Wednesday, March 9, 2011

பயந்திட்டார் மைந்தன் சிவா!!


கருத்து சுதந்திரம் பற்றி விக்கிப்பீடியா பின்வருமாறு விளக்கம் தருகிறது.

"எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம்,சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம்,அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்.

பேச்சுச் சுதந்திரம் என்னும் தொடர் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும்".


ஒண்ணுமில்லைங்க சும்மா சொல்லணும் போல இருந்திச்சு அது தான்...

=======================================================================


விக்கிலீக்ஸ் விக்கிலீக்ஸ்'னு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்த ஜூலியன் அசஞ் பற்றி இப்போது எவராவது கவலைப்படுகிறார்களா??

ஒவ்வொரு கேபிளும் ஒவ்வொரு நாடுகளுக்கெதிராக அம்பலப்படுத்தும் போது உலகமே ஹீரோவாக தூக்கி வைத்து கொண்டாடியது..

இன்று எட்டுக் கம்பிக்குள் முடங்கி கிடக்கும் போது உலகம் தன் வேலையை பார்க்கிறது..

உலகத்தை சொல்லிக் குற்றமில்லை..அவர்களுக்கு ஆகவேண்டியது ஆகிவிட்டது தானே..

வேண்டுமென்றால் இனி வரும் காலங்களில் பொது அறிவு போட்டிகளில் "விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் யார்??"அப்பிடீன்னு ஒரு கேள்வி கேட்பாங்க!

கருத்து சுதந்திரம் உலகத்திலேயே இல்லை போலும்..இல்லாவிட்டால் இவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?பாலியல் குற்றசாட்டு என்பதை ஒரு சாட்டாக வைத்து கைது செய்தனர்..பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இவ்வாறு எத்தனை பிரபல்யமான புகார்களில் சிக்கினார்..ஆனால் ??அவர் சனாதிபதி..அசஞ் குற்றவாளி!!


==========================================================================

மூன்று தொடர் வெற்றிகளை ருசித்து நேற்று நான்காவது போட்டியில் நியூசிலாந்தை பந்தாடலாம்னு கண்டி'ல விளையாடப்போன பாக்கிஸ்தான் அணிக்கு முதல் நாற்பத்தைந்து ஓவர்களும் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது..

தனது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய ரோஸ் டெய்லர் வழமைக்கு மாறாக தடுமாறிக்கொண்டிருந்தார் ஆரம்பத்தில்.எக்ஸ்பிரஸ் அக்தாரின் ஒரே ஓவரில் இரண்டு டிப் கேட்ச்களை வாரி வழங்கினார்..ஆனால் எந்த சனி உச்சத்தில் நின்னிச்சோ தெரியாது கம்ரான் அக்மலுக்கு.இரண்டு பிடிகளையும் நழுவ விட மனிதர் இறுதி ஐந்து ஓவரில் காட்டினார் பாருங்கள் வான வேடிக்கை!!!

பாகிஸ்தான் வீரர்களை வானத்தில் தான் பீல்டிங் செட்அப் பண்ணி இருக்க வேண்டும் அப்ரிடி!!இறுதி ஐந்து ஓவரில் நூறு ஓட்டங்கள்!!

டெய்லர் 131 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது!!அதே அதிர்ச்சியோடு துடுப்பாடப் போன பாகிஸ்தான் இறுதிவரை அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தோல்வியடைந்தது!!அடுத்ததாக அவுஸ்திரேலியாவுடனும் பாகிஸ்தான் தோற்க்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது!

==========================================================================

அமெரிக்க நகரான "வேர்மொன்ட்"இல் பனிப்பொழிவு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மிக மோசமாக காணப்படுகிறதாம்!

30inches பனி வீதிகள் வீட்டுக்கூரைகள் என படர்ந்துள்ளது.மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீதிகளுக்கு வரவேண்டாமாம் என்று!பெர்லிங்க்டன் விமான நிலையம் உட்பட பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன.அந்த ஏரியா வரலாற்றிலேயே இது ஐந்தாவது மிகப் பெரிய பணிப்போளிவாக கருதப்படுகிறதாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!

ஆனால் அழகாக உள்ளது பார்ப்பதற்கு வெள்ளை வெளேர்னு!!===========================================================================

தெலுங்கில் ஹிட்டான வேதம் திரைப்படம் வானம் என்ற பெயரில் தமிழில் தயாராகி சிம்பு அனுஷ்கா பரத் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அதன் விளம்பர படங்களில் சிம்புவை முன்னிலைப்படுத்தியே போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருப்பதால் பரத் கடுப்பாகி இருப்பதாக நேற்று போன் போட்டு அழுதார்.ஒரு முன்னணி நாயகன் பரத்தை துணை நடிகர் ரேஞ்சுக்கு வைத்து தான் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன!!

இந்தப் படத்தில் தான் எதிர்கால சந்ததியினரின் பாடப் புத்தகங்களில் இடம்பெறப்போகும் அர்த்தமுள்ள பாடலான "எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் கைல கிடைச்சான் செத்தான் செத்தான்"எனும் பாடல் இருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்!!அஜித் ரசிகரான சிம்பு மங்காத்தா மே முதலாம் தேதி வர இருப்பதால்,அதனுடன் போட்டிக்கு ரிலீஸ் செய்யாமல் அதற்க்கு முன்னர் அல்லது பின்னர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.யுவனின் மியூசிக்கில் ஒரே ஒரு பாடலையே வெளியிட்டிருந்தனர்.
தலைப்பு சும்மா லுல்லுல்லூ ......

Post Comment

19 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

I..

வேடந்தாங்கல் - கருன் said...

நீங்க வரலன்னாக்கூட நாங்க வருவோமில்ல..

வேடந்தாங்கல் - கருன் said...

தமிழ்10 என்னாச்சு..

Chitra said...

நல்ல தொகுப்பு....

மைந்தன் சிவா said...

//வேடந்தாங்கல் - கருன் said...
நீங்க வரலன்னாக்கூட நாங்க வருவோமில்ல.//

வாங்க வாங்க...

கார்த்தி said...

ஹி ஹி பயந்திட்டாரா பயந்திட்டாரா பயந்திட்டாரா!!!

“நிலவின்” ஜனகன் said...

அட அட அட......தலைப்பு இப்படியா......


வானம் அறிமுகம் சூப்பர்....

ரஹீம் கஸாலி said...

என்னப்பா நடந்துச்சு.....கருத்து சுதந்திரம் அது...இதுன்னு...மண்டை காயுது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒண்ணுமில்லைங்க சும்மா சொல்லணும் போல இருந்திச்சு அது தான்...

இல்லையே லாஜிக் உதைக்குதே! என்னமோ நடந்திரிச்சு! என்ன மேட்டருன்னு அப்புறமா சொல்லுங்க! ( அடப்பாவிகளா ஒரு மனுஷனுக்கு ஒரு கஷ்டம் வந்தா போதுமே! அதையே நோண்டிக்கிட்டு................! )

பி.நந்தகுமார் said...

மைந்தன் சிவா நன்று http://tamil444news.blogspot.com

Anonymous said...

உண்மையை உரக்க சொன்னா.................

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்கு மக்கா...

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், மனித உணர்வுகளுக்கும், மனிதாபிமானத்திற்கும் மதிப்பில்லாத வேற்றுக் கிரகத்தில் வாழும் மனிதர்கள் யார் தெரியுமா? இத்தகைய உலகத்தில் ஊடகச் சுதந்திரமோ, கருத்துச் சுதந்திரமோ இருக்காது. ஆகவே கவலையை விடுங்கள். உங்கள் வழமையான பதிவுகளை எங்களோடு தாருங்கள். மைந்தன் பயந்திட்டார் என யாரும் நினைப்பது நகைப்பிற்கிடமானது.

ஒரு சின்ன கதை. நரக லோகத்த்தில் மனிதர்களை நரகத்திற்கு வந்திருக்கிறார்கள், இறுதியில் இவர்கள் இறக்கத்தானே போகிறார்கள் என்று தெரிந்தும் சித்திரவதை செய்து, அணு அணுவாக ரசித்தே கொலை செய்வார்களாம். இதிலை இன்னொரு விடயம் நாயை நடு றோட்டிலை வைச்சு கொலை பண்ணுவது போல நம்மாட்களிடம் ஒருத்தன் மாட்டினால் போதும், அப்படியே நொங்கெடுத்து விடுவார்கள். அத்தகைய ஒரு உலகில் ஒரு சின்ன எதிர்க் கருத்து வாயைத் திறந்து சொன்னால் போதும்?
இதோ நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் என புறப்பட்டு விடுவார்கள்.
ஆகவே இங்கே மைந்தன் பயப்படவில்லை, மாறாக தவறு செய்யாதவர்களே தண்டிக்கப்படும் உலகில் ஒரு சின்ன எதிர்க் கருத்தைச் சொல்லும் நபரையா விட்டு வைப்பார்கள்? இதிலை வேறை தங்களுக்கு ஊடகச் சுதந்திரம் இல்லை என சி(ச)த்திர குப்தர்கள் புலம்பல். ஒரு கருத்தையே வெளி வராமல், எதிர்க் கருத்தை, விமர்சனத்தை வெளியே சொல்ல விடாமல் தடுக்கும் நீங்கள் எல்லாம் உண்மையை சொல்லும் சுயாதீன சுதந்திர ஊடகமோ?

♔ம.தி.சுதா♔ said...

மாப்புள தெளிவா விளங்கதடி நாங்களும் ரீடரில் வாசிச்சமல்ல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

பாலா said...

தமிழ்நாடு மட்டுமில்லை. எல்லா இடத்திலுமே உண்மை பேசினால் இந்த நிலைதான் போலிருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில்லயே பீதியை கிளப்பும் பதிவர்களில் சிவாவும் இடம் பிடிச்சுட்டாப்லயே .. ஜாக்கிரதையா இருந்துக்கனும்.# என் கிட்டே நானே சொல்லிக்கறேன். ஹி ஹி

விக்கி உலகம் said...

நடத்துங்க நண்பா!

suthan said...

go mynthan anna go...................................ippadaithan irukanum...................

BOND 007 said...

நன்றி வணக்கம் !!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...