Monday, June 20, 2011

பீட்டர் பசங்க என்ன பண்ணுவாங்க??


மனிதர்கள் பலவிதம்..அதில் ஒரு விதம் தான் இந்த பீட்டர் பசங்க..
நீங்கள் கூட ஒருவராக இருக்கக்கூடும் இந்த வகையறாவில்..
நாம தமிழர் தானே?
ஆங்கிலம் என்பது இன்றைய வாழ்வில் இன்றியமையாதது தான்..வேற்று மொழி நபர்களுடன் உரையாடும் போது கட்டாயமானது.
ஆங்கிலத்தின் பயன்கள் பற்றி நான் இங்கு அறிக்கை வாசிக்க வரவில்லை..
ஆனா நம்ம பயலுக கொஞ்சப் பேர் பண்ணுற அலப்பரைகள் தான் தாங்க முடியல பாஸ்..

ஒத்துக்கலாம் அவங்களுக்கு நம்மள விட கொஞ்சம் இங்கிலீசு கூட தெரியும்னு.அதுக்காக இப்பிடியா?
நம்ம ப்ரெண்டு ஒருத்தன் இல்ல இல்ல ரெண்டு பேர் இருக்கானுக,அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?

1 )நம்ம கூட தமிழ் படம் பாக்க வரமாட்டானுகள்..எங்கயாச்சும் இங்கிலீசு படமெண்டா அது சப்ப படமெண்டாலும் பார்க்க போவானுகள்.அவனுக தமிழ் படம் பாக்கிறத நாம பாத்தா அவங்கட மீட்டர் எதோ கொறஞ்சிடுமாங்க!

2 )சாப்பிட போற எண்டா ஏதாச்சும் இங்கிலீசு பெயர் வைச்ச ஹோட்டலுக்கு தான் போவானுகள்.ஹோட்டல் எண்டு தமிழில பெயர் போட்டிருந்தா கூட அதுக்கு தடா தான்!நாம கையேந்தி பவன் எண்டாலும் பிரிச்சு மேய்வம்..அவங்கள் பக்கத்தில நிண்டு இந்தா மச்சான் ஒரு வடை சாப்பிடு எண்டா அவங்க பண்ற ரவுசு இருக்கே..எதோ எலிசபெத் பரம்பரை மாதிரி!இந்தாடா வாழைப்பழம் எண்டா வாங்கமாட்டானுகள்..பனானா எண்டா உரிச்சு வைக்க போடுவாங்கள் ரெண்டு பேரும்!

3 )ரோட்'ல சைட் அடிக்கலாம்னு நின்னாக்கா ஏதாச்சும் நல்ல பிகர் வந்தா நாம சட்டப்படி பிகர்டா எண்டுவம்..அவங்க ரெண்டு பெரும் தங்களுக்க "nice structure no" அப்பிடி எண்டுவாங்கப்பா..

4 )நாம எலாம் வாங்கடா கிரிக்கட் விளையாடுவம்ன்னு சொன்னா வரமாட்டானுகள்..நம்மள விட்டிட்டு போயி பிலியட்ஸ் விளையாடுவாங்க பாருங்க..
இவனுகள என்னேங்குறது?



5 )எவனோடயாச்சும் சண்டை எண்டா நம்மட வாயில என்னங்க வரும் உடன?இவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?
"he is very stupid no..mother ******" அப்பிடி எண்டு திட்டுவாங்க பாருங்க...


6)நம்மள மாதிரி சண் டி.வி விஜய் டி.வி எல்லாம் பாக்கமாட்டாங்கப்பா..ஸ்டார் டி.வி,V டிவி தான் பாப்பானுகள்..பாத்திட்டு சும்மா இருந்தா பரவாயில்லைங்க,நம்மள வைச்சுக்கொண்டு அதில நடந்த சீனுகள் பத்தி கதைப்பாங்க பாருங்க..ஜேம்ஸ் கமரூன் கூட இந்தளவுக்கு அலசி இருக்கமாட்டார் பாருங்க!


7)எங்காச்சும் போகேக்க யாராச்சும் ரிசப்சனிஸ்ட் பிகருகள்கிட்ட நம்மள தள்ளி விட்டிட்டு போய் மொக்க போடுவாங்க இங்கிலீசில..இவங்களையெல்லாம் ஏன்டா கூட்டிட்டு வந்தோம்னு இருக்கும்..இப்பிடித்தான் சொந்த செலவில அடிக்கடி சூனியம் வைச்சுக்குவம் நாம!


8)நம்மள மாதிரி லோக்கல் கடையில எல்லாம் போயி ஷர்ட் பான்ட் வாங்க மாட்டாங்க..ஏதாச்சும் இன்டர்நசனல் கடை அதுவும் a /c போட்டு இங்கிலீசில பெயர் போட்டிருந்தா மட்டும் தான் உள்ள காலை விடுவாங்க!

9)அதில ஒருத்தன் ஒரு பத்து மாசம் தான் யு.கே'ல இருந்திட்டு வந்தவன்..போகேக்க நம்மள மாதிரி தானுங்க போனவன்..
போயிட்டு வந்ததில இருந்து அவன் படுத்துவான் பாருங்க...ஒரே ஒரு வார்த்தைய வைச்சு சந்து போந்து இஞ்சு இடுக்கெல்லாம் யூஸ் பண்ணுவன்..
அது என்னெண்டு பாக்குறீங்களா?
"How come?"
இப்பிடி தான் "How horrible" எண்டு சொல்ல போயி "How horable" எண்டு சிலிப் ஆகிட்டான் பயபுள்ள..விடுவாங்களா நம்ம பசங்க?
இப்ப அவரிண்ட செல்ல பெட் நேம் "ஹொவ் ஹோரபில்" தானுங்க!!

10)அதாச்சும் பரவாயில்லைங்க,பேஸ் புக்கில தமிழில ஸ்டேடஸ் போட்டா கமெண்டு பண்ணமாட்டாங்க..லைக் பண்ண மாட்டாங்க..
இங்கிலீசில A...B...C....D.....அப்பிடீன்னு போட்டாலே குஷி ஆகிடுவாங்கப்பா..

பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களையும் போய் சேர ஓட்டுப் போடுங்கள்.கருத்துகளை பின்னூட்டத்தில் கூறிச்செல்லுங்கள்..

ஆக்சுவலி இதொரு மீள் பதிவாக்கும்...அந்த இரண்டு நண்பர்களும் மன்னிச்சு..

Post Comment

39 comments:

Unknown said...

எண்டாலும் இந்த விஷயத்துல நம்ம பொண்ணுங்களை அடிச்சுக்க முடியாது பாஸ்! :-)

Unknown said...

என்னமோ பீடர் விடுற பசங்களை பாக்கும்போது அநேகமானவனுங்க கிட்ட ஒரு 'அவனா நீயி?' லுக் ஒண்ணு தெரியும் கவனிச்சீங்களா? :-)
இத நேரா அவனுங்க கிட்ட சொல்லுங்க...அடங்கிடுவானுங்க!

Unknown said...

இங்க்லீஷ் படம் பாக்குற 'பீட்டர்ஸ்' நம்ம பிரண்ட்ஸ்லயும் இருக்காங்க..ஆனா பாக்குறது என்னவோ ஹாலிவுட் மொக்கை 'விஜயகாந்' படங்கள்தான்!
அதிலயும் சீரிசா வாற படங்கள பாத்துட்டு...பில்டப்பு
டேய் முதலாவதில ட்ரெய்ன்ல இருந்து குதிப்பான்
ரெண்டாவதில...கப்பல்
மூணில...பிளைட் எண்டு...வதைப்பாங்க பாருங்க...ம்ம்ம்..தனிப்பதிவே போடலாம் பாஸ் அதுக்கு...:-)

Ashwin-WIN said...

ஹி ஹி ஹி...
பீட்டர் பசங்க part-2 வா???

Ashwin-WIN said...

//நாம எலாம் வாங்கடா கிரிக்கட் விளையாடுவம்ன்னு சொன்னா வரமாட்டானுகள்..நம்மள விட்டிட்டு போயி பிலியட்ஸ் விளையாடுவாங்க பாருங்க..
இவனுகள என்னேங்குறது?//
டேய் பீட்டரு இது நீதாண்டா.. பயபுள்ள உன்னைய எத்தன நாள் கூப்பிடிருப்பன்..

maruthamooran said...

அட இந்த பொடியன் பீட்டர் விடுறவங்களால அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறான். என்ன செய்ய முடியும்?

தனிமரம் said...

இப்படி கொஞ்சப்பேரை முன் பம்பலப்பிட்டி,வெள்ளவத்தைப் பக்கம் பார்த்திருக்கிறேன் இதுவும் ஒரு நாகரிகவியாதி எனலாம் தங்களை உயர்த்திக்காட்டனும் என்ற பில்டாப்பூ இவங்களுக்கு பொலிஸ் வந்தால் பாக்கனும் இவங்க ஆங்கிலம் எல்லாம் ஓடி ஒளிந்துவிடும் வடிவேல் போல ! இப்படி கொஞ்சம் கூத்தை கம்பி என்னும் போது பார்த்திருக்கிறேன் சகோதரமொழிக்காரன் ஏதும் கேட்கும் போது மாத்தி மாத்தி பேசி ஸகிலா பட ரேஞ்சுக்கு நடுங்குவாங்க துன்பத்திலும் சிரிச்சது இவங்கள் லூட்டியை நினைச்சு!

சக்தி கல்வி மையம் said...

sorry maapla.. naa mobilil irunthu comment poduvathaal virivaaga pesamudiyavillai.

Yoga.s.FR said...

இப்படித்தான் முற்காலத்திலும்,அதாவது இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளி நாடு சென்று வந்தவர்கள் "அலப்பறை" தாங்க முடியாதிருந்தது!பிற்காலத்தில் "எல்லோருமே"வெளி நாடு வரக் கூடியதாயுள்ளது. ஆனால்,வெளி நாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்ப வருவோரில் பெரும்பான்மையோர் பழையதை மறந்ததாக இல்லை!ஓர் சிலர் விதி விலக்காக உள்ளனர் தான்!என்ன செய்ய?அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பதென்பது இதைத் தான்!

Yoga.s.FR said...

உங்கள ஓட்ட வடை வம்பிழுத்திருக்கிறார்!கவனிக்கவும்!என் பங்குக்கு நான் வாரி விட்டேன்!(இருவரையும் தான்!)

சென்னை பித்தன் said...

அந்தக் காலத்திலும் இப்படித்தான். நானெல்லாம் தமிழ் சினிமாப் பாட்டுக் கேட்டா அவனுக,க்ளிஃப் ரிச்சர்ட், பீட்டில்ஸ் இப்படி ஏதாவது கேப்பாங்க!

கவி அழகன் said...

கலக்கல் கலக்கல்

Riyas said...

ம்ம்ம்ம் என்னத்த சொல்ல எல்லாம் நாகரீக வளர்ச்சிதான்

Anonymous said...

ஊருக்கு நாலு பீட்டர் பசங்க இருக்க தானே செய்வாங்க )

Anonymous said...

இவங்கள போலீஸ் பிடிச்சு நாலு கும்மு கும்மினா தெரியும் அம்மா'னு கத்துறான்களோ இல்லை மம்மி'னு கத்துறான்களோ'னு )

பாலா said...

Actually i like this postயா... it looks niceயா..
எனக்கு டெல்லில மீட்டிங் இருக்கு பை..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன் நீங்கள் சொன்ன எல்லாக் குறிப்புக்களையும் படித்தேன்! இது உண்மைதான்! ஒரு முழுமையான வளர்ச்சி நிலையை அடையாதவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

இங்கு வந்து பாருங்கள் எவ்வளவு சிம்பிளாக இருக்கிறோம் என்று!

இங்கு அரைகுறையாக பிரெஞ்சு படித்தவர்கள் ஓவர் பில்டப் கொடுப்பார்கள்!

நன்றாக பிரெஞ்சு தெரிந்தவர்கள், நல்ல தமிழில்தான் கதைப்பார்கள்!

Unknown said...

ஹி ஹி!!!!!!!!!!!!!!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இப்படி பந்தா காட்டுபவர்களின் உளவியல் விளக்கம் என்னதெரியுமா?

தன்னை பிறர் அங்கீகரிக்க வேண்டும்! தன்னை ஒரு பெரிய ஆள் என்று மற்றவர்கள் கருத வேண்டும்! தன்னைப் பற்றி மற்றவர்கள் வியப்படைய வேண்டும்! இன்னும் பல....!

அடிப்படையில் இவர்கள் மன தைரியம் இல்லாதவர்கள்!

நான் ஒரு எளிய பரிசோதனையை சொல்கிறேன்! செய்து பாருங்கள்!

இப்படி பந்தா காட்டும் ஒருவருடன் வேண்டுமென்றே மெல்லிதாக சண்டை போட்டுப் பாருங்கள்! அல்லது இரண்டு நாட்களுக்கு சண்டை போட்டுப் பாருங்கள்!

இவர்கள் மனரீதியாக உடனே பாதிக்கப்பட்டுவிடுவார்கள்! நீங்கள் சண்டை போட்டதை ஆகக் குறைந்தது பத்துப் பேருக்காவது சொல்வார்கள்! அப்படிச் சொல்வதன் மூலம், ஒரு ஆறுதலை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

தங்களைச் சுற்றி இவர்கள் கட்டியமைக்கும் இமேஜ் உடைந்து விடுமோ என்று கவலைப் படுவதிலேயே இவர்களது ஆயுள் தீர்ந்து விடுகிறது!

பந்தா காட்டாமல் எளிமையாக இருக்கும், அல்லது தனக்கு அது தெரியும் இது தெரியும் என்று படம் போடாத நண்பர்களுடன் சண்டை போட்டுப் பாருங்கள்! அவர்கள் அதைக் கணக்கெடுக்கவே மாட்டார்கள்! யாரிடமும் சொல்லவும் மாட்டார்கள்!

தனது இமேஜ் பற்றி கவலைப் படாத ஒருவன், மிகுந்த மனவுறுதி கொண்டவனாக இருக்கிறான்! மன உறுதி குறைந்தவர்களே தங்களை சமனிலைப் படுத்த ,இப்படி ஒரு பந்தா காட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்/

சிலரைப் பாருங்கள் பத்திரிகையில் கட்டுரை எழுதுவார்கள்! வாரம் தோறும் எழுதுபவர்கள், எளிமையாகவும், இனிமையாகவும் எழுதுவார்கள்!

அபூர்வமாக எழுதுபவர்கள்., அடைப்புக்குறிக்குள் ஆயிரத்தி எட்டு ஆங்கில கலைச் சொற்களை போட்டு கொலையா கொன்றுவிடுவார்கள்!

அடிப்படையில் இவர்கள் மீது இரக்கம் கொள்ளுங்கள்! பாவம் அவர்கள்!

நம்ம எஸ் பி பி யை பாருங்கள்! இன்றைய புதிய தலைமுறைப் பாடகரையும் பாருங்கள்! 40000 பாடல்களைப் பாடிவிட்டு, “ நான் எதாச்சும் தப்பா பாடினா மன்னிச்சுக்குங்க “ என்று மேடை தோறும் சொல்லி வருகிறார்/

ஆனால் புதிய பாடகர்கள் பண்ணும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை!

விஜய் டி வி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தேர்வு நடத்திய போது, நடுவர்களாக கலந்து கொண்ட கணவன் - மனைவி பாடகர்கள், திமிர் பிடித்த அந்த இசையமைப்பாளர் ( அவரின் ஒரே ஒரு பாடல் மட்டுமே ஹிட் ) இவர்களை , அந்த நிகழ்ச்சி பார்த்த காலத்தில் மனதுக்குள் திட்டினேன்! காரணம் அவர்களின் ஓவர் பந்தா அண்ட் போட்டியாளரகளை இம்சைப் படுத்தியமை

ஹி ஹி ஹி அந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்னர் வெளியான ஒரு படத்துக்கு அவர் போட்ட மியூசிக் மஹா மட்டம்! பாடல்கள் ஹிட் ஆகவே இல்லை!

டெக்சதீஸ் வெப்சைட்டில் நாங்கள் ஒரு டீம் இருக்கிறோம்! ( அதில் எனக்கு வேறொரு பெயர் ) மேற்சொன்ன பாடகர்களுக்கும் , இசையமைப்பாளருக்கும் கிழி கிழியென்று கிழித்தொம்!

எனது பாடசாலையில் படித்த ஒரு நண்பர், என்னை அண்ணா அண்ணா என்றுதான் கூப்பிடுவார்! அவருக்கு சொல்லும்படி குரல் வளம் ஏதும் இல்லை! அவர் கொழும்புக்கு வந்து, வெள்ளவத்தையில் உள்ள , வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் ( ஹி ஹி ஹி !) ஒரு நிலையத்தில் சேர்ந்து படித்தார்! அவருக்கு வானொலி ஒன்றில் வேலை கிடைக்க இருந்த சமயம்.....னான் அவரை கொழும்பில் சந்தித்தேன்!

தொண்டையை செருமியவாறே ‘ அ...என்னெண்டா...இப்ப இங்க வந்து நாந்தான் எல்லாப் பொறுப்பிலையும் இருக்கிறன்’ என்று அடித்தொண்டையால், பேஸ் குரலில் கதைத்தார்!

நம்ம அப்துல் ஹமீத் கூட, சாதாரணமாக கதைப்பார்! ஆனால் இவரின் அலப்பறை தாங்கவே முடியவில்லை!

அவர் வானொலியில், சேரவே இல்லை! அதற்குள் அவர் சேர இருந்த வானொலியின் போட்டி வானொலியைப் பற்றிக் குறை சொன்னார்! “ ரேடியோவா நடத்துறாங்கள் அவங்கள் “ என்றார்!

இவர்களை என்ன செய்யலாம்! இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அந்த வானொலியில் இப்ப ஆறேழு வருஷமா வேலை பார்கிறார்! ஹி ஹி ஹி ஹி எதையும் சாதிக்காமல்!

( இப்படி எழுதினால் உடனே காழ்ப்புணர்ச்சியால் எழுதுகிறோம் என்கிறார்கள்! ஹி ஹி ஹி காலால் எப்படி புணர்வது? )

மைந்தன், பந்தா காடுபவர்கள் சாதித்தது குறைவு! தற்ஸ் ஓல்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு பாடல் எழுதினார்! அது இசையமைக்கப்பட்டு , வெளியானது! இரண்டொரு தடவை கொழும்பு வானொலி ஒன்றிலும் ஒலிபரப்பானது! பாடல் ஒலிப்பதிவிலும், வரிகளிலும், ஒலிபரப்புத் தரம் என்பதே கிடையாது! சும்மா நர்சரி ரைம் போல இருந்தது!

ஒரு முறைகூட ஒலிபரப்ப தகுதி இல்லாத அந்தப் பாடலை வானொலிக்காரர் இரண்டொரு தடவை ஒலிபரப்பியதே பெரிய விஷயம்!

அதற்குள் அந்த பாடலாசிரியர், தனது ஃபேஸ்புக்கில், தன்னைப் பற்றி பெருமையாகவும் சிறப்பாகவும் எழுதியதோடு மட்டுமல்லாது, எல்லா தனியார் வானொலிகளையும் கிழி கிழியென்று கிழித்திருந்தார்!

இதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கேலுமே, நான் போய் அவருக்கு நல்ல குடுவை குடுத்தேன்! அவரும் பதிலுக்கு விவாதிக்க வந்தார்! நான் நேரடியாகவே எழுதிவிட்டேன் “ உங்கட பாட்டின்ர திறத்தில, அதுக்குள்ள ரேடியோக்களையே குறை சொல்லுற அளவுக்கு வளர்ந்து விட்டீர்களோ? “ என்று!

நான் அவருக்கு சொன்னேன், முதல்ல நல்ல பாடல்களை எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்! பிறகு படம் காட்டுங்கள்! “

Yoga.s.FR said...

என்ன காய் கடுப்பாயிட்டுது?கூலாக்கத் தான் "சமஞ்ச கத" எழுதியிருக்குதோ?டேக் இட் ஈசி,யா?????????(என்னத் தான் அடப்புக்குறிக்குள்ள இங்கிலீசுபிசு எழுதுறத குத்திக் காட்டுறாரோ?

Mathuran said...

பாஸ்.. ரொம்ப அடியோ!! ஹி ஹி

Mathuran said...

உண்மையாவே நல்லதொரு விசயத்த பற்றி எழுதியிருக்கிறீங்க
முதலில் அதுக்கு ஒரு சல்யூட்

Mathuran said...

இவர்களை நாம் கணக்கில் எடுக்காவிட்டால் சரி

சுதா SJ said...

மைந்தன் இதுக்கே இவ்ளோ கடுப்பானா எப்பூடி, வெளி நாட்டு பக்கம் வந்து பாருங்க இவங்க அட்டகாசம் தாங்க முடியாம இருக்கும், கொஞ்சம் விட்டா இங்கிலாந்து மகாராணிக்கே இங்கிலீஸ்ஸு சொல்லி கொடுப்பாங்க...

Jana said...

ஐ பீல் ரோட்டலி ஹன்பீயுஸ் மான்.. ஐ டோன் நோ வை தேர் பீல் பிளஸர் ரூ ஸ்பீக் இங்கிலிஸ்?
சம் பொடி கெம்லைன் மீ தட் மைந்தன் ஓல்ஸோ லைக் தட் பீட்டர்ஸ்???
:)))

ஹேமா said...

இப்பிடி நிறையச் சனம் இருக்குதுகள் சிவா.அதுவும் எங்கட சனங்கள்...அப்பாடி.ஒண்டும் செய்யேலாது.நாங்க சரியா நடப்பம் !

Admin said...

நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிங்கபோல

முரளிநாராயணன் said...

இது எனக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதற்கான ஒரு வெளிப்பாடு.இதை இன்றைய இளைஞர்கள் அனைவரும் செய்கிறார்கள்.காலபோக்கில் இது சரியாகிவிடும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

shanmugavel said...

இந்த பீட்டர் சம்மாச்சாரம் எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரிதான் சிவா .ஒண்ணு விடாம கரெக்டா சொல்லிட்டீங்க !

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...//
அருமையான கருத்துகளுக்கு நன்றிகள் நண்பா!!

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...//
அருமையான கருத்துகளுக்கு நன்றிகள் நண்பா!!

கார்த்தி said...

உவய பற்றி உங்களிடம் கேட்டும் அந்த தருணத்தில் கேட்டும் அறிந்திருந்தேன்! அவய எனக்கு தெரியா

நிருஜன் said...

//வாங்கடா கிரிக்கட் விளையாடுவம்ன்னு சொன்னா வரமாட்டானுகள்..//

CIMA exam முடியட்டும் வாறன் வாறன்.. என்று சொல்லிட்டு வராமவிட்டது யாரு?

A.R.ராஜகோபாலன் said...

அந்நிய மொழியில் மோகம் கொண்டு அலைந்து திரியும் இவர்களை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தாலே மாறிவிடுவார்கள் நண்பரே

நிரூபன் said...

)நம்ம கூட தமிழ் படம் பாக்க வரமாட்டானுகள்..எங்கயாச்சும் இங்கிலீசு படமெண்டா அது சப்ப படமெண்டாலும் பார்க்க போவானுகள்.அவனுக தமிழ் படம் பாக்கிறத நாம பாத்தா அவங்கட மீட்டர் எதோ கொறஞ்சிடுமாங்க!//

மாப்ளே, நம்ம பசங்களில் ஒரு சிலர்,
சத்தமில்லாத படத்திற்கு தான் அடிக்கடி போவாங்க..
ஆனால் நுனி நாக்கால் தஸ்கு, புஸ்கு என்று ஆங்கிபீஸ் பேசுவாங்கள்.

பொண்ணுங்களைக் கண்டாலே போதும்,
பண்ற அலப்பறை தாங்கவே முடியாது மச்சி..

நிரூபன் said...

..அவங்கள் பக்கத்தில நிண்டு இந்தா மச்சான் ஒரு வடை சாப்பிடு எண்டா அவங்க பண்ற ரவுசு இருக்கே..எதோ எலிசபெத் பரம்பரை மாதிரி!இந்தாடா வாழைப்பழம் எண்டா வாங்கமாட்டானுகள்..பனானா எண்டா உரிச்சு வைக்க போடுவாங்கள் ரெண்டு பேரும்!//

நன்றாகத் தான் அவதிப்ப்பட்டிருக்கீங்க போல இருக்கே.
ஹி..ஹி...

நிரூபன் said...

மனிதர்கள் பலவிதம், அதுவும் பந்தா காட்டும் மனிதர்கள் தனிரகம் என்று பிரித்து மேஞ்சிருக்கீங்க...

பேஸ்புக்கில ABCD...சூப்பரோ சூப்பர்..

ஓட்ட வடையாரின் கமெண்டுகளும் உங்கள் பதிவிற்கு ஏற்றார் போல கலக்கலாக வந்திருக்கிறது,

எஸ் சக்திவேல் said...

ஹீ ஹி, நான் படித்த காலங்களில் ஒரு நண்பர். எனக்கு அடுத்த batch. மழை நாட்களில் "குடை இரவல் தருவாயா " என்று கேட்டால் தரமாட்டார். "Can I borrow your umbrella please" என்று கேட்டால், "My pleasure" என்று உடனே குடையை நீட்டுவார்.

Related Posts Plugin for WordPress, Blogger...