Monday, June 13, 2011

பாடசாலைக் காதல்-காதலி யார்னு சொன்னா...


ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நான்கு..வரலாறுகளில் மிக முக்கிய
இடம் பிடித்த ஆண்டு..ஆமாம் நான் ஆண்டு ஒன்று பயில பாடசாலை சேர்ந்த ஆண்டு..
புத்தம் புதிதாய் கொப்பிகள்,புத்தகப்பை,பென்சில்,ரப்பர்(அழி ரேசர்,அது தான் எங்கட பெயர்)
புது சப்பாத்து சொக்ஸ் எண்டு பாடசாலை சேர்ந்த காலம்..

கூர் மாத்தி பென்சில் மீதான காதல் !!

எல்லா பாடசாலையிலும் அப்பிடியோ தெரியாது,எங்கள் பாடசாலையில் நான்காம் வகுப்பு,ஐந்தாம் வகுப்பில் தான்
பேனை பாவிக்கலாம்..அது மட்டும் பென்சில் தான்..காலையில் அம்மா தீட்டி தருவதும்,அதை கொண்டு போயி எழுதி உடைப்பதும்,
கீழே விழுந்து உடைப்பதும் என்று பென்சில்கள் படாத பாடு படும்.

பென்சில் கூர் உடைஞ்சா,அது பெரும் பாடு..
எல்லாரிட்டையும் கட்டர்(ஷார்ப்னர்)இருக்காது..
கடன் வாங்கணும்.அதுக்கு கெஞ்சணும் பலரிட்டையும்..ஈசியா தந்திடமாட்டாங்க...
அதனாலோ என்னமோ எனக்கு பேனா மீது காதல் பிறந்தது...எப்படா பேனா பாவிக்க
விடுவாங்க எண்டு...
பென்சில் பாவிக்கிரதால நாம இன்னும் சின்ன பிள்ளையள் எண்டு எனக்குள்ளே
ஒரு குறுகிய மனப்பாங்கு..


ஏதும் பிழையாக எழுதிவிட்டால் அதை அழி ரப்பரால் அழிச்சு அழிச்சு கொப்பி 'கோப்பி' கலரில் கரும் பிரகாசமாய்
இருக்கும்..அதுவும் சில பயலுகள் ரேசர் இல்லாவிட்டால்,எச்சில் போட்டு கையால் தேய்ப்பார்கள் பாருங்கள்,
கொப்பி பேப்பரில் ஓட்டை விழுந்து முதல் பக்கம் தெரியும் ஒட்டையூடு!!

எனக்கு முதலாம் ஆண்டில் இருந்தே நடராஜா பென்சில் தான்..சிவப்பு,கருப்பு நிறம் கலந்த பென்சில்..
சும்மா டம்மி லோக்கல் பென்சில்களை விட கொஞ்சம் குவாலிட்டி கூடின பென்சில் அது..
அப்போது ஐந்து ரூபாய் என நினைக்கிறேன்..லோக்கல் டம்மி பென்சில் மூன்று ரூபாய்..
ரெண்டு ரூபாய் தான் அதிகம் என்றாலும் அந்த காலத்தில் அதன் பெறுமதியே வேறு...
ஒரு ராத்தல் பாண் ஒன்பது,எட்டு ரூபாய் வித்த காலம்..இப்போ அம்பது ரூபாய்..
பணவீக்கத்தை பாருங்கள் கணக்கிட்டு.

முப்பத்தி அஞ்சு பேர் கொண்ட வகுப்பில ஒருத்தன் ரெண்டு பேர் தான் 'கூர் மாத்தி பென்சில்' வைச்சிருப்பாங்க..
மத்தவங்களுக்கு தரமாட்டாங்க..அந்த காலத்தில கொஞ்சம் ஹை பை'யான பென்சில் அது..
பதினைஞ்சு ரூபாய் வித்ததாக்கும்..
ஒரு கூர் முடிஞ்சா,அதை கலட்டி பின்னால் செருகினால் புதுதாய் ஒரு கூர் முன்னால் வரும்..
செம கலர்புல்லாய் இருக்கும்..எங்களுக்கெல்லாம் கொள்ளை ஆசை..
Hansika Motwani Cute Tshirt Hot Photos

ஆனால் கடைசிமட்டும் எனது நான்காம் ஆண்டு வரைக்கும் அது கிடைக்கவே இல்லை..
கரேஷ்'னு ஒரு நண்பன்,அவன் தான் பெரும்பாலும் முதலாவதாய் வருவான் வகுப்பில்,அவன் வைத்திருந்தான்
கூர் மாத்து பென்சில்...
அவனுடைய அப்பா,புஸ்தக கடை வைத்திருந்ததாக ஞாபகம்..ஆகவே அவன் கடைக்கு போயி ஆட்டைய போட்டிருப்பான் இலகுவாய்...
எனக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது..
நான் ரெண்டாவது மூணாவதாய் வருவதாலோ என்னமோ,எனக்கு
நடராஜா பென்சில் தான் கடைசி மட்டும்..

பின்னர்,ஐந்தாம்,ஆறாம் ஆண்டுகளில் கிடைத்தாலும்,அந்த முதலாம் ரெண்டாம் ஆண்டுகளில் வந்திருக்க கூடிய கிக் இல்லாமல் போய்விட்டது எனக்கு..

பென்சிலை வைத்து பதிவு போட்ட முதல் பதிவர் நான் அப்பிடீன்னு தமிழ்மணம் அவார்டு தர்றதா பேசிக்கிட்டாங்க!!ஹிஹி உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா??இன்னும் மூன்று நாட்களில் நான் பதிவுலகுக்கு வந்து ஒரு வருடம் ஆகின்றது ஹிஹி ஐ ஜாலி!!பாடசாலைக் காதலோடு அடுத்து ஹன்சிகா..
.

Post Comment

45 comments:

Mathuran said...

வடை

Mathuran said...

//அதுவும் சில பயலுகள் ரேசர் இல்லாவிட்டால்,எச்சில் போட்டு கையால் தேய்ப்பார்கள் பாருங்கள்,//

ஹி ஹி அதுவும் சில பயலுகள் தாங்க பண்ணிட்டு மத்தவங்கள சொல்லுவாங்க பாருங்க........... ஹி ஹி

Ashwin-WIN said...

மைந்தன் மாமோய் சூப்பர்.. ஏன்னா ஒரு லவ்வு. நமக்கும் அந்த கூர்மாத்திப்பென்சில் காதல் பெயிலியர்தான். ஆனாலும் மூணாம் வகுப்பு மிஸ்சோட காதல் சக்க்செஸ்..

Ashwin-WIN said...

//ஏதும் பிழையாக எழுதிவிட்டால் அதை அழி ரப்பரால் அழிச்சு அழிச்சு கொப்பி 'கோப்பி' கலரில் கரும் பிரகாசமாய்
இருக்கும்..அதுவும் சில பயலுகள் ரேசர் இல்லாவிட்டால்,எச்சில் போட்டு கையால் தேய்ப்பார்கள் பாருங்கள்,
கொப்பி பேப்பரில் ஓட்டை விழுந்து முதல் பக்கம் தெரியும் ஒட்டையூடு!!//
ஹ ஹா நம்ம ஜாதி..

Ashwin-WIN said...

தமிழ்மணம் ரெண்டாவது ஓட்டு, இன்ட்லி நாலாவது ஓட்டு..

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi

செங்கோவி said...

நமக்கும் நடராஜா தான்.....கூர்மாத்தி-ங்கிற பேர் நல்லா இருக்கு.

தனிமரம் said...

இந்த கொம்பாஸ் விட்டு விட்டீங்க பாஸ்.நமக்கும் இந்த கூர்மாத்தும் பென்சில்மீது காதல் என்ன செய்வது பொருளாதாரம் கைகொடுக்கல!
சிலர் கொப்பியை அழுக்காக்கி கிழித்தது ஹி ஹி அதே பார்ட்டி தான் .

சக்தி கல்வி மையம் said...

இந்த ஹன்சிகா வை ஏன் விடாமல் அனைத்து பதிவுகளிலும் போடுகிறீர்கள்..

கவி அழகன் said...

அசத்தலான அருமையான பென்சில் அலசல்

vidivelli said...

பென்சிலின் அலசல் நல்லாயிருக்குங்க..........


!!நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கு!!!

anuthinan said...

முதலாம் வருட பூர்த்திக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள் மைந்தன் அண்ணா!!!

பதிவு - பள்ளி கால நினைவுகள்!!! :)

Yoga.s.FR said...

///செம கலர்புல்லாய் இருக்கும்..எங்களுக்கெல்லாம் கொள்ளை ஆசை..///பென்சில் மேலயா இல்ல,இந்த வசனத்துக்குக் கீழ இருக்கிற பி........மேலயா?

Yoga.s.FR said...

///"முன்னிணைந்த வாழ்த்துக்கள்!"///ஹி!ஹி!!ஹி!!! உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா??இன்னும் மூன்று நாட்களில் நான் பதிவுலகுக்கு வந்து ஒரு வருடம் ஆகின்றது ஹி!ஹி!!ஐ ஜாலி!////ஜாலியா இருக்கிறதுக்கு "கூகிள்" காரன் விட மாட்டான்.ஒரு வரியத்தால புதுப்பிக்கோணுமாமெண்டு சொல்லுறாங்கள்!மறந்திடாம ஒரு நாள் பிந்தினாலும் புதுசா கணக்கு தொடங்குங்கோ!

Yoga.s.FR said...

செங்கோவிsaid...
நமக்கும் நடராஜா தான்.....கூர்மாத்தி-ங்கிற பேர் நல்லா இருக்கு.///அதெல்லாம் மைந்தனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?////

Yoga.s.FR said...

///ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நான்கு..வரலாறுகளில் மிக முக்கிய

இடம் பிடித்த ஆண்டு..ஆமாம் நான் ஆண்டு ஒன்று பயில பாடசாலை சேர்ந்த ஆண்டு..///வயது சொல்லுறதுக்கு இப்பிடி ஒரு பில்டப்பாக்கும்?

Yoga.s.FR said...

ஒரு கூர் முடிஞ்சா,அதை கலட்டி பின்னால் செருகினால் புதுதாய் ஒரு கூர் முன்னால் வரும்..??????!!!!!!!!!!!):):):):):

ம.தி.சுதா said...

மாப்பு எனக்கும் கூர் மாத்திப் பெண்டில் என்றால் ரொம்பப் பிடிக்கும்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video

Anonymous said...

///செம கலர்புல்லாய் இருக்கும்..எங்களுக்கெல்லாம் கொள்ளை ஆசை..// கீழ இருக்கிற ஹன்சிகா படத்தை தானே சொல்லுரிங்க..ஹிஹிஹி பாருங்க எவருமே இதை கவனிக்கேல்ல ...))

முரளிநாராயணன் said...

படித்தேன்.! ரசித்தேன்.!

சுதா SJ said...

குட் பதிவு பாஸ்,
ம்ம்..... பழைய ஞாபகம் எல்லாம் வருது...

சுதா SJ said...

//நான் ரெண்டாவது மூணாவதாய் வருவதாலோ என்னமோ//

நெசமாத்தான் சொல்லுறிங்களா பாஸ் ???

A.R.ராஜகோபாலன் said...

பள்ளி
பருவத்தை
பக்குவமாய்
பரவசமாய் சொன்ன
பதிவு நண்பரே
பரிசளிக்கிறேன்
பாராட்டை

நிருஜன் said...

விஜயராம பாலர் பாடசாலை காதலியை பற்றி சொல்ல மறந்திட்டீங்க பாஸ்:

shanmugavel said...

பாட சாலை அனுபவம் நல்லாவே இருக்கு.அந்த வயதை பெரும்பாலானோர் மறப்பதில்லை.

maruthamooran said...

கூர் மாத்தி பென்சிலுக்கும்- ‘குண்டு’ ஹன்சிகாவுக்கும் இடையிலுள்ள தொடர்பை சொல்லவிட்டால். வழக்கு தொடருவேன்.

கூர் மாத்தி பென்சில்- வாசம் வரும் இறப்பர் மீதான காதல் இன்னும் தொடர்கிறது. பழைய ஞாபகங்களுக்கு கொண்டு சென்றதற்கு நன்றி.

நிரூபன் said...

இடம் பிடித்த ஆண்டு..ஆமாம் நான் ஆண்டு ஒன்று பயில பாடசாலை சேர்ந்த ஆண்டு..//

அவ்....ஏன் மாப்பிளை உங்க வயசு, அப்புறம் படம் போட்டு ஓசி விளம்பரம் போடுவதால் பிகருங்க யாராச்சும் அப்ளிக்கேசன் போடும் என்று நினைப்போ...
விடமாட்டன் மாப்பு.

நிரூபன் said...

சிறு வயது நினைவுகளைத் தட்டிப் பார்க்க வைத்திருக்கிறீங்க.
எனக்கும் கூர் மாத்திப் பென்சில் மீது காதல் இருந்திச்சு,

எனக்கு நடராஜாப் பென்சில் கிடைச்சதே மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பில் என்று தான் நினைக்கிறேன். அது வரைக்கும் இரண்டு ரூபாப் பென்சில் தான் என் கையில் இருந்திச்சு....

சீவிலிக் கூடு இல்லாமல் பக்கத்து மேசைக்காரனைச் சுரண்ட அவன் டீச்சரைக் கூப்பிட...அடி வாங்கிய அனுபவங்களும் இருக்கு.

ஏன் அப்பாவின் சேவ் எடுத்த பிளேட்டால் பென்சில் தீட்டிய காலமும் என் வாழ்வில் இருந்திச்சு..
எல்லா நினைவுகளையும் மீட்டிய உங்களின் கூர் மாத்தி குண்டு ஹன்சிக்கு ஒரு சல்யூட்.

Unknown said...

This comment has been removed by the author.

Unknown said...

இதை படிக்கும் போது பழைய நினைவுகளை ஜாபகப்பத்துகிறது நண்பா ... நல்ல பதிவு ... அத்துடன் முதலாவது பிறந்த தின வாழ்த்துக்கள் ... :)

Sasthan

Yoga.s.FR said...

நிரூபன் said... சீவிலிக் கூடு????????????????

Unknown said...

//ஹிஹிஹி நீங்க என்ன பண்றீங்கன்னு பாத்துகிட்டு தான் இருக்கேன் பாஸ் //

ஹிஹிஹி நீங்க என்ன பண்றீங்கன்னு பாத்துகிட்டு தான் இருக்கேன் பாஸ்

Unknown said...

This comment has been removed by the author.

Yoga.s.FR said...

என்ன மைந்தன்,"அவர்" இன்றைக்கும் வந்து விட்டாரோ?

Yoga.s.FR said...

பாவம்,என்ன கஷ்டமோ?நாங்கள் தான் கிடைத்தோம் போலிருக்கிறது!

கார்த்தி said...

சுப்பர் தம்பி! பலருக்கு அந்த காலத்தில இருந்த காதலை நினைவுபடுத்தியமைக்கு! அது சரி எது ஹன்சிகா மடத்தி்ன்ர படம் இங்க இருக்கு?
மூண்டவதா வருறாலிண்ட மூஞ்சிய பாருங்க?

Yoga.s.FR said...

"அந்தக்" காலம் போல் இப்போது இல்லை தானே?

Yoga.s.FR said...

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்!"

Unknown said...

//Yoga.s.FR said...
"அந்தக்" காலம் போல் இப்போது இல்லை தானே?//

எத சொல்றீங்க???ஹிஹி

Unknown said...

/கார்த்தி said...
சுப்பர் தம்பி! பலருக்கு அந்த காலத்தில இருந்த காதலை நினைவுபடுத்தியமைக்கு! அது சரி எது ஹன்சிகா மடத்தி்ன்ர படம் இங்க இருக்கு?
மூண்டவதா வருறாலிண்ட மூஞ்சிய பாருங்க?///

ஹலோ பாஸ்,,,நாம எல்லாம் படிப்புன்னு வந்திட்டா மாடு மாதிரி உழைப்பம் ஹிஹி

எப்பூடி.. said...

கூர் மாத்திர பென்சில்லகூட டபிளா ஒரு பென்சில் வந்தது (எங்க காலத்தில) ஒண்ணு பென்சில் கூர், மற்றையது கலர் கூர்(பல கலர்).

ஹேமா said...

வாசிக்கும்போது நிகழ்வு நிழலாடுகிரது சிவா.திரும்பவும் கிடைக்காத ஏக்கம் !

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said... ஹலோ பாஸ்,,,நாம எல்லாம் படிப்புன்னு வந்திட்டா "மாடு" மாதிரி உழைப்பம் ஹிஹி///"புளி"யமிலாறால நல்லா வாங்கினீங்களோ?

Yoga.s.FR said...

என்ன பண்றது பாஸ்..சிலருக்கு தான் அந்த "மச்சம்" இருக்குது..!:)!):):)!!!எனக்கு இண்டைக்குத் தான் தெரியும்,நீங்கள் "மச்சம்" சாப்பிடுவீங்களெண்டு!பறுவாயில்ல,அப்பிடியான ஒரு "ஆள" பாப்பம்!

Yoga.s.FR said...

/அப்ப தான் இதுகள் எடுத்தனான்..பாருங்கோ..ஆதாரம்!!!!/மூவீஸ் சுலேகா.கொம் எண்டு சின்ன எழுத்தில போட்டிருக்குது!உங்கடயோ?(இல்ல உங்கட கொம்பனியோ எண்டு கேட்டனான்!)

Related Posts Plugin for WordPress, Blogger...