
ஏமாற்றல்களும் ஏமாறல்களுமாய்
இனம்புரியாத நபர்களுடன்
இனம்புரியாத வாழ்க்கை-புரியும் மட்டும்!!
பழையன கழிதல் போலே
ஞாபகங்கள்..
உறவுகள்..
ஞாபகமின்றியே புதைக்கப்படும்-வேளையில்
புதிய உறவுக்கான அத்திபாரம்
உறுதியாய் அல்லாமல் உறுத்தலாக!
நாம் நல்லவர்கள் தாம்..
இருவரினதும் வாதம்..
பின்புலம் தெரியாதவரை-பிரதிவாதம் இல்லை!
சொந்த மனதுக்காய்-ஓர் உறவு
பெற்ற மனதுக்காய்-புரியாத உறவு!
தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு
வரும் புதியவன்/புதியவளையும்
ஏமாற்றிக்கொண்டு..
முகமூடி அணிந்த கொள்ளையர்கள்...
ஆமாம் வாழ்க்கையை கொள்ளை
கொள்பவர்கள்...
என்ன சொன்னால் தகும்?
நடிப்புத்தான் வாழ்க்கையா?
வாழ்க்கை ஒரு நாடக மேடை
சரிதான் போலும்!!
காதல் தான் வேண்டுமென்றால்
காதலித்திருந்து
உண்மைக் காதலெனில்
பெற்றோர் சொல் வார்த்தை
அமுதமா?
பின்விளைவுகள் தீர்மானிக்காமல்
முன் விழைந்து காதல் கொள்ளல்
முற்றிலும் தவறே!
வாழ்க்கை பல புரிதல்களுக்கான
சந்தர்ப்பம்..
பல விஷயங்கள் புரிகின்றன..
சில புரியாமலே கழிகின்றன..
எதுவுமே புரியவில்லை
சிலர் மனது மட்டும்!!

4 comments:
//நாம் நல்லவர்கள் தாம்..
இருவரினதும் வாதம்..//
ம்ம்...சரிதான்.
அருமை
நிஜங்களின் வெளிப்பாடுகள்
அருமை.................
Post a Comment