Friday, February 11, 2011

நம்ம முல்லா "யானை பிசினெஸ்" பண்ராராமில்லே!!!

முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு யானை இரவல் வாங்கினாராம்.அது ஒரு ஆண் யானை.சும்மா விஜயகாந்த் மாதிரி முறுக்கான யானை..(அதுக்காக பாகிஸ்தான் யானையோட எல்லாம் சண்டைக்கு போகாது)..இத்தனைக்கும் அது ஒரு கருப்பு யானை!!இந்தியாவில கருப்பு யானை நூறு வருசத்துக்கு ஒன்னு தான் பிறக்குமாம்!!
பல நாட்கள் வரை முல்லா யானையைத் திருப்பித் தராததால், பக்கத்து வீட்டுக்காரர்
வந்து யானையைத் திருப்பிக் கேட்டார். அதற்கு முல்லா...

"அடடே..., உங்களிடம் வாங்கிய யானையை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது.
அந்தப் யானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, "... என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய யானையும் கொடுத்தார்.அந்த குட்டி யானை வெள்ளை வெளீரெண்டு நிறம்..காரணம் முல்லாவின் முன்வீட்டுக்காரர் வெள்ளையானை ஒண்டு வைச்சிருக்கார்.
பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு யானையும் கூட்டிச் சென்றார்.கலர் காம்பினேசனை பத்தி அவர் கவலைப்படவே இல்லை..

இது முல்லா கழுதை பிசினெஸ் பண்ணேக்க எடுத்த போட்டோ!

அதேபோல் சில நாட்களுக்குப் பின் முல்லா அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் போய்...

"முன்பு கொடுத்ததை விட பெரிய யானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?" ... என்று கேட்டார்.
ஏன் என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்க,எனது கோயில் பெருமாளுக்கு நாமம் போட வேண்டும் என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுகாரர் இம்முறையும் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய யானை ஒன்றைக் கொடுத்தார்.

பல நாட்கள் ஆகியும் முல்லா யானையைத் திருப்பித் தரவில்லை. பின் தயங்கித் தயங்கி...
பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து யானையை திருப்பி கேட்டார்.

" அத ஏன் கேட்கிறீக... அந்தப் யானை நேற்றுத்தான் செத்துப் போச்சு" ... என்றார் முல்லா.
கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்...

"என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா?... யானை எப்படி செத்து போகும்..நல்ல ஆரோக்கியத்தோட இருந்ததே...? "
என்று கோபமுற்றார்.

அதற்கு முல்லா...

"உங்கள் ஆண் யானை குட்டி போட்டதை நம்பும் பொழுது ஏன் செத்துப் போனதை நம்பமுடியாது...? "
என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்று விட்டார்.

தத்துவம்: பெரியவங்களுக்கு:
1)ஆண் யானை குட்டி போடாது,பெண் யானை தான் குட்டி போடும்..
2 )யானை எண்டா குட்டியும் போடும்..வருத்தம் வந்தா சாகவும் செய்யும்.
3 )அடுத்தவன் பொருளை ஆட்டைய போடேக்க டெக்கினிக்கலா ஆட்டைய போடணும்!
4) யானைக்கும் அடி சறுக்கும்..பூனைக்கும் பிள்ளை பிறக்கும்

குழந்தைகளுக்கு:
5)பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கிறோமோ...
அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புத்தானே...?

டிஸ்கி:அப்ப இறுதியாக வாங்கின யானையை முல்லா என்ன செய்திருப்பார்?
அந்த யானைய வைச்சு நம்மள மாதிரி அறிவு கூடின பசங்களுக்கு "ஞானப்பால்"/"யானைப்பால்"பிசினஸ் பண்ணுறாராம்...ரொம்பவே நல்லா போய்கிட்டிருக்காம்லே!!
(பின்ன போகாதா என்ன நம்மாலா மாதிரி அறிவுசாலிகள் இருக்கேக்க!)


பிடிச்சிருந்தா குத்து குத்துன்னு குத்துங்க...எனக்கில்ல இன்ட்லி தமிழ்மணத்தில!

Post Comment

23 comments:

கவி அழகன் said...

காமெடி

Unknown said...

காமெடியா??சீரியஸா கதை சொல்லீட்டிருக்கேன்...

Chitra said...

யானைக்கும் அடி சறுக்கும்..பூனைக்கும் பிள்ளை பிறக்கும்


.....யானைப்பால் குடிச்சாத்தான், இப்படி கண்டுபிடிச்சு சொல்ல முடியும் போல..... நீங்க அறிவுசாலிதான்.... ஒத்துக்கொள்கிறோம். நம்பிட்டீங்களா?
(பி.கு.: பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கிறோமோ...
அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புத்தானே...?)

சக்தி கல்வி மையம் said...

பகிர்வுக்கு நன்றி
நல்வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

Unknown said...

Chitra said...
யானைக்கும் அடி சறுக்கும்..பூனைக்கும் பிள்ளை பிறக்கும்


.....யானைப்பால் குடிச்சாத்தான், இப்படி கண்டுபிடிச்சு சொல்ல முடியும் போல..... நீங்க அறிவுசாலிதான்.... ஒத்துக்கொள்கிறோம். நம்பிட்டீங்களா?
(பி.கு.: பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கிறோமோ...
அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புத்தானே...?)//

தூக்கி பேசிட்டு கவுத்திட்டீங்களே அக்கா..

ஆதவா said...

இதே மாதிரி தெனாலிராமன் கதை கேள்விப்பட்டிருக்கேன்....

Unknown said...

sakthistudycentre-கருன் said...
பகிர்வுக்கு நன்றி
நல்வாழ்த்துக்கள்.//
நன்றி,...வருகிறேன்..

Unknown said...

ஆதவா said...
இதே மாதிரி தெனாலிராமன் கதை கேள்விப்பட்டிருக்கேன்..//
நமக்கு முதலே எவனோ அறிவாளி பிறந்திருக்கானே..எவன்டா அது...

Anonymous said...

ஞானைப்பால் ஒரு லீட்டர் என்ன விலை?

நிரூஜா said...

இக்கி இக்கி இக்கி

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டு போடலைன்னா சாமி கண்ணை குத்திரும் மக்கா.....

Jana said...

ம்ம்ம்...நல்லாத்தான் இருக்கு. ஆனால் அதென்ன ரெண்டாவது வரியில் ஒரு லொள்ளு...!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை வாழ்த்துக்கள்...
நல்லாத்தான் இருக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது போன்று முல்லா கதைகளை படித்து வெகு நாட்கள் ஆனது..

சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் ஓட்டு போட்டுட்டேன்..
என் சார் ஓட்டு போடசொல்லி ஆள் வச்சி மிரட்ரிங்க..
ஹி..ஹி..ஹி..

anuthinan said...

மைந்தன் அண்ணா!!! ரொம்பவே சீரியஸா காமெடி சொல்லி இருக்கீங்க பாராட்டுக்கள்

suthan said...

இந்த பதிவின் remake உரிமையை உமக்கு அளித்தது யாரு?

FARHAN said...

கதை பழசு டிஸ்கி புதுசா இல்ல இருக்கு ....

ம.தி.சுதா said...

நல்ல காலம் முல்லா இதை வாசிக்கல வாசிச்சிருந்தால்.. நம்ம பக்கம் பெரிய அக்கப் போர் தான்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

சி.பி.செந்தில்குமார் said...

புது பதிவு போடலையா?

Unknown said...

போட்டிருக்கேன் பாஸ்...வடிவா பாருங்க

Related Posts Plugin for WordPress, Blogger...