Thursday, June 9, 2011

போலீசில் பிடிபட்ட பிரபல பதிவர்!!-வரலாற்றுப் பதிவு !!!
சொந்தக்கதை சோகக்கதை எண்டுவாங்களே....?
அதை தான் சொல்ல போகிறேன் நான் இப்போ..
எண்ட வாழ்க்கையில அப்பிடி ஒண்டு நடந்திருக்கு..


அப்போது நான் உயர்தரம் முடித்து கொழும்புக்கு வந்த நேரம்..
போர்மேகங்கள் உச்சக்கட்டமாய் இருந்தது..எப்போது என்ன நடக்கும் எது நடக்கும்னு தெரியாத நிலைமை..
திடீர் திடீர்னு சுற்றிவளைப்புகள்,தேடுதல்கள்,கைதுகள் என்று அமர்க்களப்படும் கொழும்பு..

போலீஸ் பதிவு என்று ஒரு பதிவு அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்..(அது எடுப்பது பெரிய விஷயம்..சில வேளைகளில் ஒரு நாள் கூட மெனக்கிட வேண்டி வரும்!)தேடுதல் சுற்றிவளைப்புன்னு நடந்தா கொழும்பு வாழ் மக்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஒன்று..
மற்றைய மாவட்டத்துக்கு மாவட்டம் இலக்கம் மாறுபடும்..இலக்கம் ஒன்றை தவிர வேறு இலக்கம் அவங்கட கண்ணில மாட்டுப்பட்டால் தீவிரமாய் சோதிக்கப்படுவார்கள்..என்பதால் எங்களுக்கெல்லாம் நடுக்கம்..

ஒரு நாள் இவ்வாறு வெள்ளவத்தையிலிருந்து களுபோவில'க்கு ஒரு நண்பன் வீட்டுக்கு சென்றேன்.அவன் தன்னிடம் கனக்க wrestling சிடி இருக்கு வா தாறன் எண்டவன்.அதனால நானும் ஆசையில போனான் இன்னொரு நண்பனையும் இழுத்துக்கொண்டு..
அங்க போய் ஒவ்வொரு சிடி சிடியை ப்ளேயரில் போட்டு பாத்து நல்ல மேட்ச் இருக்கிற சிடியல தனியா சேர்த்துவைக்கிற வேலையில ஈடுபட்டுக்கொண்டிருந்தம்..
திடீரெண்டு பார்த்தா நாலஞ்சு போலீஸ்காரன்கள் உள்ளுக்கு வந்திட்டாங்கள் திடுதிடுப்பெண்டு..
என்னடா கறுமம் இப்படியா நடக்குது எண்டு வெலவெலத்து போய் எழும்பி நிண்டா,
வந்தவனுகள்'ல ஒருத்தன் (அவந் தான் தல போல)கேட்ட முதல் கேள்வி இது என்ன சிடி என்று..
சிங்களத்தில் தான்..அப்போது கொழும்புக்கு வந்து சில மாதங்களே என்றமையால் சிங்களம் பெரிதாக தெரியாது..
நாங்க அது எல்லாம் wrestling சிடி தான் எண்ட அவனுக்கு நம்பிக்கை இல்லை..
அரைகுறை இங்கிலீசில் 'புளு புளூ பிலிமா "எண்டு..
ஐயோ சேர் அம்மா சத்தியமா இது wrestling சிடி தான் எண்டு சொன்னோம்..நம்பாமல் போட்டுப்பாத்தான் ஒண்டு ரெண்டை..

பாத்தவன் யாழ்ப்பாணம் என...இங்க ஏன் வந்தனை எண்டான்..
அப்புறம் எடு ஐடி,பொலீஸ்பதிவு எண்டான்..ஐடியை வாங்கி !!
இல்ல,யுனிவெர்சிட்டி அனுமதி கிடைச்சிருக்கு அதுக்கு தான் வந்தனான்
என்றேன் தெரிஞ்ச சிங்களத்தில்...
அப்போ யுனிவெர்சிட்டி அடையாள அட்டையை காட்டு எனக்கு எண்டான் அவன்..
எங்க போறது நான்??அனுமதி மட்டும் தான் கிடைத்தது..பல்கலை போனால் தானே ஐ டி தருவாங்க..
அந்த பிக்காலி பயல்ட்ட இன்னும் தரேல ஐ டி எண்டு இங்கிலீசில சொன்னேன்..
பயபுள்ள அவனுக்கு இங்கிலீசு தெரியாது..எனக்கு சிங்களம் தெரியாது..

பக்கத்தி பக்கத்தி வீடுகளில ஒரே பொண்ணுங்க வந்து வேடிக்கை பாக்குதுகள்..
நாம வேற சமூகத்தில கொஞ்சம் பவுசான ஆக்கள்..
வந்த ஆட்டோ ஒன்றை மறித்து வா ஸ்டேசனுக்கு எண்டு கூட்டிக்கொண்டு போயிட்டான்...

முந்தி ஒரு வீட்டில இளவட்ட பொடியள் நடமாட்டம் கூட இருந்தா போலீசில மாட்டிவிடுற சம்பவங்களும் நடந்திருக்கு...
ஆனா அவங்க வந்த காரணம் வேறு..
அதென்ன காரணம்??
அப்புறம் என்ன நடந்தது??
காத்திருங்க பல kilu கிளு விடயங்கள் அடுத்த பதிவில்!!

Post Comment

33 comments:

மைந்தன் சிவா said...

@@யோகா ஐயா,உங்கள் கருத்துகளை ஓட்டவடை பதிவில் பார்த்தேன்..
உங்க ஏரியா'ல எவ்வாறு சேருவது,கமென்ட் போடுவது என்று கொஞ்சம் விளக்கம் தேவை..நான் இரண்டு மூன்று தடவை முயன்றேன்...
முடியவில்லை

மதுரன் said...

ஜ ஜ கூட்டிற்றுப் போய் பெண்ட் எடுத்திருப்பாங்களே?

மதுரன் said...

பாஸ் நீங்க அடிவாங்கும்போது போட்டோ எடுக்கல்லயா?

அதையும் போட்டிருந்தா எங்களுக்கெல்லாம் ஜாலியா இருந்திருக்குமே!!!!!!!!!!!

விக்கி உலகம் said...

மாப்ள நீ பெரிய அரசியல் வாதியா வர்ற தகுதியிருக்குரவன்யா நடத்து ஹிஹி!

koodal bala said...

புளூ பிலிம் CD ன்னு சொல்லியிருந்தா ஒருவேளை சந்தோஷமா வாங்கிட்டு போயிருந்திருப்பாங்க .....ரைட்டு மீதி உள்ளதையும் சீக்கிரமா கதையுங்கள் ........

மருதமூரான். said...

ஆட்டோவில கூட்டிட்டு போனவங்கள் அப்படியே உள்ளுக்க வைச்சிருந்திருக்காலம். இந்தப்பயல வெளியில விட்டு இது செய்யிற கொடுமைகளை தாங்க முடியுதில்ல.:-)


பொலிஸில் (பதிவில்) மாட்டி அல்லல்பட்ட பொடியளின் கதைகைளை எழுதினால் ஆயிரக்கணக்கில் நாவல்களாக வரும்.

A.R.ராஜகோபாலன் said...

எப்படி ஒரு சிறு நாட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும் சிங்களமும் அவர்களுக்கு தமிழும் தெரியாமல் போனது சகோ , இதுவே பல பிரச்சனைகளை கொண்டுவருமே , நம்மை தெளிவாய் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள மொழி அவசியமாயிற்றே , உங்களுக்கு சிங்களம் பாடத்திட்டத்தில் கூட இல்லையா ???

நீங்கள் பதிந்த விதம் நகைச்சுவையாக இருந்தாலும் அந்த சமயத்தில் உங்களின் மனநிலையை நினைத்தால் சற்று வேதனையாகவே இருக்கிறது

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மீதிப் பகுதியை விரைவில் போடுங்கள்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆஹா மாட்டுப்பட்ட அனுபவமா? மச்சி உள்ள இருந்ததுக்கான எல்லா எவிடென்ஸுகளையும் பத்திரமா வச்சிரு! யூரோப்பில விசா எடுக்க உதவியா இருக்கும்! எனக்கு தெரிஞ்ச ஒரு ஏஜென்சி இருக்கிறான்! ஓல்ட் மோர் ஸ்ட்ரீட் ல! 10 நாளைக்குள்ள இறக்குவான்!

மச்சி பிரான்சுக்கு வந்து, பிறகு தேவைப்பட்ட லண்டனுக்கும் போகலாம் அது சின்ன பிரச்சனை!

ஹி ஹி ஹி பயபுள்ள எங்க வந்து என்னத்த கதைக்குதெண்டு! ஆனா ஒண்ணு மச்சி நமக்கு வார துன்பங்கள நாம இன்பமா மாத்தணும்!

அதுதான் சொன்னேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட இன்னிக்குத்தான் கவனிச்சேன்! தமிழ்படம் சிவாவா உனக்கு ரோல் மாடல்! கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!

நீ அசத்து மச்சி!

ஜீ... said...

நம்ம போலீசை சிரிப்புப் போலீஸ் ஆக்கின சம்பவம் இருக்கு பாஸ்! எங்கயாவது Safe ஆ செட்டில் ஆகீட்டு எழுதலாமோன்னு தோணுது! :-)

Yoga.s.FR said...

///நாம வேற சமூகத்தில கொஞ்சம் பவுசான ஆக்கள்..///அதான் தெரிஞ்ச விஷயமாச்சே?

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...

@@யோகா ஐயா,உங்கள் கருத்துகளை ஓட்டவடை பதிவில் பார்த்தேன்..
உங்க ஏரியா'ல எவ்வாறு சேருவது,கமென்ட் போடுவது என்று கொஞ்சம் விளக்கம் தேவை..நான் இரண்டு மூன்று தடவை முயன்றேன்...
முடியவில்லை§§ஏன் பண்டியோட சேர ஆசப்படுறியள்?நல்ல புள்ளயா கணக்கு வழக்கப் பாத்துக் கொண்டு,இடைக்கிடை இப்பிடி குஷியான?!பதிவுகளப் போட்டுக் கொண்டு,வெள்ளவத்தயில "நோலிமிட்"டிலயும்,லிட்டில் ஏசியாவிலயும் உடுப்பை வாங்கி?!போட்டுக் கொண்டு ஜாலியா சுத்துங்கோ!அவடத்தில ஒரு பேக்கரியும் இருக்கு,பேர் வருகுதில்ல.றோல் சுப்பரா இருக்கும்!மாலு பாணும் நல்லாயிருக்கும்.மற்றது,என்ர கண்ரோல்ல ஏரியா ஒண்டுமில்ல.அது "ஓட்டவட"யிட்ட தான் இருக்குது!"நிரூபனும்" ஒரு ஏரியா வச்சிருக்கிறார்!

Yoga.s.FR said...

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி/// மைந்தன் கோபிக்கவேண்டாம் எனக்கு ஹாரிஸ் என்றால் உயிர்!அப்ப அந்த "தும்மினவள்" பாடு???????????????????

Nesan said...

மாப்பூ உண்மையான பொலிஸ் தானா இல்லை வீட்டுக்காரன் உங்கள் நிதிநிலை புரிந்து செட்டப்புபாட்டியா இப்படியும் பலருக்கு ஆட்டையப் போட்ட வரலாறு பல உண்டு!
உண்மையான பொலிஸ் ஸகிலா ரேன்சில் எல்லாம் கழட்டி சோதித்திருப்பாங்களே!
முக்கியமான உண்னை வெளியிட மயில்தாள் பலகேட்டாங்களா?

Anonymous said...

மாப்பு எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது,உங்களை போல (!)தான் 2007 எக்ஸாம் எடுத்துட்டு கொழும்பில வந்திருந்தனான்.. 2008 ம் ஆண்டு ஒரு நாள் முழுவது சேட்டை கழட்டி விட்டு தெகிவள ஸ்டேசனுக்க இருக்க வச்சுட்டானுகள்...

NKS.ஹாஜா மைதீன் said...

என்ன மாப்ஸ்...தொடரும் போட்டுவிட்டீர்கள்....தமிழ் இனிக்கிறது எழுத்துக்களில்...

தமிழ்வாசி - Prakash said...

அடுத்த தொடரில் அடி வாங்க போறிங்களா....?


தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

ஹேமா said...

என்னதான் நகைச்சுவையாக எங்களூர் அனுபவங்களைச் சொன்னாலும் அடுத்து என்ன என்று மனம் பகீரென்றே இருக்கு சிவா !

shanmugavel said...

தொடர்ந்தது வருதா? ஒகே ஓகே

கார்த்தி said...

நான் 2008ல பிடிபட்டனான்! அதை எனது 3வது பதிவாவும் போட்டனான்!

Prince Kajanthan said...

சீக்கிரமா அடுத்த பதிவையும் எழுதுங்க அண்ணா..ஆவலா அடி வாங்கிற கதைய கேக்க காத்திருக்கிறம் :D

துஷ்யந்தன் said...

ஹா ஹா
செம காமடி பாஸ்
அடுத்த பதிவு எப்போ பாஸ் ??

நிரூபன் said...

சொந்தக்கதை சோகக்கதை எண்டுவாங்களே....?
அதை தான் சொல்ல போகிறேன் நான் இப்போ..
எண்ட வாழ்க்கையில அப்பிடி ஒண்டு நடந்திருக்கு..//

ஆஹா...உங்களுக்கும் இது நடந்திருக்கா...
அப்போ நானும் நீங்களும் சேம் சேம்.

நிரூபன் said...

அவன் தன்னிடம் கனக்க wrestling சிடி இருக்கு வா தாறன் எண்டவன்.அதனால நானும்//

ஹி....ஹி...
அடோய் பொடிப் பயலே, மறைக்காமல் உண்மையைச் சொல்லிப் போடனும்?
ரெஸ்லிங் சீடி என்று வட கிழக்கிலை மற்ற சீடியைத் தான் சொல்லுவாங்கள். கொழும்பிலையும் ரெஸ்லிங் சீடி என்றால் அது
தானே;-)))

நிரூபன் said...

ஆனா அவங்க வந்த காரணம் வேறு..
அதென்ன காரணம்??
அப்புறம் என்ன நடந்தது??
காத்திருங்க பல kilu கிளு விடயங்கள் அடுத்த பதிவில்!!//

அடப் பாவி, உனக்கு சோகத்திலயும் சந்தோசமா கேட்குது...

அப்புறமா டீல் பண்ணிக்கிறேன்.

நிரூபன் said...

கதை சொல்லும் விதம் மழலை நடையில், எங்களூர் மொழியை சின்னப் பிள்ளை எப்படி உச்சரிக்குமோ அந்தளவு அருமையாக மென்மையாக இருக்கு.

நிரூபன் said...

முந்தி ஒரு வீட்டில இளவட்ட பொடியள் நடமாட்டம் கூட இருந்தா போலீசில மாட்டிவிடுற சம்பவங்களும் நடந்திருக்கு...//

ஓம் மாப்பிளை, நான் பெரதெனியாவில் இருக்கும் போது ஒரு சிலர் வீட்டுக்கு முன்னால் உள்ள ரோட்டால் போனாலே மாட்டி விட்ருவாங்க,. அப்புறம் அடுத்த நாள் அதே இடத்தில் மாமா வா மச்சி என்று பச்சைத் தொப்பியோடை காத்திருப்பார்.

நிரூபன் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அட இன்னிக்குத்தான் கவனிச்சேன்! தமிழ்படம் சிவாவா உனக்கு ரோல் மாடல்! கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!

நீ அசத்து மச்சி!//

ஹையோ, ஹையோ..,,
அதான் நீங்க இந்தக் கொல வெறியோடு காமெடி கடி போடுறீங்களோ.

sothilingam said...

பாத்தவன் யாழ்ப்பாணம் என...இங்க ஏன் வந்தனை எண்டான்..
அப்புறம் எடு ஐடி,பொலீஸ்பதிவு எண்டான்..ஐடியை வாங்கி !!
இல்ல,யுனிவெர்சிட்டி அனுமதி கிடைச்சிருக்கு அதுக்கு தான் வந்தனான்


"என்றேன் தெரிஞ்ச சிங்களத்தில்.."

மேட்கூறபட்ட வரி நம்புற மாதிரி இல்லையே ?????

செங்கோவி said...

இடுக்கண் வருங்கால் நகுக...நகைச்சுவை உணர்ச்சி உள்ளவரை நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும் இல்லையா...........சரி சரி சீக்கிரம் அடி வாங்கிய கதையை எழுதுங்கள்.

யாதவன் said...

Waite and see

Anonymous said...

NEXT................ >>>>>

Related Posts Plugin for WordPress, Blogger...