Tuesday, August 10, 2010

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?இல்லை புலியாகுமா??


ஆஸ்திரேலியாவில் படித்து பட்டம் பெற்று தற்பொழுது இந்தியா அண்ணா பல்கலைக்கழகத்தின் கணணித்துறையில் இணைப்பேராசிரியராக பணியாற்றும் வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி வெளிவர இருக்கும் ரஜனியின் எந்திரன் திரைப்படத்தில் தனது அறிமுகத்தை பாடலாசிரியராகவும்,வசனம்,காட்சி அமைப்புகள் போன்றவற்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

தான் பாடலாசிரியரானதட்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கர் தான் என்று கூறிய கார்க்கி தன் பாடல் எழுதும் ஆசையை ஷங்கரிடம் தெரிவித்து எந்திரன் பாடல் situation'க்கு ஏற்ப சில வரிகளை எழுதிக்காட்ட,அது ஷங்கருக்கு பிடித்துப்போய் ரஹ்மானின் மெட்டை கையில் கொடுத்து பாடலை நீங்களே எழுதுங்கள் என்று கொடுத்துவிட்டாராம் ஷங்கர்.அவ்வாறு எழுதப்பட்ட பாடல் தான்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
shutdown-ஏ செய்யாமல்
இரவினில் துடித்தேன்
என்ற ரஹ்மான் பாடிய பாடலாகும்.

இந்த பாடலை பார்த்த ஷங்கர் இன்னொரு ராப் பாடலை எழுதி தருமாறு கார்கியிடம் கேட்டாராம்.அவ்வாறு ரஜனியின் புகழ் பாடும் பாடலாக எழுதப்பெற்றதே
’பூம் பூம் ரோபோடா...’ பாடலாகும்.

அதிலே
சிட்டிச் சிட்டி ரோபோ
சுட்டிச் சுட்டி ரோபோ
பட்டித் தொட்டியெல்லாம்
நீ பட்டுக்குட்டியோ!

ஆட்டோ ஆட்டோ காரா
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் ஆட்டோகிராஃபுக்கு!

என்று சூப்பர் ஸ்டார் பற்றி அருமையாக எழுதி இருக்கிறார் கார்க்கி..

கார்கியின் முதல் வெளிவந்த பாடல் 'கண்டேன் காதலை" திரைப்படத்திலமைந்த "ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்"என்ற பாடலாகும்.
எந்திரனுக்கு பிறகு கே.வி ஆனந்த் இயக்கிக்கொண்டிருக்கும் "கோ"படத்திலும்,பிரபுதேவா இயக்கும் "இச்"படத்தில் ஹரிஸ் ஜெயராஜ்ஜின் இசையில் பாடல் எழுதுகிறார் கார்க்கி.சித்தார்த் தமிழில் நடிக்கும் "புத்தம் புது காலை"படத்தில் அத்தனை பாடல்களையும் கார்க்கியே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்திரனில் தனக்கு அப்பா எழுதிய அரிமா அரிமா பாடலும்,காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை பாடலும் தான் மிகவும் பிடித்தவை என்று கூறியுள்ள மதன் கார்க்கி,தான் அப்பாவுக்கு போட்டியா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
என்ன தான் இருந்தாலும் அப்பா வைரமுத்துக்கு இருக்கின்ற கவியாற்றலும்,மொழி வல்லமையும்,அனுபவமும் கார்க்கியிடம் கிடைக்குமா என்பது சந்தேகமே!!

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு

கூகுல்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

iRobo உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?

>I am a super girl
>உன் காதல் rapper girl

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்

என் engine நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
என்று செல்கிறது அந்தப்பாடல்..!!


அதான் வந்தது தான் வந்திடீங்க..அப்பிடியே ஓட்ட போட்டிட்டு போங்களேன்..

Post Comment

11 comments:

Anonymous said...

என்ன தான் மகன் என்றாலும் வைரமுத்து போல் வருமா??பதிவு அருமை.வாழ்த்துக்கள்!

Anonymous said...

பரவாயில்லை...எதோ எழுதுகிறார் கார்க்கி!

Unknown said...

Anonymous said...

என்ன தான் மகன் என்றாலும் வைரமுத்து போல் வருமா??பதிவு அருமை.வாழ்த்துக்கள்!//

அதுசரி...வருகைக்கு நன்றிகள்.

Unknown said...

Anonymous said...

பரவாயில்லை...எதோ எழுதுகிறார் கார்க்கி!//
ம்ம் பார்ப்போம் பொறுத்து..
வருகைக்கு நன்றிகள்.

AnushangR said...

கார்க்கி கணணி துறை சார்ந்தவராக இருப்பதால் எந்திரனில் அவரது கவித்திறமை(பாடல்களில் தெரிவது) தந்தையை விட மெச்சலாம்/ஒப்பாகலாம். ஆனால் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றாலே அவரை ஒரு சிறந்த பாடலாசிரியராக/கவிஞராக ஏற்றுக்கொள்ளமுடியும் என்பது எனது கருத்து! ஏற்புடையது என நினைக்கிறேன். உங்கள் பதிவு சிறப்பு...

Unknown said...

AnushangR said...

கார்க்கி கணணி துறை சார்ந்தவராக இருப்பதால் எந்திரனில் அவரது கவித்திறமை(பாடல்களில் தெரிவது) தந்தையை விட மெச்சலாம்/ஒப்பாகலாம். ஆனால் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றாலே அவரை ஒரு சிறந்த பாடலாசிரியராக/கவிஞராக ஏற்றுக்கொள்ளமுடியும் என்பது எனது கருத்து! ஏற்புடையது என நினைக்கிறேன். உங்கள் பதிவு சிறப்பு...//

உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் நண்பரே!!

Anonymous said...

எல்லாம் செல்வாக்கு தான்!!

Unknown said...

Anonymous said...

எல்லாம் செல்வாக்கு தான்!!//

இருக்கலாம்!

தமிழ்பாலா said...

உள்ளத்தையே திறந்து காட்டும் வெள்ளை இலக்கியங்களே!
எம்கிராம மக்கள் வாய்மொழியாலே பாடும் நாட்டுப்புறப் பாடல்களே!
காட்டுப் பூக்களாகவே!
காண்பாரற்று கிடக்கின்ற
கண்ணான இலக்கிய படைப்பாளர்களே எத்தனைக் கோடிப் பேர்களோ?
பட்டுக்க்கோட்டை கல்யாணசுந்தரம்,மருதகாசி,கேசிஎஸ் .அருணாசலம்,கண்ணதாசன் ,சந்தானம்,காமாட்சிதாசன்,கம்பதாசன்,வாலி,வைரமுத்து,அறிவுமதி,தாமரை,பழநிபாரதி இன்னும் எத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழைச் சுவையாக்கி தரமான தமிழ்பாடல்களையே தரத்தோடு எழுதி வந்த திரைப்பட வரலாறு இதில் அதாவது எந்திரனில் தொடர்ந்திருக்கின்றதா? மெட்டுக்கு ஒரு கரகாட்டக் காரிகூட வார்த்தைகளை கோர்த்து ஆடுகின்ற நாட்டுப்புறக் கலைகள் மிகுந்த தமிழகத்திலே இந்த திரைப்படத தளத்தை மக்கள் கலையாக, மக்களுக்காகவே எழுதத் துடிக்கின்ற எண்ணற்ற கவிஞர்கள் இருக்கின்றார்கள்.வாய்ப்புகள் கிடைக்காமல் வாடி நிற்கும் எங்கள் கோடம்பாக்க ஜாம்பவான்கள் கோடிப்பேர் எண்ணத்திலும் எழுத்திலும் நல்ல தரமான கலைஞர்களை விஜய் டிவி போன்ற மீடியாக்கள் வெளிக்கொணர முயலவேண்டும் என்ற காலத்தின் கட்டாயம் ஒருபுறம் இருக்க முயற்சி செய்து வாய்ப்பின்றி தோற்றவர்களை தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை நாம் படைப்பாளர்களை வாழும்போதே வாழ்த்துசொல்லும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். அதை எந்த மீடியா செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!~

Unknown said...

உண்மையான பல பேரினது ஆதங்கம் அண்ணே..ஆனால் யாரும் கண்டுக்கிற மாதிரி தெரியவில்லையே..!!

எஸ் சக்திவேல் said...

மன்னிக்கவும், குட்டி 2 அடி கூடப் பாயவில்லை :-(

Related Posts Plugin for WordPress, Blogger...