Friday, March 11, 2011

இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!


இலியானா ஸ்பெசல் மொக்ஸை பார்க்க வந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களே வணக்கம்...
வாங்க போகலாம்...

ஆக்சுவலி சினிமா பாடல்களுக்கான மொக்ஸ் தான் போல,..எனக்கே தெரியல பாத்திட்டு நீங்களே சொல்லுங்க பாஸ்..

கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் ரெட் ரெட் ரெட்...
கண்ணை கசக்குறது சூரியன் இல்லடா உண்ட கை தாண்டா கசுமாலம்..

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...
ஏன் டா எரும மாடா பயர் சர்வீஸ் பக்கத்தி வீடா??

கோடான கோடி நாம் குளிப்போம் விளையாடி...
அவனவன் குடிக்கவே தண்ணி இல்லாம கெடக்குறான்...உங்களுக்கு தண்ணிக்க விளையாட்டு கேக்குதோ??

மனைவி:பாலும் பலமும் கைகளில் ஏந்தி ...
கணவன்:ஏன்டி நாம என்ன அபிசேகம் பண்ண கோயிலுக்கா போறம்??மொத ராத்திரில கடுப்ப கெளப்பிக்கிட்டு...அடச்சீ கம்னு கெட..

காதலன்:கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை..
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை...
காதலி :அப்ப ஒண்ணுமே இல்லாத சப்ப பிகர்னு சொல்றீங்க??

காதலன்:மலரே...மௌனமா...
காதலி:எங்க என்னை கதைக்க விடுறாய்??நான் ஸ்டாப்'பா நீ தானே கதைச்சிட்டிருக்காய்..!!

மனைவி:இன்று முதல் இரவு...இன்று முதல் இரவு....
கணவன்:உன்ன கட்டீட்டன்லே..இன்னைக்கு தொடக்கம் எண்ட வாழ்க்கை இரவு தானடி!!

அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி??
அதுக்கு ஏன்டா மாமியார பஞ்சாயத்துக்கு இழுக்கிறாய்??

ஒத்தக்கண்ணால உன்னை பார்த்தேனடி....
ஏன் மத்தக் எங்க கண் மங்காத்தா பாக்க போச்சுதா??

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு...
எதுவா இருந்தாலும் மெதுவா பேசுடா தூக்கி உள்ள போட்டிடபோறாங்க!!

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை..
அது தான் அஞ்சாம் ஆண்டிலேயே தெரிஞ்ச விசயமேடா...இப்ப என்னை புதுசா??


யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ....
அரை கிலோ வெங்காயம் வாங்கி இருப்பானோ சொந்தக் காசில..!!

தீ இல்லை..திரி இல்லை...ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
அவ்வளவு கஞ்சப் பயலாடா நீயி??

என் இதையம் உடைத்தாய் நொருங்கவே....
ஏன் டா அந்த கருமத்த கொண்டு போய் CD'ல காப்பி பண்ணி வைச்சிருந்தியா??

விழி மூடி ஜோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே ...
அவளால அவ்வளவு தொல்லையாடா??

இன்னிக்கு இலியானா மொக்ஸ் எப்பிடி இருந்திச்சு??நாளைக்கு இன்னொரு நடிகை ஸ்பெசல் மொக்ஸ் பார்க்கலாம் வாங்க....

Post Comment

24 comments:

மருதமூரான். said...

இவ்வளவு காத்திரமான நல்ல பதிவுகளை எழுதிவரும் மைந்தனை ஊக்கப்படுத்தும் நோக்கில் இனிமேல் நான் பதிவு எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். hehehehehehe:-)

சி.பி.செந்தில்குமார் said...

>>>இலியானா ஸ்பெசல் மொக்ஸை பார்க்க வந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களே வணக்கம்..

டபுள் மீனிங்க் டக்ளஸ் வாழ்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>அப்ப ஒண்ணுமே இல்லாத சப்ப பிகர்னு சொல்றீங்க??

அகில இந்திய நல்ல ஃபிகர்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>
விழி மூடி ஜோசித்தால்


யோசித்தால்

மைந்தன் சிவா said...

//மருதமூரான். said...
இவ்வளவு காத்திரமான நல்ல பதிவுகளை எழுதிவரும் மைந்தனை ஊக்கப்படுத்தும் நோக்கில் இனிமேல் நான் பதிவு எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். hehehehehehe:-)//

ஹிஹி ஐயோ பாஸ்...அப்பிடி எல்லாம் என்னுடைய திறமைகள பாத்து நீங்க எழுதுறத நிறுத்த கூடாது...

உங்களுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கும்...அத வெளிக்கொண்டாங்க...##பிதத்துவம் நம்பர் முன்னூற்றி மூணு!!

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>இலியானா ஸ்பெசல் மொக்ஸை பார்க்க வந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களே வணக்கம்..

டபுள் மீனிங்க் டக்ளஸ் வாழ்க.. ஹி ஹி//

இதென்ன புதுசா இருக்கு??

நான் சும்மா தானே போட்டேன்??

suthan said...

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்லை..
அது தான் (அஞ்சாம் ஆண்டிலேயே) தெரிஞ்ச விசயமேடா...இப்ப என்னை புதுசா??

இந்த வரிக்கும் உங்களுக்கும் எதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றுகிறது ............................................அருமையான பதிவுகளை அள்ளித்தரும் பிரபல பதிவர் மைந்தன் பாஸ் வாழ்க வாழ்க..............

Ashwin-WIN said...

//இவ்வளவு காத்திரமான நல்ல பதிவுகளை எழுதிவரும் மைந்தனை ஊக்கப்படுத்தும் நோக்கில் இனிமேல் நான் பதிவு எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். hehehehehehe:-)//
நானும் உங்கவளிலையே முடிவேடுத்திட்டேன்....
சூப்பர் மைந்தா...

விக்கி உலகம் said...

கணடனங்கள் உமக்கு பிடி சாபம் ஹி ஹி!

BOND 007 said...

ஒண்ணுமே புரியல !!!!!!!!!!..........:P
but illeana super fiqure

நா.மணிவண்ணன் said...

இலியானவிர்க்காகவே உமது ப்ளோகில் இனைந்து விட்டேன் ,சூப்பர் பிகருல ,இன்னும் வேற நல்ல ஸ்டில் கிடைக்கலையா ?

அவுங்க தமிழ் படத்துல அவ்வளவா நடிக்க மாட்டேங்கிறாங்க ரொம்ப வருத்தமா இருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா பயங்கர டென்ஷனா இருக்குற மாதிரி தெரியுது....

sothilingam said...

நானும் ஒவ்வொரு நிலைகளில் இருந்து யோசித்து பார்த்தேன் என்டா இது தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமிலாமல் இருகிறதே என்று கடைசி வரைக்கும் என் அறிவிற்கு எட்டவில்லை இறுதியாக சமந்தப்பட்ட பதிவரிட்ட்கு(மைந்தன் சிவா ) போன் பண்ணி கேட்டன் அவரோ சர்வ சாதரணமாக
பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்மந்தமில்லாமல் போடுவது தான் லேட்டஸ்ட் trend என்றார். நான் அப்பிடியே ஷாக் அயீட்டன்

பதிவரின் திறமையோ திறமை!!!!!!!!!!

shanmugavel said...

special moks super.

பாலா said...

மொக்கைகள் அனைத்தும் சூப்பர் பாஸ். இலியானா என் பெவரிட். படங்களும் சூப்பர்.

ரஹீம் கஸாலி said...

present

கோவை நேரம் said...

எங்க ஏரியா பக்கமும் வந்ததுக்கு நன்றி மைந்தன் .....அப்புறம் நீங்க சொன்னது எதுவுமே தெரியாது .பதிவுக்கு புதுசு நான்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதுக்கும் ஒருத்தன் மைனஸ் குத்தியிருக்கான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விழி மூடி ஜோசித்தால் //
எழுத்துபிழை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப நல்லாருக்கு புது முயற்சி இன்னும் மெருகேற்றலாம்

நிரூபன் said...

ஆக்சுவலி சினிமா பாடல்களுக்கான மொக்ஸ் தான் போல,..எனக்கே தெரியல பாத்திட்டு நீங்களே சொல்லுங்க பாஸ்..//

அச்சுவேலி என்பதை மாறி எழுதி விட்டீர்கள் போல இருக்கு பாஸ்:)

நிரூபன் said...

மனைவி:பாலும் பலமும் கைகளில் ஏந்தி ...
கணவன்:ஏன்டி நாம என்ன அபிசேகம் பண்ண கோயிலுக்கா போறம்??மொத ராத்திரில கடுப்ப கெளப்பிக்கிட்டு...அடச்சீ கம்னு கெட..///

ha...ha...

நிரூபன் said...

காதலன்:கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை..
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை...
காதலி :அப்ப ஒண்ணுமே இல்லாத சப்ப பிகர்னு சொல்றீங்க??//

நிரூபன் said...

காதலன்:கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை..
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை...
காதலி :அப்ப ஒண்ணுமே இல்லாத சப்ப பிகர்னு சொல்றீங்க??//

ரசித்தேன். நகைச்சுவைகள் என்பதை விட உங்களின் வித்தியாசமான சிந்தனையில் பிறந்த சிரிப்பு மணிகளின் கோர்வைகளும், பஞ்சுகளும் அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...