Friday, February 18, 2011

என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!


தொடர்ந்து ஒரே மொக்கை பதிவுகளா எழுதுறதால என்னைய "அகில உலக சீரியஸ் பதிவர் சங்கம்"
தனது சங்கத்திலிருந்து தூக்கிட்டதா நேத்து தான் பிபிசி'ல ஹெட் லைன்'னா சொன்னாங்க.
கேட்டதும் அப்பிடியே ஷாக் ஆக்கிட்டேன் நானு!
அப்படி என்னத்த நான் எழுதிப்புட்டன்?
நமீதாவ பத்தி எழுதினது தப்பா?

நானாச்சும் நமீதான்னு தலைப்பு போட்டு நமீதாவ பத்தி எழுதுறன்..
"சி பி" எல்லாம் என்னமோ எழுதுறாரு நமீதாண்ட படத்த மட்டும் போட்டு..!
அவர் மட்டுமா?பல பேரு இப்படி தானே மொக்கையா எழுதி
சம்பாதிக்குறாங்க(அடி உதை தான் வேறென்னத்த!)

அப்பிடி இருக்கும் போது என்ன மட்டும் சங்கத்தில இருந்து விலக்கியது
மாபெரும் தப்பு எண்டு எண்ட வக்கீல் இரவோடு இரவா நேத்து நயிட்டே உச்ச நீதிமன்றத்தில
வழக்குத்தாக்கல் செய்திட்டாரு!
வழக்கின் பிரதிவாதிகளாக ஓடிப்போன ஹோஸ்னி முபாரக்'கும்,பிடிபட்ட ஜூலியன் அசஞ்'சும் குறிப்பிடப்பட்டிருக்காங்க..

நமீதாவோட நான் மாறு வேஷத்தில எடுத்துகிட்ட போட்டோ!
(நம்பவா போறீங்க?)

எண்ட மொக்க பதிவொண்ட விக்கிலீக்ஸ்'ல ரெண்டு நாளுக்கு முதல்'ல கசிய விட்டிட்டாங்க.
அதால தான் நான் மொக்கை பதிவர் எண்டது "அகில உலக சீரியஸ் பதிவர் சங்கத்துக்கு" தெரிய வந்திருக்கு!
எனக்கு மட்டுமில்ல,நமீதாவ வைச்சு ஓட்டுற அத்தனை பேரையும் "பொடா" சட்டத்தில தூக்கப் போறாங்களாம்.
அதுக்கு நம்ம சிங்கம் "துரைசிங்கம்"ட ஹெல்ப்'பு கேட்டிருக்காங்க எண்டா அதிண்ட சீரியஸ் எம்புட்டு தூரத்துக்கு போயிருக்குன்னு பாருங்க!

இது சம்பந்தமா இன்னிக்கு காலைல ஸ்காட்லான் யார்ட் போலீசு எண்ட வீடு தேடி வந்து விசாரணை பண்ணீட்டு போனாங்க..
அவங்க என்ன கேட்டாங்க...நான் என்ன சொன்னேன்?

எஸ் கே யார்ட்:நீங்க யாரு மொக்கை பதிவர் மைந்தன் சிவா'வா?
நான்:நீங்க யாரு மோட்டு போலீசு ஸ்கொட்லன்ட் யார்ட்'டா?

எஸ் கே யார்ட்:யார்க்கிட்ட பேசிட்டிருக்கீங்க எண்டு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?
நான்:மொக்கை பதிவர்களிண்ட பலம் மொக்கை தெரியாம நீங்க தான் பேசிட்டிருக்கீங்க!

எஸ் கே யார்ட்:பிடிச்சிட்டு லண்டனுக்கே கூட்டிட்டு போயிடுவம் ஜாக்கிரத!
நான்:ஏன் அங்கயும் வந்து மொக்கை போடணுமாங்க?

எஸ் கே யார்ட்:ஏய்.........நாங்க ஜேம்ஸ் பாண்ட் ட்ரைனிங் எடுத்தனாங்கடா!
நான்:நாங்க விஜயகாந்த் படங்கள் பாத்து ஆயிப்போனவங்கடா..!!

எஸ் கே யார்ட்:ஐயோ ஆள விடுடா சாமி..
நான்:போகேக்க ஓட்டு போடுடா சாமி!!

(எம்புட்டு டெரரா பாயுறாங்க பாருங்க,பயலுகளுக்கு அம்புட்டு பாசம் அண்ணன் மேல!)

அதுக்குள்ளே நம்மள தேடி இவங்க வந்திட்டாங்க எண்டு கதை பரவ,என்னுடைய விசிறிகள் ஆதரவாளர்கள் எல்லாம் என்னுடைய வீட்டுக்கு வெளில திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பண்ண வந்திட்டாங்க எண்டு சொன்னா நம்பவா போறீங்க?இவன பிடிச்சிட்டு போங்க சார் தொல்லை தாங்க முடியல எண்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் பண்ண வெளிக்கிட்டாங்க!

அத சமாளிக்கிறதுக்க லோக்கல் போலீசுக்கு போதும் போதும்ன்னு ஆகிடிச்சு!
அப்ப தான் எண்ட பல்பு மண்டைக்கு என்னால இம்புட்டு சனம் பாதிக்கப்பட்டிருக்காங்க எண்டு தெரிய வந்திச்சு!தெரிஞ்சும் என்ன பிரயோசனம் மொக்கை பதிவு எழுதுறத நிறுத்தவா போறேன்?ம்ஹும்!!
நன்றிகள் கோடி மக்கா!!

டிஸ்கி:
1 )நானும் மொக்கை பதிவராம்!அதுக்கு இம்புட்டு பில்ட் டப்பு தேவையா?போங்கடா நீங்களும் உங்கட....
2 )வல்லரசு விஜயகாந்த் எண்டா உலகமே ஆடுது பாத்தீங்களா?அதனால எல்லாரும் மறுபடி ஒரு தரம் விருதகிரி பாருங்க!
3 )அத விட மொக்கை பதிவர் எண்டா ஆடாதது எல்லாம் ஆடுமாம்!!அது என்ன எண்டு என்னட்ட கேக்காதீங்க பாஸ்!!

லேட்டஸ்ட் டிஸ்கி:நமக்கு எதிர்ப்பு தெரிவிச்சு டுவிட்டர்,பேஸ்புக் போன்றவற்றில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்னு நடத்துறாங்கலாம்லே..
நம்ம ஒற்றர் படை தலைவர் எனக்கு எஸ் எம் எஸ் மூலம் அபாய எச்சரிக்கை விட்டிருக்காரு..
அசக்கு புசக்கு அடங்கிடுவமா நாம?

Post Comment

27 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போடறா முத வெட்டை

“நிலவின்” ஜனகன் said...

வொண்டர் ஃபுல்.............விடாதீங்க புடிங்க.....மொக்கை பதிவுகள் எழுதுறதை சொன்னேன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>>"சி பி" எல்லாம் என்னமோ எழுதுறாரு நமீதாண்ட படத்த மட்டும் போட்டு..!
அவர் மட்டுமா?பல பேரு இப்படி தானே மொக்கையா எழுதி

லாஸ்ட் வார்னிங்க். என்னை இனி வம்புக்கு இழுத்தால்....

ஹூம் ஒண்ணும் பண்ண முடியாது..ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

எப்படியோ நமீதாவை வெச்சு ஒரு ஹிட் போஸ்ட் தேத்தியாச்சு ம் ம்

மைந்தன் சிவா said...

சி.பி.செந்தில்குமார் said...
போடறா முத வெட்டை//

வெட்டுங்க நீங்க தான்

மைந்தன் சிவா said...

//“நிலவின்” ஜனகன் said...
வொண்டர் ஃபுல்.............விடாதீங்க புடிங்க.....மொக்கை பதிவுகள் எழுதுறதை சொன்னேன்.//

உண்மையா அது தானா??இல்ல ஒரு சந்தேகம்..ஹிஹி .

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>"சி பி" எல்லாம் என்னமோ எழுதுறாரு நமீதாண்ட படத்த மட்டும் போட்டு..!
அவர் மட்டுமா?பல பேரு இப்படி தானே மொக்கையா எழுதி

லாஸ்ட் வார்னிங்க். என்னை இனி வம்புக்கு இழுத்தால்....

ஹூம் ஒண்ணும் பண்ண முடியாது..ஹி ஹி//



இதே வார்னிங் எத்தனை இடத்தில குடுப்பீங்க பாஸ்?

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...

எப்படியோ நமீதாவை வெச்சு ஒரு ஹிட் போஸ்ட் தேத்தியாச்சு ம் ம்//



அவங்க தானே பாஸ் இப்ப சூடா இருக்காங்க நம்ம மத்தில!

ம.தி.சுதா said...

மைந்தன் இந்த மொக்கை என்ற வசனத்தை எடுத்திடுங்க இதை நகைச்சுவைப் பதிவென்றும் சொல்லலாம்.... சும்மா டம்மியா ஒண்ணுமே இல்லாம எழுதின அப்படி சொல்லலாம்....

என்னைப் போல குமர்ப் பொடியள் அந்த நமிதா படத்தை பார்த்தாவது சிரிக்க மாட்டோமா ? ஹ..ஹ..ஹ..

மைந்தன் சிவா said...

//ம.தி.சுதா said...
மைந்தன் இந்த மொக்கை என்ற வசனத்தை எடுத்திடுங்க இதை நகைச்சுவைப் பதிவென்றும் சொல்லலாம்.... சும்மா டம்மியா ஒண்ணுமே இல்லாம எழுதின அப்படி சொல்லலாம்....

என்னைப் போல குமர்ப் பொடியள் அந்த நமிதா படத்தை பார்த்தாவது சிரிக்க மாட்டோமா ? ஹ..ஹ..ஹ.//



உங்களுக்கு தான் மட்டர்'ரே புரிஞ்சிருக்கு பாஸ்..நீங்க ஒரு நடமாடும் ஜீனியஸ் பாஸ் !

முத்து said...

//இவன பிடிச்சிட்டு போங்க சார் தொல்லை தாங்க முடியல எண்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் பண்ண வெளிக்கிட்டாங்க!
//
இது தான் உண்மை மக்கா

ஆதவா said...

ஆனா ஒண்ணு சொல்றங்க.... மொக்கைக்கெல்லாம் மொக்கை பதிவரா உங்களை தேர்ந்தெடுக்கலாம்... எதுவுமே இல்லாட்டியும் பதிவு எழுதறதுக்கும் ஒரு திறமை வேணும்!!!

மைந்தன் சிவா said...

//முத்து said...
//இவன பிடிச்சிட்டு போங்க சார் தொல்லை தாங்க முடியல எண்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் பண்ண வெளிக்கிட்டாங்க!
//
இது தான் உண்மை மக்கா//

ஆமா கண்டுபிடிச்சிட்டாரு கொலம்பச்சு!

மைந்தன் சிவா said...

//ஆதவா said...
ஆனா ஒண்ணு சொல்றங்க.... மொக்கைக்கெல்லாம் மொக்கை பதிவரா உங்களை தேர்ந்தெடுக்கலாம்... எதுவுமே இல்லாட்டியும் பதிவு எழுதறதுக்கும் ஒரு திறமை வேணும்!!//

ஐயோ என்ன ரொம்ப புகழ்றீங்க நீங்க..

ஒரே ஷேம்'ஆ இருக்கு எனக்கு

விக்கி உலகம் said...

அருவாவுக்கு அருவா ஹி ஹி!

இது எப்பூடி!

Chitra said...

வல்லரசு விஜயகாந்த் எண்டா உலகமே ஆடுது பாத்தீங்களா?அதனால எல்லாரும் மறுபடி ஒரு தரம் விருதகிரி பாருங்க!


.....ம்க்கும்.... இங்கே ஒரு தரம் பார்க்குறதுக்கே தைரியம் வரல...

மைந்தன் சிவா said...

//விக்கி உலகம் said...
அருவாவுக்கு அருவா ஹி ஹி!

இது எப்பூடி!//

ரொம்ப சூப்பரு!!

மைந்தன் சிவா said...

//Chitra said...
வல்லரசு விஜயகாந்த் எண்டா உலகமே ஆடுது பாத்தீங்களா?அதனால எல்லாரும் மறுபடி ஒரு தரம் விருதகிரி பாருங்க!


.....ம்க்கும்.... இங்கே ஒரு தரம் பார்க்குறதுக்கே தைரியம் வரல...//

பரவால யாரையாச்சும் துணைக்கு கூட்டீட்டு போங்க!!
எதுக்கும் சேப்டிக்கு ஒரு நாலு அஞ்சு பெட்ஷீட் சுத்திட்டு போங்க ஹிஹி

suthan said...

இவருக்கு இவளவு பெயரும் புகழும் வாங்கி தந்த எங்கள் குடும்ப குத்து விளக்கு நமீதா அக்கா வாழ்க வாழ்க ...............

sakthistudycentre-கருன் said...

அருமையான கற்பனை.. நம்ம பக்கம் வரதில்லையே தல...

MANO நாஞ்சில் மனோ said...

//நாங்க விஜயகாந்த் படங்கள் பாத்து ஆயிப்போனவங்கடா..!!//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அசத்தல் சிரிச்சி முடியலை....

# கவிதை வீதி # சௌந்தர் said...

நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா
சபாஷ் நடத்துங்க...

இருந்தாலும் அருமை..

வ ழ்த்துகளும் வாக்குகளும்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஓட்டு போட்டுட்டு ஓடியாச்சி..

நிப்பேனா இங்கா..

Jana said...

நமீதாவோட நான் மாறு வேஷத்தில எடுத்துகிட்ட போட்டோ!
(நம்பவா போறீங்க?)


நம்புறோம்பா...நம்புறோம்.

Riyas said...

ஹா ஹா கலக்கல்.. இப்பதான் உங்க பக்கம் வருகிறேன் சிவா, எல்லாம் கலக்கல்

mohamed said...

மைந்தன் சிவா என் நண்பன்டா நீ எழுது படிக்க நாங்கள் இருக்கோம்
அன்புடன் சர்புதீன்

விச்சு said...

சார்... மறுபடியும் வல்லரச ஞாபகப்படுத்தாதீங்க..
செம செம மொக்கை...

Related Posts Plugin for WordPress, Blogger...