Thursday, June 2, 2011

நெப்போலியன் பேனாபார்ட் இறந்தது எப்படி??17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன். நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும்.


1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து மீள்வதற்கு அதற்கு முடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலேநாத் தீவில் கழிந்தது.

நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.


நெப்போலியன் ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல் நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் அறிவித்தனர்.

ஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாகவெளியாகியுள்ளஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன்நெப்போலியன் இயற்கை மரணம்அடைந்ததாகதெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொன்மை கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.

ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது.
நெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.

ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக பலரும் நம்புகின்றனர்.

முதலாம் நெப்போலியன்
Napoléon I
பிரான்சின் பேரரசன்
இத்தாலியின் மன்னன்
சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன்
ரைன் கூட்டாட்சியின் காப்பாளன்
Jacques-Louis David 017.jpg
நெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது
ஆட்சிக்காலம்மார்ச் 20, 1804ஏப்ரல் 6,1814
மார்ச் 1, 1815ஜூன் 22,1815
முடிசூட்டு விழாடிசம்பர் 2, 1804
முழுப்பெயர்நெப்போலியன் பொனபார்ட்
பிறப்புஆகத்து 15 1769
பிறப்பிடம்கோர்சிக்கா
இறப்புமே 5 1821 (அகவை 51)
இறந்த இடம்சென் ஹெலெனா
புதைக்கப்பட்டதுபாரிஸ்
முன்னிருந்தவர்பிரெஞ்சு கொன்சுலேட்
முன்னைய அரசன்:பதினாறாம் லூயி(இ. 1793)
பின்வந்தவர்நடப்பின் படிபதினெட்டாம் லூயி
De Jure நெப்போலியன் II
துணைவிஜோசெஃபின் டெ பியூஹார்னை
மரீ லூயி
வாரிசுகள்நெப்போலியன் II
அரச குடும்பம்பொனபார்ட்
தந்தைகார்லோ பொனபார்ட்
தாய்லெற்றீசியா ரமோலினோ


என் முன்னோர்கள் நான் பதிவிடுவதர்க்காக எழுதிவைத்த குறிப்புகளல்ல இவை..
விக்கிப்பீடியா போன்ற தகவல் மூலங்களிலிருந்து தான் எடுத்தேன்.
நெப்போலியன் என்று போய் விக்கிப்பீடியாவில் தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்??
அதனை நான் தொகுத்து இங்கே தரும் போது
ஒரு முன்னூறு நானூறு பேராவது
பலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான்
பகிர்ந்துகொள்கிறேன்..
!!
இவ்வாறான பதிவுகள் தொகுக்கப்பட்ட பதிவுகலாயினும்,இவற்றுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்து தான் வரும்காலங்களில் தொடர முடியும் நண்பெர்ஸ்...

Post Comment

21 comments:

விக்கி உலகம் said...

மாப்ள உம்ம பணி சிறக்க வாழ்த்துக்கள்.......பகிர்வுக்கு நன்றி

akulan said...

எனக்கு பிடித்த ஒரு போர்வீரன்.....
(உயரத்தில் மிகவும் சிறியவர்)

sothilingam said...

என் முன்னோர்கள் நான் பதிவிடுவதர்க்காக எழுதிவைத்த குறிப்புகளல்ல இவை..
விக்கிப்பீடியா போன்ற தகவல் மூலங்களிலிருந்து தான் எடுத்தேன்.
நெப்போலியன் என்று போய் விக்கிப்பீடியாவில் தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்??
அதனை நான் தொகுத்து இங்கே தரும் போது
ஒரு முன்னூறு நானூறு பேராவது
பலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான்
பகிர்ந்துகொள்கிறேன்..
!!
இவ்வாறான பதிவுகள் தொகுக்கப்பட்ட பதிவுகலாயினும்,இவற்றுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்து தான் வரும்காலங்களில் தொடர முடியும் நண்பெர்ஸ்...

copy paste......

# கவிதை வீதி # சௌந்தர் said...

வரலாற்று பதிவு...

நிரூபன் said...

சகோ, உங்கள் பதிவின் மூலம் தான் நெப்போலியனின் மரணம் இயற்கை மரணம் என்பதை அறிந்தேன்.

வரலாற்றுப் பதிவுகளைச் சுவை படச் சுருக்கமாகத் தொகுத்துத் தரும் உங்களின் முயற்சிக்கு நன்றிகள் சகோ.

Anonymous said...

நல்ல தகவல் வழங்கியதுக்கு நன்றி பாஸ் ..மாவீரன் என்றால் உடனே நினைவுக்கு வருவது நெப்போலியன் தான்...

மதுரன் said...

நெப்போலியன் பற்றிய ஒரு அருமையான தொகுப்பு... தொடருங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்

FOOD said...

//அதனை நான் தொகுத்து இங்கே தரும் போது
ஒரு முன்னூறு நானூறு பேராவது
பலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான்
பகிர்ந்துகொள்கிறேன்..//
உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு ஷொட்டு!

FOOD said...

நல்ல முயற்சிக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.நம்பிக்கை கொள்ளுங்கள்.

யாதவன் said...

உண்மையில் நெப்போலியன் இயற்கை மரணமா
நம்பமுடியவில்லை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நெப்போலியன் பற்றிய தகவல்கள் அருமை..பகிர்வுக்கு நன்றி

shanmugavel said...

சுவையான தகவல்கள் .தொடருங்கள் சிவா!

NKS.ஹாஜா மைதீன் said...

அவரின் மரணம் இயற்கையானது என்ற தகவல் இந்த பதிவிலேதான் தெரிந்துகொண்டேன்....நன்றி வரலாறு வாத்தியாரே,,,

மைந்தன் சிவா said...

//akulan said...
எனக்கு பிடித்த ஒரு போர்வீரன்.....
(உயரத்தில் மிகவும் சிறியவர்)//ஹிஹி ஆமாம்

Ashwin-WIN said...

//நெப்போலியன் என்று போய் விக்கிப்பீடியாவில் தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்??
அதனை நான் தொகுத்து இங்கே தரும் போது ஒரு முன்னூறு நானூறு பேராவது பலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான்பகிர்ந்துகொள்கிறேன்.. !!//
உண்மை உண்மை.. உங்க பனி சிறக்க நான் மாரியாத்தாவ வேண்டுரன்.

கார்த்தி said...

எனக்கென்னவோ மைந்தனிண்ட முந்திய பிறவிலதான் டவுட்டு!

♔ம.தி.சுதா♔ said...

ஒரு சிறந்த வீரன் இவரைப் பற்றிய சர்ச்சசைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது...

எனக்கு இவரை விட அலேக்சாண்டரை கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

எப்பூடி.. said...

//பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில்//

கோர்சிகா

//வாட்டர்லூ என்னுமிடத்தில்//

பெல்ஜியம் நாட்டில் உள்ளது.

//சென் ஹெலெனா தீவில்//

ஆபிரிக்க கண்டத்திற்கு அண்மையில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது.


* நெப்போலியனின் புகழ் பெற்ற குதிரை மாரங்கோ, அதேபோல அலெக்ஸ்சன்டரின் புகழ் பெற்ற குதிரை புசெபாலஸ்


* உபயோகமான பதிவு, நான் அறிந்த சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன், நன்றி .

மைந்தன் சிவா said...

//எப்பூடி.. said...//
புதிய தகவல்களுக்கு நன்றிகள் பாஸ்!

Nesan said...

நல்ல விடயம் மாப்பூ இவரின் திறமையை என் பாரிஸ் நண்பர்கள் வியர்ந்து கூறுவார்கள் .மரணங்கள் பலருக்கு சந்தேகங்களை கொடுக்கிறது !

ஹேமா said...

நெப்போலியனது மரணம் பற்றிய செய்திகள் எனக்குப் புதிது.
பிரபலமானவர்களின் மரணம்கூட மர்மம்தானோ !

Related Posts Plugin for WordPress, Blogger...