Monday, August 9, 2010

திரை இசை கலைஞர்கள் பார்வை-1 "L.R.ஈஸ்வரி"


L.R.ஈஸ்வரி ...தனது கணீரென்ற வசீகரிக்கும் குரலால் தமிழ் திரையுலகின் ஆரம்ப கால கட்டத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த,தற்போதும் வைத்துக்கொண்டிருக்கும் பாடகி ஆவார்.1960 ,70 காலப்பகுதியில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அத்தனை மொழிகளிலும் தனது வசீகர குரலால் கட்டிப்போட்டிருந்தார் L.R.ஈஸ்வரி.தமிழ் திரையுலகின் முதலாம் தலைமுறை பாடகிகளில் இவரும் ஒருவராவார்.

MSV யின் இசையில் அந்தக்காலத்தில் இவர் பாடிய பாடல்கள் இவரை புகளின் உச்சிக்கே கொண்டு சென்றது.MSV 'யே மனம் திறந்தது ஈஸ்வரியை பாராட்டியுள்ளார்.அதில் அவர் அடிக்கடி குறிப்பிடும் பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் "சிவந்த மண்" படத்தில் ஈஸ்வரி பாடிய "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்".

அந்த பாடலில் ஈஸ்வரி கொடுத்த expressions ஆனது,முக்கியமாக சிவாஜி நடிகையை சாட்டையால் அடிக்கும் போது அதற்கு ஈஸ்வரி கொடுத்த expressions அதே பாடலை ஹிந்தியில் பாடிய பாடகியால் கொடுக்க முடியாமல் போனதை MSV சுட்டிக்காட்டி இருந்தார்.

பட்டத்து ராணி பாடல் பார்க்கதவர்களுக்காக..

ஈஸ்வரிக்கு அதிகமான பாடல் பாட சந்தர்ப்பம் கிடைக்க காரணமாக அமைந்தது MSV 'க்கும் T.கே.ராமமூர்த்திக்குமிடையேயான பிரிவாகும்.அதுவரையில் ராஜேஸ்வரி,சுசீலா,ஜானகி,ஜமுனா ராணி,LRE ,சீர்காழி,TMS ,A .m .ராஜா ஆகியோருக்கு சுழற்ச்சி முறையிலேயே வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அந்த முறிவுக்கு பிறகு விஸ்வநாதன் TMS ,p .சுசீலா மற்றும் LRE ஆகியோருக்கே வாய்ப்புகள் வழங்கினார்.

இவர் பாடிய முதல் தமிழ் பாடல் "வாராயோ தோழி" என்று பாசமலர் திரைப்படத்திலமைந்த பாடலாகும்.
இவரது முதல் தெலுங்கு பாடல் "நா பேரு செலயேறு..நன்நீவரோ ஆபலேறு" என்ற பாடலாகும்.கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த பரீட்சியம் இல்லாத போதும் இவர் பாடிய பாடல்கள் சிகரத்தை தொட்டன!அதற்கு இவருக்கு கிடைத்த தேசிய விருதும் நந்தி விருதுமே சான்று பகர்கின்றன!S .P .பாலசுப்ரமணித்தின் முதலாவது தமிழ் திரை இசைப்பாடல் "ஹோட்டல் ரம்பா" படத்துக்காக பாடிய "அத்தானுக்கு எப்படி இருக்கு மனசுக்குள்ளே"என்ற பாடலாகும்.இப்பாடலை L.R.ஈஸ்வரியுடன் இணைந்தே பாலு பாடினார்.ஆனால் துரதிஷ்டவசமாக பாடலும் படமும் வெளிவரவில்லை.
L.R.ஈஸ்வரியின் குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்பட பாடல்களில் சில..

முத்துக்குளிக்க வாரீகளா-அனுபவி ராஜா அனுபவி
ஆடவரெல்லாம் ஆடவரலாம்-கருப்பு பணம்
நானொரு காதல்-தவப்புதல்வன்
அடி என்னடி-அவள் ஒரு தொடர்கதை
துள்ளுவதோ-குடியிருந்த கோயில்

அத்துடன் ஈழத்தின் புகழ்பூத்த கலைஞரான A .E .மனோகரனுடன் இணைந்து "பட்டு மாமியே "என்ற பொப் பாடலையும் பாடியவர் ஈஸ்வரி அவர்களே!!இன்றும் இசை போட்டிகளிலும் மேடைகளிலும் பலர் L.R.ஈஸ்வரியின் பாடல்களை பாடிக்கொண்டிருக்கின்றனர்.அத்துணை பிரபலமானவை அவருடைய பாடல்கள்.அண்மையில் முடிவடைந்த Airtel சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 'இல் சிறுமி நித்தியஸ்ரீ L.R.ஈஸ்வரியின் பாடல்களை பாடி அசத்தியது ஞாபகமிருக்கலாம்!


இப்பதிவு மற்றவர்களையும் சென்றடைய மறக்காமல் ஓட்டு போடுங்கள்.tamil10 "இல் ஓட்டு போட கணக்கு அவசியமில்லை.ஒட்டு போடுவது பற்றி தமிழ் மனம்,இன்ட்லியில் விரிவாக கூறி இருக்கிறார்கள்.

Post Comment

6 comments:

யாதவன் said...

நன்றி

mynthan said...

யாதவன் said...

நன்றி//

வாங்க யாதவன்

Anonymous said...

அருமையான ஆக்கம்!!தொடருங்கள்!தொடர்வோம் நண்பா

AnushangR said...

நிறைந்த தகவல்களுடன் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே...

mynthan said...

Anonymous said...

அருமையான ஆக்கம்!!தொடருங்கள்!தொடர்வோம் நண்பா//

வருகைக்கு நன்றி நண்பரே!

mynthan said...

AnushangR said...

நிறைந்த தகவல்களுடன் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே...//
நன்றி அனுஷாங் !

Related Posts Plugin for WordPress, Blogger...