Thursday, April 28, 2011

இலங்கை ப்லோக்கேர்ஸ்'கு என்ன நடந்தது?



இலங்கை என்று ஒரு நாடு இருக்குதுன்னு உலகத்துக்கு தெரிய வர
காரணமே இந்த ப்லோக்கேர்ஸ் என்று மார்தட்டிக்கொள்ளும்(?)
வலைப்பதிவர்கள் தான் என்றால் மிகையாகாது தானே!

அண்மையில் சில மாதங்களுக்கு முன்னர்
நடந்த இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பில் கணிசமான
பதிவர்கள் வந்திருந்தனர்.(எண்ணிக்கை தெரியாது..ஆனால் சுமார் என்பது இருக்கும்)

சந்திப்பு நடைபெற போகுதுன்னு தெரிஞ்ச உடனேயே
பதிவு போடாமல் இருந்த பலரும்,தாங்கள் பதிவர்கள் தான்
என்று நிரூபிப்பதற்காக அடுத்தடுத்து சில பதிவுகளை இட்டனர்..

சந்திப்பு நடை பெற்றது...
விளையாடி,கதைத்து,கலந்துரையாடி,உண்டு முடித்தாகி விட்டது.

அதன் பின்னர் ஒரு கிழமைக்கு மாறி மாறி பதிவுகள் வந்தன...
ஒரே ஆர்ப்பாட்டமாய் இருந்திச்சு..

அப்புறம்?

ஆர்ப்பாட்டம் அடங்கிருச்சு..அது தான் உண்மை..
பெரும்பாலானோர் மாதத்துக்கு ஒரு பதிவு,இரு பதிவுகளை போடுகிறனர்.
சிலர் அது கூட இல்லாமல் இருக்கிறனர்.

அடிக்கடி பதிவுகள் போட்டு இலங்கை பதிவுலகை கலகலப்பாக
உயிர்ப்போடு வைத்திருப்பதென்றால் அது யாழ் நிரூபனும்,
மதி சுதாவும் தான்..
ஜனா(cheers வித் ஜனா) அடிக்கடி பதிவிட்டு வந்தார்..
இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது..வேலைப்பளுவாம்.

மற்றம்படி அனைவரும் அத்தி பூத்தால் போல பதிவிட்டு வருகிறனர்.
இது ஆரோக்கியமான நிலைமை அல்ல இலங்கை பதிவுலகிற்கு!!
பலர் சொல்லும் காரணம் வேலைப்பளு.
அது ஒரு காரணமே அல்ல..
ஒரு பதிவு போட எவ்வளவு நேரம் எடுக்கப் போகிறது??
கிழமையில் ஒரு இரண்டு மணி நேரம் கிடைக்காதா ஒரு பதிவு போட?
இவ்வாறு சென்றால் நிலைமை என்ன இலங்கை பதிவுலகிற்கு!!

இந்திய நண்பர்களை பாருங்கள்..எவ்வளவு சுறு சுறுப்பு,ஆர்வம் கொண்டு இயங்குகிறனர்.

இலங்கையில் அதிகம் போலோவேர்ஸ் கொண்ட பதிவர்
லோஷன் அண்ணா.அவர் இப்போது பதிவு போடுவது
மாதத்துக்கு ஒன்றோ இரண்டு.

இவ்வாறு சென்றால் இலங்கை பதிவுலகம் ஒரு முடிவை
நோக்கி செல்கிறதா??

வளர்ந்து வரும் புதிய பதிவர்களே,நீங்களாச்சும்
அடிக்கடி பதிவு போட்டு இலங்கை பதிவுலகை
உயிர்ப்புடன் வைத்திருங்கள்!!

ஆவலுடன்,
ஏக்கத்துடன்,வெறுப்பு மற்றும் கடுப்புடன்,


Post Comment

37 comments:

Mathuran said...

ஓகே பாஸ்....

Mathuran said...

நியாயமான ஏக்கம்தான்

நிரூபன் said...

இந்த ப்லோக்கேர்ஸ் என்று மார்தட்டிக்கொள்ளும்(?)
வலைப்பதிவர்கள் தான் என்றால் மிகையாகாது தானே!//

ஏனய்யா.. ஏனு, தூங்கிக் கொண்டிருக்கிற சிங்கங்ளையெல்லாம் எழுப்புறீங்க..

நிரூபன் said...

சந்திப்பு நடைபெற போகுதுன்னு தெரிஞ்ச உடனேயே
பதிவு போடாமல் இருந்த பலரும்,தாங்கள் பதிவர்கள் தான்
என்று நிரூபிப்பதற்காக அடுத்தடுத்து சில பதிவுகளை இட்டனர்..//

ப்ளாக் என்று ஒன்று இருந்தால், விளம்பரப்படுத்தியாகனும் எல்லே...அதான்.

ம.தி.சுதா said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது மைந்தன் உண்மையிலேயே பலருக்கு வேலைப்பழு பிரச்சனை தான் நான் கூட இன்னும் ஒரு சில நாளில் 2 வாரத்துக் கொரு பதிவாக்கக் கூடும்...

நிரூபன் said...

அடிக்கடி பதிவுகள் போட்டு இலங்கை பதிவுலகை கலகலப்பாக
உயிர்ப்போடு வைத்திருப்பதென்றால் அது யாழ் நிரூபனும்,
மதி சுதாவும் தான்..//

எங்களை விட, நீங்க தான் ஒசாமா பின்லேடன், தப்சி, இலியானா என்று எல்லோரையும் அழைத்து வந்து ஓவராக் கலாய்த்துக் கொண்டிருக்கிறீங்க....

நிரூபன் said...

ஆவலுடன்,
ஏக்கத்துடன்,வெறுப்பு மற்றும் கடுப்புடன்//

எல்லோரும் எழுத வேண்டும், ப்ளாக் என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம், ஊடகம், அதனை உரிய முறையில் நாங்கள் பயன்படுத்துவதை விடுத்து, இப்பூடிப் பின் நிற்கலாமா சகோ.

நிரூபன் said...

நிரூபன் said...

வேலைப் பளு என்றாலும் சனி ஞாயிறுகளில் Draft இல் எழுதி வைத்துப் பதிவுகளைப் போடலாம் தானே?

Unknown said...

//நிரூபன் said...
அதென்ன யாழ், நிரூபன்;-))

என் பேருக்குப் பக்கத்திலை யாழ் என்று இருந்தாலே, பிரதேசவாதம் கதைக்கிறோம் என்று வந்திடுவாங்க ஆராவது...
ஹி..ஹி...//

அட ஆமா எல்லே!!
சீ சீ வெறும் நிரூபன்/..
அட ச்சீ..ஆடை அணிந்த நிரூபன் ஹிஹி

நிரூபன் said...

அதென்ன யாழ், நிரூபன்;-))

என் பேருக்குப் பக்கத்திலை யாழ் என்று இருந்தாலே, பிரதேசவாதம் கதைக்கிறோம் என்று, யாராவது வந்திடப் போறாங்க சகோ., உஸ்..சத்தம் போட்டுச் சொல்லப் படாது...
ஹி..ஹி...

நிரூபன் said...

சகோ, தமிழ் மணம் ஓர்க்கிங்க்.....

Unknown said...

//நிரூபன் said...
வேலைப் பளு என்றாலும் சனி ஞாயிறுகளில் Draft இல் எழுதி வைத்துப் பதிவுகளைப் போடலாம் தானே?//

ஆம் நிரூ,மனதில் பதிவு பற்றிய எண்ணம் இருந்தால் ஒரு அரை மணி நேரம் போதும்னானது பதிவிட!!

Unknown said...

//♔ம.தி.சுதா♔ said...
உங்கள் ஆதங்கம் புரிகிறது மைந்தன் உண்மையிலேயே பலருக்கு வேலைப்பழு பிரச்சனை தான் நான் கூட இன்னும் ஒரு சில நாளில் 2 வாரத்துக் கொரு பதிவாக்கக் கூடும்...//

ஏன் பாஸ்??

நிரூபன் said...

மைந்தன் சிவா said...
ஹிஹி உண்மை தான் நிரூ,அனைவரும் முதலில் இவ்வாறு அனுபவப்பட்டு தான்
பின்னர் வழிக்கு வருவார்கழ்க்
காத்திரப் பதிவராமே நீங்கள்?என் ப்ளாக்'இல் அவ்வாறு தான்
அலங்கரிக்கிறீர்கள்!!//

என்ன நடக்குது உங்க ப்ளாக்கிலை.
நாம் பாட்டுக்கு சும்மா எழுதிட்டு இருக்கேன், என்னைப் போயி காத்திரப் பதிவராம்..
காமெடி பண்ணுறதுக்கு ஒரு அளவே இல்லையா சகோ..
நாற்றுப் பதிவர் சகோ...

Unknown said...

//நிரூபன் said...
அடிக்கடி பதிவுகள் போட்டு இலங்கை பதிவுலகை கலகலப்பாக
உயிர்ப்போடு வைத்திருப்பதென்றால் அது யாழ் நிரூபனும்,
மதி சுதாவும் தான்..//

எங்களை விட, நீங்க தான் ஒசாமா பின்லேடன், தப்சி, இலியானா என்று எல்லோரையும் அழைத்து வந்து ஓவராக் கலாய்த்துக் கொண்டிருக்கிறீங்க....//



கலைக்கிறேனா??
உண்மைய தானே எழுதுறன்??
அப்ப நான் ரீல் தான் சுத்துறேன்'நு முடிவே பண்ணிட்டீங்களா??

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாரும் நிறையா எழுதுங்கய்யா...

Unknown said...

//MANO நாஞ்சில் மனோ said...
எல்லாரும் நிறையா எழுதுங்கய்யா...//

பாருங்க அவரே கடுப்பாயிட்டாரு!!
ஹிஹி

Namy said...

They are busy with UN report on Tamil genocide. . . :(

Namy said...

They are busy with UN report on Tamil genocide. . . :(

ம.தி.சுதா said...

அடடா இப்ப தாம்பா காத்திர பதிவரை கண்டேன்... அதை தான் ஆத்திர பதிவர் பாத்திர பதிவர் மூ.. பதிவராக்கப்பாத்தாங்களே ஹ..ஹ..

நிரு இவங்க ஏதோ கங்கணம் கட்டீட்டாங்கப்பா..

மைந்தன் நல்ல போர்வையொட இனி நம்ம ஓடையில க(கு)ளியங்கள்...

Namy said...

They are busy with UN report on Tamil genocide. . . :(

Unknown said...

//Namy said...
They are busy with UN report on Tamil genocide. . . :(//

:)

Unknown said...

//♔ம.தி.சுதா♔ said...
அடடா இப்ப தாம்பா காத்திர பதிவரை கண்டேன்... அதை தான் ஆத்திர பதிவர் பாத்திர பதிவர் மூ.. பதிவராக்கப்பாத்தாங்களே ஹ..ஹ..

நிரு இவங்க ஏதோ கங்கணம் கட்டீட்டாங்கப்பா..

மைந்தன் நல்ல போர்வையொட இனி நம்ம ஓடையில க(கு)ளியங்கள்...//



ஹஹா என்ன ஒரு அடுக்கு என்னோ ஒரு இடுக்கு...

Anonymous said...

////இலங்கை என்று ஒரு நாடு இருக்குதுன்னு உலகத்துக்கு தெரிய வர
காரணமே இந்த ப்லோக்கேர்ஸ் என்று மார்தட்டிக்கொள்ளும்(?)
வலைப்பதிவர்கள் தான் என்றால் மிகையாகாது தானே!/// உயிர்ச்சேதம் வந்தால் சங்கம் பொறுப்பு ஏற்காதாம் ஹிஹிஹி

Anonymous said...

/////நிரூபன் said...

வேலைப் பளு என்றாலும் சனி ஞாயிறுகளில் Draft இல் எழுதி வைத்துப் பதிவுகளைப் போடலாம் தானே?/// நீங்க ஒரு ஐடியா மணி பாஸ்....

நிரூபன் said...

I had the same problem sako. I think some thing wrong with google. What you can do, just go to the dashboard. Click on the comments menu. Go to the spam folder. Then select all comments. After that publish.

பாலா said...

இது ஒரு சீசன் மாதிரி. சில காலங்களில் இலங்கை பதிவர்கள் என்றில்லை எல்லா பதிவர்களுமே ஓய்வெடுக்க போய் விடுவார்கள். இது தற்காலிக வறட்சிதான். கவலைப்படாதீர்கள்.

நிரூபன் said...

சகோ, கூகிள் ப்ளாக்கரில் ஏதோ பிரச்சினை சகோ,
Spam பெட்டியினுள் எல்லாம் கமெண்டும் போய் விட்டது சகோ, நான் சொன்ன மாதிரி நீங்க போய் எடுத்து போடுங்க சகோ.

கவி அழகன் said...

இந்திய சனைதொகைக்கும் இலங்கை சனத்தொகைக்கும் சதவீதப்படி எண்ணிக்கை சரியா இருந்தாலும்
active இல்லை என்பது உண்மைதான்

தனிமரம் said...

நீங்கள் சொல்வது உண்மைதான் சிவா இப்போது எல்லாம் பதிவு குறைவே!முன்னர் மாத்தளையில் இருந்து ஒருவர் அதிகமான பதிவு செய்தார் சமூக விழிப்புனர்வு விசயங்கள்,மற்றவர் கருப்பி இவர் ஆண்பதிவர் தலை கானாபிரபாவை யாழில் சந்தித்தவர் இதை பிரபாவின் உலாத்தல்பதிவில் கானமுடியும்,அவருக்கும் வேலைப்பளுவா?இன்னொருவர் மாவனல்ல செரீப்,வடலியூரான் என பலர் கானாமல்போனவர்கள் பட்டியல் நீளம் எனக்கும் வேளை பிறகு ஒருபட்டியல் தாரன் நிரூபன் ஊடாக!

Unknown said...

வேலைப்பளுவுதான் பெரும் பிரச்சனை அநேக பதிவர்களுக்கு, இருந்தாலும் தங்கள் ஆதங்கம் நியாமானது.

தர்ஷன் said...

try பண்றேன் பொஸ்

தனிமரம் said...

மு.மயூரன் அதிகம் எழுதினார் இப்போது நாடுகடந்து போய்விட்டாரா சிவா!

Anonymous said...

www.pirabuwin.com paarunga

inku ovvoru naalum pathivu poodukiraar

ஆகுலன் said...

அண்ணா அடிக்கடி பதிவு எழுத கூடியவர்கள் மிக சிறந்த எழுத்து ஆற்றலஉள்ளவர்கள் தான்.
(அனால் எழுதாதவர்கள் எல்லாம் எழுத்து ஆற்றல் இல்லாதவர்கள் இல்லை)

Kiruthigan said...

பதிவர்களா..? அப்படின்னா..?

Related Posts Plugin for WordPress, Blogger...