எதோ என்னால முடிஞ்ச ஹை-கூ'ஸ் சில...
டிசம்பருக்கு பிறகு என்னமோ தெரியல கவிதை வருதே இல்ல பாஸ்..
(ஆமா அதுக்கு முன்னால கவிதை கவிதையா கொட்டிச்சாக்கும்!)
என்ன பண்ணலாம்?
உன் கட்டியிழுக்கும் கண்களால்
நான் வினா தாள் கண்ட
மாணவன் போலானேன்..
உன் பார்வை வினாவில்
தொலைந்து விடை தேடினேன்...
காதலே ஒரு படிப்பாய்
இருந்திருந்தால்
நான் goldmedel
வாங்கி இருப்பேன்...
எப்போதோ..!!
தனிமை வடிக்கும்
கவிதைகளுக்கு
ஆழம் அதிகம்..
உனை
தனிமையில் காணும்
நிமிடங்களின் நீளம் கொஞ்சம்..!!
கடல் கரையில் உன்
பெயர் எழுதுகிறேன்..
நண்பனே...
உன் பெயராவது ஒரு தடவை
குளிக்கட்டும் என்பதற்காக!
மற்றவர்களை
உன்னோடு
ஒப்பிடும் அளவிற்கு
நீ...தப்சி
அழகின் நியமம்
ஆகிவிட்டாய் எனக்கு!!
எப்பிடி இருக்கு?சுமார்?சப்பை?அய்யய்யோ அத விட கேவலமா??
இப்பிடி தெரிஞ்சிருந்தா இந்த பதிவ போட்டிருக்க மாட்டேனே...
நன்றி:வலைச்சரத்தில் நேற்று என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நண்பர் ரஹீம் கஸாலி'க்கு நன்றிகள் பல.. |
15 comments:
நான் இவரை நேரே சந்தித்திருக்கின்றேன். இலங்கையில் 2004ஆம் ஆண்டுக்காலங்களில் நம்புவீர்களா? உண்மை.
கடல் கரையில் உன்
பெயர் எழுதுகிறேன்..
நண்பனே...
உன் பெயராவது ஒரு தடவை
குளிக்கட்டும் என்பதற்காக!
hee..hee..hee
யார சொல்றீங்க?தப்சி?
ஜனா....! யாரை கொழும்பில் 2004இல் சந்தித்தீர்கள்.
நமிதாவை கவிதை பாடாத மைந்தன் ஒழிக....!
நமிதா முன்னேற்றக் கழகம்
இலங்கை
ஆர்ப்பாட்டம்?
ம்ம் நடத்துங்க..இதுக்கு சங்கம் வேற!!
அவர் தப்சிய சந்திச்சிருந்தா...உங்க பாடு என்னாகுறது பாஸ்?
எப்பிடி இருக்கு?சுமார்?சப்பை?அய்யய்யோ அத விட கேவலமா??
இப்பிடி தெரிஞ்சிருந்தா இந்த பதிவ போட்டிருக்க மாட்டேனே...
.....சுமார்னு வச்சுக்கலாமா? எப்படி சொன்னாலும், இப்படி பதிவு தொடர்ந்து வரும்னு எனக்கு தெரியுமே... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
நன்றாகவே இருக்கிறது.. Font அளவீடுகளில் கொஞ்சம் மாற்றம் செய்தால் இன்னும் நன்றாய் இருக்கும்
அருமை... தொடரட்டும் உங்கள் பணி..
வாழ்த்துக்களும் வாக்குகளும்..
ரூம் பூட்டு ஜோசிச்சு எழுதினது
நன்றாக உள்ளது
ஹா ஹா ஹா அசத்தல்....
ஆசை காட்டி ஏமாத்துன குற்றத்துக்காக ஓட்டு போடாம கிளம்பலாம்னா மனசு வரமாட்டேங்குது.. சரி சரி போட்டு தொலைக்கிறேன்
கவிதைகள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாக ”காதலே பாடமாக இருந்தால் கோல்ட் மெடல்” கவிதை ரசிக்கவைக்கிறது.
தலைப்பிற்கு ஏற்றாற்போல் தப்சி கவிதை ஓகே
எங்க பாஸ் நம்ம ஆஞ்சலின ஜூலி கவித?
கவித கவித சூப்பர்!
நீர் குறு குறுன்னு பாக்கும் போதே தெரியும் இப்படித்தான்னு ஹி ஹி!
Post a Comment