Monday, February 14, 2011

காதலர் தின ஸ்பெஷல்-Enjoy Friendz

காதலர் தினம்..
இன்றைய உலகின் மிகப் பிரபல்யமான முன்கூட்டியே எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் தூண்டிவிடக்கூடிய ஒரு நாள்.
தினத்தை எவ்வாறு சிறப்பிக்கலாமென்று காதலர்களும்,இவர்கள் என்ன பண்ணப்போகிறார்கள் என்று அடுப்பின் மேல் குந்தியவர்களாக பெற்றோரும் ஒவ்வொரு ஆண்டும் இந்த காதலர் தினத்துக்கு அட்டேன்சன் தாறாங்க.

சிலருக்கு மட்டுமே எட்டும் கனியென அந்தக்காலத்தில் இருந்த காதல் இன்று பெரும்பாலும் அனைவருக்கும் எட்டிய கனியாக மாறியுள்ளது என்பது மறுப்பதற்கல்ல.உண்மைக் காதல்,பொய்க் காதல் இந்தப்பிரச்சனை காலம் காலமாக இருந்துவருகிறதால் இதனைப் பற்றி கதைத்து எவ்வித பயன்பாடுகளும் இல்லை.மாறாக இன்று அனைவருக்கும் எட்டும் நிலையிலுள்ள காதலை எத்தனை பேர் திருமணம்,வாழ்க்கை என்று நீண்ட கால பந்தமாக மாற்றிச்செல்கின்றனர் என்பதே கேள்வி..

எந்த ஒரு பையனும் பொண்ணும் சிறு வயதுகளிலேயே காதலில் விழுவது இன்று கண்கூடாக பார்க்கப்படும் விடயம்.தெருக்கள்,பஸ்கள் என்று எங்கும் காண முடிகிறது.காதலின் உண்மையான விளக்கம் என்னவென்று தெரியாத வயதில் காதல்.இதனை வெறும் எதிர்ப்பால் கவர்ச்சியா அல்லது உண்மையான காதலா என்று உணரும் பக்குவம் அவர்களுக்கு இருக்கப்போவதில்லை.
ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு பதினைந்து பதினாறு வயதில் வரும் காதலுக்கும் இருபதுகளில் வரும் காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.எதிர்பார்ப்புக்கள் லட்சியம் என பல விடயங்கள் இருபதுகள் காதலில் காணப்படும் வேளையில் இவைகள் பதின்ம வயதில் வரும் காதலுக்கு பெரிதாக தென்படப்போவதில்லை.

ஸ்டேடஸ்'சுக்காக காதலிப்பது,பொழுதுபோக்கிற்கு காதலிப்பது என்று பல விதமான காதல்கள் இன்று காணமுடியும்.காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள்.உண்மையான காதலின் முடிவு என்பது வாழ்ந்த வாழ்க்கையில் உயிர் உடலைவிட்டு பிரியும் போது தான் ஏற்படுகிறது.காதலிப்பது,காதலில் விழுவது இலகு,மிக இலகு.ஆனால் வாழ்க்கை என்று வரும் போது பல்வேறு சிக்கல்கள்,குழப்பங்கள்,சவால்கள்..அத்தனையையும் தாண்டி ஒற்றுமையான திருமண வாழ்க்கையை அடைவதென்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை.அத்துணை இலகுவான விடயமும் அல்ல.காதலிக்கத் தொடங்கும் போதே தெளிவான குறிக்கோள் இருத்தல் வேண்டும்.வெறுமனே தங்கள் இச்சைகளை பூர்த்தி செய்வதற்காக காதலிப்பவர்களது காதல் இடைநடுவில் முறிவடைவது கண்கூடு.

எதனை நோக்கி செல்கிறோம்..காதலை வெற்றிபெறவைக்க தேவையான மனவுறுதி இருக்கிறதா,சரியான துணையைத் தான் தெரிவுசெய்கிறோமா என்பதில் மிகுந்த கவனம் தேவை.அப்போது தான் காதல் வெற்றி பெறும்.
காதலர் தினத்தோடு அன்பை முடித்துவிடவேண்டாம். இருவரின் வாழ்நாள் முழுவதும் அது நீடிக்கட்டும். இருவரும் இணைந்து முதியோர் ஆகும்போதுகூட, காலத்தினால் ஏற்படும் மாறுதல்களையும் ஏற்றுக் கொண்டு மாறாத அன்பையும், காதலையும் தொடர்ந்து செலுத்துவதுதான் காதலர் தினத்தின் மிக முக்கிய கருத்து.

காதலிக்கத்தொடங்கும் ஒருவன் அல்லது ஒருத்தி அந்தக் காதலை வெற்றிபெறச் செய்ய எத்தனை சவால்களை சந்திக்கின்றனர் என்பது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு புலப்படப்போவதில்லை.அவர்களுக்கு காதலிக்கின்றார்கள் என்பது மட்டும் தான் தெரியும்.காரணம் ஆழம் தெரியாமல் காலை விடுவது போல் இன்றைய இளைய சமுதாயத்தில் பெரும்பாலானோர் காதலின் ஆழம் புரியாமல் இறங்கிவிடுகின்றனர்.இறங்கியபின்னர் வரும் சவால்கள் பிரச்சனைகளை சந்திக்கமுடியாது சமாளிக்கமுடியாது காதலை கைவிட்டுவிடுகின்றனர்.
காதல் என்பது புனிதமானது..இனிமையானது..அதே சமயம் சவாலானது..சிக்கலானது என்பதையும் காதலிப்பவர்கள் காதலிக்கவிருப்போர் அவதானத்துடன் நோக்குதல் வேண்டும்.

காதலர் தின எனக்கு பிடித்த பாடல்..காலமெல்லாம் காதல் வாழ்க என்று காதல் கோட்டை திரைப்படத்தில் அமைந்த பாடல்..
அர்த்தமுள்ள பாடல்.வாலியின் வரிகளில்..
.
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி (காலமெலாம்)

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே (காலமெலாம்)

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே..

உங்கள் அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள்..

டிஸ்கி:காதலை பற்றி எழுத இவனுக்கென்ன வயசு எண்டு ஜோசிக்கிறது விளங்குது...ரஷ்யால அஞ்சு வயசு சிறுவனே பெண்களை கவர்வது எப்படி என்று பொஸ்தகம் எழுதும் போது...நான் இத பண்ண கூடாதா??

Post Comment

13 comments:

ம.தி.சுதா said...

நல்ல படலுடன் பகிர்வு அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

சக்தி கல்வி மையம் said...

காதலை பற்றி எழுத இவனுக்கென்ன வயசு எண்டு ஜோசிக்கிறது விளங்குது...ரஷ்யால அஞ்சு வயசு சிறுவனே பெண்களை கவர்வது எப்படி என்று பொஸ்தகம் எழுதும் போது...நான் இத பண்ண கூடாதா??
கன்டிப்பா போடலாம் தலைவரே..

ம.தி.சுதா said...

followers நெல்சனில் நிக்குJ கவனம் அதுவும் இன்னிக்கு பொல்லாத நாள் கவனமா chat பண்ணங்க...

Unknown said...

ம.தி.சுதா said...
நல்ல படலுடன் பகிர்வு அருமை..
//
நன்றி பாஸ்..

Unknown said...

sakthistudycentre-கருன் said...
காதலை பற்றி எழுத இவனுக்கென்ன வயசு எண்டு ஜோசிக்கிறது விளங்குது...ரஷ்யால அஞ்சு வயசு சிறுவனே பெண்களை கவர்வது எப்படி என்று பொஸ்தகம் எழுதும் போது...நான் இத பண்ண கூடாதா??
கன்டிப்பா போடலாம் தலைவரே.//

ஆஹா நன்றி நன்றி..அதான் எழுதீட்டம்லே!

Unknown said...

ம.தி.சுதா said...
followers நெல்சனில் நிக்குJ கவனம் அதுவும் இன்னிக்கு பொல்லாத நாள் கவனமா chat பண்ணங்க.//
அது அப்பிட்யே தாங்க நிக்குது..இவன் உருப்பட மாட்டன்னு எவனுமே சேருறாங்க இல்ல!!

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கலா இருக்கு.....

கவி அழகன் said...

நல்லாயிருக்கு ....வாழ்த்துக்கள்

ஆதவா said...

என்னங்க... ஒரு காதல் பாடமே நடத்திட்டீங்க...
பாடல் வரிகள் பகிர்வுக்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

Jana said...

அட... காதலுடன் பதிவா? உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

கார்த்தி said...

/* எதனை நோக்கி செல்கிறோம்..காதலை வெற்றிபெறவைக்க தேவையான மனவுறுதி இருக்கிறதா,சரியான துணையைத் தான் தெரிவுசெய்கிறோமா என்பதில் மிகுந்த கவனம் தேவை.அப்போது தான் காதல் வெற்றி பெறும். */

அய்யோ என்ன கொடுமையப்பா இது!! யார் சொன்னாலும் கேட்டிருக்கலாம் மைந்தன் சிவா இதை சொல்லுவதால ஒருதரும் இதை அட்வைசா எடுக்க வேண்டாம்!!!
இதில எதாவது லெக்சர் பண்ணுறியளோ??

Pirasanna said...

Wishes Sir...

Have a blessed and successfull year ahead...

Related Posts Plugin for WordPress, Blogger...