Monday, May 23, 2011

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை??நம்ம இளைய தளபதியின் காவலன் திரைப்படம் தனுஷின்
ஆடுகளம் படத்திற்கு போட்டியாகவே வெளியிடப்பட்டிருந்தது.
ஆனாலும் தனுஷின் ஆடுகளம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான
தேசிய விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது.விஜய்க்கு கிடைக்கவில்லை.
இதற்கான காரணம் என்ன என்று பலர் மண்டையை பிச்சுக்கொண்டு
இருந்த போது சில நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு கேட்டாங்க
என்ன காரணம் அப்படீன்னு!!(ஏன்'னா நான் தானே தேசிய விருது தேர்வுக்குழு தலைவரா இருக்கிறன் பாருங்க!)

நான் சொன்ன ஒரே பதில்..
மச்சான் தனுஷ் எல்லாம் இப்ப பீல்ட்'டுக்கு வந்த பயல்...
அதனால வேணும்னா அவங்களுக்கு தேசிய விருது
பெரிதாகத் தெரியலாம்.ஆனா .,
நம்ம இளைய தளபதி அதையெல்லாம் கடந்தவரு..
அவரோட குறி எல்லாம் ஆஸ்கார் தான் என்றேன்..

அவன் கட் பண்ணினானோ,போன் தானா கட் ஆச்சோ தெரியல
லைன் கட் ஆகிருச்சு!!

இன்னொரு தகவலும் தெரிய வருது என்னண்டா,
தமிழக அரசியலில மும்மரமாய் வேலை பார்த்ததால
தேசிய விருதுக்கான போட்டியிலிருந்து வாலண்டியரா
விலகிட்டாராம் நம்ம தளபதி..

இல்லாவிடின் ஆடுகளத்துக்கு ஏன் அத்தனை விருதுகள்
போயிருக்க வேண்டுமென்று நேற்று ப்ரீத்தி சிந்தா கூட
ஆதங்கமா கதைச்சாங்க..
அவங்க ஐ பி எல்'லில ஆடிக்கிட்டு இருந்ததால
தனுஷ் ஆத்தே ஆத்தே பாடலுக்கு ஆடின ஆட்டத்தை
ரொம்பவே மிஸ் பண்ணிட்டாங்களாம்!!

"உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாங்களா..
இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா.."
என்ற பாடல் வந்து ஆக்சுவலி ப்ரீத்தியை பார்த்து தான்
தாகூர் எழுதினவராம்...
அத சுட்டு இவங்க காசு பார்த்திட்டதாவும் கடுப்பாய்
கதைச்சாங்க ப்ரீத்தி!!

அப்ப தான் தெரிஞ்சுது அவங்க தமிழ் படம் கூட
பார்ப்பாங்கன்னு!!இந்த விஷயம் முதலே தெரிஞ்சிருந்தா,
மணி ரத்னம்கிட்ட புது படம் நடிக்க வந்த சான்ஸ்'ச
விஜய்க்கு விட்டு குடுத்திருப்பேனா...
ஆத்தே ஆத்தே ஆட்டத்தை விட எத்தனை குத்து
ஆட்டங்கள் போட்டிருப்போம்...அப்பிடியே ஒரு நாலு
ஸ்டெப்பு போட்டிருந்தம்னா ஒரு பாட்டில,இப்ப ப்ரீத்தி
சிந்தா என் காலடில பாருங்க!!!அப்பிடியே அசந்திருக்க மாட்டாங்க!!!
அசர விடாம அடிக்கிறது தானே நம்ம பாலிசி!!

அப்பவும் சோதிடர் சொன்னார் உனக்கு ஏழரை நடக்குது
நடக்க கூடாதது எல்லாம் நடக்கும்னு...
இப்பிடி ஒரு சான்ஸ் மிஸ் ஆகும்னு அவர் கூட சொல்லேல
பயபுள்ள..ஒருவேளை,தெரிஞ்சுகிட்டும் பொறாமைல
சொல்லாம மறைச்சிருப்பாரோ??

Vijay completes Kavalkaran first schedule

எது எப்படியோ மாப்பிளை படத்துக்கு தான் அடுத்த வருடம்
தேசிய விருது குடுப்பாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க...
அந்த விருது கிடைச்சா தனுஷுக்கு பெரிய சந்தோசமாய்
இருக்குமாம் ஆடுகளம் விருதை விட!!
காரணம் என்னென்னு சத்தியமா எனக்கு தெரியல பாஸ்..

ஆனா நிச்சயமா விஜய் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிலிம் பெயார்
அவார்டு குடுப்பாங்களாம் !!
விருது கிடைச்சா நம்மள மாதிரி அடி மட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தானே பாஸ்!!

ஆனா எனக்கென்ன ஒரு கவலைன்னா...
பழைய மாதிரி விஜயகாந்த் படங்களை பார்த்துவிட்டு
மொக்கையாய் விமர்சனம் போடா முடியாதுன்னு தான்..
உடன மைனஸ் ஒட்டு குத்திடுவான்களே!!

டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!

இப்போ ஒரு கிழமையா,கனிமொழியும் வடிவேலும் தான் சூப்பர் ஹிட்டு ..
பதிவுலகத்துக்கு கையில ஒரு மேட்டர் கிடைச்சிட கூடாது ..
அடுத்த தேர்தலில அம்மா தோத்தாங்கன்னா,
அவங்களையும் போட்டு உருட்டி எடுப்பாங்க நம்ம பசங்க...
அப்பிடி பாரபட்சம் பார்க்கமாட்டாங்க பாருங்க..
அது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச மேட்டரே!!!

Post Comment

51 comments:

செங்கோவி said...

//எது எப்படியோ மாப்பிளை படத்துக்கு தான் அடுத்த வருடம்
தேசிய விருது குடுப்பாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க...// அதை விட டாகுடருக்கே கொடுத்திடலாம்.

மருதமூரான். said...

///டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!///

மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை

விக்கி உலகம் said...

கொய்யால.......
என்னதான்யா சொல்றே ஒரு புண்ணாக்கும் புரியல ஹிஹி!

செங்கோவி said...

//டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!// இது நல்லா இருக்கே..

மைந்தன் சிவா said...

//செங்கோவி said...
//எது எப்படியோ மாப்பிளை படத்துக்கு தான் அடுத்த வருடம்
தேசிய விருது குடுப்பாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க...// அதை விட டாகுடருக்கே கொடுத்திடலாம்./

டாக்க்டருக்கு குடுக்கிரதுன்னு குறியாத்தான் இருக்கீங்க போல!!

மைந்தன் சிவா said...

//மருதமூரான். said...
///டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!///

மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை மரண மொக்கை//

ஏன் யா உளறுகிறீர்???

மைந்தன் சிவா said...

//விக்கி உலகம் said...
கொய்யால.......
என்னதான்யா சொல்றே ஒரு புண்ணாக்கும் புரியல ஹிஹி!//

புண்ணாக்கு பத்தி எல்லாம் நான் சொல்லவே இல்லையே பாஸ்!!

ஆக்சுவலி சினிமா பத்தி டீடெயிலா கதைச்சுகிட்டிருக்கோம்...
நீங்க இன்னும் மாடு,புண்ணாக்குன்னு அதை மறக்கல போல...

விக்கி உலகம் said...

எலேய் நக்கலு........!

மைந்தன் சிவா said...

//விக்கி உலகம் said...
எலேய் நக்கலு........!//

அப்பிடீன்னா??இப்போ எனக்கு ஒண்ணுமே புரியல..ஹிஹி

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

மைந்தன் நக்கலா? நல்லா யோசிக்கிறிங்கள் :))))

கார்த்தி said...

அது சரி ஏன் மைந்தன் சிவாவிற்கு சிறந்த தேசிய பதிவர் விருது இன்னமும் கிடைக்கவில்லை???

கார்த்தி said...

இந்த முறை எப்பிடியாவது ஓட்டு குத்தலாமெண்டு வந்தா என்ன இண்ட்லி மக்கர் பண்ணுது!
இந்த எரர் மெசேச் வருது
The page you were looking for doesn't exist!
It may have been removed or you may have arrived here by using a bad URL
Try searching for the article you are looking for.
Visit the Homepage to see the most recent stories.
Browse categories and tags to find a related story.

மைந்தன் சிவா said...

//தோழி பிரஷா( Tholi Pirasha) said...
மைந்தன் நக்கலா? நல்லா யோசிக்கிறிங்கள் :)))///

மறுபடியும் நக்கலா???

ஆக்சுவலி ஐ ஆம் டோக்கிங் சீரியஸ்லி!!!!!!

நான் எங்க பாசம்மா(பாஸ்'கு எதிர் பால் என்னவோ!) ஜோசித்தேன்??உண்மைய சொல்லுறன் ஹிஹி

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
அது சரி ஏன் மைந்தன் சிவாவிற்கு சிறந்த தேசிய பதிவர் விருது இன்னமும் கிடைக்கவில்லை???//

ஹிஹி நான் தான் வேணாம்னு வாலண்டியரா விலகிட்டேன்...ஹ்ஹி

கார்த்தி said...

என்ன சார் தமிழ்10 இலயும் அதே பிரச்சனை!!

மன்னிக்கவம் நீங்கள் தேடும் பக்கம் கிடைக்கவில்லை
நீங்கள் தவறான ஓர் பக்கத்திற்கு வந்துள்ளீர்கள்
முதல் பக்கத்திற்குச் சென்று சமீபத்திய பதிவுகளை பார்வையிடவும்.

நீங்கள் தேடும் பக்கத்தை தெளிவான குறிச்சொல்லுடன் கீழே தேடவும்

மைந்தன் சிவா said...

இன்ட்லியில் என்ன கோளாறு எனக்கு...இப்படி மர்க்கர் பண்ணுது!!

மைந்தன் சிவா said...

ஒரு வேளை இன்லியும் தமிழ் பத்தும் டாக்டர் ரசிகர்களாக அல்லது தனுஷ் ரசிகர்களாக இருப்பாங்களோ??
முரண்டு பிடிக்குறாங்க பதிவை பார்த்ததும் ஹிஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னா நைனா நம்ம இளைய தளபதிய வம்புக்கு இழுத்துவிட்டிருக்கே! அவிங்களோட பேன்ஸ் உன்னைய செதைச்சிட மாட்டாங்க?

கார்த்தி said...

எனக்கும் இண்ட்லியில் ஒரு மாதத்தின் முன் பிரச்சனை இருந்தது! நான் அவர்களிடம் எனது பிரச்சனை யை மெயில் பண்ணி தீர்க்க சொன்னவுடன் அவர்கள் 3நாட்களில் அதை தீர்த்து விட்டார்கள்!! எதற்கும் அவர்களுக்கு தகவலை தெரியபடுத்தவும்
They will ask your problem fully and give the good response!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எலேய், தனுஷுன்னா நோக்கு அவ்ளோ எளக்காரமா போச்சா! அவரு இம்மாம் பெரிய ஆளுதெரியுமா? யாரோட மருமகேன் தெரியும்ல!

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இன்னா நைனா நம்ம இளைய தளபதிய வம்புக்கு இழுத்துவிட்டிருக்கே! அவிங்களோட பேன்ஸ் உன்னைய செதைச்சிட மாட்டாங்க?//

ஆக்சுவலி நானும் தளபதி பான் தான் நைனா...இது சும்மா லுல்லூ

ஜீ... said...

//டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!//
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு! :-)

மைந்தன் சிவா said...

//ஜீ... said...
//டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!//
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு! :-)//:) :-) கொலை வெறி!!

Ashwin-WIN said...

அஸ்வின் ரிப்பீட் மருதமூறான் ஐயா கமென்ட்..
(நானும் கமென்ட் பண்ணிட்டான்.. நானும் ஓட்டு குத்திட்டன்)

கார்த்தி said...

ஓட்டு எண்ணிக்கை 3 , 3 எண்டுதானே இருக்கு யாரையா புதுசா ஓட்டு குத்தினதெண்டு மொக்கை பதிவருக்கே மொக்கை பொடுறது???

ஓட்டு குத்தவந்து குத்தமுடியாமா நான் படுற பாட்டில!!

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
ஓட்டு எண்ணிக்கை 3 , 3 எண்டுதானே இருக்கு யாரையா புதுசா ஓட்டு குத்தினதெண்டு மொக்கை பதிவருக்கே மொக்கை பொடுறது???

ஓட்டு குத்தவந்து குத்தமுடியாமா நான் படுற பாட்டில!!//

ஹிஹி அத வைச்சு இன்னொரு மொக்கையா??

இல்ல பாஸ் இன்ட்லி ஐந்தை தாண்டிவிட்டது..

கார்த்தி said...

வெற்றி வெற்றி அவர்களின் தளத்திற்கு நேரே சென்று தேடி போட்டேன்.
ஆனால் உங்களது தளத்திலுள்ள ஓட்டளிப்பு பட்டையோ இன்னும் பிழையான தொகையை தான் காட்டுகிறது! அதோடு அங்கிருந்து கிளிக் செய்து ஓட்டளிக்க முடியவில்லை!!!

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
வெற்றி வெற்றி அவர்களின் தளத்திற்கு நேரே சென்று தேடி போட்டேன்.
ஆனால் உங்களது தளத்திலுள்ள ஓட்டளிப்பு பட்டையோ இன்னும் பிழையான தொகையை தான் காட்டுகிறது! அதோடு அங்கிருந்து கிளிக் செய்து ஓட்டளிக்க முடியவில்லை!!!//

ஹிஹி கொலை வெறி...

இன்ட்லி பலருக்கு மர்க்கர் பண்ணுது...பலருக்கு தமிழ்மணம்..

பேசாமல் ஜெட்லி அப்பிடீன்னு ஒரு திரட்டியை தொடங்கலாம்னு இருக்கேன் நானு!

NKS.ஹாஜா மைதீன் said...

நம்ம டாக்குடரு விஜய்லாம் விருது வாங்கனும்னு நினைக்காததால்தான் மற்றவர்கள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள்...விருது வாங்கனும்னு முடிவு பண்ணிட்டாருன்னா அப்புறம் அவர் படத்தை அவரே பார்க்கமாட்டார்.....

Anonymous said...

////நான் சொன்ன ஒரே பதில்..
மச்சான் தனுஷ் எல்லாம் இப்ப பீல்ட்'டுக்கு வந்த பயல்...
அதனால வேணும்னா அவங்களுக்கு தேசிய விருது
பெரிதாகத் தெரியலாம்.ஆனா .,
நம்ம இளைய தளபதி அதையெல்லாம் கடந்தவரு..
அவரோட குறி எல்லாம் ஆஸ்கார் தான் என்றேன்..

அவன் கட் பண்ணினானோ,போன் தானா கட் ஆச்சோ தெரியல
லைன் கட் ஆகிருச்சு!!/// பாஸ் நம்ம டாக்குத்தர வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே

Anonymous said...

/////இன்னொரு தகவலும் தெரிய வருது என்னண்டா,
தமிழக அரசியலில மும்மரமாய் வேலை பார்த்ததால
தேசிய விருதுக்கான போட்டியிலிருந்து வாலண்டியரா
விலகிட்டாராம் நம்ம தளபதி../// ஆமா நம்பிட்டம்...

மைந்தன் சிவா said...

கமென்ட் போட முடியிலியா??மனோ சாருக்கு முடியலையாம்..அதுதான் நான் ஒரு டெஸ்டிங் கமெண்டு..

MANO நாஞ்சில் மனோ said...

விஜய்க்கு ஆஸ்கர் கிடைக்க யாகம் நடத்துவோம், பாகம் நடத்துவோம், கும்பம் நடத்துவோம்...!!!

Nesan said...

இது ரொம்பவும் ஓவர் நடனத்தையும் சிலுசிலுப்பையும் காட்டிப்புட்டு தேசியவிருந்து கேட்பது என் வாழ்க்கைடா கடவுளே!

மைந்தன் சிவா said...

//MANO நாஞ்சில் மனோ said...
விஜய்க்கு ஆஸ்கர் கிடைக்க யாகம் நடத்துவோம், பாகம் நடத்துவோம், கும்பம் நடத்துவோம்...!!!//

ஏன் கடா வெட்டி படிக்கிறது??அத மிஸ் பண்ணீட்டீங்க போங்க..

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

ஏன் பாஸ் ஏன்

ஏன் இந்த கொலை வெறி ??

யாதவன் said...

0
)=

akulan said...

கனநாளைக்கு பிறகு விஜய்......

shanmugavel said...

சிவா ,டிஸ்கி சூப்பர்.விடுப்பா விஜய்க்கும் கிடைக்கும் .தமிழுக்கு இத்தனை கொடுத்தாங்களே அதுவே சந்தோஷம்.

மதுரன் said...

//ஆக்சுவலி நானும் தளபதி பான் தான் நைனா...இது சும்மா லுல்லூ//

அப்பிடி போடுங்க அரிவாள

மதுரன் said...

ஆஹா காப்பி பண்ணிட்டாங்களே! காப்பி பண்ணிட்டாங்களே! நீங்க பதிவு போட்டு சரியா 4 மணி நேரத்தில காப்பி பண்ணிட்டாங்க பாஸ்
http://www.vijayfans-santhosh.co.cc/2011/05/blog-post_4937.html

மைந்தன் சிவா said...

//மதுரன் said...
ஆஹா காப்பி பண்ணிட்டாங்களே! காப்பி பண்ணிட்டாங்களே! நீங்க பதிவு போட்டு சரியா 4 மணி நேரத்தில காப்பி பண்ணிட்டாங்க பாஸ்//

விடுங்க பாஸ்..கீழே எனது பெயர் குறிப்பிட்டிருக்கும் வரையில் சந்தோசமே!!

Jana said...

இந்த வருடம் கண்டிப்பாக கிடைத்துவிடும்...

sinmajan said...

இது மரண மொக்கையா ..மொக்கையா ;) #டபுட்டு

அன்புடன் மலிக்கா said...

டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!//

அதுசரி அது இதுதானா..

FOOD said...

//டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!//
ஓ அப்படியா?

ஹேமா said...

டிஸ்கிதான் பதிவின் உச்சம் !

நிரூபன் said...

என்ன காரணம் அப்படீன்னு!!(ஏன்'னா நான் தானே தேசிய விருது தேர்வுக்குழு தலைவரா இருக்கிறன் பாருங்க!)//

லஞ்சம் தந்தால், கள்ள விருதெல்லாம் கொடுப்பீங்களா.

நிரூபன் said...

நம்ம இளைய தளபதி அதையெல்லாம் கடந்தவரு..
அவரோட குறி எல்லாம் ஆஸ்கார் தான் என்றேன்..//

ஆஹா...அஹா...ஓஹோ...ஓஹோ....

நிரூபன் said...

டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!//

இது தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையா. கலக்கல் சகோ.
என்னம்மா குத்தியிருக்கிறீங்க. பலே கில்லாடி தான்.

மைந்தன் சிவா said...

//நிரூபன் said...
டிஸ்கி:என்ன தான் முக்கினாலும் சிரிப்பே வராத பதிவுகள் "மரண மொக்கை பதிவுகள்" எனப்படும்!!//

இது தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையா. கலக்கல் சகோ.
என்னம்மா குத்தியிருக்கிறீங்க. பலே கில்லாடி தான்.

//
ஹிஹி புரிகிறதா???ம்ம்ம்

Related Posts Plugin for WordPress, Blogger...