Wednesday, July 27, 2011

ஹாரிப்பொட்டரும் மினரல் வோட்டரும்!!"ஹாரிப்பொட்டரும் மினரல் வோட்டரும் " அப்பிடீன்னு ஒரு இங்கிலீசு படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டிருந்தது!அதன் கதையை மையமாக வைத்து இயக்குனர் ஷங்கர் தமிழில் ஒரு படம் எடுக்கப்போகிராராம் வரும் 2019 ஆம் ஆண்டு!அந்த இங்கிலீஸ் படம் பார்க்காதவங்களுக்காக அதன் கதையை தருகிறேன் நான்..வழமையாக இங்கிலீசு பட விமர்சனம் எழுதும் உலக சினிமா ரசிகன்,ஹாலிவூட் பாலா.ஜீ போன்றோர் கூட இந்த படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை அதனால நானே எழுதலாம்னு கெளம்பிட்டேன்!
கதை இது தான்!

ஒரு நாள் ஹாரிபோட்டர் ஒரு அற்புதமான மாஜிக் தடி ஒன்றை தேடி அந்தமான் தீவுக்கு போறார்..போறார் போறார் போய்க்கிட்டே இருக்கார்..எப்பிடி போறார்னு அவருக்கே தெரியல...ஏன்'னா அவர் சுய நினைவில இல்லை..ஹரிபோட்டர் முன்னைய பாகமான "ஹாரிப்பொட்டரும் சோடா போத்திலும்"என்ற படத்தின் க்ளைமாக்சில் இடம்பெற்ற சண்டையில் மயக்கமாகிட்டார்..அப்பிடியே ஒரு கட்டிலில போட்டு தூக்கிட்டு போறாங்க அவரை..

காட்டுக்குள்ள போய்க்கிட்டிருக்கேக்க ,ஒரு காக்கா உச்சத்தில இருந்து ஆயி போயிரிச்சு...ஆயி போன காக்கா கரெக்ட்டா ஹரிப்பாட்டார் மூஞ்சில ஆயி போயிரிச்சு..வில்லன் ஆசையா ஆயி போறத்துக்காகவே வளர்த்து வந்த காக்காவாம்!ஆயி பட்ட அதிர்ச்சியில எந்திரிச்ச ஹாரிப்போட்டார் ஒரே சோம்பலா பீல் பண்னறாரு..முதல் படம் வந்து மூணு வருசத்துக்கப்புறம் அடுத்த படம் வந்ததால ஒரே பசி தண்ணி விடாய் என்று அவதிப்படுறார்..

அட்லீஸ்ட் தண்ணியாச்சும் குடிப்பம்னு அவரின் அல்லக்கைகளை அனுப்புறாரு காட்டில தண்ணி எடுத்து வா'ன்னு..அவங்க நாலு நாளா தேடி ஒரு மாதிரி ஒரு ஆத்தில தண்ணி எடுத்து வந்தாங்க..அதை பாத்தா ஹாரிப்பாட்டர் கடுப்பாகி கோபத்தின் உச்சத்தில ஒரு மரத்தின் மேல ஏறிட்டாராம்!அங்க இருந் ஒரு பஞ்சு டயலாக் விடுறார் "தாகமா இருந்தாலும் தண்ணின்னு வந்திட்டா அது மினரல் வாட்டர் தான்" அப்பிடீன்னு விடுறார் பன்ச்..!

பன்ச் டயலாக்'இன் பவரினால அல்லக்கைகள் எல்லாம் ஆப்பாகி ஆயி போயிர்றாங்க..(என்னடா எல்லாரும் ஆயி போறாங்க ஒரே ஆயிப்போற கதையாலே இருக்கு அப்பிடீன்னு ஜோசிக்காதீங்க..கதை முடிவில நீங்களும் ஆயி போக போறீங்க பாருங்களேன்!!)எங்க விட்டேன்..?ஆ அந்த பன்ச்..ம்ம் அப்புறமா அவருக்கு மினரல் வாட்டர் தேடி தேடியே களைச்சு குட்டி சுவர் ஆகிட்டான்களாம் அவங்க...இத எழுநூறு மைல் தொலைவில இருந்து பூதக்கண்ணாடில பாத்துகிட்டிருந்த வயசு போன பாட்டி பாவம் ஹாரிப்பாட்டர்னு ஒரு மினரல் வாட்டரை அனுப்பி வைக்கிறாங்க..
தமிழ் படம் எண்டதால அந்த பாட்டிலை வைச்சு ஒரு பாட்டு பாடுறாங்க...
குத்தாட்டம் போட அந்த காட்டில இருந்து ஒரு பெண் சிங்கத்தை கவர்ச்சியா காட்டுறாங்க ஜூம் பண்ணி..
அந்தப் பாட்டு ஓடிக்கிட்டிருக்கேக்க தான் ஒரு திருப்பம் நடக்குது...அது என்னெண்டு நீங்க திரையிலேயே பாத்துக்குங்க...


கொசுறு செய்தி:
இந்த ஹாரிப்போட்டார் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நம்ம பவர் ஸ்டார்!!
பெண் சிங்கமாய் நம்ம டி ஆர்'ஐ நடிக்க கேட்டிருக்காங்கலாம்...அவர் இன்னும் முடிவு சொல்லேலயாம்!!


வந்துட்டாங்க ஓசில விமர்சனம் படிக்க...அதுவும் ஒலக சினிமா!!

Post Comment

32 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் ரசிகன்

மைந்தன் சிவா said...

முதல் ரசிகன்-முதல் மழை-சி பி#நடந்தது என்ன!!

Nesan said...

இப்படி எழுத எப்படி பாஸ் முடியுது மிகவும் தேவையான விமர்சனம். அடிங்கொய்யாலா!

koodal bala said...

இந்த கொடுமைல இருந்து தப்பிக்றதுக்கு எப்படியாவது ஒரு வழியை கண்டு பிடிச்சாகணுமே.......

ஜீ... said...

பயபுள்ள மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா? முடியல!!

கடம்பவன குயில் said...

முடியல...தாங்கமுடியல...யாரது. கொண்டுவாங்க ஒரு கேன் மினரல் வாட்டர..

எப்படியெல்லாம் யோசித்து வித்தியாசமா விமர்சனம் எழுத முடியுது...சங்கர் உங்களையே ஹாரிபாட்டரா நடிக்க கூப்பிட்டுறாம. நாங்கள்ளாம் பாவம் தல. அந்தக்கொடுமைய பார்க்கிற சக்தி எங்க கண்களுக்கில்லை.

MANO நாஞ்சில் மனோ said...

ஆண்டவா................

LOSHAN said...

lmao... என்ன கொடுமை மைந்தா

HajasreeN said...

வந்துட்டாங்க ஓசில விமர்சனம் படிக்க...அதுவும் ஒலக சினிமா!!///


இனிமேல் வரமாட்டேன் போயா

Anonymous said...

///இந்த ஹாரிப்போட்டார் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நம்ம பவர் ஸ்டார்!!
பெண் சிங்கமாய் நம்ம டி ஆர்'ஐ நடிக்க கேட்டிருக்காங்கலாம்...அவர் இன்னும் முடிவு சொல்லேலயாம்!!// ஐ அப்ப படம் ஈசியா நூறு நாளை தாண்டும் ;-)

காட்டான் said...

மாப்பு டிஆர் கணணி தொலைக்காட்சியிலேயே இந்த குத்து துத்துறார் நீ நேரில அம்புட்டா செம்ப நெளித்துடுவார் யாக்கிரத..

காட்டான் குழ போட்டான்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னால முடியல...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ்மணம் 7

கவி அழகன் said...

எங்க விட்டேன்..?ஆ அந்த பன்ச்..ம்ம்


கலக்கிட்ட மச்சி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அட.. இப்படியுமா?

! சிவகுமார் ! said...

என்னது ‘தமிழ் ஹாரிபோட்டர்’ பவர் ஸ்டாரா? பீதியை கிளப்பாதீங்க!

நிரூபன் said...

"ஹாரிப்பொட்டரும் மினரல் வோட்டரும்//

இது கொஞ்சம் புதுசா இருக்கே மச்சி,

நிரூபன் said...

நான்..வழமையாக இங்கிலீசு பட விமர்சனம் எழுதும் உலக சினிமா ரசிகன்,ஹாலிவூட் பாலா.ஜீ போன்றோர் கூட இந்த படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை அதனால நானே எழுதலாம்னு கெளம்பிட்டேன்!
கதை இது தான்!//

சைட் கப்பிங்கில் நம்மாளுங்களையும் கடிக்கிறீங்க;-))

நிரூபன் said...

என்னம்மா யோசிச்சு, தமிழில் ஒரு படத்தை மைந்தன் தாயாரிச்சு, விமர்சனம் எழுதியிருக்காரு.

கலக்கல்.

ஆமா...பவர் ஸ்டாருக்குப் பதிலா நாம உங்களைப் போடுவோமா.

KANA VARO said...

இவன் திருந்திற மாதிரி இல்லை, போட்டுட வேண்டியது தான். இந்த விஷயம் சங்கருக்கு தெரியுமா\?

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......

தமிழ்வாசி - Prakash said...

படம் செம ஹிட்..

shanmugavel said...

சிவா! நல்லாருக்கே கதை.

பாலா said...

இந்த படம் எப்போ வரும்னு சொல்லுங்க. ஊரை காலி பண்ணனும்.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

கலாய்ச்சுட்டாராமா....................

gokul said...

எந்த தியேட்டரில் இந்த படம் ஓடுது.அவசியம் பாக்கணும்

விக்கியுலகம் said...

கலக்கிட்ட மாப்ளே!

vidivelli said...

நல்ல படம்போலதான் இருக்கு...
விமர்சனம் பார்க்க தூண்டுகிறது...
பகிர்விற்கு வாழ்த்துக்கள்..

Mahan.Thamesh said...

அட அப்படியா செய்தி ; படத்திரைக்கதை நீங்களா பாஸ்

மருதமூரான். said...

மைந்தா........!

முடியல்லப்பா.

தற்கொலைக்குத் துாண்டுவதும் கொலைக் குற்றமே

FOOD said...

கல கல.

mohan said...

Hi Friend This Is Mohan Vellore
We buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...