Saturday, March 26, 2011

தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன??ஏன் முதலிலேயே தப்சி பெயர் வர காரணம் எதுன்னு தேடுறீங்க...
மொதல்'ல மத்தவங்க கந்தையா சுப்பையா பெயருகள் வர காரணம் என்னன்னு பாப்பம்....

நடராசா
ன்னு பெயர் வைச்சா அவரு பைக்,கார் எல்லாம் வாங்க முடியாதா??
சாகும் மட்டும் நடை நடையா நடக்க வேண்டியது தானா??

மணிவண்ணன்'னு பெயரு வைச்சா மணி அடிச்சுக்கிட்டே இருக்கனுமா??அப்ப கோயிலுக்கு ஒரு மணிவண்ணன் பிடிக்க எங்க தேடி போவாங்க??

கந்தசாமி'ன்னு பெயரு வைச்சா எல்லாரும் அவரையே கும்புடுவாங்களா??
இல்லை அவர இருக்க வைச்சி தேர் தான் இழுப்பாங்களா??

விக்கி உலகம்னு பெயரு வைச்சா மாம்பழ சண்டை'ல பிள்ளையாரு இவர சுத்தி வந்து மாம்பலத்த ஆட்டைய போட்டிடுவாரா??

நாஞ்சில் மனோ'னு பெயரு வைச்சிக்கிட்டா நாஞ்சில் எக்ஸ்பிரஸ் அவர்ட வீட்டு வாசலுக்காலேயே போகுமா புக்கு புக்குனு சத்தம் போட்டுக்கிட்டு??

ஓட்டவடை நாராயணன் எண்டு பெயரு வைச்சிக்கிட்டா பழைய வடை சுட்ட பாட்டிக்கும் இவருக்கும் கிசு கிசுன்னு பத்திரிகைல போட்டிடுவான்களா என்ன!!

தப்சின்னு பெயரு வைச்சிக்கிட்டா அவங்க பக்கத்தில போனா கப்சி அடிக்காதுன்னு சொல்ல வர்றாங்களா?
தினசரி குளிப்பாங்களோ??

மதி சுதா'னு பெயரு வைச்சிகிட்டா சந்திரன் அவங்க வீட்டுக்கு மேல தான் தினசரி வட்டம் போடுவாரோ??
அல்லது பக்கத்தி வீட்டு சுதா'வ வளைக்க போட்டுகிட்ட திட்டமோ???


பன்னிக்குட்டி ராமசாமி கைவசம் தான் உலகம் பூரா நடக்குற பன்னி பிசினஸ் இருக்குதோ??
பெரிய பன்னி என்ன விலை??குட்டிப் பன்னி என்ன விலை??
மாசத்துக்கொரு தடவையாவது தண்ணி காட்டுவீங்கள்ளே??

சியேர்ஸ் வித் ஜனா எண்டு பெயர் வைச்சிக்கிட்டா நம்ம பசங்க ஒவ்வொரு நயிட்டும் போடுற குவாட்டர் கட்டிங் பார்ட்டிக்கெல்லாம் இவர ஓசில சரக்கடிக்க கூப்பிடுவாங்களோ??

கோமாளி செல்வானு சொன்னா எல்லாரும் இவர் படத்தையே வீட்டுக்கு முன்னால பிரேம் போட்டு மாட்டிடுவாங்களோ??
வீடு உருப்படும்னு சொல்றீங்க??

சிரிப்பு போலீஸ்னு பெயரு வைச்சிக்கிட்டா லைசன்ஸ் இல்லாம ட்ராபிக் போலீஸ்கிட்ட மாட்டினா லஞ்சம் ஒன்னும் கொடுக்க தேவலையோ??
ஹிஹி இல்ல பாடி சைஸ்'ச பாத்து பிழைச்சு போ'னு விட்டிடுவாங்களோ??

சி பி அப்பிடின்னா எல்லாரும் இவரு "சின்னப் பிள்ளை"ன்னு தூக்கி வைச்சு தாலாட்டுவாங்களோ??
மனுசர் ஐடியாவா தான் பெயரு வைச்சிருக்கார்லே!!டிஸ்கி 1 : இந்த மாதம் தப்சி மாதமானு நீங்க கேக்குறது புரியுது...
அத்தின பதிவு தப்சி பத்தி போட்டாச்சு...
நெக்ஸ்டு யாராச்சும் சிக்காம போயிடுவாங்களா என்ன!!

டிஸ்கி 2 :இந்தப் பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவனவோ மனதை புண்படுத்தவோ இல்லை.அப்புறம் ஆயிரம் கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் பண்ணீடாதீங்க..என்னட்ட கொஞ்சம் கம்மியா தான் கைவசம் காசு இருக்கு..

டிஸ்கி 3 :நண்பர்கள் கோவிச்சுக்காதீங்க..என்னால முடிஞ்ச நேரமெல்லாம் உங்க கடைப்பக்கம் வர ட்ரை பண்ணுறன்..
அப்பிடி வர மறந்துட்டேன்னு சொன்னாக்கா ஏன் டா வரேல நாயே....அப்பிடீன்னு பேசாமா ஒரு கமெண்டு போடுங்க..
அடுத்த நிமிஷம் உங்க காலடில கிடப்பேன்...

Post Comment

Wednesday, March 23, 2011

அஞ்சு பேருக்கு ஒரு மனைவியா??

அடுத்தவன் ஆத்திலே
என்ன குளறுபடி??
விடுப்பு நோக்கியபடி இல்லறத்தி..
அடுப்பு ஊதுகிறான்
கணவன்!!


அரவம் கேட்டு
கண் முழித்தேன்
இராப்பொழுதில்..
உன் உருவம் வந்ததென்னவோ
கனவில் தானே??


அழகான பூக்களெல்லாம்
உனைக் கண்டதும்
உதிர்ந்து விடுகிறனவே..
தாழ்வு மனப்பான்மைக்கு
ஒரு அளவு இல்லையா??


காதல் கவிதைகளுக்கு
முடிவேன்பதேது..
இவ்வுலகில்
நம் போன்ற
காதலர்கள் வாழ்கின்ற போது!!

<

பத்தி ஐவர்
ரதி ஒருத்தி
இதிகாசம் சரியெனில்
பரிகாசம் எதற்கு
இன்று நம் கலாசாரம் மேல்!!

இது சும்மா லுல்லுலூ@!!

Post Comment

Friday, March 18, 2011

தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!!


தப்சி பத்தி தலைப்பு போட்டு அரசியல் பதிவு போடுறார் முன்னணி பதிவர்(பிரபல மொக்கை)அண்ணல் சி பி அவர்கள்..
பதிவுலகுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரிந்த விஷயம் மைந்தன் சிவாவுக்கும் தப்சிக்குமிடையே கிசு கிசுனு !

அவ்வாறு இருக்கையில் இவ்வாறு தப்சி படம் போடுதலும் தப்சி தலைப்பு போடுவதும் என் அனுமதியின்றி நடக்கக்கூடாதுன்னு நான் அறிக்கை கூட விட்டிருந்தும்,அதை துச்சமென மதித்து பிரபல பதிவர் சி பி அநாகரிகமான(??அப்பிடீன்னா?)முறையில் தப்சி பெயரை பயன்படுத்தியிருக்கிறார்!!

இதனையடுத்து பிரபல பதிவர் மைந்தன் சிவா(தப்சியோட கிசு கிசுக்கப்பட்டதால!) மிகுந்த வேதனையடைந்து தற்கொலை வரை சென்றிருக்கிறார் என்று உலகின் அத்தனை பத்திரிகைகளும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன!!

இதிலிருந்தே புரியணும் பிரச்சனை எவ்வளவு சீரியஸ்னு!!
இதனையடுத்து கடுப்பான மைந்தன் சிவா,சி பியை மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்தியும்(கால்'ல விழுந்தா?)அவர் அடச்சீ கம்னு கிடன்னு தூக்கி எறிஞ்சிட்டார்..

இதனை கண்டித்து அனைத்துலக தப்சி ரசிகர் மன்றம் சார்பில் கண்டன பேரணி ஒன்று தப்சி பான்ஸ்(fans ) உள்ள தொண்ணூற்றி ஆறு நாடுகளில் பரவலாக நடத்தப்படவுள்ளது...

தமிழ்நாட்டில் மட்டும் இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
காரணம் தற்போது தேர்தல் காலம் ஆதலால் நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போயி,அப்புறம் யாராச்சும் தி மு க,ஆ தி மு க,பா மா க,தே தி மு க,க க க ,கா கா கா,கி கி கி,கு கு கு கட்சிகள் அது தங்களது ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டமேன்று கதையை கட்டி விட வாய்ப்பு உள்ளதால்,
தற்சமயம் மட்டும் தமிழ் நாட்டில் இல்லை...

தப்சி கூட இதற்க்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதாக தெரிகிறது.(எவன்டா துணி காயப் போடேக்க ஒளிச்சிருந்து பாத்தது??)

ஆகவே,சி பிக்கு ஒரு வகையில் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்...ஒரு பதிவு ஓட்ட காரணமாகிவிட்டார் அல்லவா??
அவருக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி!!


தப்சின்னு சொன்னா நாம உசிரையும் கொடுப்போம்...வாழ்க தப்சி....வளர்க உன்னை வைச்சு ஓட்டும் மொக்கை பதிவர்கள்!!

Post Comment

Monday, March 14, 2011

சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு??சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு??

உலகில் கிரிக்கட்டின் தந்தை என்றழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்..
தமிழ் திரையுலகின் கவர்ச்சிப் புயல் குண்டு மாமி நமீதா..
சச்சின் கட்டை....................உயரத்தில்..!!
நமீதா நெட்டை...

சச்சினிட்ட பேட் இருக்கு...
நமீதாட்ட அது இல்ல!!

சச்சினுக்கு கிரிக்கெட் விளையாட தெரியும்...
நமீதாக்கு....................நம்மட உசிரோட விளையாட பிடிக்கும்..........

சச்சின் கிரவுண்டில் ஆடுவார்...
நமீதா மானாட மயிலாடவில் ஆடுவார்...

சச்சின் மாஸ்டர் ப்ளாஸ்டர்...
நமீதா தெருவில் போஸ்டர்....

சச்சின் gun 'ன்னு...
நமீதா பண்'னு.........
சச்சின் உலக ஸ்டாரு...
நமீதா தமிழ்நாட்டு உசாரு...

சச்சின் அண்ணா...
நமீதா மச்சான்...

சச்சினுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி...
நமீதாக்கு................................ஜாஸ்தி..

சச்சினுக்கு ஷார்ட்'டா போட்டா பிடிக்காது....
நமீதாக்கு ஷார்ட்'டா போடுறது தானே பிடிக்கும்...

இத்தனை வேறுபாடுகள் இருந்த போதிலும் சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு?"?
..
..
..
..
..
..
சச்சினும் ஆடுவாங்க...
நமீதாவும் ஆடுவாங்க.....
அது தானுங்க தொடர்பே...!!!
ஆட்டம் தான் வித்தியாசம்...ஆனா ஆடுவாங்க பாருங்க....

டிஸ்கி:இந்த கண்டுபிடிப்புக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு தாறதா பேசிக்கிறாங்க...
அவார்டு கிடைச்சா முழு பதிவுலகுக்கும் பெருமை தானே...............!!!

ஸ்பெசல் டிஸ்கி:பதிவுலக நண்பர்களே,நாளை தொடக்கம் உங்கள் தளங்களுக்கு வருவதும் வடை வாங்குவதும் சில வேளைகளில் நடக்காமல் போகலாம்...ஆனால் அனைத்தும் ஒரு பத்து நாட்களுக்குள் சரியாகி விடும் என நம்புகிறேன்..
வெட்டிப் பயலை எவனோ வேலைக்கு எடுத்திட்டான்...அது தாங்க மேட்டரே!!
சீக்கிரம் லப் டாப் வாங்கனும்னு ஜோசிக்கிரன்...தானமா வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்..அவர்களை பற்றி ஸ்பெசல் பதிவு இடப்படும்!!!

யாருமே அடிக்க கிளம்பிராதீங்க...

Post Comment

Saturday, March 12, 2011

இலியானா வீட்டில இப்படி ஒண்ணுமே இல்லையாம்லே!!வீட்டுக்கு வர இரவு நேரமாச்சுன்னா...

நேரத்த பார் வாறான் ஊர் அடங்கினப்புறமா வீட்டுக்கு..
உருப்படியா ஒரு வேலை வெட்டி இல்லை..
எப்ப பார் road 'ட அளக்குறது தான் வேலை..
பாக்குற சனம் காவாலினு தானே நினைக்கும்..
பின்னேரம் போன தம்பி வீட்ட வந்திட்டாரோ'ன்னு பக்கத்தி வீட்டு ஆண்டி கேக்குறா..
வீடு வாசல் இருக்குற நினைப்பே இல்லை இவனுக்கு..
இதுகளை பெத்து ஆளாக்கி விட்டா "இதுகள்" இந்த வேலை தானே பாக்குங்கள்!!

கொஞ்சம் நேரத்துக்கே வீட்டுக்கு வந்திட்டா,

என்ன இண்டைக்கு துரை வேளைக்கே வந்திட்டார்??
ஊர் சுத்த ஒரு பயலுகளும் மாட்டல போல..
இல்லாட்டிக்கு வேளைக்கு வாறதாவது..
இல்லாட்டிக்கு துரைக்கு பசி கிண்டி இருக்கும்
கொட்டிக்க இங்க தானே வரணும்!!
சொந்தமா வேலைக்கு போக லாயக்கில்ல..
எவ்வளவு காலத்துக்கு இப்பிடியே ஆக்கிப்போட்டுகிட்டு இருக்கிறது??
டிவி'ல மேட்ச் பாக்கலாம்னு உக்கார்ந்தா...

வேறென்ன வீட்ட வந்தா டிவி..
வெளில இறங்கினா ரோடு...(ஆமா பெரிய கண்டுபிடிப்பு பாருங்க!!)
இனி இதோட குந்தினா பக்கத்தில அணுகுண்டு போட்டாக்கூட தெரியாது..
இதுகளெல்லாம் என்னத்த பண்ணப் போகுதுகளோ.........!!

ஐயோ இது உங்க வீட்டில பேசினத நான் ஒட்டு கேக்கேல பாஸ்...எல்லா வீட்டிலையும் இது தானே நடக்குது!!!
எங்க வீட்டில அப்பிடி இல்லையேன்னு கொஞ்ச பயலுக கமெண்டு போடுவாங்க பாருங்க இருந்து!!

இலியானா வீட்டில இப்படி நடக்குறதே இல்லையாம்லே!!நேத்து டின்னர் எடுத்துக்கேக்க சொன்னாங்க..(நான் நம்பேல!!)

Post Comment

Friday, March 11, 2011

இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!


இலியானா ஸ்பெசல் மொக்ஸை பார்க்க வந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களே வணக்கம்...
வாங்க போகலாம்...

ஆக்சுவலி சினிமா பாடல்களுக்கான மொக்ஸ் தான் போல,..எனக்கே தெரியல பாத்திட்டு நீங்களே சொல்லுங்க பாஸ்..

கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் ரெட் ரெட் ரெட்...
கண்ணை கசக்குறது சூரியன் இல்லடா உண்ட கை தாண்டா கசுமாலம்..

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...
ஏன் டா எரும மாடா பயர் சர்வீஸ் பக்கத்தி வீடா??

கோடான கோடி நாம் குளிப்போம் விளையாடி...
அவனவன் குடிக்கவே தண்ணி இல்லாம கெடக்குறான்...உங்களுக்கு தண்ணிக்க விளையாட்டு கேக்குதோ??

மனைவி:பாலும் பலமும் கைகளில் ஏந்தி ...
கணவன்:ஏன்டி நாம என்ன அபிசேகம் பண்ண கோயிலுக்கா போறம்??மொத ராத்திரில கடுப்ப கெளப்பிக்கிட்டு...அடச்சீ கம்னு கெட..

காதலன்:கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை..
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை...
காதலி :அப்ப ஒண்ணுமே இல்லாத சப்ப பிகர்னு சொல்றீங்க??

காதலன்:மலரே...மௌனமா...
காதலி:எங்க என்னை கதைக்க விடுறாய்??நான் ஸ்டாப்'பா நீ தானே கதைச்சிட்டிருக்காய்..!!

மனைவி:இன்று முதல் இரவு...இன்று முதல் இரவு....
கணவன்:உன்ன கட்டீட்டன்லே..இன்னைக்கு தொடக்கம் எண்ட வாழ்க்கை இரவு தானடி!!

அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி??
அதுக்கு ஏன்டா மாமியார பஞ்சாயத்துக்கு இழுக்கிறாய்??

ஒத்தக்கண்ணால உன்னை பார்த்தேனடி....
ஏன் மத்தக் எங்க கண் மங்காத்தா பாக்க போச்சுதா??

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு...
எதுவா இருந்தாலும் மெதுவா பேசுடா தூக்கி உள்ள போட்டிடபோறாங்க!!

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை..
அது தான் அஞ்சாம் ஆண்டிலேயே தெரிஞ்ச விசயமேடா...இப்ப என்னை புதுசா??


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ....
அரை கிலோ வெங்காயம் வாங்கி இருப்பானோ சொந்தக் காசில..!!

தீ இல்லை..திரி இல்லை...ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
அவ்வளவு கஞ்சப் பயலாடா நீயி??

என் இதையம் உடைத்தாய் நொருங்கவே....
ஏன் டா அந்த கருமத்த கொண்டு போய் CD'ல காப்பி பண்ணி வைச்சிருந்தியா??

விழி மூடி ஜோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே ...
அவளால அவ்வளவு தொல்லையாடா??

இன்னிக்கு இலியானா மொக்ஸ் எப்பிடி இருந்திச்சு??நாளைக்கு இன்னொரு நடிகை ஸ்பெசல் மொக்ஸ் பார்க்கலாம் வாங்க....

Post Comment

Wednesday, March 9, 2011

பயந்திட்டார் மைந்தன் சிவா!!


கருத்து சுதந்திரம் பற்றி விக்கிப்பீடியா பின்வருமாறு விளக்கம் தருகிறது.

"எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம்,சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம்,அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்.

பேச்சுச் சுதந்திரம் என்னும் தொடர் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும்".


ஒண்ணுமில்லைங்க சும்மா சொல்லணும் போல இருந்திச்சு அது தான்...

=======================================================================


விக்கிலீக்ஸ் விக்கிலீக்ஸ்'னு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்த ஜூலியன் அசஞ் பற்றி இப்போது எவராவது கவலைப்படுகிறார்களா??

ஒவ்வொரு கேபிளும் ஒவ்வொரு நாடுகளுக்கெதிராக அம்பலப்படுத்தும் போது உலகமே ஹீரோவாக தூக்கி வைத்து கொண்டாடியது..

இன்று எட்டுக் கம்பிக்குள் முடங்கி கிடக்கும் போது உலகம் தன் வேலையை பார்க்கிறது..

உலகத்தை சொல்லிக் குற்றமில்லை..அவர்களுக்கு ஆகவேண்டியது ஆகிவிட்டது தானே..

வேண்டுமென்றால் இனி வரும் காலங்களில் பொது அறிவு போட்டிகளில் "விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் யார்??"அப்பிடீன்னு ஒரு கேள்வி கேட்பாங்க!

கருத்து சுதந்திரம் உலகத்திலேயே இல்லை போலும்..இல்லாவிட்டால் இவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?பாலியல் குற்றசாட்டு என்பதை ஒரு சாட்டாக வைத்து கைது செய்தனர்..பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இவ்வாறு எத்தனை பிரபல்யமான புகார்களில் சிக்கினார்..ஆனால் ??அவர் சனாதிபதி..அசஞ் குற்றவாளி!!


==========================================================================

மூன்று தொடர் வெற்றிகளை ருசித்து நேற்று நான்காவது போட்டியில் நியூசிலாந்தை பந்தாடலாம்னு கண்டி'ல விளையாடப்போன பாக்கிஸ்தான் அணிக்கு முதல் நாற்பத்தைந்து ஓவர்களும் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது..

தனது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய ரோஸ் டெய்லர் வழமைக்கு மாறாக தடுமாறிக்கொண்டிருந்தார் ஆரம்பத்தில்.எக்ஸ்பிரஸ் அக்தாரின் ஒரே ஓவரில் இரண்டு டிப் கேட்ச்களை வாரி வழங்கினார்..ஆனால் எந்த சனி உச்சத்தில் நின்னிச்சோ தெரியாது கம்ரான் அக்மலுக்கு.இரண்டு பிடிகளையும் நழுவ விட மனிதர் இறுதி ஐந்து ஓவரில் காட்டினார் பாருங்கள் வான வேடிக்கை!!!

பாகிஸ்தான் வீரர்களை வானத்தில் தான் பீல்டிங் செட்அப் பண்ணி இருக்க வேண்டும் அப்ரிடி!!இறுதி ஐந்து ஓவரில் நூறு ஓட்டங்கள்!!

டெய்லர் 131 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது!!அதே அதிர்ச்சியோடு துடுப்பாடப் போன பாகிஸ்தான் இறுதிவரை அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தோல்வியடைந்தது!!அடுத்ததாக அவுஸ்திரேலியாவுடனும் பாகிஸ்தான் தோற்க்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது!

==========================================================================

அமெரிக்க நகரான "வேர்மொன்ட்"இல் பனிப்பொழிவு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மிக மோசமாக காணப்படுகிறதாம்!

30inches பனி வீதிகள் வீட்டுக்கூரைகள் என படர்ந்துள்ளது.மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீதிகளுக்கு வரவேண்டாமாம் என்று!பெர்லிங்க்டன் விமான நிலையம் உட்பட பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன.அந்த ஏரியா வரலாற்றிலேயே இது ஐந்தாவது மிகப் பெரிய பணிப்போளிவாக கருதப்படுகிறதாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!

ஆனால் அழகாக உள்ளது பார்ப்பதற்கு வெள்ளை வெளேர்னு!!===========================================================================

தெலுங்கில் ஹிட்டான வேதம் திரைப்படம் வானம் என்ற பெயரில் தமிழில் தயாராகி சிம்பு அனுஷ்கா பரத் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அதன் விளம்பர படங்களில் சிம்புவை முன்னிலைப்படுத்தியே போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருப்பதால் பரத் கடுப்பாகி இருப்பதாக நேற்று போன் போட்டு அழுதார்.ஒரு முன்னணி நாயகன் பரத்தை துணை நடிகர் ரேஞ்சுக்கு வைத்து தான் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன!!

இந்தப் படத்தில் தான் எதிர்கால சந்ததியினரின் பாடப் புத்தகங்களில் இடம்பெறப்போகும் அர்த்தமுள்ள பாடலான "எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் கைல கிடைச்சான் செத்தான் செத்தான்"எனும் பாடல் இருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்!!அஜித் ரசிகரான சிம்பு மங்காத்தா மே முதலாம் தேதி வர இருப்பதால்,அதனுடன் போட்டிக்கு ரிலீஸ் செய்யாமல் அதற்க்கு முன்னர் அல்லது பின்னர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.யுவனின் மியூசிக்கில் ஒரே ஒரு பாடலையே வெளியிட்டிருந்தனர்.
தலைப்பு சும்மா லுல்லுல்லூ ......

Post Comment

Monday, March 7, 2011

நண்பர்களே...இன்று காலை என்னால் இட்ட பதிவு சில காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது.
அசௌகரியத்துக்கு வருந்துகிறேன் நண்பர்களே..
மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....Post Comment

Friday, March 4, 2011

அசின்+சல்மான்+விஜய்+ஓட்டு+ஓட்டுறாங்க+


ஒட்டு குத்துவது எப்படி??

ஓட்டளிப்பு பட்டைகள் பலவிதம் ..
அதில் நான் சேர்த்திருக்கும் ஓட்டளிப்பு பட்டைகள் மூன்று..
தமிழ்மணம்,
இன்ட்லி,
tamil10
என்பனவே ஆகும்.

ஓட்டளிப்பதற்கு முக்கிய தேவை,அந்தந்த ஓட்டளிப்பு தளங்களில் கணக்கு ஒன்றை
ஆரம்பித்தாலே அதுவாகும்.
பெரும்பாலும் நம்ம பதிவர்கள் கணக்கு வைத்திருப்பார்கள்.
மற்றவர்கள்,ஓட்டளிக்க விரும்பின் கணக்கொன்றை ஆரம்பியுங்க.

இத என நான் சொல்கிறேன் என்றால்,
இப்போது பெரும்பாலானோர் ஓட்டளிப்பதில் தயக்கம்,குத்துவதில் சோம்பல் காரணமாக ஒட்டு போடுறாங்க இல்ல பெருசா..(எனக்கு தானுங்க)

================================================================

அசின் சல்மான் கான் நெருக்கம் அதிகரிச்சிட்டாம்லே...அதனால
நமக்கென்ன நஷ்டம் எண்டு தானே கேக்குறீங்க?
பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்ல...
கல்யாணம் கட்டிக்காம இருந்தா நம்ம இளைய தளபதி விஜய்'யோட
ஒரு படம் நடிச்சு நாலஞ்சு பேட்டிகள் குடுத்திருப்பாங்க..
தலைவரும் ஜொள்ளு விட்டிருப்பார்...
ஜொள்ளு மிஸ்'சு..அதாங்க மேட்டரே..

சல்மான் கானுடன் ரெடி படத்தில் படு நெருக்கமாக நடித்திருக்கிறாராம் அசின்..
அதனால என்ன உனக்கு'ன்னு சொல்றீங்களா?
எனக்கொண்ணுமில்ல...உங்களுக்கு ஒன்னு ரெண்டு ஸீன் youtube 'ல
வரும்லே உங்களுக்காக..

==============================================================

ஜீவா'ட "சிங்கம் புலி" படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு இலங்கைல..
நம்ம பயபுள்ள ஒருத்தன் வாடா படம் பாக்க(ஓசில தானுங்க)
என்று கூப்பிட்டான்..
போகல...ஏன் சொல்லுங்க??
பாஸ் கொஞ்சம் tired'டு..
இல்லாட்டிக்கு ஓசில கிடைச்ச வைப்ப விடுவனா??


===============================================================
காலேல ஒரு முக்கிய விசயமா போய் இருந்தேன்..
இது தான் சந்தர்ப்பம்னு நம்ம பயலுக பேஸ்புக்'ல
நாறடிச்சிட்டாங்க நம்ம இமேஜ்'ஜ!!(பாத்தீங்களா இல்லாதத பத்தி கூட நான் கதைக்கிறேன்!)
அப்பிடி என்ன தான் போட்டாங்கன்னு கேக்குறீங்களா?
ஜீவா'ட "சிங்கம் புலி" படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு இலங்கைல..
நம்ம பயபுள்ள ஒருத்தன் வாடா படம் பாக்க(ஓசில தானுங்க)
என்று கூப்பிட்டான்..
போகல...ஏன் சொல்லுங்க??
பாஸ் கொஞ்சம் tired'டு..
இல்லாட்டிக்கு ஓசில கிடைச்ச வைப்ப விடுவனா??

காலேல ஒரு முக்கிய விசயமா போய் இருந்தேன்..
இது தான் சந்தர்ப்பம்னு நம்ம பயலுக பேஸ்புக்'ல
நாறடிச்சிட்டாங்க நம்ம இமேஜ்'ஜ!!(பாத்தீங்களா இல்லாதத பத்தி கூட நான் கதைக்கிறேன்!)
அப்பிடி என்ன தான் போட்டாங்கன்னு கேக்குறீங்களா?

பிரபல (மொக்......) பதிவர் தனது தொலை பேசியை ஆப் செய்துவிட்டு தலை மறைவு
காரணம் தபசியுடனான கிசு கிசு ...............
என நம்ப படுகிறது
3 hours ago · ·
  • Kugan Nissan Ithu epada???
   3 hours ago ·
  • Guna Haran நேற்று இரவிலிருந்து .............
   3 hours ago ·
  • Kugan Nissan Sollavae illa naanga avan friends illa :P
   3 hours ago ·
  • Kamal Dinesh unmaiyavaa?
   3 hours ago ·
  • Suthan Tharshan இன்று அதிகாலை தப்சிஉடன் பதிவுத் திருமணம் செய்ததாக தகவல் கசிந்துள்ளது..................
   3 hours ago · · 3 people
  • Suthan Tharshan y kugan?
   3 hours ago ·
  • Guna Haran ம்ம் ....... தபசி ல ஒரு கண் தான் அவருக்கு கொஞ்ச நாளா...
   3 hours ago ·
  • Suthan Tharshan oru kannilla rendu kannum............
   3 hours ago · · 2 people
  • Lava Kesan adey mynthan en valkaiyila foot ball velayaduraan!!!!!!!!
   kavanama irruka sollu........:P
   3 hours ago · · 2 people
  • Guna Haran ha ha ha neeyumadaa??????
   3 hours ago · · 1 person
  • Lava Kesan romba nalaa......:)
   3 hours ago ·
  • Suthan Tharshan ethana gole pottar ?
   3 hours ago ·
  • Lava Kesan onnum illa.........:P
   3 hours ago ·
  • Suthan Tharshan unaku en avr mela kobam lava?
   3 hours ago ·
  • Guna Haran நீண்ட நேரமாகியும் சமந்தப்பட்ட பதிவர் மௌனம் காப்பது எனக்கென்றால் எதோ சந்தேகமாக உள்ளது சிலவேளைகளில் அது தான் உண்மையோ தெரியாது.....
   27 minutes ago ·


இதனால கொஞ்ச நேரம் கூட அங்கால இங்கால அசைய முடியுதில்ல..
நம்மள வைச்சே ஓட்டிடுறாங்க..
அதுக்குள்ளே 'பிரபல"பதிவர்னு வேற!!
சில பசங்களுக்கு அது கூட தெரியாது பதிவாளர் பதிவாளர்னு கூப்பிடுறாங்க...
நாம என்ன பிரபுதேவா நயன் கல்யாணமா பண்ணி வைக்கிறம்??
==============================================================
அறிவிப்பு:
உலக அரசியல் போக்கை கையில் எடுத்து எப்பிடி எல்லாம் மொக்கை போடலாம்னு பாருங்க..
இப்பிடி ஒரு மொக்கை தனமான அறிவித்தல் பேஸ்புக்'ல வந்திச்சு..
அப்பிடியே தருகிறேன்..சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..
ஆனா அந்த சங்கத்தில நான் அடிமட்ட ஊழியனா இருக்கேன்..ஹிஹி
அந்த படத்தில கைய தூக்கிட்டு நிக்கிறவர் தான் அந்த சங்கத்தின தலைவராம்!!
(நம்மட பசங்க தான்...நம்மட ரெக்கொமேன்டேசன்'ல ஒட்டு கேட்டு ஜெயிச்சவங்க!!)


இலங்கையில் ஒரு மக்கள் புரட்சியை நடத்தபோவதில்லை அதற்கான அவசியம் தற்போது இல்லை ஆனால் அதற்கான தேவை ஏற்படும் இடத்து ஏந்த ஒரு முடிவை எடுப்பதற்கும் பின்னிற்க போவதில்லை - வெள்ளவத்தை வெட்டி சங்கம்


பாத்தீங்களா?ஒரு பதிவ ஓட்டுறதுக்கு எப்பிடி எல்லாம் ஜோசிக்கிரம்னு!
எங்கள முயற்ச்சிகள பாத்திட்டு ஒட்டு போட்டிட்டு போவீங்களா...
அத விட்டிட்டு...
கடுப்பெற்றுகின்றனர் யுவர் ஆர்னோல்ட்!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...