
இவர்கள் ஒரு விதம்!
நண்பனே..
நட்புக்கு இலக்கணமே..
நாள் தோறும் இணைபவனே..
நன்றிக்கு உரியவனே..
என் நண்பன் நீயே!
எண்ணிறைந்த பாறைகளின்
மத்தியில்
நீ ஒரு பளிங்கு!
தடையில்லா காட்டாறு
எனக்கு
அணையாக நிற்கும் துணைக்கட்டு!

தடுமாறி போன போது
தடுப்பரண் போட்டவனே
தடுமாறி வீழ்ந்த போது
தோள் தந்த தோழனே!
கடல் கடந்து சென்றாலும்
மனம் கடந்து செல்லாதே
என் ஒரு கண் நீ தானே..
ஒரு போதும் பிரியாதே..!
துணையேதும் இல்லையெனிலும்
துயரேதும் கிடையாதே
நண்பன் நீ அருகிருந்தால்!

இவர்கள் மறு விதம்!!
ஒன்றாக திரிபவனே!
ஒரே சிகரெட் பகிர்பவனே!
பையில் சல்லி மிஞ்சாத போது
போத்தல் வாங்கி தந்தவனே!
நான் வேணாம் என்ற போதும்
ஊத்தி ஊத்தி தந்த
வள்ளல் பெருமகனே!
நான் போட்ட
பிகருக்கு
போடாமல் விட்டவனே..(காதலிக்காமல்)

மாப்பிளே..
ஒரு பாயில் படுத்தவனே!
பத்தும் பலதும் சொல்பவனே
இரவில் "பாட்டி"
கதையும் சொல்பவனே!
நீ ஒரு செம friend மச்சி!!
I love u டா!!


நண்பர்களே உங்களை பற்றிய பதிவு இது...ஆகவே மறக்காமல் வாக்களித்து நண்பர்கள் தினத்தை சிறப்புப்படுத்துங்கள்!!
2 comments:
என்ன நண்பரே ஒரு விதத்தை விட மறு விதம் பல உள்ளக்கிடக்கைகளை அலேக்காக அள்ளி அறிக்கைப்படுத்துதே...மறு விதம் எனக்கு குறிப்பாக நம் நண்பர் ஒருவரை என் கண் முன் கொண்டுவருகிறது...
புரிந்தவர் புளகாங்கிதம் அடையவும்..
தூள் மாப்ளே தூள் ... கலக்குங்க...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சிவம் SIVAM உங்களுக்கு ...
வருகைக்கு நன்றிகள்..ஆமாம் நட்புகள் ஆளுக்காள் வேறுபடலாம் தானே!
உங்களுக்கும் எனது வாழ்த்துகள்!
Post a Comment