Wednesday, July 20, 2011

பொண்டாட்டிக்கு கடிதம் வந்தா அவகிட்டதானே கொடுக்கணும்!!!

சும்மா இருக்கிறான் சும்மா இருக்கிறான்னு பேசுறது வேணும்னா சும்மா இருக்கலாம்..ஆனா சும்மா இருந்து பாத்தால் தான் சும்மா இருக்கிறது சும்மாவா என்று எந்தப் பெரிய சுப்பனுக்கும் புரியும்!!சும்மா சும்மா கதைப்பாங்க சும்மா சும்மா இருக்காங்க எந்த வேலையும் இல்லாம சும்மா சும்மா வெட்டியா பொழுது போக்கிறாங்க எண்டு கதைப்பாங்க சும்மா இருக்கிரதிண்ட கஷ்டம் புரியாத வேலை வெட்டி பயலுக..சும்மா இருந்து பாருங்க சும்மா இருக்கிரதிண்ட கஷ்டம் புரியும் மக்கா!!

அதிலே ஒரு போஸ்ட் ஆபீசர்(அதாங்க தபால் காரர் நம்ம உணவுலகம் ஆபீசர் இல்லைங்க))உன் பொண்டாட்டிக்கு கடிதம் வந்திருக்குன்னு குடுக்க வடிவேல் சூடாகி அடிக்கும் பாருங்க பொண்டாட்டிக்கு கடிதம் வந்தா அவகிட்ட குடுக்காம என்கிட்டே தந்து என்னைய வேலை வாங்கிறாயா எண்டு...ஹிஹிஹி சும்மா பயலுக தொல்லை இப்பிடியுமா!!


அடுத்தது அனைவருக்கும் ஆரம்ப காலத்தில் பிடித்த "சுனா பானா" காமெடி..ஆளின் அளவும்,அவரின் மீசையும்,எதையும் லாவகமாக கையாளும் திறமையும்,எதுநடந்தாலும் சாதிக்கிற நுணுக்கமும் கொண்ட சுனா பானா பாத்திரம் இன்றும் பலர் மனதில் வாழ்ந்துகொண்டிருகிறது!
அந்த பஞ்சாயத்து வைப்பாங்க பாருங்க ஆடு காணாமல் போனதுக்கு..அந்த சீன் தான் இது!!
"விட்ரா விட்ரா சூனா பானா" ஹிஹி இன்னமும் நாம விட்டபாடில்லை!


வடிவேலுவின் காமெடிகள் ஒவ்வொன்றுமே பிரசித்தம் ஆகுவதற்கு அவரின் நடிப்பு மட்டும் காரணமாய் அமைந்துவிடுவதல்ல,...அவரின் வசனங்களும் தான்..ஒவ்வொரு காமெடியிலும் ஒவ்வொரு வசனம் பிரசித்தமாகி சந்து பொந்து பதிவு எல்லாம் பழக்கமாகிவிடும்!!அந்த வகையில் இந்த காமெடி பிரசித்தி பெற காரணம் "வரும் ஆனா வராது" வசனம் தான்!!எத்தனை தரம் பார்த்தாலும் சிரிப்பு தானாக வரும் பாருங்கள்!!
எல்லாம் வண்டி அடிபட்டு கவிண்டு கிடந்தது எழும்பிய பின்னரும் அவர் கேட்பார் பாருங்கள் போவோமா எண்டு ஹிஹி...கலக்கல்...
இன்னமும் பலரு சொல்லிக்கிட்டு திரியிராங்களாம் நீங்க எம்ஜிஆர் மாதிரி சும்மா தக தக தகன்னு மின்னுறீங்க போங்க என்று!!
அப்புறம் இன்னொரு வசனம்:"அவ்வளாவு சத்தமாவா கேக்குது!"


இத்தகைய நகைச்சுவைகளை தந்த வடிவேலு மீண்டும் களம் காண்பாரா??காண வேண்டும் என்பதே எமது அவா..அவர் இல்லாமல் தமிழ் சினிமா செத்துப்போன காமெடிகளை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..உதாரணம், வேங்கை கஞ்சா கருப்பு!

Post Comment

33 comments:

கார்த்தி said...

வடிவேலுவின் மிகச்சிறந்த 3 நகைச்சுவைகளை பதிந்துள்ளீர்கள்!!

சி.பி.செந்தில்குமார் said...

padhivin பதிவின் முதல் பேராவுக்காகவே மைனஸ் ஓட்டு போடனும்யா.. ஆனா முடியல.. ஹி ஹி

ஜீ... said...

நல்லாத்தான் இருக்கு....ரொம்ப பிசியோ? :-)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Thanks 4 sharing..

ஆகுலன் said...

வடிவேலுவை கன நாளைக்கு பிறகு காண்கிறேன்...பாவம்...

கூகிளுக்கு ஏன் இந்த வேலை????

Nesan said...

வடிவேல் பேசாமல் திரையில் மட்டும் நடித்திருக்கலாம் ஓவராக ஆடியதில் ஒதுங்கவைத்திட்டார்கள்.
நகைச்சுவைப் பதிவு நல்லாதாக இருக்கிறது.

விக்கியுலகம் said...

வடிவேலு தமிழ் சினிமா மறக்க முடியாத ஒரு கலைஞ்சன்!(வாய் துடுப்பை தவிர!)..பகிர்வுக்கு நன்றி மாப்ள!

பாலா said...

வடிவேலு காமெடிகளில் எனக்கு மிகவும் பிடித்தது அந்த சூனா பானா பஞ்சாயத்து காமெடி. பகிர்வுக்கு நன்றி.

செங்கோவி said...

ராணாவில் அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே கவலை வேண்டாம்..அவர் மீண்டு வருவார்.

கவி அழகன் said...

சுப்பர் பதிவு

Anonymous said...

///சும்மா இருக்கிறான் சும்மா இருக்கிறான்னு பேசுறது வேணும்னா சும்மா இருக்கலாம்..ஆனா சும்மா இருந்து பாத்தால் தான் சும்மா இருக்கிறது சும்மாவா என்று எந்தப் பெரிய சுப்பனுக்கும் புரியும்!!/// அது தானே, சும்மா இருக்கிறது என்பது அவ்வளவு சுலபமான வேலையா !!

Anonymous said...

///அவர் இல்லாமல் தமிழ் சினிமா செத்துப்போன காமெடிகளை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..உதாரணம்,தெய்வத்திருமகள் கஞ்சா கருப்பு!///பாஸ் கஞ்சா கருப்பின் மரண மொக்கை வேங்கை படத்தில் என்று நினைக்கிறேன்.

Yoga.s.FR said...

என்ன செய்ய "எல்லாம்" விதி!அது வந்து..................... எப்படியென்றால்,நீங்கள் இந்தப் பதிவு?!போட்டது,அதை நாம் படிப்பது!அடுத்து,மாயையில் சிக்கி ("அவங்க" தான் ஜெயிப்பாங்க!?/அவரைப் பழி வாங்க? கிடைத்த சந்தர்ப்பம் என்று) கைப்புள்ள நாசமாப் போய்,இப்போ "சும்மா"இருக்கவும் அந்த விதி தான் காரணம்,மக்கா!!!!!!!!

kobiraj said...

வடிவேலுவின் அருமையான காமெடி காட்சிகள் ப்ரண்ட்ஸ் தான் எனக்கு வெஸ்ட்.அப்புறம் கருப்பு தாக்கியது பூனையில் என்று நினைக்கிறேன்.

Yoga.s.FR said...

சி.பி.செந்தில்குமார் said...
பதிவின் முதல் பேராவுக்காகவே மைனஸ் ஓட்டு போடனும்யா.. ஆனா முடியல.. ஹி!ஹி!!/////என்ன ஹி!ஹி?,நட்சத்திரப் பதிவர் மைனஸ் ஓட்டுப் போட்டா செல்லாதாமே?

Yoga.s.FR said...

செங்கோவி said...

ராணாவில் அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே கவலை வேண்டாம்..அவர் "மீண்டு" வருவார்.////என்னமோ நோயில கெடந்துட்டு தேறி வருவாருங்கிறமாதிரி சொல்லுறீங்க?நாக்கில அவரு(சனி) வந்து உக்காந்தா அப்புடித்தாங்க ஆவும்!முன்ன பின்ன யோசிக்கணும்க!

Yoga.s.FR said...

கந்தசாமி. said...
///அவர் இல்லாமல் தமிழ் சினிமா செத்துப்போன காமெடிகளை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..உதாரணம்,தெய்வத்திருமகள் கஞ்சா கருப்பு!///பாஸ் கஞ்சா கருப்பின் மரண மொக்கை வேங்கை படத்தில் என்று நினைக்கிறேன்.§§§§§ Yes,mister "Karuththu"Kanthasamy,you are "CORRECT°

எப்பூடி.. said...

வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத காமடியன். ஆனால் இப்பெல்லாம் வடிவேலு காமடியை எதிர்பார்க்கிரதைவிட நான் சந்தானம் காமடியாத்தான் நிறைய எதிர் பார்க்கிறேன், சந்தானம் பற்றி பதிவிட நிறைய நாட்கள் நினைத்தும் இன்னும் கை கூடவில்லை, காரணம் பஞ்சி :-)

koodal bala said...

காமெடிய விட்டு கலக்கிட்டீங்க மாப்ளே ....

காட்டான் said...

உண்மையில் வடிவேலின் காமடி கிராமத்து காமடி..  சொந்த ஸ்டைல் சந்தானம் கவுண்டமணிய  பின்பற்றுகிரார் சொந்த சரக்க வைத்திருப்பவன் எங்கேயும் கடை விரிப்பான்... கள்ள சரக்க ஒளிச்சுதான் விக்கமுடியும் .. வடிவேலு தேவையில்லாம தாத்தா பின்னால போட்டார் கவுண்டமணியை பார்த்து கற்றுக்கொண்டிருக்கலாம் ..!

காட்டான் குழ போட்டான்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

கடுப்பேத்ராங்க மை லார்டு...

அரசன் said...

நல்ல நடிகன் வாழ்விலும் படத்திலும்

A.R.ராஜகோபாலன் said...

அருமையான பகிர்வு தலைவா
இந்த அரசியலில் அவர் ஈடுபட்டிருக்க வேண்டாமோ என நினைக்கிறேன்

shanmugavel said...

சும்மா சும்மா ஒரு கமென்ட்

shanmugavel said...

நிஜமா ஒரு கமென்ட் .வடிவேலு விஷயத்தை வழிமொழிகிறேன்

சென்னை பித்தன் said...

தனக்குத்தானே சூனியம்!

ஹேமா said...

நிச்சயம் வடிவேலு வருவார்.
சினிமாக்காரர்களுக்கே அவர் வேணுமே.அப்புறமென்ன !

FOOD said...

கலக்கல் காமெடி பகிர்வு.

Mahan.Thamesh said...

வடிவேலுவின் சிறந்த காமெடி பகிர்வுக்கு நன்றி .
வடிவேலுவின் காமெடி இனி பழசு தான் பார்கலாம் . புதுசு எப்ப வருமோ .......

KANA VARO said...

விட்ரா விட்ரா சூனா பானா..

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

இந்த லிஸ்ட்ல கிணத்த காணோம் காமடிய விட்டுடீங்களே

நிரூபன் said...

எப்போதுமே நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் வடிவேலுவின் காமெடிகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.
கலக்கல் பதிவு பாஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...