Tuesday, April 26, 2011

யாழ்ப்பாணத்தில் தொடர் கொலைகள்!!-பின்னணியில் யார்??



அண்மைக் காலமாக யாழ் மண்ணில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகிறமை அனைவரும்
செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
ஆனால் அவை தற்கொலையா இல்லை கொலையா என்பது யாருக்குமே தெரியாதது.

கடந்த வாரம் கொழும்பு பல்கலை முகாமைத்துவபீட மாணவன் யாழ்ப்பாணத்தில் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை என்று செய்தி..

அதே போல யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை என்று இன்னொரு செய்தி..

நேற்று பார்த்தால் எனது பாடசாலையை சேர்ந்த(யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி)மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலையாம்!
வர்த்தகத்துறையில் கல்வி பயிலும் ரவிந்திரன் பபிசன் (18 வயது) என்ற மாணவனே இன்று காலை அவனது வீட்டில் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
என்ன தான் நடக்கிறது அங்கே??

இந்த தற்(கொலைகளின்) பின்னணியில் "யாரோ" இருப்பதாக அனைவரும் சந்தேகப்படுகிறனர்.
ஆனால் என்ன பண்ண?நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகவா இருக்கிறது??
அதுவும் யாழ்ப்பாணத்தில்??
குறித்த பெண் ஆசிரியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்று
வைத்தியசாலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்துக்கல்லூரி ஆசிரியையான இருபத்தேழு வயதுடைய செல்வராசா அனுஷா என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வீட்டில் தனியாக இருந்த வேளையிலேயே இந்த சமயத்திலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் ஆசிரியை

வீட்டுக்கு பக்கத்தில் இராணுவக் காவலரண் ஒன்று இருப்பதாகவும்,இராணுவத்தினரே இதை பண்ணி இருக்க கூடும் என்று
உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.யாழில் இராணுவத்தினரை மீறி ஈ காக்கா அசைய முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம்.
ஆனால் என்ன பயன்??

நேற்று தூக்கிட்டு இறந்த மாணவன் பபிசன்

படிக்கும் மாணவர்கள் தற்கொலைகளின் பின்னணி என்ன?
பெரும்பாலும் அவை கொலைகளாகவே இருக்கக்கூடும் என்று மக்கள் சந்தேகப்படுவது கண்கூடு!
எதை பற்றியும் வெளியே கதைக்க பயம்.அவ்வாறு இருக்கையில் எழுதுவது அதை விட பயம்.
சண்டை நடைபெற்ற காலங்களில் யாழில் இவ்வாறான தற்கொலைகள் நடைபெற்றதே இல்லை..
இப்போது சமாதானம் என்று பெரும் பேச்சு..சண்டை தான் இல்லை ஆனால் கொலைகள் தாராளம்!!

இதேவேளை,இது சம்பந்தமாக,யாழில் நடைபெறும் வன்செயல்களுக்கு யார் காரணம் என்று ஒரு செய்தியை "லங்கா கார்டியன்'இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் இவை யாவற்றுக்கும் பின்னணியில் இலங்கை இரா****'இன்புல******துறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது..
இது அவங்கட செய்தி மட்டுமே..எனது அல்ல!!உண்மை பொய் எனக்கு தெரியாது என்பதை பழனி முருகன் மேல சத்தியம் செய்து கூறிக்கொள்கிறேன்!!!

சில விடயங்கள் பற்றி எழுத கூடாது..ஆனால் எழுதாமல் இருக்க மனம் கேட்பதில்லை...
அடிக்க அடிக்க வாங்கிட்டு இருக்க நாம ஒண்ணும் வில்லன் பொன்னம்பலம் இல்லையே!!
கேட்பதற்கு ஆட்களில்லாவிட்டால் ஆடுபவர்களுக்கு வசதி தானே!!

Post Comment

13 comments:

கவி அழகன் said...

மிக கொடூரமான காலம் யாழ்பாணத்தில் சமுக பிரச்சனையை எடுத்து good

சி.பி.செந்தில்குமார் said...

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைத்தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?

பாலா said...

நான் வெளியூருங்க. உங்க ஊர் விவரம் அவ்வளவா தெரியாது.

Mathuran said...

யாருக்கும் வராத துணிச்சல். பாராட்டுக்கள்

Anonymous said...

இதெற்கெல்லாம் என்று முற்றுப்புள்ளி விழுமோ

Anonymous said...

////ஆசிரியையான இருபத்தேழு வயதுடைய செல்வராசா அனுஷா என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வீட்டில் தனியாக இருந்த வேளையிலேயே இந்த சமயத்திலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது./// பாஸ் இவ எங்க பக்கத்து ஊர் தான்........

Anonymous said...

///சில விடயங்கள் பற்றி எழுத கூடாது..ஆனால் எழுதாமல் இருக்க மனம் கேட்பதில்லை...
அடிக்க அடிக்க வாங்கிட்டு இருக்க நாம ஒண்ணும் வில்லன் பொன்னம்பலம் இல்லையே!!
கேட்பதற்கு ஆட்களில்லாவிட்டால் ஆடுபவர்களுக்கு வசதி தானே!!///..........((((...........வேற என்னத்த சொல்ல (

MANO நாஞ்சில் மனோ said...

//இப்போது சமாதானம் என்று பெரும் பேச்சு..சண்டை தான் இல்லை ஆனால் கொலைகள் தாராளம்!!//

ஐயோ ஆண்டவா என்ன அநியாயம் இது.....
மனசு வலிக்குதுய்யா....

நிருஜன் said...

எல்லாளன்படை, மக்கள்படை என்ற பல பினாமி படைகளின் அத்திவாரமே இது. தமிழலை கொல்ல தமிழால் இடப்பட்டவற்றின் பிரதிபலிப்பு தான் இது!

shanmugavel said...

என்றுதான் விடியும்?

கார்த்தி said...

தம்பி ராசா பாத்து எழுதப்பு!!! எல்லா உண்மையையும் உடனே வெளில சொல்லேலாது கவனம்!

நிரூபன் said...

சகோ, ஊடகச் சுதந்திரம் இல்லா நம் ஊரில் உண்மையினை ஓரளவிற்கு அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். இவை எல்லாவற்றிற்கும் சட்டித் தொப்பிகளின் பின்னணி இருக்கிறது என்பதை யாராலும் மறைக்க முடியாது.

ஆனாலும் வாய் திறந்தால், மறு நாள் என் வீட்டிலும் தற்கொலை தொடரும் எனும் பயம் தான்.

தனிமரம் said...

இதுதான் வடக்கின் வசந்தம் போலும் !என்ன செய்யமுடியும் பானையில் இருந்து அடுப்பில் நம்நிலை!

Related Posts Plugin for WordPress, Blogger...