீதிலும் தனிப்பட்ட
கோபங்களை காட்டும் நோக்கத்துடனோ எழுதவில்லை.
ஒரு நியாயமான வாதத்தையே நான் முன்வைக்கிறேன்.
அனோனிகளாக யாரும் கமென்ட் பண்ணாதீர்கள்...பப்ளிக்காய் சொல்லமுடியாது என்றால் காரணங்களை மெயிலிலோ,அல்லது எனது தொலைபேசியூடோ கூறுங்கள்..
பெரும்பாலானோர் பேஸ்புக்'கில் நண்பர்களாக இருப்பதால் அங்கு எனது தொலைபேசி
இலக்கம் இருக்கிறது.

நன்றி..கவலைகளுடன்,

Post Comment

120 comments:

நர்மதன் said...

வடை

நர்மதன் said...

NO COMMENT

Anuthinan S said...

உங்கள் பதிவு உங்கள் பார்வையில் நியாயமானதும், கொஞ்சம் அதிக எதிர்பார்ப்புகளையும் கொண்டது!!!

பதிவுகள் இடுவது என்பது ஒவ்வருவருக்குமான கட்டாய வேலை இல்லையே!!! அவர்கள் நியமம் வகுத்து நாளொன்றுக்கு ஒரு பதிவோ, மாதத்துக்கு 30 பதிவு போடுவத்ர்க்கோ??? பதிவுகளை போடுவது அவரவர் விருப்பம்!!!!

அதுபோல,
//தமிழ்மணத்தில் இருபத்தைந்து ஓட்டுகளை சர்வ சாதாரணமாக பெறுகிறார் //
பிறகு எதுக்கு ஐயா நிருபன் அண்ணாவுக்கு வேறு யாரும் இலங்கையில் இருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்?????

இலங்கை - இந்திய பதிவர்களை எந்த இடத்திலும் ஒப்பீடு செய்யாதீர்கள். இங்கு எல்லாம் செய்பவர்கள்தான் பதிவுகளையும் எழுதி கொண்டு இருக்கிறார்கள். எனவே, அவர்களை எதுவும் சொல்லவும் முடியாது.

//என்று அனைவரும் தங்கள் கட்டுக்குள் இருந்து
வெளிவந்து ஆக்கபூர்வமாக நடக்கின்றார்களோ,அன்று தான்
இலங்கை பதிவுலகம் உருப்படும்..//

இதற்க்கு அர்த்தம் எனக்கு புரியவில்லை மைந்தன் அண்ணா!!! பதிவு எழுதுவது சுதந்திரமானது எனும் பொது, கட்டுகள் எப்படி வருகிறது?????

உங்களிடம் சிலமுறை வெளிப்படையாக கதைத்து இருப்பதால், இதை தங்களிடம் வெளிப்படையாக பதிவு செய்வதில், தவறு இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் ஆசை,எதிர்பார்ப்பு நியாயமானதே!!! ஆனால், கொஞ்சம் அதிகமானது!!!

ஜீ... said...

வணக்கம் பாஸ்!!

ஓட்டுப் போட்டாச்சு (இன்ட்லி, தமிழ்மணம்) ஹி ஹி!

நான் கமென்ட் இடும் எல்லாப்பதிவுகளிலும் ஓட்டுப் போடுவதை ஜனநாயகக் கடமையாக செய்துவருகிறேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்! (அப்பாடா ஒரு சான்ஸ் கிடைச்சுது!) :-)

ஜீ... said...

யோவ் இன்ட்லில இனைய்ய்யா!! உன்ன நம்பி கமெண்டை முதல்ல போட்டுட்டேன்! அவ்வவ்! ஏண்டா ஏன்???

Ashwin-WIN said...

காத்திரமானதும் காரமானுதுமான பதிவுதான்.. இருந்தும் யாரையும் வற்புறுத்த முடியாதுதானே இப்படி இத்தனை பதிவுதான் போட வேண்டும் என்று. சிலர் மாதத்தில் முப்பது நாளும் பதிவிடுவர் அனால் சில மாதத்தில் ஒரு ஐந்து பதிவுதான் இடுவர். ஆனால் அந்த ஐந்தும் அந்த முப்பதுக்கு சமனாக இருக்கலாம். சில வேளை ஒருவருடைய ஒரு பதிவுகூட முப்பது பதிவுக்கு சமனாக இருக்கலாம்.. ஆனால் என்னை இந்த வகைக்குள்ள எல்லாம் அடக்கிவிட முடியாது. உண்மையில் நான் ஒரு சோம்பேறி. உள்ள தொழில் காணாதெண்டு பகுதிநேர தொழில்வேற.. மெனக்கெட்டு இருந்து பதிவு போடா முடியலையா என்னதான்யா பண்ண. அந்த வகையில மைந்தன் நீ கிங்கு தான்யா.

மைந்தன் சிவா said...

/Anuthinan S said...//
உங்கள் ஆசை,எதிர்பார்ப்பு நியாயமானதே!!! ஆனால், கொஞ்சம் அதிகமானது!!//

ஆமாம் கொஞ்சம் அதிகமானதே..ஏனென்றால் இலங்கைப்பதிவர்கள்,அடிக்கடி பழகுபவர்கள் நண்பர்கள்,தெரிந்தவர்கள் என்ற முறையில் அவர்களிடம் அளவுக்கு அதிகமாக கொஞ்சம் நான் எதிர்பார்க்கிறேன் அனு!!

மைந்தன் சிவா said...

//ஜீ... said...
யோவ் இன்ட்லில இனைய்ய்யா!! உன்ன நம்பி கமெண்டை முதல்ல போட்டுட்டேன்! அவ்வவ்! ஏண்டா ஏன்???//

கொஞ்சம் மர்க்கர் பண்ணுது பாஸ்

மைந்தன் சிவா said...

//Ashwin-WIN said...
காத்திரமானதும் காரமானுதுமான பதிவுதான்.. இருந்தும் யாரையும் வற்புறுத்த முடியாதுதானே இப்படி இத்தனை பதிவுதான் போட வேண்டும் என்று. சிலர் மாதத்தில் முப்பது நாளும் பதிவிடுவர் அனால் சில மாதத்தில் ஒரு ஐந்து பதிவுதான் இடுவர். ஆனால் அந்த ஐந்தும் அந்த முப்பதுக்கு சமனாக இருக்கலாம். சில வேளை ஒருவருடைய ஒரு பதிவுகூட முப்பது பதிவுக்கு சமனாக இருக்கலாம்.. ஆனால் என்னை இந்த வகைக்குள்ள எல்லாம் அடக்கிவிட முடியாது. உண்மையில் நான் ஒரு சோம்பேறி. உள்ள தொழில் காணாதெண்டு பகுதிநேர தொழில்வேற.. மெனக்கெட்டு இருந்து பதிவு போடா முடியலையா என்னதான்யா பண்ண. அந்த வகையில மைந்தன் நீ கிங்கு தான்யா.//

ஆமாம் அது சரி....அந்த ஐந்து பதிவாச்சும் மாதா மாதம் வந்தால் சந்தோசம் தானே!!
வைகாசி மாதம் வரையில் இருபத்தைந்து பதிவுகள் வந்திருக்கும்!!

மருதமூரான். said...

‘அமலாபால்’ மைந்தன்….!

உங்களுடைய ஆதங்கமும் வருத்தமும் மிகவும் தெளிவாக விளங்குகின்றது. நான் நினைக்கிறேன் தாங்கள் பதிவுலகத்துக்கு வந்து 2 வருடங்களுக்குள் தான் இருக்கும் என்று. ஆனாலும், மிகப்பெரிய நட்பு வட்டத்தை (இலங்கை, இந்தியா மற்றும் நீங்கள் பதிவுகளில் குறிப்பிடும் சூடான், உகண்டாவிலும்) பதிவுகளை எழுத வந்தபின்னர் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

கருத்து மற்றும் அனுபவ பகிர்தல்களில் ஈடுபடுகின்ற போது ஆரோக்கியமாக சமூகம் சாத்தியமாகிறது என்ற நிலைமைக்கு அமைய பதிவுலகம் நல்ல பல ஆரோக்கியமான விடயங்களை கொண்டிருக்கிறது. அதுபோல, பல நேர விரயங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது.

நகைச்சுவை, நையாண்டி பதிவுகள் தப்பில்லைத்தான். ஆனால், அவை அளவு மீறிப் போகின்ற பொழுதே அதன் மீதான எரிச்சல் ஏற்படுகின்றது. அதனால்தான், அப்படியான பதிவுகளுக்கு நான் அதிகம் பின்னூட்டுவதில்லை. ஆனாலும், அவ்வப்போது மனது ரசிக்கின்ற பதிவுகளுக்கு பின்னூட்டி வந்திருக்கிறேன். அதுதவிரவும், யார் எழுதினாலும் சிறந்த பதிவு என்று வாசிக்கின்ற பொழுதில் எனக்குப்பட்டால் எந்தத் தருணத்திலும் பாராட்ட தவறியதில்லை. அது, பின்னூட்டங்கள், தொலைபேசி அழைப்புக்கள், நேரில் என்று தொடர்கிறது.

ஆனால், பதிவொன்றை வாசிக்காமல் விட்டுவிட்டு வாசித்த மாதிரியே என்னால் எந்தத் தருணத்திலும் நடிக்க முடியாது. சிலர் அப்படி இருக்கிறார்கள். வாசித்திருந்தால் அதுதொடர்பில் கதைப்பேன். இல்லையேல், இல்லை என்று ஒப்புக்கொள்வதில் என்ன தவறு. அதுதாண்டியும், எந்த தருணத்திலும் இலங்கை- இந்திய பதிவர் என்ற வரையறைக்குள் வருவதில் நான் உடன்பாடு கொண்;டவனில்லை.

மிகமுக்கியமாக பதிவுகளை நான் எழுதுவது மிகவும் குறைவு. அதற்கு நேரமில்லை என்ற காரணமெல்லாம் பொருத்தமற்றது. ஆனாலும், ஏனோ எழுத ஆர்வமில்லாமல் இருக்கின்றது. அத்துடன், எனக்குத் தெரிந்து நான் யாருக்கும் அண்மைக் காலத்தில் ஓட்டு(பதிவுலகில்) போட்டது கிடையாது. ஏனெனில் என்னுடைய வலைப்பக்கத்திலேயே குறித்த ஓட்டுப்பட்டைகளை வைக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை.

சரி தங்களின் ஆதங்கத்தினை கருத்தில் கொண்டு இனி நல்ல பதிவுகளுக்கு ஓட்டுப்போடவும் முடிவெடுத்திருக்கிறேன்.

தப்சி, நமீதா, அமலாபால் என்று நீங்கள் மொக்கை போட்டாலும் அவ்வப்போது நல்ல காத்திரமான பதிவுகளையும் போடவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

நன்றி,

‘மருதமூரான்’ புருஜோத்தமன் தங்கமயில்.

மைந்தன் சிவா said...

//மருதமூரான். said...
அமலாபால்’ மைந்தன்….!
//
அந்த பாதிப்பில இருந்து வெளியே வரேலையா பாஸ்??ஹிஹி

மைந்தன் சிவா said...

//மருதமூரான். said...//

ஆக்கப்பூர்வமான பதிவுகள் இனிமேல் வரும் என்பதை கூறிக்கொள்கிறேன்...
நன்றிகள் உங்கள் பயனுள்ள கருத்துகளுக்கு!!

நிரூபன் said...

அதில் ஒன்று என்பது நண்பர் நிரூபன்(இளைய தளபதி)//

அண்ணாத்த, நாஞ்சில் மனோ! எடுங்க அந்த அருவாளை. நான் இளைய தளபதி இல்லை. வயசான ஆளு..
அவ்)));

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன பாஸ் ஏதாவது பிரச்சனையா..நான் எதாவது உதவட்டுமா..ஹிஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மருதமூரான் ஒரு பதிவையே இங்கே போட்ருக்காரே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ் வலைப்பதிவர்கள் கருத்து சொல்ல வேண்டியதில்லையோ #டவுட்டு

நிரூபன் said...

Anuthinan S said...அதுபோல,
//தமிழ்மணத்தில் இருபத்தைந்து ஓட்டுகளை சர்வ சாதாரணமாக பெறுகிறார் //
பிறகு எதுக்கு ஐயா நிருபன் அண்ணாவுக்கு வேறு யாரும் இலங்கையில் இருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்?????

சகோ, உங்களின் இந்தக் கருத்துக்களில் ஒரு சிலவற்றை மறுத்துரைக்கிறேன்.
வாக்குகளினை நான் எதிர்பார்க்கவில்லை. என் மனத் திருப்திக்காகவும், எம் மண், மக்களின் வாழ்வியலையும் தான் முதன்மைப் படுத்தி எழுதுகிறேன் சகோ. எம் உறவுகளிடம் ஓட்டுக்களை எதிர்பார்க்கா விட்டாலும், கருத்துக்களை, விமர்சனங்களை எதிர்பார்ப்பது இயல்பான ஆசையாகத் தானே இருக்க முடியும். எங்கள் பதிவுகளைப் பற்றி அருகே இருப்பவர்கள் சொல்லும் போது தானே, குறை நிறைகள், பிழைகளைக் கண்டறிந்து எம் எழுத்துக்களை திருத்த முடியும்.

மைந்தன் சிவா said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்ன பாஸ் ஏதாவது பிரச்சனையா..நான் எதாவது உதவட்டுமா..ஹிஹி//ஹிஹி வெட்டு கொத்து ஒண்ணுமில்ல பாஸ்..

திறந்த கருத்து பரிமாற்றம் அவ்வளவே...

நீங்களும் கமென்ட் பண்ணலாம் !

akulan said...

பாஸ் நீங்க போடுறீங்கள் தான அது போதும்.......

மைந்தன் சிவா said...

//நிரூபன் said...
எம் உறவுகளிடம் ஓட்டுக்களை எதிர்பார்க்கா விட்டாலும், கருத்துக்களை, விமர்சனங்களை எதிர்பார்ப்பது இயல்பான ஆசையாகத் தானே இருக்க முடியும். எங்கள் பதிவுகளைப் பற்றி அருகே இருப்பவர்கள் சொல்லும் போது தானே, குறை நிறைகள், பிழைகளைக் கண்டறிந்து எம் எழுத்துக்களை திருத்த முடியும்//

காத்திரமான கருத்து!!
இதற்க்கு யார் என்ன கூறப்போகிறீர்கள் நண்பர்களே??

akulan said...

ஓடும் போடுறன்....(சில நேரம் இட்டலிக்கு போக பஞ்சியில போடுறது இல்லை)

A.சிவசங்கர் said...

நண்பா என் கருத்து படி நமக்கு தோணுதோ அத நம்ம போஸ்ட் பன்னுரம் .யாரும் கட்டாயம் இத பார்க்கணும் ,என்டோ அவங்க வோட் பண்ணனும் என்டோ இல்ல மச்சி உண்மையில் உங்களை போலவே எனக்கும் இந்திய நண்பர்கதான் அநேகமான கமென்ட் பண்ணுவது .இலங்கை பதிபவர்கள் பண்ணுவது இல்லை என்றில்லை குறைவு ...... யாருடைய ஆதரவும் எமக்கு தேவை இல்லை என்றில்லை .வேண்டும் ..ஒரு குழுவாக அமைத்து போஸ்ட் பண்ணியவுடன் அதை வாசிக்காமல் வோட் குத்தும்/வடை வாங்கும் அந்த கேவலமான சமூகத்துக்குள் அடங்க எனக்கு விருப்பம் இல்லை ....

மைந்தன் சிவா said...

//.சிவசங்கர் said...
நண்பா என் கருத்து படி நமக்கு தோணுதோ அத நம்ம போஸ்ட் பன்னுரம் .யாரும் கட்டாயம் இத பார்க்கணும் ,என்டோ அவங்க வோட் பண்ணனும் என்டோ இல்ல மச்சி உண்மையில் உங்களை போலவே எனக்கும் இந்திய நண்பர்கதான் அநேகமான கமென்ட் பண்ணுவது .இலங்கை பதிபவர்கள் பண்ணுவது இல்லை என்றில்லை குறைவு ...... யாருடைய ஆதரவும் எமக்கு தேவை இல்லை என்றில்லை .வேண்டும் ..ஒரு குழுவாக அமைத்து போஸ்ட் பண்ணியவுடன் அதை வாசிக்காமல் வோட் குத்தும்/வடை வாங்கும் அந்த கேவலமான சமூகத்துக்குள் அடங்க எனக்கு விருப்பம் இல்லை ....

//
நானும் அதை தான் கூறுகிறேன்..
கட்டாயம் கமென்ட் பண்ணுங்கள் ஒட்டு குத்துங்கள் என்றவில்லை...
ஆனால் எம்மவர்களின் கருத்துகள் எங்களை இன்னமும் ஊக்குவிக்கும் அல்லவா!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன், இதில் சொல்வதற்கு என்னிடம் நிறைய கருத்துக்கள் இருக்கின்றன! ஆனால் சொல்ல மனமில்லை! இலங்கைப் பதிவுலகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் இயங்கிவந்தது உண்மை! ஆனால் இன்று சோர்ந்து விட்டது! அதற்குரிய காரணம்........வேண்டாம் மைந்தன் எனக்கு எதையும் ஓபனாக சொல்லித்தான் பழக்கம்! அப்புறம் பிரச்சனை வந்திடும்!
அனால் ஒன்றே ஒன்று சொல்லுவேன்! நிரு, மதிசுதா, ஜீ, நீங்கள்......... உங்களது வெற்றிக்கு காரணம் " ஈகோவை விட்டெறிந்து எல்லோருடனும் உறவாடும் நற்பண்பு"
நீங்கள் ( இலங்கையில் ) சிலரது ஆசீர்வாதங்களையும், அங்கீகாரங்களையும் எதிர்பார்க்கிறீர்களா? ஹி ஹி ஹி........ அந்த ஆசையைக் கைவிடுங்கள்! அதெல்லாம் கிடைக்காது!
இலங்கை இலக்கியத்துறைக்கும் சரி, கலையுலகுக்கும் சரி ஒரு பாரம்பரியமும், தனித்துவமும் இருக்கிறது! அது என்னவென்றால், " மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு, இதயத்தை பூட்டிவைத்துக்கொண்டு, தொட்டதுக்கெல்லாம் ஸ்டாண்டட் பார்ப்பது"
இலங்கை ஸ்டாண்டர்ட் வாழ்க!!
சிவா, இதனை தூக்கி எறிந்து விட்டு, நல்லதொரு மொக்கைப் பதிவு போடுங்க!
இப்பவே சொல்கிறேன், உங்களது அடுத்த பதிவுக்கான,
" மொத வட எனக்கே "
ஹி ஹி ஹி ஹி !!!

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
.வேண்டாம் மைந்தன் எனக்கு எதையும் ஓபனாக சொல்லித்தான் பழக்கம்! அப்புறம் பிரச்சனை வந்திடும்//

எதுவா இருந்தாலும் ஓபினாக கதைக்கட்டுமேன்று தான் இந்தப் பதிவை போட்டேன்..
பார்க்கலாம் எத்தனை பேர் தங்கள் கருத்துகளை கூறுகிறார்கள் என்று!!

விக்கி உலகம் said...

மாப்ள நடத்து ஹிஹி!

NKS.ஹாஜா மைதீன் said...

இலங்கையோ இந்தியாவோ நாம் அனைவரும் தமிழர்கள்...பதிவுலகில் பிரிவு படாமலே இருப்போம்....நன்றி நண்பா...

யோகா.சு. said...

///"ஓடும்" போடுறன்....(சில நேரம் இட்டலிக்கு போக பஞ்சியில போடுறது இல்லை)//ஓமோம்,இப்ப கன வீடுகள் ஓடு போட வேண்டிய நிலமயில தான் இருக்கு!இட்டலிக்குப் போக பஞ்சியெண்டால் இடியப்பம்,கிடியப்பம் ஆரையும் பிடிச்சு வாங்குவிக்கிறான்?(சும்மா பகிடி.எழுத்துப் பிழையைப் பாத்து திருத்தி மறுமொழி சொல்லுங்கோ,அகுலனோ,அகிலனோ?)மைந்தன் சொல்வதில் நியாயமிருக்கிறது!பல பதிவர்கள் "காணாமல்" போய் விட்டார்கள் தான்!அந்த ரேடியோக்காரப் பொடியையும் காணேல்ல.ஓட்டுப் போட எனக்கும் ஆசை சிலவில்லாத வேல.சரி வருகுதில்ல! பாப்பம்.

Anonymous said...

எடக்குமுடக்கா தான் போய்க்கொண்டு இருக்கு போல ..இருந்தாலும் ஆதங்கம் நியாயமானதே..........

ராஜ நடராஜன் said...

//களுவாஞ்சிக்குடி சிவசங்கர் கூட அவ்வாறே.!!//

இது யாரு புதுசா:)அப்ப அசல் யாரு?

Anonymous said...

யோவ்! என்னை பார்த்தால் இலங்கை பதிவராய் தெரியல்லையா...))

மைந்தன் சிவா said...

//கந்தசாமி. said...//
மன்னிக்கணும் அண்ணே...
விடுபட்டுவிட்டது...
உங்களையும் இணைத்திருக்க வேண்டும்...மன்னிச்சூ...

கன்கொன் || Kangon said...

மைந்தன் வணக்கம்.

வாக்குகள், பின்னூட்டங்கள் பற்றிய பதிவு.
பொதுவாகவே இவற்றைப் பற்றி பெரியளவில் கருத்திற் கொள்ளாததன் காரணமாக எனக்கு பதிவின் பெரும்பகுதி முக்கியமானதாகப் படவில்லை.

மற்றும்படி பெரும்பான்மையான பதிவர்கள் தற்போது முன்பளவிற்கு வெட்டியாக இல்லை என்பதே உண்மை.
முழுநேர வெட்டியாக இருந்த நானே வெட்டியாக இல்லை எனும்போது மற்றவர்கள் எப்படி?
பெரும்பாலான பதிவர்களை சந்திப்பதானால் கூட நிறையக் காலத்திற்கு முன்பே சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது.
அத்துடன் பதிவு என்பதைத் தாண்டி ருவிற்றர், பேஸ்புக் என்பன கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகங்களாக மாறிக் கொண்டதும் ஒரு காரணம்.

நான் பொதுவாக என் விருப்பத்திற்கு ஏற்ற பதிவுகளை வாசிப்பதுண்டு. துரதிர்ஷ்ரவசமாக எனக்கு சினிமாப் பதிவுகளில் பெரிதாக ஈடுபாடில்லை, ஆகவே நீங்கள் இடும் பதிவுகளின் வகைகளும் இவற்றில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

நன்றி.

கன்கொன் || Kangon said...

இன்ட்லியில் வாக்குப் போட்டேன். ;-)

மைந்தன் சிவா said...

//கன்கொன் || Kangon said...//
கருத்துக்கு நன்றி..

மைந்தன் சிவா said...

நான் யாரையும் கட்டாயம் வந்து கமென்ட் பண்ணுங்க ஒட்டு போடுங்க என்று வற்புறுத்தவில்லை...
ஆனால் நாங்கள் எமக்கு ஒன்றும் செய்யாவிட்டால்,
THEN WHAT IS THE POINT TO BE A FORUM????

மதுரன் said...

உங்களுடைய ஆதங்கம் நியாயமானதே மைந்தன் அண்ணா..
ஆனால் வேலைப்பளுதான் பெரும் பிரச்சனை அநேக பதிவர்களுக்கு, தவிர நான் பதிவுலகிற்கு புதியவன்.எனக்கு ஒருசில இலங்கைப் பதிவர்களைத்தான் தெரியும். இந்த பதிவின் மூலமாக நிறைய இலங்கைப் பதிவர்களை அறிந்துகொண்டேன். நன்றி

தமிழ்வாசி - Prakash said...

இன்னையில இருந்து நான் உங்களை தொடர்கிறேன்..

Jana said...

No comment :(

மைந்தன் சிவா said...

//மதுரன் said...
உங்களுடைய ஆதங்கம் நியாயமானதே மைந்தன் அண்ணா..
ஆனால் வேலைப்பளுதான் பெரும் பிரச்சனை அநேக பதிவர்களுக்கு, தவிர நான் பதிவுலகிற்கு புதியவன்.எனக்கு ஒருசில இலங்கைப் பதிவர்களைத்தான் தெரியும். இந்த பதிவின் மூலமாக நிறைய இலங்கைப் பதிவர்களை அறிந்துகொண்டேன். நன்றி//

அப்பாடி உங்களுக்கு இலங்கை பதிவர்களை(சிலரை)இதன் மூலம் அறிமுகம் செய்திருக்கிறேன் என்றால் மகிழ்ச்சி!!

யாதவன் said...
This comment has been removed by the author.
யாதவன் said...

இலங்கை பதிவுலகில் புரட்சி ஏட்படுத்தும் சிவா தம்பி வாழ்க
கம்பஸ்கும் போய் சீமா வும் படிச்சுகொன்டு வெள்ளவத்தையை குத்தகைக்கும் எடுத்திட்டு அடிக்கடி ( மொக்கையோ சொத்தையோ ) பதிவும் போடுற சிவா க்கு எவ்வளவு திறமை இருக்கும் பொங்கி எழுபிறார்
பலன் கிடைக்கும்

மைந்தன் சிவா said...

//யாதவன் said...
இலங்கை பதிவுலகில் புரட்சி ஏட்படுத்தும் சிவா தம்பி வாழ்க
கிம்புசுக்கும் போய் சீமா வும் படிச்சுகொன்டு வெள்ளவத்தையை குத்தகைக்கும் எடுத்திட்டு அடிக்கடி ( மொக்கையோ சொத்தையோ ) பதிவும் போடுற சிவா க்கு எவ்வளவு திறமை இருக்கும் போன்க்கி எழுபிறார்
பலன் கிடைக்கும்//

பலன் கிடைக்குமா??ஹிஹி கிடைக்கும் ஆனா..

Subankan said...

எனது பின்னூட்டங்கள் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பிறகு நான் பின்னூட்டம் போடுவதை குறைத்துவிட்டேன். மன்னிக்க.

இன்ட்லியில் வாக்குப் போட்டாகிவிட்டது ;-)

குணசேகரன்... said...

எல்லாம் சரி..இன்னிக்கு என்ன பதிவு.
http://zenguna.blogspot.com

சி.பி.செந்தில்குமார் said...

இந்தியா, இலங்கன்னு ஏன்யா பிரிச்சுப்பேசரே?நாம் எல்லாரும் ஓரினம்

ஜீ... said...

ஹாய் பாஸ்! கொஞ்சம் பிசியாகிட்டேன் தான் ஒன்னும் சொல்லல! இப்போ...

1)இந்திய - இலங்கைப் பதிவர்:
நாங்கள் தமிழ்பதிவர்கள் - இதில், இந்திய, இலங்கைப் பதிவர் என்ற வேறுபாடுகள் தேவையில்லை! - என்று சொல்லிக் கொள்ள சந்தோஷமாக இருக்கிறதல்லவா? அப்படியே சொல்லிக் கொள்வோம்!!

ஆனால் என் மனதிலுள்ளதை நேர்மையாகக் கூறவேண்டுமாயின், எல்லோரையும் திறந்த மனதுடன் வரவேற்பவர்கள், ஊக்கப்படுத்துபவர்கள், பாராட்டுபவர்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு (இவர்களிலும் அதிகம் இந்தியர்களே) பதிவர்களே!

2)கமென்ட் , ஓட்டு :
ஓட்டு விஷயத்தில் நம்பிக்கை இருக்கோ இல்லையோ அது வேறு -ஆனால் இலங்கைப் பதிவர்கள் ஓட்டுப் போடுவதில்லை என்பது தான் எனது நம்பிக்கையும்!

ஒரு இலங்கைப் பதிவரின் பதிவொன்று பிரபலமானால் அதற்கு காரணம் இந்தியப்பதிவர்களே! - இதில் மாற்றுக்கருத்து இல்லை - சும்மா வேண்டுமானால் சப்பைக்கட்டு கட்டிக் கொள்ளலாம்!

ஆனால் கொடுமையைப் பாருங்க இந்தியப் பதிவர்காளால் கமென்ட், வோட்டுப் பெற்றுக் கொண்டு, இந்தியப் பதிவர்களுக்கு கமேண்டோ, வோட்டோ போடுவது கேவலமான விஷயம் போல சிலர் பேசிக் கொள்கிறார்கள்.-இது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது! புயல் வேகத்தில் பிரபலமான ஒரு பதிவர் மீது பலருக்கு பயங்கர 'காண்டு' இருப்பது அவர்களின் பேச்சில் புரிந்தது!

மைந்தன் சிவா said...

/

ஆனால் கொடுமையைப் பாருங்க இந்தியப் பதிவர்காளால் கமென்ட், வோட்டுப் பெற்றுக் கொண்டு, இந்தியப் பதிவர்களுக்கு கமேண்டோ, வோட்டோ போடுவது கேவலமான விஷயம் போல சிலர் பேசிக் கொள்கிறார்கள்.-இது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது! புயல் வேகத்தில் பிரபலமான ஒரு பதிவர் மீது பலருக்கு பயங்கர 'காண்டு' இருப்பது அவர்களின் பேச்சில் புரிந்தது!//
பயங்கர காண்ட்டா??
ஏன்யா ஒருத்தனோட முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுகிறீர்கள்??
முன்னேற்றத்துக்கு உதவாவிட்டால் கூட பரவாயில்லை...

மைந்தன் சிவா said...

//Subankan said...

எனது பின்னூட்டங்கள் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பிறகு நான் பின்னூட்டம் போடுவதை குறைத்துவிட்டேன். மன்னிக்க.

இன்ட்லியில் வாக்குப் போட்டாகிவிட்டது ;-)//

கருத்துக்கு நன்றி...

அத்துடன் கட்டாய வாக்களிப்பை நான் வற்புறுத்தவில்லை சகோ..

புரிந்திருக்குமென நினைக்கிறேன்..

கார்த்தி said...

தம்பி மைந்தன் சிவா உங்களுடைய சில கருத்துக்களுடன் உடன்படுகிறேன் சில கருத்துக்களுடன் உடன்படவில்லை.
உண்மையில் நான் முழுவதுமாக வாசிக்கும் பதிவுகளுக்கு நிச்சயம் பின்னூட்டம் போட்டுவருகிறேன். ஆனால் வாக்கு போடமுடிவதில்லை. ஏனெண்டால் நான் வாசிக்கும் பெரும்பாலான பதிவுகள் அலுவலகத்திலிருந்தே வாசிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் எல்லா ஓட்டளிக்கவேண்டிய வெப்தளங்களின் கணக்குகளையும் வாசிக்கும் நேரத்திலேயே login செய்து இருக்கமுடிவதில்லை. ஆனால் உங்கள் இந்தபதிவிலிருந்து நான் என்னை மாற்றி கொள்ளமுடிவுசெய்கிறேன். அத்துடன் ரசிக்கும் உங்களின் பதிவுகளுக்கும் வாக்கு போடுகிறேன் நிச்சயமாக. எல்லாக்கணக்குகளையும் திறந்து வைத்திருப்பது கடினம்தான் ஆனால் முயல்கிறேன்.

ஜீ... said...

என்னைபொறுத்தவரை வேலை வெட்டியில்லாத காலப்பகுதியில்தான் பதிவுலகிற்கு வந்தேன். இடையில் வேலை கிடைத்தபின் எழுதுவது குறைந்தது. அதற்கு முழுக்காரணம் எனது சோம்பேறித்தனம்! தவிர வேலைப்பளு, நேரமின்மை அல்ல! எவ்வளவோ பேர் கடுமையான வேலைகளிற்கிடையிலும் தரமான, ரசிக்கத்தக்க எழுத்துநடையில் (இது ரொம்ப்ப்ப முக்கியம் - நியூஸ் பேப்பர் மாதிரி மொண்ணையாக அல்ல) எழுதி வருகிறார்கள்! அவர்களெல்லாம் வேலை வெட்டி இல்லாமல் சும்மா சுத்திட்டு இருப்பவர்களல்ல!

வலைப்பூ என்பது டிஜிட்டல் டைரி. அதில் பதிவு போடுவது போடாதது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

அதுபோலத்தான் கமென்ட், ஓட்டுப் போடுவது அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் சார்ந்தே! ஊக்குவிப்பது, வரவேற்பது, அரவணைத்துச் செல்வது - இதெல்லாம் அவரவர் மனநிலை, மனமுதிர்ச்சி சார்ந்தது! - நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டியதல்ல!

கார்த்தி said...

அடுத்தவிடயம் நீங்கள் கூறுவதுபோல் எல்லா பதிவர்களும் நிறைய பதிவு போடவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. என்னை பொறுத்தவரை நல்லா கூட எழுதும்வரை விடயம் ஒன்று வராதுவிடின் கடமைக்காக எழுத வெளிக்கிடுறது இல்லை. அத்துடன் எழுத வெளிக்கிடும்போது் பல சிக்கல்கள் நேரம் ஓய்வாக கிடைப்பதில்லை. உலக கிண்ணத்தில் தொடங்கிய கிறிக்கெட் IPLவரை தொடர்கிறது. 11.30வரை மட்ச்போட்ட என்னெண்டு எழுதிறது.

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...//
ஆம் உண்மை..நான் கூறுவது,பல பதிவர்களை கண்டுக்காமல்,
ஊக்குவிக்காமலே சிலர் இருக்கிறார்கள்..
அவர்களை பற்றி...விமர்சனங்களும் கருத்துகளும் இன்னமும் பதிவர்களை ஊக்குவிக்குமல்லவா..
அவை எங்களிடமிருந்து வரும் போது இன்னமும் சிறப்பானவையல்லவா!!
மறுபடியும் கூறுகிறேன்,நான் கட்டாய வாக்களிப்பை கேட்கவில்லை...
உங்கள் கண்டுக்காமல் இருக்கும்,அலட்சிய,அதிமேதாவித்தனமான போக்குகளை
கைவிட்டு அனைவருடனும் சேர்ந்து நடவுங்கள் என்றே!!

மைந்தன் சிவா said...

//ஜீ//
அதே தான்...என்னுடைய கருத்து வந்து பலர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர்,
புதிய பதிவர்களை கண்டுக்காத போக்கு,அவர்கள் இவர்களுக்கு அங்கீகாரம் வழங்கினாலும்,இவர்கள் மறுபடியும்
கண்டுக்காமல் இருக்கும் அலட்சிய மனப்பாங்கு இவற்றை ஒழிக்கத்தான் நான் கேட்கிறேன்

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
அடுத்தவிடயம் நீங்கள் கூறுவதுபோல் எல்லா பதிவர்களும் நிறைய பதிவு போடவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. என்னை பொறுத்தவரை நல்லா கூட எழுதும்வரை விடயம் ஒன்று வராதுவிடின் கடமைக்காக எழுத வெளிக்கிடுறது இல்லை. அத்துடன் எழுத வெளிக்கிடும்போது் பல சிக்கல்கள் நேரம் ஓய்வாக கிடைப்பதில்லை. உலக கிண்ணத்தில் தொடங்கிய கிறிக்கெட் IPLவரை தொடர்கிறது. 11.30வரை மட்ச்போட்ட என்னெண்டு எழுதிறது.//

உண்மைதான்..

ஆனால் இவ்வாறே அனைவரும் நேரமில்லைஎன்று ஒதுங்கி சென்றுவிட்டால்,

என்ன ஆகும்??
எனக்கும் வேலை இருக்கிறது,படிப்பு இருக்கிறது,ஐ பி எல் கூட இருக்கிறது,ஏன் கால்ப்பந்தாட்ட பிரீமியர் லீக் கூட இருக்கிறது..

நான் பதிவு போடவில்லையா?

கார்த்தி said...

நான் எழுதும் பதிவுகளுக்கு பெரும்பாலும் பின்னுாட்டங்கள் நல்லா வருவதில்லை. ஒரு 3பின்னூட்டம் வந்தாலே பெரிய விடயம். அது பெரும்பாலும் குறிப்பிட்ட சிரிடமிருந்துதான் வரும். ஆனால் நான் எழுதும் பதிவுகளுக்கு இண்ட்லியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதுதான் எனக்கு உற்சாகம். நான் எழுதிய கடைசி 7பதிவுகளும் இண்ட்லி வாசகர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. அதிலிருந்து எனது பதிவுகளையும் வாசிக்கிறார்கள் என புரிந்து கொண்டேன். பின்னுாட்டங்களையும் எதிர்பார்க்கிறேன்தான் ஆனால் எம்மவர்களிடமிருந்து வராவிடின் கவலைப்பட்டது கிடையாது. உங்களது ஏக்கம் எனக்கு புரிகிறது. நீங்கள் எங்கள் பதிவர்கள் பலரின் பதிவுகளை வாசித்து பின்னுாட்டி அவர்களை ஊக்குவித்திருக்கிறீர்கள். ஆனால் அவ்வாறு மற்றவர்கள் உங்களிடம் நடப்பது இல்லாதிருக்கலாம் எல்லோரும் உங்கள் பொல இல்லைதானே. எல்லாத்தையும் freeஆ விடுங்க. எல்லா சரியாகிடும்.

கார்த்தி said...

/* அவர்களை பற்றி...விமர்சனங்களும் கருத்துகளும் இன்னமும் பதிவர்களை ஊக்குவிக்குமல்லவா..
அவை எங்களிடமிருந்து வரும் போது இன்னமும் சிறப்பானவையல்லவா!!
மறுபடியும் கூறுகிறேன்,நான் கட்டாய வாக்களிப்பை கேட்கவில்லை...
உங்கள் கண்டுக்காமல் இருக்கும்,அலட்சிய,அதிமேதாவித்தனமான போக்குகளை
கைவிட்டு அனைவருடனும் சேர்ந்து நடவுங்கள் என்றே!! */

மிகவும்சரியான கருத்து தம்பி இது. நானும் பலரை பாத்திருக்கிறேன். தங்களுக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்திவிட்டு அவர்களிற்கிடையில்தான் சிலர் வாழத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். வெளியிலிருந்து ஒருவர் எழுதும் சிறப்பான பதிவுகள் பல பெரியவர்களால் கவனிக்கப்படுவதில்லை. தங்கள் நண்பர்கள் என்று பார்க்காது அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். இப்படி சொல்வது பலரை காயப்படுத்தலாம். உங்கள்போல் இதுவும் எனக்கும் தோன்றியது. அதுதான் நான் இங்கே சொல்கிறேன். அத்துடன் நீங்கள் வாக்களிப்பதை வற்புறுத்தவில்லை என்று நான் பரிந்துகொண்டேன். தவறாக புரியிவில்லை. நல்ல பதிவுகளை ஊக்குவிக்கதான் நீங்கள் சொல்கிறீர்கள். உங்களின் நல்ல நகைச்சுவை பதிவுகளை வாசித்து நான் வாக்குபோடவிரும்பியும் வாக்கு போடாமல் விட்டிருக்கிறேன். அது தவறுதான். திருந்த முயற்சிக்கிறேன். அனைத்தும் சரியான காரணங்கள் சோம்பேறிதனம்தான். நீங்கள் இன்று எமது பின்னுாட்ங்களுக்கு விரவாக மறு மொழிகூறுவதிலிருந்து நீங்கள் எவ்வளவு விரைவாக Activeஆக இருக்கிறீர்கள் என புரிகிறது. உண்மையை சொன்னா எங்களில் பலர் அவ்வாறில்லை. அதுதான் பதிவுகள் வருவதில்லை போலும் பாப்பம் திருந்த முயல்கிறேன். தம்பி நீங்கள் அலுவலகம் செல்கிறீர்கள் மட்ச் PL football பாக்கிறீங்க எண்டு எல்லாம் எனக்கும் தெரியும். நீங்கள் extra ordinary நாங்க சோம்பேறிக்கூட்டம்.

ஜீ... said...

//புதிய பதிவர்களை கண்டுக்காத போக்கு,அவர்கள் இவர்களுக்கு அங்கீகாரம் வழங்கினாலும்,இவர்கள் மறுபடியும் கண்டுக்காமல் இருக்கும்//
அதனாலென்ன? நீங்களும் கண்டுக்காதீர்கள்! :-)

ரஹீம் கஸாலி said...

present

shanmugavel said...

இலங்கை போன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து வரும் எழுத்துக்களுக்கு தனித்தன்மை இருக்கும்.நிரூபன்,ஜனா ஆகியோரின் எழுத்துக்களில் இதை பார்க்கமுடியும்.அதிகம்எழுதினால் நல்லதுதான்.

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...//
புரிதலுக்கு நன்றிகள் பாஸ்!!

Rathnavel said...

நல்ல பதிவு.
இலங்கை பதிவர்களின் பட்டியல் முடிந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com
rathnavel-natarajan.blogspot.com
நன்றி - வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன்!

போனாப் போவுது சில விஷயங்களை சொல்கிறேன்! இலங்கைப் பதிவுலகம் இவ்வளவு தாழ்ந்து போனதுக்கு காரணம் நேரமின்மையோ, வேறு ஊடக சாதனகளோ அல்ல! அது சும்மா பம்மாத்து!

உண்மையான காரணம் தமிழகப் பதிவர்களுக்கு முகம் கொடுக்க முடியாமையே ஆகும்! அவர்களிடம் இருக்கும் திறமை இலங்கைப் பதிவர்களிடம் இல்லை என்பதே உண்மையாகும்! ஒரு விஷயத்தை எழுதும் போது கவர்ச்சியாக, சுவையாக எழுதும் திறன் யாரிடமும் இருப்பதாக ( ஒருசிலரை தவிர ) தெரியவில்லை!

ஜாலியான சினிமா விமர்சனத்தை கூட, கொடுந்தமிழில் எழுதி தொலைக்கிறார்கள்! சிலரது ப்ளாக் படிப்பதும் ஒன்றுதான், வர்த்தமானி வாசிப்பதும் ஒன்றுதான்! ஹி ஹி ஹி ஸ்டாண்டர்ட் டை மெயின்டைன் பண்ணுகிறார்களாம்!

அடுத்தது, தமிழகப் பதிவர்கள் எப்போதுமே தங்களை தாழ்த்தியே பதிவுகளில் எழுதுவார்கள்! அதனால் தான் உயர்ந்து நிற்கிறார்கள்! அடுத்தவர்களுக்கு கமெண்டு போடும்போது கூட, ஈகோ பார்க்கமாட்டார்கள்! " பெருக்கத்து வேண்டும் பணிவு " என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்!

நம்பர் ஒன் பதிவராக இருக்கும் செந்தில்குமாரோடு பழகிப்பாருங்கள்! ஈகோவா? கிலோ என்னவிலை என்று கேட்பார்!

அவருக்கு கமெண்டு போடும் போது,

" யோவ் பன்னாட, இன்னாயா நெனைச்சுக்கிட்டு இருக்கே? இதெல்லாம் ஒரு பதிவு! தூ "

என்று ஒரு கமென்ட் போட்டுப்பாருங்கள்! அதற்கு செந்திலின் பதில் இப்படி இருக்கும்,

" அண்ணே மன்னிச்சுக்குங்க! அடுத்த முறை சரியா பதிவு போடா ட்ரை பண்ணுறேன் "

நண்பர்களே, இப்படி கமென்ட் போடுவதால் செந்திலுக்கு என்ன குறைந்து விட்டது! இன்னும் செந்தில் மீது அன்பும் மரியாதையும் தான் கூடுகிறது!

இதே கமெண்டை இலங்கை பதிவர் ஒருவருக்கு போட்டுப்பாருங்கள்! ஹி ஹி ஹி ......... !!!

அத்துடன் ஏதாவது பிழை, குற்றம் சொல்லிப்பாருங்கள் கடைசிவரைக்கும் ஏற்றுக்கொள்ள் மாட்டார்கள்! தங்களை நிறுவவே முயல்வார்கள்! பக்கம் பக்கமாக விளக்கம் சொல்வார்கள்! மன்னிப்புக் கேட்டாலோ, பிழையை ஒத்துக்கொண்டாலோ கரைஞ்சு ஊத்துண்டு போடுமா?

இந்த டாச்சர் வேண்டாம் என்றுதான் நான் இந்திய நண்பர்களுடன் பழகிவருகிறேன்! அவர்கள் என்னிடம் அடுத்தவனைப் பற்றி குறைகள் சொல்லி, கோள் மூட்டுவதில்லை! அவர்களுடன் பழகுவதால் பிரச்சனைகளும் வருவதில்லை! நாளும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!

பதிவு போட நேரம் இல்லை என்பது சுத்த பம்மாத்து! சிவா, நான் காலை ஏழுமணிக்கு வேலைக்குப் போகிறேன். இரவு 11.30 கு வீட்டுக்கு வருகிறேன்! ராத்திரி ரெண்டு மணிவரை ப்ளாக் ல் மெனக்கேடுகிறேன்! தூங்குவது நான்கு மணிநேரம் மட்டுமே!

என்னை நன்றாக தூங்கி ஓய்வெடுக்கும் படி பன்னிக்குட்டி ராம்சாமியும், சி பி செந்தில்குமாரும் பலமுறை கண்டித்தார்கள்! நான்தான் சொல்வழி கேட்பதில்லை!

பதிவெழுத மேட்டர்கள் இருந்தால் நேரம் ஒரு பிரச்சனயே இல்லை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதிருக்க, அடிக்கடி பதிவுகளை எழுதும் படி நீங்கள் யாருக்கு அழைப்பு விடுக்கிறீர்களோ, அவர்கள் தங்கள் சக பதிவர்களை தட்டிக்கொடுத்து வளர்த்துவிடும் எண்ணம் உள்ளவர்களா? குற்றம் கண்டு பிடிக்க மட்டும், முண்டியடித்துக்கொண்டு வருவார்கள்! நல்லது செய்யும் போது பாராட்ட ஏனோ இவர்கள் முன்வருவதில்லை!

மைந்தன், இலங்கை பதிவுலகம் இப்போது யாரால் பரபரப்பாக இருக்கிறது தெரியுமா? நிருபனால்தான்! யார் என்ன சொன்னாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நிருபனின் வரவு, நிச்சயமாக பதிவுலகத்தில் ஒரு பெரிய திருப்பு முனை!

எத்தனை இலங்கைப் பதிவர்கள் நிருபனை பாராட்டி இருக்கிறார்கள்? எத்தனை பேர் அவருக்கு கமென்ட் போட்டு இருக்கிறார்கள்? ஒரு உண்மை சொல்லட்டுமா? நிருபனைக் கண்டு பலர் அச்சமடைந்துள்ளனர்! நிருவின் கிரியேட்டிவிட்டி மைன்ட் பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது!

பதிவர் சந்திப்புக்களுக்கு போக வேண்டாம் என்றும், பதிவர் சங்கங்களில் சேர வேண்டாம் என்றும் முழுக்க முழுக்க சுயாதீனமாக செயல்ப்படும்படியும் நிருபனுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்!

இலங்கையில் சங்கத்தில் சேர்ந்தால் அவ்வளவுதான்! சங்கத்துக்கு ஆயிரத்தி எட்டு ரூல்சுகள் போட்டு நாறடித்துவிடுவார்கள்!

எனவே சிவா, நீங்களும் இலங்கை பதிவுலகத்தை எப்படியாவது நிமிர்த்திவிடலாம் என்று பார்க்கிறீர்கள்! சிலரை மறுபடியும் வீரியம் கொள்ளச்சொல்கிறீர்கள்! நான் நினைக்கவில்லை உங்கள் ஆசை நிறைவேறும் என்று!

நீங்கள், ஜீ, நிரு, மதிசுதா உள்ளிட்ட மிக வெகு சிலரே திறந்த மனதோடும், பரந்த மனதோடும் நகைச்சுவை உணர்வோடும் பதிவுலகில் ஈடு படுகிறீர்கள்!

மற்றவர்கள் தங்களை மிகவும் சுருக்கிக்கொண்டு மிகவும் " ஸ்டாண்டர்ட் " ஆக இருக்கிறார்கள்! வீட்டில் பொண்டாட்டியுடன் கதைக்கும் போதுகூட, இலக்கணத்தில்தான் கதைப்பார்கள் போல! ஹி ஹி ஹி....!

இலங்கை பத்திரிக்கை உலகம், சஞ்சிகைகள் எதுவுமே உருப்படப்போவதில்லை! அவை ஒரு போதுமே இந்திய கலையுலகுக்கு நிகராக நிகராக வரப்போவதும் இல்லை!

மைந்தன் நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்!! நல்ல நிலைக்கு வருவீர்கள்!

sinmajan said...

நாம எல்லாம் தீர்க்கமாக வாக்களித்தேயாகவேண்டிய தேர்தல்களிலேயே வாக்களிப்பதில்லை..நம்மளைப் போய்... ;-)

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...//

நிருபனின் வரவு இலங்கை வலையுலகில் ஒரு திருப்புமுனை என்பது உண்மை தான் சகோ..
பிழைகளை சுட்டிக்காட்டி சமரசமாய் இருக்கலாமென்று நான் நினைக்கிறேன்..
அவர்கள் என்ன நினைக்கிறார்களோ எனக்கு தெரியாது..

இந்தப் பதிவை படித்த பின்னர் இலங்கையின் பல பாகங்களிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு
வந்தது இன்று..
அனைவரது கருத்தும் ஒத்துப் போகிறது..
ம்ம்...

ஆம் பதிவு போட சரக்கிருந்தால் பதிவு தானாக வரும் !!
நேரத்தை காரணம் காட்டாமல் வலையுலகில் ஆர்வம் இருந்தால்
தானாக பதிவு போட தூண்டும் !

ஆம் நானு சிபியை பல முறை திட்டி இருக்கிறேன்...அவரை மட்டுமல்ல,
பலரை...ஆனால் நகைச்சுவையாக எடுத்துவிடுவார்கள்..
அது அவர்கள் சிறப்பு...

இலங்கையில் அது கடினமானது தான்!!

Bavan said...

மைந்தன் அண்ணே,

போன வருடம் முழுவதும் வெட்டியாக இருந்தேன். அதனாலயோ என்னமோ அந்த நேரத்தில் ஒரு மாதத்துக்கு 15, 20 பதிவு கூட போட்டிருக்கிறேன்.

ஆனால் இப்போ 5 மணிக்கு வீட்ட வந்து கிறவுண்டுக்கு ஓடி, விளையாடி முடிச்சு பிரண்ட்சோட ஊர்சுத்திட்டு வீட்ட வந்து மெயில், பேஸ்புக், ருவிட்டரில் கொஞ்சநேரம் மொக்கை போட்டுட்டு படுக்க நேரம் சரியாக இருக்கும். இதுல எங்க பதிவுபோடுறது..:-)

சிலர் 4 மணிநேரம் மட்டும் தூங்கி பதிவு கமண்ட் போடுகிறார்கள்தான், ஆனால் நான் அந்தளவு திறமைசாலி இல்லை..:-)

என்னால் முடிந்தளவு அனைத்துப் பதிவுகளையும் வகுப்பில் இருந்தாவது வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்..:-)

தவிர கன்கொனின் கருத்துடன் அதிகம் ஒத்துப்போகிறதான் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் சொல்லாமல் போய் வருகிறேன்
நன்றி..:-)

Anonymous said...

machan unmiaya sollita so yarum kannduka matanga so dnt wry be happy mchi alwyas ur dialog "pooruvar poorradum thoorruvar thoorradum sell un valiyil" ullakatha tiritha try panntha machi any way althe best

மைந்தன் சிவா said...

//Bavan said...//
மீண்டும் மீண்டும் அதே கருத்தில் பார்க்காமல்,
நான் கட்டாய பதிவு போடுமாறும்,வாக்களிப்பது கட்டாயம் பற்றியும்
மட்டும் கூறவில்லை...
இன்னும் பல வேண்டுகோள்கள் இருக்கின்றன அதனுள்...
கார்த்தி கொஞ்சம் புரிந்து கருத்து கூறி இருக்கிறார் என்று நினைக்கிறேன்..
anyhw ,உங்கள் கருத்துக்கும் நன்றிகள்

Nesan said...

அண்ணா நீங்க நான் தேடும் விசயத்துக்கு சரியா வந்திருக்கிறீங்க முதலில் ஒரு பூச்செண்டு உங்களுக்கு !
இதைத்தான் நானும் பலகாலமாக ஜோசிக்கிறன் பதில் தெரியாமல் நிருவுடன் மூக்குடைப்பட்டவன் இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை போட்டி போட்டால் தான் கருத்து தெளிவு பிறக்கும் எழுத்து நடையை மெருகேற்றமுடியும் இதில்தான் நானும் அதிகம் மினக்கடுவது . 
 
நண்பா நான் இருப்பது ஒட்டைவடை வாழும் நாட்டில் என்னை தாயகம் உறவுகளில் சேர்த்தது ஏன் மனோவிற்கு கடப்பாரை கொடுக்கவா? இந்த விசயமாக இன்னும் பின்னால் வாரன் இப்ப வேலையில்!

எப்பூடி.. said...

எனக்கு ஒளவையாரை ரொம்ப பிடிக்கும்; அதிலும் அவங்க சொன்ன 'மதியாதார் முற்றம் மத்தித் தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும்' என்கின்ற வாசகம் ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் வாசிக்கனுமின்னு தோனுற பதிவுகளை வாசிக்க தவறுவதில்லை, அதேபோல பின்நூட்டமிடனுமின்னு தோணும் பெரும்பாலான பதிவுகளுக்கு பின்னூட்டமிட தயங்கியதில்லை, அப்படி தயங்கினால் அவர் பிரபல பதிவராக இருக்க வேண்டும் (பிரபல பதிவருக்கு பின்னூட்டினால் காக்க பிடிப்பதுபோல ஒரு பீலிங்கு :-)) இல்லை அவரொரு இலங்கை பதிவராக இருக்க வேண்டும் :-)


கடைசியா ஆரம்பத்தில ஒருநாளைக்கு ஒருபதிவு (மாசக்கணக்கா) போட்ட அனுபவத்தில சொல்லிறன், பதிவு எண்ணிக்கையைவிட அதிலுள விடயம்தான் முக்கியம், எப்பவாச்சும் மொக்கை ஓகே, எப்பவுமே மொக்கை ஓகேவா? :-))


ஏன் நீங்க கிரிக்கட் பதிவு எழுதுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது?


(ஏதாவது சொன்னது பிடிக்கலையின்னா sorry )

Nesan said...

 என்போன்றவர்கள் நாங்கள் சொல்லவரும் கருத்து எந்த நிலையில் பார்க்கப் படுகின்றது என்ற ஆதங்கம் இருக்கிறது புலம் பெயர் தேசத்து இன்னல்களை தாண்டி வலையில் வருவதே இளைப்பாரவும் நட்பைத் தேடியுமே!
இங்கு நான் பார்த்ததில் நிரூபன், மதி ,நீங்கள் ,மற்றவர்களிடம் நட்பு பாராட்டுவதில் முன்னாடி என்பது என் தனிப்பட்ட கருத்து ! சில விவாதங்களில் நீங்கள் கூட கருத்துக்கூறாமல் வடை கேட்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. !
நம்பதிவர்கள் பலர் ஏன் கானாமல் போகிறார்கள் !
தொழிநுட்ப பிரச்சனைகளை மற்றவர்களுடன் ஆராய உவ்விடம் வசதியிருக்கு நேரம் இருக்கு !இங்கு நாம் தெளிவு பெற காத்திருக்கவேண்டிய நிலை மின்னஞ்சல் இட்டாள் பதிலுக்கு காத்திருக்கனும் இப்படியானவற்றையும் தாண்டிவருவது நல்லபதிவுகளைப் படிக்கவே  
சோம்பலை நீக்கிவாருங்கள் வலையில் கருத்துக்களுடன் நண்பர்கள்,நண்பிகளே!

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் இதில் நல்லது கெட்டது சொல்லுமளவுக்கு எனக்கு தகுதியில்லை என்னால் வாரம் ஒரு பதிவும் ஒர கருத்துமே இடமுடிகிறது காரணம் செய்யும் வேலை காடு, மேடு , முட்கள் என அலைந்து விட்டு 4 மணித்தியால உறக்கமே கொள்ளும் ஒருவன் அப்படி நேரம் கிடைத்தாலும் என் காதலியை பார்க்க ஓடுவேன் (கிரிக்கேட்)...

ஆனால் ஒன்று வரும் போது நேராக இன்ட்லி, தமிழ்மணம், தமிழ் 10 போன்ற தளங்கள் சென்று எனக்கு வாக்கும் கரத்தும் இடும் அத்தனை பேருக்கும் வாக்கிடுவேன்...

சான்று - இந்தக் கணம் வரை இன்ட்லியில் இட்டுள்ள வாக்குகள்.. 10196 ஆகும்...

முன்னர் கருத்துக்களக்கும் வாக்குகளுக்கும் ஆசைப்பட்டதுண்டு இப்போ எதற்கும் ஆசையில்லை இந்த பதிவுலகத்தில் கிடைத்த மகத்தான உறவுகளே போதும்...

மைந்தன் சிவா said...

//Nesan said...//
நன்றிகள் பாஸ்...

மைந்தன் சிவா said...

//எப்பூடி.. said...//
ஆம் எழுதலாம் தான்,அதற்க்கு கொஞ்ச நேரம் வேண்டும்..
நான் அடிக்கடி மொக்கை பதிவுகள் போடக் காரணம்,
அதிகளவு நேரம் தேவை இல்லை,அதிக தளங்களை பார்த்து
ஆராய தேவை இல்லை..
நேரம் இல்லாத சமயங்களில் பதிவு போட தூண்டுதல் மொக்கைகளே..
நேரம் கிடைக்கும் பொது கிரிக்கட்,அந்த மாதிரி பதிவுகளை
போடுவதற்கு முயற்ச்சிக்கிறேன்..
நன்றி பாஸ் கருத்துகளுக்கு..

மைந்தன் சிவா said...

//♔ம.தி.சுதா♔ said...//
நன்றி மதி..

யாழ் கணினி நூலகம் said...

நீங்கள் குறைப்படுவது சரியே.இலங்கையில் பதிவுலக எழுத்தாளர்கள் வாசகர்கள் குறைவுதான்.அதற்கு காரணம் இது வெட்டி வேலை என்று சொல்லும் பலருடைய அதிமேதாவித்தனமும் ஒருகாரணம்.

FOOD said...

நல்ல சிந்தனைதான். இலங்கை என்றும், இந்தியா என்றும் பிரித்து பார்க்கவேண்டாமே!

சரியில்ல....... said...

மைந்தன்.. ரொம்ப ஸாரி......
உங்கள் ஊரில் இருந்து எனக்கு நிருபன் மட்டுமே நன்கு அறிவார்.... "ஓட்ட வட" சொல்வது போல இலங்கை பதிவர் பலருக்கு கமென்ட்,ஓட்டு போட்டு ஒரு பிரயோசனமும் இல்ல போல... இனி.. உங்கள் ஏரியா கு அடிக்கடி வருவேன் ...

கன்கொன் || Kangon said...

@ஓ.வ.நாராயணன்:

Fuck off.

// உண்மையான காரணம் தமிழகப் பதிவர்களுக்கு முகம் கொடுக்க முடியாமையே ஆகும்! அவர்களிடம் இருக்கும் திறமை இலங்கைப் பதிவர்களிடம் இல்லை என்பதே உண்மையாகும்! ஒரு விஷயத்தை எழுதும் போது கவர்ச்சியாக, சுவையாக எழுதும் திறன் யாரிடமும் இருப்பதாக ( ஒருசிலரை தவிர ) தெரியவில்லை! //

உங்கள் பார்வை அப்படி இருந்தால் அப்படியே இருந்து கொள்ளட்டும்.
அதைப்பற்றிக் கவலை கிடையாது.
ஆனால் பொதுமைப்படுத்தி இலங்கைப் பதிவர்களுக்கு திறமை கிடையாது என்று விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும், தகுதியும் கிடையாது.

// ஜாலியான சினிமா விமர்சனத்தை கூட, கொடுந்தமிழில் எழுதி தொலைக்கிறார்கள்! //

நாறல் தமிழை விட கொடுந்தமிழ் எவ்வளவோ மேலானது.
உங்களுக்குத் தமிழ் தெரியாவிட்டால் போய்த் தமிழ் படிக்கவும்.
உங்களுக்கு இருக்கும் குறைபாட்டை மற்றவர்களின் குறையாகச் சொல்லத் தேவையில்லை.

இலங்கை, தமிழகத்திற்கிடையில் காணப்படும் மொழிப்பாவனை வித்தியாசத்தை புரிந்து கொள்ளவும்.
உங்கள் மொழிநடை எங்களுக்கு சிலவேளைகளில் விளங்குவதில்லை. (தமிழகக் குப்பை சினிமாக்களால் எங்கள் மீது உங்கள் தமிழ் பரப்பப்பட்ட பின்னரும் இந்த நிலை. உங்களுக்கு எங்கள் தமிழை அறியவே வாய்ப்பு இருந்திருக்காது)
அதற்காக உங்கள் தமிழை நாங்கள் நாறல் தமிழ் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லவும்.

எங்கள் கொடுந்தமிழ் விளங்காவிட்டால்,
"Fuck off. Go and mind your own business rather than trying poke your nose in a matter you're not fully aware of."

மங்குனி அமைச்சர் said...

ரைட் மேட்டர் முடின்ச்சா ...... வாங்க காபி சாப்பிடப் போகலாம் ...... ஸ்வீட் எடு கொண்டாடு

இப்படிக்கு
ஓசியில் காப்பி சாப்பிட காத்திருப்போர் சங்கம்

கன்கொன் || Kangon said...

மற்றையது,
இலங்கையில் பதிவர் சங்கம் கிடையாது.

ஒரு கூகிள் குழுமம் தான் இருக்கிறது. அங்கு பதிவர்கள் எப்படிப் பதிவெழுத வேண்டும் என உத்தரவு வழங்கப்படுவதில்லை.
எழுதிய பதிவுகளை பகிர்வது மட்டும் தான்.

It is better to keep your mouth shut and appear stupid than to open it and remove all doubt.

Bavan said...

@ஓ.வ.நாராயணன்,

//இலங்கையில் சங்கத்தில் சேர்ந்தால் அவ்வளவுதான்! சங்கத்துக்கு ஆயிரத்தி எட்டு ரூல்சுகள் போட்டு நாறடித்துவிடுவார்கள்! //

அட.. இலங்கைப் பதிவர்களுக்கு சங்கமும் இருக்கோ? எங்கே அட்ரஸ் தருவீங்களோ போய் சேந்து நாசமாப் போகலாம் எண்டு யோசிக்கிறன்..:P

மங்குனி அமைச்சர் said...

FOOD said...
நல்ல சிந்தனைதான். இலங்கை என்றும், இந்தியா என்றும் பிரித்து பார்க்கவேண்டாமே///எனக்கும் அதே கருத்துதான் ...... பதிவுலகம் என்பது மொழி சார்ந்தது மட்டுமே ..... இனம் , இடம் சார்ந்தது அல்ல .... உலகத்தில் உள்ள எல்லா தமிழ்களும் தமிழ் பிளாக்குகளை படிக்கிறார்கள் , இதில் எங்கிருந்து இந்தியா , இலங்கை , மலேசிய , சிங்கப்பூர் போன்ற பிரிவுகள் வரும் ??? உங்களுக்குள்ளாக நீங்களே சுருக்கிக் கொள்ளாதீர்கள் ..... நான் இதுவரை எந்த பதிவரையும் எந்த ஊர் , எந்த நாடு என்று யோசித்துப் பார்ப்பது கூட கிடையாது .

மைந்தன் சிவா said...

//மங்குனி அமைச்சர் said..//
ஆமாம் அது சரி தான் பாஸ்..
இனிமேல் அந்த தவறு நடக்காது.

மைந்தன் சிவா said...

@கன்கொன் || Kangon/
இழிவான வார்த்தை பிரயோகங்கள் வேண்டாமே...
உங்கள் கருத்துகளை ஒவ்வொருத்தரும் திறந்த மனத்துடன் வெளிப்படுத்த தான்
ஒரு சந்தர்ப்பம் அமைத்தேன் நான்..
வெளிப்படுத்துங்கள்,தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹி.....ஹி.....ஹி.....நான் சொன்னன்! பக்கம் பக்கமா விளக்கம் தருவினம், சொல்லுறதை ஏற்றுக்கொள்ள மாட்டினம் என்று! இப்ப பாத்திங்களே விளக்கத்தை......!!
நண்பன் செந்தில்குமார் போல, ஒரு பத்து ஜோக் எழுதி ப்ளாக் ல போடச்சொல்லுங்கோ பார்ப்பம்! தில் இருந்தா?
உம்மணா மூஞ்சிகளே! உங்களை நினைச்சா ஒரே காமெடியா இருக்கு! ( நோ...... நோ..... காமெடி என்பது ஆங்கில வார்த்தை! தமிழ்ல சொல்லு )
ஹி.......ஹி......ஹி......!!!
இப்படியே விளக்கம் குடுத்துக்கொண்டே இருங்கோ! வெளங்கிடும்! மன்னிக்கவும் விளங்கிவிடும்!!
இப்பவே, இந்தக்கணமே, நல்லதொரு கிரியேட்டிவிட்டி உள்ள பதிவொன்றை எழுதி பப்ளிஷ் பண்ணிவிட்டு, இதே இடத்தில் வந்து லிங்க் குடுங்கோ! இது உங்களுக்கான பகிரங்க சவால்!!
உங்கள் கூட்டத்தை மறுபடியும் வந்து, ப்ளாக் ல ஒரு கலக்கு கலக்கச்சொல்லுங்கோ! திரட்டிகளில் முதன்மை இடத்துக்கு வரச்சொல்லுங்கோ! நிறைய ஹிட்ஸ் எடுக்கச்சொல்லுங்கோ!
இதுவும் உங்களுக்கான பகிரங்க சவால்!!
வாய்வீரம் காட்டுறத விட்டுட்டு, செயலில் காட்டுங்கோ! நீங்கள் கட்டாதவரைக்கும், " தமிழக பதிவர்களுக்கு நீங்கள் அஞ்சி நடுங்குகிறீர்கள் " என்பது நிரூபணமாகிக்கொண்டே இருக்கும்!!
இலங்கைப் பதிவுலகம் வீறு கொண்டு எழவேண்டும் என்றுதானே மைந்தன் சொல்லுறார்! அதைக்கூட புரிந்து கொள்ளத்தெரியாத உங்கள் இலக்கணத்தமிழ் வாழ்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

@கன்கொன் || Kangon/
இழிவான வார்த்தை பிரயோகங்கள் வேண்டாமே...
உங்கள் கருத்துகளை ஒவ்வொருத்தரும் திறந்த மனத்துடன் வெளிப்படுத்த தான்
ஒரு சந்தர்ப்பம் அமைத்தேன் நான்..
வெளிப்படுத்துங்கள்,தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து.///


மைந்தன்,அவரது கெட்டவார்த்தையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை! விடுங்க! விடுங்க!! சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு? ஹி.......ஹி......ஹி.......!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன், நான் வேலைக்கு போறன்! நேரம் போச்சுது! இரண்டு மணி நேரம் கழிச்சு, ஆன் லைன்ல வாறன்! அதுக்கிடையில உவையள் ஆராவது, நல்ல பதிவுகள் போட்டா எனக்கொருக்கா லிங்க் அனுப்புங்கோ! கமென்ட் போடவேணும்!

ஓகே கெளம்புறேன்

இராஜராஜேஸ்வரி said...

ஒரு நியாயமான வாதம் ...

எப்பூடி.. said...

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

கிரியேட்டிவிட்டி என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

(சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான்)

மைந்தன் சிவா said...

//எப்பூடி.. said...//
நீங்க அதிலே "boss "!!
உங்க பதிவுகள் தான் இங்கு அதற்க்கு அத்திபாரம் எப்பூடி!!

Subankan said...

//நண்பன் செந்தில்குமார் போல, ஒரு பத்து ஜோக் எழுதி ப்ளாக் ல போடச்சொல்லுங்கோ பார்ப்பம்! தில் இருந்தா?
//

நம்பர் ஒன் பதிவர் செந்தில்குமாருடைய பதிவு முகவரியைத் தரமுடியுமா? அவரைப்படித்தாவது எனக்கும் ஏதாவது எழுத வருகிறதா எனப் பார்க்கிறேன்.

கன்கொன் || Kangon said...

// @கன்கொன் || Kangon/
இழிவான வார்த்தை பிரயோகங்கள் வேண்டாமே...
உங்கள் கருத்துகளை ஒவ்வொருத்தரும் திறந்த மனத்துடன் வெளிப்படுத்த தான்
ஒரு சந்தர்ப்பம் அமைத்தேன் நான்..
வெளிப்படுத்துங்கள்,தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து. //

இழிவான வார்த்தைப் பிரயோகம்?
அதெது?
http://en.wikipedia.org/wiki/Fuck_off

ஒருவர் தனக்குச் சம்பந்தமில்லாத விடயங்களில் மூக்கை நுழைக்காமலிருப்பது சிறந்தது.
ஓட்ட வடை நாராயணன் போன்ற "அறிவாளிகள்" தங்களுக்கான ஒரு வட்டத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து அந்த வட்டத்துடன் உலகத்தை ஒப்பிட்டுக் கொண்டிருப்பது வரை அவர்களது உரிமை.
அதை பொதுவெளியில் முன்வைக்கும்போது அதற்கான பதில்கள் வழங்கப்படுவது கடமை.

முழுமையாகத் தமிழில் கதைக்க முடியாததை ஒருவருக்கு தனது பிழையாகத் தெரியவில்லை.
ஆனால் தான் அப்படி சொத்தைத் தமிழில் கதைப்பதை வைத்து ஒழுங்கான தமிழில் கதைப்பவர்களை கிண்டல் செய்ய முடிகிறது என்றால் அது மனநோய்.

// வாய்வீரம் காட்டுறத விட்டுட்டு, செயலில் காட்டுங்கோ! //

யாருக்கும் எங்களை நிரூபிக்கத் தேவையில்லை.
யானைகள் தங்களை நரிகளிடம் நிரூபிக்கத் தேவையில்லை.
(இங்கு யானை, நரி என்பது வெறுமனே ஒப்பீடு. யாரையும் நேரடியாக அழைக்கவில்லை அவ்வாறு)

வேண்டுமானால் சென்று பதிவெழுதுங்கள், ஒரு வட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அத்தோடு உங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுங்கள்.

உலகின் இரசிக்கக்கூடியது என்பதற்கு வரைவிலக்கணம் கிடையாது என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
உங்களால் அல்லது உங்களைப் போன்ற இரசனையுள்ளவர்களால் இரசிக்கப்படுவது தான் சிறப்பான பதிவு என்ற மாயையிலிருந்து வெளியே வாருங்கள்.

என் பார்வையில் வாசிக்கப்படத் தகுதியில்லாத உங்கள் பதிவுகளை, உங்கள் பாணியை மாற்றிக் கொள்ளச் சொல்லி நான் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டேன்.
அதையே நீங்களும் கடைப்பிடியுங்கள்.
நன்றி.
என் வார்த்தைப் பிரயோகங்களுக்காக நான் வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை.
நீங்கள் இதை விட மேலான வார்த்தைகளுக்கு பொருத்தமானவர்.
You deserve more than that.

மைந்தன் சிவா said...

//@கன்கொன் || Kangon////
ஆம் விக்கிப்பீடியாவில் பார்த்தேன்..
இரண்டு விதமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தை என்று
விளக்கம் தரப்பட்டிருக்கிறது...
"Fuck off is a phrase extended from the expletive fuck. It is an English expression, which in its most popular context, holds the meaning of distancing one's self from present circumstances. It is commonly used as a harsh replacement for "go away", but when used properly can have a subtext of masturbation implied.[1][2]"
என்ன எதுவோ,அது நல்ல வார்த்தையாக யாரும்(பெரும்பாலானோர்)
கருதுவதில்லை.
அதனால் தவிர்க்க சொன்னேன்...மன்னிப்பு கேட்க சொல்லவில்லையே..
அதை விடுத்து அதிமேதாவித்தனமாக கதைப்பதாக நினைத்து உங்களை
தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

கன்கொன் || Kangon said...

// அதை விடுத்து அதிமேதாவித்தனமாக கதைப்பதாக நினைத்து //

நான் சாதாரணமாகக் கதைக்கும் முறை உங்களுக்கு அதிமேதாவித்தனமாகத் தெரிந்தால் நான் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. ;-)
மற்றவர்களுக்காக என்னை அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியாது. ;-)

Mohamed said...

அடடே இங்கயும் ஓட்டு பிரச்சனையா என்றால் இனி ஒழுங்காக ஓட்டை போட்டு விடுகிறோம்
குழந்தை அழுகிறது.வூட்வோர்ட்ஸ் கொடுங்கோ.இப்போ சிரிகிறது.இனியும்.
அன்புடன் எம்.எம்.சர்புதீன்

அம்பாளடியாள் said...

நியாயமான கோவம்தான் எனக்கும் இதில சின்ன வருத்தம்
பிடிச்சிருக்கு அப்படி இப்படி என்று சொல்லிவிட்டு போறபோது
ஆசையா உங்க கையால ஒரு சின்னக்குட்டு அதுதாங்க எங்களை
ஊக்கிவிக்கும் உங்கள் ஒட்டு அதைப்போடாமல் போறது தப்புத்தானே?...
சிவா நல்லாக்கேளுங்க நான் உங்கள்பக்கம்!!!....வாழ்த்துக்கள் சகோதரரே
தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறட்டும்..பகிர்வுக்கு நன்றி....

♔ம.தி.சுதா♔ said...

உறவுகளுக்கு தாழ்மையான ஒரு அன்பு வேண்டுகோள் தயவு செய்து எனது பெயரை இங்கே பாவிக்காதிர்கள்... இதை பணிவாகவே கூறுகிறேன்... நான் பதிவர்களை படிப்பதில்லை அவர்கள் பதிவுகளை மட்டுமே படிக்கிறேன் (டெம்ளெட் கொமண்ட் உட்பட)....

இலங்கை பதிவுலகம் தொய்வடைந்ததற்கு எனக்கு காரணம் சரியாக தெரியாவிட்டாலும் என்னோடு நெருங்கிப் பழகிய தரங்கம் சுபாங்கன் போன்றவர் எழுதாமல் இருப்பதற்கும் கருத்திடாமல் இருப்பதற்கும் சரியான காரணம் தெரியும்...

♔ம.தி.சுதா♔ said...

மைந்தன் உங்களுக்கு இதை ஒரு நட்புடன் கூடிய எச்சரிக்கையாகவே சொல்கிறேன் அனானி கருத்து சந்தர்ப்பம் சிலவேளை உங்க புளொக்கிற்கு ஆப்பு வைக்கலாம்

நிரூபன் said...

சகோ, இலங்கைப் பதிவர்கள் இந்தியப் பதிவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதை விட எல்லோரும் தமிழ்ப் பதிவர்கள் என்று நோக்குவதே சாலச் சிறந்தது என்று நினைக்கிறேன். உங்கள் பதிவின் உட் கருத்தினைச் சரிவரப் புரிந்து கொள்ளாத பலரினால் எழுதப்படும் தவறான கருத்துக்களால் பதிவின் காத்திரத் தன்மை வேறோர் திசை நோக்கி நகர்கின்றது என நினைக்கிறேன்.

இலங்கைப் பதிவர்கள் எழுதவில்லை. அனைவரும் எழுத வேண்டும் எனும் உங்களின் ஆவலைத் தாண்டிப் பார்க்கையில், வலைப் பதிவென்பது பத்திரிகை போன்றதல்ல. உங்களின், எங்களின் தனி மனிதர்களின் தனி நபர் சொத்து. ஆகவே எழுதாமல் இருப்பதற்கு பின்னூட்டங்களின் மூலம் சக பதிவர்கள் கூறும் வேலைப் பளு முக்கிய காரணமாக இருக்கலாம், ஆனாலும் இவற்றை எல்லாம் தாண்டிப் பதிவர்களிடம் நீங்கள் ஆவலுடன் அவர்களின் பதிவுகளைப் படிக்க வேண்டும் எனும் கருத்தில் முன் வைத்திருக்கும் இப் பதிவு வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களிலும் நியாமிருக்கிறது. அதே நேரம் ஏனைய பதிவர்கள் கூறும் கருத்துக்களிலும் காத்திரத் தன்மை இருக்கிறது.

நிரூபன் said...

பல இலங்கை பதிவர்களுக்கு நிரூபன் யார் என்று கூட இன்றுவரை
தெரியாது!!தமிழ்மணத்தில் இருபத்தைந்து ஓட்டுகளை சர்வ சாதாரணமாக பெறுகிறார் நிருபன்!!/


நிரூபனை நீங்கள் உதாரணப்படுத்து இவ் இடுகையில் ஒரு சில இடங்களைச் சுட்டுவதை நினைக்கையில், நீங்கள் என்னை வைத்து காமெடி பண்ணுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது சகோ. வலைப் பதிவிற்குப் புதியவன். பாதுகாப்பு வலயத்தில் தஞ்சம் புகுந்திருக்கையில், தோள் மூட்டில் துளைத்த ரவை நீக்கப்படாமலே அச்சத்துடன் டைப் செய்து பதிவு போடும் நான், இந்த வருட ஆரம்பத்தில் தான் இந்த வலைக்கு வந்தேன். இங்கே கூறப்படும் பின்னூட்டங்கள் கருத்துக்களைப் பார்க்கையில் எனக்கு எல்லாமே புரியாத புதிர்களாகவும், புதியவையாகவும் இருக்கின்றன.


பதிவுலகில் நான் ஒரு நாற்றாகவே இருக்க விரும்புகிறேன்.  என் எழுத்துக்கள் ஒரு குறுகிய வாசகர் வட்டத்திற்குள் நிற்பதாகவே உணர்கிறேன் சகோ, இன்னும் பலரை என் பதிவுகள் சென்று சேர வேண்டும் என்பதே என் ஆவல்.


பதிவெழுத வந்த நோக்கம், போர்க் காலத்தில் விடுபட்டுப் போன காத்திரமான படைப்புக்களைத் தொகுக்க வேண்டும், எழுதப்படாத பல வரலாறுகளைத் தொகுத்து எழுத வேண்டும், அதுவும் எவரையும் சாராமல் அதாவது அரசினையோ, தவி புலிகளையோ சாராது நடு நிலையாக இலக்கியத் தரத்துடன் ஒரு நூலினை எழுத வேண்டும், அதற்கு முன்னோடியாக இந்தப் பதிவுலகில் அவற்றைப் பதிவு செய்து வாசகர்களின் கருத்துக்களைப் பெற வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த நோக்கத்திற்காகவே பதிவுலகிற்கு வந்தேன்.


நீங்கள் கூறுவது போல நான் வளர்ச்சியடையவில்லை, இப்பொழுதும் நாற்றாகவே இருக்க விரும்புகிறேன். என் பதிவுகள் இன்று வரை ஒரு குறுகிய வாசக வட்டத்திற்குள் இருப்பதை உணர உங்களின் இப் பதிவும் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே சகோ. இங்கே கருத்துக்களை எழுதியுள்ள நண்பர்களில் பலரின் பெயர்கள் புதியவை. அவர்களின் வலைகளுக்கு இன்று தான் முதன் முதலில் விஜயம் செய்தேன். இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கு நன்றிகள்.


பதிவுலகிற்குப் புதியவன் என்பதால், இப் பதிவோடு தொடர்புடைய வடிவில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை, ஓய்வு நேரம் இருக்கையில் பதிவினை எழுதி Draft இல் சேமித்து வைத்து, பின்னர் பதிவாக எழுதலாம். அது பதிவர்களின் விருப்பம் சகோ. அத்தோடு நாங்களும் யாரையும் வற்புறுத்த முடியாது. எங்கள் பதிவுகளினை வந்து படியுங்கள் எனும் தொனியில் அழைப்பு விடுக்கவும் முடியாது. ஓட்டுக்களைப் போடுங்கள் என்று கூறவும் முடியாது சகோ. பதிவுகள் பிடித்திருந்தால் நண்பர்கள், எம் உறவுகள் எங்களோடு வருவார்கள். ஆனாலும் ஒரு வாசகராக நீங்கள் அவர்களிடம் எதிர்பார்த்திருக்கும் கருத்துக்களில் நியாயம் தொனித்திருக்கிறது சகோ.

மைந்தன் சிவா said...

மதி,நான் வகுப்பிற்கு சென்றமையால் இதனை கவனிக்க முடியவில்லை..
அனோனிகளுக்கு கமென்ட் பண்ண நான் இடமளிக்க போவதில்லை..
பதிவர்கள் மட்டும் கருத்துகளை இடலாம்

கார்த்தி said...

என்னதான் positive negative கருத்துக்கள் இருந்தாலும். இலங்கைப்பதிவர்களை கேவலப்படுத்தி கருத்துக்கூறியவரின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உங்களிற்கு உங்கள் எழுத்துக்கள் பெரிது போல எம்மவர்களின் எழுத்துக்கள் எமக்கு பெரிதுதான். உங்களிற்கு பிழை எனபடுவது பலருக்கு சரியாக இருக்கலாம்!

மைந்தன் சிவா said...

//நிரூபன் said...//
உங்களை உதாரணப்படுத்தியது நக்கலடிப்பதற்க்காக இல்லை சகோ..
சாதாரண ஒரு பதிவரின் வளர்ச்சியில் மற்றையோர் எந்த வகையில் தாக்கம் செலுத்துகின்றனர் என்பதை காட்டவே..முக்கியமாக நம்மவர்கள் !!

நிரூபன் said...

நிருபனின் காத்திரமான பதிவுகளில் இதுவும் ஒன்று.ஆனால் படங்களில் இருப்பவர்கள் எல்லோரும் சிங்களப்...//

இப் பதிவில் அனானி நண்பர் - யாழ்ப்பாணத்தான் நிரூபனுக்கு, எனும் தொனியில், பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பெரு மதிப்பிற்குரிய பிரிவினைவாதப் புயலே, வணக்கம்! எழுத்துக்களை நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்களா, இல்லை எழுத்தாளனை அடையாளம் காண முயற்சி செய்கிறீர்களா சகோதரம்?

என்னுடைய சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி எனும் பதிவினை நீங்கள் படிக்காது படங்களை மட்டும் பார்த்து விட்டுக் கருத்துக்களை எழுதியுள்ளீர்கள். உங்களது இக் கருத்துக்கள் வாயிலாக வெளிப்படுவது பிரதேசவாதக் கருத்துக்களே என்பதில் மாற்றமில்லை. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் இல்லை, தற்போது பணி நிமித்தம் இருக்கும் இடம் தான் யாழ்பாணமே தவிர எனது சொந்த இடம் வேறு.

அந்தப் பதிவில் முற்று முழுதாக வட கிழக்குத் தமிழ்ப் பெண்களைப் பற்றித் தான் எழுதியுள்ளேன். சிக்களப் பெண்களைப் பற்றி எழுதவில்லை, இரண்டாவது விடயம் இலங்கையின் புராதன பெயர் ‘சிலோன்’. இப் பெயருக்கு இன்றும் தமிழக உறவுகளிடம் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஆகவே தான் சிலோன் பொண்ணுங்களை என என் பதிவில் தலைப்பிட்டேன்.

மற்றுமோர் விடயம், வட கிழக்குப் பெண்களைப் போய் நான் போட்டோ எடுத்து வலையில் போட கலாச்சார காவலர்கள் பொங்கி எழுவார்கள். என் வலையில் அப் பதிவில் உள்ள சிலோன் சிங்களப் பெண்களின் போட்டோக்கள் யாவும், இணையத்தில் இருந்து Srilankan Girls எனத் தேடி எடுக்கப்பட்டவையே.

பிரதேசவாதம் கடந்த 2009ம் ஆண்டோடு முடிந்த போரோடு ஒழிந்ததாக இருக்கட்டுமே. பிரித்துப் பார்த்து, வட கிழக்கில் எமது சந்ததிகளிடமும் இந்த வெறுப்பைக் கொண்டு போய்ச் சேர்ப்பதை இத்தோடாவது நிறுத்திக் கொள்வோமே சகோதரா.

சிலோன் பொண்ணுங்கள் என்று தலைப்பிட்ட இடத்தில்...தமிழ்...என்று நான் தலைப்பிட்டிருந்தால் உங்களைப் போன்றவர்களின் மன நிலை எப்படியிருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எப்பூடி.. said...
@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

கிரியேட்டிவிட்டி என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

(சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான்)

May 22, 2011 12:02 PM

யோவ் எப்புடீ !

நீர் ஏனையா இதுக்க வாறியள்? எனக்கு உங்களது ப்ளாக் ரொம்ப பிடிக்கும்! உங்கள் கிரியேட்டிவிட்டி யும் பிடிக்கும்! நான் உங்களுக்கு ஓட்டு, கமெண்டு எல்லாம் போடுகிறேன்! உங்களுக்கும் எனக்கும் எந்தவித வாய்க்கால் தகராறும் இல்லையே! விடுங்க நண்பா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன்!

இதற்குமேலும் நான் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை! நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதும், அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதும், விவாதம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும்! இதுக்குவேறு நான் தனியாக விளக்கம் சொல்லப் போவதில்லை!

உங்களைப் போலவே எனக்கும், இலங்கைப் பதிவுலகம் புத்துணர்ச்சியுடன் இயங்க வேண்டும் என்று ஆசை! நாள்தோறும் நூற்றுக்கணக்கான பதிவுகள், இந்தக் குட்டித்தீவில் இருந்து வரவேண்டும் என்றே எனக்கு விருப்பம்! அதனால்தான் இந்த விவாதத்தில் கலந்து கொண்டேன்!

பதிவர் லோஷன் அவர்கள் இந்தவருட தொடக்கத்தில் சுமார் பத்து நாட்கள் வரை பதிவு போடாமல் இருந்தார்! முன்னதாக டிசம்பர் மாதத்தில் நிறைய பதிவுகள் போட்டிருந்தார்! தைமாதத்தில் " லோஷனுக்கு என்னாச்சு? " என்று ஒரு பதிவு போட்டேன்! ( எனது பழைய மாத்தியோசியில் இருக்கிறது )

எனக்கு யாராவது பதிவு போடாமல் இருந்தால் கஷ்டமாக இருக்கும்! அதனால்தான் அப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன்!

மைந்தன் நான் இப்போதும் விரும்புகிறேன் பழையபடி இலங்கைப் பதிவுலகம் கலகலப்பாக வேண்டும் என்று!

இன்று பவன் ஒரு பதிவு போட்டிருந்தார்! நிறைய ட்விட் களை போட்டிருந்தார்! நான் சென்று வாக்கும் கமெண்டும் போட்டுட்டு வந்தேன்! அப்படியான நறுக்கான விஷயங்கள் எழுத நல்ல சிந்தனைத்திறனும், நகைச்சுவைத் திறனும் வேண்டும் - இதுதான் இலங்கைப் பதிவர்களிடம் போதாது என்றேன்!

ஆனால் இது மட்டும்தான் பதிவென்று இல்லை! வேறு பல விஷயங்களும் உள்ளன! ஆனால் இப்படியான நறுக்கான சிந்தனையைத் தூண்டும் விஷயங்களை நிறையப் பேர் ரசிக்கிறார்கள்!

ஒருவரை திட்டி, விமர்சனம் செய்து, வேறு பல இணையங்களில் இருந்து ஆதாரம் காட்டி பதிவு போடுவது ஒரு சாதாரண விஷயம்! அல்லது பார்த்து ரசித்த ஒரு திரைப்படம், அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று விமர்சனம் போடுவது சப்பை மேட்டர்!

ஆனால் நான் எதிர்பார்க்கும் கிரியேட்டிவிட்டி என்பது, மூளையை நன்கு கசக்கி, புதுசு புதுசா எதையாவது கண்டுபுடிச்சு வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதுதான்!

இன்றைய பவனின் பதிவு இதற்கு ஒரு நல்ல உதாரணம்!

மைந்தன் சிவா said...

எனது பதிவின் நோக்கம் ஓரளவுக்கு நிறைவேறி இருக்கிறது..
திருந்துபவர்கள் திருந்தட்டும்...
திருந்தாமல் இருப்பவர்கள் திருந்தாமலே இருக்கட்டும்..
போற்றுவோர் போற்றட்டும்..
தூற்றுவோர் தூற்றட்டும்...........
............
நான் தொடர்ந்து செல்வேன்...................!!!!!!!!!!!!
கருத்துகளை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் இத்தருணத்தில்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன் எத்தனை இலங்கைப் பத்திரிகைகள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? அல்லது இலங்கையில் எத்தனை ஜோக் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? எல்லோருமே சீரியசாகவே இருக்கிறார்கள்!

சிரித்திரனுக்குப் பிறகு, " மணியண்ணை ரைட்டுக்கு " பிறகு உங்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்தவர் யார்?

இப்படியான கூர்மையான நகைச்சுவை திறன் இப்போது இலங்கையில் அருகிவிட்டதா? யாரும் யுத்தத்தை காரணம் காட்டாதீர்கள்!

யுத்த பகுதிக்குள் இருந்து வெளியே வந்த நிருபன்தான் இன்று மண்வாசனையுடன், நகைச்சுவையில் வெளுத்து வாங்குகிறார்! யுத்த பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் ஏன் முகத்தை " உர்ர்ர் ........." என்று வைத்திருக்கிறார்கள்?

மைந்தன், எனக்கு நிருபன், ஜீ, நீங்கள் உள்ளிட்ட இன்னும் சிலரில் நம்பிக்கை இருக்கிறது! உங்களால் இலங்கை வலையுலகம் கலகலப்பாகட்டும்! நீங்கள் யாரையும் பதிவுலகுக்கு வருந்தி அழைக்கவேண்டாம்! அவர்கள் வருவதும் விடுவதும் அவர்களது பிரச்சனை!

நான் இனிமேல் இந்தப்பக்கம் தலை வைச்சும் படுக்க மாட்டேன்! உறவு கொண்டாடுவதுக்கும், சிரித்து மகிழ்வதற்கும் இந்திய நண்பர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! எதுக்கு இந்த உம்மணா மூஞ்சிகளுடன் மல்லுக்கட்ட வேண்டும்?

ஒரு மொக்கை பதிவை போட்டமா, ஹிட்ஸ் அடிச்சமா, பின்னூட்டத்தில கும்மினமா, ஜாலியா இருந்தமா என்று இருப்பதை விடுத்து, நமக்கேன் இந்த " நாய் வாலை நிமிர்த்தும் " வேலை? ( நாய் என்பது உதாரணத்துக்கு )

கடைசியாக ஒன்று, என்னை பலர் இந்தியப் பதிவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்! ஹி........ஹி........ஹி.........!!!

Cool Boy கிருத்திகன். said...

நான் பேச நினைப்பதெல்லாம் மைந்தன் பேசுவதால் நா் பேசாமலே இருக்கிறேன்..

LOSHAN said...

அடடா.. இப்பிடியே போயிட்டிருந்தா எப்பிடி?

மூன்று நாளுக்குள் இவ்வளவு நடந்திருக்கா?

மைந்தன் சொல்ல வந்த விஷயம் சரி..
ஆனால் எல்லோரும் எதை எப்படி செய்ய வேண்டும் என சொல்வதற்கு நாம் யார்?
அவரவர்க்குப் பிடித்த விஷயங்களை செய்யட்டுமே..

தங்களுக்கு நேரம் இருக்கும் நேரம் பதிவிடலாம்.. அல்லது மூட் இருக்கும் நேரம் பதிவிடலாம்..
நாளுக்கு நாள் அல்லது மாதத்துக்கு முப்பது பதிவிடாவிட்டால் என்ன அரசாங்கம் பிடித்து சிறை வைக்குமா? அல்லது சம்பளம் தான் குடுபடாதா?

ஒருவனது தனிப்பட்ட சொத்து+உரிமை பதிவுகள்.. அவனுக்கு என்ன பிடிக்குமோ எப்போது தோணுமோ அப்போது எழுதுவது தான் இங்கே யாரோ சொன்னால் கிரியேட்டிவிட்டி.. எழுதித்தான் ஆகவேண்டும் என்று யாரையும் யாரும் வற்புறுத்துவது பதிவுலக பாசிசம்..

அதேபோல் தான் பின்னூட்டங்கள், வோட்டுக்கள்.. இதற்காகவா நாம் பதிவு எழுதுகிறோம்???
பின்னூட்டங்கள் தேவை - மற்றவரின் கருத்தறிய..
வோட்டுக்கள் தேவை - எமது பதிவுகள் மற்றவரைப் போய்ச் சேர..

ஆனால் இவையே எல்லாம் ஆகிவிடாது..

உதாரணமாக என்னையே நான் எடுத்துக் கொள்கிறேன்.. நானும் முன்பு ஹிட்ஸ் அடிக்க மொக்கை போட்டுள்ளேன்.. பின்நூட்டகளை எதிர்பார்த்தும் உள்ளேன்..
நேரம் இருக்கையில் மாதத்துக்கு முப்பது பதிவுகளும் இட்டுள்ளேன்..
அது ஒரு காலம்..

ஆனால் பதிவுலகத்துக்கு வந்த பின்னர் கிடைத்த மிகப்பெரிய விஷயம் நண்பர்கள் தான்.. (சிலர் பாஷையில் சொல்லப் போனால் சேர்த்த கூட்டம்)
அது போதும் இப்போது..
எனது பதிவுகளையே இட முடியாமல் இருக்கையில் நான் எங்கே மற்றவர் பதிவுகளை வாசிப்பது? வாசித்தாலும் சிலவேளை பின்னூட்டம், போட சோம்பலாக இருக்கும்.. பிறகு போடலாம் என்று போய்விடுவதுண்டு..
எனது பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுவோருக்குப் பதில் அளித்தே நிறைய நாள் ஆயிற்று..
இது எனது சோம்பலாலேயே தவிர கணக்கெடுக்காமல் அல்ல..

ஆனால் முடியுமான நேரங்களில் வாக்குப் போடுகிறேன்..

ஆனால் எனக்கு நீ வாக்குப் போடு.. ஆப்படியானால் தான் உனக்குப் போடுவேன் என்ற தரகுப் போக்கில் எனக்கு உடன்பாடு இல்லை..

கட்டாயம் நான் வாசிக்கும் எல்லாப் பதிவுக்கும் பின்னூட்டம் இடவேண்டுமோ வாக்கு இடவேண்டுமோ என்ற கட்டாயம் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை.

இந்த விஷயத்தில் என்னைத் தலை பெருத்தவன் என்று யாரவது கசமுசத்தாலும் எனக்கு டோன்ட் கேயார்..

இப்போதெல்லாம் பதிவு இட எனக்கும் மற்றவர்கள் போல நேரம் கிடைப்பதில்லை. பல முன்னாள் பிரபல பதிவர்களுக்கும் இதே போல் நேரப் பிரச்சினை தான் காரணம் என நினைக்கிறேன்.
நானா சொல்ல நினைப்பதை சுருக்கமாக இப்போதெல்லாம் ட்வீட்டிடப் பழகிக் கொண்டேன்..
நிறைய சொல்ல விரும்பினால் மட்டும் பதிவு

அங்கீகாரம், ஆதரவு இதெல்லாம் வாக்குப் போட்டால் தான் வரும் என நான் நினைக்கவில்ல்லை..
எனது வாசிப்பின் ரசனைக்கு உட்பட்ட பதிவுகளை வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.. சந்தர்ப்பங்கள் கிடைக்கையில் பாராட்டுகிறேன்.
எனது அங்கீகாரம் தான் மற்றவர் வளர்ச்சிக்கு ஆதாரம் என்று நினைத்தும், இல்லை.. மற்றவருக்கு வாக்களிக்காமல் விடவேண்டும் என்று எண்ணியதும் இல்லை.

ஆனால் மைந்தன் கனிமொழி பதிவு சர்ச்சைக்குப் பின்னர் மீண்டும் தேவையற்ற சர்ச்சையில் நீங்கள் மாட்டி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்களில் தொனித்த ஆர்வம் தாண்டி பின்னூட்டங்களில் பல அரசியல் கலக்க நீங்கள் இடம் அளித்துள்ளமை தேவையற்றது..

Nesan said...

வலைப்பதிவில் இப்படி எல்லாம் இருக்கிறது நண்பா! ஏங்கே போய் முட்டுவது இருந்தாலும் சிலவிடயங்களை நானும் ஜோசிக்கிறேன் எழுதுவதற்கு ஆனால் நேரம் கிடைப்பதில்லை நீங்கள் தொடருங்கள் எழுதுவதை யார்யாருக்கு விருப்பமோ அவர்கள் படிப்பார்கள் கருத்துரைப்பார்கள் கவலை எதற்கு!

LOSHAN said...

ஓட்டை வடை அவர்களுக்கு இங்கே நான் பதில் அளிக்கத் தேவையில்லை என நினைத்தேன்.. ஆனாலும்,
அள்ளி ஒரேயடியாக இலங்கைப் பதிவர்கள் மீது குற்றம் சுமத்தி இருப்பதால்....

தனிப்பட்ட கருத்துக்கள் இங்கே பொதுமையாக்கப்பட்டால் சிலர் தனியர்களாகிவிட நேரும்..
இங்கே எல்லாரும் நகைச்சுவை செம்மல்களோ, கிரியேட்டிவ் சிகாமணிகளோ இல்லை.
தம்மால் முடிந்ததை அவரவர் எழுதுகிறார்..
இதைத் தான் இப்படி எழுது என்று சொல்ல நீங்கள் யார், நாம் யார்?

தமிழில் குறை கண்டுபிடிக்க வந்திருக்கிறீர்களே.. பிடிக்காவிட்டால் உங்களுக்குப் பிடித்த அந்தக் கொச்சைத் தமிழிலேயே வாசிக்கலாமே..
எமக்கு இது தான் வருகிறது.. இதிலேயே எழுதுகிறோம்..
நீங்கள் சொல்லும் அந்த 'ஜாலியான' தமிழில் எழுதுவோரை எம் செந்தமிழில் எழுதச் சொல்லி சவாலை சிறுபிள்ளைத் தனமாக விட நாம் இன்னொரு நாராயணன் அல்ல..

அடுத்து நகைச்சுவை...
நாராயணா நீங்கள் இலங்கையில் யார் யாருடைய பதிவுகளை வாசித்துள்ளீர்கள் எனத் தெரியாது..
பழந்தின்று கொட்டை போட்ட மொக்கை, கும்மி, நகைச்சுவைப் பதிவர்கள் இங்கேயும் உள்ளார்கள்..
எதையாவது பொது இடத்தில் சொல்ல முதல் தகுந்த வாசிப்பின் பின் சொல்வது நலம்..
அது மட்டுமில்லை பதிவுகள் எல்லாம் சிரிக்க வைக்க மட்டும் தான் வேண்டுமா?
என்னய்யா இது லூசுத்தனம்?


பதிவுலகம் ஒற்றுமையாக வேண்டும், ஒற்றுமையாக வேண்டும் என்று வெற்றுக் கோஷம் எழுப்பி இரண்டாக்கி இப்போது இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துள்ளோரை நானும் நீங்களும் அனைவரும் பார்த்திருக்கிறோம்.. ஏன் இந்தக் கூத்த்தாடி வேலை?

ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டும் வேண்டாதபடி ஒருவரை உயர்த்தியும் இன்னொருவரைத் தாழ்த்தியும் மஞ்சள் தனமாகப் பின்னூட்டமிடும் வேலை வேண்டாமே..

இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கட்டும்.. அவரவர் இஷ்டப்படி எழுதட்டும்.. பின்நூட்டமிடுவோர், கும்மியடிப்போர், வோட்டுக் குத்துவோர் அவரவர் வேலை செய்யட்டும்.. விலகுவோர் விலகட்டும்..

இனி வரும் பொழுதுகளும் இதே போல் இன்பமாக.. எல்லோருமே என் நண்பர்களாக..

இந்த சர்ச்சையிலும் சில புதிய நண்பர்களை சந்தித்தது சந்தோசம்.

மைந்தன் சிவா said...

//பதிவுலகம் ஒற்றுமையாக வேண்டும், ஒற்றுமையாக வேண்டும் என்று வெற்றுக் கோஷம் எழுப்பி இரண்டாக்கி இப்போது இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துள்ளோரை நானும் நீங்களும் அனைவரும் பார்த்திருக்கிறோம்.. ஏன் இந்தக் கூத்த்தாடி வேலை?//

இது கூத்தாடி வேலை என்று நான் நினைக்கவில்லை அண்ணா.
அத்துடன் இது வெற்றுக் கோஷமும் அல்ல.
எனது சுய நலனுக்காகவோ அல்லது ஏதும் புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனோ நான்
இதை எழுதவில்லை.

எதோ என் மனதில் தோன்றியதை எழுதினேன்..
அவரவர் கருத்துகளை அறிய எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது.
எனக்கு மட்டும் அல்ல,பலருக்கு தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்,
மற்றைய பதிவர்களின் கருத்துகளை அறியவும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
அந்த வகையில் சந்தோசம்..
நான் பின்னூட்டல்களில் மறுபடி மறுபடி கூறிய படி,
நான் கட்டாய பின்னூட்டல்களையோ,வாக்குகளையோ,எனக்கோ அல்லது மற்றைய
பதிவர்கள் யாருக்குமோ கேட்கவில்லை.
ஆனால்,"எங்கள் பதிவர்கள்"நாங்களும் பதிவர்கள் என்றவகையில்,
அனைவருடன் ஒற்றுமையாக இருத்தலையும்,ஆக்கபூர்வமான
பதிவுகளை வரவேற்பதையும்,புதிய பதிவர்களின் வளர்ச்சிக்கு
உதவுவதையும் தான் நான் இந்தப் பதிவின் மூலம்
எடுத்துரைக்க நினைத்தேன்.

எவரின் பின்நூட்டல்களையும் நான் எடிட் செய்யவில்லை,
அத்துடன் அனாமதேய பின்னூட்டல்களை அனுமதிக்கவும் இல்லை.

கனிமொழி பிரச்சனை அளவுக்கு இது பெரியது அல்ல அண்ணா,
இது நமக்குள்,நாங்கள் கதைக்கும் ஒரு களமாக தான் இதனை
பதிவிட்டேன்..

பல பதிவர்களை ஒன்று சேரப் பார்த்ததில் மகிழ்ச்சி..
ஒவ்வொருவர் கருத்துகளும் வெவ்வேறானவை,
அவர்கள் கருத்துகள் என்ன என்பதை மற்றையவர்கள்
இப்போது தெரிந்து கொண்டுள்ளனர்.

ஒரு முழுமையான பதிவர் சந்திப்பில் கலந்துரையாட வேண்டிய
விடயங்கள் இங்கு கதைக்கப்பட்டிருக்கின்றன.
வெளிப்படையான கருத்துக்கள் ஒவ்வொரு பதிவரிடமிருந்தும்..
அது போதும் எனக்கு...
நான் யாருடமும் விரோதம் வளர்க்கவோ,நட்பு பாராட்டவோ
இந்த பதிவை வெளியிடவில்லை.அதற்க்கான தேவையும் இல்லை எனக்கு.
அனைவரும் நண்பர்களே!!

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் மறுபடியும்.

LOSHAN said...

தம்பி மைந்தன்..
தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்..

உங்களை நான் கூத்தாடி என்று சொலவில்லை..
அதைத் தொடர்ந்து வந்த இந்தப் பந்தியை ஆறுதலாக வாசித்திருந்தால் புரிந்திருக்குமே.. :)
//ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டும் வேண்டாதபடி ஒருவரை உயர்த்தியும் இன்னொருவரைத் தாழ்த்தியும் மஞ்சள் தனமாகப் பின்னூட்டமிடும் வேலை வேண்டாமே.. //

//எனது சுய நலனுக்காகவோ அல்லது ஏதும் புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனோ நான்
இதை எழுதவில்லை.//
இதுவும் தெரியும்..

//ஆனால் மைந்தன் கனிமொழி பதிவு சர்ச்சைக்குப் பின்னர் மீண்டும் தேவையற்ற சர்ச்சையில் நீங்கள் மாட்டி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்களில் தொனித்த ஆர்வம் தாண்டி பின்னூட்டங்களில் பல அரசியல் கலக்க நீங்கள் இடம் அளித்துள்ளமை தேவையற்றது..//
மீண்டும் ஆறுதலாக இதனையும் வாசித்தால் நான் சொல்ல வந்தது புரியும்..

மைந்தன் சிவா said...

நன்றிகள்...!!!

இலங்கையிலிருந்து சிறாஜ்முஹம்மத் said...

முதலில் உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
நான் இலங்கையிலிருந்து சிறாஜ் முஹம்மத்

'இலங்கை பதிவாளர்களே ஏன் இப்படி?' என்று கேட்டீர்களே

சொல்கிறேன் கேளுங்கள் ஏன் அப்படியென்று

முதலில்இ
இலங்கைப்திவாளர்கள் போதுமானளவு எழுதுவதில்லையே! எழுதினால் சிறப்பாக இருக்குமே!! என்று நீங்கள் கோபப்படுவது நியாயமானது; வரவேற்கத்தக்து; ஆனால் பொருத்தமற்றது.
ஏனென்று தெரியுமா
எப்போது 'தோட்டாக்கள்' எங்கள்மீது வந்து விழுகிறதோ என்று தவிக்கும் நிலையில் உங்களுடைய இடுகைக்கு வோட்டுக்கள் போடச்சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம்
இதுவேற இடுகையின் இறுதியில் 'பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!'
என்று கூறியிருக்கிறீர்கள்.சிறப்பாய் இருக்கிறது உங்கள் புத்திசாலித்தனம்.

ஒருவன் தன் ஆற்றலை வெளிப்படுத்த இணையத்தில் எழுத நிச்சயம் அமைதியான நிலையொன்று தேவை அப்போதுதான் செழிப்பான இடுகைகளை இணையத்தில் இடலாம்
இலங்கையில் தமிழ் பேசும் தரப்பினர் படும் இன்னல்களை தீர்ககவழியில்லாத நிலையில் இணையத்தில் எழுத வேண்டும்; அதுவும் வோட்டுப்போட வேண்டும் என்று நீங்கள் எங்கள் மீது கோபிப்பது சரியானது என்று 'மைந்தன் சிவா' நீர் எண்ணுகிறீரா?
சரி அதுவும் சரியென்றுதான் வைப்போம்
30வருட யுத்தத்திலிருந்து மீண்டு இப்பொழுதான் வந்திருக்கும் நிலையில் தீடீரென இணையத்தில் எழுத சொல்லுவது சரியா இனிவரும் நாட்களில் எம்மவர் சிறப்பாய் அதிலும் செழிப்பாய் மிகைப்பாய் எழுதுவார்கள் நீர் கவலைப்பட வேண்டாம்

இத்தகைய சூழ்நிலையிலும்கூட எம்மவர் பல இணையப்பக்கங்களையும் எழுதிவருவது வரவேற்கத்தக்கது
இலங்கையில் பரீட்சை முடிவுகள் சாதகமாய் வருவது வடக்கில்தான் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம் முதலில் அதற்கு நன்றி சொல்லுங்கள்
இணையத்தில் எழுதுவதென்றால் அரசியல் சமுகப்பிரச்சனை தொழிநுட்பம் கல்வி பற்றி எழுத வேண்டும் அதுவும் உண்மையை எழுத வேண்டும்
இலங்கையிலிருக்கும் நாங்கள் அரசியல் பற்றி உண்மையை எழுதுவது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியுமா
அப்படி எழுதினால் ஒன்று வெள்ளை வேன்(இலங்கையில் உண்மையை சொல்லுபவர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பயன்படுத்தும் முறை)வந்து தூக்கிக்கொண்டு சென்று கொன்றுவிடும் இல்லை பத்திரிகையாளர் சிவராம் அவர்களின் நிலைமை ஏற்பட்டுவிடும்
ஆகவே இலங்கையருக்கு அரசியல் பற்றி இணையப்பக்கங்களில் எழுத முடியாது
நீங்கள் கேட்ட கேள்விக்கு முதலாவது பதில் இது
சரி ஏனைய விடயம் பற்றி எழுத போதிய வளம் எங்களிடம் இல்லை அதற்கான சூழ்நிலையை எங்கள் அரசு எங்களுக்கு தரவில்லை என்றாலும் பல முயற்சி செய்து ஆங்காங்கே இடுகைகள் வருகிறதே அதை நீர் நன்கு அறிவாய்

மேலும் இந்தியாவில் அதிக பதிவு வருகிறதே இலங்கையர்கள் எழுத நேரமில்லையா என்று கேட்டீர் தானே ஞாபகம் இருக்கிறதா??
அதற்கான பதிலிது.
இந்தியாவில் தமிழர் சனத்தொகை ஏறத்தாள 6.5 கோடி
இலங்கையிலோ 20இலட்சம்
ஈடாகுமோ இவையிரண்டும்
சனத்தொகை இவ்வாறிருக்க சலிப்புத்தன்மை ஏன் என்று நீர் கேட்டது தகுமோ????
என்றாலும் யுத்தம் முடிந்துவிட்டது
இலங்கையர்கள் நாங்கள் இனிமேல் எழுதுவோம் சாதனை படைப்போம்
யார் மீது அன்பு அதிகமோ அவர் மீதுதான் அதிக கோபம் வரும் என்பதற்கிணங்க உங்கள் கோபத்தை வரவேற்கிறோம் உங்கள் இடுகை என்னையும் விழித்தெழ வழி செய்ததற்கு மனமார வாழ்த்துகிறேன்
தொடர்ந்து எழுதுங்கள் இலங்கையர்கள் நாம் துணையிருப்போம்

நன்றி
sirajmohamed21@gmail.com
www.masteralamohamed.blogspot.com

மைந்தன் சிவா said...

//இலங்கையிலிருந்து சிறாஜ்முஹம்மத் said...//

உங்கள் லாஜிக் எனக்கு புரியவில்லை...

♔ம.தி.சுதா♔ said...

////மைந்தன் சிவா said...
மதி,நான் வகுப்பிற்கு சென்றமையால் இதனை கவனிக்க முடியவில்லை..
அனோனிகளுக்கு கமென்ட் பண்ண நான் இடமளிக்க போவதில்லை..
பதிவர்கள் மட்டும் கருத்துகளை இடலாம்//////

மைந்தன் தங்களொடு நெருங்கிப் பழகுவதால் இதை நான் விட்டுவிட்டேன் என்ன நடக்குதிங்க... இந்த கருத்ததையிட்டது நீங்கள் தானா அல்லது இதுவும் வகுப்பிற்கு போகும் போது கவனிக்கலியா ?

நாம் என்ன கூத்தும் அடித்து விட்டுப் போகலாம் மைந்து.. எமக்கு பிறகு வரும் இலங்கை பதிவரையும் இந்த உலகம் ஏற்கணும் என்பதை யாரும் மறக்கக் கூடாது யாரை நம்பி யாரும் வாழ்வதில்லை மனிதன் வாழ்வது இயற்கையை மட்டும் நம்பித்தான்...

இதை தங்களுக்கு அன்பு கலந்த உரிமையோடே சொல்கிறேன் தப்பிருந்தால் மன்னிக்கவும்....

Related Posts Plugin for WordPress, Blogger...