Wednesday, April 13, 2011

மங்காத்தா ரிலீஸ் புதுவருஷத்தில்...


மங்காத்தா ரிலீஸ் புதுவருஷத்தில்...
அஜித் நடிக்கும் மங்காத்தா,
வெங்கட் பிரபு இயக்கும் மங்காத்தா என்று மங்காத்தா படம் வெகு சீக்கிரமாக
படப்பிடிப்புகள் நடந்து முடிவடைந்து எதிர்வரும் புது வருஷத்தில்
ரிலீசாகும் என்று நம்பகத்தகுந்த தகவல் எனது நண்பன் ஒருவனிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது!!

குறிப்பிட்ட நண்பன் உகண்டாவில் வேலை பார்த்து வருகிறார்.அவர் இதை பற்றி குறிப்பிடும்போது,

மன்காத்தாவின் சில காட்சிகள் முக்கியமாக அஜித் திரிஷா ரொமான்ஸ் காட்சிகள் உகண்டாவில் ஒரு வறண்ட பாலைவனத்தில்
மிக ரகசியமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
அது எனது நண்பன் சில முக்கிய கடன்களை நிறைவேற்றுவதர்க்காக பாலைவனப் பக்கம் ஒதுங்கிய போது தெரியவந்திருக்கிறது.
இதனால் அவரது கடன் கழிக்கும் நிகழ்வு கூட பாதிக்கப்பட்டுள்ளதாம்..காரணம் படக்குழுவினர் அடிக்கடி ஸ்பாட் லைட்ஸ்'ஐ சுத்தி சுத்தி அடித்திருக்கிறனர்.ரொமான்ஸ் சீன் என்பதால் ஷூட்டிங் இரவு நேரத்தில் தான் நடந்திருக்கிறது.

அத்துடன் இன்னொரு முக்கிய தகவலையும் அந்த நண்பர் என்னிடம் சொல்லி இருந்தார்..
அதாவது அஜித்துக்கு சில ரொமான்ஸ் சீன் நடிக்க வரவில்லையாம்..
அதனால் வெங்கட் பிரபு தானே அஜித்துக்கு டூப் போட்டு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறாராம்!
அப்ப பாருங்களேன்..


வர வர எது எதற்கு டூப் போடுவதென்று ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது....
அக்சன் காட்சிகளில் ஜான் சீனா டூப் போட்டு நடித்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே??
நடன காட்சிகளில் வழக்கம் போல ராஜு சுந்தரம் டூப் போட்டிருக்காராம்..

எனினும் பாடல்,பட வெளியீட்டு விழாவில் அஜித் குடும்பம் சகிதமாக கலந்து கொள்வாரென வெங்கட் பிரபு தரப்பில் கூறப்படுகிறது..
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இந்திய நண்பர்கள் பெரும்பாலும் பல "இலவசங்கள்" சகிதம் புத்தாண்டை அமர்க்களப்படுத்துவீங்கன்னு
எனக்கு தெரியும்...
சான்சை விடக்கூடா பாருங்கோ...ஒவ்வொரு வருசமும் எலெக்சன் வராதில்லே!! என்ஜாய்!!
எனது நண்பன் கூறியது உண்மை போல தெரியேல...என்ன சொல்றீங்க நீங்க?
பொய் எண்டால் எனக்கு அடிக்காதீங்க...
அவன்ட அட்ரெஸ் தாரன் ப்ளைட் பிடிச்சு போய் அடியுங்க..
No:58,
பத்தாவது மணல் குன்று,

உகண்டா பெரிய பாலை வனம்,
உகண்டா 6000028

Post Comment

9 comments:

தனிமரம் said...

தலயின் படத்திற்கு உங்களைக்கொண்டு ரொக்சியில் டிக்கட் எடுக்கலாம் என்றாள் நீங்க இப்படி கவுக்கிறீங்களே தம்பி.

sothilingam said...

No:58,
பத்தாவது மணல் குன்று,

உகண்டா பெரிய பாலை வனம்,
உகண்டா 6000028

ths s nce frnd....

சி.பி.செந்தில்குமார் said...

அட......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அத்துடன் இன்னொரு முக்கிய தகவலையும் அந்த நண்பர் என்னிடம் சொல்லி இருந்தார்..
அதாவது அஜித்துக்கு சில ரொமான்ஸ் சீன் நடிக்க வரவில்லையாம்..
அதனால் வெங்கட் பிரபு தானே அஜித்துக்கு டூப் போட்டு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறாராம்!
அப்ப பாருங்களேன்..

hi.......hi..........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

No:58,
பத்தாவது மணல் குன்று,

உகண்டா பெரிய பாலை வனம்,
உகண்டா 6000028

mudiyala..

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணனுக்கு குசும்பை பாரு....

நிரூபன் said...

மன்காத்தாவின் சில காட்சிகள் முக்கியமாக அஜித் திரிஷா ரொமான்ஸ் காட்சிகள் உகண்டாவில் ஒரு வறண்ட பாலைவனத்தில்
மிக ரகசியமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.//

சகோ, இதையெல்லாம் பாலைவனத்திலை எடுத்தால் பார்க்கும் போது குளிர்மையாக இருக்காது சகோ.

நிரூபன் said...

அட்ரஸ்ஸை பார்த்தால், சன் டீவியோடை அட்ரஸ் மாதிரி தெரியுதே;-))))

நிரூபன் said...

தப்ஸி, இலியானா போயி, இப்போ அஜித் உங்க கிட்ட மாட்டிக்கிட்டார...
நல்ல நகைச்சுவை தான் சொல்லுறீங்க போங்க.. அஜித் ரசிகர் யாரோ, மறை வாக்கும் போட்டு விட்டார்.

Related Posts Plugin for WordPress, Blogger...