Wednesday, February 2, 2011

பிச்சைக் கணக்கு பார்க்கலாம் வாங்க!!


ஒண்ணுமில்ல எல்லாரும் சும்மா தானே இருக்கீங்க?நம்ம நண்பர்களாச்சே..சும்மா தான் இருப்பீங்க எண்ட நம்பிக்கைல இந்த பதிவ எழுதுறன்.நாம சும்மா இருந்து என்னத்த கண்டம்?சும்மா தானே இருந்தம்.ஒத்த பைசா பாத்திருக்கமா?
சும்மா இருந்து கோடீஸ்வரனாகிய பல நபர்களில் ஒரு நபரினுடைய கணக்கு தான் இது!

நாம தினசரி பல பிச்சைக்காரர்களை பார்க்கிறோம்..பலர் பிச்சைக்காரர்கள்,சிலர் அந்த வேடத்திலிருக்கும் வேறு நபர்கள்..அதை விடுவோம்.
ஒரு சாதாரண பிச்சைக்காரனின் மாத வருமானம் எவ்வளவு?யாராச்சும் கணக்குப் போட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
கணக்குப் போட்டிருந்தா நீங்க வெட்டியா இருந்திருக்க மாட்டீங்க அல்லது இப்ப சாதாரண ஆயிரங்களுக்கு வேலை பார்க்கும் தொழிலில் இருந்திருக்க மாட்டீர்கள்.

சாதாரணமாக ஒரு ஏரியால போர்ம் ஆன பிச்சைக்காரன் அந்த ஏரியால பல தினசரி பிச்சை வழங்குனர்களை கொண்டிருப்பான்.சில நம்ம பழம் சனங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது.அதாவது பிச்சைக்காரனின் தரம் பார்த்து பிச்சை போடத் தெரியாது!சில பாவப்பட்ட பிச்சைக்காரர்கள் ஓரமாய் கிடந்து வாடுவார்கள்..அவர்களை விட்டு போர்ம் ஆன பிச்சைக்காரனுக்கு போட்டு போட்டு அவனை கோடீஸ்வரனாக்கி விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள்.போர்ம் ஆன பிச்சைக்காரர்கள் தமக்கு கீழே ஒரு சில அல்லக்கை பிச்சைக்காரர்களை வைத்திருப்பதை இப்போது காணக்கூடியதாக இருக்கிறது.

காரணம் மெயின் பிச்சைக்கு வரும் ஏராளமான பிச்சைகளில் அவருக்கு தேவைப்படாத அயிட்டங்களை அல்லக்கை பிச்சைக்கு வழங்குவார்.
நம்ம வெள்ளவத்தை'ல பிரபலமான பிச்சை ஒருவர்(ஒரு கால் இல்லாமல் ஒரு வண்டிலில் சுற்றும் நபர்) பிரபல சூப்பர் மார்கட் ஒன்றின் முன்னாள் தினசரி நிற்பார்.அன்று ஒரு நாள் ஒரு பெருசு வந்து பெரிய சிப்ஸ் பக்கட் ஒன்றையும் வேறு சில அயிட்டங்களையும் பிச்சைக்கு கொடுக்க,அவர் தனக்கு சிப்ஸ்'ஐ மட்டும் வைத்துக்கொண்டு மிகுதியை அல்லக்கை பிச்சைக்கு மனமுவந்து கொடுத்தார்!இந்த ஏரியா ல போர்ம் ஆன இந்த மெயின் பிச்சை தினசரி வேலை முடிந்து செல்லும் போது ரெட் புல் எனப்படும் உற்சாக பானம் அருதிக்கொண்டு தான் செல்வார் என்றால் பாருங்களேன்!!
முடிந்து போகும் போது எனது நண்பன் ஒருவனின் கடையில் தான் வந்து காசு மாத்துவாராம்.பத்து இருபது ஐம்பதுகளை ஆயிரமாக்குவாராம்.எப்படியும் மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் வரையில் தேறுமாம் தினசரி!!

சிப்ஸ் போல பண்டங்களாக வழங்கும் அயிட்டங்களின் பெறுமதி தனி!
அதற்க்கு ஒரு ஆயிரம் போடுங்களேன்..
ஒரு நாளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வருமானம்!மாதம்?ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்.
கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இந்திய ரூபாய்கள்!
ஆயிரத்தி முன்னூற்றி அறுபது அமெரிக்க டொலர்கள்!

வருடம் எவ்வளவு?16320 us $!!
இலங்கை மதிப்பில் பதினெட்டு லட்சம் ரூபாய்.
வேலைக்கு போகும் மகா ஜனங்களே உங்கள் மாத,வருட வருமானம் இதை விஞ்சுகிறதா??
வெட்டி ஜனங்களே சும்மா வீட்டிலிருப்பதை விட்டு வீதிக்கு வந்தால் வருமானம் எவ்வளவென்று பாருங்கள்!!
இளைய சந்ததியே சிந்தியுங்கள்!!
வேலையில்லாப் பிரச்சனை என்று அழாதீர்கள்!!துணிந்து முடிவெடுங்கள்!

இன்று ஒரு புது விதி செய்வோம்!!

இன்றைய காணொளி:
இந்த காணொளியை பாருங்கள்.இவரைப் பற்றி அண்மையில் பல செய்திகள் வந்ததை அவதானித்திருப்பீர்கள்.ட்ரேட் வில்லியம்ஸ்,பத்து வருடங்களாக வீடு இல்லை வேலை இல்லை.ஆனால் நல்ல குரல் வளம் இருந்தது.அதை வீதிகளில் காட்சிப்படுத்தி அதன் மூலம் அறிவிப்பாளர் ஆகியுள்ளார்.இப்போது பல ஒப்பத்தங்கள் இவரை தேடி வருகின்றன!
youtube இல் இந்த காணொளி எட்டு மில்லியன் ஹிட்ஸ்களை வழங்கியுள்ளது!!
பிச்சை எடுக்க முடிவு பண்ணீட்டா ஓட்டு போடுங்க..நீங்க கடைசியா ஏரியா கவுன்சிலர் ஆகேக்க நாம ஓட்டு போடுறம்!!ஹிஹி

Post Comment

5 comments:

sakthistudycentre-கருன் said...

சும்மா...சும்மா..சும்மா...சும்மா...சும்மா...சும்மா...சும்மா...சும்மா...சும்மா..சும்மா...சும்மா...சும்மா..சும்மா...

Anonymous said...

என்னடா கணக்கு இது??

தர்ஷன் said...

சிநேகிதியே சிநேகிதியே எனப் பாடிப் பழகிக் கொண்டால் நலம் என நினைக்கிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

ஆக பிச்சைஎடுக்கலாம்னு சொல்றீங்க.....

Jana said...

//பிச்சை எடுக்க முடிவு பண்ணீட்டா ஓட்டு போடுங்க..நீங்க கடைசியா ஏரியா கவுன்சிலர் ஆகேக்க நாம ஓட்டு போடுறம்!!ஹிஹி


பாம்புக்கு பாயா ஊத்தினாலும்சரி, பணியாரம்போட்டாலும் சரி..விசத்தை கக்காமல் விடாது!!
சீனேக்பாபு?????///

Related Posts Plugin for WordPress, Blogger...