Monday, February 28, 2011

காதல் என்ன அம்புட்டு கஷ்டமா?"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!


இன்று உனக்கு புரியவில்லை
புன்னகைக்கின்றாய்..
புரிகின்ற பருவத்தில்
உன் புன்னகைக்கு
புரிதல் இல்லாமல்
புதையப்போகிறேனோ தெரியவில்லை!!


உணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்கிடையேயான
உன்மத்த உத்தம்-காமம்!
மனஸ்தாப மரத்தின்
இரு மனமறியா பிழை தான்
மனம் விட்டுப் பேசா
தவறுகள்!!


நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!

என்னை தனது வலைப்பூவில் அறிமுகம் செய்த "காத்திரப் பதிவர்"ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்!

இவங்களே இப்பிடி அன்பா இருக்கேக்க நம்மளால இருக்க முடியாதா?
சோ,அன்பாலே பிணைக்கப்பட்டிருங்கள்..அன்பாய் இருங்கள்!!
முடிஞ்சா காதலியுங்க..இல்லாட்டி சிரிப்பு போலீஸ் மாதிரி அப்புறம் நாற்பதிலையும் கல்யாணம் நடக்காது!!

Post Comment

32 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போடு முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

>>>>உன்மத உத்தம்-

இப்படி ஒரு வார்த்தை தமிழ்ல இருக்கா? உன்மத்தம் தான் எனக்கு தெரியும்...

சி.பி.செந்தில்குமார் said...

அவரு காத்திரப்பதிவர் இல்லை. திட காத்திரப்பதிவர்... ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>..இல்லாட்டி சிரிப்பு போலீஸ் மாதிரி அப்புறம் நாற்பதிலையும் கல்யாணம் நடக்காது!!

ரமேஷ்க்கு இப்போத்தானே 37 ?

சி.பி.செந்தில்குமார் said...

புரொஃபைல்ல தாடியை தடவிட்டு யோசிச்சுட்டு இருக்கற போஸ் பார்த்ததுமே நினைச்சேன்,, அண்ணன் சிவா ஒரு லவ் ஃபெயிலியராத்தான் இருக்கும்னு...

சி.பி.செந்தில்குமார் said...

கடை ஓனர் இல்லாதப்ப நமக்கு இங்கே என்ன வேலை?

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
போடு முத வெட்டை//

வெட்டுங்க..

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>>உன்மத உத்தம்-

இப்படி ஒரு வார்த்தை தமிழ்ல இருக்கா? உன்மத்தம் தான் எனக்கு தெரியும்..//

நன்றி பாஸ்..திருத்தப்பட்டது..

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
அவரு காத்திரப்பதிவர் இல்லை. திட காத்திரப்பதிவர்... ஹி ஹி//

ஆமா ஆமா காத்திரம்+திடகாத்திடம் அது தான் அவரின் பலம் ஹிஹி

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>..இல்லாட்டி சிரிப்பு போலீஸ் மாதிரி அப்புறம் நாற்பதிலையும் கல்யாணம் நடக்காது!!

ரமேஷ்க்கு இப்போத்தானே 37 ?//

அப்பிடீன்னு வெளில சொல்லிக்கிட்டு திரியுறாரு...

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
புரொஃபைல்ல தாடியை தடவிட்டு யோசிச்சுட்டு இருக்கற போஸ் பார்த்ததுமே நினைச்சேன்,, அண்ணன் சிவா ஒரு லவ் ஃபெயிலியராத்தான் இருக்கும்னு..//

யோவ்..ஏன் இந்த கொலை வெறி??

நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்கையா!!

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
கடை ஓனர் இல்லாதப்ப நமக்கு இங்கே என்ன வேலை?//\

நான் இங்க தான் இருக்கேன்...கடைய பூட்டல பாஸ்..

Chitra said...

மனஸ்தாப மரத்தின்
இரு மனமறியா பிழை தான்
மனம் விட்டுப் பேசா
தவறுகள்!!


....The Best! மிகவும் அருமையாக வந்து இருக்கிறது.

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்ன இப்படி கவிதையிலும் இப்படி கலக்கறிங்க..
அப்படியே நம்ம வீதிப்பக்கம் வற்றது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

படங்கள் கவிதை அருமை..
வாழ்த்துகளும் வாக்குகளும்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா எல்லா கவிதையும் சூப்பர்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணத்துல ஓட்டு விழலை அப்புறம் வரேன்

வேடந்தாங்கல் - கருன் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_28.html

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு வாழ்த்துகள் மக்கா....

Jana said...

சி.பி.செந்தில்குமார் said...
அவரு காத்திரப்பதிவர் இல்லை. திட காத்திரப்பதிவர்... ஹி
நானும் அதே ஹி..ஹி.

Jana said...

காதல் என்ன அம்புட்டு கஷ்டமா?
கஸ்டம் என்று சொல்லுமாப்போலவே இருக்கு????

பாட்டு ரசிகன் said...

படத்துக்கு கவிதையா..
இல்லை கவிதைக்கு படமா?..
அருமை..

பாட்டு ரசிகன் said...

/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

suthan said...

panravangaluku than therium...............pannitu sollran................

கார்த்தி said...

தம்பி என்ன உன்ன மாதிரி ஆக்கள் காதல் செய்ய ஆரம்பிச்சா அதுக்கிருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிரும் சோ கம்முன்னு இருப்பம்!

ஓட்ட வட நாராயணன் said...

நல்ல கவிதை மைந்தன்! உங்கள் ப்ளோக்கும் அழகாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஉணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்கிடையேயான
உன்மத்த உத்தம்-காமம்ஃஃஃஃஃ

வார்த்தைகளுக்குள் இப்படி ஒரு ஜலாமா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

VELU.G said...

நல்ல போகுதுங்க கவிதை

இப்படியே போகாமா ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க

அப்புறம் கவிதை, காதல் என்ன எதுவுமே வராது

shanmugavel said...

//இவங்களே இப்பிடி அன்பா இருக்கேக்க நம்மளால இருக்க முடியாதா?//

super

Anonymous said...

அருமையான கவிதை.

விக்கி உலகம் said...

காதல் கவிதைகள் ஹி ஹி!

காதல் கிடைக்கறத விட தொடர்றது ரொம்ப கஷ்டமுங்கோ ஹி ஹி!

நிரூபன் said...

உணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்கிடையேயான
உன்மத்த உத்தம்-காமம்//

காதல் அம்புட்டுக் கஸ்டம் இல்லை என்பதை உங்களின் கவிதையே நிரூபிக்கிறது. அழகிய கொஞ்சு தமிழ் வார்த்தைகளும், அவளின் நினைவுகள் கலந்த வர்ணனைகளும் இக் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.
காதல் என்ன அம்புட்டுக் கஸ்டமா? காதலில் விழுந்தவர்களுக்குத் தானே தெரியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...