வழமையான வியஜகாந்த் படங்களைப் போலவே ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தாக்கப்படுவதை தடுக்க
சிறப்பு போலீஸ் மீட்டிங் கூட்டி அதில் கப்டன் பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியமாணவர்கள் அனைத்துத் துறைகளிலுமே திறமையானவர்களாக இருத்தலே காரணம் என்கிறார் விருதகிரி.
தன் தெரிவு சரியானது என்பதை நிரூபிக்க ஓர் இரு அடிதடிகள்.
தாய்லாந்து ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸ்'சே விருதகிரியை உதவிக்கு கூப்பிடுமளவுக்கு திறமையான போலீஸ் அதிகாரி.உள்ளூரில் திருநங்கையரைக் கடத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை விற்கும் கும்பலை இடைவேளைக்கு முதல் முறியடிக்கிறார் விருதகிரி.திருநங்கையரை கொஞ்சம் உயர்வாக சித்தரித்திருக்கிறார் அவர்களது பிரச்சனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.அதில் நடித்த ஐந்தாறு திருநங்கையர் பெயர்களை எழுத்தோட்டத்தில் நன்றி என்று வரிசைப்படுத்தி வேறு இருக்கிறார்.(திருநங்கையர் ஓட்டுகளை எதிர்பார்க்கிறாரோ?).மன்சூர் அலிகான் மோசமான போலீஸ் அதிகாரியாக வந்தாலும் குறிப்பிடத்தக்கதாக இல்லை அவரின் பாத்திரம்.

தங்கை என்று வரும் பொண்ணு(சொந்த தங்கை இல்லை.தன் தகப்பனாரை காப்பாற்றிய நண்பரின் மகள்)
ஒரு சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா போகும் போது அங்கு பெண்களை கடத்தி விபசாரத்துக்கு விற்கும் கும்பல் அவளைக் கடத்திவிடுகிறது.எனவே கப்டனுக்கு இரண்டு பொறுப்புகள்.உடனே பறக்குறார் அவுஸ்திரேலியாக்கு.
அங்கு எவ்வாறு அந்தக் கும்பலை கண்டு பிடிக்கிறார் தங்கையை மீட்கிறாரா,வன்முறைக் கும்பலை ஒழிக்கிறாரா என்பது கிளைமாக்ஸ்.அருண் பாண்டியன் அதிக நாட்களுக்கு பிறகு நடித்திருக்கிறார்.வில்லன் வகையறா தான்,ஆனால் முக்கிய வில்லன் தாய்லாந்து நாட்டுக்காரர்.
ஸ்டண்ட் காட்சிகளில் சிறுவர்களின் கேம்ஸ்'களில் வரும் ஹீரோ சண்டையிடுவது போல் சண்டையிடுகிறார் விருதகிரி.இந்த உடம்பை வைத்துக்கொண்டு இவ்வாறு அந்தரத்தில் பறப்பது எல்லாம் கொஞ்சம் ரிஸ்க்'கானது என்று யாராவது சொல்லி வையுங்கப்பா.விஜய் அந்த ஒல்லி உடம்பை வைத்துக்கொண்டு பறந்த கொடுமைக்கே கோசம் எழுப்பிய ரசிகர்கள் நம்மவர்கள்.

படத்த பார்த்து பயந்திடப் போறீங்க கவனம்..இதுக்கே பயப்பிட்டா எப்பிடி!!
இசை சுந்தர் சி பாபு.எழுத்தோட்டத்தில் வரும் SPB 'யின் பாடலைத் தவிர்த்து மிகுதி அனைத்தும் சுமார் ராகம்.படத்தில் முதல் பாடல் வந்து இரண்டு சீன் முடியவில்லை அடுத்த பாடல்!!வாலி,சிநேகன்,நா.முத்துக்குமார்,உகபாரதி என்று பாடல் எழுதியிருந்தும் அத்தனையும் வீண்.
பின்னணி இசை பரவாயில்லை.
ஆங்கில சொற்பிரயோகங்கள் தமிழில் மாற்றப்பட்டு வருகிறன.ஆனால் தெளிவு இல்லை.போனது வேறு DTS திரையரங்கு.கேட்கவா வேண்டும்.நகைச்சுவை துளி கூட இல்லை..கப்டனின் நீண்ட வசனங்கள் தான் கொஞ்சம் கொஞ்சம் அங்காங்கே சிரிப்பலைகளை தூண்டிவிட்டன!
கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம் நேரில் கேட்டமாதிரி இருந்தது படம் முழுவதிலுமாய்.முதல் காட்சியிலேயே விருதகிரியின் தாய் தகப்பன் சாமி கும்பிடுவது போல விருதகிரியை புகழ ஆரம்பிக்கிறார்கள் பாருங்கள் அந்த லைன்'ன படம் முழுவதும் மெயின்டைன் பண்ணி இருக்காங்க.சன் டிவி நியூஸ்'கு பதிலாக கப்டன் டிவி நியூஸ் போகிறது.
ஒரு வசனம் பேச ஆரம்பித்தால் ஒரு பைக்கட் நொறுக்குத் தீனி சாப்பிட்டு முடித்துவிடலாம்.வசனம் முழுக்க அரசியல்,மக்கள்,இந்தியா,தமிழ்நாட்டு அரசாங்கம்,காசு வாங்கி ஒட்டு போடுதல் என்று பட்டியல் நீளுகிறது.

கப்டன்'கிட்ட செமத்தியா பறந்து பறந்து அடிவாங்கின வெளிநாட்டு பாவிங்க!!
"வாழ்க்கை ஐஸ் கிரீம் மாதிரி உருக முதல் சாப்பிட்டிடனும்","புகழைத் தேடி நாம போகக் கூடாது.புகழ் நம்மளத் தேடி வரணும்" என்று அறுவை அட்வைஸ்'சுகள் வேறு.
முதலாவது பாடலில் அரசன் வேடமணிந்து வருவார் பாருங்கள் இரணியன் வேஷத்துக்கு இவரை மிஞ்ச ஆள் இல்லை போங்கள்!
படம் தொடங்கி பத்து நிமிடத்தில் வீடு போக எந்திரிச்ச முதல் படம் விருதகிரிதான்!(என்ன செய்வது நண்பன் ஒருவன் ஓசில கூட்டிச் சென்றமையால் எழும்பிவர முயன்ற பத்து பன்னிரண்டு சந்தர்ப்பங்களிலும் பிடித்து இருத்திவிட்டான்.சரி இடைவேளையிலாவது போவமேன்றால் பிடித்து இழுத்து குளிர்பானம் நொறுக்குத் தீனி என தந்து வாயை அடைத்துவிட்டான்!).வில்லு,சுறா என்று விஜய்'யின் படங்களை நான் பொறுமையாக இருந்து முழுமையாகப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் என்னதான் விஜய் முயன்றாலும் கப்டன் ஆகா முடியாது என்று தெள்ளத் தெளிவாக விருத்தகிரி மூலம் தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.வெள்ளவத்தை ரொக்சி திரையரங்கு தான் இலங்கையில் விருதகிரியை திரையிடும் ஒரே ஒரு திரையரங்கு என நினைக்கிறேன்.இன்னமும் திரையரங்கை அப்படியே வைத்திருக்கின்றனர்.எந்த வித முன்னேற்றமும் இல்லை..படத் தொல்லை தாங்க முடியாமல் இருக்க மூட்டைப் பூச்சிக் கடி வேறு.என்ன ஒரு இனிமையான அனுபவம் எனக்கு!!
trailer பாருங்க நான் சொன்னது உண்மையா பொய்யா என்று புரியும்!!
தமிழ் சினிமாவின் நல்ல காலம் கப்டன் இதுவரையில் படம் இயக்காமல் இருந்தது!இயக்கத்தில் அனுபவமின்மை தெளிவாகத் தெரிகிறது.இனியும் இயக்காமல்,நடிக்காமல் பேசாமல் முதல்வர் சீட்'டை நோக்கிப் பயணம் செய்வது கேப்டனுக்கும் நல்லது.எங்களைப் போன்ற ரசிகர்களுக்கும் நல்லது!!
மொத்தத்தில் விருதகிரி எனக்கு "வெறுத்த"கிரி!!வெட்டியா இருந்தாலும் இருங்க விருதகிரிக்கு மட்டும் போய்டாதீங்க!!(கப்டன் ரசிகர்கள் மன்னிச்சூ)
பதிவு பிடித்திருந்தால் ஓட்டுகள் மற்றும் விமர்சனங்களை தாருங்கள்.

25 comments:
இனியும் இயக்காமல்,நடிக்காமல் பேசாமல் முதல்வர் சீட்'டை நோக்கிப் பயணம் செய்வது கேப்டனுக்கும் நல்லது///////////
அது கேப்டனுக்கு வேணும்னா நல்லது. மக்களுக்கு ??????
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் (பீ .எஸ் . வீரப்பா )
தைரியமா படம் பார்த்துட்டு வந்துட்டீங்களே....
அருமையான விமர்சனம் தல
\முதலாவது பாடலில் அரசன் வேடமணிந்து வருவார் பாருங்கள் இரணியன் வேஷத்துக்கு இவரை மிஞ்ச ஆள் இல்லை போங்கள்!//
ஹஹா உண்மை தான்
இங்க பாருங்க இது ரத்த பூமி - கேப்டனுக்கு டைரடக்கருங்க சொன்னது
மண்டையன் said...
இனியும் இயக்காமல்,நடிக்காமல் பேசாமல் முதல்வர் சீட்'டை நோக்கிப் பயணம் செய்வது கேப்டனுக்கும் நல்லது///////////
அது கேப்டனுக்கு வேணும்னா நல்லது. மக்களுக்கு ??????
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் (பீ .எஸ் . வீரப்பா //
ஹஹா அப்பிடி வேறயோ??
ரஹீம் கஸாலி said...
தைரியமா படம் பார்த்துட்டு வந்துட்டீங்களே...//
ஆமா பரிசு ஏதாச்சும் தாங்கப்பா!!
jorge said...
அருமையான விமர்சனம் தல
\முதலாவது பாடலில் அரசன் வேடமணிந்து வருவார் பாருங்கள் இரணியன் வேஷத்துக்கு இவரை மிஞ்ச ஆள் இல்லை போங்கள்!//
ஹஹா உண்மை தான்//
நன்றி !!
விக்கி உலகம் said...
இங்க பாருங்க இது ரத்த பூமி - கேப்டனுக்கு டைரடக்கருங்க சொன்னது//
ஹிஹி
ஹஹா பாவம் கேப்டன்
கேப்டன் ஒரு முடிவேட தான் இருக்காரு போலிருக்கு...!
மைந்தன் பொசா...
கப்டன் இன் காதல் பத்தி ஒனும் சொல்லவே இல்ல???
அருமையான விமர்சனம்...........:)..........:)
நல்லதொரு பார்வை...
மதி.சுதா.
நனைவோமா ?
அனுபவம் புதுமையோ? நான் மிஸ் பண்ணீட்டன், இல்ல இல்ல தப்பீட்டனுங்கோ!!!!:)
கேப்டனும் நடிக்கிராராமாம்....
English padam 'Taken' remakennu mention pannama vitutinga thala....
suthan said...
ஹஹா பாவம் கேப்டன்/
ஏனப்பா??
Cool Boy கிருத்திகன். said...
கேப்டன் ஒரு முடிவேட தான் இருக்காரு போலிருக்கு...!//
ஹஹா
yathu said...
மைந்தன் பொசா...
கப்டன் இன் காதல் பத்தி ஒனும் சொல்லவே இல்ல?//
இருந்தா சொல்லி இருப்பம்லே!!
lavan said...
அருமையான விமர்சனம்...........:).....//\
நன்றி
ம.தி.சுதா said...
நல்லதொரு பார்வை...
மதி.சுதா.//
நன்றி மதி
Raventhiraraja said...
அனுபவம் புதுமையோ? நான் மிஸ் பண்ணீட்டன், இல்ல இல்ல தப்பீட்டனுங்கோ!!!!:)
கேப்டனும் நடிக்கிராராமாம்..//
அப்ப பாருங்களேன்!!
ஷண்முகா said...
English padam 'Taken' remakennu mention pannama vitutinga thala....//
ஆமா ஆமா நன்றி பாஸ்
படம் நடித்தவனை விட படத்தை முழுதாக பார்த்தவன்தான் திறமைசாலி..... மகிந்தன்... உங்களுக்குதான் இந்த பெருமையெல்லாம் சேரும்......
வினோத்: இஐவெலைக்கு பிறகு வருபவை எல்லாம் Taken படத்தின் அப்பட்டமான காப்பி: Taken படத்தை ஒரு தரம் பார்த்துவிட்டு இதை ஒருக்கா பார்க்கவும்!
வினோத்: இடைவேளைக்கு பிறகு வருபவை எல்லாம் Taken படத்தின் அப்பட்டமான காப்பி: Taken படத்தை ஒரு தரம் பார்த்துவிட்டு இதை ஒருக்கா பார்க்கவும்!
Post a Comment