Monday, February 7, 2011

பீட்டர் பசங்க என்ன பண்ணுவாங்க?


மனிதர்கள் பலவிதம்..அதில் ஒரு விதம் தான் இந்த பீட்டர் பசங்க..
நீங்கள் கூட ஒருவராக இருக்கக்கூடும் இந்த வகையறாவில்..
நாம தமிழர் தானே?
ஆங்கிலம் என்பது இன்றைய வாழ்வில் இன்றியமையாதது தான்..வேற்று மொழி நபர்களுடன் உரையாடும் போது கட்டாயமானது.
ஆங்கிலத்தின் பயன்கள் பற்றி நான் இங்கு அறிக்கை வாசிக்க வரவில்லை..
ஆனா நம்ம பயலுக கொஞ்சப் பேர் பண்ணுற அலப்பரைகள் தான் தாங்க முடியல பாஸ்..

ஒத்துக்கலாம் அவங்களுக்கு நம்மள விட கொஞ்சம் இங்கிலீசு கூட தெரியும்னு.அதுக்காக இப்பிடியா?
நம்ம ப்ரெண்டு ஒருத்தன் இல்ல இல்ல ரெண்டு பேர் இருக்கானுக,அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?

1 )நம்ம கூட தமிழ் படம் பாக்க வரமாட்டானுகள்..எங்கயாச்சும் இங்கிலீசு படமெண்டா அது சப்ப படமெண்டாலும் பார்க்க போவானுகள்.அவனுக தமிழ் படம் பாக்கிறத நாம பாத்தா அவங்கட மீட்டர் எதோ கொறஞ்சிடுமாங்க!

2 )சாப்பிட போற எண்டா ஏதாச்சும் இங்கிலீசு பெயர் வைச்ச ஹோட்டலுக்கு தான் போவானுகள்.ஹோட்டல் எண்டு தமிழில பெயர் போட்டிருந்தா கூட அதுக்கு தடா தான்!நாம கையேந்தி பவன் எண்டாலும் பிரிச்சு மேய்வம்..அவங்கள் பக்கத்தில நிண்டு இந்தா மச்சான் ஒரு வடை சாப்பிடு எண்டா அவங்க பண்ற ரவுசு இருக்கே..எதோ எலிசபெத் பரம்பரை மாதிரி!இந்தாடா வாழைப்பழம் எண்டா வாங்கமாட்டானுகள்..பனானா எண்டா உரிச்சு வைக்க போடுவாங்கள் ரெண்டு பேரும்!

3 )ரோட்'ல சைட் அடிக்கலாம்னு நின்னாக்கா ஏதாச்சும் நல்ல பிகர் வந்தா நாம சட்டப்படி பிகர்டா எண்டுவம்..அவங்க ரெண்டு பெரும் தங்களுக்க "nice structure no" அப்பிடி எண்டுவாங்கப்பா..

4 )நாம எலாம் வாங்கடா கிரிக்கட் விளையாடுவம்ன்னு சொன்னா வரமாட்டானுகள்..நம்மள விட்டிட்டு போயி பிலியட்ஸ் விளையாடுவாங்க பாருங்க..
இவனுகள என்னேங்குறது?

5 )எவனோடயாச்சும் சண்டை எண்டா நம்மட வாயில என்னங்க வரும் உடன?இவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?
"he is very stupid no..mother ******" அப்பிடி எண்டு திட்டுவாங்க பாருங்க...


6)நம்மள மாதிரி சண் டி.வி விஜய் டி.வி எல்லாம் பாக்கமாட்டாங்கப்பா..ஸ்டார் டி.வி,V டிவி தான் பாப்பானுகள்..பாத்திட்டு சும்மா இருந்தா பரவாயில்லைங்க,நம்மள வைச்சுக்கொண்டு அதில நடந்த சீனுகள் பத்தி கதைப்பாங்க பாருங்க..ஜேம்ஸ் கமரூன் கூட இந்தளவுக்கு அலசி இருக்கமாட்டார் பாருங்க!


7)எங்காச்சும் போகேக்க யாராச்சும் ரிசப்சனிஸ்ட் பிகருகள்கிட்ட நம்மள தள்ளி விட்டிட்டு போய் மொக்க போடுவாங்க இங்கிலீசில..இவங்களையெல்லாம் ஏன்டா கூட்டிட்டு வந்தோம்னு இருக்கும்..இப்பிடித்தான் சொந்த செலவில அடிக்கடி சூனியம் வைச்சுக்குவம் நாம!


8)நம்மள மாதிரி லோக்கல் கடையில எல்லாம் போயி ஷர்ட் பான்ட் வாங்க மாட்டாங்க..ஏதாச்சும் இன்டர்நசனல் கடை அதுவும் a /c போட்டு இங்கிலீசில பெயர் போட்டிருந்தா மட்டும் தான் உள்ள காலை விடுவாங்க!

9)அதில ஒருத்தன் ஒரு பத்து மாசம் தான் யு.கே'ல இருந்திட்டு வந்தவன்..போகேக்க நம்மள மாதிரி தானுங்க போனவன்..
போயிட்டு வந்ததில இருந்து அவன் படுத்துவான் பாருங்க...ஒரே ஒரு வார்த்தைய வைச்சு சந்து போந்து இஞ்சு இடுக்கெல்லாம் யூஸ் பண்ணுவன்..
அது என்னெண்டு பாக்குறீங்களா?
"How come?"
இப்பிடி தான் "How horrible" எண்டு சொல்ல போயி "How horable" எண்டு சிலிப் ஆகிட்டான் பயபுள்ள..விடுவாங்களா நம்ம பசங்க?
இப்ப அவரிண்ட செல்ல பெட் நேம் "ஹொவ் ஹோரபில்" தானுங்க!!

10)அதாச்சும் பரவாயில்லைங்க,பேஸ் புக்கில தமிழில ஸ்டேடஸ் போட்டா கமெண்டு பண்ணமாட்டாங்க..லைக் பண்ண மாட்டாங்க..
இங்கிலீசில A...B...C....D.....அப்பிடீன்னு போட்டாலே குஷி ஆகிடுவாங்கப்பா..

பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களையும் போய் சேர ஓட்டுப் போடுங்கள்.கருத்துகளை பின்னூட்டத்தில் கூறிச்செல்லுங்கள்..

Post Comment

15 comments:

நிரூசா said...

நீ என் இனமடா...!
சேம் பிளட்...!

யூகே என்ட உடன கொஞ்சம் கலங்கீட்டன். பறவாயில்ல அது வேற யாரோ பயபுள்ள :P

பீட்டர் பிச்சையப்பா said...

accoding to my knowladge i think this is a very nice pathivu in my view this pathivu puting by a p........................................ when i was born in london some one crossing the road other people went to see this pathivu..............

மைந்தன் சிவா said...

நிரூசா said...
நீ என் இனமடா...!
சேம் பிளட்...!

யூகே என்ட உடன கொஞ்சம் கலங்கீட்டன். பறவாயில்ல அது வேற யாரோ பயபுள்ள :P//

ஹிஹி நீங்க இல்ல பாஸ்...

மைந்தன் சிவா said...

//பீட்டர் பிச்சையப்பா said...
accoding to my knowladge i think this is a very nice pathivu in my view this pathivu puting by a p........................................ when i was born in london some one crossing the road other people went to see this pathivu............//

hehehehehehehehehehehehehehehe
ரொம்ப காமெடி பீட்டர் பாஸ் நீங்க..உங்க ஒரிஜினல் பெயர சொல்லுங்க பார்ப்போம்??

தமிழ்த்தோட்டம் said...

கலக்கீட்டீங்க

வெறும்பய said...

கலக்கீட்டீங்க
தல கைய குடுங்க..
நெஜமாலுமே இந்த பீட்டர் பசங்க தொந்தரவு தாங்க முடியலப்பா..

MANO நாஞ்சில் மனோ said...

பீட்டர் பசங்ககிட்டே மலையாளத்துல பேசி கலாயிங்க ஓடி போயிருவானுக....
நான் அப்பிடி நிறைய பேரை ஓட வச்சிருக்கேன்....ஹா ஹா ஹா ஹா ஹா என்னமா ஓடுறாங்க....
ட்ரை பண்ணுங்க.....

ஆதவா said...

நல்லாருக்குங்க... நம்ம பசங்க இதில பாதியாவது பண்றானுங்க..

Jana said...

யாரவாது பீட்டர் அடித்தால், நீங்கள் கொஞ்சம் ஸேக்ஸ்பியர் ஆகிப்பாருங்கள். அடுத்த நொடியே பீட்டர் பீதாம்பரம் ஆகிவிடுவான்.

யாதவன் said...

முழுதும் வாசித்தேன் அருமையிலும் அருமை யாதவன்

Anonymous said...

Actually,this is not peter.
peter is a name of a boy.
this name is been used by some buggers like u to cheat others.
surely im not a peter.
dnt tel tat im a peter.

Anonymous said...

Actually my lunch was..... my lunch was....காக்கா பிரியாணி ..........

கார்த்தி said...

அடோ மல்லி இப்பிடி வெட்டிபந்தா கேசுகள் எல்லா இடத்திலயும் இருக்கு. நானும் இத கடுமையா அனுபவிச்சனான் அண்மையில.
அது சரி யார் அந்த ரெண்டு பேரும். நான் அறிய விரும்பிறன். எனக்கும் தெரிஞ்சிருக்கும் ஆக்கள்.
இதில கூற பயப்பிட்டா FBல் மெசேஜ் பண்ணவும்

வைகறை said...

கலக்கலான பதிவு! ம்... இப்படியும் நடக்கத்தானே செய்யுது!

Anonymous said...

senthooran
நண்பரே நீரும் உம் நண்பர்களும் வெள்ளவத்தேல விடுற பீட்டருக்கு இது எவளவோ பருவாயில்லை.......... இதெல்லாம் ஒரு பதிவு அதுக்கு நாலு வக்காலத்து... நீங்க மட்டும் இல்லை நண்பரே இந்தப் இலங்கைப் பதிவர்கள் எண்டு சொல்லித்திரியிற உங்கட குழுவில ஒரு சிலரத்தவிர யாராவது ஏதாவது பிரியோசனமா எழுதுறீங்களா.......... ஒழுங்கா எழுதிற பலர் உங்களோட சேரேல எண்டதும் உண்மை.... இதப் பாத்திட்டு நான் ஏதோ பதிவர் எண்டு நினைச்சு என்ன வைச்சு காமடி பண்ணாதேங்கோ நான் தொடந்து எல்லாற்ற பதிவையும் வாசிக்கிற சாதாரண வாசகன், நீங்களே யோசிச்சுப் பாருங்கோ.... அதில சிலர் ஏற்கனவே வேற துறையில கிடைச்ச புகழ வைச்சு இதில புளப்ப ஓட்டுறீங்கள்.... சிலர் அண்டாட செய்தி அறிக்கைய வைச்சு ஓட்டுறீங்க... ஒண்டில் சினிமா இல்லாட்டி... கிரிக்கட் இதவிட்டா ஏதாவது இப்பிடி ஏதாவது உப்பு சப்பில்லாத அலம்பல்.. மறுபடியும் சொல்லுறன் நான் எல்லாரையும் சொல்லேல.. மிகத்திறமையான கருத்தாக்கமான பதிவர்கள் இருக்கத்தான் செய்யுறாங்க... ஆனா அவன்கள நீங்கள் முதன்மைப் படுத்த மாட்டீங்கள்..... உங்கட குழுவில இருக்கிற எவன் என்ன எழுதினாலும் அதப் போட்டு சும்மா புளுகிறது அதில எதுவுமே இல்லாட்டியும்...

Related Posts Plugin for WordPress, Blogger...