Sunday, April 24, 2011

இவருக்கு அடையாளம் கொடுங்கள் பதிவுலக நண்பர்களே!!

வெறுமனே பதின் நான்கு போலோவேர்ஸ் ஆனால் பதிவுகள் இரண்டாயிரம் மேல்!!மூன்று வருடங்களாக எழுதுகிறார்..
நம்புவீர்களா??

'தமிழ் வணக்கம்"
யாராவது இந்த பெயரை கேள்விப்பட்டதுண்டா??
அதுவும் பதிவுலகில்?
பெரும்பாலானோரின் பதில் "இல்லை"என்பதாகவே இருக்கும்.

ஆமாம்,அடையாளத்துக்காய் எதிர்பார்த்திருக்கும்,
அடையாளம் இல்லாத ஒரு 'கவிதைக் கடல்"!!
ஆமாம் அது தான் மிகச் சரியான வார்த்தை!

தமிழ்நாடு,மதுரையை இருப்பிடமாக கொண்ட,"பத்திர எழுதுனர்"
வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதர்.
தனது புகைப்படத்தை கூட பிரசுரம் செய்யாமல் மிக அமைதியாக தனது
கவிதைகளை தனது வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கில் பிரசுரம் செய்துள்ளார்!!

தன்னை பற்றிய அறிமுகத்தில்
"நான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற
போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்"
செய் என்று தன்னடக்கமாக குறித்திருக்கும் 'தமிழ் பாலா'என்ற புனை பெயரைக் கொண்டவர் தான்
தமிழ் வணக்கம் வலைத்தளத்தின் ஆசிரியர்!

தமிழ் மேற்கொண்ட பற்றினால் தனது பெயரிலும்,வலைத்தளத்தின் பெயரிலும் தமிழ் என்ற வார்த்தையை சேர்த்து
தமிழை அனுபவிக்கும் ஒரு கவிஞர்!
அவரின் ஆர்வங்கள் (interests) என்னை கவர்ந்தவை.
-மக்களுக்கான இலக்கியம் படைத்தல்
-மக்கள் ஜன நாயக எழுச்சிக்காக போராடுதல்
எத்தனை பேருக்கு இவ்வாறான ஆர்வம் இருக்கும் சொல்லுங்கள்?

2008 இல் எழுதத் தொடங்கி இது வரையில் அண்ணளவாக 2000 கவிதைகளுக்கு மேல் எழுதிக் குவித்திருக்கிறார்,எந்த வித
வரவேற்போ,வாழ்த்துதல்களோ இல்லாமல்!!பாராட்டப்படவேண்டியது!!

காதல் கவிதைகள்,சமூக விழிப்புர்வு கவிதைகள் என அன்தைத்து இடங்களையும் தொட்டுச் செல்கிறார்!
காதல் கவிதைகள் ரசம் பொங்குகிறன..சமூதாய விழிப்புணர்வு கவிதைகளில்
கோபம்,எழுச்சி,உணர்ச்சி வெளிப்படுகிறது!!

உதாரணத்துக்கு ஒரு காதல் கவிதை :
மலரினும் மெல்லியது காதலடியோ!உன் மனதினில் என்னை நீயும்
மறுப்பதுதான் ஏனடியோ?-உன்
மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன்
நினைவினில் கூட வாழ்வதா என்று நானும் தீர்மானித்து விடுவேனே!
ஒருதலையாக காதல் என்றால் அதுகரை சேராதே
ஒருதலைக்காதல் வாழ்ந்ததென்று சரித்திரம் இல்லையடி!-காதல்
ஒருமுறைதான் இருந்தும் வெற்றி இல்லை என்றால்
உயிர்தனை மாய்ப்பது என்பதும் எந்தவகைதனில் நியாயமடி!

ஒரு எழுச்சி கவிதை :


மக்கள் ஜன நாயகப் புரட்சி!
மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று
போராடி போராடி எழும் புரட்சி!
பாடு பாடு புதியபாடல் பாடு!
சேர்ந்து பாடு செஞ்சிந்து பாடு!
கரங்கள் உயர்த்திப் பாடு!-கூட்டி கூட்டி கோடிக் கரங்கள் உயர்த்திப் பாடு!
கரங்கள் தட்டிப் பாடு! ஒற்றுமை கூட்டிப் பாடு!
வாழ்க வாழ்க மக்கள்ஜன நாயக புரட்சி வாழ்கவே!-உலகமெங்கும்
பொதுவுடைமை பொன்னுலகம் மலர்கவே!
தனியுடைமை கயவர் அதிகார அமைப்பு அழிகவே!

அவரின் அனுமதி இன்றி வெளியிடப்படும் பதிவு.
தமிழ் பாலாவின் அனுமதியின்றி அவரின் இரு கவிதைகள் இங்கு வெளியிட்டுள்ளேன்..
அவரை தொடர்புகொள்ள முடியவில்லை,பல தடவை முயன்றேன்.அதனால் தான் அனுமதியின்றி..

இதை பாருங்கள்..
'வெலவாசி ஏறிக்கிட்டு நாடே நாறிக்கிடக்குதடி!
வெந்தத தின்னுவோம் விதிவந்தா சாவதில்ல வாழ்க்கையடி!
மானங்கெட்ட சந்தையில என்மருமகளக் கண்டீகளா?
ஏண்டியாத்தா மாமியா இந்தாதானே எதிரில நிக்குறேன்!
சூட்சுமக்கார சுந்தரி நல்லகாயா பாத்து நீயும் வாங்குடி!
நான்மாட்டேன் அந்தரி அலைந்து திரிந்து நீயே வாங்குடி!
எந்த சண்டை என்றாலும் வீட்டுல கட்டி வையடி!
இந்த விலைவாசி ஏத்தத்தை எதித்துப் போராட ஒண்ணுசேரடி!-
அடி நாம சண்டையப் போட்டா போலி அரசியல் வாதிக்குக் கொண்டாட்டண்டி!
அதனால மாமியா மருமக சண்டைய கிடப்புள போட்டுடுவோம்!"

திரட்டிகளில் கூட அவர் பதிவுகளை இணைப்பதில்லை.அதனால் தான் பெரும்பாலானோருக்கு இன்னமும்
அவரை அடையாளம் தெரியவில்லை!!
வெறுமனே மொக்கை போடுவதோ,கண்மூடித்தனமாக கொமென்ட் பண்ணுவதோ
பதிவுலகத்தை மெருகேற்றாது.அவையும் அவசியம் தான்..
ஆனால் இத்தகைய ஒளிந்து மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து
அடையாளம் கொடுப்பதும் நம்மவரின் கடமையல்லவா நண்பர்களே??

அவரின் வலைப்பதிவுக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்..தமிழ்வணக்கம்

என்னடா மைந்தன் சிவா இப்பிடி ஆகிட்டாரே எண்டு பாக்கிறீங்களா??
எல்லாம் ஒரு சமூக சிந்தனை தான்!!
மீண்டும் மொக்கைகள் வழமை போல் தொடரும்!!

Post Comment

4 comments:

Unknown said...

This comment has been removed by the author.

Unknown said...

ஒரிஜினல் பதிவை நானே தவறுதலாக அழித்துவிட்டேன்..இது டிராப்ட்'டில் இருந்தமையால் மீள் பிரசுரம் செய்கிறேன்..
ஒரிஜினல் பதிவு இன்று காலையில் இடப்பட்டது...ஆல்ரெடி பார்த்தவங்க குழப்பிக்காதீங்க!!

தனிமரம் said...

இவரை அறிந்திருக்கிறேன் ஒரு நண்பன் மூலம் நன்றி உங்களின் அறிமுகத்திற்கு!

நிரூபன் said...

சகோ, இன்று தான் இந்த நண்பரைப் பற்றி அறிந்து கொண்டேன், இதுவும் ஒரு மரண மொக்கைப் பதிவு என்று நினைத்துத் தான் வந்தேன், ஆனால் றியாலிட்டியாக இருக்கு...

ஹி...ஹி..

நல்ல முயற்சி சகோ.

Related Posts Plugin for WordPress, Blogger...