Friday, September 2, 2011

மங்காத்தா-சுட்ட வடை!!

ஒரு ஊர்ல மங்காத்தான்னு ஒரு பாட்டி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்(லேட்டஸ்ட் நியூஸ்'சு,உங்க பேரப் பிள்ளையளுக்கு சொல்லேக்க இந்த பிட்'டையும் சேர்த்துப் போடுங்க).
அந்த சண்டைக்கான காரணம் என்னவெனில் வழமையாக அந்த மங்காத்தா பாட்டி வடை சுட்டு விற்பதில் கெட்டிக்காரி.ஏரியா'வே பாட்டியின் வடையின் ஓட்டையில் சிக்குப் பட்டிருக்கும்.(இதில இருந்தே தெரியணும் பாட்டி உளுந்து வடை தான் சுட்டு வித்து வந்தவா எண்டு).
இப்பிடித்தான் ஒரு தடவ "மெட்ராஸ் ஐ" வந்தப்போ பாட்டிக்கு மட்டும் வரல..ஏனென்டா அந்த சமயம் பாட்டி அத்திப்பட்டி கிராமத்தில ஒரு பங்சனுக்கு வடை சுட போயிருச்சு.(பாட்டிட வடை ஒத்து வராமத் தான் அத்திப் பட்டி கிராமமே அழிஞ்சது யாருக்குமே தெரியாது..நீங்க சிட்டிசன்'ல பாத்ததெல்லாம் சுத்தப் பொய்)

பாட்டி ஸ்பெஷல் வடை ஒண்ணு சுடும்.அதிண்ட ஸ்பெஷல் என்னெண்டா சாதா வடையோட ஒரு வாழைப்பழமும் சேர்த்து விக்கிறது தான்.அந்த சாப்பாட்டில மயங்கினான்களோ இல்லையோ தின்னு போட்ட வாழைப்பழ தோல்'ல வழுக்கி விழுந்தவங்க ஏராளம் பேர்!!
அவ்வாறு வழுக்கி விழுந்தவங்களுக்கு பாட்டி வெள்ள நிவாரண நிதியில இருந்து நஷ்ட ஈடு குடுப்பாங்க.

பாட்டிக்கு தினசரி வருமானமே எக்கச்சக்கம்..அதால புருஷன் வேலை செய்யனுமேண்டு தேவை இருக்கல.
அதால தினசரி நாட்டுச் சரக்கு அடிப்பதும் நடு ரோட்'டில படுப்பதும் தான் தலையாய கடமை எண்டு வாழ்ந்து வந்தார்..மங்காத்தா படம் வந்த போது பாட்டியின் ஏரியா ரைட்ஸ் பாட்டி வசம் தான் இருந்தது!மங்காத்தா டா'ன்னு சொல்லி சொல்லி வடையை தூக்கி தூக்கி தாச்சிக்குள் போடும் ஸ்டைலே அழகுதான்!


இப்பிடித்தான் ஒரு நாள் மரத்தடி'ல பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த பாட்டியின் கணவர் சின்னப்பு(பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!),பசி'ல பாட்டிட்ட வந்து..
"எனக்கொரு பருப்பு வடை சுட்டுத் தாடி.."
அப்பிடீன்னு கேட்டாரு கோபமாக..(நாட்டுச் சரக்கை யாரோ மாற்றி வெறும் தண்ணியை கொடுத்து விட்டார்களாம்).

உங்களுக்கு முதலே தெரிந்தது போல உளுந்து வடை மட்டுமே சுட்டு வந்த பாட்டியிடம் பருப்பு வடை சுட்டுத் தர சொன்னால் பாவம் பாட்டி பருப்புக்கு எங்கே போகும்?(நல்ல நேரம் நான் பக்கத்தில இல்ல!)
"பருப்பு நா சின்னப்பு ("நா" என்றால் சிங்கள மொழியில் இல்லை என்று அர்த்தம்)என்றாள் பாட்டி..


(இவர் தான் மிஸ்டர் சின்னப்பு,One and only husband)

வந்ததே கோபம் சின்னப்புவுக்கு.யாரப் பார்த்து நாய்,பருப்பு என்கிறாய் கழுதை என்று கத்திக்கொண்டு பாட்டிய அடிக்க ஓடி வந்த சின்னப்பு அடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த விறகு தடக்க பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் விழுந்தார் தடுமாறி.(பாட்டி ஏரியா'விலேயே பெரிய பேமஸ் எண்டதால பிஸ்னெஸ்'சும் அதிகம்.அதனால் தான் பெரிய வாணலி).அதுவே சின்னப்புவின் கடைசி பாய்ச்சலாகவும் மாறிவிட்டிருந்தது.

அதன் பிறகு தன்னந்தனியாக வடை சுடும் தொழிலை திறம்பட செய்து வந்தாள் அந்தப் பாட்டி.பிள்ளையள் ரெண்டு பேர் கனடாவில இருந்தாலும் பாட்டியின் கனடாவுக்கான வடை எக்ஸ்போர்ட்(ஏற்றுமதி) எண்ணத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இப்படித் தான் ஒரு நாள் வழமை போல வடை சுடும் போது காக்கா(அப்பாடி இப்பவாச்சும் மேட்டர்'ருக்கு வந்தானே!) ஒன்னு வந்து மரத்தில் உக்கார்ந்து பாட்டியிண்ட தலை மேல ஆயிப் போயிருச்சு!(என்ன ஆயி எண்டு வடை சாப்பிட வந்த பயல் ஒருத்தன் மணந்து பார்த்து காக்கா ஆயி என கண்டு பிடித்தது வேறு கதை)


(ஆயிப் போன காக்கா)

பாட்டிக்கு சுர்ர்ர்ர் எண்டு கோபம் வந்தது..(ஸ்டார்ட் மியூசிக்).காக்காவ பார்த்து என்ன தான் வேணும் உனக்கு வேற இடம் இல்லாம இங்க வந்து ஆயி போடுறா எண்டு பாட்டி கத்திக் கேக்க பயந்து போன காக்கா ஒன்ஸ்மோர் கேட்டது..!!
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..


ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்.............மறுபடியும் முதல்லேருந்தா!!

குறிப்பு:இந்த வடை சுட்ட கதைக்கும் மங்காத்தா ரிலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!


Post Comment

40 comments:

ஜீ... said...

இப்போ ஓட்டு! நாளைக்கு வாறேன்! :-)

ஜீ... said...

ஓ! எனக்குத்தான் வடையா?

சென்னை பித்தன் said...

ஆளை விடுங்க!ஓட்டுபோட்டுவிட்டு ஒரே ஓட்டம்!

மதுரன் said...

என்ன பாஸ் .. மீள்பதிவா?

செங்கோவி said...

நல்ல கற்பனை......சூப்பர் சிவா.

செங்கோவி said...

கடுப்பில் சுட்டாலும் வடை நல்ல டேஸ்ட்!

மாய உலகம் said...

வடை சுவை வாழ்த்துக்கள்... தமிழ் மணம்

Anonymous said...

இது மசாலா வடை..சிவா..

Yoga.s.FR said...

கற்பனையாம்,அதிலும் நல்ல கற்பனை என்று பாராட்டு வேறு!ஆண்டவா!அளவுக்கு மிஞ்சி ........................!

Yoga.s.FR said...

என்னோட பேவரிட் அக்ரர் "தல"ய கிண்டல் பண்ணினா!!!!!!!!!!!!கிரீஸ்!

Yoga.s.FR said...

நல்ல வேளை,"கடுப்பில்" சுட்டார்!"தடுப்பில்" சுட்டிருந்தால்?!?!?!?!

Yoga.s.FR said...

மந்திரகாரன் - மங்காத்தா!... முதல் நாளில் 16 கோடி தமிழ்நாட்டில்!

shanmugavel said...

சுவையான வடை

கோகுல் said...

அடுப்பில் சுட்டா ஆறிடும் கடுப்பில சுட்டா ஆறாதுன்னு மைந்தன் சிவாவே சொல்லிட்டார்!மைந்தன் சிவாவா மலேசியா வாசுதேவனா?ஐயோ பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டீங்க!

Nesan said...

என்னையா இப்படி உள்குத்து அதுவும் தலபடத்தைப் போய் இருய்யா பாட்டியின் போத்தியை விட்டு தும்புத்தடி அபிசேகம் செய்ய வைகின்றன்!

நிரூபன் said...

மச்சி..உனக்கு உச்சியிலை சனி என்று யாராச்சும் சொன்னவங்களா?

நிரூபன் said...

தல படத்தை வைச்சு மரண மொக்கையெல்லே போடுறீங்க.

அவ்........................

நிரூபன் said...

மங்காத்தா பாட்டி வடை சுட்ட கதையினை ரசித்தேன் பாஸ்.

கார்த்தி said...

பொறாமை பொறாமை!!

விக்கியுலகம் said...

பய புள்ள என்ன கடுப்புல இருக்கோ தெரியல...இப்படி கொன்னுபுடுச்சே ஹிஹி!

துஷ்யந்தன் said...

ஹீ ஹீ, செம குசும்பு பாஸ் உங்களுக்கு,

ஹும்ம்.. தலையை எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தலாம் என்று ரெம்பத்தான் யோசிக்குறீங்க போல, ஆனாலும் உங்க கற்பனை திறன் பிரமாதம்.

துஷ்யந்தன் said...

அடிகடி இப்படி பாட்டி வடை சுட்ட கதை சொல்லுங்க பாஸ் ஹீ ஹீ

துஷ்யந்தன் said...

அடுத்து வேலாயுதம் சுட்ட வடை எப்போ வரும் பாஸ்

KANA VARO said...

மங்காத்தா-சுட்ட வடை!!//

வந்துட்டாண்டா என் சிங்க குட்டி

KANA VARO said...

துஷ்யந்தன் said...
அடுத்து வேலாயுதம் சுட்ட வடை எப்போ வரும் பாஸ்//

அது வரும் ஆனா வராது

ஆகுலன் said...

கொஞ்சநாளா பதிவு பக்கம் ஒரே சீரியஸ்....இது நல்லா இருக்குதே...

சி.பி.செந்தில்குமார் said...

என்ன ஒரு மைனஸ் ஒட்டு கூட விழலை?

மருதமூரான். said...

யோவ்.......!

நீ திருந்தவே மாட்டியா? ஏன் இந்த கொலவெறி. அதுவும் பாட்டி மீது.

ஹிஹிஹி. ரொம்பவும் சிரித்தேன். ஆனாலும், உங்களின் மனதில் அஜித்தின் மீதிருக்கும் கடுப்பு பெருகி வழிவதை காண்கிறேன். ஹிஹிஹி.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல சுட்டிங்க வடைய..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று என் வலையில்

விஜய் vs அஜித் யார் புத்திசாலி?

M.R said...

ஹி ஹி கத நல்லாவே இருக்கு

koodal bala said...

இதெல்லாம் ரொம்ப நக்கல் மாப்ள ...

மைந்தன் சிவா said...

சி பி வாக்கு பொய்க்க கூடாதுன்னு எவனோ ஒருத்தன் மைனஸ் ஒட்டு குத்தி இருக்கான்!!

மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
காட்டான் said...

பாட்டியின் வடை கதை அருமை மாப்பிள பாட்டிக்கு கோவம் வந்தாளும் இப்ப புது ஓட்டல் திறந்து மணியடிச்சு சோறு கொடுக்கிறாவே.. அவாவின் கடை செம கலக்சனாமே..? 2மாசமா மாப்பிளைய எண்ணை தாச்சியல இவங்கதான் தள்ளிவிட்டுட்டாங்கோன்னு சந்தேக கேசில மாமியார் வீட்டில இருந்து தன்னை நிரபராதின்னு நிரூபிச்சிடடு இப்பதான்  வந்தவா.. மணியடிச்சு மாமியாரு வீட்டில சோத்த சாப்பிட்டதால்தானோ.. புதுக்கடைக்கு மணியடிச்சு வைச்சிருக்கிறாரு...!? ஹி ஹி ஹி வேலைக்கு போகிறேன் ஓட்டு வீட்ட வந்து..

காட்டான் said...

சிபியிண்ட கொமொண்ட எங்கேயோ பாத்த ஞாபகம்..ஹி ஹி ஹி ஏதோ நம்மளால முடிஞ்ச உதவி..

காட்டான் said...

மாப்பிள மைனஸ் ஓட்டு போடுறதுக்கு அப்பிடி என்னையா எழுதீட்ட.. அப்பிடி இல்லாட்டி நாந்தான் வடிவா விளங்காம விட்டுட்டனோ.. ஆனா ஒண்டுக்கு ரெண்டுதடவ படிச்சு பாத்திட்டன் என்ர அறிவுக்கு இவ்வளவுந்தான் விளங்கீச்சு.. இதுல வேற ஓட்ட போட்டுட்டன்...ஹிஹிஹி

K.s.s.Rajh said...

இப்பதான் மச்சி மங்காத்தவை பார்த்துட்டு வாரன்(மங்காத்தா படம்)அதில உள்ள மொக்கையைவிட உங்க மொக்கைக்கு சிரிக்க கூடிய மாதிரி இருக்கு.....ஹி.ஹி.ஹி.ஹி

MANO நாஞ்சில் மனோ said...

ஐயையோ மைனஸ் ஓட்டு, ஓடுடா மனோ ஓடு.....

kobiraj said...

மங்காத்தா பிய்சுகிட்டு ஓடுதாம் .3 வருசத்துக்கு ஒன்னு வந்தால் ஓடாதா பின்ன

Related Posts Plugin for WordPress, Blogger...