Friday, February 25, 2011

நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!


"The Economist" சஞ்சிகைஉலகின் பொருளாதார மற்றும் சமூக விடயங்களை அடிக்கடி புட்டு புட்டு வைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றி வரும் ஒரு சஞ்சிகை.
லண்டனை தலைமையகமாக கொண்டு வெளிவரும் சஞ்சிகை இது.
இந்த சஞ்சிகை தான் உலகின் மிக மோசமான பத்து தலைநகரங்களில் ஒன்றாக கொழும்பு இருக்கின்றது என செய்தி வெளியிட்டிருக்கிறது.

வெறுமனே அல்லாமல் முப்பதுய் அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை வெளியுயட்டிருக்கிறது தி எகோநோமிஸ்ட்.கல்வி,சுகாதாரம்,தனி நபர் பாதுகாப்பு போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
மோசமான தலைநகர் பட்டியலில் பத்தாவது இடத்தில் இலங்கை தலைநகர் அமைந்திருப்பதானது இலங்கையின் உண்மை நிலையினை பட்டியலிட்டு காட்டியிருக்கிறது என்று கூறலாம்.


அத்துடன் சார்க் நாடுகளில் மூன்று நாடுகள் இந்த டாப் டென் பட்டியலில் உள்ளடங்கி இருப்பது தான் இன்னமும் கவலைக்குரியது.பாக்கிஸ்தான் தலைநகர் கராச்சி,மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா ஆகியனவே மற்றைய இரண்டு நாடுகளுமாகும்.

சார்க் நாடுகள் பொருளாதார சமூக கலாச்சார ரீதியின் இன்னமும் பின்தங்கியே காணப்படுகிறது என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் தேவைப்படாது.ஆச்சரியம் இந்தியா டாப் டென்'க்குள் இல்லை.(சிரியுங்க இந்திய நண்பர்களே,சந்தோசப்படுங்க!)
கொழும்பை பொறுத்தவரையில் தட்டு வீடுகள்(பிளட்ஸ்) இருக்குமளவுக்கு குப்பங்களும்,ரயில் ஓர வீடுகளும்,பாதையோர குடில்களும் அங்காங்கே காணப்படுகின்றமை இலங்கை தலை நகரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்குமென நினைக்கிறேன்..
அரசாங்கம் எங்கு இதனைப்பற்றி கவலை கொள்ளப்போகிறது?
அண்மையில் தான் அழகான கோல் பேஸ்(galle face )கடல்கரையில் அரசுக்கு சொந்தமான காணி பல மில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கைமாறி இருக்கிறது.
அதனை வைத்தாவது மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றலாம்..இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி அரசியல்வாதிகள் என்ன பண்ணுகிறார்கள் என்று நான் பட்டியலிட்டு காட்டியா உங்களுக்கு தெரிய வேண்டும்?

பட்டியலின் முதல் இடத்தில் பணவீக்கத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஜிம்பாபே தலைநகர் ஹராரே காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது!


நைஜீரியா-லாகோஸ்,அல்ஜீரியா-அல்ஜியேர்ஸ்,ஈரான்-தெகிரான்,செனகல்-டாகர்,கமரூன்-தவுலா,பப்புவா நியூகினி-போர்ட் மோர்செபி ஆகியன ஏனைய நாடுகளாகும்.


சரி மேட்டர்'க்கு வருவம் பாஸ்,

நூறாவது பதிவு...
எல்லாரும் எழும்பி நின்னு கை தட்டுங்க பார்க்கலாம்?
அந்த மரியாதை இருக்கணும்..என்ன சொன்னாலும் பண்றாங்களே ரொம்ப பாசக்கார பயபுள்ளைங்க!

ஆரம்பத்தில் "கவியுலகம்" என்ற பெயரில் கவிதைகளையும்,பின்னர்
"மைந்தனின் மனதில்"என்ற பெயரில் வேறுபட்ட ஆக்கங்களையும்(ஹிஹி பெரும்பாலும் மொக்கை பதிவுகள் தானுங்க)
பதிவுலகில் பகிர்ந்து வந்துள்ளேன்.

இத்தனை காலமும் முயன்று முயன்று இப்ப கொஞ்ச நாட்களாகத் தான் இன்ட்லி,தமிழ்மணத்தில
எனது பதிவுகளுக்கு ஓட்டுகள் பதிவுகளை பிரபலமாக்குமளவுக்கு கிடைக்கின்றன.
பின்னூட்டங்களும் பல பக்கத்திலிருந்து வருகின்றன.சந்தோசம்..ஒரு பதிவருக்கு(?)வேறென்ன வேண்டும்?
அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்..
உங்கள் அனைவருடனுமான நல்லுறவு தொடர்ந்து பேணப்படும்.

பதிவு பயனுள்ளதோ,வெறும் மொக்கையோ அத்தனையையும் கண் கலங்காமல் கோபப்படாமல்
படித்துவரும் வாசகர்களுக்கும் எனது நன்றிகள்..


நன்றி மறப்பது நன்றன்று..
அது மாதிரியே வரும் காலங்களில் எனக்கு ஆதரவளிக்க உங்களுக்கு முன்கூட்டிய நன்றிகள்!


Post Comment

42 comments:

சி.பி.செந்தில்குமார் said...

muhda முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>சரி மேட்டர்'க்கு வருவம்

எங்கே ? எங்கே?

சி.பி.செந்தில்குமார் said...

>>>(ஹிஹி பெரும்பாலும் மொக்கை பதிவுகள் தானுங்க)

அதாவது என்னை மாதிரி...

ரஹீம் கஸ்ஸாலி said...

present

சி.பி.செந்தில்குமார் said...

100 க்கு வாழ்த்துக்கள்.ஆனா உங்க ஃபிகர் ஃபோட்டோவஒ அனுப்பறேன்னு சொல்லி அனுப்பாம விட்டதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு பண்ரேன்

Anonymous said...

அப்படி என்றால் டெல்லி டாப் டென்னில் வரவிலலையாஅ.. சென்னையாவது வந்திருக்க வேண்டும் அல்லவாஅ............. so bad. Economist hiding the truth................. i can't accept. India should get due place in top ten.......

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
muhda முத வெட்டு//

என்ன பாஸ் ஸ்டையில் மாறிடிச்சா?இங்கிலீசும் சேருது?

இங்கிலீசு கிளாஸ் போறீங்களோ??

tamilan said...

அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

..

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
>சரி மேட்டர்'க்கு வருவம்

எங்கே ? எங்கே?//

ஹிஹி ஏன்யா??கொலை வெறி பசங்க

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>(ஹிஹி பெரும்பாலும் மொக்கை பதிவுகள் தானுங்க)

அதாவது என்னை மாதிரி.//

பரவாலையே கப்'னு பிடிச்சிட்டீங்க?நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

Unknown said...

//ரஹீம் கஸாலி said...
ப்ரெசென்ட்//

வாங்க

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
100 க்கு வாழ்த்துக்கள்.ஆனா உங்க ஃபிகர் ஃபோட்டோவஒ அனுப்பறேன்னு சொல்லி அனுப்பாம விட்டதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு பண்ரேன்//

நான் எப்ப சொன்னேன்??

அவங்களாவே ஒரு முடிவெடுத்து அவங்களாவே வெளிநடப்பு பண்ராங்கையா...

எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!!

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா...........

ஆங் ஒன்னு மறந்துட்டேன் உருப்படியான பதிவுக்கு நன்றி ஹி ஹி!

புது கடைக்கு வரவேற்கிறேன்

http://gladiatorveeran.blogspot.com/

Unknown said...

//இக்பால் செல்வன் said...
அப்படி என்றால் டெல்லி டாப் டென்னில் வரவிலலையாஅ.. சென்னையாவது வந்திருக்க வேண்டும் அல்லவாஅ............. so bad. Economist hiding the truth................. i can't accept. India should get due place in top ten......./

சென்னை வரவில்லை...சென்னை இந்திய தலைநகராக இருந்திருந்தால் வந்திருக்கக்கூடும்!!ஹிஹி

Unknown said...

//அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா...........

ஆங் ஒன்னு மறந்துட்டேன் உருப்படியான பதிவுக்கு நன்றி ஹி ஹி!//

நக்கலு??ம்ம் உஸ்!

maruthamooran said...

வாழ்த்துக்கள் Bro!

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

//மருதமூரான். said...
வாழ்த்துக்கள் Bro!//

ஆ...தாங்க்சு பாஸ்

Unknown said...

//சங்கவி said...
நல்ல பதிவு...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.//
வாங்க நன்றி அண்ணே..

பாலா said...

நூறு ஆயிரமாகட்டும். மனதார வாழ்த்துகிறேன்.

ம.தி.சுதா said...

அட நம்ம மைந்தன் செஞ்சுரியா ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... கொழும்பு உண்மையில் நகரமா ? நரகமா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

ம.தி.சுதா said...

மைந்து... எந்த லோறிக்குள்ள தலையைக் கொடுத்தீர் இப்புபுபுடி நசிச்சிட்டானே கட்டேல போறவன்...

Unknown said...

//பாலா said...
நூறு ஆயிரமாகட்டும். மனதார வாழ்த்துகிறேன்.//

நன்றிகள்...

Unknown said...

//♔ம.தி.சுதா♔ said...
அட நம்ம மைந்தன் செஞ்சுரியா ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... கொழும்பு உண்மையில் நகரமா ? நரகமா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//

ஆமா பாஸ் ஒரு மாதிரி தேத்திட்டன் பாருங்க..

ஹிஹி நல்ல கேள்வி கேட்டீங்க போங்க

Unknown said...

//♔ம.தி.சுதா♔ said...
மைந்து... எந்த லோறிக்குள்ள தலையைக் கொடுத்தீர் இப்புபுபுடி நசிச்சிட்டானே கட்டேல போறவன்...//

அது தானே..
அவனுக்கு கட்டையும் கொடுக்க கூடாது...

சக்தி கல்வி மையம் said...

தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

Unknown said...

வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் வந்துடடேன்..

பாட்டு ரசிகன் said...

தங்களின் 100 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..

முயற்ச்சியோடு தொடருங்கள்..

Chitra said...

பதிவு பயனுள்ளதோ,வெறும் மொக்கையோ அத்தனையையும் கண் கலங்காமல் கோபப்படாமல்
படித்துவரும் வாசகர்களுக்கும் எனது நன்றிகள்..


.....எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்... நாங்க ரொம்ப நல்லவங்க.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

பொன் மாலை பொழுது said...

வலைத்தளம் சிறப்பாக இருக்கிறது. கொழும்பு நகரின் படங்கள் அழகாக இருந்தாலும் மோசமான தலைநகரம் வரிசையில் இருப்பது நன்றாக இல்லை. என்ன இருந்தாலும் நம் தமிழர்களும் வசிக்கும் இடமல்லவா?
இப்படி குப்புற படுத்துக்கொண்டு தாங்க்ஸ் சொல்வானேன்? :)))
தொடருங்கள்.

ஆதவா said...

மைந்தன்... 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மொக்கைகளை பெருமளவில் தவிர்த்து, நல்ல பதிவுகளைப் போட இச்சமயத்தில் வேண்டிக் கொள்கிறேன்.

Ashwin-WIN said...

நூறுக்கு வாழ்த்துக்கள் கொழும்பின் மைந்தா.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் நண்பரே நல்லவிசஐம் பகிர்ந்து கொண்டதிற்கும் 100பதிவுக்கும்

Anonymous said...

தப்சிய விட்டிட்டு தலை நகரத்துக்கு மாறிடிங்க போல .............................
உங்க நூரூ பதிவும் வாசிச்சங்களே அவங்களுக்கு தான் வாழ்த்து தெரிவிக்கணும் .................
.... ......இருந்தாலும் வாழ்த்துக்கள் ..................கடவுளே நீ தான் காப்பாத்தனும்

Jana said...

100பதிவுக்கு Wishes

Anonymous said...

ஆரம்பத்தில் "கவியுலகம்" என்ற பெயரில் கவிதைகளையும்,பின்னர்
"மைந்தனின் மனதில்"என்ற பெயரில் வேறுபட்ட ஆக்கங்களையும்(ஹிஹி பெரும்பாலும் மொக்கை பதிவுகள் தானுங்க)

oru vaasagam sonnalum thiruvasagama sonninga..........ippdithan unmaya sollanum

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் நண்பரே

கார்த்தி said...

வாழத்துக்கள் மைந்தனின் ஓலத்துக்கு!

sothilingam said...

100 வது பதிவு சுலபமா வந்திடும் ஆனா 126 போல்லோவேர்ஸ் வைத்திருக்கிறது சுலபமான காரியம் இல்லை
மிக குறுகிய காலத்தில் மிக பெரிய அங்கீகாரம் ப்ளொக்கில் கிடைதிருப்பதட்ட்கு எனது மனமார்த்ந்த பாராட்டுகள் காரணம்
2 , 3 வருடங்களிட்ட்கு முன் ப்ளாக் தொடங்கினவங்கள் எல்லாம் இப்பதான் 60 , 65 போல்லோவேர்ஸ் வைத்திருக்கிறான்கள் அதனாலதான்.........

சி.பி.செந்தில்குமார் said...

>>>பிரபல மொக்கை பதிவர்கள்

yov... y r u add my name in it? i am mokkai? shame shame pappy shame..

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், வாழ்த்துக்கள் தோழா, நூறாவது பதிவுகளை எட்டியதற்கும் இன்னும் பலப் பல பதிவுகளைத் தந்து எல்லோர் உள்ளங்களையும் கவரும் கவிஞனாகவும், பதிவராகவும் இன்னும், இன்னும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

கொழும்பு பத்தாவது இடத்திலோ, யார் இந்தப் பொய்யைச் சொல்லுவது? அபிவிருத்தி அபிவிருத்தி என்று தானே இப்ப அனைத்துலக நாடுகள் அள்ளி வழங்குகிறார்கள். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாமல் எமது மந்திரிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...