Saturday, July 2, 2011

மாற்றான்+மங்காத்தா+வேலாயுதம்+ஹன்சிகா முத்தம்!!!


கே.வி.ஆனந்த இயக்கவுள்ள் 'மாற்றான்' படத்தில் ஐந்து வேடங்களில் நடிக்கிறார் சூர்யா.

கே.வி.ஆனந்த் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் "கோ". இதில் ஜீவா, கார்த்திகா, அஜ்மல் மற்றும் பியா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து இருக்கிறார்.

இப்படத்தை அடுத்து, சூர்யா நடிக்கும் 'மாற்றான்' என்னும் படத்தை இயக்க இருக்கிறார்.

அயன் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

'மாற்றான்' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

இதனை மறுத்துள்ள கே.வி.ஆனந்த, "இன்னும் 'மாற்றான்' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. அதற்குள் எப்படி இது மாதிரி செய்திகள் வெளிவருகின்றன என தெரியவில்லை. இப்போதைக்கு சூர்யா ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார். ஐந்து வேடங்களும் வித்தியாசமாக இருக்கும். ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளோம்," என்றார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அ‌ஜீத்தின் மங்காத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் திகதி நடக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மங்காத்தா அ‌‌‌ஜீத்தின் 50வது படம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் த்‌ரிஷா, அர்ஜுன், பிரேம்‌ஜி, லட்சுமிராய் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நடிகர்களைப் போலவே பாடல்களும், மொத்தம் ஒன்பது பாடல்கள் கொம்போஸ் செய்திருக்கிறார் யுவன். இதில் ராம்‌ஜியின் மச்சி பாட்டிலை திற என்ற பார்ட்டி பாடலும் அடக்கம்.

வரும் 18ஆம் தேதி இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே படத்தின் விளம்பரத்துக்காக விளையாடு மங்காத்தா பாடலை மட்டும் வெளியிட்டுள்ளனர்.


அஜீத் நடிப்பில் தயாராக இருக்கும் படம் 'பில்லா-2'. இப்படத்தை 'உன்னைப்போல் ஒருவன்' இயக்குனர் சக்ரி இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்க இருக்கிறது.

சாதாரண மனிதனாக இருந்தவன் எப்படி உலகத்தை மிரள வைத்த பில்லாவாக உருவானான் என்பதே பில்லா 2வின் கதை.
அஜீத் இதற்காக தீவிர பயிற்சி செய்து உடம்பை மேலும் மெருக்கேற்றி இருக்கிறார். இப்படத்திற்கு இதன் முதல் பாகமான 'பில்லா'வைப் போலவே அதி வேகமான திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் சக்ரி.

----------------------------------------------------------------------------------

சின்ன குஷ்புபோல் இருந்த ஹன்சிகா, இப்போது ஸ்லிம் குஷ்பு.

'' 'எங்கேயும் காதல்’ படத்தில் ஜெயம் ரவியையே மறைக்கிற அளவுக்கு இருந்தீங்க. இப்போ மெலிஞ்ச மாதிரி தெரியுதே?''

''யெஸ் பாஸ்... 8 கிலோ குறைஞ்சிட்டேன். போன வருஷம் வாயை கன்ட்ரோல் பண்ண முடியாம கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன். அதான் குண்டாகிட்டேன். இந்த ஒரு வருஷமா டெய்லி ஜிம் போய், டயட்ல இருந்து வெயிட் டைக் குறைச்சிட்டேன். இப்போ ஜிம் போகா மத் தூங்குறதே இல்லை!''

'' 'வேலாயுதம்’ எப்படிப் போய்ட்டு இருக்கு?''

'' 'வேலாயுதம்’ படத்தில் கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். பாவாடை - தாவணிதான். இது எனக்கு ரொம்பவும் பிடிச்ச காஸ்ட்யூம். நான் நடிச்சதுலயே வேலாயுதம்தான் பிரமாண்டமான படம்!''

''விஜய் என்ன சொல்றார்?''

''படத்தில் ஒரு பாட்டு ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அந்தப் பாட்டு ஷூட் முடிஞ்ச உடனே விஜய் சார் சொன்ன கமென்ட்டை மறக்கவே முடியாது. 'பாட்டு முழுக்க நான் என்னைக் கவனிக்கவே இல்லை. உங்களைத்தான் பார்த்துட்டே இருந்தேன். அந்த அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுக்குறீங்க. இந்தப் பாட்டில் ஆடியன்ஸ் எல்லாரும் உங்களைத்தான் பார்ப்பாங்க’னு சொன்னார். அவர் வாயால் பாராட்டு வாங்கினது பெரிய விஷயம்!''

''நீங்களும் விஜய்யும் லிப் டு லிப் கிஸ் அடிக்கிற மாதிரி ஸ்டில்ஸ் வர ஆரம்பிச்சிருக்கே?''

''சத்தியமாக படத்தில் லிப் கிஸ் ஸீனே இல்லை. நான் விஜய்க்கு முத்தம் கொடுக்கவும் இல்லை. அது ஒரு கேமரா ஜிமிக். பாடல் காட்சியில் அவர் முகத்துக்குப் பக்கத்தில் என் முகத்தைக் கொண்டுபோனேன். அப்போ எடுத்த போட்டோ அது. பார்க்கிறதுக்கு முத்தம் கொடுத்த மாதிரி தெரியுதா?''

'' 'ஒரு கல்... ஒரு கண்ணாடி’ காமெடிப் படமாச்சே... அதில் உங்க ரோல் எப்படி இருக்கும்?''

''ராஜேஷ் டைரக்ட் பண்ணின ரெண்டு படங்களையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன். எஸ்.எம்.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப்போலவே இதுவும் செம ஜாலியான படம். உதயநிதி, சந்தானம், நான்... எங்க மூணு பேரைச் சுத்தி நடக்கும் படம். படத்தில் என்னை அவர் இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணுவார். ஆனா, நான் கண்டுக் கவே மாட்டேன். படம் பாருங்க... செம ஜாலியா இருக்கும்!''

''உதயநிதி எப்படி நடிக்கிறார்?''

''உதயநிதியை அறிமுக நடிகர்னு சொல்லவே முடியாது. ஒவ்வொரு நாளும் பக்காவா ரிகர்சல் பண்ணிட்டு வர்றார். முதல்முறையா கேமரா முன்னாடி நிற்கும் கூச்சமே அவருக்கு இல்லை. செம புரொஃபஷனலா இருக்கார்!''

''மும்பை பொண்ணுங்க ரிலாக்ஸ் பண்ண பார்ட்டிக்குப் போவாங்க... நீங்க எப்படி?''

''ரிலாக்ஸ் பண்ண அடிக்கடி மசாஜ் பார்லருக்குப் போவேன். அவ்வளவுதான்!''

''வரவர கிளாமர் தூக்கலா இருக்கே?''

''நடிப்பு மாதிரியே கிளாமரும் ஹீரோயின் களுக்கு முக்கியமானது. கிளாமரான ரோல் என்றால் இழுத்துப் போர்த்திட்டா நடிக்க முடியும்?''

'' 'எங்கேயும் காதல்’ படத்தில் நீங்கள் சரியா நடிக்கலைனு பேசினாங்களே?''

''என்னை யாரும் கட்டாயப்படுத்தி சினிமாவுக்குக் கூட்டிட்டு வரலை. நான் விருப்பத்தோட நடிக்க வந்தேன். 19 வயசுக்குள் 15 படங்களில் நடிச்சு இருக்கேன். நடிக்கிறதுக்காக நான் சிரமப்படணும்னு அவசியமே இல்லை. இந்தியில் நான் நடித்த சீரியலுக்காக 14 விருதுகள் வாங்கி இருக்கேன். தெலுங்கில் நான் நடிச்ச 'தேச முத்ரா’வுக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினேன். நடிக்காம எப்படி வாங்க முடியும்?''

நன்றி-சினிமா விகடன்

ஹிஹி காப்பி பேஸ்ட் பதிவெண்டு வந்திட்டா எம்மாம் பெரிய பதிவு போடுறாங்கப்பா!

Post Comment

28 comments:

நிரூபன் said...

வணக்கம் ஹன்சிகாவினை நினைத்துருகும்
காதல் நாயகன் மைந்தன் அவர்களே!

கார்த்தி said...

என்னங்கடா நடக்குது நாட்டில?

நிரூபன் said...

அடிங் கொய்யால...
சினிமாத் தகவல் போடுறாராம்.

பிச்சுப் புடுவேன் பிச்சு,

நிரூபன் said...

கார்த்தி! என் கடவுளே!
வணக்கம்!

நிரூபன் said...

சினிமாப் பகிர்விற்கு நன்றி பாஸ்,

கூடவே எழுத்து சைசில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்.

தனிமரம் said...

எப்படி பாஸ் இப்படி ஆகிவிட்டீங்க முடியல சினிமா விடயம் ஜோர் மங்காத்தா வந்தால் ஒரு டிக்கட் புக்பன்னுங்க சினிசிட்டியில்!ரைட்டா பீம் பீம்!

Yoga.s.FR said...

ஹன்சிகா said... நான் நடிச்சதுலயே வேலாயுதம்தான் "பிரமாண்டமான" படம்!§§§§§விஜய் said...ஆடியன்ஸ் எல்லாரும் உங்களைத்தான் பார்ப்பாங்க!§§§§§////அப்போ ஓட்டவட பாடு?உங்க பாடு??

Anonymous said...

அது சரி, ஏன் அந்த பொண்ணு ரவுசர கிழிச்சுப்போட்டு ரோட்டில நிக்குது.

ஒரு வேல இத தான் நடிச்சு கிழிச்ச எண்டு சொல்வார்களோ ..))

tamilvaasi said...

சினிமா நியூஸ் போடராராம் நடத்துங்க

Yoga.s.FR said...

நிரூபன் said...
அடிங் கொய்யால...
சினிமாத் தகவல் போடுறாராம்.
பிச்சுப் புடுவேன் பிச்சு!////அதானே?உலகத்துக்கு தேவைப்படும் "சரக்கு அரைச்சு காச்சுவது" எப்படியென்று என்னைப் போல் ஆக்கபூர்வமான?! பதிவு போடாமல் "என்" போன்ற இளைஞர்களுக்குத் தேவையான சினிமா தகவலா போடுவது???,

Yoga.s.FR said...

கந்தசாமி. said...
அது சரி, ஏன் அந்த பொண்ணு ரவுசர கிழிச்சுப்போட்டு ரோட்டில நிக்குது.
ஒரு வேல இத தான் நடிச்சு கிழிச்ச எண்டு சொல்வார்களோ ..))///கேள்வி கேக்க வேண்டிய ஆளே வேற!அதாங்க உருகி உருகி லவ்ஸ் பண்ணுற ஓட்ட வட கிட்ட தான் கேக்கணும்!வெயிட்ட வேற(ஹன்சிகா), கொறச்சிக்கிட்டாவாம்.இனி அலப்பற தாங்க முடியாம இருக்கும்!

Yoga.s.FR said...

நிரூபன் said...
வணக்கம் ஹன்சிகாவினை நினைத்துருகும் காதல் நாயகன் மைந்தன் அவர்களே!///அவரு கார்த்திகான்னு புதுசா ஒரு பிகரை லவ்ஸ் பண்ணுறதா போன மாசம் சொன்னாரே?அப்புடீன்னா,அது போன மாசம் இது இந்த மாசம்னு வடிவேல் கணக்கா சொல்லுறீங்களோ?

A.R.ராஜகோபாலன் said...

உங்க பிரச்சனையில ஹன்சிகாவை இப்படி துணிய கிழிக்க விட்டேன்களே தலைவா

செங்கோவி said...

//கே.வி.ஆனந்த் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் "கோ". இதில் ஜீவா, கார்த்திகா, // தம்பி, இந்தப் படம் இன்னும் வெளிவரலையா...எப்போ ரிலீஸ்? சினிமாத் தகவலுக்கு நன்றி.

Unknown said...

அந்த கோ படம் இன்னும் உங்க ஊருல ரிலீஸ் ஆகலையா மாப்ள!

ஹிஹி நன்றி!

காட்டான் said...

மைந்தா தகவல்களை சரிபார்கலாமே கோ படம் வந்து இரண்டுமாதத்திற்குமேல் என நினைக்கிறேன் நான் ஒரு சினிமா பைத்தியமில்லை ஆனாலும் இருபது வருட ஆனந்த விகடன் வாசகன் விகடனில் விமர்சனம் வந்த ஞாபகம் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்க..அப்புறம் சினிமா தவகல் தருவதற்கு மைந்தனை போன்றவர்கள் தேவையில்லை இந்த கம்முனாட்டியே போதும்..? நீங்கள் உங்கள் பாணியை விட்டு விடாதீர்கள் ...

உணவு உலகம் said...

சினிமா தகவல்கள்,சிபி போல!

vidivelli said...

நண்பா சினிமாவை அப்பிடி ரசிக்கிறீங்களா?????
நடத்துங்க.............

Mathuran said...

மைந்தன் நீங்களும் சினிமாவுக்கு வந்தாச்சா?

Mathuran said...

பாருங்க பாஸ்.. நீங்க ஏமாத்தினதில இருந்து ஹன்சிகா இப்பிடித்தான் திரியுதாம்... பாவம்

ஷர்புதீன் said...

இனி சி.பி.மைந்தன் -தானா?

shanmugavel said...

//ஹிஹி காப்பி பேஸ்ட் பதிவெண்டு வந்திட்டா எம்மாம் பெரிய பதிவு போடுறாங்கப்பா!//

உண்மைதான் சிவா,ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

haa ஹா ஹா ஹா

கவி அழகன் said...

புதுசு புதுசா தினுசு தினுசா வருகுது

சுதா SJ said...

ஹி ஹி
என்னைபோன்ற சினிமா ரசிகர்களுக்கு பயன் உள்ள பதிவு
அப்புறம் ஹன்சிகா பேட்டி ஏற்கனவே படித்துவிட்டாலும்
நம்ம கஹன்சிகா பேட்டிய இனொரு தடவ படிக்க கசக்குமா என்ன
சூப்பர்

Jana said...

வேலாயுதம், மங்காத்தாவுக்கு மன்னால நான் உங்களிடம் கேட்ட பர்த்டே ரிக்கொஸ்டை எதிர் பார்க்கின்றேன் :)

vidivelli said...

நண்பர்களே நம்ம பக்கம் மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!!!!!நீங்களும் யோசித்து பாருங்களேன்

சரியில்ல....... said...

நான் தான் ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல.... "கோ"வே இன்னும் ரிலீஸ் ஆகலியே?

Related Posts Plugin for WordPress, Blogger...