Sunday, December 19, 2010

குடை கவிழ்ந்த இங்கிலாந்து!!


என்னத்த சொல்ல..
இது தான் என்னுடைய பதிலாக இருந்தது இன்று முழுவதும்..துவண்டு போயிருந்த அவுஸ்திரேலியாவின் ரசிகர்களின் வெற்றிக்களிப்பின் வெளிப்பாடான அன்புத்தொல்லையால்(?) திக்குமுக்காடிவிட்டேன்.

இங்கிலாந்து வென்றால் தொடர் சப்பென்று போகும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தற்போது மறுபடி உயிர்த்திருக்கிறது என்றால் அது பேர்த் டெஸ்ட் போட்டி மாற்றிய விதம் தான்!
இருநூற்றி அறுபத்தேழு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி என்பது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்..ஆறு மாதங்களின் பின்னர் முதல் வெற்றி.முதலிரண்டு போட்டிகளின் பின்னர் விடிவில்லை அவுஸ்திரேலியாவுக்கு என்றிருக்க பாண்டிங்'இன் நம்பிக்கைக்கு நன்றி செலுத்தியிருக்கிறார் மிட்செல் ஜோன்சன்..பழைய ஜோன்சனை எப்போது பார்க்கலாம் என்று ஆவலாயிருந்த ரசிகர்களுக்கு விருந்தானது மூன்றாவது ஆஷஸ் போட்டி.வழமை போல தனது பந்தின் மூலமும் துடுப்பின் மூலமாகவும் தான் போர்ம்'க்கு வந்தது மட்டுமன்றி அவுஸ்திரேலியாவையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்று விட்டார்.தனியாளாக என்று கூற மாட்டேன் ஆனால் அவரின் எழுச்சி தான் ஏனையோரின் எழுச்சிக்கு காரணமென்றால் மறுக்க இயலாது.
போடு மச்சான் அஞ்சு..
உண்ட போலு நஞ்சு!!

முதல் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 62 ஓட்டங்கள் தான் போட்டியை அவுஸ்திரேலியாவின் பக்கம் திருப்பிய முக்கிய காரணி..அத்துடன் 32 ஓட்டங்களுக்கு ஆறு விக்கட்டுகள் என்ற சிறந்த பெறுதியும்,இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல்
ஹரிஸ்'இற்கு பக்கபலமாக பெற்ற 3 விக்கட்டுகளும் அடிலெயிட் அவருக்கு மிக ராசியான மைதானம் என பெயரைக் கொடுத்திருக்கிறது,.நான்கு டெஸ்ட்'டில் மொத்தமாக 30 விக்கெட்'டுகளை 18 .33 என்ற சராசரியில் சாதித்திருக்கிறார் ஜோன்சன்.

கிட்டத்தட்ட பார்த்தால் அவுஸ்திரேலியாவுக்கு இன்னிங்க்ஸ் வெற்றி மாதிரித் தான்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 309 ஓட்டங்களை விட ஒரு ஓட்டம் அதிகமாக எனது இங்கிலாந்து அணி இருந் இன்னிங்க்ஸ்'இலும் சேர்த்துப் பெற்றிருக்கிறது.முதல் இன்னிங்க்ஸ்'இல் ஜோன்சனும் இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல் ஹரிஸ்'சும் போட்டுப் புரட்டியிருக்கிறார்கள்.ஹரிஸ்'இற்கு இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சுப் பெறுதி அவரின் சிறந்த டெஸ்ட் பெறுதி(6 /47 ).
எழுச்சி!!

அவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்!!
மனுஷன் அந்தமாதிரி போர்ம்'இல் இருக்கிறார்.மொத்தமாக 517 ஓட்டங்களை 103 .4 ௦ என்னும் சராசரியுடன் அதிக ஓட்டம் குவித்த வீரர்கள் பட்டியலில் குக்'ஐ பின் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.ஹசி,ஹாடின் இருவரும் அவுஸ்திரேலியா தடுமாறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கை கொடுத்திருக்கின்றனர்.பாண்டிங் மோசமாக ஆறு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து 83 ஓட்டங்கள்.சராசரி 16 !!கிளார்க் 115 ஓட்டங்கள்.இதில் பாண்டிங்'கு இப்போது கையில் காயம் வேறு..ஏழரைச் சனி உச்சத்தில் நடனம்!

இங்கிலாந்தில் நான் எதிர்பார்த்த கொலிங்க்வூட் ,பெல் இருவரும் சோபிக்கவில்லை.மொத்தமாக 62 ஓட்டங்களை 15 .5 என்னும் சராசரியுடன் கொண்டிருக்கிறார் கொலிங்க்வூட்.அடுத்த போட்டியிலாவது போர்ம்'க்கு வருவார் என நம்புகிறேன்.ப்ரயர்'ம் பெரிதாக சோபிக்கவில்லை பயிற்சி ஆட்டத்தை தவிர்த்து.மூன்று போட்டிகளிலும்(4 இன்னிங்க்ஸ்) மொத்தமாக 49 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருக்கிறார்.
சொதப்பல்..தொடருமா?

பரோட்'கு பதிலாக அணியில் வந்த த்ரேம்லேட் எட்டு விக்கட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை தந்திருக்கிறார்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 5 /87 டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி. பின்(finn )5 விக்கட்டுகள் ,அன்டர்சன் நான்கு விக்கட்டுகள் எடுத்திருந்தாலும் ஸ்வான் தடுமாறுகிறார்.பிட்ச் பௌன்ஸ் என்றதால் சுழலுக்கு பெரிதாக சாதகமான சூழல் இருந்திருக்காது.ஷேன் வார்ன் கூட பெரிதாக சாதிக்கவில்லை இந்த பேர்த் மைதானத்தில்.பார்ப்போம் அடுத்த டெஸ்ட்'டில்.

முப்பத்தியாறாவது பிறந்த தின பரிசாக பாண்டிங்'கு பேர்த் வெற்றி அமைந்திருக்கிறது.முதல் டெஸ்ட்'டில் சிடிலுக்கு ஹாட்ரிக் கிடைத்தது பிறந்தநாளுக்கு.நம்ம இங்கிலாந்துக்காரருக்கு பிறந்த நாள் ஏதும் இல்லையோ??
அய்யா நம்மள வாழவைச்சிட்டாங்க!!

மெல்போர்ன்'இல் தொடங்கும் நான்காவது டெஸ்ட்'டில்(பொக்சிங் டே)
அவுஸ்திரேலியா அதே அணியுடன் களமிறங்குகிறது,பிளஸ் நம்பிக்கையுடன்!
தற்பொழுது ஜோசனை எல்லாம் இங்கிலாந்து தரப்பு மீதே.நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.என்றாலும் தோல்விக்கு முக்கிய காரணம் துடுப்பாட்டமே.எனவே துடுப்பாட்டத்தில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.பெல்'ஐ பீட்டர்சனுக்கு முன்னர் களமிறக்கினால் அவரின் துடுப்பிட்கு வேலை வைக்கலாம் என நினைக்கிறேன்.
கடந்த நான்கு டெஸ்ட்' போட்டிகளிலும் பேர்த்'தில் முன்னூறு ஓட்டங்களால் தாண்டி பெறப்பட்டிருக்கின்றமையால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நன்கு விளையாடி இருந்தால் வெற்றி இடம் மாறி இருக்கும்.அவ்வாறு நடந்திருந்தால் அடுத்த இரண்டு டெஸ்ட்'டும் இங்கிலாந்தே வென்றிருக்கும் காரணம் அவுஸ்திரேலியர்களின் மனநிலை முற்றாக குழம்பி இருந்திருக்கும்.ஆனால் நடந்தது வேறு...
இரண்டு இன்னிங்க்ஸ்'இலும் இருநூறுக்கு குறைவான ஓட்டங்கள்..பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு சோதனை!யாரும் நிதானமானவர்களாக காணப்படவில்லை.வந்தார்கள் போனார்கள்.நின்று துடுப்பாட மறந்துவிட்டார்கள்.

இப்போது முக்கிய விடயம் என்னவெனில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் மனநிலையை திடமாக வைத்திருப்பதே.அல்லாவிடில் மெல்போர்ன் டெஸ்ட்'டும் அவர்கள் வசம் இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது.
திறமையில் எந்தக்குறையும் இல்லை.மெல்போர்ன் நம் வசமே....(நம்பிக்கை தாங்க வாழ்க்கை)!!


டிஸ்கி:பாண்டிங் ஏதும் சூதாட்டம் பண்ணி இருப்பாரோ இங்கிலாந்து துடுப்பாட்டவீரர்களோடு??ஹிஹி

Post Comment

21 comments:

sinmajan said...

தோற்றாத்தான் பொண்டிங்கை நாறடிக்கிறாங்க பசங்க எண்டு பார்த்தா வென்றாலுமா..??
பொண்டிங்குக்கு ஜெயவேவா.. ;)

கன்கொன் || Kangon said...

:-)))

ஆஷஷ் தொடர் இப்போது தான் ஆஷஷ் தொடர் போன்று உள்ளது. ;-)

பெல் பீற்றர்சனுக்கு முன்பு துடுப்பெடுத்தாடுவது வாய்ப்பில்லை, கொலிங்வூட் இற்கு மேல் செல்வது தான் தற்போதைக்கு சாத்தியம், அதையே அடுத்த போட்டியில் எதிர்பார்க்கிறேன்.

இங்கிலாந்து இரசிகரா இருந்தாலும் நடுநிலையா எழுதினதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். :-)

suthan.t said...

//நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.//
உண்மை தான்.நானும் எதிர்பார்க்கிறேன்

KANA VARO said...

என்னத்தை சொல்ல! எல்லாம் நேரம்ஃ

SShathiesh-சதீஷ். said...

அட பாண்டிங் ஜெயிச்சிட்டாரா?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்!ஃஃஃஃ
அருமையான பார்வை வாழ்த்துக்கள்... அவர் தானே அந்த அணியை தாங்கி வைத்திருக்கிறார்...

மைந்தன் சிவா said...

sinmajan said...
தோற்றாத்தான் பொண்டிங்கை நாறடிக்கிறாங்க பசங்க எண்டு பார்த்தா வென்றாலுமா..??
பொண்டிங்குக்கு ஜெயவேவா.. ;//

ஹிஹி என்ன செய்ய அவர் தானே இப்ப ஊறுகாய்!!

மைந்தன் சிவா said...

கன்கொன் || Kangon said...
:-)))

ஆஷஷ் தொடர் இப்போது தான் ஆஷஷ் தொடர் போன்று உள்ளது. ;-)

பெல் பீற்றர்சனுக்கு முன்பு துடுப்பெடுத்தாடுவது வாய்ப்பில்லை, கொலிங்வூட் இற்கு மேல் செல்வது தான் தற்போதைக்கு சாத்தியம், அதையே அடுத்த போட்டியில் எதிர்பார்க்கிறேன்.

இங்கிலாந்து இரசிகரா இருந்தாலும் நடுநிலையா எழுதினதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். :-)//

நன்றி தல!!என்ன தான் இருந்தாலும் உங்கள மாதிரி வராது தான்..

மைந்தன் சிவா said...

suthan.t said...
//நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.//
உண்மை தான்.நானும் எதிர்பார்க்கிறேன்//

ஆமா..

மைந்தன் சிவா said...

KANA VARO said...
என்னத்தை சொல்ல! எல்லாம் நேரம்//

ஹிஹி நீங்களும் நம்ம பக்கமா?

மைந்தன் சிவா said...

SShathiesh-சதீஷ். said...
அட பாண்டிங் ஜெயிச்சிட்டாரா?

ஆமாங்க..எனக்கும் அதே சந்தேகம் தான்..

மைந்தன் சிவா said...

ம.தி.சுதா said...
ஃஃஃஃஅவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்!ஃஃஃஃ
அருமையான பார்வை வாழ்த்துக்கள்... அவர் தானே அந்த அணியை தாங்கி வைத்திருக்கிறார்..//

நன்றி மதி..

Subankan said...

நீங்களுமா?

:))

lavan said...

gud 1 !!!!!!!!!!

Anuthinan S said...

அண்ணே இங்கிலாந்து பட்சி நீங்கள் நடுநிலைமையாக எழுதுவதை பார்த்தால், அடுத்த ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியா கையிலா??? என்று சந்தேகமே வந்துட்டுது!!!

வதீஸ்-Vathees said...

என்ன கொடுமையிது...

மைந்தன் சிவா said...

Subankan said...
நீங்களுமா?
//

ஹிஹி ஆமா

மைந்தன் சிவா said...

lavan said...
gud 1 !!!!//

நன்றி டா நண்பா

மைந்தன் சிவா said...

Anuthinan S said...
அண்ணே இங்கிலாந்து பட்சி நீங்கள் நடுநிலைமையாக எழுதுவதை பார்த்தால், அடுத்த ஆஷஸ் போட்டி ஆஸ்திரேலியா கையிலா??? என்று சந்தேகமே வந்துட்டுது!!//
அப்பிடி எல்லாம் வரப்பிடாது..கனவு காணாதீங்க பாஸ் ஹிஹி

மைந்தன் சிவா said...

வதீஸ்-Vathees said...
என்ன கொடுமையிது..//
ஏனப்பா?

LOSHAN said...

ஆழ்ந்த அனுதாபங்கள்..
துள்ளிய மாடுகள் பொதி சுமக்கின்றன :)
என்ன அதிசயம் எனது பதிவிலும் இதே படங்களைத் தான் இட்டேன் :) #ஒரே மனநிலை??

நடுநிலையாக எழுதியுள்ள போதிலும் சோகம் தெரிகிறது..

அஹா ஹா ஹா..

நானும் Collingwood ரசிகன் தான் :)

Related Posts Plugin for WordPress, Blogger...