Sunday, April 3, 2011

ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி?part -02


இதில பகுதி ஒன்னு வாசிக்க இஷ்டம்ன்னு நெனைச்சீங்க எண்டா இங்ககிளிக்குங்க.

படிப்பு வேண்டாம் வேலை வேண்டாம் எண்டு கிரிக்கட்டே கடவுள்னு பைனல் மேட்ச் பாத்தா...
இலங்கை தோத்திட்டு வந்து நிக்குது...
நாம வெளிப்படையா ஆதரவு தெரிவிச்சதால பக்கத்தி வீடு,முன்வீட்டு இந்திய ரசிகர்களெல்லாம்
கேவலமா பாக்குறாங்க...ஏன் உள்வீட்டுக்கையே அவமானம் வெட்கம்...
ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி??
வீட்டில இருந்து போட்ட கூச்சலில பக்கத்தி வீட்டு ஜனங்க சுற்றுலா கெளம்பி போயிட்டாங்களாம்...!!

கலர்புல்லா தலையை கலைத்து விட்டு கொஞ்சம் வெளில கலேர்ஸ் காட்டலாம்னு கேளம்பினாக்கா..
அக்கம் பக்கத்தில இருக்கிற பெருசுக அம்புட்டு பேரும்,பாரு காக்கா கூட்டுத்தலையன் போறான் எண்டுற மாதிரியே
ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க...
அத எப்பிடியோ கண்டுபிடிச்சு நம்ம வீட்டில நடக்குமே ஒரு அபிசேகம்..
பிள்ளையாருக்கு கூட இப்பிடி லென்த்'தா நடந்திருக்க சான்ஸ் இல்லை!!


எப்பிடியாச்சும் கிழமைக்கு ஒரு மூணு பதிவு ஓட்டிரனும்னு முதல் வாரமே ப்ளான் போட்டு
ரெண்டு பதிவை டிராப்ட்'ல சேவ் பண்ணி வைச்சிருப்பம்...
ஆனா அந்த கிழமைன்னு பாத்து பதிவு போடவே சான்ஸ் கிடைக்காது பாருங்க...
ஏதாச்சும் ஆட்டோமாட்டிக் முறையில பதிவு போட மிஷின் ஒண்ணுமே இல்லையேன்னு
மனசு சங்கடப்படும்..
கையில சொடக்கு போட்டா draft 'ல இருக்கிற பதிவு தானாவே பப்ளிஷ் ஆகணும்..
யாராச்சும் கண்டுபிடியுங்கப்பா!!

தப்சி,நமீதாவை வைச்சுகிட்டே மொக்கை பதிவுகள ஓட்டிகிட்டிருப்பம் நாம..
உடன நம்மள தூக்கி அவங்க ரசிகர் மன்ற தலைவரா போட்டிடுவாங்க நம்மள கூட
கேக்காம..
நாமளும் எத்தினை மன்றத்தில தலைவரா கொண்டு நடத்துறது??
பாக்கிறாங்க தப்பா நெனைக்க மாட்டாங்க??
எனுயா எங்கள மட்டும் தலைவரா போடுறீங்க??
ஆக்சுவலி நாம "அடி" மட்ட தொண்டன் தானுங்க!!

விஜயகாந்த்துக்கு குடை பிடித்த வடிவேலு...அப்பிடீன்னு தலைப்பு போட்டிருப்பாங்க..
போய் பார்த்தா சின்னக் கவுண்டர் படத்தில வடிவேலு குடை பிடித்த படத்தை போட்டிருப்பாங்க...
அதாச்சும் பரவாயில்லை..நமீதா குளியல் காட்சி(18 +)அப்பிடீன்னு போட்டிருப்பாங்க..
ஆவலா அடிச்சு பிடிச்சு போனாக்கா...
நமீதா தலையில தண்ணி ஒழுகிற போட்டோ ஒன்னு மட்டும் போட்டிருப்பாங்க..
ஏனுங்க இப்பிடி???

சுட சுட பதிவு ஒன்னு போட்டாக்கா,முன்னுக்கு முந்தியடிச்சு சில பயலுக வருவானுங்க ஓட்டு போடுலாம்ன்னு..அந்த நேரம்ன்னு பார்த்து தமிழ்மணம் ஓட்டளிப்பு பட்டை வேலை செய்யாம மக்கர் பண்ணும் பாருங்க..ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி?
(ஹிஹி விக்கி உலகத்திலயும் இதே பிரச்சனையாம்லே!)ஏனுங்க அவருக்கும் இப்பிடி?

போன பதிவுக்கு பாத்தாக்கா...வோட்டு தாராளமா வந்திச்சு...பின்னூட்டங்களை காணவில்லை..
நண்பர்கள் கோபித்துக்கொண்டுவிட்டனர் போலும்...
மன்னிச்சூ.....

Post Comment

9 comments:

suthan said...

இந்த மாதிரி பதிவெல்லாம் வாசிக்கணும் எங்க தலயில எழுதிருக்கு ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?comment part 2...................

Unknown said...

ஹிஹி உங்களுக்கும் அப்பிடியா போச்சுதா??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சங்ககார நேத்து செஞ்ச வேலை.................ஏங்க இப்படி?

Yoga.s.FR said...

ஏனுங்கோ,இப்பவும் கிரிக்கட் வேற அரசியல் வேறன்னு தான் சிறிலங்காவுக்கு சப்போட் பண்ணுறீங்களோ?சரத் பொன்சேகா,சவேந்திர டி சில்வா போன்ற போர்க்குற்றவாளிகள் யுத்தத்தில்?!வெற்றி பெற்ற படை?!வீரர்களுக்கு "வெற்றியை"காணிக்கையாக்குவோம் என்று சொன்னதன் பின்னரும்.......................................................................?

MANO நாஞ்சில் மனோ said...

சிபி காலை வாரிட்டீங்களே ஹா ஹா ஹா ஹா....
அந்த ராஸ்கல்'தான் நமீதா குளிக்குறதா சொல்லி ஏமாத்துனது.... உடனே ரெண்டு டி ஆர் சினிமா விசிடி அனுப்பி குடுங்க...

shanmugavel said...

பாவம்,கஷ்டம்தான்

Jana said...

ஒழுங்கா நீங்க சாமி கும்பிடுவதில்லை அதுதான் சாமி இப்படி நடக்கூது!
அரோகரா...:)

! சிவகுமார் ! said...

//ஏதாச்சும் ஆட்டோமாட்டிக் முறையில பதிவு போட மிஷின் ஒண்ணுமே இல்லையேன்னு
மனசு சங்கடப்படும்//

கொஞ்ச நாளுக்கு முன்ன சொல்லி இருந்தா தேர்தல் அறிக்கைல இலவசமா தந்து இருப்பாங்க....... எங்களுக்கு!!

சி.பி.செந்தில்குமார் said...

மனசு சுத்தமா இருக்கோனும்.. ஹி ஹி

Related Posts Plugin for WordPress, Blogger...