Tuesday, June 21, 2011

தளபதியே பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!இளைய தளபதி விஜய்...
விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது..
ஆனால்,
சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏன் என்னை கவர்ந்தார்,
நான் ஏன் விஜய் விசிறி ஆனேன் என்பதை உங்களுக்கு சொல்லலாம்னு கெளம்பிட்டேன்...
நீங்க நெனைச்சாலும் என்னை தடுக்க முடியாது..

ஆரம்பத்தில் நான் ஆக சிறுவனாக இருந்த போது அஜித்,விஜய்,பிரஷாந்த் என்று
அனைவரது படங்களுக்கும் சரி சமமான ஆசையுடன் பார்க்க செல்வது வழக்கம்..
அப்போது அஜித் விஜய் பிரச்சனை பெரிதாக பூதாகரமாக வெடிக்காதிருந்த காலம்..
இளைய நட்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும்
ஜொலிக்கத் தொடங்கிய காலத்தை தான் நான் கூறுகிறேன்..
பிடித்த முன்னணி கதாநாயகிகளாக சிம்ரன் மற்றும் தேவயானி
பாடி ஆடி,குடுக்கப்பட்ட காசுக்கு வில்லன் கலைத்தால் ஓடிக்கொண்டிருந்த
காலம்...

அந்த காலத்தில் விஜய் படமோ அஜித் படமோ,பாரபட்சமில்லாமல்
ஆவெண்டு பார்ப்போம்..
விஜய் என்று தனிய நான் விசிறியாக வெளிக்கிட்டது(ஹிஹி அஜித் படங்களும் பாக்கிறது தான்)..
ஒரு காலகட்டத்தில்...அதாவது விஜய் கில்லி திருப்பாச்சி சிவகாசி என்று மெகா ஹிட் படங்களை
வழங்கிய காலப்பகுதியில் தான் நான் விஜய் ரசிகனானேன்..

அதில் தவறொன்றும் இல்லையே??

அன்றிலிருந்து இன்று மட்டும் விஜய் ரசிகனாகவே இருக்கிறேன்...

விஜய் அரசியல் போவது பிடிக்காமல் தனிப்பதிவோன்று கூட போட்டிருந்தேன் இந்த வருட ஆரம்பத்தில்...
அந்தவகையில் நான் ஒரு கண்மூடித்தனமான ரசிகன் அல்ல...ஆனால் ரசிகன்..!!!

விஜய்யின் ஆரம்பகால படங்கள் எனக்கு பெரிதாக பரீட்சியம் இல்லை...என் நண்பர்களே நக்கலடித்திருக்கின்றனர்..
அஜித்தை பிடிக்காதென்றில்லை..அவரின் நடிப்பு,கொள்கைகள் பிடிக்கும்..
இனிமேல் அவர்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தால் சந்தோசம்(நானும் உட்பட)

நாளை தனது பிறந்தநாளை கொண்டாடும் இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

நேரமோ இந்த வாரம் எட்டாக்கனியாக இருக்கிறது...
என்றாலும் என்னால் முடிந்தளவுக்கு உங்கள் தளங்களுக்கு வருகிறேன்..
என்றாவது வர முடியாமல் வராதிருப்பின்,
மன்னிக்க..

Post Comment

37 comments:

anuthinan said...

//ஒரு காலகட்டத்தில்...அதாவது விஜய் கில்லி திருப்பாச்சி சிவகாசி என்று மெகா ஹிட் படங்களை
வழங்கிய காலப்பகுதியில் தான் நான் விஜய் ரசிகனானேன்..

அதில் தவறொன்றும் இல்லையே??//

பாஸ் நான் அஜித் ரசிகன்!!!!

எனிவே, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டாகுடர் வாழ்க...

Anonymous said...

ஒரு காலத்தில் நானும் டாக்குத்தருக்கு பரம விசிறியா இருந்தனான்... டாக்குத்தர்ர படமெல்லாம் வெட்டி கொப்பில்ல ஒட்டி வச்சுதனான் எண்டால் பாருங்களன்... ஆனா இப்ப யாருக்கும் நான் விசிறி இல்ல ....)))

Yoga.s.FR said...

விஜய் என்று தனிய நான் "விசிறி"யாக வெளிக்கிட்டது........////"கத்திரி வெயில்" என்று தமிழ் நாட்டில் சொல்லப்படுவதும்,ஈழத் தமிழர்கள் பாஷையில் "காண்டாவனம்" என்று விழிக்கப்படும்/அழைக்கப்படும் காலத்திலா?

Yoga.s.FR said...

அந்த காலத்தில் விஜய் படமோ அஜித் படமோ,பாரபட்சமில்லாமல்
"ஆ"வெண்டு பார்ப்போம்.///அது சரி!

Yoga.s.FR said...

அன்றிலிருந்து இன்று மட்டும் விஜய் ரசிகனாகவே இருக்கிறேன்..////ஆமா,பெரீ...........................ஈஈஈஈஈஈஈஈய கொள்கைப் பிடிப்பு!

Yoga.s.FR said...

விஜய் ஏன் என்னை கவர்ந்தார்,
நான் ஏன் விஜய் விசிறி ஆனேன் என்பதை உங்களுக்கு சொல்லலாம்னு கெளம்பிட்டேன்...
நீங்க நெனைச்சாலும் என்னை தடுக்க முடியாது..////ஆமாமா!கிளம்பிட்டாரு அருமை,பெருமையெல்லாம் சொல்லி வேட்டயாடுறதுக்கு!காவலனா ஆறதுக்கு!கில்லி வெளையாடுறதுக்கு!போய்யா,டைம் இல்லைங்கிறே?மன்னிப்பெல்லாம் கேக்கிற.வேலையை முதல்ல பாருய்யா!அப்புறமா விசய்க்கு விசிறலாம்!

Yoga.s.FR said...

நீங்க விசய்க்கு விசிறிக்கிட்டிருங்க!இங்க,ஓட்ட வட ஹன்சிகாவ தள்ளிகிட்டு போகட்டும்!

Unknown said...

நானும் தளபதி ரசிகராக இருந்தவன்தான். இப்போ உணர்கின்றேன் யாருக்கு ரசிகராக இருந்தாலும் எமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.

தளபதி அரசியலுக்கு வரப்போகிறார் என்றதுமே தளபதியை மறந்துவிட்டேன்.

யாரப்பா இந்த தளபதி?

Yoga.s.FR said...

///இளைய "தளபதி" விஜய்.///சரி,எத்தனாவது படையணிக்கு "தளபதி" யா இருக்காரு????????????

Yoga.s.FR said...

சந்ரு said..யாரப்பா இந்த தளபதி?///அது.......வந்து.........ஆங்...ரஜனியும்,மம்முட்டியும் சேந்து நடிச்சாங்களே?மணிரத்தினம் கூட டைரக்ட் பண்ணாரே?"ஷோபனா" கூட நடிச்சிருப்பாங்களே?அந்தப் படத்த சொல்லுறாரு!

Yoga.s.FR said...

"அதில் தவறொன்றும் இல்லையே??"////சீச்சீ!அதெல்லாம் கெடையாது.டெரரை,இன்னொரு டெரர் சப்போர்ட் பண்ணுறதில இன்னா தப்பிருக்கிங்கிறேன்!

Yoga.s.FR said...

விஜய் அரசியல் போவது பிடிக்காமல் தனிப்பதிவோன்று கூட போட்டிருந்தேன்.///ஆமாமா,இவரு ராமசாமிங்கிற "சோ".ஜெயலலிதாவுக்கு "அவரு"!விசய்க்கு "இவரு"!!!

Yoga.s.FR said...

அஜித்தை பிடிக்காதென்றில்லை..அவரின் நடிப்பு,"கொள்கைகள்" பிடிக்கும்..///கொள்கையா,அப்புடீன்னா?

நிலா said...

நல்ல பதிவு ..இனி வரும் காலங்கள் எல்லாமே வெற்றி பாதை தான் ...

Yoga.s.FR said...

என்றாவது வர முடியாமல் வராதிருப்பின்,மன்னிக்க..////நேத்திக்குக் கூட ஏமாத்திட்டு,இந்தா வரேன் யோகா ஐயா,ஓட்ட வடய உண்டு இல்லேன்னு ஆக்கிடுவோனு சொல்லிப்புட்டு வரவேயில்ல!இன்னிக்கு மன்னிப்பு கேக்கிறாரு.உன் கூட பேச்சு "கா"!

தனிமரம் said...

விஜய் ரசிகனா அவருக்கு பதிவு போட்டு அவருக்கு வாழ்த்துக்கூறும் உங்களுக்கும் ஒரு வாழ்த்துக்கள் தனிப்பட்ட முறையில் அவரை எனக்குப் பிடிப்பதில்லை தெளிவான முடிவு எடுப்பதில் மதில் மேல் பூனை! ஒரே மாதிரி நடிப்பதும் பிடிப்பதில்லை மாப்பூ ஆரம்ப காலத்தில் கண்ணுக்குள் நிலவு பார்த்தது கொட்டாஞ்சேனை கிங்ஸ்லியில்  அதைப்பற்றி தனிப்பதிவு போட இருக்கிறேன் நண்பா!

கடம்பவன குயில் said...

//சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,//

இப்போமட்டும் என்ன அசாதாரணமான பெரிய மல்டிமில்லியனரா???

Unknown said...

Happy birthday to vijay

கடம்பவன குயில் said...

நம்ம பொழப்பு பாதிக்காதவரை யாருக்கு வேண்டுமானாலும் ரசிகனா விசிறியா இருக்கலாம்.
சரிசரி நானும் விஜய்தம்பிக்கு வாழ்த்து வைக்கறேன். சொல்லிடுங்க.

நிரூபன் said...

அதில் தவறொன்றும் இல்லையே??

அன்றிலிருந்து இன்று மட்டும் விஜய் ரசிகனாகவே இருக்கிறேன்...//

அடோய், என்ன ஒரு கொல வெறி...
இதனை இலையான் தலைவலி ரசிகர்கள் அறிந்தால் ஒரு கை பார்க்க மாட்டாங்களா.

நிரூபன் said...

அடோய் மாப்ளே, உங்களோடு சேர்ந்து தளபதியை நானும் வாழ்த்துறேன் மச்சி,

அப்ப நமக்கு ரீட் ஒன்னும் கிடையாதா மச்சி..

நிரூபன் said...

நான் கம்பஸ் படிச்ச காலத்தி,
பெட்டையளின் பெட் ரூமில இருந்த ஒரேயொரு ஆண்மகனின் படம் என்றால் அது விஜய் இன் படம் தான் மச்சி.
ஹி...ஹி...

செங்கோவி said...

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Yoga.s.FR said...

நிரூபன் said...
நான் கம்பஸ் படிச்ச காலத்தில்,
பெட்டையளின் பெட் ரூமில இருந்த ஒரேயொரு "ஆண்மகனி"ன் படம் என்றால் அது விஜய் இன் படம் தான் மச்சி. ஹி...ஹி... ///அடடே!அப்படியா?அப்ப நிரூபன் படத்த பொஸ்தகத்துக்குள்ள மறச்சு வச்சிருந்தாளுகளோ?

Yoga.s.FR said...

கந்தசாமி. said... ஆனா இப்ப யாருக்கும் நான் "விசிறி" இல்ல ....)))உங்கள எப்புடி விசிறுறது?

சுதா SJ said...

நான் அஜித் ரசிகன் இருந்தாலும் நம்ம அண்ணன் விஜய்க்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுதா SJ said...

இன்னைக்கு விஜய்க்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவின் இன்னொரு பிரபலத்துக்கும் பொறந்த நாளு,
நம்ம ப்ளோக்ல அவங்களுக்கு ஒரு வாழ்த்து பதிவு போட்டு இருக்கன், நீங்களும் வந்து வாழ்த்துறது ????
( யாருங்கிறது இங்கே சஸ்பென்ஸ் )

ஷஹன்ஷா said...

அண்ணருக்கு என் வாழ்த்துகளும்..

அப்படியே என் வாழ்த்து பதிவையும் படித்து செல்லுங்க.....
http://sivagnanam-janakan.blogspot.com/2011/06/chief-minister.html

சக்தி கல்வி மையம் said...

நானும் வாழ்த்துக்கள் சொல்லிடறேன்..

vidivelli said...

அதில் தவறில்லை நண்பா..
சின்ன பிள்ளைகளையும்..இளம் மட்டங்களையும் விஜய் கவர்வது உண்மை

அதுசரி விஜய்க்கு எத்தனையாவது பிறந்த நாள்?
எனது வாழ்த்துக்கள்...

Mathuran said...

அண்ணனுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் பாஸ்

Jana said...

இளையதளபதிக்கு ஒரு இளைய தளபதி பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கார்டா டோய் :)

shanmugavel said...

இளைய தளபதிக்கு என் வாழ்த்தும்.பதிவர்களில் இளைய தளபதி நீங்கள்தானா?(ஜனா) வாழ்த்துக்கள்.

shanmugavel said...

நேற்று எப்படி கவனிக்காமல் விட்டேன்.?

Yoga.s.FR said...

shanmugavel said...
நேற்று எப்படி கவனிக்காமல் விட்டேன்.?/////
ஆமா பெரிய "காந்தி ஜெயந்தி" கவனிக்காம வுட்டுட்டீங்க!போங்கய்யா,போயி பொழப்ப பாருங்க!

Unknown said...

விஜய்க்கு காலந்தாழ்த்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...