Sunday, July 31, 2011

தமிழ் சினிமா காமெடி நடிகர்களின் நிஜ முகம்!!!


கிருஷ்ணமூர்த்தி: ''நடிக்கலாம்னு 1983-ல் சென்னை வந்து, முட்டி மோதி முடியாம 'குழந்தை ஏசு’ பட கம்பெனியில ஆபீஸ் பாய் வேலைக்குச் சேர்ந் தேன். ரெண்டு வருஷம் ஷூட்டிங் நடந்த அந்தப் படத்துல ஆபீஸ் பாய், உதவி இயக்குநர், கேஷியர், புரொடக்ஷன் மேனேஜர்னு பல வேலைகள் செய்தேன். 'ராசையா’ படத்துல புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ்வா இருந்தப்ப பிரபுதேவா, வடிவேலு கூடவே வர்ற மாதிரி ஒரு ரோல்ல நடிக்கவெச்சார். அந்தப் பழக்கத்துலதான் 'தவசி’ படத்துல என்னை நடிக்கவெச்சார் வடிவேலு. 'எக்ஸ்கியூஸ் மீ... ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். இந்த அட்ரஸ் எங்கேனு சொல்ல முடியுமா?’னு அப்போ ஒசாமா பின்லேடன் அட்ரஸ் விசாரிச்சதுதான் இப்போ வரை என் அடையாளமா இருக்கு. நடிகர், நடிகை களின் கால்ஷீட் வாங்குறது, அவங்க வீட்டுக்குப் போய் சம்பளம் பேசி ஃபிக்ஸ் பண்றதுலாம்தான் புரொடக்ஷன் மேனேஜர் வேலை. அப்படி ஆர்ட்டிஸ்ட் வீடு தேடி அலையும்போது ரோட்ல யார்கிட்டயாவது அட்ரஸ் கேட்டா, 'என்ன சார் நேர்லயும் வந்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா’னு சிரிச்சுட்டே அட்ரஸ் சொல்ல மாட்டேங்குறாங்க.

'நான் கடவுள்’ படத்துக்கு புரொடக்ஷன் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, பாலா சார் ஒருநாள், புரொடக்ஷன்ல எடுத்துட்டு வந்திருந்த புது சட்டை, வேட்டியை எடுத்து அங்கே வேடிக்கை பார்த்துட்டு இருந்த ஒருத்தர்கிட்ட கொடுத்துட்டு, அவர் போட்டிருந்த அழுக்கு லுங்கியையும், சட்டையையும் வாங்கி என்கிட்ட கொடுத் தார் பாலா. 'கிருஷ்ணமூர்த்தி, படத்துல நீங்களும் நடிக்கிறீங்க. இன்னியில இருந்து இதுதான் உங்க காஸ்ட்யூம். போட்டுக்கங்க’ன்னார். படம் முடியிற வரை அதைத்தான் போட்டுட்டுத் திரிஞ்சேன். அப்படியே மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல என்னைப் பார்த்த ஆர்ட் டைரக்டர் ஜி.கே. சார், 'யப்பா! என்னப்பா ஆச்சு. ஏன் இப்படி இருக்க? எதுவா இருந்தாலும் மனசைத் தளர விட்ராத. எல்லாம் சரியாப் போயிடும்’னு ஆறுதல் சொல்ல ஆரம்பிச்சிட்டார். இப்படியும் அப்படியுமா 60 படங்களுக்கு மேல் நடிச்சாச்சு. ஒரே ஒரு ஸீன்ல வந்தாலும் தமிழர்களுக்குப் பிடிச்சுப்போச்சுன்னா, ஆயுசுக்கும் நம்மைக் கொண்டாடுவாங்க. இதுதான் சினிமா எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம்!''

சிசர் மனோகர்: ''நிஜப் பேரு பழனிச்சாமி. திருப்பத்தூர் பக்கம் இளையாத்தங்குடி கிராமம் நமக்கு. படிப்பு பிடிக்காம 15 ரூபாயோட மெட்ராஸ் வந்தேன். ஒரு போட்டோ ஸ்டுடியோவுல வேலைக்குச் சேர்ந்தேன். கடை ஓனர் சேட்டு என்னைப் பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டார். நான் நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டு 1,500 ரூபாய் கடன்ல துணி வாங்கிக் கொடுத்தார். அக்கம் பக்கம் அலைஞ்சு வித்ததுல லாபம் மட்டும் 600 ரூபாய் நின்னுச்சு. மாச சம்பளமா 40 ரூபாய் வாங்கிட்டு இருந்தவனுக்கு அது அப்ப ரொம்பப் பெரிய தொகை!

அடுத்த தபா 5,000 ரூபாய் மதிப்புக்கு சரக்கு எடுத்துக் கொடுத்தார் சேட்டு. சினிமா ஆளுங்க மொத்த சரக்கையும் விலைக்குக் கேட்டாங்க. 'இப்ப கையில காசு இல்லை’ன்னு சொல்லவும், 'அப்புறம் கொடுங்க’ன்னு நம்பிக் கொடுத்துட்டு வந்தேன். ஆனா, அப்புறம் ரேகை தேய நடந்தும் காசு வசூல் பண்ண முடியலை. பணம் இல்லாம வேலைக்கும் போக முடியலை. வீட்டுப் பக்கமும் ஒதுங்க முடியலை. பொழைப்பு ஓட்ட என்கிட்ட கடன் வாங்குன சினிமாக்காரங்களிடமே ஒட்டிக்கிட்டேன். பாக்யராஜ் சார்தான் 'ஒரு கை ஓசை’யில் என்னை நடிகன் ஆக்கினார்.

அகத்தியன் சாரோட 'கோகுலத்தில் சீதை’ படத்தில் கரணும் சுவலட்சுமியும் பேசிட்டு இருக்கும்போது, 'மனோகரு... மனோகரு... சிசர் மனோகரு’ன்னு லந்தைக் கொடுப்பேன். அந்த கேரக்டர்தான் இந்த பழனிச்சாமியை 'சிசர் மனோகர்’ ஆக்குச்சு.

'தேவர் மகன்’ பட ஷூட்டிங்கில் சிவாஜி சாருக்கு நான்தான் ஹெல்பர். நடுவுல கொஞ்ச நாள் வேற வேலையா பொள்ளாச்சி பக்கம் போயிட்டேன். ஷூட்டிங்ல நான் இல்லாம எரிச்சலான சிவாஜி சார், 'பழனிப் பய வந்தாத்தான் சாப்பிடுவேன்’னு சொல்லி அடம் பிடிச்சிருக்கார். அதுதான் ராசா இந்த சினிமா வாழ்க்கையில நம்ம மனசுக்கு இதமா இருக்குற சங்கதி. இந்தப் படம் திருப்பமா அமையும், அந்தப் படம் திருப்பமா அமையும்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கை கடந்து கரைஞ்சு போய்க்கிட்டு இருக்கு. ஆனா, இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கு!''

'தீப்பெட்டி’ கணேசன்: ''மதுரை ஜெய்ஹிந்த்புரம்ணே நமக்கு. அம்மா, அப்பா, அண்ணன், நான்னுமொத்தம் நாலு பேர் வீட்ல. ஒம்பதாப்புக்கு மேல படிக்கப் புடிக்காம பெயின்ட்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன். லோக்கல் சேனல்ல நடிக்க ஆள் தேவைன்னு வந்த விளம்பரம் பார்த்துட்டுப் போனப்பதான் 'ரேணிகுண்டா’ பட வாய்ப்பு கொடுத்தார் பன்னீர்செல்வம் சார். அவர்தான் சாதாரண கணேசனை 'தீப்பெட்டி’ கணேசன் ஆக்கினார். 'நீ எதைச் சொன்னாலும் டக்குனு புடிச்சுக்குற. அதான் இந்தப் பேரு’ன்னு காரணம் சொன்னார். இப்போ அஜீத் சார்கூட 'பில்லா 2’, சிம்பு சார்கூட 'வேட்டை மன்னன்’, விக்ரம் சார்கூட 'ராஜபாட்டை’னு 10 படங்களுக்கு மேல நடிச்சுட்டு இருக்கேன் சார். 24 வயசாகுது சார். அண்ணனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. ரெண்டு பேருக்கும் நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க சார்!''

சுப்புராஜ்: ''புதுக்கோட்டை மடத்துப்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். சினிமாவுக்கு வந்து 33 வருஷம் ஆச்சு. விஜயகாந்த் சார் மூலமா, சினிமாவில் நுழைஞ்சேன். பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், மணிவண்ணன், செல்வமணி, சிராஜ், கோகுலகிருஷ்ணன், சி.என்.சண்முகம், கோபாலகிருஷ்ணன், செந்தில்நாதன், ராஜ்கிரண், ராமராஜன்னு கிட்டத்தட்ட 18 டைரக்டர்களிடம் 49 படங்களில் அசோஸியேட்டா வேலை பார்த்தேன். 'ராசாவின் மனசிலே’ படத்துலவடிவேலு அறிமுகமாக நானும் ஒரு காரணம்.

ஆர்.கே.செல்வமணி 'ராஜஸ்தான்’ பட காமெடி டிராக் எழுதவெச்சார். அதில்தான் நானும் வடிவேலுவும் சேர்ந்து நடிச்சோம். 'போடா வாடா’ன்னு பேசி சிரிச்சு என்னால் அவனும், அவனால் நானும் வளர்ந்தோம்னு சொல்லலாம். அவன் காம்பினேஷன்ல மட்டும் கிட்டத்தட்ட 100 படங்கள் நடிச்சேன். ஆனா, இப்போ அவன்கூட பேச்சுவார்த்தை இல்லை. விஜயகாந்த்துக்கும் அவனுக்கும் மனஸ்தாபம் வந்தப்ப, நான் அவன் பக்கம் நிக்கணும்னு நினைச்சான். ஆனா, விஜயகாந்த் எனக்குச் சோறு போட்டவர். நமக்கு வாழ்க்கை கொடுத்தவங்க பக்கம் நிப்போமா? இல்லை... நாம வாழ்க்கைக் கொடுத்தவங்க பக்கம் நிப்போமா?

நாலஞ்சு வருஷம் முன்னாடி ஒரு ஆபரேஷன் நடந்துச்சு. மறு பிழைப்புன்னே சொல்லலாம். கிட்டத்தட்ட 10 லட்சம் செலவு. 5 ஆயிரம், 10 ஆயிரம்னு தெரிஞ்சவங்ககிட்ட கையேந்தி நின்னப்ப, கடவுள் மாதிரி ஆறு லட்சத்தை அள்ளிக் கொடுத்துக் காப்பாத்துன ஜே.கே.ரித்தீஷ§க்கு நன்றி சொல்றேன் தம்பி. இதை மறக்காம சேர்த்துடுங்க!''

நெல்லை சிவா: ''எல! நான் எதைச் சொல்ல... எதை விட? ஊர்ல இருந்து புறப்பட்டு சென்னை வந்து சின்னாபின்னமான கதை சொல்லவா? மத்த காமெடி நடிகருங்க படுற பாட்டைப் பாத்துப் பயந்து, காசு வந்த பிறகு கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு இந்த 52 வயசுல துணை இல்லாமதட்டழிஞ்சு நிக்கிற சோகம் சொல்லவா? தின்னவேலி, வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமம். எஸ்.எஸ்.எல்.சி. வரைதான் படிப்பு. ஸ்கூல் பேச்சுப் போட்டியில 'தென்னகத்து பெர்னாட்ஷா அண்ணாதான்வே எனக்குப் பிடிச்ச தலைவன்’னு நான் தின்னவேலி ஸ்லாங்ல அடிச்சு விளாசுனதைக் கேட்டுட்டு, 'யே... நீ இங்க லாத்த வேண்டிய ஆளே இல்லவே’னு உசுப்பி விட்டார் ஒரு வாத்தியார். எஸ்.எஸ்.எல்.சி. லீவுல 'கரன்ட் பில்லு கட்டித் தர்றேன்’னு நாலு வீட்ல காசு வசூல் பண்ணி மெட்ராஸுக்கு வண்டி ஏறிட்டேன். அலையா அலையுறேன். ஏவி.எம். ஸ்டுடியோ உலக உருண்டையைக் காமிச்சே 200 ரூபாய் புடுங்கிட்டார் ஆட்டோக்காரர். 'ஆண் பாவம்’ படத்துல 'இன்னும் பெட்டி வரலை’னு பேசித்தான் சினிமாவுல தலை காட்டினேன்.

'அட! சும்மா இருப்பா. அவன் அப்படி பேசி இருக்க மாட்டான்’கிற வசனத்தைப் பஞ்சாயத்து காட்சிகளில் மட்டுமே 100 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன்.

சினிமா நடிகர்கள் அட்ரஸ் வர்ற டைரி புக்குல ஒவ்வொரு வருஷமும் விதவிதமா நான் போஸ் கொடுத்துட்டு நிக்கிறதைப் பாத்துட்டு, இன்கம்டாக்ஸ் ஆட்கள் சம்மன் வுட்டு வரச் சொல்லிப்புட்டாங்க. அரண்டடிச்சிப் போய் என் கதையை நேர்ல சொன்னதும், தேம்பித் தேம்பி அழுதுட்டு ஒரு வா காப்பித் தண்ணி வாங்கிக் கொடுத்து அனுப்பிச்சாவோ. இப்போ இந்த 52 வயசுல கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு தேடிட்டு இருக்கேன். சுகத்துக்காக இல்லவே. கடைசிக் காலத்துல ஒரு பிடிப்போட வாழுறதுக்கு. 'இம்புட்டு கஷ்டம் சொல்றானே... வெறும் அவத்தப் பயலா இருப்பானோ’ன்னு நினைச்சுப்புடாதீங்க. இப்ப ஓரளவுக்கு வசதியாவே இருக்கேன் தம்பி. நம்பி வரலாம். மவராசியா வெச்சுக் காப்பாத்துவேன்!''

நன்றி-இணையம்

Post Comment

35 comments:

சக்தி கல்வி மையம் said...

நான்தான் முதல்ல வந்தேனா?

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே நான்தான் ரெண்டாவதா...

கோகுல் said...

நம்மை சிரிக்க வைக்கும் கலைஞர்களின் பிண்ணனியில் இருக்கும் சோகங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே நான்தான் மூனாவதா வந்தேனா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல பதிவு பாஸ், நம்ம சிரிக்க வைக்கும் இவர்களின் கதைகளை பார்க்கும் போது மனம் கனக்குது...!!

கோகுல் said...

பாஸ் தமிழ்மணத்தில் இணைக்காமல் எங்கே போய் விட்டீர் இணைத்து விட்டேன்

நிரூபன் said...

வணக்கம் மச்சி, பின்னர் வந்து படிக்கிறேன்,

shanmugavel said...

சுவையான தகவல்கள்.

நிரூபன் said...

பாஸ் தமிழ்மணத்தில் இணைக்காமல் எங்கே போய் விட்டீர் இணைத்து விட்டேன்//

ஓ...நம்ம மைந்தனா, இந் நேரம் விகாரலேன் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிருப்பான். இன்றைக்குத் தான் அன்னதானமாச்சே;-))))

கூடல் பாலா said...

நகைச்சுவை நடிகர்களின் மறுபக்கம் .......அருமை .......கடைசியில் வரும் நெல்லை சிவா எங்கள் பகுதி காரர் ......நெல்லைத் தமிழ் உலகமெங்கும் அறிய வைத்த பெருமை அநேகமாக அவரையே சாரும்

ஆகுலன் said...

இவர்களை பற்றி தெரிய படுத்தியதற்கு நன்றி......

Unknown said...

இவங்களாவது எல்லாருக்கும் தெரியும்படியா பிரபலம் ஆகிட்டாங்க! எத்தனை பேர் இன்னும் வெளிச்சத்துக்கு வராம இன்னும் 'மற்றும் பலர்' லிஸ்ட்லயே இருக்காங்க!
சினிமா உலகின் இன்னொரு பக்கம் மிகக் கொடுமையானதுதான்!

Unknown said...

சின்னச் சின்ன வெற்றிகளைக் காண்பதற்கே எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்த நடிகர்களின் வாழ்க்கையும் சாட்சி.

போராட்டங்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. இவர்களைப் போல ஆயிரம் பேர் இன்னும் வெற்றியின்றி கோடம்பாக்க வீதிகளில் திரிவார்கள்.

நல்லபதிவு. (இணையத்துக்கும் அதனை இங்கு பதிவிட்ட மைந்தனுக்கும் நன்றி)

கவி அழகன் said...

நிசமா கலக்கலா இருக்கு

Mathuran said...

இவர்களின் சிரித்த முகத்தை மட்டுமே பார்த்த எமக்கு அவர்களுடைய கஷ்டங்களையும் காட்டியுள்ளீர்கள்... நன்றி மைந்தன்

கார்த்தி said...

இவர்கள் இந்தளவு துாரமாவது வர எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள்! நாங்கள் இவர்களின் வாழ்க்கயைினை படிப்பினையாக கொள்ள வேண்டும்! எனக்கு சுப்புராஜ் நடித்த வேறு படங்களின் விபரம் தரமுடியுமா? அவரை அடையாளங்காண கஸ்டமா இருக்கு

Yoga.S.Fr said...

தம்பி மைந்தன்,நான் வேற ஊருல நிக்கிறதால ஒரு அலுவலும் சரியா பாக்கேலாம கிடக்கு1என்ன விஷயமெண்டா ஒரு பதிவும் ஒழுங்கா படிக்கேலாமக் கிடக்கு.புதன் கிழமைக்குப் பிறகு எல்லாம் ஒழுங்காகீடும்.கும்மியடி தொடரும்!!!!!!!!!!!!!!!!!!

ஷர்புதீன் said...

interesting...!

Anonymous said...

பொதுவாகவே காமெடி நடிகர்களின் நிஜ வாழ்வு சோகம் இழையோடியதாக இருக்கும் என்பார்கள்...

எஸ் சக்திவேல் said...

நெல்லை சிவா "வைகோ" மாதிரி இருப்பது தற்செயலா?. அல்லது "வைகோ" கொமேடியன் (காமெடியன்) என்று symbolic க்காக உணர வைக்கிரீர்களா?

KANA VARO said...

நெல்லை சிவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

உணவு உலகம் said...

சிரிப்பிற்கு பின்னுள்ள சோகங்கள்!

தனிமரம் said...

சிரிப்பு நடிகர்களின் சிந்தனை முகங்களை முகம் காட்டும் பதிவு!

Anonymous said...

இவர்களை பற்றி தெரிய படுத்தியதற்கு நன்றி... நல்ல பதிவு
...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி - விகடன் + சிவா

K.s.s.Rajh said...

சுப்புராஜ் ஒரு அருமையான காமெடி நடிகர் வடிவேலு உடன் அவரது காமெடிகள் அனைத்தும் அருமையாக இருக்கும் அதேபோல் நெல்லை சிவா சொல்லவே தேவை இல்லை.

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது

hot tamil actresses

Karthikeyan Rajendran said...

காமடிக்குள் இவ்வளவு சோகமா, பல்லாண்டு வாழ்க நண்பர்கள்.......

பாலா said...

நல்ல தகவல்கள். ஒவ்வொரு காமெடியனும் தனித்தன்மையோடு இல்லாவிடில் இப்படித்தான் முடியும்.

Unknown said...

இவர்களை பற்றி தெரிய படுத்தியதற்கு நன்றி... நல்ல பதிவு. கார்த்திக்....

இராஜராஜேஸ்வரி said...

சொந்த கதை சோககதை!

Anonymous said...

இவர்கள் இன்னும் அதிகம் புகழ் பெறவேண்டும்.

காட்டான் said...

அப்ப நாந்தான் கடைசியா...
காட்டான் குழ போட்டான்...

arasan said...

நெறைய செய்திகள் அறிந்து கொண்டேன் ,. நன்றி

Rizi said...

நல்ல பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...