Tuesday, February 8, 2011

பல்கலைக்கழக மாணவி மீது பேஸ்புக் சைபர் கிரைம்


ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவபீடாமானது தெற்காசியாவிலேயே பிரசித்தி பெற்றது.அங்கு தான் நான் படித்தேன்..இடையில் விட்டேன் அது வேறு கதை..
அங்கு தான் இந்த வருத்தத்துக்குரிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அதுவும் எனது batch மாணவி ஒருவருக்கு.
குறிப்பிட்ட மாணவிக்கு பேஸ்புக் கணக்கு ஒன்று உள்ளது.ஆனால் அவள் பெரிதாக அதனை பாவிப்பதில்லை..வெறுமனே பெயருக்கு வைத்துள்ளாள்.சில கிருமிகள் அவளின் படங்கள் சிலவற்றை எடுத்து பொய்யான கணக்கு ஒன்றை அவள் பெயரில் தொடங்கி அவள் படத்தை போட்டு பல்கலைக் கழகம் மற்றும் அவள் சார்ந்த நண்பர்களை நண்பர்களாக்கிக் கொண்டுள்ளனர்.இதனை ஒருவாறு அறியப்பெற்ற அந்த மாணவி தனது சொந்த பேஸ்புக் கணக்கில் இவ்வாறு பொய்யான கணக்கு ஒன்று உலாவுகிறது என்று சில காலத்துக்கு முன்னர் ஸ்டேடஸ் போட்டிருந்தால்.அதனை நாங்கள் பெரிதாக எடுக்கவில்லை காரணம் இது போன்று பல விடயங்கள் தற்பொழுது நடைபெறுவதால் இதனையும் அந்த வகையறாவுக்குள் அடக்கி விட்டு இருந்து விட்டோம்.
ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக பிரச்சனை பூதாகரமாக ஆகிக்கொண்டிருக்கிறது..

இப்போது எமது ஆண்டு பெண் பிள்ளைகளை கேவலமாக சித்தரித்து படங்கள் மற்றும் காணொளிகளை அந்த பேஸ்புக் கணக்கில் வெள்ளியிட்டு வருகின்றனர்.வேறு யாருடையதோ காணொளிகளை போட்டு நானும் அவரும் இப்படி,எனது நண்பியும் ஒரு ஆண் பையனின் பெயர் போட்டு அவரும் இப்படி என்று சகிக்க முடியாத வேலைகள் நடைபெறுகின்றன.
ஒரு பெண்ணின் படத்தையும் பெயரையும் கொண்ட கணக்கில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற அதையும் நம்பி சிலர் அதற்க்கு கருத்துரைகளையும் இட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
(இது வெறுமனே படத்துக்காக கூகிள்'லில் இருந்து.)

சம்பத்தப்பட்ட பெண்ணுக்கும் ஜூனியர் பையன் ஒருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது சமீபத்தில்.பல்கலைக்கழகம் என்றால் வதந்திகள் தொடக்கம் அனைத்தும் நடைபெறும் அது சகஜம்..ஆனால் பெண்களை பற்றி கதைக்கும் போது அவதானம் தேவை..குறிப்பிட்ட பெண்ணுக்கும் ஜூனியர் பையனுக்கும் தொடர்பு என்று கதைகட்டி விட்டார்கள்.இதையறிந்த அந்த அப்பாவி மாணவி அந்த ஜூனியர் பையனை கூப்பிட்டு திட்டி இருக்கிறார்.அதனால் அவர்களுக்கும் இந்த விடயத்துக்கும் தொடர்பு இருக்கலாமென்று எனது ஆண்டு மாணவர்கள் ஊகிக்கின்றனர்.

ஆனால் ஆதாரம் இல்லாமல் எதனையும் செய்யமுடியாது என்பதால் பொறுத்துக்கொண்டிருக்கின்றனர்.போலீஸ் சைபர் கிரைம் பிரிவுக்கு அறிவித்துள்ள போதும் அவர்களிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லையாம்.குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை ப்ளாக் பண்ண முயற்ச்சிகள் மேட்கொள்ளப்பட்டும் அது தோல்வியில் தான் முடிந்துள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

முதலில் குறிப்பிட்ட மாணவி சம்பந்தமாக கேவலமாக வெளியிட்டவர்கள் பின்னர் எனது வகுப்பை சார்ந்த மாணவிகள் ஒவ்வொருவராக கேவலமாக தாக்கத்தொடங்கியுள்ளனர்.ஒவ்வொரு பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத கவலைகளுடன்...அவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது..வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை இது.
இது சாதாரண விடயமல்ல..இவ்வாறான விடயங்களால் கடந்த காலங்களில் பல தற்கொலைகளும் சம்பவங்களும் நடந்துள்ளதை மறுக்க முடியாது.சக பல்கலைக்கழக தமிழ் மாணவி மீது இவ்வாறான செயல்களை செய்யும் இத்தகைய காடையர்கள் படித்து என்ன பயன்?எதிர்காலத்தில் இவர்கள் என்னவாக உருவாகப்போகிரார்கள்?
குறித்த மாணவியின் வாழ்க்கை இவர்களுக்கு விளையாட்டாக மாறியுள்ளது..ஒரு ஆணாலேயே தாங்கிக்கொள்ள முடியாத விடயம் ஒரு பெண் பிள்ளையால் எவ்வாறு தாங்கிக்க முடியும்?இத்தனைக்கும் அந்தப் பெண் பிள்ளை மிகவும் அடக்கமான அமைதியான பிள்ளை.எனக்கு தெரியும்.
ஒரு படிக்கின்ற மாணவியின் வாழ்வில் இத்தகைய சம்பவம் எத்துணை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவரது எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்.மிகவும் கீழ்த்தரமான இழிவான செயல்கள் இத்தகைய பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படுகின்றன.

பல காரணங்களால் நான் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிவிட்டேன் ஆரம்பத்திலேயே.அதற்க்கு அந்த பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் கலாச்சாரமும் ஒருவகையில் காரணம் தான்.
மற்றைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது மிகக் கீழ்த்தரமான பழக்கவழக்கங்கள்,கலாச்சாரங்கள் இங்கு காணப்படுகிறது.
காலம் காலமாக சீனியர் ஜூனியராக கடத்தப்பட்டு காலம் காலமாக இவ்வாறான செயல்ப்பாடுகள் இங்கு காணப்படுகின்றது.
சொல்லித்திருத்த முடியாத விடயம் கலாச்சாரம்.அவரவர் மனதைப் பொறுத்தது.அது இவர்களுக்கு மாறப்போவதில்லை.
யார் சொல்லையும் கேட்கப்போவதில்லை.

யாராவது எவ்வாறாவது இருந்துவிட்டு போகட்டும் நான் என்பாட்டில் இருப்போம் என்று தான் இருந்தேன்.ஆனால் இத்தகைய சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட போது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.இந்தப் பதிவைப் பார்த்து ஒருசிலர் திருந்தினால் அதுவே எனக்கு போதுமானது.

குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை செயல்ப்பாட்டிலிருந்து நிறுத்த யாருக்கும் ஏதாவது முறைகள் தெரிந்திருப்பின் தெரியப்படுத்தவும்..
இவர்களை எல்லாம் சமூகத் தீவிரவாதிகள்.இத்தகைய களைகள் தான் சமூகத்திலிருந்து முதன் முதலில் அப்புறப்படுத்த வேண்டியது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடத்துணிந்த இவர்கள் சமூகத்துக்குத் தேவையில்லை.




குறிப்பு:இதனை பதிவில் போடுவதன் மூலம் நான் பிரபலமடைவதோவேறு நன்மைகளோ எனது குறிக்கோள் இல்லை..தயவு செய்து அனோனிகள் இங்கு வர வேண்டாம்.உங்களுக்கு இங்கு இடமில்லை.

Post Comment

19 comments:

Chitra said...

அந்த பெண், இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட்டு வர பிரார்த்திக்கிறேன்.

கார்த்தி said...

அந்தக்கணக்கை இல்லாமல் செய்ய உங்கள் நண்பர்கள் அனைவரும் அந்த கணக்கை பற்றி Facebook Administrationக்கு Report செய்யவேண்டும் உண்மையான Profile deatils உடன். அத்துடன் அதை உறுதிப்படுத்தும் தகவல்களையும் வழங்குங்கள். எவ்வளவு பேர் காம்பிளயின் பண்ணுகிறார்களோ அதற்கேற்றால்போல்தான் அவர்களின் நடவடிக்கையின் விரைவு இருக்கும். இதைபோல் எமது நண்பர்கள் செய்து வெற்றிபெற்றிருக்கின்றனர்.

maruthamooran said...

மைந்தன்…!

இவ்வாறான பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. என்னுடைய நண்பியொருவரும் இதுபோன்ற பிரச்சினைகளினால் அவதிப்பட்டு வந்தார். எனினும், தன்னுடைய கணக்கினை அவரே முடக்கியதன் பின்னர், அவரின் பெயரில் உலாவி வந்த போலிகளினால் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

சமூகத்தளங்களில் அவதானம் அதிகம் தேவை.

ஆதவா said...

சிலசமயம் இம்மாதிரியான அச்ம்பாவிதங்கள் நடக்கின்றன. பெண்கள் எங்கே சென்றாலும் அவர்களுக்குப் பிரச்சனைதானா??

Vathees Varunan said...

இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்தும் இலங்கையில் அதிரித்து செல்வது கவலையளிக்கின்றது.
குறிப்பிட்ட அந்த பக்கத்தினை தடைசெய்ய மேலே கார்த்திகூறிய வழியில் முயற்சித்து பார்க்கவும்

ஆனால் உங்களுடைய பதிவில் இன்னொரு பெண்ணினுடை பக்கத்தினை வழங்கியிருக்கின்றீர்களே இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா?

Jana said...

சமூகத்தளங்களில் அவதானம் அதிகம் தேவை...
Yes Boss

Unknown said...

வதீஸ்-Vathees said...
இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்தும் இலங்கையில் அதிரித்து செல்வது கவலையளிக்கின்றது.
குறிப்பிட்ட அந்த பக்கத்தினை தடைசெய்ய மேலே கார்த்திகூறிய வழியில் முயற்சித்து பார்க்கவும்

ஆனால் உங்களுடைய பதிவில் இன்னொரு பெண்ணினுடை பக்கத்தினை வழங்கியிருக்கின்றீர்களே இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா?//

ஆமாம்,ஆனால் எந்த வித தீய நோக்கத்தோடும் நான் பாவித்திருக்கவில்லை.
படத்தை பதிவுக்கேற்றவாறு தேடும் போது இந்த படம் கிடைத்தது.
போடும் போதே யோசித்தேன் பிரச்சனை வருமா என்று..
ஆனால் கூகிள் தேடியந்திரத்தில் இந்த படம் இருக்கும் போது....
அத்தகைய பாரிய பிரச்சனை யாதும் நான் பதிவில் பாவித்ததனால் வருமென்று நினைக்கவில்லை.

கவி அழகன் said...

கேவலமான செயல்கள் செய்பவர்களை கல்வி கற்க்க அனுமதிக்க முடியாமல் செய்யவேண்டும்

FARHAN said...

படிக்குற புல்லைங்களையாவது ஒழுங்கா படிக்க விட்ரனுன்களா

அரசியல் தலைவர்களின் கணக்கு HACK செய்யபட்டலோ அல்லது பொய்யான மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டலோ துரிதமாக நடவடிக்கையில் இறங்கும் சைபர் கிரய்ம் போலிஸ் இந்த மாதிரி செயல் பாட்டில் மெத்தனம் காட்டுவது வருந்த தக்கது

Anonymous said...

கேவலமான செயல்கள் செய்பவர்க்கு- "You might also get a Girl in future

Unknown said...

ஹலோ முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்பதற்கினங்க நீங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பின்வரும் தளம் சென்று உங்கள் சில விபரங்களை
கொடுத்து ( போலியான விபரங்கள் போதுமானது ) register செய்தபின் அங்கும் உங்களுக்கு நண்பர்கள் இருப்பார்கள் .அவர்களிடம் இவ் face புக் விபரத்தை ஹாக்
பண்ணி தர சொன் னால் தருவார்கள் .ட்ரை பண்ணவும் . http://devilsworkshop.org/tag/hacking/ , http://www.enworld.org/forum/rpg-industry-forum/185413-devil-s-workshop-hacking-reloaded-released-rpgnow-com.html

Anonymous said...

நட்பை பரிமாற பயன்படுத்த வேண்டிய
FACE BOOKகை ஏன்தான் இப்படி தவறான வழியில் பயன்படுத்துகிரார்களோ இது
நீடிக்குமேயானால்FACE BOOKகை தடை செய்வதே மேல் .......................

ரவி said...

அந்த தோழியின் பேஸ்புக் கணக்கு, போலி பேஸ்புக் கணக்கு இரண்டு விவரத்தையும் எனக்கு எழுதவும். நான் அதனை முடக்கமுடியும்.

அமரேஷ் said...

நெருப்பு இல்லாமல புகையும் என்பதில் அதிகம் எனக்கு நம்பிக்கை இல்லை...தவிர இது பெண்களுக்கு மட்டும் நடக்கும் சம்பவங்கள் அல்ல...பெண்களுக்கு போன இடமெல்லாம் பிரச்சினை தானா என்று ஒருவர் வருந்திக்கொள்கிறார்...இதெ மாதிரி எனக்கும் 2 கணக்குகள் வைத்திருக்கிறார்கள்..ஆனா அவை அனைத்தும் தற்போது புழக்கத்திலில்லை...ப்லான் பண்ணி ஹாண்டில் பண்ணுங்க மச்சி....மிச்சத்தை நேரில பாசுவம் மைந்தன்..

நிரூஜா said...

:)

மா.குருபரன் said...

முதல்ல பேஸ்புக்கிற்கு சம்மந்தப்பட்ட தரவுகளை இணைத்து பிரச்சினையை அனுப்புங்கள். சம்மந்தப்பட்ட விஷமியின் தரவுகள் கிடைத்தால் புகைப்படத்துடன் வெளியிடவும்.....

Anonymous said...

சைபர் கிரைம் பொலிஸில் எப்படியோ.. என்ன செய்வார்களோ என்பது தெரியாது.. ஆனால் இரானுவத்தினர் மூலம் தீர்வு காண முடியலாம்.. அவர்களுக்கு FB முற்று முழுதான் அதிகாரம் (FB ADMIN) வழங்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்..
முயற்சி செய்து பாருங்கள்..

Anonymous said...

Submit a new claim using FB forms


DMCA (copyright):
http://www.facebook.com/legal/copyright.php?copyright_notice

Other IP (non-copyright):
http://www.facebook.com/legal/copyright.php?noncopyright_notice

Niru said...

for more.. http://nirujans.blogspot.com/2011/02/facebook.html

Related Posts Plugin for WordPress, Blogger...