Wednesday, August 11, 2010

மெல்லினமே மெல்லினமே!

இந்தப்பாடலை பிடிக்காதவர்களே இருக்க முடியாது..அந்தளவுக்கு மென்மையான இசையும் கவித்துவமான வரிகளுமாய் ஷாஜகான் திரைப்படத்தில் அமைந்தது இந்தப்பாடல்.ஹரிஷ் ராகவேந்திராவின் குரலில் மணி ஷர்மாவின் இசையில் மக்கள் மனங்களை வருடிச்சென்ற மெல்லினமே மெல்லினமே பாடல் மீண்டும் உங்கள் ஞாபகங்களை மீட்டிப்பார்ப்பதற்காக..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..
(மெல்லினமே மெல்லினமே)

மீண்டும் ஒரு முறை பாருங்கள்..நிச்சயம் உங்களை மறப்பது உறுதி!!


நெஞ்சங்களே நெஞ்சங்களே
கொஞ்சம் ஓட்டினை போட்டு செல்லுங்கள்
உங்கள் எண்ணங்களை ஒரு பின்னூட்டலாய்
அங்கங்கே விட்டு செல்லுங்கள்..!

Post Comment

8 comments:

Anonymous said...

"வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை "

எனக்கு பிடித்த வரிகள்...நெஞ்சை தொடும் பாடல் நிஜமாகவே!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்... அருமையான வரிகள்..

விஜய்யை பிடிக்காத காரணத்தால் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை...

AnushangR said...

சார்! எப்பிடி சார்!! எப்பிடி உங்களால மட்டும் முடியுது?என்னை உருக்கிய பாடல் இது.இந்த பாடல் வெளிவந்த காலப்பகுதியில் நான் இந்தியாவில் இருந்தேன், அப்போது எனக்கு அவ்வளவு சினிமா நாட்டம் இல்லை இருந்தபோதும் இந்த பாடல் என்னை ஏனோ மிகவும் ஈர்த்தது. இன்றுகூட நான் முணுமுணுக்கும் ஒரு மெல்லிய இனிமையான இசை விருந்து.காணோளியின்(VISUAL SONG) இணைப்பு சிறப்பு... மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு...வாழ்த்துக்கள் நண்பா...

Unknown said...

Anonymous said...

"வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை "

எனக்கு பிடித்த வரிகள்...நெஞ்சை தொடும் பாடல் நிஜமாகவே!!//

வருகைக்கு நன்றி...ஆமாம் நல்ல வரிகள்!

Unknown said...

வெறும்பய said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்... அருமையான வரிகள்..

விஜய்யை பிடிக்காத காரணத்தால் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை...//

ஹஹா அப்ப ஒரு கொள்கையோட தான் இருக்கீங்க "தல"!

Unknown said...

AnushangR said...

சார்! எப்பிடி சார்!! எப்பிடி உங்களால மட்டும் முடியுது?என்னை உருக்கிய பாடல் இது.இந்த பாடல் வெளிவந்த காலப்பகுதியில் நான் இந்தியாவில் இருந்தேன், அப்போது எனக்கு அவ்வளவு சினிமா நாட்டம் இல்லை இருந்தபோதும் இந்த பாடல் என்னை ஏனோ மிகவும் ஈர்த்தது. இன்றுகூட நான் முணுமுணுக்கும் ஒரு மெல்லிய இனிமையான இசை விருந்து.காணோளியின்(VISUAL SONG) இணைப்பு சிறப்பு... மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு...வாழ்த்துக்கள் நண்பா...//

வாங்க அனுஷாங்.R ,நன்றி நன்றி..

Unknown said...

Thanks for giving this Song. Thanku So much ma i love vijay And Vijay Songs ..

Unknown said...

preethi said...

Thanks for giving this Song. Thanku So much ma i love vijay And Vijay Songs ..//

வாங்க..நன்றி.பரவாயில்லை..பதிவுலகில் விஜய்க்கு ஆதரவாக இருக்கத்தான் செய்கிறார்கள்!அனைவரும் எதிரிகளல்ல!

Related Posts Plugin for WordPress, Blogger...