Sunday, December 12, 2010

உலகம் சுற்றும் வாலிபன் 12/12/2010

வினோத உலகம்
மனைவியின் பிறந்த நாளுக்கு நெக்லஸ்,கார்,வீடு என்று வாங்கிக் கொடுத்த காலம் மலையேறிப்போய்,ஒரு கணவர் சந்திரனில் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார்!
எல்லாம் நம்ம தமிழர் தான்.இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன்'
னே
தனது மனைவி வசுமதிக்கு சந்திரனில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார்.மனைவி எதியோப்பியாவில் பேராசிரியராக கடமையாற்றி வருகிறார்.
சந்திரனிலுள்ள நிலத்தை விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள அமெரிக்காவின் லூனார் பப்ளிக் சொசைட்டி'யில் எழுபது டொலர் கொடுத்து மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கி பத்திரத்தை மனைவியின் பிறந்த நாளுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்..அநேகமாக நம்ம நாட்டில காட்டிக் கூட அந்த விலைக்கு வாங்க முடியாது!!

சூடான அரசியல்
இலங்கையில் மழை ஒரு பக்கம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது..மறுபக்கம் பாராளுமன்றில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி சண்டை போர்க்களமாகி உள்ளது.
ஜெயலத் ஜெயவர்த்தனே'யில் பிரச்சனை தொடங்கி தற்போது ஐக்கிய தேசியக் கட்சி உப தலைவர் கரு ஜெயசூரிய வரைக்கும் வந்து விட்டது.ரணில் எதோ ஒப்புக்காவது மறுத்துப் பேசுகிறார்.எதிர்காலத் தலை என எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாச'வின் சத்தம் இந்தப் பிரச்சனையில் கேட்கவே இல்லை.
தலைகள் விலகினால் தலையாவது இலகு என்று நினைத்தாரோ என்னமோ..!கட்சி சீர்திருத்த மாநாட்டில் என்ன தான் நடக்கப் போகிறது என்று காத்திருக்கிறேன்!
********************************************************
நோபல் பரிசு வழங்கும் விழாவுக்கு சீனா முதலிலேயே போகாது என்று கூறியிருந்தது.தற்போது இலங்கையும் இந்தியாவும் அந்த விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன!
இந்த முறை நோபல் பரிசில் அமைதிக்கான நோபல் பரிசு சீன நாட்டைச்சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் "லியு ஜியாவோ" என்பவருக்கே நோபல் பரிசு குழுவினரால் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவர் தற்போது சீனாவில் சிறையில் வாடுகிறார்.பரிசு அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரின் மனைவி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டதால் சி.என்.என்,சி.என்.என்.காம் ஆகிய செய்தி நிறுவனங்கள் சீனாவால் முடக்கப்பட்டுள்ளன.கிரிமினல் என கூறி பதினோரு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லியு'க்கு சமாதானப் பரிசு வளங்கப்பட்டதானது சீன மக்கள்'ளின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதட்கான வாய்ப்பை வழங்குகிறதென்று நோபல் பரிசு குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியதை ஆட்சேபித்து சீனா விழாவை புறக்கணித்தது.சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக தன்னை காட்டிக்கொள்ள இலங்கையும் போகப் போவதில்லை என அறிவித்துள்ளது.அதெல்லாம் சரி எதிரும் புதிருமாக இருந்த இந்தியா ஏன் சீனாக்கு ஆதரவு அளிக்கிறது என்பது புரியாத புதிர்!


கலக்கல் காமெடி

பன்னி :இப்ப பாத்ரூம் போனாரே அவர் எப்படி வருவார்?


பிக்காலி:அவர் ரஜினி ரசிகர் எப்ப வருவார் எப்படி வருவார்னு அவருக்கே தெரியாது.


பன்னி:என்னங்க இது பாத்ரூம் கூரையை பிரிச்சிட்டு வர்றாரு?


பிக்காலி:அவர் ரஜினி ரசிகர்ன்னு சொன்னேனே, அவர் வழி தனி வழியாகத்தான் இருக்கும்!

(இன்றைக்கு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள்!!)

****************************************************************
இதுக்கு விளக்கம் தேவை இல்லையென நினைக்கிறேன்..
தேவையானவர்கள் பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.

இன்றைய படப்பதிவு


மைக்கல் ஜாக்சன் மரணமடைந்தாலும் அவரது புகழ் மறையவே இல்லை..
அவர் 1980 'களில் நடன நிகழ்ச்சிகளின் போது அணிந்த தொப்பி மற்றும் கையுறை அண்மையில் இரண்டு கோடிக்கு ஏலம் போய் உள்ளது.செத்தாலும் வாழுறார் மனுஷன்..வாழ வைக்கிறார்!!
ஆனால் இறப்பின் மர்மம் மட்டும் துலங்கவே இல்லை..
இப்படித்தான் ஆரம்பத்தில் டயானா'வின் மரணமும்..
பிரபலமானால் மரணம் புரியாத புதிரோ??

துடிப்பான விளையாட்டு

தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்த நியுசிலாந்து நான்காவது போட்டியிலாவது வெல்லும் என எதிர் பார்த்தேன்.
அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடி 315 ஓட்டங்களை பெற்றது எழு விக்கட் இழப்புக்கு.பிராங்கிளின் அதிரடியாக 98 ஓட்டங்களை 69 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாகப் பெற்றார். நல்ல இலக்கு,நிச்சயம் வெற்றி என பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஆரம்ப விக்கட்'டுகள் போக போக நம்பிக்கை கூடியது.
ஆனால் அடுத்து வந்த யூசுப் பதானின் அதிரடி ஆட்டம் நியுசிலாந்தை நிலைகுலைய வைத்தது..என்னையும் தான்.96 பந்துகளில் 123 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார் பாருங்கள் அதில் எழு நான்கு ஓட்டங்களும் எழு மிகப் பெரிய ஆறு ஓட்டங்களும் அடங்கும்!!
உலகக் கிண்ணத்துக்கு தன்னையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதை உரித்தான சந்தர்ப்பத்தில் தனது துடுப்பு மூலம் கூறியுள்ளார் பதான்.


தொடரை வழித்துத் துடைத்த மகிழ்ச்சியில் இந்தியா..(சச்சின்,சேவாக்,தோனி,சாகிர்,ஹர்பஜன் இல்லாமல்)

என்ன கொடுமையோ!!

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான கட்டண அதிகரிப்பை எதிர்த்து லண்டனில் நாட்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட வேளையில் இடம்பெற்ற சம்பாவிதத்தில் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் பமீலா பயணம் செய்த கார் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது!
ஒரு பக்க கண்ணாடி முற்றாக சேதம் அடைந்துள்ள போதிலும் இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
கட்டணங்கள் யாவும் மூன்று மடங்கள் அதிகரித்ததை இட்டு மாணவர்கள் படிப்பை விட்டு விலகிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நம்ம நண்பர்கள் என்ன பண்ணுகிறார்களோ தெரியவில்லை.உழைப்பதை படிப்புக்கு கட்ட சல்லி மிஞ்சாது கையில் என்பது உண்மை தான் போலும்.
பொதுவுடைமை கல்லூரிகளுக்கான கட்டணங்களைப் பாருங்கள்.லண்டன் தான் முன்னணியில்!!
இங்கிலாந்து-5943 $
தென் கொரியா-4717 $
இத்தாலி-1195 $
ஸ்வீடனில் எந்தவிதக் கட்டணமும் இல்லை!!

அப்ப அவங்க போராடுவதில தப்பு இல்லைங்கிறேன் நான்.
*************************************************************

ஐரோப்பாவில் கடும் குளிர்,பனி..ஸ்காட்லான்ட் போன்ற நாடுகளில் மைனஸ் 23 டிகிரி அளவுக்கு கூட போயிருக்கிறது.
எவ்வாறு தான் தாக்குப் பிடிக்கிறார்களோ..பல வருடங்களின் பின்னர் இவ்வாறு அதிகளவு பனி இம்முறை கொட்டுகிறது.இதனால் நாளாந்த செயற்பாடுகள் மட்டுமன்றி வீதி,விமானப் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன..இலங்கையிலும் வஞ்சகமின்றி மலை கொட்டோகொட்டென்று கொட்டுகிறது.பல வருடங்களின் பின்னர் சில நீர்த் தேக்கங்களின் அணைக்கட்டுகள் நிரம்பி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எல்லாம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளாக இருக்கக்கூடும்.இவ்வாறே போனால் இயற்கை அனர்த்தங்கள் மட்டுமே போதும் உலக அழிவுக்கு!

சண்டே-ஹை-கூ

கல்வைத்து மண் வைத்து
மரக்குற்றி வைத்து
என்ன தான் மனம்வைத்தாலும்
தடுக்க முடியவில்லை..
மடைதிறந்த வெள்ளத்தை!!
(சிச்சுவேசன்'னோ?)

இதொரு புதிய முயற்சி எனக்கு..பதிவு பிடித்திருந்தால் ஒட்டுங்களை மறக்காமல் இடுங்கள்,பின்னூட்டத்தில் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

Post Comment

2 comments:

lavan said...

gud >>>>>>>>>>>>>>>>>

AnushangR said...

nice work sivam. hope you need to improve a bit in arranging things in a symmetric order, coz it luks like chaotic... Plz take it as a constructive suggestion as a true fan and follower of your artistic works....

Related Posts Plugin for WordPress, Blogger...