Monday, July 18, 2011

காணாமல் போன ஓட்டவடையுடன் ஒரு கலக்கல் பேட்டி!!!

குசும்பு:இது மொக்கை பதிவல்ல!படு சீரியஸ்!!

கடந்த மூணு கிழமையா காணாம போய் இருக்கார் நம்ம மொக்கை சிங்கம்ஓட்டவடை!!எங்க போனார் எதுக்கு போனார்னு அவரின் மிக நெருங்கிய நண்பர்களை தவிர மத்தவங்களுக்கு தெரியாம இருந்திச்சு..இப்போ எல்லா உண்மையும் வெளில வரப்போகுது..ஒரே ஒரு போன் கால் தான்!!ஓட்டவடை உடனே ரிசீவ் பண்ணினாரு...(ஹிஹி அப்பிடி சொன்னா தானே நமக்கு மரியாத!)

ஓட்ட வட நாராயணன்

மைந்தன்:ஹாய் ஓட்டவடை..?
ஓட்டவடை:------------------------
மைந்தன்:ஹாய் ஓட்டவடை..???
ஓட்டவடை:----------------------------------
மைந்தன்:ஹாய் ஓட்டவடை..?????????
ஓட்டவடை:-----------------------------------------------------
மைந்தன்:யோவ் ஓட்டவடை உம்மளை தான்யா !!
ஓட்டவடை:---------------
மைந்தன்:"லோலிட்டா ஓ லோலிட்டா...உன் தூரம் கூட...
ஓட்டவடை:ஹலோ யாரு யாரு
மைந்தன்:(பாவி பயபுள்ள நான் மாடு மாதிரி ஒரு போமாலிட்டிக்கு ஹாய் சொன்னா கண்டுக்காத பயபுள்ள ஹன்சிகா பாட்டு ரிங் டோன்'ஆ போட்டு வைச்சிருக்கு போல.)அது நான் தான் மைந்தன்.!
ஓட்டவடை:யாரு மைந்தனா??யாரவரு ஹவாய் தீவில "பாப் கார்ன்" விக்கிரவரா?
மைந்தன்:யோவ் நான் தான் ப்ளோக்கர் மைந்தன்யா !
ஓட்டவடை:அட அட இப்ப தான் ஞாபகம் வருது நம்மளோட ஹன்சிகா புள்ளைக்கு அடிபட்ட பயபுள்ள தானேடா??
மைந்தன்:(பாவம் பயன்னு பன்னிக்குட்டி ரெக்கமன் பண்ணினதால விட்டுக்குடுத்தன்,இப்ப எனக்கே பூ வைக்கிறானே)
ஆமா பாஸ் ஆமா அவனே தான்....எங்க பாஸ் கொஞ்ச நாளா(ஹிஹி கிழமையா)ஆளையே காணேல பதிவுலக பக்கம்?
நீங்க இல்லாம எல்லாரும் காயிராங்களாம்!
ஓட்டவடை:ஏன் காயிராங்க?ஒரு ஒதுக்கு புறமா பாத்து ஒதுங்க வேண்டியது தானே..
மைந்தன்:அதெல்லாம் தண்ணி ஊத்தி காஞ்சவங்கள எழுப்பியாச்சு..நீங்க எங்க போயிருந்தீங்க??

ஓட்டவடை:அது நீ ஹன்சிகாவ எனக்கு செட் பண்ணி தந்திட்டியா...எனக்கு தலை கால் புரியல...அப்புறம் சிபி அண்ணனுக்கு போன் போட்டு தான் கன்பேர்ம் பண்ணினேன் மேல இருக்கிறது கை,கீழ இருக்கிறது கால் அப்பிடீன்னு...அவரு குடுத்த ஒரு கில்மா ஐடியா தான் பாருங்க நான் இப்ப ஹன்சிகாவோட ஹவாய்தீவுகள்'ல ஹாயா இருக்கேன்...
மைந்தன்:யோவ் ஹன்சிகாவ ஆல்ரெடி நான்.......
ஓட்டவடை:பரவாலைய்யா...நீ தானே மைந்தா...நாமெல்லாம் சத்தியராஜ் பரம்பரைடா!
மைந்தன்:ஐயோ பாஸ் நான் சொல்ல வந்தது ஹன்சிகாவ நான் ஆல்ரெடி "கழட்டி" விட்டிட்டேன்னு தான்!!ஒருத்தன் "கழட்டி விட்ட" பிகரோட ஜாலியா இருக்கீங்களே உங்கள என்னென்கிறது??ஓட்டவடை:விட்ரா விட்ரா பூசணிக்காய்'னா உருண்டையா இருக்கிறதும் புடலங்காய் நீளமா இருக்கியர்த்தும் சகஜம் தானேயா!!
மைந்தன்:யோவ் இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம பூசணிக்கா புடலங்காய இழுக்கிறே?இதில ஏதும் உள்குத்து இருக்கா??
ஓட்டவடை:நீ எல்லாம் மீசை முளைக்காத பயல் சொன்னா புரியாதுடா விட்ரா விட்ரா..
மைந்தன்:யோவ் எனக்கா மீசை முளைக்கல??மீசை மட்டுமில்ல.....வீட்டில வைச்ச ரோசா செடி கூட முளைச்சு பூத்திருக்குது தெரியும்லே!!
அத விடுங்க பாஸ் எப்ப மறுபடி பதிவு போட போறீங்க?
ஓட்டவடை:ஆக்சுவலி ஐ ஆம் ப்ரோம் அப்ரிக்கா....ச்சீ அந்தாட்டிக்கா...அடிச்சீ அமெரிக்கா...நெக்ஸ்ட்டு வீக்கு நானு மீட்டு!!
மைந்தன்:ஆமா இது எந்த நாட்டு இங்கிலீசு தம்பி?சும்மா பிச்சிக்குது??
ஓட்டவடை:ஹிஹி அதுவா...
மைந்தன்:ஆமா பாஸ் அதுதான்..

ஓட்டவடை:அதுவா...ஹிஹி அதுவா??
மைந்தன்:அட ஆமா பாஸ் அது தான்..எப்பிடி எப்பிடி?
ஓட்டவடை:சும்மா போங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருது...
மைந்தன்:என்னது ஓட்டவடைக்கு வெக்கமா??அட சும்மா சொல்லுங்க பாஸ்?
ஓட்டவடை:அது ஹன்சிகா அந்த மாதிரி நேரத்தில...விட்டு விட்டு முனகுமா...அப்போ கத்துக்கிட்டது சார்..
மைந்தன்:என்னாது எந்த மாதிரி நேரத்தில??
ஓட்டவடை:அது தான் அவங்களோட படுத்திருக்கேக..
மைந்தன்:படுத்திருக்கேக்க??
ஓட்டவடை:அட ஆமாயா படுத்திருக்கேக்க அந்த குண்டு பூசணிக்காய் ஓசில திண்டு திண்டு இரவு தூங்கும் போது கனவில முனகும் பாரு,அப்போ பொறுக்கினதுடா..
மைந்தன்:அப்பாடா நானும் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன் சார்!
ஓட்டவடை:ஹிஹி நானும் என்னமோ ஏதோன்னு தாண்டா போனேன் கூட்டிக்கிட்டு...
மைந்தன்:நீங்க சொல்றத பாத்தா ஒண்ணுமே நடக்காத மாதிரியெல்லோ கிடக்குது??
ஓட்டவடை:மவனே கடுப்ப கெலப்பாத..நானே அந்த கடுப்பில தான் ஊருக்கு வந்து குப்பற படுத்திருக்கேன்....
மைந்தன்:ஏன் பாஸ் நிமிந்து மல்லாக்கா படுத்தா தூக்கம் வராதா?
ஓட்டவடை:ஹிஹி வரும்...ஆனா வராது...எப்பிடி படுத்தாலும் கெட்ட கனவாயே வருதுடா..


மைந்தன்:நடக்க கூடாதது நடந்த்திரிச்சோ??
ஓட்டவடை:நடக்க கூடாதது கூட நடக்கலையேன்னு தான்யா நான் கவலையில இருக்கேன்..
மைந்தன்:அப்போ ப்ளாக்...??
ஓட்டவடை:இந்த பீலிங்'ல எனக்கு மொக்கை வருமா?இல்ல மரண மொக்கை தான் வருமாடா?நீயே சொல்லு?நீ சொல்லேன்?அட நீ சொல்லேன்??

மைந்தன்:ஆமா ஆமா கூல் கூல்...உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது மச்சி...(ஹிஹி இதெல்லாம் முதலே அனுபவிச்சு தானே கழட்டி விட்டேன் ஹிஹி)
ஓட்டவடை:புரியுதா??வாடா வாடா நண்பேண்டா!!
மைந்தன்:அப்போ உங்கள எப்ப வருவீங்க எப்போ வருவீங்கன்னு காத்துக்கிட்டிருக்கிற ரசிகங்களுக்கு என்ன சொல்ல பாஸ் ?
ஓட்டவடை:ஓட்டவடைய காக்கா கொத்திட்டு போயிரிச்சு...காக்காவ பாட்டி பிடிச்சு புரியாணி போட்டிட்டான்னு சொல்லுடா...
மைந்தன்:அந்த புரியாணிய யார் சாப்பிட்டதுன்னு கேட்டாங்கன்னா??
ஓட்டவடை:நம்ம லாப்டாப் மனோவ மாட்டிவிட்டிடு!!!
மைந்தன்:???????????

டிஸ்கி 1 -படங்கள் அனைத்தும் காப்பி ரயிட்ஸ் ஓட்டவடைக்கே..(ஹிஹி நான் இன்னும் ராயல்டி பே பண்ணல)
டிஸ்கி 2 -ஓட்டவடையை வாடா போடா என்று விளித்ததற்கு மன்னிச்சு அண்ணே!!
டிஸ்கி 3 -ஓட்டவடை எங்கிருந்தாலும் உடன் வரவும்...போர் அடிக்குது...
டிஸ்கி 4 -ப்ளாக் பக்கம் வராமல் பஸ்,டுவிட்டர் பக்கம் அராஜகம் நடத்தினது கண்டுபிடிக்கப்பட்டால்.....

Post Comment

31 comments:

செங்கோவி said...

ரைட்டு.

Nesan said...

அடிப்பாவி  நானும் நிஜம் என்று ஓடிவந்தால் இது டுபாக்கூர் வேலையாக இருக்கு ஓட்டைவடை ஓடிப்போட்டுது வரட்டும் பார்க்கலாம்!

koodal bala said...

I miss you Rajeevan...

சென்னை பித்தன் said...

ஓட்ட வட எப்ப வருவாருன்னு சொல்லவேயில்ல?

akulan said...

என்மனதிலும் உதே கேள்வி இருந்தது.
இத ஓட்டவடை பார்தா பயபுள்ள பிளாக்கர் பக்கமே வரமாடார்....

http://akulan1.blogspot.com/2011/07/blog-post.html(நம்ம பக்கமும் வாங்க பாஸ்)

நிரூபன் said...

மச்சி, ஓட்டவடையைச் செமையா கடிச்சிருக்கிறீங்க. மாலை வந்து விரிவாகப் பின்னூட்டம் எழுதுறேன், மன்னிக்கவும்.

Ashwin-WIN said...

ஹி ஹி ஹி நக்கல் நையாண்டி கடி சூப்பர்...

கவி அழகன் said...

ஓட்டைவடை ஒருதரம் ஓட்டைவடை இரண்டு தரம் அடுத்தது சொல்லமுதல் வந்திடுன்க்கையா

ஜீ... said...

ம்ம்ம்ம் ?/?/?////???////?

மருதமூரான். said...

அடப்பாவி.......!

நீ திருந்தவே மாட்டியா?! உருப்படுற ஓட்ட வடையையும் விடமாட்டாய் போல. ஹிஹிஹி

shanmugavel said...

//ஓட்டவடை எங்கிருந்தாலும் உடன் வரவும்...போர் அடிக்குது...//

correct

shanmugavel said...

வர வர ரொம்ப ஜோரா போகுது!

சென்னை பித்தன் said...

எந்த நேரத்தில் ”ஓடிப்போன ஓட்ட வடை” ந்னு பதிவு போட்டேனோ? மெய்யாலுமே ஓடிப் போயிட்டாரே! :)

காட்டான் said...

ஐரோப்பாவில் இப்ப கோடை காலவிடுமுறை மாப்பிள பொண்ணு தேட உங்க வந்திருபார் எதுக்கும் யாழ்பாணத்தில தேடி பாருங்க!! காட்டான் குழ வைச்சிட்டான்...

Yoga.s.FR said...

நல்ல நகைச்சுவைப் பகிர்வு மைந்தன்!வாழ்த்துக்கள் காட்டான் கவனம்!

Yoga.s.FR said...

நானும் தான் தேடுறன்,கிடைக்கயில்ல!அந்தப் பக்கம் (லா-கூர்நேவ்)போகவும் நேரமில்ல!ஆள் "உள்ளுக்கை"யோவும் தெரியாது! இப்ப இஞ்சை கோடை விடுமுறை காலம்.எங்கயும் கடக்கரைப்பக்கம் போனாரோ தெரியேல்ல!பாப்பம்!

Yoga.s.FR said...

ஓட்டவடை:நம்ம லாப்டாப் மனோவ மாட்டிவிட்டிடு!!!///அவர் நொந்து நூலாகிப் போயிருக்கார்,நிரூபன் கலாய்த்ததில்!இப்போ இது வேறா?வேண்டாம்பா,வுட்டுடுங்க!!!

ஹேமா said...

வடையண்ணா இனி அண்ணியோடதான் வருவாரோ !

நான் இல்லப்பா.சிபிதான் என் பக்கத்தில வந்து சொல்லிட்டுப் போயிருக்கார் !

கார்த்தி-ஸ்பார்க் said...

சக்க பதிவு சார்,,,,,,,,

சரியில்ல....... said...

ஐயோ உங்களுக்கு விஷயமே தெரியாதா... நான் ஓட்ட வட எங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன்...
விபரங்களுக்கு மேலே "சரியில்ல"யை க்ளிக் பண்ணவும்..

Mahan.Thamesh said...

நல்ல இருக்கு. வடையன்னான நல்லாவே கடிச்சிருக்கிங்க இருங்க வந்து இருக்கடி உனக்கு கச்சேரி .

“நிலவின்” ஜனகன் said...

அட இது சூப்பாரா இருக்கே.....

“நிலவின்” ஜனகன் said...

இப்போ comment போட்டு முடிக்கிறன்..ரேடியோவில லோலிட்டா லோலிட்டா.. என்று பாட்டு தொடங்குது.. என்ன டைமிங்யா..!!

HajasreeN said...

awaru vadayila otta pda poitaru

♔ம.தி.சுதா♔ said...

யோவ் ரஜீ... மெயிலுக்குக் கூட பதில் போடாம என்ன பேட்டி வேண்டிக்கிடக்குது பேட்டி... வந்தனென்டால் வேட்டி உருவுவேன்டா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

சி.பி.செந்தில்குமார் said...

>>ஹேமா said...

வடையண்ணா இனி அண்ணியோடதான் வருவாரோ !

நான் இல்லப்பா.சிபிதான் என் பக்கத்தில வந்து சொல்லிட்டுப் போயிருக்கார் !

poottukkudukkum போட்டுக்குடுக்கும் பெருமாளே வாழ்க.. ஹி ஹி

Shiva sky said...

இப்படி எல்லாமா...யாருக்கும் ராயல்டி இல்லதா பொண்ண சொந்தன் கொண்டாடரது

Shiva sky said...

வித்தியாசமான கற்பனை...

Riyas said...

ம்ம்ம் ஓட்டவடைய ரொம்ப நாளா கானமுடியவில்லை அதுக்கா இது

A.R.ராஜகோபாலன் said...

மிகவும் கலகலப்பான பதிவு தலைவா
மனம் மகிழ்ந்தது

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் வந்தது ரொம்ப லேட்டு..
இருந்தாலும்.. நன்பேண்டா ..
எத்தனை நாள் கழிச்சு பாத்தாலும் வந்து கமென்ட் போடுவோமில்ல..

Related Posts Plugin for WordPress, Blogger...