Monday, February 28, 2011

காதல் என்ன அம்புட்டு கஷ்டமா?"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!


இன்று உனக்கு புரியவில்லை
புன்னகைக்கின்றாய்..
புரிகின்ற பருவத்தில்
உன் புன்னகைக்கு
புரிதல் இல்லாமல்
புதையப்போகிறேனோ தெரியவில்லை!!


உணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்கிடையேயான
உன்மத்த உத்தம்-காமம்!
மனஸ்தாப மரத்தின்
இரு மனமறியா பிழை தான்
மனம் விட்டுப் பேசா
தவறுகள்!!


நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!

என்னை தனது வலைப்பூவில் அறிமுகம் செய்த "காத்திரப் பதிவர்"ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்!

இவங்களே இப்பிடி அன்பா இருக்கேக்க நம்மளால இருக்க முடியாதா?
சோ,அன்பாலே பிணைக்கப்பட்டிருங்கள்..அன்பாய் இருங்கள்!!
முடிஞ்சா காதலியுங்க..இல்லாட்டி சிரிப்பு போலீஸ் மாதிரி அப்புறம் நாற்பதிலையும் கல்யாணம் நடக்காது!!

Post Comment

Friday, February 25, 2011

நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!


"The Economist" சஞ்சிகைஉலகின் பொருளாதார மற்றும் சமூக விடயங்களை அடிக்கடி புட்டு புட்டு வைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றி வரும் ஒரு சஞ்சிகை.
லண்டனை தலைமையகமாக கொண்டு வெளிவரும் சஞ்சிகை இது.
இந்த சஞ்சிகை தான் உலகின் மிக மோசமான பத்து தலைநகரங்களில் ஒன்றாக கொழும்பு இருக்கின்றது என செய்தி வெளியிட்டிருக்கிறது.

வெறுமனே அல்லாமல் முப்பதுய் அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை வெளியுயட்டிருக்கிறது தி எகோநோமிஸ்ட்.கல்வி,சுகாதாரம்,தனி நபர் பாதுகாப்பு போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
மோசமான தலைநகர் பட்டியலில் பத்தாவது இடத்தில் இலங்கை தலைநகர் அமைந்திருப்பதானது இலங்கையின் உண்மை நிலையினை பட்டியலிட்டு காட்டியிருக்கிறது என்று கூறலாம்.


அத்துடன் சார்க் நாடுகளில் மூன்று நாடுகள் இந்த டாப் டென் பட்டியலில் உள்ளடங்கி இருப்பது தான் இன்னமும் கவலைக்குரியது.பாக்கிஸ்தான் தலைநகர் கராச்சி,மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா ஆகியனவே மற்றைய இரண்டு நாடுகளுமாகும்.

சார்க் நாடுகள் பொருளாதார சமூக கலாச்சார ரீதியின் இன்னமும் பின்தங்கியே காணப்படுகிறது என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் தேவைப்படாது.ஆச்சரியம் இந்தியா டாப் டென்'க்குள் இல்லை.(சிரியுங்க இந்திய நண்பர்களே,சந்தோசப்படுங்க!)
கொழும்பை பொறுத்தவரையில் தட்டு வீடுகள்(பிளட்ஸ்) இருக்குமளவுக்கு குப்பங்களும்,ரயில் ஓர வீடுகளும்,பாதையோர குடில்களும் அங்காங்கே காணப்படுகின்றமை இலங்கை தலை நகரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்குமென நினைக்கிறேன்..
அரசாங்கம் எங்கு இதனைப்பற்றி கவலை கொள்ளப்போகிறது?
அண்மையில் தான் அழகான கோல் பேஸ்(galle face )கடல்கரையில் அரசுக்கு சொந்தமான காணி பல மில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கைமாறி இருக்கிறது.
அதனை வைத்தாவது மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றலாம்..இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி அரசியல்வாதிகள் என்ன பண்ணுகிறார்கள் என்று நான் பட்டியலிட்டு காட்டியா உங்களுக்கு தெரிய வேண்டும்?

பட்டியலின் முதல் இடத்தில் பணவீக்கத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஜிம்பாபே தலைநகர் ஹராரே காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது!


நைஜீரியா-லாகோஸ்,அல்ஜீரியா-அல்ஜியேர்ஸ்,ஈரான்-தெகிரான்,செனகல்-டாகர்,கமரூன்-தவுலா,பப்புவா நியூகினி-போர்ட் மோர்செபி ஆகியன ஏனைய நாடுகளாகும்.


சரி மேட்டர்'க்கு வருவம் பாஸ்,

நூறாவது பதிவு...
எல்லாரும் எழும்பி நின்னு கை தட்டுங்க பார்க்கலாம்?
அந்த மரியாதை இருக்கணும்..என்ன சொன்னாலும் பண்றாங்களே ரொம்ப பாசக்கார பயபுள்ளைங்க!

ஆரம்பத்தில் "கவியுலகம்" என்ற பெயரில் கவிதைகளையும்,பின்னர்
"மைந்தனின் மனதில்"என்ற பெயரில் வேறுபட்ட ஆக்கங்களையும்(ஹிஹி பெரும்பாலும் மொக்கை பதிவுகள் தானுங்க)
பதிவுலகில் பகிர்ந்து வந்துள்ளேன்.

இத்தனை காலமும் முயன்று முயன்று இப்ப கொஞ்ச நாட்களாகத் தான் இன்ட்லி,தமிழ்மணத்தில
எனது பதிவுகளுக்கு ஓட்டுகள் பதிவுகளை பிரபலமாக்குமளவுக்கு கிடைக்கின்றன.
பின்னூட்டங்களும் பல பக்கத்திலிருந்து வருகின்றன.சந்தோசம்..ஒரு பதிவருக்கு(?)வேறென்ன வேண்டும்?
அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்..
உங்கள் அனைவருடனுமான நல்லுறவு தொடர்ந்து பேணப்படும்.

பதிவு பயனுள்ளதோ,வெறும் மொக்கையோ அத்தனையையும் கண் கலங்காமல் கோபப்படாமல்
படித்துவரும் வாசகர்களுக்கும் எனது நன்றிகள்..


நன்றி மறப்பது நன்றன்று..
அது மாதிரியே வரும் காலங்களில் எனக்கு ஆதரவளிக்க உங்களுக்கு முன்கூட்டிய நன்றிகள்!


Post Comment

Wednesday, February 23, 2011

டிஸ்கி கமெண்டும் ஸ்டாண்ட்டர்ட் கமெண்டும்


ரொம்ப நல்லா இருக்கு
அருமை
சூப்பர் தல
ஹஹா
ஹிஹி
அருமை... தொடரட்டும் உங்கள் பணி..
கலக்கிட்டீங்க
கலக்குங்க தல
Nice
ஓட்டு போட்டிட்டேன்...


இதெல்லாம் தப்சிக்கு வந்த கமெண்ட்டு எண்டு நினைச்சா அது உங்க தப்பு..இப்பெல்லாம் பதிவுக்கு சம்பந்தமில்லாம படம் போடுறது தாங்க பஷன்!!

அப்ப என்னடா இதுன்னு பாக்கிறீங்களா?எல்லாம் நம்ம ப்ளோக்கர் பயபுள்ளைங்க
போடுற ஸ்டாண்ட்டேர்ட் கமெண்டுகள் தானுங்க..
ஒரு கமெண்ட வைச்சு ஒரு இருபது பேருக்கு கமெண்டு போடுவாங்க பாருங்க..
இவங்கள அடிச்சுக்க முடியாது..நம்மள நாமே தான் அடிச்சுக்கணும் பாஸ்.
அடுத்து கொஞ்சப்பேர்..
என்ன பசிக்கொடுமையோ..
பந்தி போடுவாங்கையா கமெண்டு போட சொன்னா..

இதுக மொதல் கமெண்ட்..
வடை
சுடு சோறு
வெட்டு
கொத்து
மொத வெட்டு
வடை போச்சே
1st
நான் தான் பெஸ்ட்..

இதாச்சும் பரவாயில்ல சகிச்சுக்கலாம்..
இன்னும் சில பேர் இருக்காங்களே...பதிவ முழுசா வாசிக்க கஷ்டம் பாருங்க
இதுக்குன்னே நாமளும் டிஸ்கி ஒன்னு டிஸ்கி ரெண்டு எண்டு போடுவமா..
அத அலேக்கா கட் பண்ணி பேஸ்ட் பண்ணி ஒரு கமெண்டு போடுவாங்கையா..
அதனால நான் நிச்கி போடவே மாட்டேன்னு சபதமெல்லாம் எடுத்துக்க மாட்டேன்..அப்புறம் டிஸ்கி கமெண்டு போடுறவங்க கோவிச்சிடுவாங்க..

டிஸ்கி:அடியேன் நானும் இதில கிண்டியிருக்கிற கிண்டல் வேலையள் பண்ணுறவன் தான்..இன்னிக்கு கூட ரெண்டு ஸ்டாண்ட்டர்ட் கமெண்டு போட்டிட்டு தான் பதிவு எழுதுரனுங்க..ஹிஹி

இது யாருக்கும் மனம் புண்ணாக எழுதவில்லை..சும்மா கலாய்க்குராராம்லே !!சோ,
நீங்க பயப்பிடாம விளையாடுங்க..இது உங்க ஏரியா!!


Post Comment

Monday, February 21, 2011

ஏஞ்செலினா ஜூலி+தப்சி=??

வாங்க வாங்க...ஆனா நீங்க நினைச்சதுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமே இல்லை..
எதோ என்னால முடிஞ்ச ஹை-கூ'ஸ் சில...
டிசம்பருக்கு பிறகு என்னமோ தெரியல கவிதை வருதே இல்ல பாஸ்..
(ஆமா அதுக்கு முன்னால கவிதை கவிதையா கொட்டிச்சாக்கும்!)
என்ன பண்ணலாம்?
உன் கட்டியிழுக்கும் கண்களால்
நான் வினா தாள் கண்ட
மாணவன் போலானேன்..
உன் பார்வை வினாவில்
தொலைந்து விடை தேடினேன்...காதலே ஒரு படிப்பாய்
இருந்திருந்தால்
நான் goldmedel
வாங்கி இருப்பேன்...
எப்போதோ..!!தனிமை வடிக்கும்
கவிதைகளுக்கு
ஆழம் அதிகம்..
உனை
தனிமையில் காணும்
நிமிடங்களின் நீளம் கொஞ்சம்..!!


கடல் கரையில் உன்
பெயர் எழுதுகிறேன்
..

நண்பனே...
உன் பெயராவது ஒரு தடவை
குளிக்கட்டும் என்பதற்காக!


மற்றவர்களை
உன்னோடு
ஒப்பிடும் அளவிற்கு
நீ
...
தப்சி

அழகின் நியமம்
ஆகிவிட்டாய் எனக்கு!!


எப்பிடி இருக்கு?சுமார்?சப்பை?அய்யய்யோ அத விட கேவலமா??
இப்பிடி தெரிஞ்சிருந்தா இந்த பதிவ போட்டிருக்க மாட்டேனே...நன்றி:வலைச்சரத்தில் நேற்று என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நண்பர் ரஹீம் கஸாலி'க்கு நன்றிகள் பல..

Post Comment

Saturday, February 19, 2011

உலகக்கிண்ணம் போட்டிகள்,மைதானங்கள் ஒரே பார்வையில்!!


பிரிவு A

அணிவிவெதோமுஇநிஓவீபுள்ளிகள்
Flag of Australia.svg ஆத்திரேலியா0000000
Flag of Canada.svg கனடா0000000
Flag of Kenya.svg கென்யா0000000
Flag of New Zealand.svg நியூசிலாந்து0000000
Flag of Pakistan.svg பாக்கித்தான்0000000
Flag of Sri Lanka.svg இலங்கை0000000
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே0000000
20 பெப்ரவரி 2011
09:30
நியூசிலாந்து Flag of New Zealand.svgஆட்டம் 2Flag of Kenya.svg கென்யாஎம்.ஏ.சிதம்பரம் அரங்கம், சென்னை
20 பெப்ரவரி 2011
09:00
இலங்கை Flag of Sri Lanka.svgஆட்டம் 3Flag of Canada.svg கனடாமகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்,அம்பாந்தோட்டை
21 பெப்ரவரி 2011
14:30
ஆத்திரேலியா Flag of Australia.svgஆட்டம் 4Flag of Zimbabwe.svg சிம்பாப்வேசர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
23 பெப்ரவரி 2011
14:30
பாக்கித்தான் Flag of Pakistan.svgஆட்டம் 6Flag of Kenya.svg கென்யாமகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்,அம்பாந்தோட்டை
25 பெப்ரவரி 2011
14:30
நியூசிலாந்து Flag of New Zealand.svgஆட்டம் 8Flag of Australia.svg ஆத்திரேலியாவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
26 பெப்ரவரி 2011
14:30
இலங்கை Flag of Sri Lanka.svgஆட்டம் 10Flag of Pakistan.svg பாக்கித்தான்ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
28 பெப்ரவரி 2011
09:30
சிம்பாப்வே Flag of Zimbabwe.svgஆட்டம் 13Flag of Canada.svg கனடாவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
1 மார்ச் 2011
14:30
இலங்கை Flag of Sri Lanka.svgஆட்டம் 14Flag of Kenya.svg கென்யாஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
3 மார்ச் 2011
14:30
பாக்கித்தான் Flag of Pakistan.svgஆட்டம் 17Flag of Canada.svg கனடாஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
4 மார்ச் 2011
09:30
நியூசிலாந்து Flag of New Zealand.svgஆட்டம் 18Flag of Zimbabwe.svg சிம்பாப்வேசர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
5 மார்ச் 2011
14:30
இலங்கை Flag of Sri Lanka.svgஆட்டம் 20Flag of Australia.svg ஆத்திரேலியாஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
7 மார்ச் 2011
14:30
கென்யா Flag of Kenya.svgஆட்டம் 23Flag of Canada.svg கனடாபெரோசா கோட்லா, தில்லி
8 மார்ச் 2011
14:30
பாக்கித்தான் Flag of Pakistan.svgஆட்டம் 24Flag of New Zealand.svg நியூசிலாந்துமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
10 மார்ச் 2011
14:30
இலங்கை Flag of Sri Lanka.svgஆட்டம் 26Flag of Zimbabwe.svg சிம்பாப்வேமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
13 மார்ச் 2011
09:30
நியூசிலாந்து Flag of New Zealand.svgஆட்டம் 30Flag of Canada.svg கனடாவான்கேடே அரங்கம், மும்பை
13 மார்ச் 2011
14:30
ஆத்திரேலியா Flag of Australia.svgஆட்டம் 31Flag of Kenya.svg கென்யாஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
14 மார்ச் 2011
14:30
பாக்கித்தான் Flag of Pakistan.svgஆட்டம் 32Flag of Zimbabwe.svg சிம்பாப்வேமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
16 மார்ச் 2011
14:30
ஆத்திரேலியா Flag of Australia.svgஆட்டம் 35Flag of Canada.svg கனடாஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
18 மார்ச் 2011
14:30
இலங்கை Flag of Sri Lanka.svgஆட்டம் 37Flag of New Zealand.svg நியூசிலாந்துவான்கேடே அரங்கம், மும்பை
19 மார்ச் 2011
14:30
பாக்கித்தான் Flag of Pakistan.svgஆட்டம் 39Flag of Australia.svg ஆத்திரேலியாஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
20 மார்ச் 2011
09:30
சிம்பாப்வே Flag of Zimbabwe.svgஆட்டம் 41Flag of Kenya.svg கென்யாஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா


பிரிவு B

அணிவிவெதோமுஇநிஓவீபுள்ளிகள்
Flag of Bangladesh.svg வங்காளதேசம்0000000
Flag of England.svg இங்கிலாந்து0000000
Flag of India.svg இந்தியா0000000
Four Provinces Flag.svg அயர்லாந்து0000000
Flag of the Netherlands.svg நெதர்லாந்து0000000
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா0000000
Flag placeholder.svg மேற்கிந்தியத் தீவுகள்0000000
19 பெப்ரவரி 2011
14:30
இந்தியா Flag of India.svgஆட்டம் 1Flag of Bangladesh.svg வங்காளதேசம்ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
22 பெப்ரவரி 2011
14:30
இங்கிலாந்து Flag of England.svgஆட்டம் 5Flag of the Netherlands.svg நெதர்லாந்துவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
24 பெப்ரவரி 2011
14:30
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svgஆட்டம் 7Flag placeholder.svg மேற்கிந்தியத் தீவுகள்பெரோசா கோட்லா, தில்லி
25 பெப்ரவரி 2011
09:30
வங்காளதேசம் Flag of Bangladesh.svgஆட்டம் 9Four Provinces Flag.svg அயர்லாந்துஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
27 பெப்ரவரி 2011
14:30
இந்தியா Flag of India.svgஆட்டம் 11Flag of England.svg இங்கிலாந்துஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
28 பெப்ரவரி 2011
14:30
நெதர்லாந்து Flag of the Netherlands.svgஆட்டம் 12Flag placeholder.svg மேற்கிந்தியத் தீவுகள்பெரோசா கோட்லா, தில்லி
2 மார்ச் 2011
14:30
இங்கிலாந்து Flag of England.svgஆட்டம் 15Four Provinces Flag.svg அயர்லாந்துஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
3 மார்ச் 2011
09:30
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svgஆட்டம் 16Flag of the Netherlands.svg நெதர்லாந்துபஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
4 மார்ச் 2011
14:30
வங்காளதேசம் Flag of Bangladesh.svgஆட்டம் 19Flag placeholder.svg மேற்கிந்தியத் தீவுகள்

ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா

6 மார்ச் 2011
14:30
இந்தியா Flag of India.svgஆட்டம் 21Four Provinces Flag.svg அயர்லாந்துஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
6 மார்ச் 2011
09:30
இங்கிலாந்து Flag of England.svgஆட்டம் 22Flag of South Africa.svg தென்னாப்பிரிக்காஎம்.ஏ.சிதம்பரம் அரங்கம், சென்னை
9 மார்ச் 2011
14:30
இந்தியா Flag of India.svgஆட்டம் 25Flag of the Netherlands.svg நெதர்லாந்துபெரோசா கோட்லா, தில்லி
11 மார்ச் 2011
09:30
அயர்லாந்து Four Provinces Flag.svgஆட்டம் 27Flag placeholder.svg மேற்கிந்தியத் தீவுகள்பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
11 மார்ச் 2011
14:30
வங்காளதேசம் Flag of Bangladesh.svgஆட்டம் 28Flag of England.svg இங்கிலாந்துசிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
12 மார்ச் 2011
14:30
இந்தியா Flag of India.svgஆட்டம் 29Flag of South Africa.svg தென்னாப்பிரிக்காவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
14 மார்ச் 2011
09:30
வங்காளதேசம் Flag of Bangladesh.svgஆட்டம் 33Flag of the Netherlands.svg நெதர்லாந்துசிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
15 மார்ச் 2011
14:30
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svgஆட்டம் 34Four Provinces Flag.svg அயர்லாந்துஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
17 மார்ச் 2011
14:30
இங்கிலாந்து Flag of England.svgஆட்டம் 36Flag placeholder.svg மேற்கிந்தியத் தீவுகள்எம்.ஏ.சிதம்பரம் அரங்கம், சென்னை
18 மார்ச் 2011
09:30
அயர்லாந்து Four Provinces Flag.svgஆட்டம் 38Flag of the Netherlands.svg நெதர்லாந்துஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
19 மார்ச் 2011
09:30
வங்காளதேசம் Flag of Bangladesh.svgஆட்டம் 40Flag of South Africa.svg தென்னாப்பிரிக்காஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
20 மார்ச் 2011
14:30
இந்தியா Flag of India.svgஆட்டம் 42Flag placeholder.svg மேற்கிந்தியத் தீவுகள்எம்.ஏ.சிதம்பரம் அரங்கம், சென்னை


வெளியேறும் நிலை

காலிறுதிஅரையிறுதிஇறுதிப்போட்டி
23 மார்ச் - வங்காளதேசத்தின் கொடி டாக்கா
29 மார்ச் - இலங்கையின் கொடி கொழும்பு
24 மார்ச் - இலங்கையின் கொடி கொழும்பு
2 ஏப்ரல் - இந்தியாவின் கொடி மும்பை
25 மார்ச் - வங்காளதேசத்தின் கொடி டாக்கா
30 மார்ச் - இந்தியாவின் கொடி மொகாலி
26 மார்ச் - இந்தியாவின் கொடி அகமதாபாத்காலிறுதி

23 மார்ச் 2011
14:30
பிரிவு A1ஆட்டம் 43பிரிவு B4ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
24 மார்ச் 2011
14:30
பிரிவு A2ஆட்டம் 44பிரிவு B3சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
25 மார்ச் 2011
14:30
பிரிவு A3ஆட்டம் 45பிரிவு B2ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
26 மார்ச் 2011
14:30
பிரிவு A4ஆட்டம் 46பிரிவு B1ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு


அரையிறுதி

29 மார்ச் 2011
14:30
ஆட்டம் 43 இன் வெற்றியாளர்ஆட்டம் 47ஆட்டம் 45 இன் வெற்றியாளர்ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
30 மார்ச் 2011
14:30
ஆட்டம் 44 இன் வெற்றியாளர்ஆட்டம் 48ஆட்டம் 46 இன் வெற்றியாளர்பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி


இறுதிப்போட்டி


2 ஏப்ரல் 2011
14:30
ஆட்டம் 47 இன் வெற்றியாளர்ஆட்டம் 49ஆட்டம் 48 இன் வெற்றியாளர்வான்கேடே அரங்கம், மும்பை
கொல்கத்தாகொழும்புபுது டில்லிகண்டிஅகமதாபாத்
Eden Gardens.jpgR Premadasa Stadium.jpgFiroze shah.jpgPallekele International Cricket Stadium.jpgSardar Patel Stadium.JPG
ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 82,000
(மேம்படுத்தப்படுகிறது)
ஆர். பிரேமதாச அரங்கம்
கொள்ளளவு: 35,000
பெரோசா கோட்லா
கொள்ளளவு: 48,000
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 35,000
(புதிய அரங்கம்)
சர்தார் பட்டேல் அரங்கம்
கொள்ளளவு: 50,000
சிட்டகொங்சென்னைடாக்கா
MAC Chepauk stadium.jpgIspahani End, Sher-e-Bangla Cricket Stadium.jpg
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்
கொள்ளளவு: 20,000
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 46,000
(மேம்படுத்தப்படுகிறது)
ஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 35,000

மும்பைமொகாலிநாக்பூர்

பெங்களூரு
Wankhede-night.jpgLightsMohali.pngVCA Jamtha 1.JPGMChinnaswamy-Stadium.jpg
வான்கேடே அரங்கம்
திட்டமிட்டுள்ள கொள்ளளவு: 45,000
(மேம்படுத்தப்படுகிறது)

பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்
கொள்ளளவு: 35,000
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம்
கொள்ளளவு: 45,000
எம். சின்னசுவாமி அரங்கம்
கொள்ளளவு: 42,000அம்பாந்தோட்டை
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 33,000
(புதிய அரங்கம்)
ஓக்கேயா?அப்ப உலகக்கிண்ணத்தை கொண்டாடுவோம்...இந்தியா முதல் போட்டியிலேயே விஸ்பரூபம் எடுத்து பங்களாதேஷை போட்டுத் தாக்குகிறது..
இலங்கைக்கி நாளை போட்டி கனடாவுடன்.
பார்க்கலாம்...


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...