Friday, April 1, 2011

மந்த்ரா பேடி'யும் விரேந்தர்+யுவராஜும்!!

எல்லாருக்கும் இப்படி கொஞ்ச நண்பர்கள் கிடைத்திருப்பார்கள்...அல்லது பார்த்திருப்பீர்கள்..
எனக்கும் இவ்வாறு ஒரு சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
அவர்களை பற்றி என்ன சொல்வது??
சொல்லாமல் கூட விடலாம் ஆனால் என்னமோ சொல்லணும் போல ஒரு உறுத்தல்..
அதே போல அவர்களை பற்றி சொல்ல அவர்கள் பெரிய தலைகளும் கிடையாது.

இப்ப வேர்ல்ட் கப் கிரிக்கட் சீசன்.நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை.
அவ்வாறு நான் சொல்லி இப்போது தான் உங்களுக்கு இந்த மேட்டர் தெரிய வந்திருக்குன்னு சொன்னா.......

அப்பிடியா??
வாங்க உங்கள பத்தி தான் நான் கதைச்சிக்கிட்டு இருக்கேன்.

சாதாரணமா ஒரு மூணு போட்டி கொண்ட ஒரு நாள் தொடர்....அப்பிடி இப்பிடி எண்டால் பரவாயில்லை..
வேலை....படிப்பு என்று பல்வேறு காரணங்களால் (அதான் பிசி)அதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

ஆனால் உலகக்கிண்ணம்...அதுவும் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் நடக்கின்ற மாபெரும் போட்டி..
இவ்வாறு ஒரு போட்டி நடக்கிறதென்றே தெரியாமல் சிலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள்..
நம்பாவிட்டால் பொங்கல்..அடச்சீ போங்கள்..இது உண்மை!!

என் நண்பன் ஒருத்தன் இருக்கான்..நாம எல்லாரும் சேர்ந்து கிரிக்கட் விளையாடினாக்கா(அவன் வீட்டுக்கு முன்னால தான்)
அவன் சைக்கிளை தூக்கிகிட்டு ஊர் சுத்த கெளம்பிருவான் ..அப்படி வளர்ந்த பய புள்ள..
அவனுக்கு வோர்ல்ட் கப் நடக்குதுன்னே தெரியாது...
எனக்கு ஷாக்!!வாடா என்று இழுத்துக்கிட்டு போயி அன்று நடந்துகிட்டிருந்த மேட்ச்'சை காட்டினேன்.
மலிங்க யோக்கர் ரக பந்துகளால் இங்கிலாந்தை தாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பம்..
என்னுடைய நண்பன் அதை பார்த்து கொஞ்ச நேரம் ஜோசித்துவிட்டு கேட்டான்,
"பார்ரா மலிங்க எல்லா பந்தையும் இப்பிடி நேரா விக்கட்டுக்கு போடுறான்"
அப்பிடீன்னு.

நான் சொன்னேன் ஓமடா அதுக்கு என்ன இப்ப??
"இல்லடா எவ்வளவு கஷ்டம் நேர போடுறது"!!!!

இப்படிப்பட்ட நண்பன் யாராச்சும் உங்களுக்கும் சிக்கி இருப்பாங்களே??

நேராக பந்துபோடுதல் கஷ்டமா??
ஒரு வேளை சின்ன வயதில் நேராக பந்து வீச பழகும் போது ரொம்ப அடி வாங்கி இருப்பானோ???
அதிலிருந்து சில சமயம் கிரிக்கட்டே பிடிக்காமல் போயிருக்கலாம்..
......
....
...
...
எல்லாம் சரி அதென்ன மந்த்ரா பேடியும் விரேந்தர்'ரும்??
மந்த்ரா பேடியின் தந்தை பெயர் தான் விரேந்தர் சிங் பேடி...
பாருங்கள் தந்தையின் பெயருக்குள் மூன்று பிரபல இந்திய நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கிறார்கள்!!"சிங்" அது யுவராஜ் சிங்'ஆ இல்லை பாஜி ஹர்பஜன் சிங்'ஆ என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!!!

அதனால் தான் மந்த்ரா கிரிக்கெட்டில் மயக்குகிறாரோ??
கொசுறு:பிறந்த தேதி ஏப்ரல் பதினைந்து 1972 !!


கிசு கிசு படிக்கிறதுன்னா நம்ம பசங்களுக்கு இருக்கிற ஆர்வமே தனி தான் பாஸ்!!

Post Comment

7 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

முத குத்து..

# கவிதை வீதி # சௌந்தர் said...

அப்ப இரண்டாவது குத்து...

# கவிதை வீதி # சௌந்தர் said...

கடைசியா மூணாவது குத்து..

MANO நாஞ்சில் மனோ said...

நானும் குத்திட்டேன்பா.....
வரலாறு முக்கியமாச்சே....

Anonymous said...

///"இல்லடா எவ்வளவு கஷ்டம் நேர போடுறது"!!!!// அப்பாவி நண்பன் ))))

நிரூபன் said...

நான் சொன்னேன் ஓமடா அதுக்கு என்ன இப்ப??
"இல்லடா எவ்வளவு கஷ்டம் நேர போடுறது"!!!!//

என்ன உட்கார்ந்து யோசிப்பீங்களா? இல்லைத் தூங்கிட்டே யோசிப்பீங்களா?
செம கடி... சிரிப்பு சிரிப்பா வருது. மந்திரா பேடி பிறந்த திகதியைப் பார்த்தால் நம்மளுக்கெல்லாம் ஆன்ரி மாதிரி.. அதாலை மேட்டருக்குள் நோ என்ரி.

கலக்குறீங்க பாஸ் என்று சொல்லி டெம்பிளேட் கொமன் போட முயற்சி செய்யவில்லை. பதிவில் விமர்சிக்கும் அளவிற்கு அதிக விடயங்கள் இல்லை. ஒரே ஒரு டபுள் ஸ்ரோங் நகைச்சுவை மட்டும் இருக்கிறது. அடுத்த பதிவில் ஆரோக்கியமான கருத்துக்கள் தருவீர்கள் என நம்புறேன் பாஸ்.

சி.பி.செந்தில்குமார் said...

>>கிசு கிசு படிக்கிறதுன்னா நம்ம பசங்களுக்கு இருக்கிற ஆர்வமே தனி தான் பாஸ்!!


ஹி ஹி இப்பவாவது என்னை பையன்னு ஒத்துக்கிட்டீங்களே.. ஹி ஹி

Related Posts Plugin for WordPress, Blogger...