
பாடல்களுக்காக நான் படம் பார்த்த காலமுண்டு..அதுவும் முக்கியமாக இசைப்புயலின் பாடல்களுக்காக..அந்த வரிசையில் எனக்கு பிடித்த ஒரு படம் தான் தாளம்.தமிழிலும்,ஹிந்தியிலும் வெளியான இத் இத்திரைப்படம் ரஹ்மானுக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது என்றால் மிகையாகாது.ரஹ்மானின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் தாளம் திரைப்பட பாடல்கள் அடிக்கடி பாடப்படுவதை அவதானித்திருக்கலாம்..தமிழில் அத்தனை பாடல்களும் வைரமுத்துவின் கவித்துவ வரிகளாலும் ரஹ்மானின் மனம் வருடும் இசையாலும் என்னை மிகவும் கவர்ந்தன.உங்களையும் கவர்ந்திருக்கும் என நினைக்கின்றேன் ..
பாடலாசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்கள்:SP பாலசுப்ரமணியம்,ஷோபா
இசை:இசைப்புயல் A .R .ரஹ்மான்
வெளியாகிய தேதி:30-Aug-1999
எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா
[எங்கே என் புன்னகை ...]
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முகிலாயில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோல் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா
(எங்கே என் புன்னகை)
எங்கே என் புன்னகை பாடலுடன் உங்களை இணைத்து உங்கள் ஞாபகங்களை மீட்டுங்கள்!.
பதிவு பிடித்திருந்தால் உங்கள் பின்னூட்டல்களும் ஓட்டுகளும் விழட்டுமே!

11 comments:
ஐயோ வைரமுத்து கொல்றாரே!
Anonymous said...
ஐயோ வைரமுத்து கொல்றாரே!//
பாத்துங்க கொலை கேசாகிட போகுது!
நானும் கவிப்பேரரசுவின்.... கவிதைகளின் காதலன் தான்
சத்ரியன் said...
நானும் கவிப்பேரரசுவின்.... கவிதைகளின் காதலன் தான்//
அப்படியா!!நன்று
Superb post put ur links here tamil.kijj.in
கலக்குறிங்க
Jeyamaran said...
கலக்குறிங்க//
வாங்க..நன்றி
அருமையான பதிவு நண்பரே..........
தங்களுடைய பதிவுகளை http://kigg.in என்ற தலத்தில் இணைப்பதன் மூலம் உங்களுடைய டிராபிக்கை அதிகரிக்கலாம்
நெஞ்சை தொட்ட பாடல்..!
சிறப்பு உங்கள் பதிவு....
மீண்டும் இந்த திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் சில நாட்களுக்கு முன் எனக்கு கிட்டியது.
நிஜமாகவே மனதை மயிலிறகால் வருடியது போல இருந்தது...
AnushangR said...
சிறப்பு உங்கள் பதிவு....
மீண்டும் இந்த திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் சில நாட்களுக்கு முன் எனக்கு கிட்டியது.
நிஜமாகவே மனதை மயிலிறகால் வருடியது போல இருந்தது...//
வாங்க அனுஷாங்,நன்றி
Post a Comment