Thursday, July 28, 2011

லார்ட்சில் தோனி பந்து வீசியது தவறா??


லார்ட்ஸ் டெஸ்ட்டில் தோனி பந்துவீசியது தொடர்பில் சர்ச்சைகள் முடிவடைந்தபாடில்லை.அதைப்பற்றியும்,இந்திய அணியின் தோல்வி குறித்தும் பல விமர்சனங்கள் வெளிவந்தவாறு !

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா சவாலின்றி சரணடைந்ததையடுத்து பேடி, வடேகர், கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.இது பற்றி செய்திகளில் வந்த விடயங்கள் யாதெனில்:

"பிஷன் சிங் பேடியிடம் கேட்டபோது, மாட் பிரையர் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரர், ஆனால் டோனி பிரையரைக் காட்டிலும் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பந்துவீச்சாளர் என்று கேலியாகக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்வியை கபில்தேவ் வர்ணித்ததாவது, நாம் இந்தப் போட்டியைக் காப்பாற்றியிருக்கலாம், களம் ஒன்றும் மோசமாக இல்லை, ஆனால் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தனர். இங்கிலாந்தில் ரன் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தடுப்பாட்டம் விளையாடி நீடிக்க முடியாது.

நாம் தாக்குதல் ஆட்டம் ஆடவேண்டும். லட்சுமணும், டிராவிட்டும் அவர்கள் பாணியில் விளையாடியதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டும். நமது பொறுப்பை உணர்ந்து நம் கிரிக்கட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சச்சின் பற்றியும், அவரது 100 வது சதம் பற்றியும் பெரும் ஊதிப் பெருக்கல்கள் நிகழ்ந்தது. இதனால் கவனம் இழக்கப்பட்டது என்றார் கபில்தேவ்.

பேடி தெரிவிக்கையில், துடுப்பாட்டம் தான் நம் அணியின் பலம் எனில் ஏன் டொஸ் வென்று முதலில் அவர்கள் கையில் துடுப்பாட்டத்தை கொடுக்க வேண்டும். அதுவும் திட்டமிடுதல் இல்லாமல் 474 ரன்களை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எப்போதும் பயிற்சியாளரிடம் விடயத்தை ஒப்படைக்கக் கூடாது. வீரர்கள் தாங்களாகவே சில விடயங்களில் முன்னேற வேண்டும்.

சச்சினைப் பொறுத்தவரையில் நான் வருந்துகிறேன். முதல் இன்னிங்ஸில் நல்ல பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பதுங்கினார். அவருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல, ஆனாலும் அவர் ஆதிக்கபூர்வமாக துடுப்பாட்டம் செய்திருக்க வேண்டும். சேவாகும், சச்சினும் இது போன்று விளையாடக்கூடாது. சச்சின் ஆதிக்க வழிக்குத் திரும்ப வேண்டும் என்றார் பேடி.

மேலும், டோனி பந்து வீசியது குறித்து பதிலளித்த பேடி, இது ஒரு பெரிய தர்மசங்கடம், இவ்வாறு செய்வதன் மூலம் எதிராளிக்கு நம் பந்து வீச்சு வறட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டினார் டோனி.

இது குறித்து வடேகர் கூறுகையில், டோனி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நிதி திரட்டல் போட்டி இது என்று நினைக்கிறாரா? அவர் பந்து வீச முடிவு செய்தது முட்டாள் தனமானது.

வெங்சர்க்கார் தன் தரப்பில் கூறுகையில், ஜாகீரும், சச்சினும் உலகக் கோப்பை இறுதிக்குப் பிறகு நேராக லார்ட்ஸ் வருகின்றனர். குறைந்தது இரண்டு பயிற்சி ஆட்டங்கள் தேவை, இந்திய அணி நல்ல முன் பயற்சி செய்யவில்லை என்றார்."

தோனியின் பந்துவீச்சு பெறுமதிகள்
Bowling averages
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests58578580---4.46-000
ODIs1861121411/141/1414.007.0012.0000
T20Is26------------
First-class99108780---4.33-000
List A242393621/141/1418.005.5319.5000
Twenty2095------------

லார்ட்சில் ஜாகீர் கான் காயம் காரணமாக 13.3 ஒவர்கள் மட்டுமே வீசினார். இதுவும் கூட இந்திய அணி 196 ரன் வித்தியாசத்தில் தோற்க காரணமாக அமைந்தது என்று வசீம் அக்ரம் தெரிவித்தார்

தோனி பந்து வீச நேர்ந்தது ஜாகிர் கான் காயமடைந்து வெளியேறியமையே ஆகும்!வெறுமனே 13 .3 ஓவர்கள் பந்துவீசியவுடன் சாகிர் மைதானத்தை விட்டு வெளியேற,தோனிக்கு வேறு வழி தெரியவில்லை!முழங்கை பிரச்சனையால் மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப்போட்டியில் கூட விளையாடாத ஜாகிர் கானை எந்த உடல் தகுதியை பார்த்து இவர்கள் அணிக்குள் தேர்வு செய்தனர் என்பது கேள்விக்குறி!சமர்செட் அணியுடனான பயிற்ச்சிபோட்டியில் விளையாடி இருந்தாலும் அந்த போட்டியில் எந்தவித விக்கட்டையும் ஜாகிர் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாவது டெஸ்ட்டுக்கு ஸ்ரீசாந்தை தெரிவு செய்திருக்கின்றனர்.இதனை முதல் டெஸ்ட்டிலேயே செய்திருக்கலாமே!இந்திய அணியின் பலம் துடுப்பாட்டமே.முதல் டெஸ்ட்டில் துடுப்பாட்டம் சொதப்ப பந்துவீச்சு பக்கம் கவனம் திரும்பி இருக்கிறது!

அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை இணைத்துக்கொண்டு விளையாடியபோது,ஜாஹீரின் வெளியேற்றம் பந்துவீச்சில் ஒரு வறட்சித்தன்மையை ஏற்படுத்தியது தோனிக்கு.பிரவீன் குமார் விக்கட்டுகளை எடுத்தாலும் அவரின் பெரும்பாலான விக்கட்டுகள் ஆட்டத்தின் பின் பகுதியிலேயே எடுக்கப்பட்டன.இஷாந்த் சர்மாவும் ஹர்பஜன் சிங்கும் விக்கட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார்!வேறு வழி தெரியாமலேயே தோனி தானே பந்து வீச முயன்றிருக்கலாம்!இங்கிலாந்து கூட ஜோனத்தன் ற்றோட்டை பகுதி நேர பந்துவீச்சாளராக சில சமயங்களில் பாவித்திருந்து சில நல்ல இணைப்பாட்டங்களை பிரித்திருக்கிறது.அவ்வாறு தோனி முயன்றிருக்கலாம்.எவ்வளவு நேரம் தான் விக்கட் எடுக்காத இஹாந்த் சர்மாவையும் ஹர்பஜன் சிங்கையும் பயன்படுத்துவது!எட்டு ஓவர்கள் பந்து வீசிய தோனி எந்த விக்கட்டையும் கைப்பற்றவில்லை.மொத்தமாக முதல் தர போட்டிகளில் வெறுமனே மூன்று விக்கட்டுகளை மட்டுமே தோனி கைப்பற்றி இருக்கிறார்.என்ன செய்வது,யாருமே இல்லாத நேரத்தில் பந்து வீசி இருக்கிறார்.யுவராஜ் இருந்திருந்தால் அவரை பாவித்திருக்கலாம்.ஆனால் ரைனாவால் பகுதி நேர பந்துவீச்சை சிறப்பாக செய்ய முடிந்திருக்கவில்லை!

Sreesanth could be in the India playing XI for the Trent Bridge Test with Zaheer Khan being ruled out

தலைவரான பின்னர் தோனி பல விடயங்களை பரீட்சித்து பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்!அப்போது அவரை அனைவரும் தூக்கி வைத்து கொண்டானினார்கள்.அன்றைய டோனியின் முயற்சி பிழைத்து போய்விட்டதால் அவரை வரிந்து கட்டி சாடுகின்றனர்!இதே இந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தாலோ அல்லது தோனி ஒரு விக்கட்டை/பீட்டர்சன் விக்கட்டை கைப்பெற்றி இருந்தால் இதே விமர்சகர்கள் என்ன செய்திருப்பார்கள்???

அதே நேரம் ஆஷஸ் தொடர் போல வாய் ஜாலங்களை தொடங்கி விட்டனர் இங்கிலாந்தின் மூத்த வீரர்கள்.இயன் பொத்தம் இது பற்றி தெரிவிக்கையில் "

சொந்த மண்ணில் அதிக வலுவுடன் உள்ள இங்கிலாந்து அணியை இந்தியா தோற்கடிக்க முடியாது.உலக கிரிக்கட்டின் மன்னராக வலம் வருகிறோம். எங்களை பிளவுப்பட்ட இந்திய கிரிக்கட் அணி தோற்கடிக்க முடியாது "என்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மீண்டுவர முடியாது என இங்கிலாந்தின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியினர் ஆக்ரோஷமாக உள்ளனர். அவர்கள் இந்திய அணியை வீழ்த்துவோம் எனற உறுதியில் உள்ளனர். உலக டெஸ்ட் அரங்கில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பசி, இங்கிலாந்து அணியிடம் இருக்கிறது என்றும் பாய்காட் தெரிவித்திருக்கிறார்.


பார்ப்போம் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் எழுச்சி பெறுமா என்று!!

Post Comment

33 comments:

Anonymous said...

அன்றைய போட்டியில் வேறு வழி இல்லை ,அது தான் தோனி பந்து வீசும் நிலை வந்தது. அதோடு ஹர்பஜனும் சொதப்பிவிட்டார்..

Anonymous said...

டெம்ளேட் அழகாய் இருக்கு பாஸ் ...

சக்தி கல்வி மையம் said...

டெம்ப்ளேட் கலக்கல் தல..

சக்தி கல்வி மையம் said...

அந்த டெஸ்ட் தொத்தாச்சு.. என்ன செய்ய..
அடுத்த டெஸ்ட் பார்ப்போம்..
நல்ல விரிவான அலசல்..

Balaganesan said...
This comment has been removed by the author.
கூடல் பாலா said...

ஜாகிர் காயமடைந்ததுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் .ஒரு சிறந்த அணி தோற்கும்போது வெரைட்டியான விமர்சனங்கள் வருவது சகஜமே .எங்களைப்போல் திறமையான பவுலர்கள் இருக்கும்போது முழு உடற்தகுதி இல்லாத ஜாகிரை ஏன் அணியில் சேர்த்தார்கள் என்பதுதான் தெரியவில்லை......

கார்த்தி said...

உங்களுடன் ஒத்துப்போகிறேன். இவங்களுக்கு வெலை இல்லை இப்பிடிதான் பிழைக்கிறதுக்கெல்லாம் குய்யோ முறையோ எண்டு கத்துறதும் சரியானா நல்ல முடிவெண்டுறதும். தோனி 8ஓவர் போட்டதால இந்தியா தோத்ததுக்கு முக்கிய காரணம் எண்டா இவங்கட மூளையை எங்க கொண்டு போய் அடிக்கிறது.
புதிய புலொக்க டெம்பிளெட் கலக்குது!!

சென்னை பித்தன் said...

தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.ஆனால் நான் வல்லுநர் அல்லவே!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு...நடந்தது நடந்திருச்சு. அடுத்த டேஸ்ட் மேட்சை பார்க்கலாம்.

Mohamed Faaique said...

தோனி மேல உள்ள கடுப்புல இதுதான் சாக்கு`னு நாலு வார்த்த ஏசினும் போல இருக்கு.. அப்போதான் மனசு குலு குலு`னு இருக்கும்..

உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.

ஆகுலன் said...

என்னை பொறுத்தவரை தோனி செய்தது பிழை அல்ல நான் வசீம்அக்ரத்தின் கருத்தோடு ஒத்து போகிறேன்..

எனது கனா.................

K.s.s.Rajh said...

நிச்சயமாக டோனி பந்துவீசியதில் தவறு இல்லை ஏன் என்றால்.இடையில் பிரிக்க முடியாத இணைப்பாட்டங்களை இப்படியான பந்து வீச்சின் மூலம் ஆட்டம் இழக்க செய்யமுடியும்.டோனி விக்கெட் எடுத்து இருந்தால் இப்படி சொல்லமாட்டார்கள்.இந்தியாவின் தோல்வி பற்றி டோனி அணியை லோர்ட்சில் துவைத்து எடுத்த இங்கிலாந்து எனநான் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் இல்லாதது இந்தியஅணிக்கு.பெரும் இழப்புத்தான் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

A.R.ராஜகோபாலன் said...

வெற்றி வரும் போது எல்லோரும் பங்கிட வருவார்கள்
தோல்வியை பங்கிட யாரும் வருவதில்லை
மீண்டும் இந்தியா மீண்டு வரும்
ஸ்ரீ சாந்தை விட
ஆர் பி சிங் நல்ல தேர்வாக இருப்பார்

shanmugavel said...

சிறப்பான அலசல்.பொறுத்திருப்போம்.

shanmugavel said...

சிவா பதிவு போட்டவுடன் முடிந்தால் மெயில் அனுப்ப முயற்சிக்கவும்.அதான் ஃபாலோயர்ஸ் நிறைய இருக்காங்களே!

உணவு உலகம் said...

//தமிழ்வாசி - Prakash said...
ரைட்டு...நடந்தது நடந்திருச்சு. அடுத்த டேஸ்ட் மேட்சை பார்க்கலாம்.//
டெஸ்டா, டேஸ்டா?# டவுட்டு.

Mathuran said...

டெம்ப்ளேட் சூப்பர் தல......

Mathuran said...

கிரிக்கட்டா.....கிலோ என்ன விலை என்று கேட்கிற ஆளு பாஸ் நான்... அதால ஓட்டு மட்டும் போடுறன்

Anonymous said...

இங்கலாந்தில் 20 விக்கெட் இந்தியா எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்...
ஹர்பஜன் அடி பட்டால் தான் இனி இந்தியாவுக்கு விடிவு காலம்...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள் ...

நிரூபன் said...

வணக்கம் மச்சான்,
எனக்கும் கிரிக்கட்டிற்கும் கொஞ்சம் எட்டாப் பொருத்தம்.

நிரூபன் said...

மச்சாங், டெம்பிளேட் சூப்பர், முன்பை விட இப்போது ஸ்பீட்டாக பேஜ் ஓப்பின் ஆகுது,

kobiraj said...

அதிகமான கர்வம் இப்பிடித்தான் முடியும்

தனிமரம் said...

டெம்பிளேட் மிகவும் அழகாகவும் அதிவேகமாக இருக்கின்றது.
கிரிக்கட்டில் இப்படித்தான் வென்றாள் கொண்டாட்டம் தோற்றல் திண்டாட்டம் இவற்றைப் பார்க்க எனக்கு ஆவல் இருப்பதில்லை பாஸ்!

கொ. வை.அரங்கநாதன் said...

முன்னாள் வீரர்கள் தாங்கள் ஆடிய அத்தனை ஆட்டத்திலும் சிறப்பாக ஆடிய மாதிரியும் தோல்வியை சந்திக்காதவர்கள் போல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது

கேரளாக்காரன் said...

Dai jalra jeyasuryavukku sombadichavan thaan nee dhoni yuvraj pathiellam pesa nee yaru. Thothu pona world championse pothikittu irukkom unakkenna vanthuchu. pathiellam pesa nee yaru. Thothu pona world championse pothikittu irukkom unakkenna vanthuchu.

கேரளாக்காரன் said...

Unga sanga manga pathi ellam naanga pesuroma? Rajnikanth vijay pathi pesuna pona poguthu tamilannu vutralam . Enga captain dhoni pathi pesa nee yaaruda

கேரளாக்காரன் said...

Inga intha jalravukku aadharava comment potta ellathukkum solren natpu veran namma naadu vera world cupla adicha aappa innum uruva kooda illa athukkulla intha srilanka kaaranuga Indian team pathi naalu pakkam vimarsanam panran avanukku supporta comments vera. Shame on you Indians

கேரளாக்காரன் said...

Sorry jeyasuryavukku sombadichavar peru bala Michael ellam ungalukku than micham vakkama sapdunaum purinjutha

Unknown said...

//கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...//
உங்கள் துவேச கதைகளை உங்கள் ப்ளோகில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு இங்கு இடமில்லை.

காட்டான் said...

மாப்பிள இந்த கேரளத்துத்காரனின் கருத்தை அப்படியே விட்டு விடு இவர்கலைப்பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும்...,!?

கேரளாக்காரன் said...

hello Mr :Siva naan nenacha anany comment potrukkalam athu ennoda karuthu ungala mama machannu koopdra friends venuna ungalukku support pannalam cricket pidicha yaarum ungala support panna maattanga


உங்கள் துவேச கதைகளை உங்கள் ப்ளோகில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு இங்கு இடமில்லை


Vanthatharkku mannithukkollavum Good bye

Unknown said...

ரைட்டு!

FARHAN said...

ஒரு சாதாரண பந்துக்கா இம்புட்டு பெரிய அக்க போர்

Related Posts Plugin for WordPress, Blogger...