
காட்சி ஒன்று:
முன்னொரு காலம்...இற்றைக்கு இருபது முப்பது வருடத்துக்கு முன்னர்,எம் ஜி ஆர் என்கிற மாபெரும் சக்தி தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழ்மக்களையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.அதே காலத்தில் தான் சிவாஜி எனும் நடிப்பு திலகம் மறுபக்கம் ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கிக்கொண்டிருந்தது.ரசிகர்கள் ,தமிழர்கள் சிவாஜியின் நடிப்பை போற்றினார்கள்.புகழ்ந்தனர்.ஆனால் எம் ஜி ஆரை தூக்கி வைத்து கொண்டாடினர்.காரணம் என்ன?சிவாஜி சீரியசான,காத்திரமிக்க கதைகளில் நடித்துக்கொண்டிருந்தார்.எம் ஜி ஆர் தியேட்டர் செல்லும் மக்களை குஷிப்படுத்தும் வகையிலான படங்களில் நடித்தார்.மக்கள் நடிப்பை(சிவாஜியை) பார்த்தனர்.எம் ஜி ஆரை கொண்டாடினர்.முதல்வராக்கினார்.
காட்சி ரெண்டு:
அதற்க்கு பிந்திய காலம்...ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னர் தொடங்கி இன்று மட்டும்,ரஜனி என்ற மந்திரம் தமிழர்களையும் தமிழ்சினிமாவையையும் கட்டி போட்டு வைத்திருக்கிறது.இதே காலகட்டத்தில் பெருத்த ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கி உலகநாயகன் என்ற அந்தஸ்தோடு அங்கீகரிக்கப்பட்டவர் தான் கமல் ஹாசன்.கமலின் நடிப்பை புகழ்ந்தனர்.அடுத்த சிவாஜி என்றனர்.ஒஸ்கார் நாயகன் என்றனர்.ஒஸ்காரை தாண்டிய நடிப்பு என்றனர்.ஆனால் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை வழங்கவில்லை அவர் படங்கள்.நடிப்புக்காக போற்றப்பட்டது.ஆனால் ரஜனியோ,மசாலா படங்கள்,ஹீரோயிச படங்கள் போன்றவற்றில் நடித்தார்.சூப்பர் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார்.வசூல் நாயகன் ஆனார்.அனைத்து தலைமுறை மக்களுக்கும் சிறுவர் முதல் பெரியோர் வரை பிடித்த நாயகன் ஆனார்.
முதல் காட்சிக்கும் இரண்டாம் காட்சிக்கும் ஒற்றுமைகள் பல இருப்பதை அவதானித்திருப்பீர்கள்!நடிப்பு,வித்தியாசமான நடிப்பு என்று இருந்த நடிகர்களின் நடிப்பு மக்களால் அங்கீகரிக்கப்பட்டது,போற்றப்பட்டது.இவர்கள் ரசிகர்கள் பெருமளவான ஆர்ப்பாட்டாமில்லாத,சத்தம் இல்லாத வகையில் படங்களை ரசித்தனர்.மசாலா கதைகள் ,மாஸ் ஹீரோ திரைப்படங்கள் நடித்தவர்கள் படங்கள் வசூல் ரீதியாக சாதனைகள் படைத்தன.மக்கள் மனதில் கொள்ளை இடம் பிடித்தவர்களும் இவர்கள் தான்.இவர்கள் ரசிகர்கள் என்றாலே ஆர்ப்பாட்டம் சரவெடி தான்!
இதை கூற காரணம்:இளைய தளபதி விஜய் எப்பவுமே மசாலா திரைப்படங்களில் தான் நடிக்கிறார்.இதை விட வேறுபட்ட கதைகளை எதிர்பார்த்தோம் என்று படம் பார்த்துவிட்டு கருத்து கூறுபவர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது.விஜய்க்கு என்று ஒரு "way " இருக்கிறது.அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.அது தான் மசாலா திரைப்படங்கள்.மசாலா திரைப்படம் என்றால் சின்ன குழந்தையும் சொல்லும் அது விஜய் படம் தான் என்று.மசாலா திரைப்படங்கள் தோற்றிருக்கலாம்.காரணம் இருக்கிறது.
மசாலா திரைப்படம் என்பது இயக்குவது மிக கடினம்.மிகுந்த அவதானம் தேவை.ரசிகர்கள் ஆட்டம்,பாடல்,சண்டை,காமெடி,செண்டிமெண்ட் என்று அத்தனையையும் எதிர்பார்ப்பார்கள்.ஒன்று குறைந்தால் கூட படத்தை குப்பையில் போட்டுவிடுவார்கள்.சாதாரண ஒரு கதை கொண்ட உதாரணத்துக்கு:நாணயம்,மங்காத்தா போன்ற படங்களில் அடி நாதம் ஒன்றாக இருக்கும்.அதாவது அந்த மிஷன்'ஐ முடிப்பது.அதனால் அந்த மாதிரியான கதைகளில் அதிகம் பரந்து பட்டு ஜோசிக்க வேண்டிய தேவையும் இருக்காது.ரசிகர்களும் பரந்துபட்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.விஜய் அடுத்து கவ்தம் மேனனோடு நடிக்கும் "யோகன்" படமும் இதே வகையறாவுக்குள் தான் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசாலா நாயகர்களின் படங்களில் போய் லாஜிக் பார்ப்பவர்களை என்ன சொல்வது?அன்றிலிருந்து இன்று வரை மசாலா படங்களில் லாஜிக் இருக்கவே இருக்காது.எம் ஜி ஆர் படங்களோ அல்லது ரஜனி படங்களோ லாஜிக் மீறல்கள் இருக்கும்,ஆனால் அவை கண்டும் கண்டுக்காமல் விடப்பட்டது காரணம் அவர்கள் மசாலா நாயகர்கள்..மாஸ் ஹீரோக்கள்.அதே மசாலா நாயகன்,மாஸ் ஹீரோ விஜய் படத்தில் சிறிதாக ஒரு லாஜிக் மீறல் வந்தாலே ஊத்தி பெருப்பித்துவிடுவார்கள்.உதாரணமாக ரஜனியின் என்திரனில்,ஒரு ரயில் சண்டை வரும்.சிட்டி ரோபோ தான் அடிபடும்.ரோபோ இரும்பில் செய்யப்பட்டது.ஒவ்வொரு அடியும் இடியென இறங்கியும் கூட அடிவாங்கி விழுந்த வில்லன்கள் அடுத்த கணம் எழும்பி மீண்டும் சண்டை பிடிப்பார்கள்.எந்தவகையில் லாஜிக் இது?அது அப்படித்தான்.!!மசாலா படங்களில்,மாஸ் ஹீரோ கரெக்டர் படங்களில் லாஜிக் மீறல்களை பெருதுபடுத்தி கதைப்பது உங்களின் இயலாமை அல்லது வில்லத்தனம்.
விஜய் என்றால் அவர் என்ன என்ன விடயங்களை முன்னிலைப்படுத்துவார் அவரின் படங்களில் என்று அனைவருக்குமே தெரியும்.அந்தந்த விடயங்கள் பிடிக்காதவர்கள் எதற்கு விஜய் படம் பார்க்க போகிறீர்கள்?அதுவும் அடித்துபிடித்து முதல் நாள்,இரண்டாம் நாள் ஷோ?உங்களுக்குள்ளும் ஒரு விஜய் ரசிகன் இருக்கான் அல்லது படத்தை பார்த்து அதிலுள்ள ஓட்டைகளை ஊதிப்பெருதாக்கி விமர்சனம் செய்து ஆதாயம் தேடத்தானே?இந்த புளைப்புக்கு போயி உங்கட சொந்த பிழைப்பை பார்க்கலாமே!
விஜய் என்றால் இளக்காரம்.அவரின் ரசிகர்கள் என்றால் இளக்காரம்.எந்த ஒரு நடிகருக்கும் இத்தனை பரந்துபட்ட எதிர்பார்ப்பு இல்லையென்றே தோணுகிறது.காரணம் விட்டில் பூச்சிகளை போல விஜய் படம் வெளிவரும் போது தான் சிலர் கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழும்புகிறார்கள் போலும்!அதிகமாக விமர்சிக்கப்படும் ஒரே தமிழ்சினிமா நாயகன் விஜய் தான்.காரணம்?பொறாமை?என்ன இழவோ,பலருக்கு விஜய் தூக்கத்தை கெடுக்கிறார் என்பது உண்மை தான்.அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.:
இத்தனை நாட்களாக விஜய் படங்கள் பார்த்திருப்பீர்கள்.பிடிக்கவில்லையா?பார்க்காதீர்கள்.மசாலா நாயகன் என்று தெரியும் தானே.ஏன் அதற்க்கு அப்பால் எதிர்பார்க்கிறீர்கள்?நீங்கள் விமர்சிப்பதற்கு பிழை செய்தவர் விஜய் அல்ல.நீங்கள் தான்!!!
எல்லா நடிகர்களுக்கும் பிளாப் வரத்தான் செய்யும் ஒரு காலத்தில்.விஜய்யின் அந்த காலம் சுறா திரைப்படத்துடன் முடிந்துவிட்டது.
காவலனில் தொடங்கிய வெற்றிப்பயணம் வேலாயுதம் நண்பன் யோகன் என்று அதற்க்கு அடுத்த முருகதாஸ் படம் வரைக்கும் தொடரத்தான் போகிறது.
காவலனில் தொடங்கிய வெற்றிப்பயணம் வேலாயுதம் நண்பன் யோகன் என்று அதற்க்கு அடுத்த முருகதாஸ் படம் வரைக்கும் தொடரத்தான் போகிறது.
93 comments:
lj;jlhkkh
ரத்தத்தின் ரத்தங்களே எங்கள் உடன் பிறப்புகளே!!!//
யோவ்! கடைசில இப்பிடியா ஓட்டு கேக்குறது.
சரியான போடு.அதுதான் உண்மை. விஜய்க்காகவோ/நான் விஜய் படங்களை பார்க்க விரும்புவதற்காகவோ சொல்லவில்லை.விஜய்யைப் பிடிக்காதவர்களுக்கு கூட இங்கு சொல்லப்பட்டதிலுள்ள நியாயம் புரியுமென்றே நினைக்கிறேன்.(புரிந்தாலும் புரிந்ததுபோல் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.ஏதாவது விதண்டாவாதம்தான் செய்வார்கள்.ஏனென்றால் அதுதானே அவர்களின் பிழைப்பு.)
உங்களுக்கு பிடித்த விடயங்களை நீங்கள் ரசிக்கலாம்.பிடிக்காத விடயங்களை தவிர்க்கலாம்.
பிடித்த விடயங்களையும் பிடிக்காத விடயங்களையும் விமர்சிக்கவும் உரிமையுண்டு.ஆனால்...
அதற்கும் ஒரு எல்லையுண்டு.
உங்களுக்கு பிடித்தவற்றை உயர்த்திக் காட்டுவதற்காக உங்களுக்கு பிடிக்காதவற்றை(மற்றவர்களுக்குப் பிடித்தவற்றை) தேவையற்ற விதத்தில் அதிகப்பிரசங்கித்தனமாக கேவலப்படுத்திப் பேசுவதற்கு உங்களுக்கு உரிமையுமில்லை.அதிகாரமுமில்லை.
உங்களின் அபிமான நடிகரின் படத்தை வெற்றியாக்கவேண்டுமென்றால் அந்தப்படத்தின் சிறப்புக்களைப்பற்றி உலகெங்கும் எடுத்து ஓதுங்கள்.அதற்காக அடுத்தவரைப்பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு,உங்களின் மரியாதையையும் திறமையையும் நேரத்தையும் வீணடித்துக்கொண்டு இருக்காதீர்கள்.
மதுரன் பதிவில் இருக்கும் தருமர் - சகுனி கதையை வாசித்தாலே போதுமே! இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். எங்களை விட விஜயை ரசிப்பவர்கள் அவர்களே!
மிக மிக சூடாக ஒரு பதிவை எழுதி இருக்கிறீர்கள்.
என்னுடைய பின்னூட்டத்தை எந்த விட முடிவும் செய்து கொள்ளாமல் படியுங்கள்.
முதலில் விஜய் அவர்களை எம்ஜியார் மற்றும் ரஜினியோடு ஒப்பீட்டதற்கு என் கண்டனங்கள்.
கோபப்படாதீர்கள். எம்ஜியார் மற்றும் ரஜினி இருவரும் தானாக உருவானவர்கள். விஜய் அவர்களைப்போல உருவாக்கப்பட்டவர். ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று எதை வைத்து சொல்கிறீர்கள். ரஜினியின் பழைய படங்களை எல்லாம் நீங்கள் பார்த்தது கிடையாதா?
மசாலா திரைப்படங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கலாம். ஆனால் அவை அளவோடு இருக்கவேண்டும். எம்ஜியார், ரஜினி இருவரும் நடித்த காலகட்டம் வேறு. ரஜினியே கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் இன்னும் இருபது வருடங்களுக்கு முந்தய பாணியிலேயே நடித்து கொண்டிருக்கிறார்.
கமர்சியல் படத்திலேயே லாயிக் பார்க்க கூடாது. இது சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் வேறு. இதில் வந்து முதுகு சொறிபவர்களை என்ன சொல்வது
உங்களின் கடைசி சில பதிவுகளில் தாழ்வு மனப்பாண்மைதான் தெரிகிறது. விஜய் மீதோ, அவரது ரசிகர்கள் மீதோ யாருக்கும் இளக்காரம் கிடையாது. அதே போல விஜய்யை பார்த்து பொறாமை பாடுபவர்களும் கிடையாது. எந்த காலத்திலும் விஜய் ரஜினி ஆகி விட முடியாது என்பது அழிக்க முடியாத ஒரு உண்மை.
உங்களுக்கு பிடிக்கலன்னா பாக்காதீங்க அப்படின்னு சொல்லி இருக்கிறீர்கள். சரி அப்படியே விட்டுடலாம். நீங்க சும்மா இருப்பீங்களா? டீன்ஏஜ் கவர்மேந்தின் சீஃப் மினிஷ்டர், சின்ன ரஜினி, என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, கடைசியில் ரஜினி படங்களையே வீழ்த்துவேன் என்று கொக்கரிக்கிறீர்களே...
இதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. காமெடியாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.
இவ்வளவு நியாயம் பேசும் நீங்கள் பவர் ஸ்டார் பற்றியோ, டிஆர் பற்றியோ எழுதி இருக்க கூடாது. உங்களுக்கு அவர்களைப்பார்த்தால் இளக்காரமாக இருக்கிறதல்லவா? அவர்கள் செய்வதை பார்த்தால் காமெடியாக இருக்கிறதல்லவா? அவர்களை கிண்டல் செய்ய உரிமை இருக்கிறதல்லவா? அதே போல மற்றவர்களுக்கும் உரிமை இருப்பதை ஏன் ஏற்றிக்கொள்ள மறுக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?
பொதுவாக விஜய் ரசிகர்கள் எல்லோருமே அவர் படத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் அதே சாயலில் வேறு யாராவது நடித்து வெளிவந்திருந்தால் துவைத்து எடுத்திருப்பார்கள். இதே வேலாயுதம் இந்நேரம் வேறு யாராவது நடித்து வெளிவந்திருந்தால் கடித்து குதறி இருப்பார்கள். உண்மைதானே?
எல்லா நடிகர்களுக்கும் பிளாப் வரத்தான் செய்யும். அது கண்டிப்பா மாறும். இனி வரப்போகும் விஜய் படங்கள் எல்லாமே வெற்றி பெற விரும்பும் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.
ஏற்கனவே பாலா சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டாதினால் ஒண்ணே ஒண்ணு கடைசியா நாம பிறக்கிறப்ப நாம யாருக்கும் போலியாய் பிறப்பதிலை சாகும் போது கூட அப்பிடியே இருப்பது சிறப்பு
ரஜினிக்கு அடுத்தபடி வசூலில் சாதனை படைத்திருப்பதுவும்,அப்படியொரு ஓபினிங்க்கும் அமைந்திருப்பதும் விஜய்க்கு என்பது விஜய் ரசிகர்கள் கூறிய விடயமல்ல.அந்த சினிமா துறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது என்று நான் அறிந்திருக்கிறேன்.
அதே போல- டீன் ஏஜ் சீஃப் மினிஸ்டர்- என்பதையும் விஜய் ரசிகர்கள் கூறவில்லை, அது நெஞ்சினிலே படத்தில் ஒரு காட்சிக்கு இயக்குனர் விரும்பியபடி கவிஞரால் எழுதப்பட்ட பாடலின் வரி.
அதை கொஞ்சம் நினைத்துப்பார்த்துக்கொண்டு கருத்துரைக்கவேண்டும்.
http://www.youtube.com/watch?v=HyuzNP_UP4w இது எப்பிடி இருக்கு .....??????????????????? காமெடியா இல்லையா ?????? :)
http://www.youtube.com/watch?v=K8BwU0m2ssc&feature=related
ஹிஹி இது எப்பூடி இருக்கு ???? லாஜிக்!! மீறல்கள் எங்கே ??? :)
@//இதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. காமெடியாகவே எடுத்துக்கொள்கிறார்கள்."//
காமெடியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்ற கருத்துச்சொல்லியவர்கள் கந்தசாமி அண்ணாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
கந்தசாமி அண்ணாவுக்கு பாராட்டுக்கள். நல்லொரு டைமிங்கான கேள்வி.
நீங்க ரொம்ப நொந்து போய் இருக்கீங்க ... உங்கள் பக்கம் நான் இருக்கேன் நண்பரே ..... கவலைபடாதீங்க ... என்ன செய்ய .... விஜய் நல்லவர் தான் , அவர் நடிச்ச படங்கள் தான் ஓடவில்லை . பாவம் அவர் என்ன செய்வார் ...? அவரும் முயற்சி பண்ணிதான் பார்க்கிறார் ....
எனக்காக மெனக்கெட்டு யூடியூபில் தேடி லிங்க் கொடுத்ததற்கும், உங்க டைமிங்கை சுட்டி காட்டிய நண்பருக்கும் மிக்க நன்றி.
இவற்றை எல்லாம் காமெடி என்று சொல்கிறீர்களா? உங்களுக்கு சிரிப்பாக வருகிறதா? அப்படியானால் இதே காமெடியை விஜய் செய்தால் அதுவும் காமெடிதானே.
நான் முதலில் சொல்லி இருக்கும் கருத்துக்களை படித்தீர்களா என்று தெரியவில்லை.
//ரஜினியின் கால கட்டம் வேறு. ரஜினியே கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் இன்னும் இருபது வருடங்களுக்கு முந்தய பாணியிலேயே நடித்து கொண்டிருக்கிறார்.
இது நான் சொன்னது. நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அந்த காலகட்டங்களில் அவற்றை ரசித்தவன். ஆனால் இப்போது தொலைக்காட்சியில் இதே படங்கள் ஒளிபரப்பும்போது, கண்டிப்பாக கேலி செய்வோம்.
///அந்த காலகட்டங்களில் அவற்றை ரசித்தவன்./// ஏனையவர்கள் ரசித்தார்கள் என்பதைவிட ஹீரோயிசம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆனால் இன்று அவ்வளவு சீக்கிரம் மக்களை ஏமாற்ற முடியவில்லை ..அது தான் தாங்கள் சொன்ன "ரஜினியே கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற முயன்று கொண்டிருக்கிறார்" ;)
வணக்கம் மைந்தன் மேலே பாலா சொன்ன கருத்துக்கள் தான் என்னுடையதும்.....
விஜய் ஓரு மாஸ் ஹீரோ அதில் எந்த சந்தேகமும் இல்லை..அவர் ஓரு சிறந்த நடிகர் என்பதற்கு அவரது பல படங்கள் சாட்சி
ஆனால் விஜய் ரசிகர்கள் சிலர் செய்யும் சில ஓவர் பந்தாதான் அவர் விமர்சிக்கப்பட காரணம்..
படங்கள் தோல்வியடைவது எல்லா நடிகர்களுக்கும் வழமைதான் அஜித்தின் படங்கள் அன்மையில் நிறைய படங்கள் தோல்விதான் ஆனாலும்...மங்காத்தா வெற்றியடைந்தது......அப்போது அஜித்தை யாரும் விமர்சிக்கவில்லை..காரணம் என்ன?
தயவு செய்து விஜய் மட்டும் ஏன் இப்படி ஏன் விமர்சிக்கப்படுகின்றார் என்று சற்று நேரம் சிந்தித்தால் புரியும் இதற்கு விஜய் காரணம் இல்லை அவரது சில(கவனிக்க எல்லோறும் இல்லை)ரசிகர்கள் செய்யும் ஓவர் பந்தாதான்......
இப்ப பாருங்கள் வேலாயுதம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அதற்கு வேலாயுதம் மெகா ஹிட் சூப்பர் ஹிட் என்று எல்லாம் செய்தி வருகின்றது ஓரு படத்தின் வெற்றியை இரண்டு நாட்களில் கனிக்க முடியுமா?
விஜக்கு உள்ள மாஸ் அந்தஸ்திற்காக முதல் நாட்களில்..கூட்டம் அலைமோதுவது தவிர்கமுடியாதது....ஆனால் தொடர்ந்து அந்தப்படம் எப்படி ஓடுகின்றது என்பதை வைத்துதான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகின்றது.
///பாலா said...
எனக்காக மெனக்கெட்டு யூடியூபில் தேடி லிங்க் கொடுத்ததற்கும், உங்க டைமிங்கை சுட்டி காட்டிய நண்பருக்கும் மிக்க நன்றி. //// இல்ல பாஸ் .. நான் 'மினைக்கெட்டு தேடவில்லை'. ஏற்கனவே பர்ர்த்து சிரித்தது தான்.. ஆனா நீங்க இப்போ சொன்ன 'லாஜிக்' என்ற வார்த்தை தான் எனக்கு மீண்டும் அதை நினைவு படுத்தியது ;)
நன்றி நண்பரே. மெனக்கெட்டு என்று சொன்னதற்கு சிரமப்பட்டு என்று அர்த்தம் அல்ல.
நான் சொல்ல வரும் விஷயம் புரிந்ததா என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு சினிமாதான் எல்லாமே. அதில் தோன்றுபவர்களை சூப்பர் ஹீரோக்கள் என்று நம்பினார்கள். இப்போது அப்படி இல்லை. ஆகவே மக்களை நம்ப வைக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. இல்லை என்றால் காமெடி பீஸ் ஆகி விடுவோம். ஆனால் விஜய் எந்த கவலையுமே இல்லாமல் அப்படி செய்கிறார். ஆகவேதான் அவரை காமெடி பீஸ் ஆக்குகிறார்கள்.
//ஏனையவர்கள் ரசித்தார்கள் என்பதைவிட ஹீரோயிசம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆனால் இன்று அவ்வளவு சீக்கிரம் மக்களை ஏமாற்ற முடியவில்லை ..அது தான் தாங்கள் சொன்ன "ரஜினியே கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற முயன்று கொண்டிருக்கிறார்" ;)
சரியாக புரிந்து கொண்டீர்கள். உங்களுக்கு புரிந்தது விஜய் அவர்களுக்கு புரியாமல் போனது ஏனோ? அதை மட்டும் சிந்திக்க மறுக்கிறீர்கள்.
///பாலா ...// உங்கள் இறுதி கருத்தோடு நானும் உடன்படுகிறேன் .. ஆனா ரஜனியை எந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் கொண்டாடுகிரார்களோ அதே போல தான் விஜய் ரசிகர்களும்...
இன்றும் 'சூப்பர் ஹீரோ' என்ற மன நிலை தான் சினிமா ரசிப்பு தாண்டிய தனி மனித வழிபாடுகளுக்கு வழிவகுக்கிறது ...
உதாரணத்துக்கு வேலாயுதம் படம் வெளிவந்த கணம் இடம்பெற்ற விஜய் ஆராதனைகள்...., இதே நிலை தான் எந்திரன் படம் வெளியான போதும் .............! இவற்றை செய்வது ஒரு குறிப்பிட்ட பகுதி தான் .
சரிதான். ஆனால் நண்பர் கேட்டது விஜயை மட்டும் ஏன் கிண்டல் செய்கிறார்கள் என்று அதற்குத்தான் நான் பதில் சொல்லி இருந்தேன், ரஜினியோட கால கட்டம் வேறு, விஜய்யோட கால கட்டம் வேறு என்று. நிச்சயமாக விஜய் ஒரு தரமான படத்தில் நடித்தால் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதற்கு சில ரிஸ்க்குகள் எடுக்க வேண்டும். ஆனால் விஜய் அதை எடுக்க பயப்படுகிறார். இந்த மாதிரி மாஸ் படங்களை குறைந்தது அவரது ரசிகர்களாவது ஓட வைத்து விடுவார்கள். ஆகவே தான் இப்படி நடிக்கிறார். இதனால் அடுத்தவர்களின் கேலிக்கு ஆளாவது இயல்பு.
வெகு நாட்களாக நான் பலரிடம் கேட்கும் கேள்வி. விஜய் ஏன் சந்தோஷ் சுப்ரமண்யம் மாதிரியான படங்களில் நடிப்பதில்லை? அதையே உங்களிடமும் கேட்கிறேன்.
////
பாலா said...
//ஏனையவர்கள் ரசித்தார்கள் என்பதைவிட ஹீரோயிசம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆனால் இன்று அவ்வளவு சீக்கிரம் மக்களை ஏமாற்ற முடியவில்லை ..அது தான் தாங்கள் சொன்ன "ரஜினியே கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற முயன்று கொண்டிருக்கிறார்" ;)
சரியாக புரிந்து கொண்டீர்கள். உங்களுக்கு புரிந்தது விஜய் அவர்களுக்கு புரியாமல் போனது ஏனோ? அதை மட்டும் சிந்திக்க மறுக்கிறீர்கள்////
இதான் பாஸ் யதார்த்தம்
இப்ப கூட பாருங்க பாலா அண்ணே வேலாயுதம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கு அதுக்குள் மெகாஹிட்,சூப்பர் ஹிட் என்று விஜய் ரசிகர்கள்...சொல்கின்றார்கள்..இரண்டு நாட்களில் ஓரு படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியுமா?......
வேலாயுதம் வெற்றியா தோல்வியா என்று நான் கூற விரும்ப வில்லை. இன்னும் சிறிது நாட்களில் தெரிந்து விடும். அது குறித்த விவாதாங்கள் தேவை அற்றது.
//பாலா said...//
//எம்ஜியார் மற்றும் ரஜினி இருவரும் தானாக உருவானவர்கள். விஜய் அவர்களைப்போல உருவாக்கப்பட்டவர். ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று எதை வைத்து சொல்கிறீர்கள். ரஜினியின் பழைய படங்களை எல்லாம் நீங்கள் பார்த்தது கிடையாதா? /
நான் ரஜனிக்கு நடிக்க தெரியாதென்று கூறவில்லையே.பொதுவில் கூறும்போது கமல் ஹாசன் நடிகன்.ரஜனி மாஸ் என்ற கருத்து தானே முதலில் வரும்!
//மசாலா திரைப்படங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கலாம். ஆனால் அவை அளவோடு இருக்கவேண்டும். ///
ஆம் உண்மை தான்,ஆனால் ஒன்று அல்லது இரண்டு படங்களில் சில லாஜிக் மீறல்கள் பெருமளவில் இருந்துவிட்ட பட்சத்தில் அடுத்து வரும் அனைத்து படங்களிலும் லாஜிக் மீறலே இருக்க கூடாது,அதையும் மீறி சிறிதளவு இருந்தாலும் அதனை ஊத்தி பெரிதுபடுத்துவது அவசியமற்றதே என் கருத்து.
// ரஜினியே கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் இன்னும் இருபது வருடங்களுக்கு முந்தய பாணியிலேயே நடித்து கொண்டிருக்கிறார்.//
எதை வைத்து இருபது வருடத்துக்கு முன்னைய பாணி என்கிறீர்கள் அண்ணே?புரியவில்லை.இருபது வருடத்துக்கு முன்னைய பாணி என்றால் அவரின் அத்தனை படங்களுமே கழிக்கப்பட்டிருக்கும்!
////வெகு நாட்களாக நான் பலரிடம் கேட்கும் கேள்வி. விஜய் ஏன் சந்தோஷ் சுப்ரமண்யம் மாதிரியான படங்களில் நடிப்பதில்லை? //நிச்சயமா இது தான் விஜயின் முன்னேற்றத்தை விரும்பும் நல்ல ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் இருக்கும்...
// டீன்ஏஜ் கவர்மேந்தின் சீஃப் மினிஷ்டர், சின்ன ரஜினி, என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, கடைசியில் ரஜினி படங்களையே வீழ்த்துவேன் என்று கொக்கரிக்கிறீர்களே...
இதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. காமெடியாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.//
அப்படி ஒரு சிலரே கொக்கரிக்கின்றனர்,அதே மாதிரியான மோட்டுத்தனமான ரசிகர்கள் எல்லா நடிகர்களுக்குமே உண்டு.
இன்னமும் ரஜனி அரசியலுக்கு வர வேண்டும்,அடுத்த முதலமைச்சர் அவர் தான் வந்தால் என்று கூறும் ரஜனி ரசிகர்களும் இருக்கவே செய்கின்றனர்.
This comment has been removed by the author.
//பாலா said.../
//இவ்வளவு நியாயம் பேசும் நீங்கள் பவர் ஸ்டார் பற்றியோ, டிஆர் பற்றியோ எழுதி இருக்க கூடாது. உங்களுக்கு அவர்களைப்பார்த்தால் இளக்காரமாக இருக்கிறதல்லவா? அவர்கள் செய்வதை பார்த்தால் காமெடியாக இருக்கிறதல்லவா? அவர்களை கிண்டல் செய்ய உரிமை இருக்கிறதல்லவா? அதே போல மற்றவர்களுக்கும் உரிமை இருப்பதை ஏன் ஏற்றிக்கொள்ள மறுக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? ///
உண்மை தான்.ஆனால் நான் கதைப்பது,ஒவ்வொரு முறையும் விஜய் படம் பார்க்க போகின்றனர் விஜய்யை பிடிக்காத போதிலும்.விஜய்யின் வழி இது தான் என்று தெரிந்த பின்னரும் கூட முதல் நாள் ஷோ போய் பார்ப்பதும்,வந்து அரைகுறை நொண்டிச்சாட்டு கதைப்பவர்களை என்னவென்பது?
//பொதுவாக விஜய் ரசிகர்கள் எல்லோருமே அவர் படத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் அதே சாயலில் வேறு யாராவது நடித்து வெளிவந்திருந்தால் துவைத்து எடுத்திருப்பார்கள். இதே வேலாயுதம் இந்நேரம் வேறு யாராவது நடித்து வெளிவந்திருந்தால் கடித்து குதறி இருப்பார்கள். உண்மைதானே?///
அப்படியா?ஒரு உதாரணம் சொல்லுங்களேன் பார்ப்போம் அண்ணே?எந்த விஜய் ரசிகனாவது ஒரு மசாலா படம் வரும் போது துவைத்து எடுத்த சந்தர்ப்பம்?அலல்து படம்?
மைந்தன் சிவா நச் பதிவு...
டாக்டர் விஜய் வாழ்க...
வேலாயுதம் வெற்றி...
வேலாயுதம் வெற்றி...
வேலாயுதம் வெற்றி...
//பாலா said...
எனக்காக மெனக்கெட்டு யூடியூபில் தேடி லிங்க் கொடுத்ததற்கும், உங்க டைமிங்கை சுட்டி காட்டிய நண்பருக்கும் மிக்க நன்றி.
இவற்றை எல்லாம் காமெடி என்று சொல்கிறீர்களா? உங்களுக்கு சிரிப்பாக வருகிறதா? அப்படியானால் இதே காமெடியை விஜய் செய்தால் அதுவும் காமெடிதானே. ///
அவற்றை ரஜனி செய்யும் போது,அதை விமர்சிக்காதவர்கள் அதே மாதிரி விடயத்தை விஜய் செய்யும் போது மட்டும் விமர்சிக்க எங்கிருந்து வருகிறார்கள் என்று தான் கேட்கிறேன் பாலா அண்ணே!
//பாலா said...
சரிதான். ஆனால் நண்பர் கேட்டது விஜயை மட்டும் ஏன் கிண்டல் செய்கிறார்கள் என்று அதற்குத்தான் நான் பதில் சொல்லி இருந்தேன், ரஜினியோட கால கட்டம் வேறு, விஜய்யோட கால கட்டம் வேறு என்று. நிச்சயமாக விஜய் ஒரு தரமான படத்தில் நடித்தால் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதற்கு சில ரிஸ்க்குகள் எடுக்க வேண்டும். ஆனால் விஜய் அதை எடுக்க பயப்படுகிறார். இந்த மாதிரி மாஸ் படங்களை குறைந்தது அவரது ரசிகர்களாவது ஓட வைத்து விடுவார்கள். ஆகவே தான் இப்படி நடிக்கிறார். இதனால் அடுத்தவர்களின் கேலிக்கு ஆளாவது இயல்பு. ///
அதே....ஆனால் அதே போல விஜய்யின் வழமையான அம்சங்களை தவிர்த்து ஒரு படம் நடிக்கும் போது விமர்சனம் எழுதுபவர்கள் எவ்வாறு எழுதுவார்கள்?
"விஜய்யின் வழமையான காமெடி சென்ஸ் இதில் காணவில்லை...'
"விஜய்யின் டான்ஸ் மிஸ்ஸிங்'
"விஜய்க்கு மாஸ் ஹீரோ வேலை செய்யவில்லை போலும்''
'விஜய் மொத்தத்தையும் அடக்கி பெட்டிப்பாம்பு போல பதுங்கிவிட்டார்.'
இந்த மாதிரி எழுதுபவர்கள் விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிவா பார்முக்கு வந்தாச்சா? வாழ்த்துக்கள்.நல்ல அலசல்.
திறந்த மனதுடனான பாலாவின் வாதத்துக்கு தலை வணங்குகிறேன். என் கருத்துடனோ, அல்லது மைந்தன் கருத்துடனோ எல்லோரும் ஒன்றி போக வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு ஒரு முறை இருக்கின்றது. அதை பாலா and KSS Raja சொந்த புரபைலில் செய்கிறார்கள். இதை சில முதுகெலும்பில்லாத கோழைகள் கவனிக்க.
K.s.s.Rajh ஓரு படத்தின் வெற்றியை இரண்டு நாட்களில் கனிக்க முடியுமா?//
இதை நாங்கள் மட்டுமா செய்கிறோம், எல்லா படங்கள் வெளியிடப்படும் போதும் கவனிக்க..
பொதுவாகவே பலருக்கும் வேலாயுதம் விஜயின் முந்தைய படங்களை விட பிடித்து போயிற்று. தவிர தீபாவளி ரேசில் வந்த ஏழாம் அறிவு பிரமாண்டமாக இருந்த போதும் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்பதும் உண்மை. ரா ஒன தமிழில் சொதப்பல் என்பதும் பலர் கூறி அறிந்தோம். எனவே அடுத்த பொங்கல் வரை வேலாயுதம் வழியில் எந்த படங்களும் பெரிய தாக்கத்தை செலுத்தாது.
காவலனை ஹிட் என்று சொல்லும் (அது உண்மையும் கூட) நாங்கள் ஏன் வேலாயுதத்தை மெஹா ஹிட் என வர்ணிக்க கூடாது.
KANA VARO said...
திறந்த மனதுடனான பாலாவின் வாதத்துக்கு தலை வணங்குகிறேன். என் கருத்துடனோ, அல்லது மைந்தன் கருத்துடனோ எல்லோரும் ஒன்றி போக வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு ஒரு முறை இருக்கின்றது. அதை பாலா and KSS Raja சொந்த புரபைலில் செய்கிறார்கள். இதை சில முதுகெலும்பில்லாத கோழைகள் கவனிக்க/////
புரபைலை மறைத்து கருத்துக்களை சொல்பவர்களின் கருத்துக்களை பற்றி கவலை அடைய தேவையில்லை பாஸ் கருத்துக்களை சொந்தமாக வெளியிட தைரியம் இல்லாதவர்களின் கருத்துக்களை நாம் கண்டு கொல்லவே தேவையில்லை
////
KANA VARO said...
K.s.s.Rajh ஓரு படத்தின் வெற்றியை இரண்டு நாட்களில் கனிக்க முடியுமா?//
இதை நாங்கள் மட்டுமா செய்கிறோம், எல்லா படங்கள் வெளியிடப்படும் போதும் கவனிக்க..
பொதுவாகவே பலருக்கும் வேலாயுதம் விஜயின் முந்தைய படங்களை விட பிடித்து போயிற்று. தவிர தீபாவளி ரேசில் வந்த ஏழாம் அறிவு பிரமாண்டமாக இருந்த போதும் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்பதும் உண்மை. ரா ஒன தமிழில் சொதப்பல் என்பதும் பலர் கூறி அறிந்தோம். எனவே அடுத்த பொங்கல் வரை வேலாயுதம் வழியில் எந்த படங்களும் பெரிய தாக்கத்தை செலுத்தாது.
காவலனை ஹிட் என்று சொல்லும் (அது உண்மையும் கூட) நாங்கள் ஏன் வேலாயுதத்தை மெஹா ஹிட் என வர்ணிக்க கூடாது////
இங்குதான் பாஸ் பிரச்சனை இருக்கின்றது....இரண்டு நாட்களில் மெகா..ஹிட்..சூப்பர் ஹிட் என்று வர்ணிக்கும் போது...இடையில் வரும் சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடும் போது மயக்கம் என்ன,ஓஸ்தி போனற படங்கள் வர இருக்கின்றனதானே(தமிழ் சினிமாவில் இப்படி பல படங்கள் ஓடியிருக்கின்றது)
வேலாயுதம் மெகா ஹிட்டானாலும் கூட...என்ன கதைப்பார்கள்...பார் வேலாயுதததை தூக்கிவைத்து கதைதார்கள் இப்போது அது சின்ன படங்களுடன் ஓப்பிடும் போது அதிக நாள் ஓடவில்லை என்று ஓரு கருத்து கிளம்பும்....
உங்களுக்கு ஒன்று சொல்ல நான் நினைக்கின்றேன்.....விஜயை தமிழ் சினிமாவில் விமர்சிக்கப்படும் நபராகிவிட்டார்..எனவே அவரது படங்களின் வெற்றியின் மூலம் தான் அவர் பதிலடி கொடுக்கவேண்டும்...
எனவே அவரது ரசிகர்கள் வேலாயுதம் வெற்றிகரமாக பல நாட்கள் ஓடும் வரை பொறுமை காக்க வேண்டியது அவசியம்.
உதாரணத்துக்கு...சுறா தோல்வியின் பின் விஜய் நடித்த காவலன் படம் வந்த போது பலர் இதுவும் தோல்வியடையும் என்றுதான் கூறப்பட்டது..ஆனால் விஜய் ரசிகர்கள் இல்லை இது மெகா ஹிட்,சூப்பர் ஹிட் என்று எந்த கருத்தும் சொல்லவில்லை...எனவே காவலன் வெற்றியடைந்த போது விஜயை விமர்சித்தவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இதே காவலன் வெளியாகிய போது..விஜய் ரசிகர்கள் இது மெகா ஹிட்..சூப்பர் ஹிட் என்று கூறியிருந்தால்....நிச்சயம் காவலன் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கும்..பெரியளவில் வெற்றியடைய வில்லை என்று சாடியிருப்பார்கள்..இதான் நண்பா யாதார்த்தம்.....
சற்று யோசித்துபாருங்கள் ஏன் விஜயை மட்டும் எல்லோறும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள் என்று உங்களுக்கு புரியும்.....
//டீன்ஏஜ் கவர்மேந்தின் சீஃப் மினிஷ்டர், சின்ன ரஜினி, என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, கடைசியில் ரஜினி படங்களையே வீழ்த்துவேன் என்று கொக்கரிக்கிறீர்களே...
இதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. காமெடியாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.//
பாலா சார் ஒரு சில அடித்தட்டு ரசிகர்களின் கருத்துக்களை மட்டுமே வைத்து தாங்கள் வாதாடிகிறீர்கள். இவைதான் விஜயை கிண்டலடிப்பதற்கு காரணம் என்று சொன்னால் அது உங்கள் அறியாமை. அப்படி பார்க்கப்போனால் எல்லா நடிகர்களுக்கும் இவ்வாறான அடித்தட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் கவனிக்கவேண்டும்
நண்பா ராஜ் சும்மா காமடி பண்ணாதிங்க
உங்களுக்கு இன்னும் பதிவுலகம் சரியாக பிடிபடவில்லை. எதற்கும் ஒரு ரவுண்டு அடித்துபாருங்கள்.
//K.s.s.Rajh said...
இப்ப கூட பாருங்க பாலா அண்ணே வேலாயுதம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கு அதுக்குள் மெகாஹிட்,சூப்பர் ஹிட் என்று விஜய் ரசிகர்கள்...சொல்கின்றார்கள்..இரண்டு நாட்களில் ஓரு படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியுமா?......//
இப்போது முதல் நாளிலேயே தீர்மாணிக்கமுடியும் ராஜ்.
//வெகு நாட்களாக நான் பலரிடம் கேட்கும் கேள்வி. விஜய் ஏன் சந்தோஷ் சுப்ரமண்யம் மாதிரியான படங்களில் நடிப்பதில்லை? அதையே உங்களிடமும் கேட்கிறேன்.//
எங்களுக்கும் அந்த ஆர்வம் இருக்கிறது பாலா. நண்பன் அந்த ஆவலை பூர்த்திசெய்யும்
@
மதுரன் said...
//K.s.s.Rajh said...
இப்ப கூட பாருங்க பாலா அண்ணே வேலாயுதம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கு அதுக்குள் மெகாஹிட்,சூப்பர் ஹிட் என்று விஜய் ரசிகர்கள்...சொல்கின்றார்கள்..இரண்டு நாட்களில் ஓரு படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியுமா?......//
இப்போது முதல் நாளிலேயே தீர்மாணிக்கமுடியும் ராஜ்/////
ஹா.ஹா.ஹா.ஹா. மது இது பெரிய ஜோக் மேலே நான் KANA VARO வின் கேள்விக்கு சொல்லியுள்ள பதிலை பாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு புரியும்.....
@
மதுரன் said...
நண்பா ராஜ் சும்மா காமடி பண்ணாதிங்க
உங்களுக்கு இன்னும் பதிவுலகம் சரியாக பிடிபடவில்லை. எதற்கும் ஒரு ரவுண்டு அடித்துபாருங்கள்////
ஹா.ஹா.ஹா.ஹா.....
விளக்கப் பதிவா சிவா????? தொடர்க உங்கள் பதிவுலக சேவை !
பாஸ் இங்க நீங்க காவலன் படத்தை ஹிட் என்று சொல்லியதில் இருந்தே நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறீர்கள் என்று புரிகிறது ... நீங்கள் எப்படி உங்கள் விசையை ரசிக்க உரிமை இருக்கிறதோ அதே போல எங்களுக்கும் நக்கல்விட உரிமை இருக்கிறது... ஏம்பா சினிமாங்கிறது உங்களுக்கு மட்டுந்தான் சொந்தமா , பொதுவெளிக்கு வந்துட்டா யார் வேணுமானாலும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ... நீங்கள் யாரையாவது தப்பாக விமர்சித்தால் யாரும் support செய்ய வர மாட்டார்கள் , ஆனால் விஜய் அவர்களை ஊரே சேர்ந்து ஓட்டுவதில் இருந்து தெரியவில்லையா தவறு யார் மீது என்று?
SUPERRRRRRRRR KALAKKALA IRUKKU EVANUKKUM THALAPATHYA PESA THAKUTHIKIDAIYATHU。。。。。。。。。THANKSSSSSSSSSS
"ராஜா" said...
//ஆனால் விஜய் அவர்களை ஊரே சேர்ந்து ஓட்டுவதில் இருந்து தெரியவில்லையா தவறு யார் மீது என்று? //
சுப்பிரமணிய பாரதியாரையே பைத்தியக்காரன் என ஓட்டிய உலகமையா இது. சும்மா எல்லாவற்றையும் கண்டுபிடித்தமாதிரி கதைக்காதீர்கள்.
hi Raja unakku mandaiyila onnume illainnu ninaikkiren you check all sitela 100% KAAVALAN hitt theriyamal pesatha unna mathiri velankathavan irukkura varaikkum ippadithaan vera ennatha solla...
அடப்பாவிகளா..இங்கயுமா..ரைட்டு..
:-)
மிக சூடாக பதிவை எழுதி இருக்கிறீர்கள்...
இனிய இரவு வணக்கம் மைந்தன் அண்ணே,
வந்தேன், பதிவினைப் படித்தேன்.
ஓட்டளித்தேன். வருகிறேன்
ஹி...ஹி...
நீங்கள் சொல்வதை விளங்கிக் கொள்கிறீர்கள் இல்லை. உங்கள் பக்க நியாயத்தையே மீண்டும் மீண்டும் வழிமொழிகிறீர்கள்.
நீண்ட நாட்கள் அதாவது நூறு நாட்களை கடந்து ஓடினால் தான் அது வெற்றிப் படம் என்று யார் சொன்னது?
குருவி 150
சச்சின் 200
நான் இவற்றை வெற்றிப் படங்கள் என்கின்றேன். நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
மயக்கம் என்ன வந்தாலென்ன எந்த கிறக்கம் என்ன வந்தாலென்ன வேலாயுதம் பிக் அப் ஆகிவிட்டது. அது வெளியிடப்பட்ட தியேட்டர்களில் 80 சதவீதமானவற்றில் 50 நாட்கள் வரை ஓடும், 20 சதவீதமான தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடும், 5 சதவீதமான தியேட்டர்களில் 150 ஐ தொடலாம்! இரண்டு, மூன்று தியேட்டர்களில் 200 நாளைத் தாண்டலாம். சந்திரமுகி ஒரேயொரு தியேட்டரில் மட்டும் தானே 800 நாட்களைக் கடந்தது.
வெற்றி கிடைக்கும் வரை எங்களைப் பொறுத்திருந்து பார்க்கச் சொல்லும் நீங்கள், ஏன் கொஞ்ச நாள் பொறுத்திருந்து எங்கள் வெற்றியைப் பார்க்க கூடாது.
நீங்கள் பதிவுலகத்திற்கு வந்த பிறகு பரபரப்பாக அடிபட்ட படம் வேலாயுதமாக இருக்கலாம் (நீங்கள் விமர்சனம் எழுதிய முதல் படமும் இது தான்) அதனால் இவ்வாறு “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதிடுகிறீர்கள். போகப் போக எல்லாம் சரியாகிவிடும்.
நான் விஜயின் வேலாயுதத்தையும் சுறாவையும் வெற்றிப்படம் என விமர்சனம் எழுதிய ஆள் கிடையாது. சந்தேகம் இருந்தால் என் முன் பதிவுகளை தட்டிப் பார்க்கவும். வேலாயுதத்தை “ஹிட்” லிஸ்ட்டில் சேராத படம் என யாராவது சொன்னால் அதை பொறுக்க முடியாது.
மதுரனை விட ‘விஜய்’ விசயத்தில் நான் கோபக்காரன். இனி உங்கள் விளக்கங்களை அடுக்குங்கள்.
மேல் உள்ளது kss rajh ஆன பதில்
வேலாயுதம் வெற்றிச் சந்திப்பு
http://www.youtube.com/watch?list=PL2FB3E04DA624D1DA&feature=player_embedded&v=bJQ09IpEgps
லிங்கை இணைக்காட்டி ஏதோ விஜய் ரசிகர்கள் சும்மா புளுடா விடுறாங்கள் எண்டு சிலவேளை நினைச்சிடும் சனம்.
மாப்ள ரைட்டு...நடத்துங்க...வாழ்த்துக்கள்!
இங்கு கருத்திடும் அனைத்து விஜய் ரசிகர்களிடமும் ஓரு கேள்வி
இந்தக்கேள்வியை எங்களிடம் கேட்டீர்கள் நான் அதை உங்களிடம் கேட்கின்றேன்
எத்தனையோ நடிகர்கள் இருக்க விஜய் மட்டும் ஏன் கலாய்க்கப்படுகின்றார்?
இதற்கு உங்கள் தரப்பு பதில் என்ன? சொல்லுங்கள்.
மேலே என் கேள்விக்கு யாராவது விஜய் ரசிகர்கள் பதில் சொல்லுங்கள் அப்பறம் நான் என் கருத்தை சொல்கின்றேன்
//K.s.s.Rajh said...
இங்கு கருத்திடும் அனைத்து விஜய் ரசிகர்களிடமும் ஓரு கேள்வி
இந்தக்கேள்வியை எங்களிடம் கேட்டீர்கள் நான் அதை உங்களிடம் கேட்கின்றேன்
எத்தனையோ நடிகர்கள் இருக்க விஜய் மட்டும் ஏன் கலாய்க்கப்படுகின்றார்?
இதற்கு உங்கள் தரப்பு பதில் என்ன? சொல்லுங்கள்.//
இதற்க்கான பதில் பதிவிலுள்ளது நண்பா..
ஆர்ப்பாட்டமான அதிரடியான மாஸ் எனப்படும் அந்த ஹீரோயிசம் தான் பலர் கண்ணுக்கு குத்துகிறது..பலரால் கலாய்க்கப்படும் அதே சமயம் சிலரால் பழிவாங்கவும் படுகிறார்!
//"ராஜா" said...
பாஸ் இங்க நீங்க காவலன் படத்தை ஹிட் என்று சொல்லியதில் இருந்தே நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறீர்கள் என்று புரிகிறது ...///
அடிப்படை சினிமா அறிவு கூட இல்லாத உங்களிடம் கதைத்து பயன் இல்லை சகோ!
இப்ப என்ன காவலன் ப்ளாப் என்கிறீங்க?ஓகே ப்ளாப் தான்.
வேலாயுதம் அட்டர் ப்ளாப்?ஓகே அதுவும் ப்ளாப் தான்.
சந்தோசமா?
போயி வேலைய பாருங்கப்பூ!
K.s.s.Rajh said.//
The film has been declared a hit due to its massive opening and has been branded as a complete commercial and family entertainer. Apart from Vijay, music by Vijay Anthony is also one of the USPs of Velayutham for making it reach the masses.
http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-11-05/velayutham-jayam-ravi-29-10-11.html
வணக்கம் மைந்தன் அண்ணா,
உங்கள் பதிவு அருமை. அதில் தென்படும் உங்கள் ஆவேசமும், ஆதங்கமும் எனக்கு நன்றாகவே புரிகிறது. உங்கள் லாஜிக் எல்லாம் சூப்பர். அருமை. வாழ்த்துக்கள்.
பி.கு. நானும் விஜயை அதிகம் ரசித்த ஒருவன்தான்.. எப்பொழுதுமே ஒருத்தனுடைய நல்ல ரசிகன் அவனது திறமை வெளிப்பாட்டிலேயே (performance) அதிகம் கவனம் செலுத்துபவனாக இருக்க வேண்டும். அந்தவகையில், துள்ளாதமனமும் துள்ளும், கில்லி, பிரியமானவளே என விஜயை பிரமிப்போடு கொண்டாடிய ரசிகர்களில் நானும் ஒருவன். பின்னர் கொஞ்சம் தூரம் சென்றது உண்மைதான். அதற்கு நீங்கள் சொன்னது போல விஜயிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்த்ததும் அது நிறைவேறாமல் போனதும் ஒரு காரணம். நீங்கள் சொல்வது போல வேலாயுதம் தொடங்கி முருகதாசின் படம் வரை, அனைத்து படங்களும் என்னை மீண்டும் பழைய விஜய் ரசிகனாக மாற்றலாம். எனது ரசனைக்கு எல்லைகள் இல்லை. என்னை கவர்வனவற்றை ரசிக்கும் மனபக்குவம் எனக்கு உண்டு.. உங்கள் பதிவு மீண்டும் என்னை விஜய் பற்றிய எதிர்பார்ப்புக்களையும், தெளிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏதும் தவறுதலாக கூறியிருந்தால் மன்னிக்கணும் பாஸ்..
அன்புடன் பி.அமல்ராஜ்.
எப்படியோங்க வேலாயுதம் பிக்அப் ஆகிட்டார் போலிருக்கு!
NETHI ADI SUPER. THALAPATHY DA.
நல்ல பழுத்த பழம்தான் கல்லடி படும். தலைவர் விஜயும் அப்படிதான். சிலர் தாங்கள் முகங்களை காட்டிக்கொள்வதற்கு தலைவரைப்பற்றி விமர்சிக்கிறார்கள். சிலர் தலைவரை பிடித்த போதிலும் விமர்சிக்க தயங்குகிறார்கள். எங்கே விஜய் புகழ் பாடினால் நம்மை மட்டமாக நினைத்து விடுவார்களோ என்று. நம்மவர் ஒன்றும் ஆஸ்கார் விருதுக்காக படம் எடுக்கவில்லை. சிலர் சொல்கிறார்கள் இன்னும் இருபது வருட முந்தய கதைகளிலேயே விஜய் நடித்து கொண்டிருக்கிறார் என்று. இவர் வேண்டுமானால் கணிப்பொறி முன்பிருந்து தட்டுவதற்கு வளர்ந்து இருக்கலாம். விமர்சனங்களை படிக்க தெரியாத மக்கள் இருக்கிறார்கள் தலைவர் படத்தை ரசிப்பதற்க்கு. அவர்களுக்கு பொழுது போகனும் ஜாலியா அவ்வளவுதான். அம்மாதிரியான ரசிகர்கள் குறையும் போது நிச்சயம் மாற்றம் நிகழும் தலைவர் படங்களில். எனது வீட்டில் கூட விஜய் படம் பார்த்த பின் தான் தீபாவளி நிறைவடைந்தது.
இவண்
தட்டச்சு தெரிந்த மிக சாதாரண ரசிகன்.
மைந்தன் அந்த ராஜா பற்றி அலட்டத்தேவையில்லை. என்னை பொறுத்தவரை அவன் ஒரு மனநோயாளி என்றே சொல்வேன். அவனுடைய பதிவுகளையும் விஜய் பற்றிய பதிவுகளுக்கு அவன் அடிக்கும் கொமண்ட்ஸுகளையும் பார்த்தாலே புரியும். காவலனை மாத்திரமல்ல விஜயின் ஒட்டுமொத்த படங்களையே பிளாப் என்று வாதாடும் ஒரு சைக்கோ
//இங்கு கருத்திடும் அனைத்து விஜய் ரசிகர்களிடமும் ஓரு கேள்வி
இந்தக்கேள்வியை எங்களிடம் கேட்டீர்கள் நான் அதை உங்களிடம் கேட்கின்றேன்
எத்தனையோ நடிகர்கள் இருக்க விஜய் மட்டும் ஏன் கலாய்க்கப்படுகின்றார்?
இதற்கு உங்கள் தரப்பு பதில் என்ன? சொல்லுங்கள்.//
தம்பி ராஜ். முதலில் கருத்துக்களில் நேராக நில்லுங்கள். முதலில் எனது பதிவில் கூறிய கருத்துக்கும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விலகி இங்கு கூறும் கருத்துக்கும் எவ்வளவு சறுகல் வந்துவிட்டது பாருங்கள்.
முதல் நடுநிலையாளர் போல் பேசி உங்கள் கருத்து எடுபடாமல்போக பின்னர் சாய்ந்து சாய்ந்து எதிராகவே போய்விட்டீர்கள்
உங்கள் கேள்விக்கு பதில் வேண்டுமா??
சொல்கிறேன்.. நீங்கள் சொன்னீர்களே விஜய் பதிவென்றால் ஹிட்ஸ் கூடும் என்று.. அதேதான்
ராஜ்
படம் 100 நாளும் 200 நாளும் ஓடினால்தான் வெற்றி என்பதற்கு இது ஒன்றும் 1980 ஆம் ஆண்டோ அல்லது 1990 ஆம் ஆண்டோ அல்ல..
உங்களுக்கு இது பற்றி தனிப்பதிவே போட்டாலும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்
ஊருக்குள்ள போய் விசாரிச்சு பாருங்கப்பு..
thambi madhuran neengal ennai orumaiyil azhaippathil irunthe therikirathe yaar palaveenamaaka irukkiraarkal endru ... oddthapadaththai oodavillai endru sollum naane psycho endraal oodaatha padaththai oodiyathaaka sollum neengal ellaam enna vakai?
vijay illai yaar ippadi nadiththalum oottathaan seivaarkal ... naan amaithiyaakave irunthen aanaal intha blog ownerthan en pakkam vanthu ennai inghu vara seithaar ... illai endraal unkalai pondra podusukalai ellaam naan kandu kolluvathe illai ...
thambi mainthan siva tension aakaatheenga raasaa ... neengathaan intha pathivula yendaa visaiyai mattum oottureengannu kettu iruntheenga , athaan naan kaaranaththai sonnen ... maththapadi oorukke therintha visayam kavalan flop enpathu athai neengal meendum meendum hit endru sollumpothu comedyaaka therikirathu boss...
annoy annaththe bhaarathi paavam avarai vittudunga ...
innoru anony .... vaanga boss... ennathan solla vareenga neenga ... konjam puriyira maathiri sollungalen ...
என்ன தலைவா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டீங்களே..............
கொஞ்சமெண்டா இறங்கி அடிப்பீங்க பொல? ஏன் சார் இப்பிடி இருக்கிறீங்க? மசாலா படம் எண்டாலும் கொஞ்சமாவது வித்தியாசமா செய்யலாம்தானே. ஏன் முதலாவது show பாக்கிறதுக்கும் பிழை பிடிக்கிறதுக்குதான் பாக்கிறதெண்டு அர்த்தம் கொள்கிறீர்களே?? அதோட உங்களுக்கு பிடிக்கிறதெண்டுறதுக்காக மற்றவங்களும் துாக்கி கொண்டாடணும் எண்ணு எப்பிடி எதிர்பாக்கிறீங்க?
விஜய் ரசிகர்கள் பலர் மங்காத்தாவை பாக்காமலே சும்மா சகட்டு மேனிக்கு comments விட்டத மறந்துட்டீங்களா???
//கார்த்தி said...
கொஞ்சமெண்டா இறங்கி அடிப்பீங்க பொல?//
ஹிஹி சா ச்சா..
//ஏன் சார் இப்பிடி இருக்கிறீங்க? மசாலா படம் எண்டாலும் கொஞ்சமாவது வித்தியாசமா செய்யலாம்தானே.//
மசாலா'வில் எந்த வகையான வித்தியாசம் சொல்லுங்க?
//ஏன் முதலாவது show பாக்கிறதுக்கும் பிழை பிடிக்கிறதுக்குதான் பாக்கிறதெண்டு அர்த்தம் கொள்கிறீர்களே?? அதோட உங்களுக்கு பிடிக்கிறதெண்டுறதுக்காக மற்றவங்களும் துாக்கி கொண்டாடணும் எண்ணு எப்பிடி எதிர்பாக்கிறீங்க? //
அப்பிடி கொண்டாட சொல்லி எதிர்பார்க்கலியே?
நாரடிக்கிரதையே குறிக்கோளா கொண்டிருக்காம வேற எதையும் பண்ணலாம்னு தான் சொல்றேன்.
//விஜய் ரசிகர்கள் பலர் மங்காத்தாவை பாக்காமலே சும்மா சகட்டு மேனிக்கு comments விட்டத மறந்துட்டீங்களா???//
லொள்
மதுரன் said...
//இங்கு கருத்திடும் அனைத்து விஜய் ரசிகர்களிடமும் ஓரு கேள்வி
இந்தக்கேள்வியை எங்களிடம் கேட்டீர்கள் நான் அதை உங்களிடம் கேட்கின்றேன்
எத்தனையோ நடிகர்கள் இருக்க விஜய் மட்டும் ஏன் கலாய்க்கப்படுகின்றார்?
இதற்கு உங்கள் தரப்பு பதில் என்ன? சொல்லுங்கள்.//
தம்பி ராஜ். முதலில் கருத்துக்களில் நேராக நில்லுங்கள். முதலில் எனது பதிவில் கூறிய கருத்துக்கும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விலகி இங்கு கூறும் கருத்துக்கும் எவ்வளவு சறுகல் வந்துவிட்டது பாருங்கள்.
முதல் நடுநிலையாளர் போல் பேசி உங்கள் கருத்து எடுபடாமல்போக பின்னர் சாய்ந்து சாய்ந்து எதிராகவே போய்விட்டீர்கள்
உங்கள் கேள்விக்கு பதில் வேண்டுமா??
சொல்கிறேன்.. நீங்கள் சொன்னீர்களே விஜய் பதிவென்றால் ஹிட்ஸ் கூடும் என்று.. அதேதான்/////
வணக்கம் மது நான் விஜயை பல இடங்களில் கலாய்கவும் செய்தேன் அதே நேரம் அவரது திறமைகள் பற்றியும் சொல்லியும் வந்துள்ளேன்...இங்கே கவனிக்க....வேலாயுதம் பார்க முன்பு வேலாயுதத்தை கலாய்த்தேன் ஆனால் படம் பார்த்து வந்ததும் படம் பற்றிய விமர்சனத்தில்....நான்..படத்தை எந்த வகையிலும் கலாய்க்கவில்லை...வழமையான விஜய் படம் என்று ஓரு வார்த்தை குறிப்பிட்டிருந்தேன்....ஓரு சராசரி சினிமா ரசிகனாக எனக்கு அப்படிதான் தோன்றியது.....ஆனால் படம் பற்றிநான் சிறப்பாக விமர்சித்தேன்....
இங்க தான் மேட்டர் ஆனால் பல விஜய் ரசிகர்கள் என் நண்பர்கள் உடபட என் விமர்சனத்தை படித்து விட்டு நீ எப்படி வழமையான் விஜய் படம் என்று சொல்லுவ?ஓரே மாதிரி கதையா? இதில் எவ்வளவு மாறுதல் இருக்கு என்று என்னுடன் விவாதித்தார்கள்......சினிமா விமர்சனம் என்பது ஓரு நடிகரின் ரசினாக எழுதக்கூடாது அதை ஓரு சராசரி சினிமா ரசிகனாக எழுதவேண்டும் அதை நான் என் விமர்சனத்தில் சிறப்பாக செய்தேன்
ஆனால் விஜய் ரசிகர்களால் நான் வழமையான விஜய் படம் என்று சொன்னதை கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை பிறகு இவர்களுடன் நடுநிலை பேசி என்ன பிரயோசனம் மது......இப்ப சொல்லுங்க விஜய் விமர்சிக்கப்பட யார் காரணம்?
இங்கேயும் சொல்கின்றேன் எனக்கு விஜயை பிடிக்கும் அவர் சிறந்த மாஸ் ஹீரோ அதில் எந்த சந்தேகமும் இல்லை....
ஆனால் அவரது ரசிகர்கள் சிலரின் ஓவர் பந்தாதான் எனக்கு பிடிப்பதில்லை.....
ராச்சுக்கு நன்றி தூக்குறவனை எழுப்பலாம் தூங்குறவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது இத்தோட விட்டுடு ராச் இப்பதிவு விஜய் இரசிகர்களுக்கு எங்களை போல் விஜய் படத்தையும் பார்பவர்களுக்கு இல்லை நான் இதைப்பற்றி பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளேன் பாருங்கோ ராசுக்குட்டி...
தயவு கூர்ந்து பதிவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல்களை பின்னூட்டங்களில் தவிர்துக்கொள்ளுங்கள்.. அது அழகல்ல..!!!??
ராஜ், பாலா, காட்டான் மாமா
http://neethiarasan.blogspot.com/2011/10/blog-post_29.html
இந்த பதிவை படித்துவிட்டு சொல்லுங்கள். இத்தோடு நான் இந்த விடயத்தை விட்டுவிடுகிறேன்
அதை விட விஜய் இன்று நேற்றல்ல விஜய் அறிமுகமான காலம் தொடக்கம் அவர் பல இடங்களில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்....அவரை கதாநாயகனாக போட்டு சந்திரசேகர் படம் எடுத்த போது வெளிப்படையாகவே அவரிடம் சொன்னார்களாம் உங்களுக்கு ஏன் இந்த வேலை..என்று இதை சந்திரசேகரே சொல்லியிருக்கார்...
ஆரம்ப காலங்களில் விஜய் சரிவர நடனம் ஆட மாட்டார்...அப்போது எல்லாம்..விஜயின் நடனத்தை பலர் கிண்டல் அடிதது உண்டு..இன்று என்ன நடந்தது.....விஜய் டான்சில் பட்டைய கெளப்பவில்லையா?.....
விஜய் தனது வழமையான பாணியில் இருந்து பகவதியில் அக்ஷன் ஹீரோவாக மாறிய போது என்ன கதை வந்தது....விஜய்க்கு ஏன் இந்த வேலை...பேசாமல் தன் பாணியில் நடிக்கலாம் என்று....
திருமலை பக்கா கமர்சியல் படமாக வந்தது ஆனால் அந்தப்படம் எதிர்பார்த அளவு பெரிதாக போகவில்லை....ஆனாலும் அடுத்த அடுத்த படங்கள்...சிறப்பாக அமைந்தது அல்லவா.....
கில்லி வெற்றியடைந்த போது என்ன கதை வந்தது...அது பிரகாஸ்ராஜ் நடிப்பினால் தான் ஓடியது என்றும் ஓரு கதை வந்தது...பிரகாஸ்ராஜ் இல்லாவிட்டால் கில்லி ப்ளாப் ஆகியிருக்கும் என்று....
இன்னும் ஓன்று விஜய் நடித்த அனைத்துப்படங்களையும் நான் பார்த்துள்ளேன் ஓவ்வொறு படங்கள் வெற்றியடையும் போதும் சரி அது தோல்வியடையும் போதும் சரி விமர்சனம் என்பது வருகின்றது...இது பதிவுலகில் மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் இருக்கின்றது.....
பதிவுலக அரசியலை நன்றாக புரிந்து கொண்டால் எந்த சர்சையும் இருக்காது....பதிவு போட்டு கருத்துரைகளால் மோதிக்கொள்ளவேண்டிய தேவையும் இருக்காது.......
அந்த பதிவை நான் பார்த்தேன் இதைப்பற்றி நான் கதைக்கப்போனால் இன்னும் பிரச்சனை கூடும் நான் சொல்வது இது விஜய் ரசிகர்களுக்கான பதிவு ஊரில் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு அதுக்கு ஒருவரும் கருத்து சொல்ல மாட்டார்கள் இங்கு கருத்து சொல்லும் மூனு நாளு பேரும் ஒரு காத்திரமான பதிவில் என்ன கருத்திட்டார்கள்ன்னு எனக்கு தெரியும் எனது பிள்ளைகளுக்கு விஜய்யை பிடிக்கும் சிருவர்களுக்கு பிடித்த நடிகர்தான் மாஸ் ஹீரோ அதில் எந்த மாற்றமும் இல்லை நான் கூட சிறுவயதில் ரஜனி ரசிகந்தான் இவர்களை விட விஜய்யின் படங்களையும் அதிகம் பார்த்தவன் ஈழத்தில் திட்டமிட்டே இப்போது சினிமா ரசிகர்களை வளர்த்து மற்ற பிரச்சனைகளை திசை திருப்புகிறார்கள் இதைப்பற்றி நான் கதைத்தால் இந்த பின்னூட்டம் பதிவாகாது ஏன் எனில் நாற்று குழுமத்தில் நான் இட்ட கருத்துக்கூட எடுக்கப்பட்டுவிட்டது ஆகையால் மீண்டும் சொல்கிறேன் இது விஜய்யை தலைவனாக்க துடித்து நம்ம பிரச்சனைகளை பின் தள்ள முறற்சிப்போருக்கானது இதை நான் நன்றாக புரிந்து கொண்டுள்ளேன்... ஆகயால்தான் விஜய் ரசிகர் இல்லாத ராஜ்சை கொமொன் போடுவதை நிறுத்த சொல்கிறேன் மற்றும்படி நீங்கள் கும்மியடியுங்கோ நான் வரல ஏன்னா நான் எந்த கூத்தாடிகளையும் தூக்கி வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை... நன்றாக வாசியுங்கோ எந்த கூத்தாடியும்ன்னு சொல்கிறேன்...
நன்றி வணக்கம்...இனி நீங்க இந்த பதிவில் என்னை எப்படி செம்பை நெளித்தாளும் கருத்து சொல்லமாட்டேன் ஏன்னா எந்த கூத்தாடியும் எனக்கு சோறு போடமாட்டான் ??
@rajh :ஆமாம் பாஸ்...படம் வெற்றி பெற்றால் கரணம் விஜய் தவிர்த்து மற்றைய துணை நடிகர்கள்.படம் தோற்றால் காரணம் விஜய்.அது தானே அந்த அரசியல்?
மைந்தன் இதற்குமேல் கதைப்பது சரியல்ல விட்டுவிடுங்கள்.... இவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் விஜய் தேவைப்படுகிறார்.
காட்டான் மாமா தலவனாக கருதுவது வேறு. ஒருவருக்கு ரசிகனாயிருப்பது வேறு.. உங்களது புரிதல் தவறானது
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்..இங்கே நண்பர்களுடன் கருத்துக்களால் மோதவேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை நான் ஓரு சாராசரி சினிமா ரசிகன்..எனக்கு விஜயும் பிடிக்கும்,அஜித்தும் பிடிக்கும்...நான் எந்த நடிகருக்கும் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யும் வெறித்தனமான முட்டாள்தனமான ரசிகன் இல்லை...
இங்கே இந்த பதிவை எழுதிய நண்பன் மைந்தன் கூட விஜயை கலாய்த்து ஓரு பதிவு எழுதினார்...இங்கே பாருங்க-
http://kaviyulagam.blogspot.com/2011/08/blog-post_03.html
இதை மது நீங்கள் வாசிச்சு பார்த்தீங்களா?அதற்காக மைந்தன் விஜய் ரசிகன் இல்லை என்று அர்ததமா?
பதிவுலகை புரிந்து கொள்ளுங்கள் மதுரன் நீங்கள் இந்த விடயத்தை இவ்வளவு சீரியஸாக எடுப்பீங்க என்று நான் நினைக்கவில்லை.....தனிப்பட்ட உரையாடல்கள் எல்லாம் இங்கே சொல்லவேண்டிய தேவையில்லை..
அதைவிட நான்...இங்கே எதற்காக என் நண்பர்களுடன் விவாதிக்கவேண்டும் இங்கே நாம் கருத்துக்களால் மோதிக்கொண்டிருக்கும் போது விஜயை கலாய்த்து பல பதிவுகள் பதிவுலகில் வந்து கொண்டுதான் இருக்கு.....எனவே இங்கே...மைந்தனுடனோ...இல்லை மதுரனுடனோ.....நான் விவாதிப்பதில் எங்களுக்கு ஓரு நன்மையும் இல்லை...இதனால் வீண் மனஸ்தாபம் தான்....
எனவே நான் இத்துடன் என் கருத்துக்களை நிறுத்திக்கொள்கின்றேன்
நன்றி
இலங்கைப் பதிவாளர்களே நீங்கள் உண்மையில் பதிவுலகை நல்ல விசயத்துடன் செயல் படுத்த விரும்பினால் இன்றுடன் விசில் அடிக்கும் குஞ்சுகளின் பின் பதிவை நாடாதீர்கள் !
விசில் குஞ்சுகளே மதுரன் என்ற பதிவாளர் சிறகுகள்.கொம் வலைப்பதிவாளர் ஈழத்துத்து சினிமா என்ற விடயத்தை கையில் எடுத்த போது நீங்கள் எல்லாம் சுறாவில் மூழ்கி இருந்தீர்களா ???? கருத்துச் சொல்லும் மகான்களே முதலில் முகத்துடன் வாங்கோ பாலா பீரா முடிவு செய்யலாம் விசிலா வீராப்பா!
விட்டுக் கொடுக்காத விஜய் ரசிகனுக்கே உரித்தான பதிவு :)
அனால் பல விஷயங்கள் நியாயம் தான்.
எங்கே இவங்க எல்லாரும் விசைப் போட்டுத் தாக்கி ஓரங் கட்டுவதைப் பார்க்கையில் பரிதாபத்துக்காகவே இளைய தளபதி ரசிகன் ஆயிடுவேனோ என்று பயப்படுகிறேன் ;)
Post a Comment