Tuesday, December 7, 2010

ஆட்டம் காணும் அவுஸ்திரேலியா!!


கவியுலகம் கவிகளிலிருந்து சற்றே விலகிப் பயணிக்க முடிவு செய்துள்ளது...
காரணங்கள் பல இருப்பினும் உரிய சந்தர்ப்பம் வரும் பொழுது அதை கூறுகிறேன்..
ஆனால் உங்களை இம்சைப் படுத்திய கவிதைகள் தொடர்ந்தும் இடம்பெறும்..அதற்குத் தான் முன்னுரிமையும் கூட!

இளைஞர்கள் மத்தியில் அதுவும் கிரிக்கெட் ஞானம் உள்ள இளைஞர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கப்படும் விடயம் சாம்பல் தொடர் (Ashes series) பற்றியதே!
தொடர் ஆரம்பிக்கும் முன்னரையே இங்கிலாந்து விசிறிகளும்,அவுஸ்திரேலியா விசிறிகளும் சண்டையிடத்தொடங்கி விட்டிருந்தனர்.
அது சமூக வலைத்தளங்களிலும் சரி..நேரில் காணும்போதிலும் சரி..விளையாடுபவர்கள் வைரிகளாக இல்லாவிட்டாலும் இவர்கள் வைரிகளாகும் அளவிற்கு வாக்குவாதங்களும்,நியாயம் கட்பிதல்களும் இடம்பெறுகின்றன..
நான் கூட அதில் ஒருவன் என்பதில் பெருமை(ஹிஹி).நான் இலங்கை விசிறி அது போக எந்த அணியாவது அவுஸ்திரேலியாக்கு எதிராக விளையாடினால் அதற்கு ஆதரவு அளிக்கும் தலையாய கடமை எனக்கு!!

நாம் (இங்கிலாந்து விசிறிகள்) கூறியது போலே இங்கிலாந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளது அதுவும் இரண்டாவது டெஸ்ட்'டில் இன்னிங்க்ஸ் மற்றும் 71 ஓட்டங்களால் மாபெரும் வெற்றி!!
அவுஸ்த்றேலியர்கள் தோல்வியை எதிர்பார்த்திருந்தாலும் இன்னிங்ஸ் தோல்வியை கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்!!
அடிலெயிட் மைதானத்தில் 500 -600 ஓட்டங்கள் முதல் இன்னிங்க்ஸ் இல் தேவைப்படும் ஆனால் அவுஸ்திரேலியர்கள் பெற்றதோ 245 மட்டுமே.
அப்போதே அவர்களுக்கு நடுக்கம் ஆரம்பித்திருக்க வேண்டும்.அது இன்னிங்க்ஸ் தோல்வியில் கொண்டுவந்து முடித்திருக்கிறது.
துடுப்பாட்டம்,பந்து வீச்சு,களத்தடுப்பு என அனைத்திலும் இங்கிலாந்து அவுஸ்திரேலியாவை விட சிறப்பாகவே காணப்பட்டது.
முக்கியமான நேரங்களில்,முக்கியமான இங்கிலாந்து வீரர்களின் பிடிகளை தவற விட்டதும் தோல்விக்கு காரணம்.இல்லாவிடில் போட்டியை சமனாவது செய்திருக்கலாம்.
வாழைப்பழம் உரித்து வாய்க்குள் போடுவது போல வந்த பிடிகள் கூட தவற விடப்பட்டன.
வழமையாக ரசிகர்கள் திரண்டிருக்கும் மைதானம் வெறிச்சோடியது போல் காணப்பட்டது.
அவர்களுக்கு முதலே முடிவு தெரிந்துவிட்டதோ என்னமோ..நான்காம் நாள் முடிவின் போது கிளார்க் ஆட்டமிழந்தது அவுஸ்திரேலியர்களுக்கு பெருத்த அடி.
அது வரையில் எனக்கு கூட கொஞ்சம் பயம் இருந்தது போட்டி சமநிலையில் முடியுமோ என்று.காரணம் மழையும் வரும் சாத்தியம் இருந்தது.

.முதலே வந்திருக்கலாமோ?

முதல் டெஸ்ட்'டில் சொபிக்கத்தவறிய ஜோன்சன்,ஹில்பென்ஹாஸ் இரண்டாவது டெஸ்ட்'டில் நீக்கப்பட்டு போலின்ஜெர்,ரயன் ஹரிஸ் ஆகியோரை சேர்த்து வகுத்த தாக்குதல் திட்டம் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களால் நிர்மூலமாக்கப்பட்டது.(இலங்கைல பிறந்து தாக்குதல் ,நிர்மூலம் போன்ற வார்த்தைகள் உடலோடு ஒட்டி விட்டன போலும்!).அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் சதம் அடிக்கும் போர்ம்'இலேயே இருக்கின்றனர் இங்கிலாந்துக்கு.ஆனால் அவுஸ்திரேலியாக்கு வாட்சன்,ஹஸ்ஸி,ஹடின் தவிர மிகுதிப் பேர் ச்ன்ம்பிக்கை அளிக்கும் நிலையில் இல்லை.
இதே நிலைமை தொடர்நதால் அடுத்த டெஸ்ட்'டிலும் மண் கவ்வ வேண்டியது தான்!

பரபரப்பாக பேசப்பட்ட பீட்டர்சன்-டோஹெர்ட்டி போட்டி சப்பென்று போனது.227 என்ற தனது டெஸ்ட்'டில் அதி கூடிய ஓட்டங்களை பீட்டர்சன் விளாச,அதில் அதிகம் அடி வாங்கியது டோஹெர்ட்டி தான்.அவரின் ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 6 ஓட்டங்கள்(5 .85 )பெறப்பட்டன.இறுதியில் பீட்டர்சனின் விக்கட்டை பெற்றதன் மூலம் தனது ஆயுட்கால சந்தோசத்தை பெற்றிருப்பார் டோஹெர்ட்டி(கெயிலின் விக்கட்டை லக்மால் கைப்பற்றியது போல!).
டோஹெர்ட்டி'க்கு பெரும்பாலும் டெஸ்ட்'டுக்கான சங்கு ஏற்கனவே ஊதப்பட்டு விட்டது.அவருடன் கட்டிச்'சும் போகப் போகிறார்.நாலு இன்னிங்க்ஸ்'இல் அதிகபட்சமாக 43 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

450 ஓட்டங்களுடன் குக் 225 எனும் சராசரியுடன் துடுப்பாட்ட இயந்திரமாக இந்த ஆஷஸ் தொடரில் விஸ்வரூபம் கொண்டுள்ளார்.சதம் பெற தவித்த பீட்டர்சனும் இரண்டாவது டெஸ்ட்'டில் பெற்ற இரட்டை சதத்துடன் இன்னமும் ஓட்டங்களுக்காக வெறியுடன் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.அவுஸ்திரேலியா சார்பாக ஹஸ்ஸி தான் அதிகபட்சமாக மொத்தம் 340 ஓட்டங்களை பெற்றுள்ளார்.தொடர்ந்து சொதப்புகிறார் நோர்த்.அவர் அடுத்த டெஸ்ட்'டில் காணாமல் போகக்கூடும்.

தலா 9 விக்கெட்டுகளுடன் பின்(finn) மற்றும் ஸ்வான் ஆகியோரும்,எட்டு விக்கட்டுகளுடன் அன்டேர்சனும் அதிக விக்கட் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது முன்னணி பெறுகின்றனர்.அவுஸ்திரேலியா சார்பாக சிடில் ஆறு விக்கட்டுகள் கைவசம் வைத்து கொஞ்சமாவது நம்பிக்கை தருகிறார்..ஆனால் அந்த ஆறு விக்கட்டும் முதல் டெஸ்ட் 'டிலேயே பெறப்பட்டது.நான் அதிகம் எதிர்பார்த்த ப்ரோட் இரண்டு டெஸ்ட்'டிலும் சோபிக்கவில்லை.அவரும் பெரும்பாலும் மூன்றாவது டெஸ்ட்'டில் விளையாடமாட்டார்.ஆனால் இங்கிலாந்து இன்னொரு வாய்ப்பு வழங்கலாம்.இன்னிங்க்ஸ் வெற்றி பெற்ற அணியை மாற்றாமல் அடுத்த டெஸ்ட்'டுக்கும் களமிறக்க கூடும்.

டெஸ்ட்'தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து வரும் காலங்களில் முதலிடம் பிடிக்க வாய்ப்புகள் பிரகாசம்!!ஹெய்டன்,கில்லி,பாண்டிங்(சோபிக்கின்ற),வார்னே,மக்கிராத்,லீ என மிரட்டிய அவுஸ்திரேலியா தற்பொழுது மாற்று வீரர்களைத் தேடவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளது.
புதிய வீரர்களுக்கு இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு அவுஸ்திரேலிய அணியில் கிடைக்காது.தங்கள் இடத்தை சிறப்பாக உறுதிப்படுத்துவார்களாயின் எதிர்காலத்தில் தொடர்ந்து விளையாட வாய்ப்புகள் கிடைக்கும்.
சோர்ந்து போயுள்ள அவுஸ்திரேலியாக்கு எழுச்சி கொடுப்பவரே தற்பொழுது ஹீரோ ஆக மாற வாய்ப்புள்ளது.
இன்னிங்க்ஸ் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா எழுச்சி பெற்று அடுத்த மூன்று டெஸ்ட்'டில் இரண்டை வெல்லுவது என்பது அசாத்தியமானதே.எனவே இந்த ஆஷஸ் தொடர் நம்ம இங்கிலாந்து வசம் என்பது எனது எண்ணம்!
எதிர்காலம்?

மொத்தத்தில் 2010 /௨௦௧௧ ஆஷஸ் தொடர் பல பேரின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது என்பதே உண்மை!


Post Comment

20 comments:

Ashwin-WIN said...

Go England Go......
மைந்தன் கிரிக்கட் பதிவும் எழுத வெளிக்கிட்டியல்.. கலக்கல்.. வாழ்த்துக்கள்..

கவி அழகன் said...

சுழன்றிடும் உலகில்
உயிர் பெற்றிடும் நாடு

Anonymous said...

No anna Australia didn't have any chance 2 won this match(except rain).England will win this series but 4-0 is not posible.At the same time England will not loss any matches.This is the start 4 the world cup.England will also win the World Cup.

Unknown said...

கலக்கல் கிரிக்கெட் பதிவு..புதுன்மையான பயணம்.வாழ்த்துக்கள்.
இங்கிலாந்து தான் ஆஷஸ் வெல்லும்!!உண்மை!

Unknown said...

டெஸ்ட்'தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து வரும் காலங்களில் முதலிடம் //
உண்மை தான்.இந்தியாவை வீழ்த்தக் கூடியது!

Anonymous said...

.இறுதியில் பீட்டர்சனின் விக்கட்டை பெற்றதன் மூலம் தனது ஆயுட்கால சந்தோசத்தை பெற்றிருப்பார் டோஹெர்ட்டி(கெயிலின் விக்கட்டை லக்மால் கைப்பற்றியது போல!)//
ஹஹா உண்மை தான்!!

கன்கொன் || Kangon said...

:-)))

ப்ரோட், கற்றிச் ஏற்கனவெ வெளியில்.

இனிங்க்ஸ் தோல்வியடைந்த அணி பின்னர் வெல்வது அசாத்தியமென்றெல்லாம் இல்லை.
2005 ஆஷஷே இங்கிலாந்து அப்படி வென்றது தான். ;-)

ஆனால் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை மறுக்க முடியாது.
பேர்த் இல் பார்ப்போம். :-)

கன்கொன் || Kangon said...

கடைசிப் பின்னூட்டத்தில் ஒரு பிழை.
அணி தோல்வியடைந்த பின்னர் வெல்லுவது அசாத்தியமற்றது என்பது பற்றித்தான் கதைத்தேன்.
முதற்போட்டியில் அவுஸ்ரேலியா இனிங்ஸ்ஸால் வெல்லவில்லை, ஆனால் 200 இற்கு மேற்பட்ட ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. :-)

Unknown said...

Ashwin-WIN said...
Go England Go......
மைந்தன் கிரிக்கட் பதிவும் எழுத வெளிக்கிட்டியல்.. கலக்கல்.. வாழ்த்துக்கள்..//

நன்றி..எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான்..ஹிஹி
ஆனா ஒண்டு,நம்ம அனலிஸ்ட் கன்கோன் அளவுக்கு எதிர் பார்த்தா அது உங்க மகா தப்பு!!
எதோ என்னால முடிஞ்சது.

Unknown said...

யாதவன் said...
சுழன்றிடும் உலகில்
உயிர் பெற்றிடும் நாடு//
ஆஹா...அருமை யாதவன்..

Unknown said...

Anonymous said...
No anna Australia didn't have any chance 2 won this match(except rain).England will win this series but 4-0 is not posible.At the same time England will not loss any matches.This is the start 4 the world cup.England will also win the World Cup.//
ஆம் ஆனால் டெஸ்ட் வேறு,ஒரு நாள் ஆட்டம் வேறு.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஜெஹான் மரினோ

Unknown said...

jorge said...
கலக்கல் கிரிக்கெட் பதிவு..புதுன்மையான பயணம்.வாழ்த்துக்கள்.
இங்கிலாந்து தான் ஆஷஸ் வெல்லும்!!உண்மை!//

நன்றி.ஆமாம் அது தான் எனது ஆசையும் கூட.பார்ப்போம்

Unknown said...

Anonymous said...
.இறுதியில் பீட்டர்சனின் விக்கட்டை பெற்றதன் மூலம் தனது ஆயுட்கால சந்தோசத்தை பெற்றிருப்பார் டோஹெர்ட்டி(கெயிலின் விக்கட்டை லக்மால் கைப்பற்றியது போல!)//
ஹஹா உண்மை தான்!//

ம்ம் லக்மால் இரு முறை கைப்பற்றியுள்ளார்.!

Unknown said...

rasigan said...
டெஸ்ட்'தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து வரும் காலங்களில் முதலிடம் //
உண்மை தான்.இந்தியாவை வீழ்த்தக் கூடியது!//

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துமா என்பது சந்தேகம்.பார்ப்போம்

Unknown said...

ப்ரோட், கற்றிச் ஏற்கனவெ வெளியில்.//
ஆமாம் சற்று முன் தான் கவனித்தேன்..


//இனிங்க்ஸ் தோல்வியடைந்த அணி பின்னர் வெல்வது அசாத்தியமென்றெல்லாம் இல்லை.
2005 ஆஷஷே இங்கிலாந்து அப்படி வென்றது தான். ;-)//
ஆம் ஆனால் அந்த அணி இப்போதில்லையே..
கட்டுக்கோப்பான திறமையான அணி அது.ஆனால் இப்போது இன்னும் டெஸ்ட்'டில் fixed playerz 'ஏ இல்லாமல் அணி மாறிக்கொண்டிருக்கிறது.இந்த அணியால் முடியும் என்பது அசாத்தியமானதே.!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமயான பதிவு நண்பரே.. இங்கிலாந்து வென்று விட்டதாக அறிந்தேன்..

AnushangR said...

புதிய முயற்சி போலும்! வாழ்த்துக்கள்...
உங்களுக்கு இது பற்றியும் பரிபூரண அறிவு, அனுபவம் எல்லாம் இருக்கு போல!
எழுத்துக்கள் எடுத்தியம்புகின்றன...
அது ஏன் சார் ஆஸ்திரேலிய மேல் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?
யாரும் உங்களுக்கு வேண்டாதவங்க அங்க இருக்காங்களோ!
புரிய மாட்டேங்குது ஐயோ! அம்மா!! மண்டைய பிச்சிகிறேன் ம... தான் குறையுது...
எல்லாம் ஒரு மொக்கைக்கு தான் சீரியஸ் ஆக எடுக்காதீங்க MR.சிவம் !!!lol

Unknown said...

வெறும்பய said...
அருமயான பதிவு நண்பரே.. இங்கிலாந்து வென்று விட்டதாக அறிந்தேன்.//
ஆமாம்...வென்றுவிட்டது அண்ணே

Unknown said...

AnushangR said...
புதிய முயற்சி போலும்! வாழ்த்துக்கள்...
உங்களுக்கு இது பற்றியும் பரிபூரண அறிவு, அனுபவம் எல்லாம் இருக்கு போல!
எழுத்துக்கள் எடுத்தியம்புகின்றன...
அது ஏன் சார் ஆஸ்திரேலிய மேல் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?
யாரும் உங்களுக்கு வேண்டாதவங்க அங்க இருக்காங்களோ!
புரிய மாட்டேங்குது ஐயோ! அம்மா!! மண்டைய பிச்சிகிறேன் ம... தான் குறையுது...
எல்லாம் ஒரு மொக்கைக்கு தான் சீரியஸ் ஆக எடுக்காதீங்க MR.சிவம் !!!l//

நன்றி அனுஷ்,
ஹஹா அப்படி ஒன்றும் இல்லை..
எல்லாம் காரணமாத் தான் போலும்!!

lavan said...

ம்ம்ம் நல்ல அலசல்

Related Posts Plugin for WordPress, Blogger...