கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் அண்மையில் கமல் திரிஷா மாதவன் சங்கீதா நடித்து வெளியாக உள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தில் கவிஞர் என பெயரிடப்படாத கவிஞர் நடிகர் கமல் பாடல்களை எழுதியுள்ளார்.
அந்த கவிதைகளை பார்த்த கவிப்பேரரசு வைரமுத்து கமலின் கவிதைகளுக்கு விசிறியாகிவிட்டராம்!!
இலக்கியச் செறிவோடும் கவிதை நயத்தோடும் எழுதப்பட்ட கவிதைகளை பார்த்து படக்குழுவினர் மட்டுமன்றி கவிப்பேரரசுவும் அடிமையாகிவிட்டார்!தமிழ் திரையுலகில் கமல் ஒரு இரகசியக் கவிஞர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் வைரமுத்து.!
அதுமட்டுமல்லாது மேலும் பல கவிதைகளை கமல் எழுத வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொண்டுள்ளார் வைரமுத்து.
உதயநிதி ஸ்டாலின் தயாரித்த மன்மதன் அம்பு'க்கு அமெரிக்க மற்றும் கனடாவில் திரைப்பட உரிமை மூன்று கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் தசாவதாரத்துக்கு 1 .5 கோடி மட்டுமே பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கமலின் அந்தக் கவிதை இவ்வாறு செல்கிறது பாருங்கள்.கமல் மற்றும் திரிஷா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்...
கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
கலங்கமுள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கை கோர்த்தாளா??
ஒழுக்கம் கேட்டவள் எச்சரிக்கை!
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவமுள்ளவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்தது பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை..
கவிதை இலக்கியம் பேசினாளாயின்
காசை மதியாதாள் எச்சரிக்கை...
உன்னுடன் இருப்பது சுகமேன்றாளா ..
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை..
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கேள்
கூட்டல் ஒன்றே குறியொன்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
ஜோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேஎனக்கொள்
காமம் எனப்படும் பண்டைய செயலில்
காதல் கலவாது பார்த்துக்கொள்!!!
கமலின் இந்தக் கவிதை திரிஷா மற்றும் கமல் குரலில் அந்தப் பாடல் இதோ கேளுங்கள்...
உரையாடல்கள் பல சேர்ந்து அமைந்த பாடல்..கேட்டுப் பாருங்கள் புரியும்!!
திரிஷா:நீங்க பக்திமானா??
கமல்:நான் புத்திமானா என்பதே கேள்விக்குறியாக உள்ளது...
இவ்வாறு தொடர்ந்து செல்கிறது அந்தக் கவிதை..அனைத்தும் அப்பட்டமெனினும் அத்தனையும் உண்மையே..
காமம் எனப்படும் பண்டைய செயலில் காதல் கலவாது பார்த்துக்கொள்!!ஆஹா என்ன ஒரு கவிதை..
அனுபவக் கவிதையோ கமலுக்கு..??
"கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்..
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறைகள் கூடிடக்கண்டேன்"
நிச்சயம் வாழ்க்கையில் ஒரு அனுபவக் கவிதை தான் இது..சமூகத்தில் நடைபெறும் கூத்துகளின் உண்மையான வெளிப்பாடு இந்தக் கவிதை..
தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு தற்பொழுது பெரும்பாலும் "பாடல்கள்'ளே எழுதப்படுகிறன.
கவிதைகள் மிகக் குறைவு,தரமான கவிதைகள் சொற்பமே!!
இசையமைப்பாளரால் வழங்கப்படும் இசைக்கு வார்த்தைகளை நிரப்பும் வேலையே நடைபெறுகிறது..
அல்லாவிடில் பேரரசு தான் தன் படங்களில் "கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்" போன்றனவற்றை தொடர்ந்து "பாடல்கள்" என்ற டைட்டில்'ம் சேர முடியுமா?டி ராஜேந்தர் தான் பேரரசுக்கு குரு எனலாம்.அன்றைய காலங்களில் இவற்றைப் பண்ணினாலும் அவரின் பாடல்கள் ஓரளவுக்கு ஆதல் அர்த்தங்களை புகட்டின.
இவ்வாறான சூழ்நிலையில் கமலின் இந்தக் கவிதை பாடலானது வரவேற்கத் தக்க முயற்சியே.வைரமுத்து பாராட்டியது போல இனி வரும் காலங்களிலும் நாம் கமலின் கவிதைகளை ரசிக்க முடிந்தால் அது தமிழ் திரையுலகிற்கு கமலின் நடிப்பைத் தாண்டிய இன்னொரு சிறந்த பங்களிப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கவிதை முழுவதும் ஆபாச வார்த்தைகள் தானெனினும் வாழ்க்கை பற்றிய புரிதல்களுக்கு இவ்வாறான சமூக விழிப்புணர்ச்சி கவிதைகள் கட்டாயம் தேவை..

2 comments:
ஆம் நானும் கேட்டேன்..மிக அருமையான் கவிதை..
ம்ம் பாடலையும் இணைத்தது அருமை..தொடருங்கள்!!
Post a Comment